எபிலாக்-141

 எபிலாக்


ஐந்தாண்டுகளுக்குப் பிறகு .....


ஊட்டியில் .....

"கங்கிராஜுலேஷன்ஸ்  மிஸ்ஸஸ்  ஸ்ரீலட்சுமி ராம்சரண் ...." என தன் மனைவியைப் பார்த்து காதலோடு ராம்சரண் மொழிய,


"திடீர்னு பேக்டரிக்கு வந்து,  என்னென்னமோ சொல்றீங்க ..... என்ன ஆச்சு அத்தான்  ..."  என்றாள் மேலாளர் கொடுத்துவிட்டு சென்ற ஐ-பேடில் , கணக்கீட்டை சரி பார்த்தபடி.


"நம்ம Tea board of India,  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் Golden leaf  Indian tea awardsஸ டிக்ளர் பண்ணி இருக்காங்க .... அதுல டாப் 3க்குள்ள நம்ம பிளான்டேஷனோட பேர் செகண்ட் பிளேஸ்ல  வந்திருக்கு .... இப்ப தான் அப்பா போன் பண்ணி சொன்னாரு .... உனக்கும் ஃபோன் பண்ணுவாரு பாரு .."


"வாவ் ... மாமா உழைச்ச உழைப்புக்கு பலன் கிடைச்சிடுச்சு ...."


"ஹேய் ... அவரு உன் பேரை சொல்றாரு... நீ என்னடானா அவர் பேரை சொல்ற ...."


"என்ன தான் விஷயத்தை கத்துக்கிட்டு வேலை  செஞ்சாலும்,  மாமா மாதிரியான எக்ஸ்பீரியன்ஸ்ட் பர்சன் பக்கத்துல இருந்து ஸ்மார்ட்டா கைடு பண்ணலேன்னா,  இதெல்லாம் சாத்தியமே இல்லை ..."


"எனிவே,  மாமனாரும் மருமகளும் இந்த வெற்றியை எப்படியாவது பங்கிட்டுக்குங்க... எனக்கு நம்ம பிளான்டேஷன்க்கு கிடைச்சது நெனச்சு  சந்தோஷம் ...." என்றான் மனைவியின் கன்னத்தைக் கிள்ளி.


இப்படி மனைவியை புகழ்ந்து கொண்டிருக்கும் ராம்சரணும் இந்த சொற்ப ஆண்டுகளில் தன் தொழிலில் சாதிக்காமல் இல்லை.


ஊட்டியில் மட்டும் ஆரம்பித்த அவனது தகவல் தொழில்நுட்ப நிறுவனமானது,  கோயம்புத்தூர், ஈரோடு,  திருச்சி,  திருநெல்வேலி போன்ற பகுதிகளிலும்  விரிவு படுத்தப்பட்டிருந்தது.


அதில் கோயம்புத்தூர் கிளை முழுவதும் வீராவின் தலைமையின் கீழ் வர, ஈரோட்டின் கிளை ஸ்ரீனியின் தலைமையின் கீழ் செயல்பட்டன.


குறித்த நேரத்தில், பிழைகள் அதிகமின்றி, திட்ட வரைவுகளை வாடிக்கையாளருக்கு வழங்குவதால்  புதிது புதிதான திட்ட வரைவுகள் அவர்களது நிறுவனத்தைத் தேடி குவிந்தன.


தொழில் துறையில் வளர வளர  ராம்சரண், வீரா,  ஸ்ரீனியின் நட்பு முன்பை காட்டிலும் இன்னும்  அதிகமாக பலப்பட்டு போனது.


ஸ்ரீனியின் மனைவி ராமலட்சுமி , அவர்களது நிறுவனத்திலேயே முக்கிய பணியில் பணியாற்றி வருகிறாள்.


அவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது ....

பொதுவாக ஸ்ரீனியின் தாய் தந்தை தமக்கை அனைவருமே நல்லவர்கள் என்றாலும்,  தொடக்க காலத்தில் தம் தமக்கை லட்சுமிக்கு பேரூதவி செய்த சுமித்ராவிடம் என்றுமே ராமலட்சுமிக்கு ஒரு தனி பற்றுதல் உண்டு.

