அத்தியாயம் 139
சில மணித்துளிகள் அங்கு அமைதி நிலவ,
'என்ன சத்தத்தையே காணோம் .... ஒரு வேளை தூங்கறான்னு நினைச்சுக்கிட்டு வெளிய போயிட்டாரோ...... அப்படி போக மாட்டாரே ... அவ்ளோ சீக்கிரம் கோவமே வராத மனுஷனுக்கே , நெற்றிக்கண் திறக்கிற அளவுக்கு கோவம் வந்துருச்சே.... கடவுளே ஏதாவது செஞ்சு என்னை காப்பாத்து.... ப்ளீஸ் ...
காலையிலிருந்து என் கிரைம் ரேட் கூடிக்கிட்டே போகுது... ரெண்டு நாளைக்கு முன்னாடி அம்மாவுக்கு போன் பண்ணதெல்லாம் இப்படி ஒரே நேரத்துல ஓபன் ஆகும்னு நான் கனவா கண்டேன்... போர்வைக்குள்ள வேற ரொம்ப நேரமா இருக்க முடியல .... மூச்சு முட்டுதே .... ' தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தவள், சில கணத்திற்கு பிறகு, மெல்ல போர்வையை இறக்கி, ஒற்றைக் கண்ணால் அறையை நோட்டமிட்டாள்.
அவளுக்கு எதிராக வீரா நின்றிருந்த இடம் காலியாக இருக்க,
"அப்பாடா ... வெளிய போயிட்டாரு போல ..." வாய்விட்டே சொல்லிக்கொண்டு மொத்தமாக போர்வையை விளக்கிய போது தான் , கட்டிலின் வலது புற ஓரத்தில் நின்று கொண்டு அவளையே அவன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய வர , " ஐயையோ " என்று மனதுக்குள் கூப்பாடு போட்டபடி அவள் மீண்டும் போர்வையை இழுத்து மூட எத்தனிக்க, உடனே அதனைப் பற்றிக் கொண்டவன்,
"என்னடி விளையாடறியா... நான் எவ்ளோ சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் .... நீ என்னடான்னா கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்க.... ஒழுக்கமா எழுந்து உட்கார்ந்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.... ..."
அவன் தீவிரமாக மிரட்ட , இதற்கு மேல் அடக்கி வாசிப்பது முறையல்ல என்று எண்ணியவள் சோம்நாத்திடம் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி கண்ணீர் வடித்தாள்.
"சரி, இந்த விஷயத்துக்கு அப்புறம் பதில் சொல்றேன் ... அது என்ன, திடீர்னு உங்க அப்பா பத்து லட்சம் அனுப்பி இருக்காரு ...."
அவன் அடுத்த கேள்விக்கு தாவ,
"நான் தான் அம்மா கிட்ட போன் பண்ணி பணம் அனுப்ப சொன்னேன் .... அப்பா ஊருக்கு போய் இருந்ததால அவர் வந்ததுக்கு அப்புறம் பணம் அனுப்பறேன்னு சொன்னாங்க....அதான் இப்ப அனுப்பி இருக்காங்க போல ... என்னோட இப்போதைய ஹெல்த் இஷ்யூஸ் எதையும் அவங்க கிட்ட சொல்லல .... சொன்னா ரொம்ப வருத்தப்படுவாங்கன்னு தெரியும் .... அதனால அத சொல்லாம pcod பிரச்சனைக்கு இங்க மூணு வாரம் தங்கி ஆயுர்வேதிக் மெடிசன் எடுத்தா சீக்கிரமே க்யூராயிடும்னு இங்க இருக்கிறவங்க சொன்னாங்க .... அந்த ட்ரீட்மென்ட் எடுக்கலாம்னு இருக்கேன்னு சொல்லி பணம் கேட்டேன் ...."
சொல்லிவிட்டு அவள் தலை குனிந்துக் கொள்ள,
"ஓங்கி அறைஞ்சேன்னு வை தாங்க மாட்ட .... உங்க அப்பா நமக்கு மறு வீட்டு சீர் செய்யும் போதே அதை வேண்டாம்னு சொன்னவன் டி நான் .... நீ என்னடான்னா உன்னோட ட்ரீட்மென்ட்காக அவர்கிட்ட பணம் கேட்டிருக்க .... அவரு என்னை பத்தி என்ன டி நெனைப்பாரு ....
பொண்டாட்டிக்கு ட்ரீட்மென்ட்க்கு கூட செலவழிக்க முடியாத நிலையிலயா நான் இருக்கேன் ... நான் ஒன்னும் பிச்சைக்காரன் இல்ல ... நான் எவ்ளோ சம்பாதிக்கிறேன் உனக்கு தெரியுமில்ல ... எல்லாம் தெரிஞ்சும் இப்படி உங்க அப்பா கிட்ட பணம் கேட்டு என்னை அசிங்கப்படுத்திட்டயே டி .... இதுக்கு நீ என்னை செருப்பால அடிச்சிருக்கலாம் ...."
அவன் மிகுந்த ஆவேசத்தோடு பேசிக்கொண்டே செல்ல, அவளோ மென்மையாய் ,
"ஏற்கனவே நான் உங்களுக்கு பாரமா இருக்கேன்.... இந்த வைத்திய செலவையும் உங்க தலையில கட்டி மேலும் உங்கள கஷ்டப்பட வைக்க விரும்பல ... அதுக்காக தான் அப்பா கிட்ட பணம் கேட்டேன் ..."
"அடியே நீ என் பொண்டாட்டி டி ..... உனக்கு செலவழிக்காம வேற யாருக்கு செலவழிக்க போறேன் ..... "
இருவருக்கும் இடையே தர்க்கம் சூடு பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அம்மையப்பனிடம் இருந்து அழைப்பு வர, அவளை முறைத்துக் கொண்டே அழைப்பை அனுமதித்தான்.
"நல்லா இருக்கீங்களா மாப்ள, நெலம் கிரையம் பண்ற விஷயமா ஊருக்கு போயிருந்தேன்.... வந்ததும் சுசிலா விஷயத்தை சொன்னா , செக் போட்டுட்டேன்.... இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள கிரெடிட் ஆயிடும்னு சொல்லி இருக்காக ...." என அவர் பேசிக்கொண்டே செல்ல, ஸ்ரீயை எரிப்பார்வை பார்த்தவன்
"ஐயோ மாமா , நான் மூணு நாளைக்கு முன்னாடி போட்டிருந்த செக், ஒரு சின்ன பிரச்சினையால இன்னைக்கு மதியம் தான் கிளியர் ஆச்சு .... ஆனா அதுக்குள்ள இவ அவசரப்பட்டு உங்ககிட்ட பணம் கேட்டுட்டா போல... எங்களுக்கு தேவையான பணம் இருக்கு மாமா .... இன்னைக்கு சாயந்திரமே உங்களுக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன் ..."
தன்மானத்தைக் காக்க வழியற்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி அவன் மறுக்க,
"என்ன மாப்ள இது .... எதுக்கு பணத்தை அவசரமா திருப்பறேன்னு சொல்றீக .... ரேவதிக்கு வைத்தியம் முடிஞ்சு அவ நல்லபடியா குணமானாலே போதும் ... யாருக்கு பணத்தை கொடுக்கறேன் .... என் பொண்ணு மாப்பிள்ளைக்கும் தானே .... தயவு செஞ்சு பணத்தை திருப்பாதீங்க ..."
அம்மையப்பன் திடமாக சொல்லி முடித்து, மகளின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்துவிட்டு அழைப்பை துண்டித்தார்.
"இப்ப உனக்கு சந்தோஷமா .... உங்க வீட்ல இருக்கும் போதே படிச்சு படிச்சு சொன்னேன் டி .... நமக்கு எது தேவைன்னாலும் நாம தான் சம்பாதிச்சு வாங்கிக்கணும் , உங்க வீட்டு ஆளுங்க கிட்ட எதையும் வாங்கிக்க கூடாதுன்னு சொன்னனா இல்லையா ... இப்படி லட்சக்கணக்குல பணத்தைக் கேட்டு வாங்கி என் மானத்தை வாங்கிட்டியே ...."
அவள் பேசாமடந்தையாய் அமைதி காக்க,
"சரி இதை விடு .... ஒன்ஸ் டேமேஜ் ஹேஸ் டன்..... ... டன்.... ஆனா நீ என்ன காரணம் சொன்னாலும் இன்னைக்கு சோம்நாத் அங்கிள் கிட்ட நீ அப்படி பேசினது மகா தப்பு..... நேத்து என்னடான்னா அந்த சம்யுக்தாவோட என்னை கோர்த்து விடனும்னு பாக்கற ....உனக்கு என்ன டி ஆச்சு .... அந்த மாதிரியான ஒரு பர்சனாலிட்டியோட மனுஷன் வாழ முடியுமா.... பொண்டாட்டியா இருக்குறதுக்கு ஒரு தனி அழகு வேணும் ... அது அந்த தறுதலைக்கெல்லாம் கிடையாது .."
"சரி அவ வேண்டாம் .... வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமில்ல ..."
"ஏண்டி நான் சொல்றது உனக்கு புரியவே இல்லையா... இல்ல.... புரியாதது மாதிரி நடிக்கறியா ... ஒரு தடவை ரத்தன் டாட்டா கிட்ட , நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கலன்னு கேட்டதுக்கு , என் மனைவிங்கிற அந்தஸ்தை ஒருத்தருக்கு கொடுக்கணும்னா அவங்களுக்கு சில தகுதிகள் வேணும்... அந்த மாதிரியான தகுதிகள் இருக்கிற பொண்ணை நான் இதுவரைக்கும் சந்திக்கலனு சொன்னாராம் .... அந்த மாதிரி தான் , என் பொண்டாட்டிங்கிற அந்தஸ்தை உன்னை தவிர வேற யாருக்கும் என்னால கொடுக்க முடியாது ..."
