ஸ்ரீராமம்-136

 


அத்தியாயம் 136


"யா ... டெல் மீ திலக் ..." என வீரா சகஜமாக பேச்சை தொடங்க,


"நான் உங்க வைஃப் வொர்க் பண்ணின i-glob கம்பெனியோட ஒன் ஆப் த  டைரக்டர் .... உங்க வைஃப் ஸ்ரீப்ரியா நல்லா இருக்காங்களா ...."   என்றான் திலக் எடுத்த எடுப்பில்.


திலக்கின் பதவி மற்றும் அவன் தன் மனைவியைப் பற்றி விசாரித்ததெல்லாம் வித்தியாசமாகப்பட,


"எஸ்...........  ஷீ இஸ் டூயிங் குட் ....  ஆனா ஏன் திடீர்னு இப்படி ஒரு கேள்வி ..." என்றான் வீரா சந்தேகமாய்....


"அது வந்து ....  லாஸ்ட் ஃப்ரைடே உங்க வைஃப் ரிசைன் பண்ணிட்டாங்க ..... அவங்க கூட ஒர்க்  பண்ணின ஒரு ஸ்டாஃப் ஓட கல்யாணம் நேத்து சிவகங்கைல நடந்தது .... அதுக்கு அவங்க மதுரையிலிருந்து வரேன்னு சொல்லி இருந்தாங்களாம்...  ஆனா கடைசி வரை அவங்க  கல்யாணத்துக்கே வரல.... அவங்க மொபைலும் நேத்துல இருந்து  சுவிட்ச்டு ஆஃப்னு வருது .... அதான் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்னு ...." 


திலக் முடிப்பதற்கு முன்பாகவே அதிர்ச்சியில் உறைந்து போனான் வீரா .


கயலின் திருமணத்திற்காக மதுரைக்கு பயணப்பட போவதை மட்டும் அவனுக்கு   ஸ்ரீ குரல் செய்தியாய் அனுப்பி இருந்தாள்.


 மற்றபடி பணிக்கு முழுக்குப் போட்டதை அவன் வந்ததும், நேரடியாக காரண காரியத்தோடு சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணி விட்டு விட்டதால் ,  திலக் சொன்ன அந்த செய்தி அவனுக்கு அதிர்ச்சியை கொடுக்க, சிந்தனையில் மூழ்கினான்.


தன்னவள் அவ்வளவு எளிதாக,  பணியை விடுபவள் அல்ல.


திங்கட் கிழமைக்குள் நான் நாடு திரும்பி  விடுவேன் என்று தெரிந்தும்  வெள்ளிக்கிழமை இரவே அவள் தன் பணியை அவசர அவசரமாக  ராஜினாமா செய்திருக்கிறாள் என்றால் , ஏதோ நடக்கக்கூடாது சம்பவம் அன்று  நடந்தேறி இருக்கிறது .....


அதன் விளைவாகத்தான், அப்படி ஒரு முடிவை அதிரடியாக  எடுத்திருக்கிறாள் என்பதை சரியாக அனுமதித்தவன்,  அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த வியாதியை தட்டி எழுப்பியதும் அதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணி,


"என் வைஃப் உங்க ஆபிஸ் வேலையை விட்டுட்டாங்கனு தெரிஞ்சும்,  அவங்க ஃபோனை  நீங்க எதுக்காக ட்ராக் பண்றீங்க ....  கூட ஒர்க் பண்ணின ஸ்டாப்போட கல்யாணத்த அட்டென்ட் பண்றதும் பண்ணாம போறதும் அவங்களோட பர்சனல் சாய்ஸ்....  அத பத்தி நீங்க எதுக்கு போன் பண்ணி இப்ப விசாரிக்கிறீங்க .... நீங்க பேசுறது எதுவுமே சரி இல்லயே ....  என்ன பிரச்சனைன்னு தெளிவா சொல்லுங்க..."   என்றான் வீரா பெரும் காட்டத்தோடு.


நேரடியாகவே வீரா விஷயத்திற்கு வந்ததை  கண்டு  அவன் புத்திசாலித்தனத்தை  மனதிற்குள் மெச்சியப்படி திலக் , ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு,  ராணாவின் கடந்த கால காதல் வாழ்க்கையில் இருந்து தொடங்கி, கடந்த   வெள்ளிக்கிழமை காலை தன் வீட்டுப் பகுதியில் சங்கிலிப் பறிப்பு நடந்ததைப் பற்றி ஸ்ரீ புகார் அளித்தது வரை,  அவன் அறிந்திருந்த அனைத்தையும்  தெளிவாகச் சொல்லி முடித்தான். 


கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு கோபம், எரிமலை போல் உள்ளுக்குள் குமுற 


"ராணாவோட செத்து போன லவ்வர் மாதிரியே என் வைஃப் ஸ்ரீ இருக்கான்னு நீங்க சொல்றதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு ....  நீங்க  சொன்ன கட்டு கதைல எனக்கு நம்பிக்கை இல்ல.... ஆனா அவன்  என் வைஃப் கிட்ட ஏதோ  மிஸ் பிஹேவ்  பண்ணியிருக்கான்னு மட்டும்,  உங்க பேச்சிலிருந்து  புரியுது ....  அப்படி மட்டும் அவன்  செஞ்சு இருந்தான்னு கன்ஃபார்ம் ஆச்சு,  அவனை அடிச்சே கொன்னுடுவேன் .... மைண்ட் இட் "


"ப்ளீஸ்... ப்ளீஸ் ... நான் சொல்ல வர்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க ...."