இத்துணை ஆண்டு கால கடினங்களுக்குப் பிறகு,  தன் இரு மகள்களுக்கும் தரமான வாழ்க்கை அமைந்திருப்பதை  எண்ணி மனம் மகிழ்ந்த ருக்மணி,  தியாகராஜன் சில நாட்கள் ஊட்டியில் லட்சுமியின்  இல்லத்திலும், சில நாட்கள் இளைய மகளுடன் ஈரோட்டிலும்,  சில நாட்கள் கோயம்புத்தூரிலும் தங்களது முதுமை காலங்களை நிம்மதியாக கழித்து வருகின்றனர்.


ராம்சரண் தன்  இரட்டை மகன்களுக்கும் லவன், குசன் என்று பெயரிட்டு இருந்தான்.


அருணாவின் மகன் விஜய்,  ஸ்ரீபாப்பாவை விட பெரியவன் என்றாலும்,  அவள் லட்சுமியை அம்மா என்று அழைப்பதை பார்த்து , தானும் லட்சுமியை அம்மா என்றே விளிக்க, அருணா போன்ற  கொடூர தாயின் நினைவில்லாமல்  குழந்தை இருப்பதே  நல்லது என நினைத்து  லட்சுமியும் அந்த அழைப்பை ஊக்குவித்தாள்.


லட்சுமியை அவன் அம்மா என்றும் ராம் சரணை மாமா என்றும் விளிக்கும் போதெல்லாம் ரங்கசாமி லட்சுமி மற்றும் ராம்சரணை பார்த்து 


"உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற உறவு முறையையே இவன் மாத்திடுவான் போல இருக்கு ...." என சிரித்தாலும் தன் மகளின் மைந்தனை தன் குழந்தைகளுக்கு இணையாக கவனித்துக்  கொள்ளும் மருமகளை பலவகையில் மெச்சவே செய்வார். 

அருணாவின் கணவன் ஹரிஷ் வேறொரு திருமணம் செய்து கொண்டு,  ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி இருந்தான்.

ஆண்டிற்கு இரு முறை தன் மகன் விஜயை பார்க்க ஊட்டிக்கு வந்து இரண்டு நாட்கள்  மகனோடு செலவழித்துவிட்டு,  கிளம்பி விடுவான். 

ரங்கசாமியும் ராம்சரணும் அவனது வரவை ஆதரிப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை ...

காரணம் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அருணாவின் ஞாபகம் வருவதால், அவர்கள் அவன் வரவை விரும்பவில்லை எனினும், சிறுவன் விஜய்க்கு அவன் தந்தை ...

தந்தைக்கான பாசம் அவனுள்ளும் இருக்கத்தான் செய்யும் என்பதால் , அதற்கு தடை விதிக்காமல் விட்டு விட்டனர் .....


ராம்சரண் லட்சுமிக்கு இடையே இருக்கும் தரமான காதலைப் போல்,  நான்கு குழந்தைகளுக்கு இடையேயும்  உன்னதமான சகோதரத்துவம் நிலவ, விடுமுறை விட்டால் போதும், இவர்களோடு வீரா ஸ்ரீயின் மகன் மற்றும்  மகளும்,  ஸ்ரீனி ராமலட்சுமியின் மகளும் இணைந்து கொண்டு குதூகளித்து  விளையாடி மகிழ்வர். 


வீரா ஸ்ரீக்கு இரு குழந்தைகளா ....!!! 

ஆம், சோம்நாத்  சொன்னது போல்,  ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய்,  இரு குழந்தைகளை  ஆண்டவன் அவர்களது காதலுக்கு பரிசாக வழங்கி இருக்க அனிருத், அக்ஷிதா என்ற பெயரிட்டு மகிழ்ந்தனர் .


முதல் மைந்தன் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,  ஸ்ரீ இரண்டாவது முறையாக கர்ப்பம் தரிக்க, வீரா இறக்கை இல்லாமலேயே விண்ணில் பறந்தான் ...


அதுவும் அது பெண் குழந்தையாக பிறக்க அவனது மகிழ்ச்சி இரட்டிப்பாக்கி போனது.


பத்மினி , சோம்நாத்தின் குடும்பத்தோடு  நட்பு தொடர்ந்ததால் குழந்தைகளின் பிறப்பு,  திருமண நாள் போன்ற அனைத்து சுப நிகழ்வுகளுக்கும்  வீரா தம்பதியர் அவர்களை அழைத்து நட்பு பாராட்டினர். 


