ஸ்ரீராமம்-140

 அத்தியாயம் 140


அவன் அறைந்ததில் அழுத்தமோ, அதிகபட்ச வலியோ இல்லை என்றாலும் ,  அந்த எதிர்பாராத நிகழ்வு அவளை நிலைகுலைந்து போகவே செய்ய,   அதிர்ச்சியோடு விழிகள் கலங்க தன் கன்னத்தைக் தடவிக் கொண்டே அவனை ஏறிட்டாள்.


"எதுக்கு அறைஞ்சேன்னு யோசிக்கிறியா .... 

உனக்கு வலிக்கணும்னு தான் அறைஞ்சேன்.... எப்பவும் நீ இதை ஞாபகத்துல வச்சுக்கணும்னு தான் அறைஞ்சேன்..." என்றான் பெருங்கோபத்தோடு.


அவள் புரியாமல் நோக்க,


" இன்னைக்கு 22 வது நாள் ...." 

என்றான் காட்டமாக. 


அவன் சொன்னதுமே,   இரண்டு வாரங்களுக்கு முன்பான தனது  மனநிலைக்கும் தற்போதைய மனநிலைக்குமான வித்யாசங்களை உணர ஆரம்பித்தவளின் மனதில் ஆச்சரியம் அவசரமாய் குடிபுக ,  அமைதியாய் தலை குனிந்து கொண்டாள். 


"இப்ப உன் ஹெல்த் இஷ்யூ ஓரளவுக்கு சால்வானதால,  என்னோட சந்தோஷமா இருக்க, சிரிச்சு பேசற ....  ஒரு வேளை  சால்வு ஆகாமலே போயிருந்தா , இந்நேரம்   டிவோர்ஸ் வேணும்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்ணி இருப்பல்ல ... 

நீ உண்மையிலயே நமக்கு நடந்த கல்யாணத்தை மதிச்சிருந்தா,  அதைவிட என்னை ஆத்மார்த்தமா நேசிச்சிருந்தா,

நான் சீக்கிரம் குணமாகணும் .... ஏதாவது பண்ணுங்கனு ...  என் மேல நம்பிக்கை வச்சு கேட்டிருப்ப.... அதை விட்டுட்டு எனக்கு டிவோர்ஸ் வேணும்னு கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்க மாட்ட ...

நீ இல்லாம என்னால வாழவே முடியாதுனு தெரிஞ்சும் அப்படி கேட்க உனக்கு எப்படி டி மனசு வந்தது ..."

அவன் பார்வையில் கோபம் மின்ன,


"நீங்க நல்லா இருக்கணும்னு நெனச்சு தான் அப்படி கேட்டேன்  ..." என்றாள் வெகு சன்னமாய். 


"நீ இல்லாம  நான் எப்படி நல்லா இருப்பேன்...  


டெத், டிசெபிலிட்டி, டிசிஸ் இந்த மூணும்  யாருக்கு வேணாலும் எப்ப வேணாலும் வரலாம் .... நாளைக்கே ஏதாவது டிசிஸ் எனக்கு வந்தாலும், நீ என்னை விட்டு போக மாட்ட,  என்னை காப்பாத்த மேக்ஸிமம் லெவல் ட்ரை பண்ணுவேங்கிற நம்பிக்கை  எனக்கு உன் மேல எப்பவுமே உண்டு ....


அதே மாதிரி  நானும் என்னை விட்டுட்டு போனு உன்னை இம்சை பண்ண மாட்டேன்....நீ என் கூட பக்க பலமா இருக்கணும்னு தான் ஆசைப்படுவேன் ...


இங்க இவங்க கொடுத்த மருந்தை விட,  பழைய வாழ்க்கையை மீட்டெடுக்கணும், சந்தோஷமா வாழனும்னு பாசிட்டிவா  நினைச்சு, ஓடின பாரு .... அந்த ஓட்டம் தான் இப்ப உன்னை ஓரளவுக்கு தேத்தி இருக்கு... 


இதெல்லாம் ஏன்  சொல்றேன்னா,  மெடிசன்ஸ்,  யோகா, வாக்கிங், சரியான டைம்ல தூக்கம் , பேலன்ஸ்ட் டையட்னு எல்லாத்தையும் நீ  ஸ்ட்ரிக்ட் டா ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்றதால,  உன்னோட டிஸ்ஆடர்  இப்போதைக்கு ஜஸ்ட் மியூட் ஆயிருக்கு .... கம்ப்ளீட்டா க்யோர் ஆகல ...ஆகவும் ஆகாது ... 

அதை நீ ஞாபகத்துல வச்சுக்கணும் ...


எதிர்காலத்துல எப்ப வேணாலும்,  திரும்ப இந்த பிரச்சனைங்க தல தூக்கலாம்.... அப்ப  வலி தாங்க முடியாம, திரும்பவும் எனக்கு டிவோர்ஸ் வேணும்னு நீ ஆரம்பிக்கக் கூடாது.... 


அப்படி கேட்கணும்னு  தோணுச்சின்னா என்னோட இந்த அறை உனக்கு ஞாபகத்துக்கு வரணும் .... அதுக்கு தான் அறைஞ்சேன் ....


என்னைக்குமே உன்னை ஹர்ட் பண்ணனும்னு நெனச்சதில்ல டி... ஆனா அன்னைக்கு உங்க வீட்டுல உன் ஹெல்த் இஷ்யூவ சொன்ன கையோட டிவோர்ஸ் கேட்ட பாத்தியா .... சுக்கு நூறா உடைஞ்சி போயிட்டேன் ....


கண்ணைக் கட்டி காட்ல விட்ட மாதிரி இப்படி ஒரு ஹெல்த் கண்டிஷன , எப்படி ஹாண்டில் பண்றதுன்னு , யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே  டிவோர்ஸ் கேட்டு நீ படுத்தின பாட்ட இப்ப வரைக்கும் என்னால மறக்கவே முடியாது ... 


நான் அன்னைக்கு  அனுபவிச்ச வலி உனக்கு தெரியனும் இல்லையா ...  அதான் அடிச்சேன்..... ...."  ஒருவித வலியோடு சொல்லி முடித்தவன், 


"எனிவே,  நான் சொன்னது உனக்கு ஏறலன்னாலும்   சோம்நாத்  அங்கிள் சொன்னத புரிஞ்சுகிட்டு, பாசிட்டிவா முழு மனசோட போராடி,  உன் ஹெல்த்த இம்ப்ரூவ் பண்ணினதுக்கு  தேங்க்ஸ் எ லாட் மை கேர்ள்...... ...." 


என பெருமையோடு சொல்லி முடிக்க,  அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல்,

போர்வையை அள்ளிப் போர்த்துக்கொண்டு, அவள் படுக்கையை விட்டு இறங்க முற்பட,


" நில்லு  டி... எங்க போற ...."  என்றான் சரசமாய்.


" ம்ம்ம்ம்....  என்னை யாரு அடிச்சாலும் அவங்களோட பேச மாட்டேன் ..... எல்கேஜ்ல ஒரு பொண்ணு என்னை அடிச்சிட்டா .... 

காலேஜ் முடிகிற வரைக்கும்  நான் அவ கூட  பேசவே இல்ல  ... தெரியுமா ..."  என்றவளின்  இடையை கொத்தாக பற்றி தூக்கி,  தன் மடியில் அமரச் செய்ய,


"இனிமே  நமக்குள்ள பேச்சுவார்த்தை இல்லன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் ....  இப்படி பண்ணா என்ன அர்த்தம் ...."


"பேச்சுவார்த்தை தான இல்லனு சொன்ன .... இதுக்கு தான் பேச்சுவார்த்தையே தேவையில்லையே...." என்று குழைந்தவன் , பேச விழைந்தவளின் இதழை சிறை பிடித்து,  முந்தைய இரவின் சல்லாபத்தை மும்மரமாய் தொடர்ந்தான். 


அடுத்து வந்த நாட்கள் எல்லாம்,  வண்ணமிகு நாட்களாக காதல், ஊடல், கூடல், கொஞ்சலாய் கழிய தொடங்கின. 


மட்டைப்பந்து விளையாடும் இடத்திற்கு தன்னவளை  அழைத்துச் சென்று, அவளது விருப்பத்திற்கு ஏற்ப அவளை  பேட்டிங் செய்ய  அவன் களம் இறக்க, களத்தில் குதித்தவளோ மட்டையை சரியாக பிடிக்க கூட  தெரியாமல் திணற,  வழக்கம் போல் பின்புறமாய் நெருங்கி நின்று, அவளது கரம் பற்றி,  அவன் மட்டையை சுழற்ற பந்து நாலு, ஆறாய் பறக்க , ஏதோ தானே அடித்தது போல் அவள் குதித்து ஆரவாரிக்க, அதனைக் கண்டு  அங்கிருந்த சிறுவர்களோடு,  அவனும் மகிழ்ந்தபடி  நீண்ட சீட்டி அடிக்க , அதில் வெட்கியவள் , தன்னை மறந்து சிரித்து மகிழ்ந்தாள் .


அதே போல்  நீந்துவதற்காக அவன் சென்ற போது , வழக்கம் போல்  வேடிக்கை பார்க்க உடன் சென்றவள் , தண்ணீரில் மூழ்கி மீனுக்கு இணையாக,  லாவகமாக நீந்தியவனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே   திடீரென்று  அவன்  காணாமல் போக,  பதறியவள் குளத்தின் முதல் படிக்கட்டில் இறங்கி  கண்ணீர் மல்க  தீவிரமாய்  தண்ணீரில் தேட, ஒரு சில மணித்துளிகளுக்கு பிறகு  சுறா போல் மேலெழும்பியவன் அவளை சுனாமியாய் சுழற்றிக்கொண்டு நீருக்கடியில் சென்று பட்டுப்படாமலும் தொட்டும் தொடாமலும் அவனது பெயருக்கேற்றார் போல்  மெல்லிய ஜல கிரீடையை  நடத்தி வெற்றி கண்டான்.


இதையெல்லாம் கண்டும் காணாதது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா .


நடக்க முடியாதவள்,  கை விரல்களை மடக்க கூட முடியாதவள், இன்று தண்ணீரிலும் தரையிலும் வண்ணத்துப் பூச்சியாய்  வட்டமடிப்பதை கண்டு  உள்ளுக்குள்  காந்தி போனாள். 


அதைவிட வீரா , ஸ்ரீயை  தலையில் தூக்கி வைக்காத குறையாய் கொண்டாடியது வேறு அவளது  ஆத்திரத்தை அதிகப்படுத்தி இருக்க , காட்டேஜின் முன்பக்க தோட்ட மர பெஞ்சில் தன் குழந்தையோடு அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த  பத்மினியிடம்,


"அந்தப் பொண்ணுக்கு தான் உடம்பு சரி ஆயிடுச்சு இல்ல .... ஊருக்கு போகாம ரெண்டு பேரும்  இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க ... ...." 

 

அதிக பிரசங்கித்தனமாக அவள் ஆங்கிலம் கலந்த மலையாளத்தில்  கேள்வி எழுப்ப,  


"எக்ஸ்ட்ராவா ஒரு மாசம் தங்கி என்ஜாய் பண்ணிட்டு போகலாம்னு பிளான் பண்ணி இருக்காங்களாம்.... சொன்னாங்க ..." என பத்மினியும் தனக்குத் தெரிந்த ஆங்கிலம் கலந்த தமிழில் திக்கி திணறி பதிலளிக்க, 


"என்னமோ ஹனிமூன்க்கு வந்தா மாதிரி ஆசிரமத்துல ஒரே அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்க ... இதெல்லாம் பார்க்க சுத்தமா நல்லா இல்ல ..." வெடுக்கென்று மொழிந்து விட்டு அவள் விடைபெற ,  வெறுப்போடு போறவளையே  வெறித்து பார்த்தாள் பத்மினி.


வீரா,  ஸ்ரீ வருவதற்கு முன்பு வரை பத்மினியை  கண்டாலே , சம்யுக்தா தலையை திருப்பிக் கொண்டு போய் விடுவாள்.   எப்பொழுது அவர்கள் வந்தார்களோ அன்றிலிருந்து தான்  ஓரளவிற்கு பத்மினியை பார்த்து நட்பாய் சிரிக்க ஆரம்பித்தாள் .... 

இன்று தான் முதன் முதலாய் பேசியிருக்கிறாள் ... அதுவும் ஸ்ரீயை பற்றி அறிந்து கொள்வதற்காக...


ஆனால் அவள் தினமும் வீராவை பார்வையாலும்,  சைக்கிளிலும் தொடர்வதையும் , அவ்வப்போது  ஸ்ரீயை ஏளனமாக பார்ப்பதையும்   பத்மினி பலமுறை பார்த்திருக்கிறாள் ....


அதிலிருந்து சம்யுக்தாவை கண்டாலே வெறுப்பு தான்  ...  அதுவும் இன்று அவளாகவே வந்து,  அதிகப்பிரசங்கித்தனமாக வீரா ஸ்ரீயின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி  விசாரித்தது வேறு  பத்மினியை  எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்க,  வேண்டுமென்றே சம்யுக்தாவை  வெறுப்பேற்ற எண்ணியே  அப்படி ஒரு பதிலை சொல்லி  அனுப்பி வைத்தாள்  பத்மினி. 


வழக்கம் போல் மாலையில்  வீராவும் ஸ்ரீயும்  மைதானத்திற்கு  சென்று சற்று நேரம் மட்டைப்பந்து விளையாடிவிட்டு ,  மறுநாள் அதிகாலையில் அவர்கள்   கோயம்புத்தூருக்கு பயணப்படவிருக்கும் செய்தியை  சிறார்களிடம் பகிர,  அதனை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாமல் கலங்கி தவித்தனர் இளையவர்கள். 


வெறும் மூன்று வார கால நட்பே, என்றாலும்  அளப்பரியா புரிதலையும், ஆழ்ந்த  சகோதரத்துவத்தையும்  அளவில்லாமல் அனுபவித்திருந்ததால்,  வீரா ஸ்ரீயின் பிரிவை எண்ணி சின்னவர்கள்  வெகுவாகவே வருந்தினர்.


அதுவும் ச்சிண்டு,  வீராவை கட்டிக்கொண்டு கதறியே விட்டான்.  எதற்கும் உணர்ச்சி வசப்படாத வீராவும் , அவனுடைய அன்பில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் வெகு லேசாக கண் கலங்கித் தான் போனான்.  


ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தி, தனது முகவரி மற்றும் அலைபேசி எண்களை பகிர்ந்து, அடுத்த ஆண்டு விடுமுறைக்கு வருவதாக வாக்களித்த பின்னரே, அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப , கனத்த இதயத்தோடு  வீடு திரும்பினர் ஸ்ரீ தம்பதியர். 


அறைக்கு வந்ததும், 


"ராம்,  நமக்கு நாளைக்கு காலையில 10 மணிக்கு ஃபிளைட்ங்கிறதால , இப்பவே பத்மினி அக்காவையும்,  சோம்நாத் அங்கிளையும் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேனே..." என்றாள் பரபரப்பாய் .


"அவங்களுக்கு ஏற்கனவே  நாம நாளைக்கு காலைல ஊருக்கு போறது தெரியுமே டி ...  கிளம்பும் போது சொன்ன போதாதா ..."