"ஐயோ பிராக்டிகலா பேசுங்க ராம்.. ப்ளீஸ்..... வாழ்க்கைய நிம்மதியா லீடு பண்ணனும்னா பொண்டாட்டி குழந்தைங்க வேணும் .... இப்ப விட்டுட்டா ... 40 வயச நெருங்கும் போது சரியான முடிவை எடுக்காம வாழ்க்கையை தொலைச்சிட்டோமேனு தோணும் ...அப்ப நீங்க நினைக்கிற மாதிரியான ஒரு வாழ்க்கையை உங்களால அமைச்சுக்கவே முடியாது ...." என்றவளின் பேச்சு இடைவெட்டி
"உன்னை மாதிரி நிறைய பேரு நம்ம வாழ்க்கையை நாம தான் அமைச்சுக்கணும்னு நினைச்சு ஓடறாங்க.... ஆனா நாம எவ்ளோ தான் ட்ரை பண்ணாலும், நமக்கு என்ன மாதிரியான வாழ்க்கை விதிச்சிருக்குதோ அதுதான் அமையும் ..... வாழ்க்கையை யாரும் யாருக்கும் அமைச்சு கொடுக்க முடியாது .... அது தானா அமைஞ்சா தான் உண்டு ..."
என்றான் அவளை உறுத்துப் பார்த்தபடி தீர்மானமாய் .
"ராம், நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்காம நீங்க சித்தாந்தமும் வேதாந்தமும் பேசிக்கிட்டு இருக்கீங்க ... உங்க பாட்டி சொன்ன மாதிரி நான் ஒன்னும் சீமைலயே இல்லாத சீமாட்டி கிடையாது ... எதுக்குமே யூஸ் ஆகாத ஒரு யூஸ்லெஸ் உமன் ... தேவையில்லாம வாழ்நாள் முழுக்க எதுக்குமே லாயக்கி இல்லாத என்னை தூக்கி சுமக்கணும்னு நினைக்கிறத முதல்ல நிறுத்துங்க ..."
"ஐயோ... கொஞ்சம் நிறுத்தறியா ....உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன் ... கல்யாணன்ற பேர்ல என்னால வேற பொண்ணோட படுக்க முடியாது டி அருவருப்பா இருக்கும் ..... போதுமா ..."
அவனது குரல் ஏறக்குறைய அந்த அறை முழுவதும் எதிரொலிக்க, சற்று முன்பு வரை கூட கண்டிறாத அவனின் அந்த ரௌத்திர முகம், அவளை அச்சம் கொள்ள வைக்க, அவனை பார்த்தபடி அதிர்ச்சியில் சிலையாகிப் போனாள் பெண்.
ஓரிரு கணத்திற்கு பிறகு தொடர்ந்தவன்,
"பொண்ணுங்களால காதல் இல்லாம ஒரு ஆணோட கட்டில்ல கூட முடியாது ... ஆனா ஒரு ஆணுக்கு காதல் இருக்கணும்னு அவசியமே இல்ல ... வெறும் காமத்துக்காக அவன் எந்த பொண்ணோடயயும் கூடுவான் ....
அப்படின்னு பொத்தாம் பொதுவா சொன்னவன தேடிக்கிட்டு இருக்கேன்... செருப்பால அடிக்கிறது ....
என்னை மாதிரி காதல் இருக்கிற இடத்துல மட்டும் , காமத்தை உணர்ற ஆண்கள் எத்தனையோ பேர் இருக்காங்க .... என்ன ஒன்னு, சதவிகிதத்துல நாங்க ரொம்ப கம்மி .... அதனால தான் உங்கள மாதிரியான பொண்ணுங்களால எங்களை சரியா புரிஞ்சுக்க முடியல ...
நான் ஒவ்வொரு தடவையும் உன்னோட கூடும் போது, என் உடம்ப விட என் மனசு தான் டி உன்னோட அதிகம் கூடிச்சு ..."
ஒரு ஆண் அதுவும் கணவன், இப்படிப் பேசுவதை கேட்க ஒவ்வொரு மனைவியும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ...
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுள் சிலிர்ப்பை ஏற்படுத்தினாலும், அதனை ரசித்து உள்வாங்கும் மனநிலையில் தான் அவள் இல்லை.
அவன் இவள் வாழ்க்கைக்காக வாதாட .... இவள் அவன் வாழ்க்கைக்காக போராட என தர்க்கம் நீண்டு கொண்டிருந்த நிலையில்,
"டாக்டர் சொன்னத நான் கேட்கலன்னு நீங்க நினைச்சுகிட்டு இருக்கீங்க ... ஆனா இப்ப இருக்கிற பிரச்சனையோட எதிர்காலத்துல ஞாபக மறதி சம்பந்தமான பிரச்சனைகளும் வரலாம்னு அவர் சொன்னதை நான் முழுசா கேட்டேன் ... நெட்ல செக் பண்ணா, அல்சைமர் வர சான்செஸ் அதிகம்னு போட்டிருக்கு..... இப்படி நீங்க எனக்காக பார்த்து பார்த்து செஞ்சுகிட்டு இருக்கீங்க... ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த வியாதியால நான் உங்களையே மறந்தாலும் மறந்துடுவேன்....
அப்புறம் ஏதோ ஒரு படத்துல கமலஹாசன் மாதிரி உங்க நிலைமை ஆயிடும் ...
ப்ளீஸ் ... நீங்க ஆயிரம் சமாதானம் சொன்னாலும், என் மாதிரி ஒரு பேஷண்டோட வாழுற வாழ்க்கை ஒரு கட்டத்துல நிச்சயம் வெறுத்துப் போயிடும் .."
மனதுக்குள் வைத்து மருகிக் கொண்டிருந்த நாகாஸ்திரத்தை கடைசி ஆயுதமாக அவள் களம் இறக்க, அதிர்ச்சியில் ஆடிப் போய்விட்டான் ஸ்ரீயின் நாயகன்.
மனைவிக்கு தன் எதிர்கால மறதியை பற்றி தெரிந்திருப்பதை எண்ணி அதிர்ச்சி அடைந்தவனுக்கு சுதாரிக்க ஓரிரு கணம் தேவைப்பட
"நான் உனக்காக பார்த்து பார்த்து செய்றேன்னு நீ நினைச்சா அது ரொம்ப தப்பு .... இதையெல்லாம் நான் எனக்காக செய்றேன் .... நீ நல்லா வாழ்ந்தா தானே நான் வாழ முடியும்....அந்த சுயநலத்துக்காக செய்றேன் ...
இப்ப கூட என்னால உன் வலியை வாங்கிக்க முடியும்னா, மொத்த வலியையும் வாங்கிக்க தயாரா இருக்கேன்... என்னால உன்னை எந்த சூழ்நிலையிலயும் விட்டுட்டு போக முடியாது டி ...
நான் உன்னை விட்டுட்டு போய், புது வாழ்க்கையை அமைச்சுக்கிட்டு என்ன சாதிக்க போறேன் ...லிசன் ... வாழ்க்கை ஓட்டப்பந்தயம் கிடையாது .... கோல் ஓரியண்ட்டடா டார்கெட் பண்ணி ஓடி ஜெயிக்கிறதுக்கு ... அது ஒரு ஜர்னி ... அதை ரசிச்சு ருசிச்சு வாழ்ந்திருக்கோமாங்கறது தான் முக்கியம் ...
மரணப் படுக்கையில இருக்கும் போது மனுஷனுக்கு பட்டம் பதவி பணம் எதுவுமே உதவாது .... எதையுமே மனம் ரசிக்காது..ஆனா அவன் வாழ்ந்த வாழ்க்கையோட நல்ல நினைவுகளை மட்டும் அசை போட்டு பார்க்க ஆசைப்படும் ...
அப்படி உன்னோட வாழ்ந்த நல்ல நினைவுகளை மட்டும் தான் என்கூட எடுத்துக்கிட்டு போகணும்னு ஆசைப்படறேன் ...
சப்போஸ் வலி தாங்க முடியாம சூசைட் பண்ணிக்கணும்னு ஏதாவது ஐடியா இருந்தா, ஓன்ன மட்டும் ஞாபகத்துல வச்சுக்க... நீ போன அடுத்த நிமிஷம் நானும் உன் கூடவே வந்துடுவேன் ..."
அவன் கலங்கியபடி கரகரப்பான குரலில் முடிக்க, அவளும் கலங்கிய விழிகளோடு அவனை ஏறிட்டாள்.
ஓரிரு கணத்திற்கு பிறகு குரலை செருமிக் கொண்டு,
"நோயிலிருந்து சீக்கிரம் குணமாகி என்னோட வாழனுங்கிற ஆசை உனக்கு இருக்கணும் .... எனக்கு சந்தோஷத்தை கொடுக்கணும் ... குழந்தை குட்டிகளை பெத்து கொடுக்கணுங்கிற எண்ணம் இருக்கணும் ... ஆனா அத பத்தி எல்லாம் யோசிக்காம, இப்படி நெகட்டிவா யோசிக்கிறதையே பொழப்பா வச்சுக்கிட்டு இருந்தா எப்படி டி நல்லது நடக்கும் ... நான் முன்ன சொன்னது தான் பாஸிட்டிவா நினைச்சா தான், பாசிட்டிவா நடக்கும் ...கடைசியா சொல்றேன் கேட்டுக்கோ ...
ஹனுமன் தன் இதயத்தை கிழிச்சு, அதுல ஸ்ரீராமன் மட்டும் தான் இருக்காருன்னு காட்டின மாதிரி என்னால என் இதயத்தை கிழிச்சு அதுல இந்த ஸ்ரீ மட்டும் தான் இருக்கான்னு காட்ட முடியல... ஆனா நிச்சயமா காலப்போக்குல அதை உணர்த்த முடியும் ..."
என்றவனின் குரல் வெகுவாக தழுதழுக்க, எங்கு உடைந்து விடுவோமோ என்று அஞ்சி வேகமாக இடத்தை காலி செய்தான்.