சிறை உணவும், அந்த சூழ்நிலை கொடுத்த  மன அழுத்தமும் கற்பகத்தின் சர்க்கரை அளவை அளவுக்கு அதிகமாக உயர்த்தி படுத்த படுக்கையாக்க ,  பெண் அதிகாரி சகுந்தலாவை பகைத்துக் கொண்டதால் சிறையில் சிகிச்சைகள்  சரியாக வழங்கப்படாமல் போக,  ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக அல்லலுற்று, மரணம் வந்தால் போதும் என்று மன்றாடி மரணித்து போனாள்  கற்பகம். 


கற்பகத்தின் மரணம் ரங்கசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.  ஈமச்சடங்கிற்கு பணத்தை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு போகாமலே இருந்து விட்டார். ராம் சரணும் போய் பார்க்கவில்லை. லட்சுமி தன்னால் இயன்றவரை வீட்டு ஆண்களிடம்  போராடிப் பார்த்தாள். ஆனால் இருவரும் கடைசிவரை மசியவே இல்லை. 


கற்பகம் மறைவிற்கு  பிறகு, பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல்  சிறையில் அருணாவின் நிலைமை  இன்னும் மோசமாகி போனது.  


தாதா பெண்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு,  அவர்கள் பயன்படுத்தும் மாதவிடாய் அணையாடைகளில் இருந்து அன்றாடம் உடுத்தும் ஆடைகள் வரை, துவைத்துப் போட்டும், அவர்களுக்கு தொண்டு ஊழியம் செய்தே சோர்ந்து போனவளுக்கு சுகாதாரமற்ற சூழ்நிலையால் தோல் வியாதி வந்துவிட்டது.


பெண் அதிகாரி சகுந்தலாவின் அறிவுறுத்தலால் அவளுக்கும் சிகிச்சை சரியாக வழங்கப்படாமல் போக, அன்றாடம் கை கால்களில் இருக்கும்  புண்களில் இருந்து வழியும் ரத்தம் சீழோடு நித்தம் நித்தம் அவதியுற தொடங்கியவள் வேறு வழி இன்றி ரங்கசாமியை தொடர்பு கொள்ள பல வழிகளில் முயன்றாள்...


வழக்கம் போல் ரங்கசாமி தன் நிலையிலிருந்து சற்றும்  இறங்கி வராமல் அவளைத் தவிர்த்து விட்டார் ....


மஹிக்கா தன் தாயின் உதவியோடு  வழக்கறிஞர்களை வைத்து வாதாடி,  கிட்டத்தட்ட இரண்டாவது ஆண்டிலேயே விடுதலையாகி விட்டாள்.


சிறையிலிருந்து விடுதலையானவளை வாழ்க்கை என்னும் சிறை பல வகைகளில் வாட்டி வதைக்க தொடங்க தவித்து போய்விட்டாள். 


வீட்டை விட்டு ஓடிப் போனவள் என்ற ஒரே காரணத்திற்காக தந்தை மற்றும் உடன் பிறந்தவர்களின் ஆதரவு இல்லாமல் போக,  பெரும் பதவியில் பல லட்சங்களை சம்பாதித்தவளுக்கு, பத்தாயிரம் ரூபாய் வேலை கூட கிட்டாத நிலை வர ,  வாழ்நாள் சேமிப்பாக வைத்திருந்த நகைகள்,  பணம் முழுவதும்   வாதாடுவதற்கே சென்று விட்டதால், அன்றாட சோற்றுக்கே அவள்  அன்னையின் ஆதரவை பற்றிக் கொண்டு காலத்தை கடத்தும் நிலையாகி போனது.


அன்புவிற்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வருடத்திற்கு இரண்டு மூன்று முறையாவது  மும்பையில் இருந்து கோயம்புத்தூர் வந்து பத்து நாட்கள் தாய் வீட்டில் தங்கி  இருந்து சீராடி விட்டு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.


முணுக்கென்று  கோபப்படும் அவளது பிறவி குணம் அவ்வப்போது தலை தூக்கினாலும்,  முன்பு போல் ஸ்ரீ சம்பந்தப்பட்ட  விஷயங்களில் தலையிடுவதை மட்டும் அடியோடு நிறுத்தி இருந்தாள்.


பிரபா , சத்யன் அவ்வப்போது டாம் அண்ட் ஜெரியாய் சண்டையிட்டாலும்,  ரோமியோ ஜூலியட் போல் காதலிக்கவும் தவறவில்லை.