"இல்ல ராம்,  ஒரு வார்த்தை இப்பவே போய் சொல்லிட்டு வந்துடறேனே ...." என்றவள் பத்மினியை சந்தித்து சற்று நேரம் மனம் விட்டு பேசி மகிழ்ந்தாள்.


அப்போது 


"ப்ரியா ,  வந்ததுல இருந்து பாத்துக்கினு இருக்கேன் அந்தப் பொண்ணு சம்யுக்தாவோட குணமே சரி இல்ல... நீங்க ரெண்டு பேரும் வந்ததுக்கு பொறவு  எப்பவும் உன்னை ஏளனமாவும், தம்பிய முழுங்கற மாதிரியும் பாத்துக்கினே இருப்பா  ... இப்ப நீ குணமானத தாங்கிக்க முடியாம வந்து பொருமிட்டு போறா .... அவ எதிர்க்க நீ நல்லபடியா குணமாகி  வாழ்ந்து காட்டிட்ட ப்ரியா .... அத நெனைச்சா  எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ...."  என பத்மினி பெருமையோடு சொல்ல,


"யார் முன்னாடியும் நான் வாழ்ந்து காட்டணும்னு நினைச்சதில்லக்கா ....  நாம வாழற வாழ்க்கை ஆண்டவனுக்கு தெரிஞ்சா போதும் ... அடுத்தவனுக்கு தெரிஞ்சு  என்ன ஆகப்போகுது  ..." 

என்றவளை கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவள் ,


"என்னமோ,  உன்னை எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு .... ஒரு முறை நீயும் தம்பியும் என் வீட்டுக்கு வரணும்  ..." என்றவள் பிஸ்தா நிறத்தில்  அடர் ஊதா ஜரிகைக் கொண்ட சில்க் காட்டன் புடவையை அவளுக்கு பரிசாக தர,  முதன்முறையாக தாய் மற்றும் கணவனின் துணை இல்லாமல் தானே தேர்வு செய்த புடவை தரமாக வந்திருப்பதை பார்த்து மனம் மகிழ்ந்த ஸ்ரீ,  அவளுக்கு மனமார நன்றி தெரிவித்து விட்டு சோம்நாத் காட்டேஜ்க்கு சென்று அவர்களிடமும் சற்று நேரம் உரையாடிவிட்டு  பின்,  மூத்த தம்பதியரின் ஆசியைப் பெற்றுக் கொண்டே அறைக்கு வந்து சேர்ந்தாள். 


அன்றிரவு உடுப்புகளை பயணப் பொதிகளில் அடுக்கிக் கொண்டிருந்த வீரா தன்னவளை பார்த்து 


"உன்கிட்ட முக்கியமான விஷயம்  சொல்லணும் ...."  என்றான் சிறு தயக்கத்தோடு.


"என்ன சொல்லுங்க .... "  என்றபடி உடுப்புகளை மடிப்பதில்  அவள் மும்மரமாக இருக்க, 


"இங்க வா...."  என்றவன் அவள் அருகில் வந்ததும்,  மெதுவாய்,


"இப்ப ஊர்ல யாரும் இல்ல .... பாட்டி அம்மா அப்பா எல்லாரும் மும்பைக்கு போய் இருக்காங்க ..." என்றான் புதிர் போடுவது போல்.


கோயம்புத்தூருக்கு சென்றதும் , வீட்டில் ஆட்கள் இல்லாததை கண்டு,  அவள்  கேள்வி எழுப்பும் பொழுது பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதால் ,  முன்னதாகவே,  விஷயத்தை சொல்ல எண்ணி,  அப்படி அவன் ஆரம்பிக்க, எதிர்பார்த்தது போல் அவளும் காரணம் கேட்க, விஷயத்தை விவரமாக சொல்லி முடித்தான். 


கேட்டு அதிர்ந்தவள் கண்ணீர் மல்க, 


"அன்பு ரொம்ப பாவங்க.... 4 நாள் தள்ளி போயிட்டு பீரியட்ஸ் வந்தாலே, எனக்கு  மனசு ரொம்ப கஷ்டமாயிடும்... அஞ்சு மாச கரு கலைஞ்சிருக்குன்னா , அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும் .... " மன பாரத்தோடு கூற,


"இப்படி நீ கஷ்டப்படுவேன்னு  தெரிஞ்சு தான் , இவ்ளோ நாள் சொல்லாம இருந்தேன் ...  இப்ப ஊருக்கு போறதால வேற வழி இல்லாம சொல்ல வேண்டியதாயிடுச்சு  ... இப்ப தான் நீ கொஞ்சம் கொஞ்சமா தேறிக்கிட்டு வர,  மறுபடியும் குழந்தை பிரச்சினையை போட்டு மனசுல குழப்பி, புது பிரச்சனையை இழுத்து விட்டுடாதே ... போய் மாத்திரையை சாப்பிட்டு நிம்மதியா தூங்கி  ரெஸ்ட் எடு ..." 

என அறிவுரையும் ஆறுதலமாய்  அவன் உறைக்க,  தளர் நடையோடு இடத்தை காலி செய்தாள் பெண்.


மறுநாள் காலையில் வீரா தம்பதியருக்கு சோம்நாத்  தம்பதியர் மற்றும் பத்மினி பிரியாவிடை கொடுக்க,  கேரளாவிற்கு வரும் போது விரத்தியும் வேதனையுமாய் வந்தவர்கள்,  தற்போது கிளம்பும் போது ஓரளவிற்கு நல்ல ஆரோக்கியத்தையும்,  புதிய நட்பு வட்டங்களின் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டு மனநிறைவாக விடை பெற்றனர்.

கோயம்புத்தூரை அடைந்ததும் முதல் வேலையாய், 


"பட்டு,  உன் போன் ஸ்விட்ச் ஆஃப்லயே இருக்கட்டும்.... என் போனை யூஸ் பண்ணிக்க.... ...."  என்றவனிடம் 


"ஏன் ...." அவள் யோசனையாய் வினவ,


" நீ எதுக்காக பேப்பர் போட்ட ... அதை சொல்லு.... .... நான் இதுக்கான காரணத்த சொல்றேன் ..."  என்றான் அவள் முகத்திலிருந்து பார்வையை விளக்காமல். 


ராணாவை பற்றி அவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள்,  அதற்கு மேல் மடைதிறந்த வெள்ளமாய் அலுவலகத்தில் ராணா தன்னிடம் தவறாக நடக்க முயன்றதை  சொல்லி முடிக்க, வீராவின் கோபம் விண்ணை முட்ட


"இன்னைக்கு அவன் ஆபீஸ்க்கு போய்,   அவனை அடிச்சு பொளக்கறேன் பாரு .... இந்த மாதிரி பொறுக்கி பொறம்போக்குகள உயிரோடவே  விட கூடாது ..." பெரும் கோபத்தில் பொங்கத் தொடங்கினான்.


"ராம் ப்ளீஸ்,  தேவை இல்லாம பிரச்சனை பண்ணாதீங்க .... நான் தான் பேப்பர் போட்டுட்டேன் இல்ல .... துஷ்டன கண்ட தூர விலகுன்னு இருக்கிறது தான் நமக்கு  நல்லது ...  சரி அத விடுங்க, ராணாவ பத்தி உங்களுக்கு யார் சொன்னா ...." 


என்றவளிடம்  திலக் சொன்ன விஷயங்களை அவன் மேம்போக்காக பகிர,


 "அட ஆமா ... அவன் அன்னைக்கு  மது மதுனு என்னை  கூப்பிட்டது...  பேசினது எல்லாம் பார்க்க,  மன நோயாளி மாதிரி தான் இருந்துச்சு ... இப்ப இல்ல தெரியுது அவன் நிஜமாவே மனநோயாளினு.... ப்ளீஸ் ஏற்கனவே பிரச்சனைல இருக்கிறவன நீங்க வேற அடிச்சு கஷ்டப்படுத்த வேண்டாம் .... விட்டுடுங்க ..."


கெஞ்சுவது போல அவள் சொல்ல,  தன்னையே உணராதவனிடம் , வீரத்தைக் காட்டி பிரயோஜனம் இல்லை என்று அவனுக்கும் தோன்ற 


"சரி,  நீ இந்த விஷயத்தை இதோட மறந்துடு .... இனிமே இந்த விஷயத்தை பத்தி நாம பேச வேண்டாம் ..." என்றான் தெளிவான முடிவுக்கு வந்து. 



++++++++++++++++++++++++++++++++


கடந்து சென்ற  சில தினங்களில் ராணாவின் உடல்நிலை ஓரளவிற்கு நன்றாகவே தேறி இருந்தது.


அலுவலகத்திற்கு செல்லும் எண்ணம் இருந்தாலும் ,  ஸ்ரீ அங்கு  வரமாட்டாள் என்பதால்,  அந்த எண்ணத்தை அடியோடு கைவிட்டு விட்டு,  வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொண்டான். 


என்னதான் அலுவலகப் பணிகளில் மூழ்கி இருந்தாலும் ஸ்ரீயை தொடர்பு கொள்ள தன்னால் ஆன முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருந்தான்.


அவளது அலைபேசி எண் முடக்கப்பட்டு இருந்ததோடு , அவளது  வீடும் மூடி இருந்ததால், மேலும் தீவிர யோசனையில் ஈடுபட்டவனுக்கு,  ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் கொண்ட கோப்புறை (Folder) பற்றிய சிந்தனை திடீரென்று உதயமாக,  உடனே அந்த  கோப்புறைக்கு சென்று  ஸ்ரீயின் தனிப்பட்ட தகவல்கள் கொண்ட தரவினை தேடலானான். 


பத்து நிமிட தேடலுக்கு,பிறகு ,கிடைத்த  ஸ்ரீயின் தரவில் அவன் எதிர்பார்த்தது போலவே,  அவசரக் காலத்தில் தொடர்பு கொள்ள மற்றொரு அலைபேசி எண்ணாக வீராவின் அலைபேசி எண் கிடைக்க , உடனே அந்த எண்ணிற்கு  தொடர்பு கொண்டான்.


ஆனால் அந்த எண்ணும் முடக்கப்பட்டு இருப்பது தெரிய வர , எல்லா வழிகளும் அடைபட்டு இருக்கும் நிலையில் அதற்கு மேல் செய்வதறியாது சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போனான். 


 திலக்  சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக ஊழியர்களுக்கான தனிப்பட்ட தகவல்களில்,  ஸ்ரீப்ரியாவின் தரவைத் தேடி எடுத்து அதில் அவசரத்திற்காக தொடர்பு கொள்ள  கொடுக்கப்பட்டிருந்த வீராவின் அலைபேசி எண்ணை, வேறொரு  முடக்கப்பட்ட அலைபேசி எண்ணை  கொண்டு மாற்றிவிட்டு சென்றதை பாவம் அவன் அப்போது  அறிந்திருக்கவில்லை ....



++++++++++++++++++++++++++++++++++++++++


ஊட்டியில் ....



"அம்மா லக்ஷ்மி,  இன்னைக்கு மதியம் ஒரு  மணிக்கு  அந்த ரெண்டு பிசாசுகளையும் பார்த்து பேச உனக்கு பர்மிஷன் கிடைச்சிருக்கு ....  எனக்கு என்னமோ நீ அவங்கள போய் பார்த்து பேசறது  சுத்தமா பிடிக்கலம்மா ....நீ என்ன சொன்னாலும் அதுங்க திருந்தாதுங்க ...." என ரங்கசாமி சொல்ல 


" நான் அவங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்காக  போகல மாமா....  

அவங்க ரெண்டு பேரும் எவ்வளவோ என்னை கஷ்டப்படுத்தி இருக்காங்க ... அத பத்தி கூட நான் கவலை பட்டதில்ல.... ஆனா ஒரு ரெண்டு விஷயம் மட்டும்  உறுதிகிட்டே இருக்கு ....  அதை மட்டும் அவங்கள பார்த்து கேட்டா தான் என் மனசு ஆறும் .... அதுக்காகத்தான் போறேன்  ..."


"சரிம்மா, நல்லபடியா போய்ட்டு வாங்க ...." 

என்றவர்  ராம் சரணை பார்த்து


" வீரா வீட்டுக்கு  போகப் போறயாப்பா ..." 

  என்றார்.


"இல்லப்பா,  குழந்தைகளை அத்தை, சிவகாமி அக்கா கிட்ட விட்டுட்டு போறோம் ....  சீக்கிரம் வீடு திரும்பினா தான் நல்லது  .... அதோட  வீரா கேரளால இருந்து  நேத்து தான் கோயம்புத்தூர் வந்திருக்கான் ... இப்ப போய் நின்னா நல்லா இருக்காதுப்பா... அடுத்த முறை பிளான் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன் ..."  


என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு  காரில் கோயம்புத்தூர் நோக்கி பயணப்பட்டான். 


அனுமதி வழங்கப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு  முன்பாகவே சிறைச்சாலையை அடைந்தவர்கள்,  கைதிகளை சந்திப்பதற்கு தேவையான சடங்குகளை துரிதமாக முடித்துவிட்டு,  அருணா கற்பகத்தின் வரவுக்காக காத்திருக்கத் தொடங்கினர்.


அருணா கற்பகத்திற்கு  ராம்சரண் பார்க்க  வந்திருப்பதாக  செய்தி சென்றடைய, ஏன் வந்திருக்கிறான் எதற்காக வந்திருக்கிறான் என்ற பல கேள்விகளோடு  தாயும் மகளும்  ஓட்டமும் நடையுமாய், சிறைச்சாலையின் சந்திப்பு பகுதிக்கு வர, அங்கு ராம்சரணோடு, லட்சுமி  நின்று கொண்டிருப்பதை கண்டதும் , அதிர்ச்சியில் சிலையாகிப் போனார்கள்.


அவர்கள் லட்சுமியை துளி கூட  எதிர்பார்க்கவே இல்லை என்பது , அவர்களது முக பாவமே தெளிவாக காட்டியது ...


என்ன தான்  வாரக்கணக்கில் லட்சுமி  கோமாவில் மருத்துவமனையில் படுத்து  விட்டு  வந்திருந்தாலும்,  கணவனின் அன்பும் அரவணைப்பும், குடும்பத்தின் பாசமும்,  மாமனாரின் ஆதரவும் அவளை அதி விரைவிலேயே தேற்றி இருக்க,  அந்த ஆரோக்கியம் நன்றாகவே அவளது முகத்திலும் உடலிலும் வெளிப்பட,  தாயும் மகளும் உள்ளுக்குள் குமைந்து தான் போயினர் .


"லட்சுமி என்ன பேசணுமோ சீக்கிரமா பேசிட்டு வா ...   நான் அப்படி உட்கார்ந்து கிட்டு இருக்கேன் ..." 


கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த தாய் மற்றும் தங்கையை அரை கண் பார்வையால் ஏறிவிட்டு 10 அடி நடந்து சென்று அங்கே  போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் ராம்சரண்  அமர, லட்சுமி அவர்கள் இருவரையும் ஆழ்ந்து பார்த்துவிட்டு,


" எப்படி இருக்கீங்க ...." என்றாள் கம்பீரமாய். 