அவன் சென்ற பிறகு சிறிது நேரம் வாய்விட்டே கதறி அழுதாள்....
ஏதாவது சின்ன காரணம் கிடைக்காதா... மனைவியை பிரிவதற்கு என்று அலைமோதும் ஆண்களுக்கு மத்தியில், நிபந்தனையின்றி கண்மூடித்தனமாக அன்பு செலுத்தும் கணவன் தனக்கு கிடைத்திருப்பதை எண்ணி ஒருபுறம் பெருமிதபட்டாலும் , அவனுடன் நிம்மதியாக வாழ கொடுத்து வைக்கவில்லையே என்ற தன் துப்பாக்கியத்தை நினைத்து, வருத்தமுற்றவளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு ஒன்று மனக்கண் முன் படக்காட்சியாய் விரிந்தது.
ப்ராஜெக்ட் பார்ட்டி முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்தவனை வழக்கம் போல் அவள் ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு இதழ் நோக்கி குனியும் பொழுது ,
" ம்ச்... தள்ளிப்போ டி.... கிட்ட வராத..." என அவன் விலகிச் செல்ல, காரணம் புரியாமல் அவள் கலங்க, மனைவியின் முக வாட்டத்தை கண்டதும்,
"பட்டு, இன்னைக்கு பஃபேல இருந்து ஸ்ரீனி எனக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தான் ... அதுல எப்பவும் வைக்கிற மாதிரி சிக்கன் வச்சு கொடுத்துட்டான் .... முதல்ல தெரியாம சாப்ட்டுடேன்... அப்புறம் தான் சிக்கன்னு தெரிஞ்சது... டேஸ்ட் நல்லா இருந்ததால அப்படியே கண்டினியூ பண்ணிட்டேன் .... உனக்கு இந்த ஸ்மெல் எல்லாம் புடிக்காது இல்ல அதனால தான் உன்னை கிட்ட வர வேண்டாம்னு சொன்னேன்.... ..." என்றான் வாஞ்சையாய்.
இப்படியாக அவளது சிறுசிறு உணர்வுகளுக்கு கூட அவன் மதிப்பளித்ததை நினைத்து அப்போது அவளுக்கு பெருமையாக இருந்தது.... ....
ஆனால் இப்போது அவையெல்லாம் நினைக்க நினைக்க, கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர, மன அழுத்தம் கூடாது என்று மருத்துவர் சொன்னதும் நினைவுக்கு வர, சிந்தனையை திசை திருப்ப, படுக்கையில் இருந்து மெல்ல இறங்கி பின் கட்டுத் தோட்டத்தில் காலாற நடக்க தொடங்கினாள்.
அவளைக் கண்டதும் சோம்நாத் அழைக்க, அவளோ திரும்பாமல் வேகமாக நடக்க,
"ப்ரியா , ஏன் கூப்பிட கூப்பிட கண்டுக்காம போற ..." என்றார் குரலை உயர்த்தி.
"அங்கிள், இனிமே நான் உங்ககிட்ட பேசறதா இல்ல .... நீங்க இப்படி அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவிங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... உங்களால எனக்கும் அவருக்கும் செம சண்டை வந்துடுச்சு ..." என்றவளின் விழிகள் கலங்க ,
"இப்படி சின்ன குழந்தை மாதிரி எதையுமே புரிஞ்சுக்காம உணர்ச்சிவசப்படறியே .. நீ அவருக்கு செகண்ட் மேரேஜ் நடக்குமான்னு கேட்டதுக்காக நான் அவர் கிட்ட சொல்லல.... உன் பேச்சுல சூசைடல் தாட்ஸ் இருக்கிற மாதிரி தோணிச்சு ...அதனால தான் அவர்கிட்ட சொன்னேன் ..."
அவள் அமைதியாய் அவரை நோக்க,
"நான் ஒரு கேள்வி கேட்கறேன் பதில் சொல்றயா .... இப்பெல்லாம் நிறைய மேரேஜஸ் டிவோர்ஸ்ல முடியுதே... ஏன்... சொல்லு பாப்போம் ..." என்றார் அவளை உற்று நோக்கி.
"அது.... ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஆனதுக்கு அப்புறம் புரிதல் இல்லாம போறது தான் அதுக்கு காரணம் ..."
"இல்ல, வாழ்க்கையோட நிதர்சனத்தை புரிஞ்சுக்காம கல்யாணம் பண்ணிக்கிறது தான் அதுக்கு காரணம் ... வாழ்க்கை எப்பவுமே ஒரே சீரா ஒரே மாதிரி பாசிட்டிவா போகும்னு, எக்ஸ்பெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறாங்க ....
ஏதாவது ஒரு கட்டத்துல லைஃப்ல அன் எக்ஸ்பெக்டடா நெகட்டிவ் நடக்கும் போது அதை ஹேண்டில் பண்ண தெரியாம ,ரொம்ப கஷ்டப்படறாங்க ...
பிரச்சனை எதுவாயிருந்தாலும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கணுங்கிற பொறுமையும் எண்ணமும் வேற இல்லாம போறதால ஒருத்தர் மேல ஒருத்தர் தப்பு சொல்லி சண்டை போட்டு கடைசில பிரிஞ்சிடறாங்க ...
எது வேணாலும் எப்ப வேணாலும் வாழ்க்கையில நடக்குங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்காம ஃபாரின் டூர் , ஷாப்பிங் ,சினிமான்னே வாழ்க்கை சந்தோஷமா கழிஞ்சிடும்னு எதிர்பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்ப எல்லாம் நடக்கிற டிவோர்ஸ்க்கு காரணம் ...
மேரேஜ் சக்சஸ் ஆகணும்னா பாசிட்டிவான நேரத்துல மட்டும் பாசிட்டிவா இருந்தா போதாது நெகட்டிவான நேரத்துலயும் பாசிட்டிவா இருக்கணும் ...
ஒரு ஆண், தரமான கணவன்னு எப்ப தெரியும் தெரியுமா , அவன் மனைவி நோய்வாய்ப்படும் போது ...
ஒரு பெண் அருமையான மனைவினு எப்ப தெரியும் தெரியுமா , அவ கணவன் எல்லாத்தையும் இழுந்துட்டு பத்து காசுக்கு கூட வழி இல்லாம வந்து நிற்கும் போது ...
இப்படிப்பட்ட நேரங்கள பொறுமையா சமாளிச்சு, தன் இணைய எங்கயும் விட்டுக் கொடுக்காம நடக்கும் போது , அவங்களோட கல்யாண வாழ்க்கை தானா வெற்றிகரமான பாதை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சுடும் ...
உன் வீட்டுக்காரருக்கு உன் நோயோட போராடறதை விட உன்னோட போராடறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்மா...
நீ அவரை புரிஞ்சுக்கவே ட்ரை பண்ண மாட்டேங்குற ...
உனக்கும் அவருக்கும் எட்டு வயசு வித்தியாசம் இல்லையா ... அதனாலதான் அவரோட மெச்சூரிட்டி உனக்கு வர மாட்டேங்குது ....
உன் வீட்டுக்காரர்கிட்ட இருக்கிற பொறுமையும் தன்மையான குணமும் எனக்கு தெரிஞ்சு இங்க பெரும்பாலானவங்க கிட்ட கிடையாது ... ஏன் எனக்கே அவரோட வயசுல இல்லன்னு தான் சொல்லவேன் ....
இன்னொரு முக்கியமான விஷயத்தை நீ புரிஞ்சுக்கணும் ....
லைஃப்ல எல்லாம் பாசிட்டிவா போற வரைக்கும் நம்மளால, நம்ம கூட இருக்கிறவங்கள புரிஞ்சுக்கவே முடியாது ...
ஆனா நெகட்டிவ் நடக்கும் போது, அதை அவங்க ஹேண்டில் பண்ற விதத்தைப் பார்த்து தான் அவங்கள சரியா புரிஞ்சுக்க முடியும் ...
அந்த வகையில நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி ... இது நீ உன் வீட்டுக்காரரை சரியா புரிஞ்சுக்கிற நேரம்ன்னு நினைச்சுக்க... அவர் உனக்காக எந்த எல்லைக்கும் போய் போராட தயாரா இருக்காரு ...
ஆனா நீ இந்த மாதிரியான நேரத்துல அவர புரிஞ்சுக்காம அவருக்கு உறுதுணையா இல்லாம இருக்கிறது தான் அவருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ...
நீ சொன்ன மாதிரி உன் வீட்டுக்காரர் அருமையான மனுஷன் ....அவருக்கு எல்லா சந்தோஷங்களையும் கொடுக்க இந்த பிரபஞ்சம் காத்துகிட்டு இருக்கு ...
நீ பாசிட்டிவான எண்ணத்தோட, வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பிச்சா தான், எல்லாமே பாசிட்டிவா நடக்கும் .... நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவரோட ஜாதகம் அருமையா இருக்கு, நீயும் அவரும் ரொம்ப வருஷம் சந்தோஷமா குழந்தை குட்டிகளோட அருமையா இருக்கப் போறீங்க......
என் பேச்சை நம்பு .... இப்ப இருந்து அழறத நிறுத்திட்டு ஹெல்த்த எப்படி இம்ப்ரூ பண்ணலாம்னு யோசிக்க தொடங்கு ...
நீ எதிர்பார்த்த எல்லா நல்லதும் நடக்கும்.. ஆல் த பெஸ்ட் ...."
கணவன் பேசும் பொழுது நிதர்சனத்தை உணராமல் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றான் என்று எண்ணியிருந்தவளுக்கு, பெரியவரின் தரமான அறிவுரையும் ஆறுதலையும், வாழ்க்கையைப் பற்றிய புரிதலை தர,
"தேங்க்ஸ் அங்கிள் ..... தேங்க்ஸ் எ லாட் " என மனமார நன்றி தெரிவித்துவிட்டு அறைக்குத் திரும்பியவளுக்கு, மனம் இலவம் பஞ்சாய் மிதந்தது.