சத்யன் தன் குடும்பத்தோடு கோயம்புத்தூர் வரும் போது எல்லாம்,  வழக்கம் போல் மாமனார் வீட்டுக்கும் முக்கியத்துவம் அளித்தே நடந்து கொண்டான்.


இரு மகன்கள், ஒரு மகள் என கவிதையாய்

அமைந்திருந்த தமக்கையின் குடும்பத்தைக் கண்டு முன்பு போல் பொரும்பாமல் , அன்பும் ஆதரவுமாய் நடந்து கொள்ள பழகியிருந்தாள் பிரீத்தி. 


ப்ரீத்திக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் முடிந்திருந்தது.


துபாயில் பெரும் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளரை மணந்திருந்தாள்.


அன்பான அருமையான குடும்ப வாழ்வு ...


மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.

வாழ்க்கையின் கடின நேரங்கள்  ஆசானாக மாறி பாடம் புகட்டி இருந்ததால்,  தற்போது வாழ்க்கையின் நன்மை தீமைகளை பகுத்தறிந்து வாழும் பண்புகளோடு இனிமையாய் தாம்பத்திய  வாழ்க்கையை ரசித்து வாழ்கிறாள் ...


சுந்தராம்பாள் ஆறு மாதம் மகன் வீடு, ஆறு மாதம்  மகள்  வீடு என நிம்மதியாக தன் முதுமையை கழித்து வருகிறார் ....


பொன்னம்பலம் எப்பொழுதும் போல் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் நல்ல மாமனாராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் வலம் வர , அகல்யாவுக்கு எப்போதாவது கோபம் தலை தூக்கினாலும், முன்பு போல் வார்த்தைகளை விடாமல்,  அடக்கி வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்ததால் வீரா பயந்தது போல் பானிபட் போர் நடக்காமல் எப்போதாவது பனிப்போர் ஓரிரு தினங்களுக்கு மட்டும் பொழிந்து  விட்டு பின்பு தானாக  முடிவடைய நிம்மதி பெருமூச்சு விட்டான். 


மற்றபடி அவன் இல்லத்தில் எப்பொழுதும் போல் அன்பும் அமைதியும் தாண்டவம் ஆடிக் கொண்டுதான் இருந்தன.


அம்மையப்பன் சுசீலா தம்பதிகள்  வருடத்திற்கு இரண்டு முறையாவது பேரன் பேத்தியை பார்ப்பதற்காக கோயம்புத்தூருக்கு வந்து போவதை வழக்கமாக வைத்திருந்தனர்.


கடந்த ஆண்டுதான் ஸ்ரீயின் தம்பி கோபாலனுக்கு விமர்சையாக  திருமணம் நடந்து முடிந்திருந்தது.


கோபாலன் தன் மனைவியோடு ஷார்ஜாவில் வசித்து வருகிறான். 


ஸ்ரீ தன் கணவன் குழந்தைகளோடு, மதுரைக்குச் சென்று சில நாட்கள் தங்கி  இருந்து விட்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.


முதல் குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது , இரண்டாவது முறையாக அவள் தாய்மை அடைந்து விட்டதால்,  அலுவலகப் பணிக்கு செல்ல சூழ்நிலை அமையாது போக,  கிடைக்கும் சொற்ப நேரத்தை வீணடிக்காமல்  தான் படித்த பட்ட படிப்பிலேயே முனைவர் பட்டம் பெறுவதற்காக தீவிரமாக உழைத்து கொண்டிருக்க, இப்படியாக நாட்கள் அழகாக கழிந்து கொண்டிருந்த நிலையில், 


ஒரு நாள் வீரா , மூன்று வார கால அலுவலகப் பணிக்காக, அமெரிக்காவுக்கு பயணப்பட, தயாராகிக் கொண்டிருந்தான். 


இரண்டு குழந்தைகளின் பிறப்பு ,கடமையோடு மனமுதிர்ச்சியை ஸ்ரீக்கு வாரி வழங்கி இருந்ததால் முன்பு போல்  கணவனின் குறும் பயண பிரிவெல்லாம் அவளை அதிகம்  வாட்டாமல் போக,


" ராம்,  நான் குழந்தைய டேக் கேர்ல இருந்து கூட்டிகிட்டு வந்துடறேன் .... அப்புறம் பாப்பாவ கூட்டிக்கிட்டு  ஏர்போர்ட் போகலாம் ... அதுக்குள்ள நீங்க உங்க திங்ஸ் பேக் பண்ணிக்கிட்டு இருங்க ..."