கிட்டத்தட்ட ஒரு மாத சிறைக்கே  வெகுவாக மெலிந்தும் கறுத்தும் , கன்னம் ஒட்டியும்  காணப்பட்டவர்கள் , கேட்டவளின் முகம் பார்க்கப் பிடிக்காமல் தலையைத் திருப்பிக் கொள்ள,


"என்னடா ... கோமாவுல இருந்தவ  செத்துப் போகாம , இப்படி குத்து கல்லாட்டம் வந்து குசலம் விசாரிக்கிறாளேனு பார்க்கறீர்களா ...


அது ஒன்னும் இல்ல ... ஒரு ரெண்டு  விஷயம்   பேசிட்டு போலாம்னு வந்தேன்...." என்றவள் பார்வையை கற்பகத்தின் மீது பதித்து,


" நிஜமாவே என் வீட்டுக்கார நீ தான் பெத்தயா..... .... ஏன் கேட்கறேன்னா, அவருக்கு ஒரு சின்ன நல்லது கூட நீ செஞ்சு  நான் பார்த்தேயில்ல....

ஒரு பழமொழி சொல்லுவாங்க ....

புள்ள செத்தாலும் பரவால்ல... மருமக தாலி அறுக்கணும்னு ..... 

அந்த மாதிரி,  புள்ள செத்தாலும் பரவால்ல, மருமக செத்தா போதும்னு , திட்டம் போட்டு எங்களை போட்டு தள்ள லாரி டிரைவர்கள ஏற்பாடு பண்ணையே,  உன்னை எல்லாம் மனுஷ ஜென்மத்துல  சேர்க்க முடியுமா ....


ஊர் நாட்டுல  பெத்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகணும்னு, கோவில் கோவிலா  போய் விளக்கு போடற அம்மாக்களை தான்  பார்த்திருக்கேன் ....


ஆனா புள்ளை அவன் பொண்டாட்டியோட சந்தோஷமா வாழறான்ற ஒரே காரணத்துக்காக,  அவனையும் அவன் பொண்டாட்டியையும் போட்டு தள்ளணும்னு திட்டம் போட்ட மொத அம்மா நீயா தான் இருப்ப ....


இதைவிட பெரிய கொடுமை .... என்னையும் என் புருஷனையும் பிரிக்க, எவனோ ஒரு மூணாந்தர ஆம்பளைய,  தாயும் மகளுமா சேர்ந்து என் பெட்ரூம்க்கு அனுப்பி வச்சி எனக்கு நடத்த கெட்டவ பட்டம் கட்டணும்னு பாத்தீங்களே ...


உங்க ரெண்டு பேரையும்  வெட்டி போட்டா கூட என் ஆத்திரம் அடங்காது  ...


நான் உங்க வீட்டுக்கு மருமகளா வந்த ஒரே காரணத்துக்காக,  என் வாழ்க்கையில இருந்து என் தங்கச்சி வாழ்க்கை வரைக்கும்  கெடுக்க பார்த்திங்களே .... அந்த கெட்ட எண்ணம் தான், 

 எல்லாத்தையும் இழந்துட்டு ஜெயில்ல கம்பி எண்ணுகிற அளவுக்கு  உங்க ரெண்டு பேரையும் கொண்டு வந்து விட்டிருக்கு ...


நீங்க ரெண்டு பேரும்  சேர்ந்து , நான்  புருஷன் புள்ள குட்டிகளோட  சந்தோஷமா  வாழ கூடாதுன்னு திட்டம் போட்டு காய் நகர்த்தினீங்க...


ஆனா இப்ப நீங்க ரெண்டு பேரும் தான் புருஷன் புள்ளைகளை இழந்துட்டு,  நிராதரவா நிக்கறீங்க ....


நான் வாழ கூடாதுன்னு நினைச்சு நீங்க செஞ்ச ஒவ்வொரு விஷயமும் உங்களை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாத்தீங்களா.... ....


உங்கள மாதிரியான ஆளுங்களுக்கு, யாராலயும் ஆப்பு வைக்க முடியாது... நீங்களா வச்சுக்கிட்டா தான் உண்டு ... சரியான ஆப்பா தேர்ந்தெடுத்து  நீங்களே வச்சிக்கிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம் ...


அடுத்தவங்களுக்கு நல்லது நினை,  நல்லது செய்னு ஏன் சொல்றாங்க தெரியுமா ... அடுத்தவங்க  நல்லா இருக்கணுங்கறதுக்காக இல்ல... நாம நல்லா இருக்கணுங்குறதுக்காக தான் ...


எப்படி எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு  உங்க எண்ணம் தான் காரணம்.......

நல்லவேளை, கடவுள் அருமையான மனுஷன எனக்கு மாமனாரா கொடுத்து எங்க வாழ்க்கைய காப்பாத்திட்டாரு  ....இல்லன்னா நானும் என் குழந்தைகளும் இந்நேரம்  உரு தெரியாம அழிஞ்சு போயிருப்போம்...

அப்பேர்ப்பட்ட மனுஷனுக்கு,  இப்படி ஒரு பொண்டாட்டி... இப்படி ஒரு பொண்ணு ...

காலக்கொடுமை ....

என்ன பாக்கறீங்க ... அட்வைஸ் பண்ணிட்டு போக வந்தேன்னு நினைச்சீங்களா .... அதான் இல்ல ... ஒரு நல்ல விஷயத்தை நல்ல விதமா புரிஞ்சுக்கறதுக்கு கூட நம்ம கிட்ட கொஞ்சமாவது  நல்லது இருக்கணும் ...

அது உங்க ரெண்டு பேர் கிட்டயும் என்னைக்குமே இருந்ததில்லையே ....

நான் இங்க வந்ததுக்கு காரணம் .... நான் உயிரோட இருக்கேன் .... நல்லாவும் இருக்கேன்... என் புருஷனோட வாழ்ந்துகிட்டும் இருக்கேன்னு காட்டிட்டு போகத்தான் ...

பாத்திங்களா .... நல்லா இருக்கேனா ...

வரட்டா ..... "

இருவரையும் ஒருசேரப் பார்த்து,  மொழிந்து விட்டு,  அவள் கம்பீரமாக விலகி நடக்க,  இருவரும் உறைந்த மேனியாய் அவள் செல்வதையே வெறுத்து பார்த்துக் கொண்டு  நிற்க,


" ஏய் நேரம் ஆச்சு .... கிளம்பு கிளம்பு ...  இதான் சாக்குனு தாயும் மகளும் வேலை செய்யாம வேடிக்கை பாக்கறீங்களா ...


ஏய், உனக்கு தோட்ட வேலை, அவளுக்கு கக்கூஸ் கழுவுற வேலை இருக்குல்ல... செய் போ .....  வேலை சுத்தமா இருக்கணும் ...." 


அவர்களை, அங்கிருந்த பெண் காவல் அதிகாரி மிரட்டுவது லட்சுமியின் காதுகளில் விழ,  தாயும் மகளும் அவளை விடாமல் வேலை வாங்கியதெல்லாம் மனக்கண் முன் படமாய்  விரிய,  அவள்  திரும்பிப் பார்க்க , அருணா அந்த  பார்வையை எதேச்சையாக  எதிர்கொண்டு விட்டு உடனே தலை குனிந்து கொள்ள, நீண்ட நாட்களுக்குப் பின்பு , கருவறையில் வாழ்ந்த போது கிடைத்த நிம்மதியை அனுபவித்தபடி  நடந்து சென்று கணவனை அடைந்தவள்


"வாங்க அத்தான் கிளம்பலாம் .... என் மனசுல ரொம்ப நாளா அடக்கி வச்சுகிட்டு இருந்த எல்லாத்தையும்  கொட்டிட்டு வந்துட்டேன் .... இனிமே நான் நிம்மதியா தூங்குவேன் ...." 


என்றவளை அவன் ரசனையாய் பார்க்க, 

திடீரென்று அவன் முக பாவத்தில் தோன்றிய மாற்றத்தை கண்டு,

"என்ன அப்படி பாக்கறீங்க .... வாங்க போலாம்.... ..." என்றாள் லேசான வெட்கத்தோடு.


"நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகப்போகுது .... இதுவரைக்கும் நீ என்னை பேர் சொல்லியோ,  இல்ல வேறு விதமாவோ கூப்பிட்டதே இல்ல.... ஆனா இப்ப திடீர்னு  அத்தான்னு கூப்ட்டயா... அது ரொம்ப நல்லா இருந்ததா ...அதான் ... ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்.... ..."


என்றவனை குறுநகையோடு பார்த்தவள்


"எப்பவுமே மனசுக்குள்ள உங்களை அப்படித்தான் கூப்டுவேன் .... ஆனா உங்களுக்கு இப்படி கூப்பிட்டா புடிக்குமோ புடிக்காதோனு ஒரு சின்ன பயம்.. அதான் வெளிய கூப்பிடல  .... ஏற்கனவே என்னை பூமர்னு கிண்டல் பண்ணுவீங்க.... இப்படி வேற கூப்டா, அவ்ளோ தான்... அதான் கூப்பிடல ..." 

அவள் லேசாக நாணி கோணி பதிலளிக்க 


"சொன்னாலும் சொல்லாட்டாலும் நீ எப்பவுமே பூமர் தான் டி.... இந்த பூமரத்தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு .... இன்னொரு தடவை கூப்பிடறியா ..."


அவன் ஜொள்ள,


"அய்ய... நாம எதுக்காக இங்க வந்தோம்... இப்ப நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க .... கிளம்புங்க ..."


"இன்னொரு தடவை அத்தான்னு கூப்பிடு அப்பத்தான் கிளம்புவேன் .... இல்லன்னா கிளம்ப மாட்டேன்..."


"இது என்ன வம்பா போச்சு ....சரி... வாங்க அத்தான் கிளம்பலாம் ....வீட்ல குழந்தைங்க காத்துக்கிட்டு இருப்பாங்க .... ப்ளீஸ் அத்தான்... வண்டியை எடுங்க ..."


" இது போதும் .... வா போலாம் ...." மனைவியை காதலோடு கரம் பற்றி அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தான் ராம்சரண்.


-----------------------------------------------------------------


" பட்டு,  ஹாப்பி பர்த்டே ...." 

என்றான் வீரா அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் ஆழ்ந்து  முத்தமிட்டு.  அவள் மென் புன்னகையோடு அவனை அணைத்துக் கொள்ள,


"கல்யாணத்துக்கு அப்புறம் வர உன்னோட ஃபர்ஸ்ட் பர்த்டே இது .... எப்படி எல்லாமோ கொண்டாடணும் நெனச்சேன் ... ஆனா இப்ப 

 ஹோட்டல்ல போய் சாப்பிட முடியாது .... 

 இப்பதான் ஊர்ல இருந்து வந்ததால வெளியே எங்கயும் போகவும் முடியாது  ... அதான் ஒரு ஸ்மால் கிப்ட் உனக்காக வாங்கி இருக்கேன் ..." 

என்றவன் கட்டிலை ஒட்டி இருந்த டிராவரிலிருந்து சிறிய நகை பெட்டியை எடுத்து கொடுத்தான்.


"என்னது இது...  எப்ப போய் வாங்கிட்டு வந்தீங்க ......  " ஆச்சரியமாக கேட்டவளிடம்


"கோல்ட்  ரிங் .... நேத்து ஈவினிங் க்ரோசரிஸ் வாங்க போகும் போது வாங்கிட்டு வந்தேன் ..."


"வாவ் ...  ரொம்ப அழகா இருக்கே ..." என்றாள் பெட்டியை  திறந்து பார்த்து .




" எது வாங்கி கொடுத்தாலும் இது சரி இல்ல அது சரி இல்லன்னு சொல்லாம அப்படியே சந்தோஷமா வாங்கிக்கிற பாத்தியா அதுக்காகவே உனக்கு நிறைய  வாங்கி கொடுக்கணும்னு தோணுது டி .."

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது அலைபேசி சிணுங்கியது.


அவனுடன்  மட்டைப்பந்து பயிற்சி நிலையத்தில் உடன் விளையாடும் அவன் நண்பன்  ஈஸ்வர் தான் அழைத்திருந்தான் .

எடுக்கலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே அழைப்பை அனுமதித்தவனிடம் ,


"இன்னைக்கு ஒன் டே மேட்ச் விளையாட வாடா ...."  என்றான் ஈஸ்வர் எடுத்த எடுப்பில் .


"அது வந்து .... நான்....."


"நீ கேரளால இருந்து திரும்பி வந்துட்டேன்னு தெரியும் .... நேத்து நகைக்கடை வாசல்ல உன்னை பார்த்தேன் .... ஒழுக்கமா வந்து சேரும் ..."


"இல்லை டா... இன்னைக்கு என் வைஃப் பர்த்டே  ..."


" ஓ....." எதிர்முனையில் அவன் ஸ்ருதி குறைய, உடனே வீராவின் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி,


"அவர்  விளையாட வருவாரு ஈஸ்வர் ....   நீங்க பிளான் பண்ணுங்க... நான் அவர அனுப்பி வைக்கிறேன் ..." என ஸ்ரீ திடமாக சொல்ல,


"ஹாப்பி பர்த்டே மா  ... தேங்க்ஸ் எ லாட் ..." என வாழ்த்தி விட்டு அவன் அழைப்பை துண்டிக்க,  வீரா தன்னவளை முறைத்துப் பார்த்தான்.


"நான் எப்படியும் மாத்திரை போட்டுட்டு மதியம் தூங்க தான் போறேன் .... இன்னைக்கு சாட்டர்டே ஹாலிடே .... சோ, பேசாம போய் விளையாடிட்டு வாங்களேன் ...." 

என்றவளிடம் பலவாறு அவன் தர்க்கம் செய்ய,  ஒரு வழியாக தர்க்கத்தில் வென்றவளிடம்,


"உன் போனை சைலன்ட்ல போட்டுட்டேன் ... அதே மாதிரி காலிங் பெல்லயும் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன் .... பயோமெட்ரிக் லாக்ங்கிறதால வரும் போது நானே கதவை திறந்துகிட்டு வருவேன் ... சோ, நீ எதை பத்தியும் யோசிக்காம நிம்மதியா மாத்திரை போட்டுகிட்டு தூங்கு ..." 

என தன்னவளிடம் அறிவுறுத்தியதோடு  அவளுக்கு பிடித்தமானதை அருமையாக சமைத்து உண்ணச் செய்துவிட்ட  பிறகே துரிதமாக தயாராகி  விளையாட சென்றான். 


ராணாவின் அலுவலகத்தில் தணிக்கை(audit) நடந்து கொண்டிருந்தது.  

சிங்கப்பூரிலிருந்து திலக்  திரும்பி இருந்தாலும்,  அவன் அலுவலக பணிகளை கையில் எடுக்காததால்,  வேறு வழி இல்லாமல் ராணா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட,  வேண்டா வெறுப்பாக அலுவலகம் வந்து சேர்ந்தவனுக்கு, ஸ்ரீ யின் கேபின், அவள் நண்பர்களோடு உரையாடிய இடம் என அனைத்தும் அவளை நினைவு படுத்த , அவளை எப்படி தேடி கண்டுபிடிப்பது  என்னும் பணி மீண்டும் அவன் மூளையில் தீவிரமாய்  ஆரம்பமாகி போனது. 