பெரும் சிறையிலிருந்து தப்பிக்க சாவி கிடைத்தது போல், மெல்லிய நேர்மறையான எண்ணம் மனமெங்கும் வியாபிக்க, இத்துணை நாட்களாக எட்டி நிறுத்தியிருந்த கடவுளை , மீண்டும் மனமார பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.
அரை மணி நேரத்திற்கு பிறகு மிகுந்த சோர்வோடு, திரும்பியவனை பார்க்க பார்க்க காதல் பொங்கியது ... உடன் சற்றுமுன் தான் பேசிய பேச்சுக்களும் நினைவுக்கு வந்தது....
தன்னுள் ஏற்பட்டிருக்கும் நேர்மறை மாற்றத்தை பற்றி எடுத்து சொன்னாலும் நம்பும் நிலையில் அவன் இல்லை என்றே தோன்ற, தன் செய்கையின் மூலம் தன் மாற்றத்தை காட்ட முடிவெடுத்து, அந்தக் கணத்திலிருந்து அதற்கான முயற்சியில் மும்மரமாக இறங்கினாள் வீராவின் நாயகி.
தொடர்ந்து வந்த இரு தினங்களும் வெகு இயல்பாய் கழிந்தன ...
இருவரும் இயல்பாய் பேசிக்கொள்ளவில்லை என்றால், தேவைக்கு பேசிக் கொள்வதை மட்டும் நிறுத்தவில்லை.
அவளிடம் ஏற்பட்டிருக்கும் உத்வேகம், உற்சாகம் , உறுதி எல்லாம் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பளிச்சிட தொடங்க , மனம் மகிழ்ந்து போனான் நாயகன்.
அவன் அலுவலகப் பணி, சிறுவர்களுடன் மட்டைப்பந்து விளையாடுவது, நீந்துவது என நேரத்தை செலவழிக்க, அவளோ யோகா, நடை பயிற்சி, மூச்சுப் பயிற்சி , தியானம் , தரமான உபன்யாசங்களை கேட்டல், புத்தகங்களைப் படித்தல் என நேரத்தை செலவிட தொடங்கினாள்.....
உற்சாகம், இனிமை, முயற்சி போன்ற நேர்மறை உணர்வுகள் அவர்களைச் சுற்றி விஸ்தரிக்க, வாழ்க்கை மெல்ல மெல்ல அழகாகவே மாற தொடங்கியது ...
பணிச்சுமை காரணமாக, அவன் மட்டைப்பந்து விளையாட செல்லவில்லை என்றால், ச்சிண்ட்டு மற்றும் அவனது நண்பர்கள் சுவர் ஏறி குதித்து வந்தாவது அவனை அழைத்துச் செல்லும் அளவிற்கு, அவனுடன் ஒன்றி போக, அவர்களுக்கு இரண்டு ஜோடி தரமான மட்டைகளையும் பந்துகளையும் அமேசானில் வாங்கி அவன் பரிசளிக்க மனமகிழ்ந்து போனார்கள் அந்த இளையவர்கள்.
இந்நிலையில் ஒரு நாள் ஜன்னல் வழியே ஸ்ரீ எதையோ பார்த்துக் கொண்டிருக்க , எதேச்சையாக அறைக்குள் வந்தவன், அவளது செயலை பார்த்துவிட்டு,
"என்ன ஜன்னல் வழியா எட்டி எட்டி பார்த்துகிட்டு இருக்க ... உங்க அப்பா மாமான்னு யாரையாவது ஊர்ல இருந்து வர சொல்லியிருக்கியா ..."
கோபமாக அவன் வினவ,
"இல்ல... இல்ல... அதோ அந்தச் செடி மேல ஒரு ப்ளூ அண்ட் கிரீன் காம்பினேஷன்ல ஒரு குருவி உக்காந்துகிட்டு இருக்கு இல்ல .... அது பாக்க ரொம்ப அழகா இருக்கு.... அதைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன் .... "
"குருவிய பாக்கறேன்... அருவிய பாக்கறேன்னு புளுக்கிட்டு, உங்க வீட்டு ஆளுங்கள யாரையாவது வர சொல்லி இருந்தன்னு வை... இங்க நடக்கிறதே வேற ...."
அவன் சினத்தில் சொல்ல, கோபமே வராதவனுக்கு வந்திருக்கும் நுனிமூக்குக் கோபம், அவனை மேலும் கவர்ச்சியாய் காட்ட, லயித்துப் பார்த்தாள்.
"என்ன... முட்ட கண்ணால முறைச்சி பாக்கற....
ஏதாவது பொய் சொல்றியா ..."
வாத்தியார் போல அவன் மிரட்ட, அதிலும் மன்மதனும் மழலையுமாய் அவன் மாறி மாறி காட்சியளிக்க, கண் எடுக்காமல் மேலும் ரசித்துப் பார்த்தவள்,
"அப்படியெல்லாம் எதுவும் இல்லை ..." என்றாள் மென் புன்னகையோடு .
" இப்ப எதுக்குடி தேவையில்லாம சிரிக்கிற ... இனிமே என்னை பாத்து சிரிச்ச அவ்ளோ தான்..." அதற்கும் அவன் பஞ்சாயத்து வைத்துவிட்டு கிளம்ப,
"யோவ்... எப்பவுமே நீ ஆணழகன் ... இப்ப வரவர பேரழகனா மாறிக்கிட்டு வர ....நான் சிரிச்சா உனக்கு கோவம் வருதா ... இரு இரு இனிமே உன்ன பார்த்த டெய்லியும் சிரிக்கிறேன் ..." என தனக்குள்ளே உற்சாகமாய் மொழிந்துவிட்டு, பேட்டரி காரில் ஏறி எண்ணெய் மசாஜ்காக மருத்துவமனைக்கு பயணப்பட்டாள்.
-------------------------------------------------------------
கோயம்புத்தூரில் .....
ராணா கோமாவில் இருந்து கண் விழித்து மூன்று நாட்களாகிறது .....
கண்விழித்த முதல் நாள் மருத்துவமனையே நொறுங்கிவிடும் அளவிற்கு கத்தி தீர்த்து விட்டான் ...
தன்னை சுற்றி நடப்பதில், எது நிழல் எது நிஜம் என புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறியவனுக்கு தலைவலி தாறுமாறாய் எகுற, உடன் எவ்வளவு சிந்தித்தாலும் சில விஷயங்கள் நிழல் போல் மனதில் வரைபடமாய் ஓடியதே ஒழிய, காட்சிகளோ அல்லது அது குறித்த சிந்தனைகளோ தெளிவாக இல்லாமல் போக, சிந்தித்து சிந்தித்துப் பார்த்தவன் ஒரு கட்டத்தில் தலைவலி தாங்காமல் சீறி அலற, தற்காலிகமாக அவனை அமைதிப்படுத்த மருத்துவர்கள் மயக்க மருந்தை கொடுத்து உறங்கச் செய்தனர்.
அவன் மருத்துவமனையில் சேர்ந்த தினத்திலிருந்து, மான்சி தான் அவனைக் கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டு வருகிறாள் ...
அவளது வாசமே கூடாது என்று விலகி இருந்தவனுக்கு பணிவிடைகள் அனைத்தும் அவளே செய்வது போல் ஆகி போக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்பான அவனுடனான நெருக்கமும் அவனின் வாசமும் , பழைய நினைவுகளை கிளற, திலக் இல்லாததால் அமைந்த அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்து , செவிலியர் யாரையும் அனுமதிக்காமல், ஆண்டுக் கணக்கில் சுமந்திருக்கும் தன் மன காதலைக் காட்ட, இரவு பகல் பாராமல் அவனைக் கைக்குழந்தை போல் அன்பாக பார்த்துக் கொண்டாள்.
முதல் இரண்டு நாட்கள் நினைவு திரும்பும் போதெல்லாம், எதையெதையோ நினைத்து குழப்பிக்கொண்டு தலைவலி தாளாமல் , அவன் துடித்துப் போக, மனதை ஒருமுகப்படுத்த அவனுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.
அதில் ஓரளவிற்கு அவன் சூழ்நிலையை உணர ஆரம்பித்ததுமே மான்சியிடம்,
"நீ எனக்கு எதுவும் செய்ய வேண்டாம் .... டாக்டரை கூப்பிட்டு யாராவது ஒரு நர்ஸை அப்பாயிண்ட் பண்ண சொல்லு .... " என்றான் வெடுக்கென்று பார்வையை எங்கோ பதித்து.
"இங்க பாருங்க, யாரோ ஒரு நர்ஸ் செய்ய போற வேலையை நான் செஞ்சிட்டு போறேன்.... உங்க மனசுல எப்பவுமே எனக்கு இடம் இல்லைன்னு நல்லாவே தெரியும்..... பின்ன எதுக்காக நீங்க பயப்படறீங்க .... "
அவளது கேள்விகள் கூரிய அம்பாய் தாக்க, அமைதியாகிப் போனான்.
அவனது பதின் பருவத்து மகன் சிவான்ஷ் "அப்பா ...." என கண்ணீர் மல்க அழைத்தபடி ஓடி வந்து அவனை அணைத்துக்கொண்டது, மறந்திருந்த பாசத்தை அவனுள் கிளர்ந்தெரிய செய்ய, வளர்ந்த மகனை தழுவிக் கொண்டு உள்ளுக்குள் தளும்பினான்.
மனைவியும் மகனும் , மாறி மாறி அவனை கவனித்துக் கொண்டாலும், அவன் செய்ய போகும் தகடு தத்தத்திற்கு தனிமை அதிகம் தேவைப்பட்டது.
மூன்றாம் நாளிலிருந்து அவனே மெல்ல மனதை ஒருமுகப்படுத்த முயன்று, அதில் ஓரளவிற்கு வெற்றி கண்டவனுக்கு ஸ்ரீ அவன் அலுவலகத்தில் சேர்ந்ததிலிருந்து, அவளுக்காக இவன் சிவகங்கையில் காத்திருந்து மயங்கி விழுந்தது வரை ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, உடனே தன் அலைபேசியை எடுத்து தன் விரல் ரேகையை பதித்து திறந்து மருத்துவர் மைக்கேல் மார்க்குக்கு அழைப்பு விடுத்தான்.