"குழந்தையை வச்சிக்கிட்டு கஷ்டப்படாத ...  நான் போய்க்கிறேன் டா ...."


"இல்ல.... ஒரு ஹாஃப் அன் ஹவர்ல  வந்துடுவேன்  ராம்.... ப்ளீஸ் "

என்றவள் காரை எடுத்துக்கொண்டு தன் மகனை சேர்த்திருக்கும் டே கேர் சென்டருக்கு விரைந்தாள்.

குழந்தைகள் வெளிவருவதற்கு பத்து நிமிடங்கள் இருந்ததால்  மற்ற பெற்றோர்களோடு மரத்தடியில் சென்றமர்ந்து காத்திருக்க தொடங்கினாள்.


பத்து நிமிடத்திற்கு பிறகு , ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரையும் அழைத்து , அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட, அந்த வரிசையில் ஸ்ரீயின் மகனை கைகளில் பிடித்துக் கொண்டு, ஆசிரியர் ஸ்ரீயை அழைக்க, அவளோ அசையாமல் பொம்மை போல் இலக்கின்றி எங்கோ பார்த்தபடி சிலையாய் அமர்ந்திருந்தாள்.


ஒன்றிற்கு நான்கு முறை அழைத்துப் பார்த்துவிட்டு,  அந்த ஆசிரியர்  அருகில் சென்று அவளது தோளை தொட்டு அழைத்து,


"மேம்,  உங்க பையனை கூட்டிகிட்டு போங்க....... .... " என சொன்ன போதும்,  குழந்தையைப் பார்க்காமல்  அவளது பார்வை எங்கோ நிலைத்திருக்க,  உடன் இருந்த மற்ற குழந்தையின் பெற்றோர்களும், அவளை அழைத்துப் பார்க்க,  ஏதோ மோனநிலையில் இருப்பது போல் கண்கள் திறந்தபடி சிலையாய் அவள்  அமர்ந்திருந்தாள்.

ஏதோ அவளுக்கு பிரச்சனை என்பதை புரிந்து கொண்டவர்கள் உடனே வீராவை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல, அப்போதுதான் அவனுக்கு மருத்துவர் அறிவுறுத்தியிருந்த அவளது வியாதியின் ஒரு அறிகுறியான ஸ்பேஸிங் அவுட் (Spacing - out)  நினைவுக்கு வர, உடனே பஞ்சாய் பறந்து வந்து,  அவளை அள்ளிக்கொண்டு  மருத்துவமனைக்கு விரைந்தான்.


மருத்துவர் ஊசியின் மூலம் மருந்தை செலுத்தி அவளை உறங்கச் செய்ய,  அரை மணி நேரம் கழித்து விழித்தெழுந்தவளுக்கு  ஒன்றுமே விளங்கவில்லை.


"எனக்கு என்னாச்சு ராம் .... நான் எப்படி ஹாஸ்பிடல்க்கு வந்தேன் .... டே கேர் சென்டருக்கு தான போன ..." அவள் கேள்விகளை அடுக்க  , பதில் சொல்ல முடியாமல் கண்கள் கலங்கி நின்றான் அவளது நாயகன். 


அவ்வப்போது வலி வந்து போனாலும்,  அதனைப் பொருட்படுத்தாமல்  வாழ்க்கையை சமாளித்துக் கொண்டிருந்த நிலையில்,  அவன் மறந்திருந்த இந்த திடீர் மறதி,  திடீரென்று தோன்றி அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அலை கழித்திருக்க செய்வதறியாது திகைத்து நின்றான்.


பிறகு ஸ்ரீயின் கேள்விகளுக்கு பதில் அளித்த மருத்துவர்,


"ஃபைப்ரோமயால்ஜியா இருக்கிறவங்களுக்கு இந்த பிரைன் ஃபாக் (Brain-fog) வர்றது சகஜம்.... 

இதை நாங்க ஸ்பேஸிங் அவுட்னு சொல்லுவோம் .... டே கேர் போனது வரைக்கும் தான்,  உங்க மைண்ட்ல சேவ் ஆகி இருக்கும் ...