அவளது அலைபேசி எண்,  அலுவலக தரவுகளில் கிடைத்த அவளது  கணவனின் அலைபேசி எண், அவளது வீடு ஆகியவற்றிற்கு  நூறு முறைக்கு மேல் தொடர்பு கொண்டு தோல்வி அடைந்ததால், 

அந்தப் பணியை செவ்வனே கைவிட்டு விட்டு,  வேறு வழியில் அவளை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று யோசனையில் இறங்கியவனுக்கு,  அவள் சம்பந்தப்பட்ட அனைத்து வழிகளும் தெளிவாக அடைக்கப்பட்டு இருப்பது ஒருவித சந்தேகத்தை எழுப்ப,   அது எப்படி என்ற ஆராய்ச்சியில் மூழ்க ஆரம்பித்தவனின் விழிகள் அச்சு எந்திரத்தின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த சில கோப்புக்களின் மீது படிய,  உடனே அவைகளை கையில் எடுத்து பார்வையிட ஆரம்பித்தான்.


ஸ்ரீ மது போல் இருக்கின்றாள் என  ஓரியண்டேஷன் காணொளியில் அவன்  அறிந்து கொண்டதுமே ,  அவளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக,  முதல் நாள் அவள் நிரப்பி கொடுத்த  உடனடி நேர்முகத் தேர்வு படிவத்திலிருந்து, அவளது கல்வி சான்றிதழ்கள் வரை அனைத்தையும் சேகரித்து ஒரு கோப்பில் பத்திரப்படுத்தி இருந்தான்.


அந்தக் கோப்பு தற்போது கிடைக்க, சுறுசுறுப்பாக அதில் பார்வையிட்டவனுக்கு, அவளது பிறந்தநாள் அன்று என்பது தெரியவர, தலையைப் பிடித்துக் கொண்டு தன் மறதியை எண்ணி கண் கலங்கினான்.


திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தேறி இருந்தால்,  இந்நேரம் அவளுடன் நியூசிலாந்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாமே என்ற ஏக்கம் ஏகத்துக்கும் ஏற,  அப்போது அவனது பார்வையில் முதல் நாள் அவள் நிரப்பிக் கொடுத்த படிவத்தின் மீது பட, அதில் கணவனின் அலைபேசி எண்ணாக அவள் நிரப்பிக் கொடுத்திருந்த எண், முற்றிலும் வித்தியாசமாக இருக்க, உடனே அந்த எண்ணை தொடர்பு கொண்டான்.


 ட்ரூ காலரில் அதிவீரராம பாண்டியன் என்ற பெயர்  திரையில் வந்ததோடு, முழு அழைப்பும் சென்று அடங்க,  துணுக்குற்றவனுக்குத் தெரிந்து போனது  அலுவலக ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களின்  தரவில் ஸ்ரீயின் கணவனின் அலைபேசி எண்ணை  கனக்கச்சிதமாக மாற்றி வைத்தது  திலக் தான் என்று. 


உடனே  கோபம்,  மின்சாரம் போல் அவனது நாடி நரம்பெங்கும் வேகமாய் பரவ, திலக்கை அழைத்துப் பேசலாமா என்று முதலில் எண்ணியவன் பிறகு அதனை கைவிட்டு விட்டு,  அந்த அலைபேசி எண், தற்போது இருக்கும் இடத்தை (location)   தேட, அது மட்டைப்பந்து பயிற்சி நிறுவனத்தின் இருப்பிடத்தை தெளிவாக காட்டியது.


அப்போது தான் ஸ்ரீ கயலிடம்,  தன் கணவன் மட்டைப்பந்து விளையாட அடிக்கடி, மட்டைப்பந்து பயிற்சி நிறுவனத்திற்கு செல்வதுண்டு  என்று பகிர்ந்த செய்தி நினைவுக்கு வர, கர்வமாய் புன்னகைத்தவன் ,

"இந்த ராணாவை யாராலயும் ஏமாத்த முடியாது டா ....   நான் யாருன்னு இப்ப காட்டறேன் .... ஐ அம் ஆன் த வே மிஸ்டர் அதிவீரராம பாண்டியன் ...." 

என வன்மத்தோடு மொழிந்து விட்டு, மட்டைப்பந்து பயிற்சி நிறுவனத்தை நோக்கி வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் தன் பிஎம்டபிள்யூவை செலுத்தினான்.


மட்டைப்பந்து பயிற்சி நிறுவனத்தில்,  எதிரணியோடு தீவிரமாக மோதிக் கொண்டிருந்தான் வீரா.


போடப்படும் ஒவ்வொரு பந்தையும் அவன் அதிரடியாய்  அடித்து வீச,  ஒவ்வொன்றும் சர்வ சாதாரணமாய் எல்லைக்கோட்டை கடந்து பார்வையாளர்கள் பகுதியில் போய் விழ,  பார்த்துக் கொண்டிருந்தவர்கள்  கைத்தட்டி, சீட்டியடித்து,   ஆரவாரித்து கொண்டாடிக் கொண்டிருந்தனர். 


அப்போது அந்த பயிற்சி நிறுவனத்தை அடைந்த ராணா, காரில் இருந்து இறங்கி துரிதமாகச் சென்று அங்கிருந்த அலுவலகத்தில் தன்னைப் பற்றிய சிறு குறிப்பை அவசரமாய் மொழிந்து  அனுமதி பெற்று,  அந்த ஆடுகளம் நோக்கி போர்க்களத்திற்கு செல்வது போல் வெஞ்சினத்தோடு வேகமாய் நடந்தான் .


பயிற்சி நிறுவனம் என்பதால் பெரும்பாலும் பார்வையாளர்கள் பகுதிகளில் நாற்பதில் இருந்து 50 நபர்கள் மட்டுமே இருப்பது வழக்கம்.


மைதானத்தின் எல்லைக் கோட்டை நெருங்கியவன்,  அங்கு நீல நிற ஜெர்சியில் இருந்த ஒரு விளையாட்டு வீரனிடம்,


" அவங்கள்ல யாரு அதிவீர ராம பாண்டியன்.......... ...."  என்றான் அங்கிருந்த விளையாட்டு வீரர்களை காட்டி.


உடனே அவன்,  மட்டையை கையில் பிடித்தபடி வேறொரு விளையாட்டு வீரனோடு பேசிக்கொண்டிருந்த வீராவை காட்ட,  ஒன்றுக்கு இரண்டு முறை  அவனிடம் உறுதி செய்து கொண்ட ராணா, வேகமாக மைதானத்திற்குள் நடந்து சென்று வீராவை நெருங்கி, வீரா என்றழைக்க,  அவன் திரும்பிப் பார்த்தது தான் தாமதம், ஓங்கி அவன் முகத்திலேயே ஒரு குத்து விட்டான்.


எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன வீரா, தன் கன்னத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டே 


" ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ஏய் யாரு டா  நீ....   எதுக்கு  அடிக்கிற ....."  என வலியோடு அவன் கேட்க


" ராணா டா ..... என் ஸ்ரீ எங்க .... எங்க அவளை ஒளிச்சி வச்சிருக்க ...."  என்றது தான் தாமதம், அத்துணை நாட்களாக இறுக்கிப்பிடித்து வைத்திருந்த கோபம்,  விண்ணை நோக்கி பீறிட்டுக் கொண்டு செல்லும் ராக்கெட் போல் வெடித்து கிளம்ப,  ராணாவை நையப் புடைக்க ஆரம்பித்தான் வீரா.


இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட,  வீராவின் பலமான தாக்குதலில் ராணாவின் கை கால் முகத்தில் ரத்தம் பீறிட, அதற்குள் அங்கு கூட்டம் கூடி போக,கூட்டத்தில் இருந்தவர்கள்  அரும்பாடு பட்டு  இருவரையும் கட்டி இழுத்து தடுத்து நிறுத்தி ஒருவழியாக  சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.


தன் முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே,


"என் ஸ்ரீய எங்கடா ஒளிச்சு வச்சிருக்க .... எனக்கு அவ இப்பவே வேணும் ..... அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் டா.... அவன் என் மது டா ..... மறுபிறவி எடுத்து என்னை தேடி வந்திருக்கா ....  " என மதிகெட்டவனாய் ராணா அரற்ற,


"ஸ்ரீ என் வைஃப் .... அவளுக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும் ..."


"அதை அவ வந்து சொல்லட்டும் .... நான் நம்புறேன் ... நீ சொன்னா நான் நம்ப மாட்டேன்.... .... அவ எங்க இருந்தாலும்  போன் பண்ணி கூப்பிடு .... நான் இப்பவே அவளை பார்த்தாகணும் .... அவ என் மது டா ..." 

என்று அவன் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்ல,  அப்போது தான் அவன் ஸ்திர  மனநிலையில் இல்லை என்பதே வீராவிற்கு உறைக்க , பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு 


"ம்ச், இங்க பாரு, அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல...   டாக்டர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டு வீட்ல தூங்கி கிட்டு இருக்கா............. இன்னும் 3 மணி நேரம் கழிச்சு தான் எழுந்துப்பா... ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டா...."


"இல்ல... நீ பொய் சொல்ற .... எங்க அவ என்னை பார்த்தா என் கூடவே வந்துடுவாளோங்கிற பயத்துல,  அவள நீ எங்கேயோ அடச்சு வச்சிருக்க...."


"அடேய் , அவ என் பொண்டாட்டி டா... அவளுக்கு என்னை மட்டும்  தான் புடிக்கும் .... முட்டாளாட்டம் உளராத..."   மீண்டும் கோபத்தோடு  அவனை நோக்கி வீரா பாய,  அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த திலக் வீராவை தடுத்து நிறுத்தி,


"ப்ளீஸ்,  நான் தான் திலக் ... அவனை எதுவும் பண்ணிடாதீங்க ..." என கெஞ்ச,  அவன் முகத்தில் பார்வையை பதித்த படி வீரா அமைதியாக விலக 


"ராணா, கெளம்பு போலாம் ...." என்றான் திலக் ராணாவின் கரம் பற்றி இழுத்து. 


"என் ஸ்ரீ இல்லாம நான் வரமாட்டேன் ...." என

ராணா மீண்டும் முரண்டு பிடிக்க ,


"ஐயோ ...ஸ்ரீக்கு உடம்பு சரியில்லனு எத்தனை தடவை டா சொல்றது ....... டாக்டர் பிரிஸ்கிரைப் பண்ண மெடிசன சாப்பிட்டு தூங்கிக்கிட்டு இருக்கா டா .... எழுந்துக்க 3 மணி நேரமாவது ஆகும் .... இப்ப நான் ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டா...  ஃபோனை சைலன்ட்ல போட்டிருப்பா.... ப்ளீஸ் , அவனுக்கு சொல்லி  புரிய வைங்க ...." வீரா திலக்கை பார்த்து சொல்ல,


"ராணா,   இப்ப நீ கிளம்பு... நாளைக்கு அவங்க வீட்ல போய் பார்த்து பேசிக்கலாம் ...."  என்றான் திலக் சமாதானப்படுத்தும் விதமாக .


"வீட்ட பூட்டிகிட்டு இவன் எங்கயாவது போயிடுவான்... நான் இவனை நம்ப மாட்டேன்.... ...."  ----ராணா


"அடேய் அது என் சொந்த வீடு டா,  இது என் சொந்த ஊரு ...  இந்த அகாடமில நான் பத்து வருஷமா விளையாடிகிட்டு இருக்கேன்.... இதையெல்லாம் விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்ட....  இங்க பாரு இவ்ளோ பேருக்கு முன்னாடி சொல்றேன் .... நாளைக்கு நான் என் வைஃப் ஸ்ரீய இங்க கூட்டிகிட்டு வரேன் ....  அவளுக்கு மட்டும் உன்னை புடிச்சி இருந்ததுன்னா , நீ தாராளமா அவளை கூட்டிகிட்டு போலாம் ...."


என்றான் தற்போதைய பிரச்சனையை திசை திருப்ப மாற்று வழியைச் சொல்லி. 


ராணா சந்தேகத்தோடு அவனைப் பார்க்க,


"இங்க இருக்கிற ஒவ்வொருத்தவங்களுக்கும் என் வீடு, வாசல், படிப்பு ,பதவி  எல்லாம் தெரியும் .... உன் ஒருத்தன வேணா நான் ஏமாத்தலாம் இவங்க எல்லாரையும் என்னால ஏமாத்த முடியாது ... அதனால என்னை நம்பு ...

நாளைக்கு நான் அவளை கூட்டிகிட்டு வரேன்...... .... நீயும் வா .... அவளுக்கு உன்ன பிடிச்சிருந்தா கூட்டிக்கிட்டு போ ..." என்றான் வீரா தீர்மானமாய். 


" ஒரு வேளை நாளைக்கு நீ வரலைன்னா ...." 


ராணா சந்தேகத்தோடு கேள்வி எழுப்ப,


" நான் செத்துட்டேன்னு அர்த்தம் ...."


என கர்ஜித்த வீரா உடனே ராணாவைப் பார்த்து 


" சப்போஸ்  நீ வரலன்னா ...."


"நீ சொன்ன மாதிரி, நானும் செத்துட்டேன்னு அர்த்தம் ...."  என்றான் கண்களில் வெறியோடு.


"சரி,   கிளம்பு,  இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வா .... நான் எங்கயும் போக மாட்டேன் .... உனக்காக இதே ஆடுகளத்துல நாளைக்கு காத்துகிட்டு இருப்பேன் ...." 


என்றவனை,  கனல் விழிகளால் பார்த்தபடி ராணா நகர, அவனை கைத்தாங்கலாக பற்றிக்கொண்டு உடன் நடந்த திலக்,


"முகம் கை கால் எல்லாம் அடி,  வா டாக்டரை போய்  போலாம் ...."  என்றான் காரின் முன் பக்க இருக்கையில் அவனை அமரச் செய்துவிட்டு,  ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டு காரை செலுத்தியபடி.


" ம்ச்.... எனக்கு என் ஸ்ரீ கிடைக்கிற வரைக்கும்...... .... டாக்டரும் வேணாம் ஒன்னும் வேணாம் ....." 


"விளையாடாத ராணா.....  நீ பண்றது மொத்தம் தப்பு .... அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்பட்டா,  உடையவன் சும்மா இருப்பானா..... இவன் நல்லவனா இருக்க போய், இன்னைக்கு போய் நாளைக்கு வானு தன்மையா சொல்லி அனுப்பி இருக்கான் .... 

இன்னொருத்தனா இருந்தா  இந்நேரம் உன்னை அடிச்சே கொன்னுருப்பான் ...."


"ஐயோ .... என்னை ஏன்டா புரிஞ்சுக்கவே மாட்டேங்குற .....   நான் என்ன கண்டவன் பொண்டாட்டி பின்னாடி அலையுற பொறுக்கின்னு நினைச்சியா .... 24 வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போன என் மது மாதிரியே இருக்கிற ஒரு பொண்ணு திடீர்னு என் ஆபிசுக்கு ஏன் வரணும் .....


எனக்கும் அவளுக்கும் ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருக்கிறதால தானே, அவ என்னை தேடி வந்துருக்கா .....


அப்ப அவ என் மது தானே ... இதுக்கு நீ பதில் சொல்லு.... "


"நீ கேக்குறதுக்கு என்னால மட்டுமில்ல யாராலயும்  பதில் சொல்ல முடியாது ராணா ...."


"அப்ப பொத்திகிட்டு  வாடா " 


"ராணா,   என் பேச்சை கேளு ..." என்றவனின் பேச்சை இடைவெட்டி,


" சரி....  நான் கிரிக்கெட் அகாடமில தான் இருக்கேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ..."