ஓரிரு ஒலிகளுக்குள்ளாகவே இணைப்பில் வந்த மருத்துவர் , எடுத்த எடுப்பில் அவனது உடல் நிலையை விசாரிக்க, இவனும் ஓரளவிற்கு உடல் தேறியிருப்பதாக பதிலளித்தான்.
உடனே அவர்,
"ஸ்ட்ரோக் வந்து உங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்ததும், உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டீம் ஆப் டாக்டர்ஸ்ல நானும் ஒருத்தன் ... அப்பதான் உங்களுக்கு மென்டலி நிறைய ரெஸ்ட் வேணும்னு தெரிஞ்சுக்கிட்டேன் ... சிவியரா நீங்க அஃபெக்ட்டாகிருந்ததால நீங்க கோமால இருந்து வெளிய வர ஒரு வாரத்துல இருந்து பத்து நாளாவது ஆகும் எக்ஸ்பெக்ட் பண்ணோம்....
அதே மாதிரி நீங்க ஏழு எட்டு நாளுக்கு அப்புறம் தான் கண் முழிச்சி இருக்கீங்க ...
எங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங்கு இன்வைட் வந்ததால நாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி தான், அமெரிக்கா வந்து சேர்ந்தோம் ...
பிளான் பண்ணின மாதிரி எதுவுமே நடக்காம போனத நினைச்சா , வருத்தமா தான் இருக்கு....
முதல்ல நீங்க உங்க ஹெல்த்த பாத்துக்குங்க.... அப்புறம் அந்த பொண்ணு கிடைச்சதும் சொல்லுங்க... அகைன் வீ வில் கம் பேக் டு இந்தியா அண்ட் ஸ்டார்ட் தி பிராசஸ் ....
நீங்க கொடுத்த பணத்துக்காக இத நான் சொல்லல ... என்னோட ரிசர்ச்சுக்கும் உதவுங்கறங்கிறதால சொல்றேன்....
டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த் ... கெட் வெல் சூன்..."
என முடிக்க, நன்றி தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்தவனுக்கு திட்டமிட்டிருந்தபடி அனைத்தும் நடந்தேறி இருந்தால், தற்போது நானும் என் ஸ்ரீயும் நியூசிலாந்தில் இருக்கும் ஆக்லேன்ட் தீவில் தனி பங்களாவில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்போமே .... என்ற எண்ணம் மேலோங்கி மீண்டும் மன அழுத்தத்தைக் கூட்ட, இணைப்பு கிடைக்காது என தெரிந்தும் நப்பாசையில் ஸ்ரீயின் அலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்துப் பார்த்தான்.
தற்போது அந்த எண் பயன்பாட்டில் இல்லை என்பது போல் செய்தி கிட்ட, விரக்தி அடைந்தவன் கடந்த முறை ஸ்ரீயின் வீட்டை நோட்டமிட அனுப்பிய அதே நபரைத் தொடர்பு அவள் வீடு திறந்து இருக்கிறதா என்பதை அறிந்து வர பணிக்க, குடும்பத்தோடு மும்பைக்கு சென்றிருப்பதால் அவளது வீடு கிட்டத்தட்ட 10 நாட்களாக பூட்டப்பட்டிருப்பதாக செய்திக்கிட்ட, திணறிப் போய்விட்டான்.
அதற்கு மேல் அவளை எப்படி கண்டுபிடிப்பது என தெரியாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிடவும் முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்து படுத்தான் ...
எப்பொழுதுமே அவனுடைய பெரும்பாலான முக்கிய பணிக்கு எல்லா வகையிலும் பக்க பலமாக இருந்தது திலக் தான்.
தற்பொழுது அவன் சிங்கப்பூரில் இருக்கிறான் என்றாலும், ஸ்ரீ விஷயத்தில் எவ்வகையிலும் உதவ மாட்டான் என்பதை அறிந்திருந்ததால், என்ன செய்வது ஏது செய்வது என தாறுமாறாய் சிந்தித்தவனுக்கு, மீண்டும் தலையே வெடிக்கும் அளவிற்கு தலைவலி தலை தூக்க, வலி தாளாமல் தவித்தவனிடம்
"ராணா, நீங்க நிறைய யோசிக்க யோசிக்க தலைவலி இன்னும் அதிகமாகுமே ஓழிய குறையாது ..... உங்களால இப்ப ஸ்டேபிளா நிக்க கூட முடியல .... உங்க கை எல்லாம் உதறுது ... இதே நிலைமை நீடிச்சுதுன்னா மறுபடியும் நீங்க கோமால போக சான்சஸ் அதிகம் ... எதையும் யோசிக்காம மனச அமைதியா வச்சுக்கிறது தான், இப்போதைக்கு உங்க ஹெல்த் இம்ப்ரூ ஆக ஒரே வழி ...இன்னும் நீங்க பத்து நாளாவது கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தாகணும் .... "
என மருத்துவர் அறிவுறுத்த, மேற்கொண்டு செய்வதற்கு ஏதும் இல்லாததால், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க உடல் நிலையை தேற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக விதைக்க தொடங்கினான்.
-----—-------------------------------------------------------------+
ஊட்டியில் ....
லட்சுமி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி கிட்டத்தட்ட ஒரு வாரமான நிலையில், ஒரு நாள் இரவு ராம்சரண் சற்று தாமதமாக வீடு திரும்ப, அவனைக் கண்டதும் குழந்தைகளை மடியிலிட்டு தூங்க வைத்துக் கொண்டிருந்தவள்,
"நீங்க எதையாவது என்கிட்ட மறைக்கிறீங்களா ...." என்றாள் எடுத்த எடுப்பில்.
அவளது முகத்தில் தெரிந்த தீவிரத்தில், அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன்
"ஆ... வந்து ... அப்படி எதுவும் இல்லையே ..."
என்றான் ஒரேடியாக .
"ஒரு நிமிஷம் ..." என்றவள், ஐந்தாறு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தையின் கால் சட்டையை எடுத்துக்காட்டி,
"இது கட்டிலுக்கு அடில இருந்தது .... இது எப்படி நம்ம வீட்ல வந்தது ... இந்த வயசுல நம்ம வீட்டுல ஆண் குழந்தையே இல்லையே .... அம்மா கிட்ட கேட்டா, உங்கள மாதிரி திரு திருனு முழிக்கிறாங்க ...நம்ம ஸ்ரீபாப்பா, நான் வந்ததிலிருந்து அடிக்கடி 'விஜய் அண்ணா வேணும், விஜய் அண்ணா வேணும்னு ' சொல்லிக்கிட்டே இருக்கா .... திடீர்னு குழந்தைக்கு எப்படி அருணாவோட பையன் ஞாபகம் வந்தது ...நீங்க எல்லாம் சேர்ந்து எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறீங்க ... என்னன்னு சொல்லுங்க .... ப்ளீஸ் "
முகம் இறுகிப் போய் அவள் கெஞ்ச, அதற்கு மேல் அமைதி காப்பது முறையல்ல என்பதால், அவளைக் கொல்ல அருணா கற்பகம் திட்டம் போட்டதிலிருந்து, அருணாவின் மகன் அஜய் இறந்தது வரை ஒன்று விடாமல் அவன் சொல்லி முடித்துவிட்டு,
"இன்னும் ஒரு வாரம் கழிச்சு உன் உடம்பு கொஞ்சம் தேறினதுக்கு அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன் .....அதுக்குள்ள நீயே கண்டுபிடிச்சிட்ட ..... நீ ஹாஸ்பிடல்ல இருந்த வரைக்கும் அருணாவோட பையன் விஜய் இங்க தான் இருந்தான்.... ஸ்ரீ பாப்பாவும் அவனும் ஒன்னா தான் விளையாடிக்கிட்டு இருப்பாங்க ... அவங்கள குட்டியும் ஸ்ரீனியும் தான் பாத்துக்கிட்டாங்க ...நீ வரும் போது அவன் இங்க இருந்தா, நிச்சயம் இந்த மாதிரி உனக்கு சந்தேகம் வரும்னு தான், அவன ஒன் வீக்கா நம்ம எஸ்டேட் பங்களால வச்சி பார்த்துகிட்டு இருக்கோம் ....
என்னதான் அவன பாத்துக்க அத்தனை ஆளுங்க போட்டாலும், குழந்தை நம்ம வீட்டு ஆளுங்க தான் தேடறான் .... அதனாலதான் நானும் அப்பாவும் மாத்தி மாத்தி எஸ்டேட் பங்களாக்கு போய் அவனோடு இருந்துட்டு வரோம்.... இப்ப அப்பா அங்க தான் இருக்காரு..... ...."
என அவன் சொல்லி முடித்ததும் அவள் கண்கள் வெகுவாக பனிக்க,
"அருணா கற்பகம் பெரிய ராட்சசியாய் இருந்தாலும், அந்தக் குழந்தை என்னங்க பாவம் பண்ணுச்சு ....
பெத்த அம்மா அப்பா உயிரோடு இருந்தும், அந்த குழந்தைக்கு எந்தப் பயனும் இல்ல...கூட ரெட்டையா பொறந்தவனும் செத்து போயிட்டான் ...இந்த நிலைல அந்த குழந்தைய தன்னந்தனியா நீங்க மாட மாளிகை கூட கோபுரத்துல கொண்டு போய் வச்சாலும், அது மனசு மனுஷங்களை தான் தேடும் ....
என்னை காப்பாத்த நினைச்சு அந்த குழந்தையை இப்படி நிராதரவா விட்டுட்டீங்களே .... என் மனசே ஆற மாட்டேங்குது ... இனிமே நமக்கு மூணு குழந்தை இல்ல விஜய்யோட சேர்த்து நாலு குழந்தை ....பொழுது விடிஞ்சதும் முதல் வேலையா, குழந்தையை போய் கூட்டிட்டு வந்துடலாம்ங்க ..."