நடுவுல நடந்த எந்த விஷயமும் உங்க நினைவுல இருக்காது .... இந்த பிரச்சனை ஒன்னும் பர்மனென்ட் கிடையாது ..... ஜஸ்ட் ஆஃப் அன் ஹவர்ல இருந்து ஒன் ஹவர் உங்களை மென்டலி மியூட் பண்ணி வைக்கும்.... ....  அவ்ளோ தான்....   சில பேருக்கு இந்த இஷ்யூ  ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை வரும் .... சில பேருக்கு ஒரு மாசத்துக்கு ஒரு தடவை கூட வரும் ....சோ, எவ்ளோ ஃப்ரீகுவண்டா வருதுங்கிறத மட்டும்  நோட் பண்ணி வைங்க .... மத்தபடி யூ ஆர் கம்ப்ளீட்லி ஆல்ரைட் ...." 

என்று கூறி சில மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.


வீட்டிற்கு வந்தவள் வேகமாக மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று,  ஓ வென்று வாய்விட்டே குலுங்கி அழுதாள்.


வீட்டில் அகல்யா , சுந்தராம்பாள் பொன்னம்பலம் ஒன்றுக்கு இரு குழந்தைகள் இருந்ததால் அவர்கள் முன்பு அழப்பிடிக்காமல்  தனிமையை தேடிச்சென்று அவள் கண்ணீர் வடிக்க பின் தொடர்ந்த அவள் கணவன், அவள் தோளை பற்றி திருப்பி தன் மார்போடு அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்த முயன்றான்.


பத்து நிமிடம் கழிந்தும்  அவள் அழுகையை நிறுத்தாமல் விம்மலோடு தொடர்ந்து கொண்டே இருக்க ,


"பட்டு,  அதான் டாக்டர் சாதாரண விஷயம்னு சொல்லிட்டாங்க இல்ல ஏன் இவ்ளோ வருத்தப்படற ..."


" ராம்,  கை கால் வலியை கூட  பொறுத்துக்க முடியும் .... ஆனா நான் யாருன்னு எனக்கே தெரியாம,  என்னை சுத்தி நடக்கிறது புரியாம  ப்ரம்ம புடிச்சா மாதிரி, உட்கார்ந்திருந்தத நினைச்சு பார்த்தாலே பயமா இருக்கு .....இந்த வியாதியை வச்சிக்கிட்டு,  மீதி இருக்க வாழ்க்கையை எப்படி தான் கடத்த போறேனோ .... " 


என்ற அவள் மீண்டும் குலுங்கி அழ,


"பட்டும்மா,  பாசிட்டிவா திங்க் பண்ணு... நெகட்டிவா திங்க் பண்ணா எல்லாமே பூதாகரமா தான் தெரியும் .... இந்த உலகத்துல எவ்வளவோ விசித்திரமான வியாதிகள் இருக்கு,  அதையெல்லாம் மீறி எத்தனையோ பேர் வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க .... சில விஷயங்களை வாழ்க்கையில் அக்சப்ட் பண்ண பழகு... தானா அதுக்கு தீர்வு கிடைச்சிடும் ..."


"ஒரு நாள் நான் உங்களையே மறந்து போயிட்டா ...."  

என்றபடி அவள் விம்மி அழ,


"நீ தானே என்னை மறப்ப ...  நான் உன்னை  மறக்க மாட்டேனே.....  எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் இவ்ளோ நாள் அழகா வாழ்ந்தோம் இல்லையா .... இனி மேலும் வாழ்வோம் ... என்னை நம்பு ...என்னைவிட நீ உன்னை நம்பு .... " 

என்று மனைவிக்கு ஆறுதல் கூறியவன்,  உடனே தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு,கேரள மருத்துவரை தொடர்பு கொண்டு பேசினான்.

அவளது மருத்துவ வரலாறு அவரிடம் இருந்ததால்,  இவன் கூறிய அறிகுறிகளை அடிப்படையாக வைத்து,  அவர் சில மருந்துகளை அனுப்பி வைத்துவிட்டு அவனைத் தொடர்பு கொண்டு,


"இந்த மருந்துங்க வொர்க் அவுட் ஆகலேன்னா,  நீங்க உங்க மனைவியை கூட்டிக்கிட்டு இங்க வந்து தான் ஆகணும் ..." என்றார்.

மருத்துவர் அனுப்பி இருந்த மருந்துகளை, ஆறு மாதங்கள் உட்கொண்டாள்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை கூட,  அந்த ஸ்பேஸிங் அவுட் பிரச்சனை தலைதூக்காமல் போக, வீரா தம்பதியர் மனம் மகிழ்ந்து போயினர். 