"நீ நம்ம டிரைவரை கூட கூப்பிடாம,  வேகமா போய் காரை எடுத்ததை பார்த்து அவன் எனக்கு ஃபோன் பண்ணிட்டான் ..... ஸ்ரீ விஷயத்துக்கு மட்டும்தான் நீ  இப்படி  ஓடுவேன்னு எனக்கு  நல்லா தெரியும் ...... 

அதான் கார்ல இருக்கிற ஜிபிஎஸ் வழியா உன் லொகேஷன ட்ராக் பண்ணி வந்து சேர்ந்தேன் , நல்ல வேளையா சரியான நேரத்துக்கு வந்ததால , உன்னை காப்பாத்த முடிஞ்சது ...."


"என்கிட்ட இருந்து அவனை காப்பாத்தி இருக்கன்னு சொல்லு ...."


" ஐயோ .... ச்ரி .... எப்படியோ,  சண்டை முடிவுக்கு வந்துதில்ல...  எனக்கு அது போதும்....." .

 இப்படியாக தர்க்கம் நடந்து கொண்டிருக்கும் போதே கார் மருத்துவமனையை அடைய, அங்கு ராணாவின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .


கை கால் முகம் என ஆங்காங்கே சிகிச்சைகள் முடிந்து  கட்டுப் போடப்பட்ட நிலையில் 


"திலக்,  நான் டாக்டர் ஷர்மாவ இப்பவே மீட் பண்ணனும் ...."  என்றான் ராணா திடீரென்று  தீவிர யோசனையில் இருந்தபடி. 

"இப்ப எதுக்குடா அவரை மீட் பண்ணனும் ....."

"என்னோட கேள்விக்கு அவரால மட்டும் தான் பதில் சொல்ல முடியும்னு தோணுது ....  ப்ளீஸ் என்னை அவர்கிட்ட கூட்டிகிட்டு போயேன் ....." 

நண்பனின் யோசனை சரி என்றே பட, மனநல மருத்துவரும் உளவியலாளருமான மருத்துவர் ஷர்மாவை சந்திக்க அவரது மருத்துவமனைக்குச் சென்றனர். 

என்ன தான் ராணா கிட்டத்தட்ட 20 நாட்களாக மன அழுத்த பக்கவாதத்திற்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று  விட்டு  வந்திருந்தாலும் , அந்த மருத்துவர்களுக்கு  அவனது முழு மன அழுத்த வரலாறு தெரியாது . அவனது பக்கவாதத்திற்கு மட்டுமே அவர்கள் சிகிச்சை அளித்திருந்தனர். 


தற்போது அவன் மனதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்கு அவசரகதியில்  தீர்வு காண வேண்டுமென்றால்,  அவனை நன்கு அறிந்தவரும்,  இத்துணை காலமாக அவனுக்கு சிகிச்சை அளித்து வந்த உளவியலாளரான ஷர்மாவால் மட்டும்தான் முடியும் என்பதால்,  மிகுந்த உடல் வலி இருந்தாலும், அரை மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அவரை  சந்தித்தனர். 


அவன் முகத்தில் இருந்த  காயத்தைப் பார்த்து அவர் பதற,  அது குறித்த விளக்கத்தை திலக் சற்று தயக்கத்தோடு சொல்லி முடிக்க 


"ம்ச், அந்த பெண்ணை உடனே  வேலையை விட்டு நிறுத்திடுங்கனு  அன்னைக்கே சொன்னேனே திலக் .... நீங்க அதை அப்ப  சீரியஸா எடுத்துக்காம விட்டுட்டீங்க ..... இப்ப அது எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தீங்களா ..."  ராணாவை ஏறிட்டு விட்டு, திலக்கை உற்றுப் பார்த்து வெளிப்படையாகவே தன் கோபத்தை  ஷர்மா வெளிப்படுத்த, 


"டாக்டர் ப்ளீஸ் .... தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்குங்க ....  என் மது  இறந்து போயி, 

ரொம்ப வருஷம் ஆனாலும் , அவளை மறக்க முடியாம  இப்ப வரைக்கும் ஆன்ட்டி டிப்ரசன்ட்  மெடிசன்ஸ நான்   எடுத்துக்கிட்டாலும் அது என்னோட பர்சனல் லைஃப பாதிச்சதே இல்ல  .... 

அதே மாதிரி நான் எந்த பொண்ணையும் பார்த்தது சலனப்பட்டதே இல்ல....

இவ என் மது மாதிரியே இருக்கான்றதால தான் அவ மேல அன்பு பாசம் காதல் பற்று எல்லாமே வந்திருக்கு .... மத்தபடி இவ்ளோ நாளா நான் உண்டு என் வேலை உண்டுன்னு என் வாழ்க்கை சரியா தான் போய்கிட்டு இருந்தது ...


சில சமயம் மது கனவுல வரான்னு நான் சொல்லும் போதெல்லாம் அவளையே நினைச்சுக்கிட்டு இருக்கிறதால தான் அவ உங்க  கனவுல வரான்னு நீங்க சொல்லி இருக்கீங்க  .... சோ...  லாஜிக்கலி  அது  ஓகே ...

ஆனா இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் , ஆஸ்திரேலியால பெர்த் சிட்டி மால்ல செத்துப்போன என் மது மாதிரியே இருக்கிற ஸ்ரீப்ரியா, ஏன் என் கண்ணுல படணும் ....


அதைவிட முக்கியமான விஷயம்,  அடுத்த வாரமே இந்த கோயம்புத்தூர்ல எத்தனையோ ஐடி கம்பெனிஸ் இருக்கும் போது அதையெல்லாம் விட்டுட்டு,  அவ ஏன் என் கம்பெனியை தேடி வந்து ஜாயின் பண்ணனும்.... ....


இது எல்லாத்தையும் விட மதுவுக்கு எந்த விதத்துலயும் சம்பந்தமே இல்லாதவ எப்படி பார்க்க மது மாதிரியே இருக்கா..

 என்னால இதையெல்லாம்  ஜஸ்ட் கோயின்சிடன்சா  எடுத்துக்க  முடியல ....


இதுக்கெல்லாம் எனக்கு லாஜிக்கலா பதில் தெரிஞ்சாகணும் ...இதுக்கு பதில் தெரியாததால,  என் மனசு செத்துப் போன என் மது தான், ஸ்ரீப்ரியாவா மறுபிறவி எடுத்து என்னை தேடி வந்திருக்கான்னு நம்புது .... 

அதனால தான் நான் அவளை தேடி போறேன்.... எனக்கு சரியான பதில் கிடைச்சுட்டா,  என் மனசு சமாதானம் ஆயிடும் ... நானும் அவளை தேட மாட்டேன் .... ப்ளீஸ் டாக்டர் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ..."

என்றவனைப் பார்த்துக் கொண்டே, கணினியில்  அவனுடைய மருத்துவ வரலாற்று  (medical history) தரவுகளை எடுத்து , சில மணித்துளிகள் கவனம் செலுத்தியவர்

"இந்த இம்மை, மறுமை, மறு பிறவி சமாச்சாரங்கள் எல்லாம் ஒவ்வொரு மதத்துலயும் ஒவ்வொரு மாதிரி சொல்லப்பட்டிருக்கு ....   செத்துப் போனவங்க உயிரோட வந்து சொன்னாலே ஒழிய  மத்தபடி  அதுல  சொல்லப்பட்ட விஷயங்கள் எவ்ளோ  தூரத்துக்கு உண்மைனு யாருக்குமே தெரியாது  .... அப்படி ஒன்னு இந்த உலகம் உருவானதிலிருந்து நடந்ததுமில்ல...

சோ, நீங்க சொன்ன எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில சொல்ற ஒன்னுங்கிறதால , அதை இதுவரைக்கும் யாரும்  சயின்டிஃபிக்கா ஜட்ஜ் பண்ணினதில்ல  ...  சயின்டிபிக்கா ஜட்ஜ் பண்ணவும் முடியாது ...

ஒரே மாதிரி இந்த உலகத்துல ஏழு பேர் உண்டுன்னு,  ஒரு சேயிங் கூட உண்டு ....

அஸ் ஐ செட்,  அதுக்கும் இதுவரைக்கும் யாருமே லாஜிக்கலான எக்ஸ்பிளநேஷன் கொடுத்ததேயில்லை ..."

என மொழிந்து விட்டு,  மீண்டும் அவனது மருத்துவ வரலாற்றில் அவர் மூழ்கி போக, 


"சரி டாக்டர் இந்த பொதுவான விஷயத்தை விட்டுடுங்க....  என் விஷயத்தை எடுத்துக்கோங்க ....

மது இறந்த அடுத்த வருஷமே ஸ்ரீ பொறந்திருக்கா .... மது மாதிரியே பார்க்க அச்சு அசலா இருக்கா .... 24 வருஷம் கழிச்சு என்னை தேடி வந்திருக்கா ....

அப்ப நான் அவளை என் மதுவா நினைக்கிறதுல என்ன தப்பு ...

நாம எங்கயாவது போகும் போது,  நம்ம ஃபிரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் ஜாடைல யாரையாவது பாப்போம் .... 

அவங்க ஒன்னும் நூறு சதவீதம் நம்ம பிரிண்ட் மாதிரியோ ரிலேட்டிவ் மாதிரியோ இருக்க மாட்டாங்க ... ஜஸ்ட் ஃபேஸ் ரிசம்புலென்ஸ் இருக்கும் அவ்ளோ தான்  .... அதுக்கே நம்ம மைண்ட்,  இவங்க அவங்கள மாதிரியே இருக்காங்க இல்லனு சரியா கனெக்ட் பண்ணிடும்... அப்படி இருக்கும் போது,  எல்லா விதத்துலயும் என் மது மாதிரியே இருக்கிற ஸ்ரீயை நான் ஏன் என் மதுவா நினைக்கக் கூடாது ... இன்னிக்கு என் ஸ்ரீயோட பர்த்டே டாக்டர்  ... அதுக்காக தான் அவள பாக்கணும்னு ஆசைப்பட்டேன் ...."  என்று அவன் முடித்ததுமே, கணினியில் ஊர்ந்து கொண்டிருந்த மருத்துவரின் விழிகள் ஒரு கணம் அப்படியே உறைய,  ஏதோ அறிந்து கொண்டதற்கு அடையாளமாக அவரது விழிகள் பளபளக்க,

"இப்ப கடைசியா என்ன சொன்னீங்க திரும்ப சொல்லுங்க ..." என்றார் ராணாவைப் பார்த்து  அவசரமாய் .


"ஆங்... இ....இன்னைக்கு ஸ்ரீயோட ப... பர்த் டே...... ...." என்றான்  தடுமாறி.


"அது ஓகே ... அதுக்கு முன்னாடி இன்னொன்னு சொன்னீங்களே .... எல்லா விதத்துலயும் மது மாதிரியே இருக்கான்னு .... அப்படி எல்லா விதத்துலயும்,  பாக்க மட்டுமில்ல சுபாவத்துலயும் , ஆக்டிவிட்டீஸ்ல கூட அந்த பொண்ணு ஸ்ரீ உங்க மது மாதிரியேவா இருக்கா .... கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க..." 

என்றதும் , குழப்பமான முகபாவத்தோடு,அவன்  தீவிர சிந்தனையில் மூழ்க,  அங்கு சில கணங்கள் அமைதி நிலவ,


"டா... டாக்டர் .... யோசிச்சதுல அவ பார்க்க மட்டும்  தான் 100% மது மாதிரியே இருக்கா .... மத்தபடி  சுபாவம், ஆக்டிவிட்டீஸ் எல்லாம்  ஒன்னு கூட மேட்ச் ஆகல ... " என்றான் தடுமாறி. 


அத்துணை நேரமாக உறுதியாக ஆணித்தரமாக கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தவனின் முகத்தில்,  திடீரென்று ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவ,


"நீங்க கம்பேர் பண்ணி பார்த்த கேரக்டர்ரிஸ்டிக்ஸ்  எல்லாத்தையும்  கொஞ்சம் சொல்ல முடியுமா ...."  என்றார் மருத்துவர் ஒருவித ஆர்வத்தோடு.


"அது வந்து.... மது பேசிக்கா இன்ட்ரோவேர்ட்.... 

  அவளா போய் யார்கிட்டயும் பேச மாட்டா...

 அவள தேடிப் போய் பேசுறவங்க கிட்ட  மட்டும்  பேசுவா ...

ஆனா ஸ்ரீ  எக்ஸ்ட்ராவோர்ட்....  எல்லார்கிட்டயும் பத்தே நிமிஷத்துல பழகிடுவா ....

மதுவுக்கு படிப்புன்னா சுத்தமா பிடிக்காது ஜஸ்ட் பாஸ் பண்றதே ரொம்ப கஷ்டம் ... அவளுக்கு பிடிச்சதெல்லாம் சமையல் தான் ... நல்லா  சமைப்பா நல்லாவும் சாப்பிடுவா...

ஆனா ஸ்ரீ படிப்புல யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் ....  சமைக்கவும் பிடிக்காது... சாப்பிடவும் பிடிக்காது ....

மது வலது கை பழக்கம் உடையவ,ஸ்ரீ என்னை மாதிரி லெஃப்ட்டி ...

மதுவுக்கு பாட வராது ஆட  தான் வரும் .... ஆனா ஸ்ரீ  நல்லா பாடுவா....

மதுவுக்கு கோவம் வந்தாலும்,  அதை வெளிப்படையா காட்ட மாட்டா.... உள்ளுக்குள்ளேயே வச்சு அழுது பொலம்புவா ...

ஆனா ஸ்ரீக்கு முன்கோவம் அதிகம் ..., தனக்கு சரின்னு பட்டதை,  யாருக்காகவும் எதுக்காகவும் மாத்திக்காம எத்தனை பேர் இருந்தாலும் பயப்படாம தன் வியூஸ சொல்லுவா ...


ஆங்.... அப்புறம் ... அப்புறம் ..."  


என அவன் யோசிக்க, 


"இப்ப நான் ஒரு முக்கியமான கேள்வி கேட்க போறேன் .... அதுக்கு நீங்க பதில் சொல்லக்கூடாது....  திலக் தான் பதில் சொல்லணும் ...." என்று திலக்கை ஏறிட்ட மருத்துவர்,


"ஸ்ரீயோட கேரக்டர்ஸ்ல எதெல்லாம் உங்க ஃப்ரெண்ட் ராணாவுக்கு பொருந்தி வருது ..." 

என்றார் அவன் மீது தீவிரமாய் பார்வை பதித்து.


இருவரும் குழப்பத்தோடு மருத்துவரை பார்க்க,


"ப்ளீஸ்,  நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க திலக் ..." என்று அவர் ஊக்க ஓரிரு கணம் யோசித்தவன்,


" ராணா யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் ...

  ரொம்ப நல்லா படிப்பான் ....


ஸ்ரீ மாதிரியே  இவனுக்கும் சமைக்கவும் வராது சாப்பிடவும் புடிக்காது .... இவன் எதையும்  ரசிச்சு ருசிச்சு சாப்ட்டு நான் பார்த்ததே இல்ல....  


ராணாவும் எக்ஸ்ட்ராவோர்ட் தான் .... எங்க போனாலும் பத்தே நிமிஷத்துல தன் பேச்சு சாதுரியத்தால  அங்க இருக்குற கூட்டத்தை தன் பக்கம் திருப்பிடுவான் ...