அவள் கமரிய குரலில் முடித்ததும், அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்,
"இதான் லஷ்மி உன்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே .... எந்த சூழ்நிலையிலும் சுயநலமா யோசிக்காம நியாயமா யோசிக்கிற பாத்தியா, நீ எனக்கு வைஃபா அமைஞ்சது நான் செஞ்ச புண்ணியம் ..." என்றான் உணர்ச்சி பெருக்கில்.
சில மணித்துளிகளுக்குப் பிறகு அவனது அணைப்பிலிருந்து விடுபட்டவள் ,
"நான் ஒன்னு கேப்பேன்... மறுக்காம செய்யணும் ... செய்வீங்களா ...." என்றாள் தீவிரமாய்.
"என்ன... சொல்லு ...."
" நான் அருணா கற்பகத்த பாக்கணும் ...."
என்று அவள் முடித்ததும், லேசாக அதிர்ச்சிக்குள்ளானவன்,
"நீ எதுக்கு லட்சுமி அந்த பிசாசுகளை போய் பாக்கணும் .... சாட்சிகள் எல்லாம் சரியா இருந்ததோட பணத்தை நிறைய செலவு செஞ்சு கேஸ ஃபாஸ்ட் டிராக்ல நடத்தி இப்பதான் அப்பா அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்காரு....
கற்பகத்துக்கும் அருணாவுக்கும் தலா பத்து வருஷம் கடுங்காவல் தண்டனை .... மகிக்கா, வினோத், லாரி டிரைவருக்கு தலா நாலு வருஷம்னு தீர்ப்பு வந்திருக்கு ... இதுவரைக்கும் அருணா கற்பகம் சைடுல இருந்து அப்பீலுக்கும் போகல .... இந்த நிலையில் நீ ஏன் அவங்கள போய் பாக்கணும் ..."
"ப்ளீஸ் நான் அவங்களைப் பார்த்தே ஆகணும் காரணம் கேட்காதீங்க ...."
ஒரு கணம் யோசித்தவன்,
"நாளைக்கு அப்பா கிட்ட சொல்லி எஸ்பி கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்க சொல்றேன் .... அடுத்த வாரத்துல கன்ஃபார்மா கிடைச்சிடும்.. வாங்கினதும் நாம ரெண்டு பேரும் ஒண்ணா போய் அதுங்கள பாக்கலாம் .... நான் உன்னை தனியா அனுப்ப மாட்டேன் ...."
என்று தீர்க்கமாய் சொன்னவனை ,ஆரத் தழுவிக் கொண்டவள்,
"உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் ...." என்றாள் மென்மையாய்.
சில கணங்களுக்குப் பிறகு,
"வெற்றியை பத்தியா ...." என அவன் கேட்டதும், ஆச்சரியப்பட்டு தலை நிமிர்ந்து பார்த்தவள்,
"ம்ம்ம்" என அவள் தலையசைக்க ,
உடனே தேயிலைத் தோட்டத்தில், அந்த வயதான பெண்மணி ஆருடம் சொல்லி சென்ற அன்று இரவு, அவள் பித்து பிடித்தது போல் மயக்க நிலையில் அவனை தாக்கியதில் இருந்து சுகந்தியின் கணவன் ரவி மூலம் வெற்றி செய்த அயோக்கியத்தனத்தை அறிந்து கொண்டு அவனை தேடிச்சென்று புரட்டி எடுத்தது வரை ஒன்று விடாமல் ராம்சரண் சொல்லி முடிக்க மனம் குளிர்ந்து போனாள் மங்கை .
"உங்க மேல என்னைக்குமே எனக்கு கோவம் இருந்ததில்ல.... ஆனா வருத்தம் நிறைய இருந்திருக்கு .... நான் வீட்டை விட்டு போனதும், நீங்க என்னை தேடி வருவீங்க... அப்ப வெற்றியை பத்தி சொல்லலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன் ... ஆனா நீங்க அருணா பேச்ச கேட்டுக்கிட்டு, ஒரு போன் பண்ணி கூட என்னை விசாரிக்கல ..."
என்றவளின் கண்கள் கலங்க , அவனது அந்த செயல் அவளது மனதில் இன்னமும் பச்சை ரணமாய் ஆறாமல் இருப்பதை உணர்ந்தவன்,
"நான் செஞ்ச அந்த தப்புக்கு, சாரின்னு ஒரு வார்த்தை சொன்னா போதாது லட்சுமி.... என்னை மாதிரி நிறைய பேர் அம்மா, அப்பா கூட பொறந்தவங்க சொன்னா சரியாதான் இருக்கும்னு கண்ண மூடிக்கிட்டு நம்பறதால தான், நல்ல மனைவியோட வாழ முடியாம விவாகரத்து கேட்டு நடுத்தெருவுல நிக்கறாங்க ....
இந்த உறவு சொன்னா சரியாத்தான் இருக்கும்னு கண்மூடித்தனமா நம்பாம, சொன்ன விஷயத்தை சீர்தூக்கிப் பார்த்தா தான் உண்மை தெரியும், மனுஷங்களோட சுயரூபமும் புரியும்னு ரொம்ப லேட்டா தான் புரிஞ்சுகிட்டேன் .....
வெற்றி, அருணா, கற்பகத்துக்கு தண்டனை கிடைச்சிடுச்சு.... ஆனா அவங்க அப்படி செய்யறதுக்கு காரணமா இருந்த எனக்கு எந்த தண்டனையும் கிடைக்கலையே லஷ்மி ...."
என லேசாக கண்கள் கலங்க அவன் மெய்யாகவே வருந்த,
"யாரு சொன்னா தண்டனை கிடைக்கலனு.... ஏழேழு ஜென்ம தண்டனை கிடைச்சிருக்கு உங்களுக்கு .... நீங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அத்தனை ஜென்மத்துக்கும் நானே உங்களுக்கு பொண்டாட்டியா அமைஞ்சி உங்கள கஷ்டப்படுத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன் ..."
என அவள் சிரிக்க, அதில் மெய் மறந்தபடி அவள் இதழோடு தன் இதழ் பதித்தான்.
+++++++++++++++++++++++++++++++++++++
கேரளாவுக்கு வந்து இரு வாரங்கள் அழகாக உருண்டோடிய நிலையில், ஸ்ரீயின் உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் காணப்படத் தொடங்கியது ...
தலைவலி, உடல் வலி 95 சதவீதத்திற்கு மேல் குறைந்திருந்ததோடு, கை கால் முட்டியை முன்பு போல் வெகு இயல்பாக மடக்க முடிய , பூரித்துப் போனாள் பெண்.
உடல் நிலையில் காணப்பட்ட முன்னேற்றம், அவளை மேலும் உற்சாகம் கொள்ளச் செய்ய, மருந்து, மாத்திரைகள் , யோகா பயிற்சிகளை ஒருவித உத்வேகத்துடன் மேற்கொள்ள தொடங்கினாள்.
பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏதுமில்லாமல் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தி ஆசிரமத்திலேயே பயிரிடப்பட்ட காய்கறிகளை கொண்டு எண்ணெய் , காரம் அதிகம் இல்லாமல் வேகவைத்த செய்த காய்கறி வகைகள், அதிக புரதச்சத்து உள்ள சிவப்பரிசி , பருப்புகள் , இரும்பு சத்துக்காக தினமும் ஒரு கீரை, நாட்டுப் பசுவின் நெய் மற்றும் தயிர் போன்று எளிதில் ஜீரணிக்க கூடிய சரிவிகித உணவும், கட்வஸ்தி போன்ற தைல மசாஜ்களும், அவளை மேலும் மெருகேற்றியிருக்க, அதனை அவள் உணர்வதற்கு முன்பாகவே பத்மினியும், சோம்நாத்தின் மனைவி அஞ்சலியும் அறிந்து அவளிடம் பெருமையாய் உரைக்க, உற்சாகமடைந்தவள், மேலும் தன்னம்பிக்கையோடு மருத்துவர் சொன்ன மருத்துவ முறைகளை பின்பற்றலானாள்.
அன்றாடம் காண்பவர்களுக்கே அவள் உடல் நிலையில் தோன்றியிருக்கும் மாற்றங்கள் பளிச்சென்று தெரியும் நிலையில், கட்டிய கணவனின் பார்வையில் இருந்து மட்டும் தப்புமா என்ன ....
இருவருமே பேசிக் கொள்ளவில்லை என்றாலும், மனைவியிடம் தெரிந்த மாற்றங்கள், அந்த மாறனின் மன நிம்மதியை ஏகத்துக்கும் கூட்டியிருக்க மணமகிழ்ந்து போனான் அந்த மன்னவன் ...
பிறவி சுறுசுறுப்பு என்பதால், உடல்நிலை சற்று தேறியதுமே, தோய்த்த துணிகளை உலர்த்துவது, காய்ந்த துணிகளை மடித்து வைப்பது, அறையை மேம்போக்காக சுத்தம் செய்வது என அவள் அன்றாட பணிகளில் கவனம் செலுத்த , அவளிடம் தோன்றியிருக்கும் அந்த மாற்றங்களில் அவன் கவனம் செலுத்தலானான்.
நாட்கள் நகர நகர, உடல் ஆரோக்கியம் கூட கூட, நங்கையின் அழகில் அது நன்றாகவே பளிச்சிட, நாயகன் அவள் அறியா வண்ணம் ரசிக்கத் தொடங்க, நாயகியும் அவனை ரசிக்க தொடங்கியிருந்தாள்.
இயல்பிலேயே தரமான ஆரோக்கியத்தோடு யாதொரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பவனுக்கு அந்த தூய்மையான காற்று, தண்ணீர் , தரமான உணவு, மன அழுத்தம் ஏதுமின்றி விளையாடும் மட்டைப்பந்து விளையாட்டு, உடல் வெம்மையை தணிக்க தூய்மையான ஆற்று நீர் நீச்சல் ஆகியவை , உடல் ஆரோக்கியத்தையும் கம்பீரத்தையும் பன்மடங்கு கூட்டி இருக்க, மேலும் தன் மன்னவனிடத்தில் மயங்கித்தான் போனாள் அந்த மாது .