என்ன தான் அந்த பிரச்சனை மீண்டும் தலை தூக்க வில்லை என்றாலும், அவன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் சமயத்தில்  அவளை வீட்டில் இருக்கும் படியே அறிவுறுத்திவிட்டு செல்வான் .

இரண்டு வாரங்களுக்கு மேல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவும் மாட்டான்.

அவள் தனியாக பயணிப்பதற்கு முற்றிலும் தடை விதித்திருந்தான். 


"முன்னெல்லாம் காரை எடுத்துக்கிட்டு இவளே போய்  குழந்தையை கூட்டிகிட்டு வருவா .... இப்ப என்ன திடீர்னு காருக்கு டிரைவர் எல்லாம் போடற ..." 


அகல்யா வீராவிடம் கேட்க,


"கார் ஓட்டனா கால் வலி அதிகமாக வருதுன்னு  சொல்றா.... அதான் டிரைவருக்கு ஏற்பாடு பண்ணிட்டேன் ..." என அவன் மழுப்ப 


"என்னமோ போ.... இந்த காலத்து பொம்பளைங்க  எதை செஞ்சாலும் இங்க வலிக்குது அங்க வலிக்குதுன்னு குத்தம் சொல்லுதுங்க..." 


என சுந்தராம்பாள் அங்கலாய்க்க,  அதனை வழக்கம் போல் கண்டு கொள்ளாமல்,  நடைபயிற்சிக்காக அவள் மொட்டை மாடி செல்ல, பின் தொடர்ந்தவன்,


"பாட்டி சொன்னதையெல்லாம் மனசுல  வச்சுக்காத ...."   மென்மையாய் கூற,


"அவங்களுக்கு விஷயம் தெரியாது அதனால தான்  அப்படி சொல்றாங்க ... அதையெல்லாம் தப்பா எடுத்துக்க முடியுமா ..."  என்றவள் திடீரென்று அவனைப் பற்றி இழுத்து  அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு,


"நான் இப்ப எல்லாம் வீட்ல நடக்கிற ஒவ்வொரு ஃபங்ஷனையும்  போட்டோஸ் வீடியோஸா சேவ் பண்ணி வைக்கிறேன்... ஏன் தெரியுமா ... என்னைக்காவது எனக்கு மறுபடியும் ஸ்பேஸிங் அவுட் பிரச்சனை வந்துடுச்சுன்னா,  

நீங்க அதை  எடுத்து காட்டினா பாத்துக்கிட்டே இருந்தா , தானா மெமரி ரீ-கால் ஆயிடுமாம் .....

ஸ்பேஸிங் அவுட் பிரச்சனை இருக்கிறவங்க ப்ரைனை  எப்படி ட்ரெயின் பண்ணனும் இன்டர்நெட்ல ஒரு பத்து பாயிண்ட்ஸ் போட்டு இருந்தாங்க அதுல ஒன்னு தான் ... இது...." 

என்றவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டு விட்டு , லேசாக கண் கலங்கியபடி , 


" நிறைய விஷயங்களை ஸ்ட்ரெஸ் எடுத்துக்காம படிக்கணும்  .... முக்கியமா லா(Law) மாதிரியான விஷயங்களை படிக்கணும்  ... ஏன்னா  அதுல இருக்குற செக்ஷன்ஸ ஞாபகம் வச்சிக்க , நிறைய மனப்பாடம் பண்ணியாகணும்  ... அப்ப தானா , ஞாபக சக்தி அதிகமாகும்... " என்றவன் நினைவாற்றலை அதிகரிக்க,  செய்ய வேண்டிய முறைகளை சொல்லிக்கொண்டே செல்ல , அனைத்தையும் கேட்டு முடித்தவள்,


" உங்களுக்கு இப்படி ஒருத்தியை  ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தோணினதே இல்லையா ..."  என்றாள் தலை நிமிர்த்தி அவன் விழிகளுக்குள் பார்த்து.


"பொதுவா எல்லாம் ஆம்பளைங்களுக்கும் வைஃப் ஈசியா அமைஞ்சிடுவாங்க ... ஆனா சோல்மேட் அமையறது கஷ்டம் ...

நான் கொஞ்சம் கூட கஷ்டப்படாம  அரேஞ்ச்டு மேரேஜ்ல அம்சமா கிடைச்ச சோல்மேட் நீ .... 