ஸ்ரீ மாதிரியே ராணாவும் நல்லா பாடுவான் ...ராணாவோட பையனும் நல்லா பாடுவான் ...( இப்போது மருத்துவரின் முகத்தில் மேலும் வெளிச்சம் கூடிப்போனது ) 


முன் கோவம் அதிகம் வரும் ... அவனுக்கு ஒரு விஷயம் தப்புன்னு பட்டதுன்னா,  யாரைப் பத்தியும் கவலைப்படாம எத பத்தியும் யோசிக்காம ஸ்ரீ மாதிரியே எல்லார் முன்னாடியும் மனசுல இருக்குறத பேசிடுவான் ...."


என்று முடித்தவனுக்கு ஏதோ புரிவது போல் தோன்ற,  


"இப்ப நீங்க என்ன தான் டாக்டர் சொல்ல வரிங்க ....  ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க ..."  என்றான் பெரும் குழப்பத்தோடு.


அதற்குள் ராணாவின் முகம் வெளிறி போய் அவன் கண்கள் லேசாக சிவக்க தொடங்க, அதனை உள்வாங்கிக் கொண்டே தொடர்ந்த மருத்துவர் ராணாவைப் பார்த்து, 


"இன்னைக்கு ஸ்ரீயோட பர்த்டே ரைட் ...   மது இறந்த அடுத்த வருஷமே ஸ்ரீ பொறந்திருந்தாலும் , மது இறந்த தேதியிலிருந்து பார்த்தா சரியா எட்டு மாசம் கழிச்சு பொறந்திருக்கா ....

நான் ஒரு இந்து .... நீங்களும் இந்துங்கிறதால , நம்ம மதத்துல சொல்ற ஒரு விஷயத்தை சொல்றேன் ... 

பொதுவா இந்து மதத்துல யாராவது இறந்து போயிட்டா,  ஒரு வருஷம் வரைக்கும் அவங்களோட ஆன்மா இந்த பூலோகத்துல தான் சுத்திக்கிட்டு இருக்கும்...  வருஷ திதி கொடுத்து  முடிஞ்சதுக்கு  அப்புறம் தான் அந்த ஆன்மா பித்ரு லோகத்தை அடையும்னு நம்ம வேதங்கள்  சொல்லுது .... 

அதே போல ரத்த பிண்டமாவே  கலைஞ்சி போன கருவுக்கு பாவ புண்ணியம் ஏதும் இல்லங்கிறதால,  அது நேரடியாகவே எந்த கருவோடயும் இணைஞ்சு தன் கர்ப்பவாசத்தை தொடங்கும்னு நம்ம வேதங்கள்  சொல்லுது ...


இப்ப நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் ..


மது சாகும் போது அவ  கிட்டத்தட்ட ரெண்டு மாசம் கர்ப்பம்.... ரைட் ... ஒருவேளை மது சாகாம  இருந்து உங்களோட கல்யாணம் நடந்திருந்தா, ஸ்ரீ பொறந்த அதே மாசத்துல தான் அந்த குழந்தையும் பொறந்திருக்கும் .....


இன்னும் ப்ரிசைஸ்ஸா சொல்லனும்னா, மது மாதிரியே இருக்கிற ஸ்ரீ உங்க மது இல்ல உங்க மகனு சொல்றேன்..... 


தட் மீன்ஸ் மது மாதிரியே இருக்கிற ஸ்ரீ எதுக்காக என்னை தேடி வந்தான்னு  கேட்டீங்க இல்லையா ... அதுக்கான எக்ஸ்பளநேஷன் தான் இது ...


சில குழந்தைங்க பார்க்க அம்மா மாதிரியே இருக்கும் .... ஆனா சுபாவம் எல்லாம் அப்பா மாதிரியே இருக்கும் .... 


சோ ... உங்களுக்கும் உங்க மதுவுக்கும் பொறக்க இருந்த குழந்தை தான் ஸ்ரீனு சொல்லலாம் ... உங்களுக்கும் ஸ்ரீக்கும் இருக்கிற விட்ட குறை தொட்ட குறை  இதுவா கூட இருக்கலாம் ....


மறுபடியும் சொல்றேன் ... ஸ்ரீ உங்க பொண்ணு தான்னு அடிச்சு சொல்ல லாஜிக்கலா என்கிட்ட எந்த ஆதாரமும் கிடையாது ... என்னால சயின்டிபிக்காவும் ப்ரூஃப் பண்ண முடியாது .... ஆனா உங்க மன சாந்திக்காக இந்த பதிலை நீங்க எடுத்துக்கலாம் ....


ஏதோ எனக்கு தெரிஞ்சத வச்சி கனெக்ட் பண்ணி சொல்லி இருக்கேன் ....


இன்னும் தெளிவான விளக்கம் வேணும்னா,  நல்லா வேதம் படிச்ச  வேத விற்பன்னர்களை மீட் பண்ணி தெரிஞ்சுக்கங்க...


இன்னமும் கடவுள் இருக்காரா இல்லையான்னு ஒரு தர்க்கம்  போய்கிட்டு தான் இருக்கு .... 


இஃப் தேர் இஸ் எ கிரியேஷன் ... தேர் மஸ்ட் பி எ கிரியேட்டர்....  லாஜிக்கலா பாத்தா  இது சரியா இருக்கு ...

ஆனா இதையே சில பேர் ஏத்துக்கல .... சோ , நான் சொன்ன பதில் சரியா தப்பானு எனக்கு தெரியல .... ஆனா நிச்சயமா பொருத்தமான பதிலா இருக்கும்னு நம்பறேன்   ...."

என மருத்துவர் முடிக்க , அதற்குள் ராணாவின் முகம் செஞ்சாந்தாய் சிவந்து போக உள்ளுக்குள் அவன் மனம் ஓங்காரமாய் கதறிக் கொண்டிருந்தது.


மகளாய் பார்க்க வேண்டியவளை,  மனைவியாய் ரசித்ததை எண்ணி மருகிக் கொண்டிருந்தவனின் மன அழுத்தம் வகைத்தொகை இல்லாமல் கூடிக் கொண்டே செல்ல,  நண்பனின் நீண்ட நாள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைத்ததை  எண்ணி  திலக்கின் மனம் தாமரையாய் மலர, 


"தேங்க்யூ டாக்டர் , தேங்க்ஸ் எ லாட் ....  நீங்க சொன்ன விஷயம் லாஜிக்கலா சரியா தப்பாங்கிறதை விட , நம்ம கலாச்சார ரீதியா நீங்க சொன்ன பதில் ரொம்ப சரி .... ஒரே ஒரு பெண்ணை தான் மணக்கணும்... அவளுக்கு மட்டும் தான் உண்மையா இருக்கணும் .... மத்தவங்க எல்லாரையும் தாயாவும் மகளாவும் தான் பாக்கணும்னு, நம்ப புராணங்களும் இதிகாசங்களும் சொல்லுது .....  அதைத்தான் நீங்க கொஞ்சம் வேற மாதிரி சொல்லி இருக்கீங்க ... எனவே ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் எ லாட் டாக்டர் ....  நாங்க கிளம்பறோம்  ..."   என அவன் முடிக்க,  வெளிறி போன முகத்தோடு, லேசாக தலை குனிந்த படி,


"தேங்க்ஸ் டாக்டர் .... தேங்க்ஸ் ஃபார் எவெரி திங்  ..." என விடைபெற்றான் ராணா.


காரில் பயணிக்கும் போது,  திலக் ஏதேதோ பேசிக் கொண்டே வர,  அது எதுவும் அவன் செவியை மட்டுமல்ல சிரசயும் சென்றடையவில்லை.


முதன்முறையாக அவள் புடவை அணிந்து அலுவலகம் வந்த தினத்தன்று,  அவள் அணிந்திருந்த ரவிக்கையின் பின் கழுத்து சற்று பெரிதாக இருந்ததால்,  எதையோ எடுக்க அவள் கீழே குனிந்த பொழுது, பறந்து விரிந்திருந்த அவளது கூந்தல் ஒரு புறம் சரிந்து விழ,  பளிங்கு கல்லாய்  முதுகு பளபளக்க,  அப்போது  வலது தோளுக்கு கீழே  உள்ளடங்கி இருந்த  மச்சம்  பளிச்சென்று கண்ணில் பட,  தன் மதுவுக்கும் அதே இடத்தில் மச்சம் இருப்பது நினைவுக்கு வர, மனம் மகிழ்ந்தவன்  அன்றிலிருந்து அவளது ஆடை விலகலை மட்டுமல்ல ஆடைகளையும் அணு அணுவாக ரசிக்க தொடங்கினான் ...


அதுமட்டுமல்ல அவளது புகைப்படம் மற்றும் காணொளிகளை  பயன்படுத்தி  அவனும் அவளும் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று மனதில் திட்டமிட்டு இருந்தானோ,  அதையெல்லாம் AI மூலம் காணொளி குறும்படங்களாய் உருவாக்கி,  கண்ணாரக் கண்டு களித்தான்..  ....


அதோடு அவர்களது நியூசிலாந்து பயணத்திற்காக  அவளுக்கு உடை மட்டுமல்ல உள்ளாடை வரை பார்த்து பார்த்து வாங்கி வைத்து மகிழ்ந்தான்...


ஆகிய  தருணங்கள் எல்லாம் தற்போது அவன்  மனக்கண்ணில் படக் காட்சியாய் ஓட, குற்ற உணர்வு அவனை அணு அணுவாய் கொல்ல,  உள்ளுக்குள் தணலில் விழுந்த தழையாய் தவிக்கத் தொடங்கினான் ...


மகளாய் பார்க்க வேண்டியவளை , சிசிடிவி கேமராவின் வழியாக மையல் கொண்டல்லவா  பார்த்திருக்கிறேன் ....

ஹோட்டலில் நடந்த சந்திப்பில் கூட திலக் சொன்னானே ..... ஸ்ரீ என் மகளை போன்றவள்.... .... என் மகளின் வயது ஒத்தவள்  என்றெல்லாம் ... அப்போது கூட எனக்கு ஏன் அந்த எண்ணம் தோன்றவே இல்லை .....

என்ன தான் ஸ்ரீ மதுவை போலவே  இருந்தாலும்,  அவளுக்கும் எனக்குமான வயது வித்தியாசத்தை,  ஏன் சிந்திக்காமல் விட்டுவிட்டேன் ....சிந்தித்து இருந்தால்  இம்மாதிரியான ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்க மாட்டேனே....

தந்தையாய்  மகளைப் பேணி காக்க வேண்டியவன்,  கயவனாக அல்லவா  கண்டு ரசித்திருக்கிறேன் ... கடவுளே 

புராண ராவணன்,  தன் மகள் போல் இருக்கும் சீதையின் மீது மையில் கொண்டது போல் அல்லவா , நான் என் மகளின் மீது மையல் கொண்டிருந்திருக்கிறேன் ....

நல்ல வேளையாக , அவளது நினைவுகளை அழித்து,  உரு தெரியாமல் , ஒன்றுக்கும் உதவாமல்  ஆக்குவதற்கு முன்பாக கடவுள், இந்த நயவஞ்சகனிடமிருந்து அவளைக் காப்பாற்றி விட்டார் ..... 

அதற்கு கோடான கோடி நன்றிகள் ......

 இனி என்னால் அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாது .....

ஏற்கனவே  என்னுடைய கண்ணியமற்ற நடவடிக்கையால் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, தொடர்பு கொள்ள முடியாதபடி தனிமைப்படுத்திக் கொண்டு விட்டாள்...


இனி அவள் என்னை காண வருவது கூட கடினம் தான் ....


கடைசி முறையாக  அவளை சந்திக்கும் தகுதியை கூட  இழந்து விட்டேனே ....


இனி நான் வாழ்வதற்கே தகுதியற்றவன் ....


மதுவை போலவே ஸ்ரீயை படைத்த கடவுளைக் கூட நான் குற்றம் சொல்ல விரும்ப வில்லை ....


எனக்கும் அவளுக்குமான வயது வித்தியாசத்தை பற்றி யோசிக்காமல்,  அதைவிட மாற்றானின் மனைவி என்ற சமுதாயக் கட்டுப்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்  , அவளது விருப்பத்திற்கு எதிராக, சிறை எடுத்தாவது அவளை  அடைய வேண்டும்,  என்று எண்ணினேனே .....


அந்த சிந்தையும்,  சிந்தனையையும் தான் குற்றம் சொல்ல வேண்டும் ....


ராமாயணத்தில் கூட கம்பர் கடைசியில், ராமன் என்ற சாதாரண  சாமானியன், ராவணன் என்ற  பராக்கிரமசாலியை  அழிக்கவில்லை..... அழிக்கவும் முடியாது ....


ராவணனை   அழித்தது அவனது  அகங்காரமும்,  சிந்தனையும் தான் என்று முடித்திருப்பார் .....


அதேபோல் என்னுடைய அழிவிற்கும் ... நானே தான் காரணமாக போகின்றேன் ...

 என்று உள்ளுக்குள் அவன் கதறிக் கொண்டிருக்கும் போது ,


"நீ கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சு....   இனிமே அந்த பொண்ண தேடி போய்  கஷ்டப்படுத்தாதே ..... அது அவ புருஷனோட சந்தோஷமா வாழ்ந்துட்டு போட்டும்...  "


திலக் உற்சாகமாய் சொல்ல,  ராணா அமைதி காக்க,

"நல்ல வேளை நீ அந்த பொண்ணு கிட்ட போய் எதுவும்  ஓளறி வெக்கல ..." என்றான் நண்பனை கீழ் கண்ணால் பார்த்து.


அவனைப் பொருத்தமட்டில்  தோழியின் திருமணத்திற்காக வருபவளை காண்பதற்காக தான் சிவகங்கையில் நீண்ட நேரம்  ராணா காத்திருந்தான் என்றே எண்ணியிருந்தவனுக்கு தெரியாது , ராணா 

ஸ்ரீயின் கேபினில் சிசிடிவி கேமராவை பொருத்தி  அதன் வழியே அவளைப்  பலவிதமாய் பார்த்து ரசித்தது,  கடைசியாக அவனது அறையில் அவளிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதெல்லாம் ...

அதனால் தான் , ராணா  அனுபவித்துக் கொண்டிருக்கும் குற்ற உணர்வுகளை அறியாமல் அவன் இயல்பாய் உரையாடிக் கொண்டே செல்ல,   அங்கு பெருத்த அமைதி நிலவியது.

சில மணித்துளிகளுக்குப் பிறகு,

"நாளைக்கு காலையில என் வீட்டுக்கு சீக்கிரமா வந்துடுடா ... உனக்கு நிறைய வேலை இருக்கு ...." என்றான் ராணா வித்தியாசமான குரலில்.


"நாளைக்கு என்னடா வேலை  ....????"


"ம்ச்.... சிவான்ஷ்க்கு மியூசிக் ஸ்டுடியோ கட்ட இடம்  பாக்கணும் சொல்லி இருந்தேன் இல்ல ... அதுக்காக போகணும்..."


" ஓ.... அப்ப ஆறு மணிக்கு வந்தா போதுமா ...."


" ம்ம்ம்ம்ம்....... சுனந்தா எப்படி இருக்கா ..." 

என்றான் ராணா கமரிய குரலில்.