தேவைக்கான பேச்சை மட்டுமே இருவரும் தொடர்ந்தாலும் , சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவள் அவனைப் பார்த்து சிரிக்க , அவன் முறைத்து வைக்க என காதலும் ஊடலுமாய் நாட்கள் சுவாரசியத்தோடு அழகாக கழிய தொடங்கின.
என்னதான் அன்புவின் மேல் கோபம் இருந்தாலும் அவளுடைய இழப்பு பெரிது என்பதால், இடையில் அவளை ஒருமுறை அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தான் வீரா.
வழக்கம் போல் தன் தமையனை தொடர்பு கொண்டு பேசி, இங்கிருக்கும் நிலவரங்களை பகிர்ந்தான்.
ஸ்ரீயின் தாய் தந்தை தம்பியும் அவ்வப்போது அவர்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர் ...
பத்மினி, சோம்நாத் குடும்பத்துடன் வீரா தம்பதியரின் நட்பு நாட்பட நாட்பட கூடிப்போக அதனை கண்டும் காணாதது போல் கவனித்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
அவனிடம் அடி வாங்கியதில் இருந்து, அவன் இருப்பிடத்திற்கு செல்வதில்லை என்றாலும், பார்வையால் அவனை அனு கணமும் பின் தொடர்வதை மட்டும் அவள் நிறுத்தவேயில்லை.
இந்நிலையில் ஒரு நாள், அவன் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ,அங்கிருக்கும் மலையை நோக்கி மக்கள் பூமாலைகளை சுமந்து கொண்டு மேள வாத்தியங்களோடு கூட்டம் கூட்டமாக செல்ல, அதற்கான காரணத்தை அவன் ச்சிண்டுவிடம் கேட்க ,
"சேட்டா, அந்த மலைல அவுஷத காளினு ஒரு அம்மன் இருக்கு ..... யாருக்கு எந்த வியாதியா இருந்தாலும், விரதமிருந்து, மலையேறி போய் அந்த அம்மனுக்கு பூஜை செஞ்சா, வேண்டுதல் பலிக்கும்னு ஒரு நம்பிக்கை .....
சம்பந்தப்பட்டவங்க தான் செய்யணும்னு இல்ல, கூடப்பிறந்தவங்க ,அம்மா அப்பானு யார் வேணாலும் செய்யலாம் .... இந்த கிராமத்து ஆளுங்களோட பெரும்பாலும் உங்க ஆசிரமத்து ஆளுங்களும் அங்க போய் பூஜை செய்யறது வழக்கம் ....
மகா பௌர்ணமி பூஜை இன்னைக்கு தொடங்கி இருக்கு .... அதுக்கு தான் மக்கள் கூட்டம் கூட்டமாக போய்க்கிட்டு இருக்காங்க... இன்னையிலிருந்து மூணு நாள் நடக்கிற பூஜைல, கடைசி நாள் பௌர்ணமி அன்னைக்கு தீ மிதிப்பாங்க .... அது ரொம்ப விசேஷமா இருக்கும் அதை பார்க்க கூட்டம் அலைமோதும் ...."
அவன் லயித்து தகவல்களை சொல்லிக்கொண்டே செல்ல,
"நானும் அந்த பூஜைல கலந்துக்கணுமே ..." என்றான் வீரா தீவிரமாய்.
"பூசாரி வீடு, மலை அடிவாரத்துல தான் இருக்கு .... இப்பவே போய் பேசி அதுக்கான ஏற்பட்ட செய்திடலாம் வாங்க......" என்றவன் விளையாட்டை பாதியில் விட்டுவிட்டு, வீராவை அழைத்துக் கொண்டு பூசாரியின் இல்லம் நோக்கி வேக நடையிட்டான்.
அன்றைய தினமும், மறு தினமும் வழக்கம் போல் கழிய, மூன்றாம் நாள் மாலை ஏழு மணிக்கு மேல் குளித்துவிட்டு வேட்டி அணிந்து கொண்டு அவன் வேக வேகமாக கிளம்ப,
"எங்க திடீர்னு கிளம்பறாரு .... அதுவும் வேட்டில .... ஒருவேளை கோயிலுகா இருக்குமோ ...."
தனக்குள்ளே பேசிக்கொண்டு அவள் அவனைப் பார்க்க அவனோ அவளைக் கண்டு கொள்ளாமல் துரிதமாக அறையை விட்டு வெளியேற அப்போது பார்த்து அவளுக்கான இரவு உணவும் மாத்திரையும் வந்து சேர, நோயாளிகளுக்கு வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால், வழக்கம் போல் உணவை உண்டுவிட்டு மாத்திரையை எடுத்துக்கொண்டு உறங்கச் சென்று விட்டாள்.
மறுநாள் காலை விடியும் பொழுது, வீரா தன் கட்டிலில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க
வார இறுதி என்பதால் சற்று நேரம் அதிகமாக உறங்குகிறான் போலும் என்று எண்ணிக்கொண்டு, யோகா வகுப்பிற்கு சென்றுவிட்டாள் ஸ்ரீ.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு பேட்டரி காரில் வந்திறங்கியவளிடம் சோம்நாத்,
"ராம் இப்ப எப்படி இருக்காரு ...." என வினவ,
"ஏன் கேக்குறீங்க ... அவருக்கு என்ன .... அவரு நல்லா தான தூங்கிக்கிட்டு இருக்காரு ...." எதுவும் புரியாமல் அவள் பதிலளிக்க ,
" உனக்கு விஷயமே தெரியாதா ...." எனத் தொடங்கியவர், முந்தின இரவு அவுஷத காளியம்மன் கோவிலில் நடந்த பௌர்ணமி பூஜையில், நாள் முழுவதும் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து அவன் தீ மிதித்ததை சொல்லிக்கொண்டே அதனை தன் அலைபேசியில் காணொளியாய் அவர் ஒட்டிக்காட்ட, பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளிலிருந்து கண்ணீர் கோடாய் இறங்கி கன்னங்களை நனைக்க
"எனக்கு எதுவுமே தெரியாது அங்கிள்.... அவர் சொல்லவே இல்ல ..." என்றாள் தழுதழுத்த குரலில்.
"இதுல அழறதுக்கு என்னமா இருக்கு .... காலம் காலமா சத்தியவான சாவித்திரி காப்பாத்தின கதையே கேட்டு கேட்டு பழகினதால, நமக்கு இதெல்லாம் புதுசா தெரியுது ... ஏன் ஒரு சேஞ்சுகாக, சாவித்திரிய சத்தியவான் போராடி தான் காப்பாத்தட்டுமே.... அதுல தப்ப என்ன இருக்கு ..." என்றவர்,
"என் சாவித்திரி கூப்பிடறா .... அப்புறம் பேசலாம் ...." என சொல்லிவிட்டு விடை பெற,
தளர்ந்த நடையோடும் தளும்பிய மனதோடும் அறைக்கு வந்து சேர்ந்தவளின் விழிகளில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவன் தென்பட, மெதுவாகச் சென்று கட்டிலில் ஏறி அவனது வெற்று மார்பில் முகம் புதைத்த படி அணைத்துக்கொண்டு படுத்தாள்.
அயர்ந்த உறக்கத்தில் இருந்தாலும் மனையாளின் ஸ்பரிசமும் , வாசமும் அனிச்சையாய் அவனை ஆட்கொள்ள, விரிந்து கிடந்த இடது கரத்தை அவள் இடையில் இட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், அடுத்த கணத்திலேயே சடாரென்று எழுந்தமர்ந்து
"இங்க என்ன பண்ற ...." என்றான் அவளிடமிருந்து துரிதமாக விலகி நின்று.
"அம்மு ...." என்றபடி அவள் கண்கள் குளம் கட்ட, அவளது புதுவித அழைப்பை கூட கவனிக்காமல்,
"இங்க பாரு .... இன்னும் இரண்டே நாள் தான் .... டிரீட்மென்ட் முடிஞ்சிடும் .... அப்புறம் நானே வந்து உன்னை கட்டிப்பேன் டி.... இப்ப போயிடு பட்டு ...." என்றான் கெஞ்சலாய்.
"காளியம்மன் கோவில்ல தீ மிதிச்சீங்களா ...."
அவன் முகத்திலிருந்து கலங்கிய விழிகளை விலக்காமல் அவள் கேட்க
"ஆமா ...சோம்நாத் அங்கிள் சொன்னாரா ...."
"ஆமா .... எனக்காகவா செஞ்சீங்க ..."
" இல்ல.... எனக்காக ...."
"என்ன திடீர்னு இப்படி ஒரு வேண்டுதல் .... கால் எல்லாம் பொத்து போயிடுச்சே..."
"வேண்டுதல் எல்லாம் இல்ல .... நீ நல்ல குணமாயிட்டு வர்றத பாத்ததும் , என்னமோ கோவில்ல தீ மிதிக்கணும்னு தோணுச்சு அதான் ...."
" என் ஹெல்த் இம்ப்ரூவ் ஆகிகிட்டே வருதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும் ...."
விழிகளை அகற்றி அவள் வினவ,
"அதான் பாக்கறேனே .... பழைய மாதிரி துரு துருன்னு பட்டாம்பூச்சியா சுத்தறயே... அதோட நம்ம கல்யாணத்துல பார்த்ததைவிட இப்ப நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா ........." அவன் ரசனையாய் மொழிய
" நெஜம்ம்ம்ம்மா......" அவள் குழைய,
" நிஜமாடி .... "
" அப்ப ஏன் இத்தனை நாளா இத சொல்லல ...."
" நீ ஏன் இத்தனை நாளா பேசல ..."