எத்தனை பேருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும் ....

ம்ம்ம்ம்.... எனக்கு உன்னை மாதிரி சினிமா பாட்டு எல்லாம்  நினைவுல இருக்காது , ஆனா இந்த வரி மட்டும் பிடிக்கும் ....

முன் ஜென்ம தேடல் நீ .......

தட் மீன்ஸ் யூ ஆர் மை சோல் மேட் ரைட்  ..." 

என்றவனை உள்ளுக்குள் காதல் பொங்க உணர்ச்சிப் பிழம்பாய் அவள்  கட்டி அணைக்க, அப்போது எங்கிருந்தோ,


கண்ணே கனியே

உன்னை கைவிடமாட்டேன் ... 

சத்தியம் சத்தியம் இது சத்தியமே ...

மாலை சூடிய காலை கதிரின் மேலே 

சத்தியம் சத்தியம் இது சத்தியமே ... 

ஒரு குழந்தை போலே...

ஒரு வைரம் போலே ....

தூய்மையான என் சத்தியம் புனிதமானது ...

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்...

பிறிதோர் பக்கம் மனம் சாயா பிறவி காப்பேன் .... 

பாடல் வரிகள், அருமையாய் ஒலிக்க, அது அவன் கொண்ட காதலினை அழகாய் எடுத்துரைக்க,  அந்த வரிகளில் மூழ்கிய படி தன் கண்ணாட்டியின் நெற்றியில் முத்தமிட்டு தன் மார்போடு இறுக்கிக் கொண்டான்.






சிலருக்கு திருமணம் வெறும் சடங்கு ...

சிலருக்கு திருமணம் வாழ்நாள் சத்தியம் ...



                       ஸ்ரீ-ராமம்

            ( நிபந்தனையற்ற காதல்) 


                       Sri-Ramam 


         ( The Unconditional Love Forever) 


 Dear friends,


இவ்வளவு நாட்களாக இந்த கதை மூலம் என்னுடன்  பயணித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி .....


நீங்கள் கொடுத்த தொடர ஆதரவினால் தான்,  என்னால் இவ்வளவு பெரிய கதையை திறம்பட எழுதி முடிக்க முடிந்தது.


இந்தக் கதை படித்த அனைவரும் தங்கள் கருத்துக்களை ஒரு வார்த்தையில்  பகிர்ந்து கொண்டால்  கூட மகிழ்ச்சி அடைவேன் ...


Tons of thanks for your love and support ...

🙏🙏🙏🙏



With Love, 

Priya Jagannathan

















  










































































Comments

  1. Oru stressfull routine la itha story padikira antha 15mins vera oru world la peacefull ah odura river ah patha oru namakula oru kutty smile varum la antha mari manasu lite ah feel agithunga sisy...

    ReplyDelete
    Replies
    1. And ungaoda 1st 2story polavea ithuvum avalo sikirama manasa vitu pogathu love u alot sisy.. Keep writing im always want to be fan follower of u in both blog nd pratilipi too

      Delete
  2. just rocked mam 💕💕💕💕💕

    ReplyDelete
  3. U rocked it again this time sis. உங்களுடைய எழுத்தை விமர்சிக்க எங்களுக்கு வார்த்தைகளே இல்ல. உங்களுடைய ஒவ்வொரு படைப்புகளும் எங்களுக்கு நிறைய புது புது விஷயங்களை கத்து கொடுத்து இருக்கு. Lots of information we know after reading ur stories. Story nu சொன்ன சரியா இருக்காது. தத்ரூபமாக ஒரு ஒரு பதிவும் எங்கள் கண் முன்னாடி நடப்பது போல இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. thanks a lot dr... u r the one who supported me through out the journey... really i speechless dr... love u always

      Delete
  4. All of ur stories are my stressbuster sis. Thanks alot for your efforts on writing such a wonderful priceless kaaviyangal. Take care of ur hand pain. Take complete rest atleast few months then come back with ur next damakka.

    ReplyDelete
  5. Unga writing la nanga than mam neraya kathukitom... Therinjikitom... Neraya vishyam rmba deepah purinjika vachinga... Reality ah... Real life ah rmba deep ah poga vachitinga... Keep rocking mam... Nxt nxt novel la ethiri pakkurom...

    ReplyDelete
  6. The story was incredibly mesmerizing mam, enjoyed it a lot...thanks for the wonderful story.

    ReplyDelete

Post a Comment