"ஓரளவுக்கு பரவால்லடா .... அவ இவ்ளோ தேறி வருவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... எல்லாம் கடவுளோட ஆசிர்வாதம் தான் ..."


" நீ அவளுக்கு ரொம்ப லாயலா , டெடிகேட்டடா இருந்த ..... அதான் கடவுள் அவளை காப்பாத்தி கொடுத்திருக்காரு... ஆமா சம்ருதி ( திலக்கின் மகள் ) கல்யாணத்தை பத்தி என்ன டிசைட் பண்ணி இருக்க ...."


"ஒரு ப்ரொபைல்  நல்லா பொருந்தி  வந்திருக்கு, ஜாதக பொருத்தமும் அம்சமா இருக்கு ....  அது மட்டும் அமைஞ்சிட்டா அவ கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிடுவேன் டா...."


" சம்ருதி எனக்கும் பொண்ணு தான் டா ....  அவ கல்யாணத்த தடபுடலா  செய்யற ... புரிஞ்சுதா.... ... "


"பணம் கொடுக்க போறது நீ, தடபுடலா செய்யாம விட்டுடுவேனா ...."

இப்படியே பேசிக்கொண்டே இருக்கும் போது,  ராணாவின் இல்லம் வந்து சேர, தளர்ந்த நடையில் காரை விட்டு இறங்கியவனிடம் ,


" ராணா காரை இங்கயே விடட்டுமா .... இல்ல  ஷெட்ல விடட்டுமா ...."


"நீ காரை எடுத்துக்கிட்டு போ....நாளை காலையில இதுலயே சீக்கிரமா  வந்து சேரு ..."  என்றவன்,


"தேங்க்ஸ் டா ...." என்றான்  திலக்கின் முகம் பார்த்து .

" ஏன் ராணா ஒரு மாதிரி இருக்க ... ஏதாவது பிரச்சனையா ...." என்றான் திலக் அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்து. 


"ஒன்னுமில்லடா.....  தலைவலி கொஞ்சம் அதிகமா இருக்கு.... அதான் ..... எனிவே தேங்க்ஸ் ஃபார் எவ்ரி திங் ...." ராணாவின்  குரல் கமர 


"தேங்க்ஸ் எல்லாம் வேணாம்,  டாக்டர் கொடுத்த டேப்லட்ஸ ஒழுங்கா எடுத்துக்கிட்டு நிம்மதியா தூங்கு ....  நாளைக்கு வலி குறையாம இருந்தா வெளியே எங்கயும் போக வேணாம் சரியா ...." என்றவன் விருவிருவென்று காரைத் திருப்பிக் கொண்டு செல்ல, புள்ளியாய்  மறையும் வரை நின்று பார்த்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தவனின் விழிகளில் அவன் மகன் சிவான்ஷ் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருப்பது தெரிய, ஒரு கணம் நின்று அவனை உற்று நோக்கினான்.


இசை சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்த மைந்தன் ஒரு கட்டத்தில்,


"அப்பப்பா ....  எதை கொண்டு போய் எங்க போட்டு வச்சிருக்கேன் பாரு .... வாட் எ ப்ளண்டர் ...."  என அவன் நண்பனிடம்  அங்கலாய்ப்பதை பார்த்ததும் ஒரு கணம் ராணாவின் மனதில் ஸ்ரீயுடன் உரையாடிய ஒரு நிகழ்வு படமாய் விரியத் தொடங்கியது. 


" அங்க பாரு....  அவங்க எல்லாம் யாரு ...."அவன் ஸ்ரீயிடம் ஜன்னலுக்கு வெளியே இருப்பவர்களை காட்டி  கேட்க 


" பிச்சைக்காரங்க ...."


"நீ பண்ணின தப்ப நான் திருத்தாம கிளைன்ட் கிட்ட அனுப்பி இருந்தா,  நானும் இந்நேரம்  அவங்க கூட தான் போய் உட்கார்ந்து இருக்கணும் ...." அவன் குறு நகையோடு  சொல்ல,


"அப்பப்பா ... அவ்ளோ பெரிய மிஸ்டேக்கா பண்ணியிருக்கேன்  ....எங்க எக்ஸ்பிளைன் பண்ணுங்க ..."  என அவள் கேட்டது நினைவுக்கு வர, உடனே அவன் தாய் சொன்னதும் நினைவுக்கு வந்தது.


" உன் பையன் உன்ன மாதிரியே பேசுறான்  ... நீ சின்ன வயசுல ஏதாவது தப்பு பண்ணிட்டா,  அப்பப்பா தப்பு பண்ணிட்டேன்னு தான் சொல்லுவ.....இவனும் அப்படியே சொல்றான் பாரு ...."


அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்கு துக்கம் தொண்டையை அடைக்க,  கண்களில் கண்ணீர் குளம் கட்ட , துடைத்துக் கொண்டே தன் அறை நோக்கி நடந்தவனின் விழியில்,  காய்ந்த அவனுடைய துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த மான்சி பட,


" என்னை சுத்தி எல்லாருமே நல்லவங்களா  இருந்திருக்காங்க .... நான் தான் புரிஞ்சுக்கல....... ...." 


என மனதோடு பேசியவன்,  விறுவிறுவென்று  தன் அறைக்குள் சென்று அறை கதவை சாற்றினான்.

"ராம்,  நீங்க ராணாவை பத்தி சொன்னதுல இருந்து என் மனசு ஒரு மாதிரி இருக்கு ..இப்படி கூடவா  ஒருத்தன் நடந்துப்பான் .... யூஸ்லெஸ் ஃபெல்லோ ...."


ஸ்ரீ ஆதங்கமும் ஆங்காரமுமாய் கணவனை அணைத்தபடி  சொல்ல,


"விடும்மா.... அவனுக்கு ஏதோ பிரச்சனைனு நல்லா தெரியுது .... மறுபிறவி அது இதுன்னு ஏதேதோ ஓளறினான் ....   நாளைக்கு நீ பார்க்க தானே போற .... உன்கிட்டயும் அந்த மாதிரி ஏதாவது ஓளறுவான் ..."


"ஏற்கனவே நீதான் மதுவோட மறுபிறவினு ஓளறி இருக்கான்  ராம்..."  


"நாளைக்கு அந்த மாதிரி ஏதாவது அவன் ஓளரட்டும்...  அப்ப அவனுக்கு இருக்குது ....

இப்ப நீ எதை பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு டா .... " என்றவன்  தன்னவளை  தன்னோடு இறுக்கிக் கொண்டு உறங்கிப் போனான். 

மறுநாள் காலையில்  வழக்கம் போல் ஸ்ரீ சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்க,  வீரா  மடிக்கணினியில் அலுவலகப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவனது அலைபேசி சிணுங்கியது.


ஒளிர்திரையில் திலக் என்ற பெயரைக் கண்டதும் கடுப்பானவன், வேகமாக அழைப்பை அனுமதித்து,


"சார்,  நான் என் வைஃப் கிட்ட சொல்லிட்டேன்....   இன்னைக்கு ஈவினிங் நாலு மணிக்கு   அவள கூட்டிக்கிட்டு நான் அகாடமிக்கு வரேன் .... நீங்களும் ...." என்றவனின் பேச்சை இடைவெட்டி,


"ராணா அங்க வரமாட்டான் சார் ...."   கமரியக் குரலில் திலக் மொழிய,


" ஏன்....."


" ஹி ஈஸ் நோ மோர் ...." 

இப்போது திலக்கின் குரல் உடைய ,


" ஓ மை காட் .... ஏன் .... என்ன ஆச்சு ...." வீரா   அதிர்ந்து கேட்க,


" தலைவலி தாங்க முடியாம போனதால  சூசைடு  பண்ணிக்கிட்டதா டெத் நோட் எழுதி வச்சிட்டு சூசைட் பண்ணிக்கிட்டான் ..."


" ஐயோ.... திடீர்னு ஏன் அவருக்கு தலை வலி வந்தது ..."


"அன்னைக்கே சொன்னேனே சார் ... அவன் லவ்வர் மது அவன் கண் முன்னாடியே இறந்ததிலிருந்து அவன் டிப்ரஷன்ல போயிட்டான் ....  அதனால  அவனுக்கு அடிக்கடி   தலைவலி வரும் ...நிறைய மாத்திரை மருந்துங்க  எடுத்துப்பான் ..... நேத்து தலைவலி அதிகமாயிடுச்சு போல... அதன் இப்படி ஒரு முடிவை தேடிக்கிட்டான்  ..."  என்று திணறிய படி திலக் முடிக்க, 


"டு பி பிராங்க்,  நீங்க சொல்றத என்னால நம்ப முடியல .... ப்ளீஸ்... உண்மையான ரீசன்  சொல்லுங்க  .... நானும் அவரும் சண்டை போட்டதால  அவருக்கு ஏதாவது ஆயிடுச்சா ...." என்றான் வீரா ஆற்றாமையோடு. 


" ச்சே, ச்சே, அதெல்லாம் காரணமே இல்ல....  நேத்து நைட்டு பத்து மணி வரைக்கும் என் கூட தான் இருந்தான் .....நல்லா தான் பேசிகிட்டு இருந்தான்... என்ன ஒன்னு அடிக்கடி தலைவலின்னு சொல்லிக்கிட்டு இருந்தான் ...என்னை கூட காலையில சீக்கிரமா வீட்டுக்கு வர சொன்னான்.... இப்படி ஒரு விஷயத்துக்காக தான் வர சொல்லி இருக்கான்னு அப்ப எனக்கு புரியல .... "


திலக்கின் குரல் மீண்டும் உடைய ,


" ப்ளீஸ், அட்ரஸ ஷேர் பண்றீங்களா ....  நான் அவரை பாக்கணும் ...." 


ஒருவித குற்ற உணர்வோடு வீரா கேட்க, திலக்  முகவரியை பகிர்ந்ததும், மனைவியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு ராணா வீட்டை நோக்கி பறந்தான் வீரா.


ராணா தன் மரணக் குறிப்பில்,

தலைவலியால் அனுதினமும் அவதியுறுகிறேன் ....

இந்த தீராத தலைவலியிலிருந்து விடுதலை பெறுவதற்காகத்தான்,  இந்த உலகில் இருந்து விடுதலைப் பெறுகிறேன் ....


Sorry thilak.....


Sorry mansi.........


Sorry my son shivansh........


Sorry my daughter Shree priya.........


Good bye.....


Rana pratap....


( இவைகளை கொட்டை எழுத்தில் குறிப்பிட்டு முடித்திருந்தான் ...)


ராணா  தன் மரணத்திற்கு தீராத தலைவலியே  காரணம் என்று மரணக் குறிப்பு எழுதி இருந்தாலும்  அதில் குறிப்பிட்டிருந்த ஒரு வாசகம், ( Sorry my daughter Shree priya.........) அவனது மரணத்தில் மறைந்திருக்கும் மர்மங்களை,  மறைமுகமாக எடுத்துரைக்க, உடனே அவனது  மடிக்கணினியில் இருந்து அலைப்பேசி வரை அனைத்தையும் ஆராயத் தொடங்கினான் திலக்.


அப்போது தான் ,ராணாவின்  மடிக்கணினியோடு அலுவலகத்தில் ஸ்ரீயின் கேபினில்,  அவளைக் காண்பதற்காகவே பிரத்தியேகமாக அவன்  பொருத்தியிருந்த  சிசிடிவி கேமரா இணைப்பில் இருந்தது அவனுக்கு தெரிய வந்தது .


அதோடு அமெரிக்க நரம்பியல்  மருத்துவரான மைக்கேல் மார்க்குக்கும்  அவனுக்குமான மின்னஞ்சல் போக்குவரத்தை படிக்க படிக்க, எவ்வளவு பெரிய துரோகத்தை செய்ய நண்பன்  துணிந்திருக்கிறான் என்பதை கண்டு துடித்து போனவனுக்கு,  ஸ்ரீயின் முகம் மற்றும் தன்  முகம் கொண்டு AI மூலம் ராணா   தயார் செய்து வைத்திருந்த குறும் காணொளிகளும் கண்ணில் பட,  அதில் அமைக்கப்பட்டிருந்த காட்சிகளைப் பார்த்ததும் தான் , மகளாய் பார்க்க வேண்டியவளை மனைவியாய்  பார்த்ததால் வந்த குற்ற உணர்வால் தான் ராணா தற்கொலை செய்து கொண்டுள்ளான்.... என்ற உண்மை ஊர்ஜிதமாகிப் போக உறைந்து போனான் திலக்.


சொத்தில் பெரும்பாலானவற்றை மான்சிக்கும் மகனுக்கும் எழுதி வைத்துவிட்டு,  நிறுவனத்தில் பெரும் பங்கை திலக்கிற்கு எழுதி வைத்த  நகல்களை அவனுக்கு மின்னஞ்சல் செய்திருந்தான்.


அவைகள் எல்லாம் கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தெளிவாக தயார் செய்யப்பட்டு,  பதிவு செய்யப்பட்டிருப்பது அதன் தேதிகளில் வெட்ட வெளிச்சம் ஆகிப்போக,  உடன், நிறுவனத்தை சிறப்பாக தலைமை ஏற்று நடத்தி,  தன் மகன் தலைமை ஏற்கும் தருவாயில், அவனிடம் ஒப்படைத்து விட்டு உடனிருந்து உதவுமாறும், அவனது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துத் தருமாறும் வேண்டியிருந்தான்.


என்றுமே திலக்கிற்கு ராணாவின் மீது  நட்பை விட,  எஜமான விசுவாசம் தான் அதிகம். 


ராணாவின் கண்ணியத்தை காக்க எண்ணி அவன் இறப்பின் முக்கிய காரணத்தை,  வீரா உட்பட எவரிடமும் மனம் திறக்காமல்,  மரணக் குறிப்பில் இருப்பதையே காரணமாக சொல்லி மறைத்திருந்தான். 


ராணாவின் சரீரம்,  நடு வீட்டில் கம்பீரமாய் கிடத்தப்பட்டிருந்தது ...

நண்பர்கள்,  உறவினர்கள் , உடன் பணிபுரிவோர் என அனைவருக்குமே அவனது திடீர் மரணம் அதிர்ச்சியை தந்திருப்பது அவர்களது முகத்திலும் பேச்சிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது ...

மனைவியாய் வாழவில்லை என்றாலும் மானசீகமாக வாழ்ந்திருக்கிறாள் என்பதால்,

கணவனின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் மான்சி உருக்குலைந்து போய் இருக்க,    அதிர்ச்சியும் கவலையுமாய் கண்ணீர் மல்க தந்தையே பார்த்தபடி உணர்வற்று நின்றிருந்தான் ராணாவின் மகன் சிவான்ஷ்....

அதையெல்லாம் காண காண , முந்தைய தினம் சற்று பொறுமையோடு ராணாவை கையாண்டிருக்கலாமோ என்ற குற்ற உணர்வு வீராவுக்கு அதிகமாகிப் போக, அதை திலக்கிடம் மொழிந்து,


"நீங்க முன்னாடியே  இவரோட பிரச்சனையை சொல்லி இருக்கீங்க .... ஆனா அப்பெல்லாம் 

 ராணா என் ஒய்ஃப் மேல ஆசை பட்டது மட்டும் தான் என் மனசுல பதிஞ்சது.... நேத்து  கூட கிரிக்கெட் அகாடமில, அவரு தான் முதல்ல என்னை அடிச்சாரு .... அதோட என்னோட மது தான் உன் ஸ்ரீனு ஏதேதோ பேசினதால , கண்ட்ரோல் பண்ண முடியாம அவர் மேல கோவப்பட்டுட்டேன் .... இப்ப நினைச்சு பார்க்கும்போது எனக்கு  கில்ட் ஃபீல் அதிகமா இருக்கு ...." என மெய்யாகவே வருந்தியவன்,

"ஒன்னு கேட்கறேன்...  தப்பா எடுத்துக்காதீங்க.... .... ஸ்ரீ நிஜமாவே இறந்து போன மது மாதிரி தான் இருக்காளா...." 