" நீங்க பேசல... அதனால நான் பேசல ..."
"நீதான என்னை வேண்டாம்னு சொன்ன... அப்ப தப்பு உன் மேல தானே .... அப்ப நீ தானே முதல்ல வந்து பேசணும் ...."
"நான் உங்களை வேண்டாம்னு சொல்லல அம்மு... உங்க லைஃப் என்னால கெட்டுட கூடாதுன்னு நெனச்சேன் ..." என்றவளின் விழிகளில் இருந்த கண்ணீர் துளியை தன் விரல்களால் சுண்டி விட்டுவிட்டு,
"அது என்ன அம்மு ... புதுசா இருக்கே..." என்றான் குறும்பாய்.
"என் அம்மா இங்க இருந்திருந்தா என்னை எப்படி எல்லாம் கவனிச்சுக்கிட்டு இருப்பாங்களோ .... அதே மாதிரி நீங்க என்னை பாத்துக்கிட்டீங்களே ....அதான் ..."
அழுகையும் புன்னகையுமாய், சொல்லிக்கொண்டே அவள் அவனைக் கட்டி அணைக்க நெருங்க, விந்தி விந்தி ஈரடி பின்னோக்கி துரிதமாக விலகியவன்,
"டோன்ட் டச் .... டோன்ட் டச் மீ.... மெயின்டைன் த டிஸ்டன்ஸ் ..... இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது .... நானும் வரமாட்டேன் .... பேச்சு பேச்சா இருக்கணும் ..." அவன் குறு நகையோடு மொழிய,
"இன்னும் ரெண்டு நாள் தானே.... அப்புறம் இருக்கு உங்களுக்கு ...." புன்னகையோடு வீராவேசமாய் வசனம் பேசிவிட்டு காலை உணவருந்த சென்றாள் ஸ்ரீ.
மேலும் இரண்டு நாட்கள் வெகு அழகாக பழைய காதலும் ஊடலுமாய் கழிய, மூன்று வாரங்கள் தொடர்ந்த மருத்துவம் முடிவுக்கு வந்ததால் மறுநாள் காலை தலைமை மருத்துவரிடமிருந்து அழைப்பு வந்தது.
இருவரும் மருத்துவரை சென்று சந்திக்க, வழக்கம் போல் ஸ்ரீயின் இடது கரத்தை பிடித்து நாடி பார்த்தவர் சில கணங்களுக்குப் பிறகு,
"ஹீ ஈஸ் அப்சல்யூட்லி ஃபைன் நவ் .... இவ்ளோ சீக்கிரத்துல இவ்ளோ இம்ப்ரூவ்மெண்ட் ஆச்சரியமா தான் இருக்கு ..... இவங்களுக்காக கஸ்டமைஸ் பண்ண மெடிசனை இவங்க அட்லீஸ்ட் ஒன் இயர் எடுத்தாகணும் , சப்போஸ் பெயின் வந்தா கொடுத்த சூரணங்களை, சொன்ன முறைப்படி எடுத்துக்கணும் .... இதே டயட் எக்ஸர்சைஸ ஃபாலோ பண்ணினா தான், இந்த மெடிசன் வொர்க் ஆகும் ... சரியா ...." என்று புன்னகையோடு மொழிந்தவரிடம்
"தேங்க்ஸ் அ லாட் டாக்டர் ..... நாங்க இன்னும் ஒரு 3 டேஸ் இங்க ஸ்டே பண்ணிட்டு போகலாம்னு பிளான் பண்ணி இருக்கோம் ... இஸ் இட் ஓகே ஃபார் யூ ..."
"நோ இஷ்யூஸ் .... நவ் யூ கேன் ஸ்டார்ட் யுவர் இன்டிமேட் லைஃப் .... என்ஜாய் மை சன் ... ஆல் தி பெஸ்ட் ...." என்றவரிடம் மனநிறைவோடு விடைபெற்று கேண்டினுக்குச் சென்று , நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து ஏதேதோ கதைத்த படி மனம் குளிர உண்டு முடித்துவிட்டு இருவரும் தங்கள் அறையை அடையும் போது, பத்மினி,
"ப்ரியா உனக்காக தான் இவ்ளோ நேரமா காத்து கிடக்கேன் ... வா... வந்து.... இதுல எந்த புடவை நல்லா இருக்குன்னு செலக்ட் பண்ணு பாப்போம் .... இதெல்லாம் எங்க கடையில இருக்குற புடவைங்க... உனக்கு ஏதாச்சும் பரிசு கொடுக்கணும்னு தோணுச்சு ...அதான் போட்டோச கேட்டு வரவழைச்சேன் ..."
என தன் அலைபேசியை காட்ட, ஸ்ரீயோ வேண்டாம் என மறுக்க, பத்மினியும் விடாமல் அவளை வற்புறுத்த, அதனைப் பார்த்துக் கொண்டிருந்த வீராவுக்கு பொறுமை காற்றில் பறக்கத் தொடங்கியது.
"இருக்கிற நாளெல்லாம் விட்டுட்டு இப்ப போய் புடவையை செலக்ட் பண்ணு ... பூவ செலக்ட் பண்ணுன்னு .... நல்ல நாள்லயே இவளுக்கு செலக்ட் பண்ண தெரியாதே... இப்ப இன்னும் திணறுவாளே ...." என வீரா மனதோடு மல்லு கட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு வழியாக ஏதோ ஒரு புடவையை தேர்வு செய்து முடித்துவிட்டு அவன் நாயகி வர,
"அக்கா எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சில்ல.... " என உறுதிப்படுத்திக் கொள்ள அவன் கேட்க, ஸ்ரீ களுக்கென்று வாயை பொத்திக்கொண்டு சிரிக்க, அவனது பேச்சின் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்
"முடிஞ்சிருச்சு தம்பி ... இன்னும் ரெண்டு நாள்ல புடவை வந்துடும் ...." பத்மினி வெள்ளந்தியாக மொழிய,
" குட் நைட் அக்கா ...." என வேகமாய் அந்த பேச்சுக்கு முடிவுரை எழுதிவிட்டு, தன்னவளோடு அறைக்குள் நுழைந்தவன், கதவை மூடிய மாத்திரத்தில், நாயகியை இழுத்தணைத்து அவளது நெற்றி, கண்கள் கன்னங்களில் முத்த ஊர்வலம் நடத்தி முடித்து இறுதியில் இதழோடு இதழ் சேர்த்து இனிய இல்லறத்தை தொடங்கினான்.
அவனுள் தேக்கி வைத்திருந்த ஏக்கமும்,
பொத்தி வைத்திருந்த மோகமும்,
அடக்கி வைத்திருந்த ஆசையும்,
தடுத்து வைத்திருந்த தாபமும்,
கார்மேகத்தை சுமந்திருக்கும் வானமாய்
பொத்துக்கொண்டு அவளது மென் தேகத்தில் பொழிய
அவள் திணற,
அவன் கிறங்க,
அவள் லயிக்க
அவன் துடிக்க ,
காதலின் மிச்ச சொச்சங்களை காமத்தின் உச்சமாய் கலவி பெருங்கடல் நீந்தி அந்த ஓர் இரவிலேயே பலமுறை கரைக்கண்டு களித்து , காலை வெய்யோனின் வருகையை கண்டு விட்டே களைத்துக் கண் மூடினார்கள் அந்தக் காதலர்கள் ....
நண்பகலை நெருங்கும் போது தான், அவளுக்கு விழிப்பு வர, பிறந்த மேனியாய் இருந்தவள் வெட்கத்தோடு போர்வையை அள்ளிப் போட்டுக்கொண்டு கட்டிலில் சாய்ந்தமர , அவள் அசைவில் விழித்தவன் அவளைக் கிறக்கமாய் பார்த்துக் கொண்டே எழுந்தமர, இரவின் இனிமையை நினைத்து அவள் கூச்சத்தோடு தலை குனிய, அவளது கன்னம் தாங்கி முகம் திருப்பியவன் , தெளிவாய், மெதுவாய், பதமாய், அவள் விழிகளை பார்த்துக் கொண்டே அவள் கன்னத்தில் அறைந்தான்.
ஸ்ரீராமம் வருவார்கள் ......
Dear friends,
அடுத்த எபிசோடுல climax and epilogue. வந்துடும் .... வீட்ல கொஞ்சம் வேலை அதிகம் அதனால தான், சொன்ன நேரத்துக்கு எபிசோடு போட முடியல ...sorry.....அடுத்த எபிசோடு thursday night ....
Climax நிச்சயமா நீங்க எதிர்பார்க்காத ஒன்னா தான் இருக்கும்னு நினைக்கிறேன் ... ஒருவேள நீங்க யாராவது guess பண்ணிட்டீங்கனா ப்ளீஸ் கமெண்ட் பண்ணுங்க ....
Thanks for your love and continues support...
Love u all
Priya Jagannathan
Super mam
ReplyDeletethanks dr
Deletekeep rocking 💕💕💕💕💕💕
ReplyDeletethanks a lot dr
DeleteThayavu senui raana vachi mattum play pannidathinga mam.. Plz... Ellaraiyum settle agitanga... Veera and sri mattum yna pavam pannunanga... Plz pavam pasanga vittudunga... Thursday day nit epo nu pathutu irukan.... Sikkirama upalod pannidunga...
ReplyDeletesure da...no worries dr
Delete59 to 109 episodes missing mam
ReplyDeletefull story pratilipili irukuma
DeleteWow finally sri cure aagita, Ram and Sri sethu vechathuku nandrigal pala. Rana voda old memories la same Avan plan pota antha doctor vechey delete pana nalla irukum. Rana Sri maranthutu Avan wife kuda serthu vazhntha good... Waiting for next climax eagerly
ReplyDeletethanks a lot dr for continuous support and love
DeleteIntha adi eathukunga divorce ketathuka ila rana pathi solathathuka..?? And rana ku cure aganum mansi kuda seranum sisy..
ReplyDeleteepisode uploaded ma...thanks a lot da
Delete