என்றதும்,  உடனே திலக் தன் அலைபேசியில் கேலரிக்கு சென்று தேடி எடுத்து சில பழைய புகைப்படங்களை காட்டத் தொடங்கினான்.


அதைப் பார்க்க பார்க்க அதிர்ச்சியும் ஆச்சரியமாய் உறைந்து போனான் வீரா.


ராணா மற்றும் மதுவிற்கு இடையே நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் அவைகள் ...


வடக்கத்திய உடையில்,  ஒப்பனையில் அவன் ஸ்ரீயே அச்சில் வார்த்தாற் போல் ராணாவிற்கு அருகில் நின்று கொண்டிருப்பது போல் தோன்ற,  ஒரு கணம் மூச்சு முட்டி இமைக்க மறந்தான்.

 

ராணா எதற்காக தன் மனைவி ஸ்ரீயை பார்த்து  மது மது என்று பைத்தியமாய் விளித்தான் என அப்போது தான் அவனுக்கு விளங்கியது.


தற்போது வீராவின் குற்ற உணர்வு மேலும் அதிகமாக,  அதை அவன் முகத்தில் இருந்தே படித்த திலக்,


"இதுல நீங்க கில்டா ஃபீல் பண்ண ஒண்ணுமே இல்ல .... உங்க மேலயோ உங்க மனைவி மேலேயோ எந்த தப்பும் இல்ல.... இன்ஃபாக்ட்  அது ராணாவுக்கும்  நல்லா தெரியும் ..... சோ,  இதை இங்கயே மறந்துட்டு,  நிம்மதியா வீட்டுக்கு போய் உங்க வாழ்க்கைய பாருங்க...... ..."  என முடித்தான்.


தற்போது குற்ற உணர்வில் தவிப்பவனுக்கு,  ராணா அவன் மனைவியை தவறான முறையில் ரசித்திருக்கிறான், அவளது  நினைவுகளை அழிக்க திட்டமிட்டு  பல கோடிகள்  செலவு  செய்திருக்கிறான்,  என்றெல்லாம் தெரிய வந்தால் ராணாவின் பிணத்தைக் கூட அவன் விட்டு வைக்க மாட்டான் என்பதோடு  இறந்து போன நண்பனுக்கு கலங்கத்தை தேடித் தர மனமில்லாமல் அதனை முற்றிலும் மறைத்து,


"நீங்களும் உங்க மனைவியும் கிரேட் சோல் .....  ராணாவோட ஆயுள் முடிஞ்சு போச்சு .... அதுக்கு நீங்களோ நானோ ஒன்னும் பண்ண முடியாது ...... ப்ளீஸ் ...ட்ரை டூ மூவ் ஆன் ஃப்ரம் திஸ் இன்சிடென்ட் ...." என்றவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு,  பூத உடலாக படுத்திருந்த ராணாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு கனத்த இதயத்தோடு வீடு திரும்பினான் வீரா. 


வீடு வந்து சேர்ந்தவன்,  தன் மனைவியிடம் திலக் கூறிய  அனைத்தையும் சொன்னான், புகைப்படத்தில்  பார்த்த மது அவளைப் போலவே அச்சு அசலாக இருக்கிறாள் என்பதை மட்டும் மறைத்து.


நடந்த அனைத்து பிரச்சனைக்கும் ராணா தான் காரணம் .... ராணா தான் முழு  குற்றவாளி என்றாலும் , அவன் மது ,  ஸ்ரீ போல் புகைப்படத்தில் காட்சி அளித்தது ஒருவித மெல்லிய குற்ற உணர்வை வீராவிடம் விட்டுச் சென்றிருக்க , அதே குற்ற உணர்வு தன் மனையாளை தாக்கி விடக்கூடாது என்பதற்காக , அதை மட்டும் அவன் தவிர்த்திருக்க,


"இங்க பாருங்க ராம் .... நாம மனசறிஞ்சி யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல .... ராணா தான் நேத்து வந்து சண்டை போட்டான் .... இன்னைக்கு தலைவலினு அவனே தான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போய் இருக்கான் .... இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல.... .... இத பத்தி நீங்க இனிமே யோசிக்காதீங்க ...." 


என்றவளின் மனதில் ராணாவின் மீது அளவுக்கு அதிகமான வெறுப்பு  மண்டியிருந்ததால் , அவனது இறப்பு மெல்லிய அதிர்ச்சியோடு முடிந்து போக,  அவள் அன்றைக்கே இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தாள்.

வீராவால் மட்டும்  ராணாவின் இறப்பிலிருந்து, அவ்வளவு எளிதாக வெளிவர முடியவில்லை .....

மேலும் இரண்டு வாரம் இயல்பாய் கழிந்தது .....

வீரா வழக்கம் போல் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்து இருந்தான்.


ஸ்ரீக்கு வாரத்திற்கு ஏதாவது ஒரு தினம் 'உள்ளேன் ஐயா' என்பது போல் தலைவலியும் கால் வலியும் தன் இருப்பைக் காட்டி விட்டுச் சென்றாலும், பெரிதாக ஏதும் இல்லாததால் அவளும் வழக்கம் போல் பட்டாம்பூச்சியை வலம் வந்து கொண்டிருந்தாள். 


இந்நிலையில் ஒரு நாள்,


"இப்பதான் கான்பரன்ஸ் கால்ல அன்பு,  அம்மா,  அப்பா , அண்ணா,  அண்ணின்னு  எல்லாரோடயும் பேசினேன் ....அடுத்த வாரம் அம்மா அப்பா ஊருக்கு வராங்களாம் ...."


"ம்ம்ம்ம்.... குட் நியூஸ் ...." என்றபடி ஸ்ரீ

வாணலில் காய்கறிகளை வதக்கி கொண்டே சொல்ல ,


" ஸ்ரீ,   நான் வேணா இங்க கிட்டத்துல எங்கையாச்சும் வீடு பாக்கட்டுமா ..... அம்மா அப்பா வந்ததும் சொல்லிட்டு தனி குடித்தனம் போயிடலாம் ....." 


யோசனையோடே வீரா சொல்ல,


"என்ன பேச்சு பேசுறீங்க ..... என்னால தனி குடுத்தனம் எல்லாம் வர முடியாது .... வரமாட்டேன் ...."  அவள் திட்டவட்டமாக மறுக்க,


"அடியே சொன்னா புரிஞ்சுக்கோ டி ....  ஏற்கனவே என் அம்மா உன்னை கன்னா பின்னான்னு பேசியிருக்காங்க ....... இப்ப அன்புக்கு வேற அபார்ஷன் ஆயிடுச்சு .. அந்தக் கோவம் எல்லாம் உன் மேல திரும்ப வாய்ப்பு இருக்கு .... என்னாலயே என் அம்மாவை இப்பெல்லாம் கெஸ் பண்ண முடியல ........ நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் பார்த்த என் அம்மாவும், இப்ப இருக்கிற அம்மாவுக்கும் ஆயிரம் வித்தியாசம் தெரியுது ..... அவங்களுக்கு இப்படி எல்லாம் பேச தெரியும்னு கூட எனக்கு தெரியாது ...... தேவையில்லாம ரிஸ்க் எடுக்காத ..... உனக்கு மெண்டல் பீஸ் முக்கியம்னு டாக்டர் சொல்லி அனுப்பி இருக்காரு ..... ப்ளீஸ் பட்டும்மா தனி குடித்தனம் போயிடலாம் ...."


அவன் கெஞ்ச, அவள் மறுக்க ஒரு கட்டத்தில்,


"எனக்கு என் அம்மா அப்பா அண்ணன் தங்கை எல்லாம் உறவும் வேணும்டி ...சண்டை போட்டு அசிங்கப்பட்டு கஷ்டப்பட்டு வீட்டை விட்டு வெளியே போறத விட, நீ சௌக்கியமா நான் சௌக்கியம்னு முகம் கொடுத்து பேசுற அளவுக்காவது உறவு நிலைக்கணும்னா தனி குடுத்தனம் போனா தான் அது சரி வரும் ....." அவன் விலக்கிக் கொண்டிருக்கும் போது , ஏதோ சொல்ல வந்தவள் திடீரென்று தலையைப் பிடித்துக் கொண்டு மயங்கி சரிய,  ஓடி வந்து பற்றிக் கொண்டான் வீரா.


ஈரத் துணியைக் கொண்டு முகம் துடைத்தபின்  மெதுவாகக் கண் விழித்தவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தவனுக்கு, அவள் தாய்மை அடைந்திருக்கிறாள் என்ற சர்க்கரை செய்தி கிட்ட,  மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனான் ஸ்ரீயின் மன்னவன்.


உடனே அச்செய்தியை ஸ்ரீயின் தாய் தந்தையரிடம் சொன்னதோடு , தன் தாய் தந்தை மற்றும் தங்கை தமையனிடமும் பகிர்ந்து மகிழ்ந்து போனான். 


தாய்மை அடைந்திருப்பது அவள் என்றாலும் அவளையும் , பிறக்காத குழந்தையையும் மனதோடு அனுதினமும் சுமந்தது அவன் தான்.

கண்ணுக்குள்ளேயே வைத்து பொத்தி பொத்தி பார்த்துக் கொண்டான் ...

இந்நிலையில் அகல்யா,  பொன்னம்பலம் மற்றும் சுந்தராம்பாள் ஊர் திரும்பினர்.

வீரா பயந்தது போல் இல்லாமல்,  அகல்யா ஸ்ரீயிடம் இயல்பாக நடந்து கொள்ள முயன்றார் ..

தேவையில்லாமல்  மருமகளை குற்றம் சொன்னதால் தான், மகளுக்கு கருக்கலைப்பு ஏற்பட்டதோ என்ற குற்ற உணர்வில் அவர் தவிப்பது போல் வீராவுக்கு தோன்றியது.

மற்றபடி தாய் மகன் உறவு கூட நன்றாகவே இருந்தது ....


ஆறு மாதம் கடந்த நிலையில்,  


பிரபாவுக்கு சிங்கப்பூரில் பெண் குழந்தை பிறந்தது.

ஓரிரு வாரங்களுக்கு பிறகு, 

அன்பு மீண்டும் கருத்தரித்த செய்தியும் கிட்ட,  குற்ற உணர்விலிருந்து வெளியேறி அகல்யா இயல்பு நிலைக்குத் திரும்பினார். வீராவின் வீட்டில் மீண்டும் கலகலப்பு குடியேறியது.


இந்நிலையில் ஸ்ரீக்கு சீமந்தம் கோலாகலமாக நடத்தப்பட்டது.


வீராவுக்கு இணையாக அம்மையப்பனும் தன் மகளுக்கு வைரக்கற்கள் மற்றும் மாணிக்க கற்கள் பதித்த வளையல்களை பூட்டி மகிழ்ந்தார் .


சீமந்தம் முடிந்த கையோடு ,  மகளை மதுரைக்கு அழைத்துச் செல்ல சுசீலா  வீராவிடம் கேட்க எடுத்த எடுப்பில் மறுத்து விட்டான் ஸ்ரீயின் மணாளன். 

மருமகனின் பிடிவாதத்திற்கு தற்போது அம்மையப்பன் சற்று பழகி இருந்ததால்,  பதில் பேசாமல் வாழ்த்தி விட்டு தன் மனைவி மற்றும் மகனோடு மதுரைக்கு பயணம் ஆனார்.

ஸ்ரீ மற்றும் வீரா பயந்தது போல்,  ஸ்ரீ தாய்மை அடைந்ததற்கு பிறகு,  அவளை ஆட்கொண்டிருக்கும் நோய் அவ்வப்போது தலை தூக்கினாலும்,  பெரும் பாதிப்பு ஏதும் இல்லாததால்,   அந்தந்த நேர வலிகளை அப்படியே பொறுத்துக் கொண்டு,  நாட்களைக் கடத்தினாள் ஸ்ரீ. 

ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தான் வீரா . தன்னவளை ஆட்கொண்டிருக்கும் நோயைப் பற்றி தன் தமையனைத் தாண்டி வேறு யாரிடமும் அவன் பகிரவே இல்லை.

பகிர விரும்பவும் இல்லை  ....

ஸ்ரீக்கு தலைவலி கால் வலி வரும்  போதெல்லாம்,  தாயிடம் ஏதேதோ வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்து விடுவான் ....

ஸ்ரீயிடமும் சொல்லக்கூடாது என்றே அறிவுறுத்தி இருந்தான் .....

பிள்ளையை சுமந்து கொண்டிருக்கும் போது சில நேரங்களில் அவள் அனுபவிக்கும் வலி அதிகம் என்றாலும் கணவனின் அன்பும், அரவணைப்பும் , காதலும் , கவனிப்பும், அதை மட்டுப்படுத்தும் மருந்தாகி போக, மன்னவனை தேடி மடி சாய்ந்தாள் மங்கை .

இப்படியாக நாட்கள் அழகாக கழிய, ஒரு சுபயோக சுப தினத்தில், ஸ்ரீ வீரா தம்பதியருக்கு,  அழகான ஆண் குழந்தை பிறந்தது.

வீராவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போக,  அவனை விட அதிகம் மகிழ்ந்து போனாள் ஸ்ரீ. 

வாழ்க்கையே முடிந்துவிட்டது  என்று நம்பிக்கை இழந்து நின்ற நிலையில், தன்னை கைக்குழந்தையாய் பேணிக் காத்து, கரை சேர்த்து,   இன்று குழந்தையை பெற்றெடுக்கும் போதும் உறுதுணையாய் உடன் நின்ற கணவனைக் கண்டு கண் கலங்கி போனாள் ஸ்ரீ.


ஸ்ரீராமம் வருவார்கள் ....

Dear friends,

இன்னும் ஒரு மணி நேரத்துல epilogue அப்லோட் பண்ணிடுவேன் பா ...

Thanks for your cooperation.


With love

Priya Jagannathan

































 












































 










  






 














 


































 





Comments

  1. awesome as always 💕💕💕💕💕💕💕

    ReplyDelete
  2. Wow. Superb sis. Unexpected twist Rana death. Sri and Ram happy annachi... Ellam nalla padiya mudichiteenga. Very very happy to read the end, but orey varutham story mudinjuduchey Inimel varathu la. Naanga inum konjam months wait pananum for ur next story.

    ReplyDelete
  3. Meanwhile take care of your health. Nalla rest edunga. Don't strain too much. Intha story la Sripriya va naan ungala than nenachikiten. U and Anna Sri and veera couple.

    ReplyDelete
  4. I feel for rana sisy, enaku lite tears line vanthuduchi, but ok atlast he accept the true nd realized his mistakes, and mansi kuda last ah oru varthayathu pesirukalam....

    ReplyDelete

Post a Comment