"சரி ... இப்ப எதுக்காக போன் பண்ணி இருக்கீங்க.... அதை சொல்லுங்க ........" என்றான் வீரா பெருங்கோபதோடு.


-----------------------------------


ஞாயிறு காலையில் நடந்தவைகள் ....


ஸ்ரீயின் வரவுக்காக அதிகாலையில் இருந்தே வழிமேல் விழி வைத்து சிவகங்கையில் காத்திருந்தான் ராணா.


மதுரையில் இருந்து சிவகங்கையை அடையும் அனைத்து வழிகளிலும், அதற்கான ஏற்பாட்டினை செய்துவிட்டு, பிரதான வழியில்,  மட்டும் அவனும் அவன் ஏற்பாடு செய்திருந்த  மருத்துவக் குழுவும்,  காத்திருந்தார்கள் ...


திருமண மண்டபத்தைச் சுற்றியும்  கூட அவளது வரவை அறிந்து, தெரியப்படுத்துவதற்காக ஆட்களை ஏற்பாடு செய்திருந்தான் ...


அவளை எவ்வகையிலும் தவற விட்டு விடக்கூடாது என்பதில்,  குறியாக இருந்தவனுக்கு,  நேரம் செல்ல செல்ல, அவள் வரவில்லை என்பது தெரிய வர, பொறுத்து பொறுத்துப் பார்த்தவன் வேறு வழி இல்லாமல்,  வேறொரு எண்ணில் இருந்து அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுக்க, அதுவோ முழுவதுமாய் அணைக்கப்பட்டு இருப்பது தெரிய வர, திணறிப் போனான்.


அவனது மன அழுத்தம் கூடிக் கொண்டே சென்றது.


அவள் மதுரையில் இருந்து புறப்படவேயில்லை என்பதை,  கடைசியாக அவளது அலைபேசி காட்டிய சமிக்கைகள் சொல்ல,  ஒருவேளை அலைபேசியை மதுரையில் தவற விட்டு  விட்டு மீண்டும் கோயம்புத்தூருக்கே சென்று விட்டாளோ என்று எண்ணி,  அவளது வீட்டை நோட்டமிட ஆள் அனுப்பியவனுக்கு,  அது முழுவதுமாய் மூடப்பட்டிருப்பது தெரிய வர குழம்பிப் போனான். 


ஒருவேளை தன்னுடைய திட்டத்தை அறிந்து கொண்டு தான் இப்படி தலைமறைவாகி விட்டாளோ.....


அவள் தன் அலைபேசியை அணைத்து வைக்காமல் இருந்திருந்தாலாவது அவள் இருக்கும் இடத்தை தொழில் நுட்ப உதவியோடு கண்டறிந்து அவளை   அள்ளிக் கொண்டிருக்கலாம் ...இப்போது அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டதே ...


இனி அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவே அமையாதோ ....


ஒரே ஒரு கணம் உணர்ச்சிவசப்பட்டதால், பல வருட காத்திருப்பும் பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே ....


இனி அவள் இல்லாமல்  நான் ஏது ....


அவள் இல்லாத வாழ்க்கையை,  நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையே இறைவா ....


 கவலை, , எரிச்சல், பதட்டம் , விரக்தி , ஆத்திரம்  மனச்சோர்வு ஆகியவை வகைத்தொகை இல்லாமல் கூட, சமீப காலமாக மன அழுத்தத்திற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை அவன் எடுத்துக் கொள்ளாததால்,    மன உளைச்சல் , விஷம் போல்  மள மளவென்று ஏற, தலையே வெடித்து விடும் அளவிற்கு தலைவலி  ஏற்பட ,  உடன் கை கால்கள் நடுங்க,  முகம் எங்கும் முத்துக்களாய் வியர்வைத் துளிகள் தோன்ற கண் நரம்புகள் புடைக்க , பார்வைகள் மங்க, மன அழுத்த பக்கவாதம் ஏற்பட்டு அப்படியே மயங்கி சரிந்தான் ராணா.


மயங்கி விழுந்தவனை,  அவன் உடன் வந்திருந்த இரு ஜூனியர்  மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு முதலுதவி செய்து  காப்பாற்றியதோடு,  ஆம்புலன்ஸில்  கோயம்புத்தூருக்கு அழைத்து வந்து, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். 


-------------------------



"சனிக்கிழமை சாயங்காலமே   சிவகங்கையில நடந்த அந்த  மேரேஜ்  ரிசப்ஷன அட்டென்ட் பண்ணிட்டு உடனே கிளம்புறதா சொன்ன ராணா,  கிளம்பாம  மறுநாளும் அதே கல்யாண மண்டபத்துக்கு போற வழில தன் கார் ஓட போய் நின்னு இருக்கான் .... கூடவே ஒரு ஆம்புலன்ஸ் ... அதுல ரெண்டு மூணு டாக்டர்ஸ் இருந்திருக்காங்க .... 

ரொம்ப நேரமாவே அங்கே இருந்திருக்காங்க...  ஒரு கட்டத்துல ராணா மயங்கி விழுந்ததும் அவனை ஆம்புலன்ஸ்ல போட்டுக்கிட்டு கோயம்புத்தூருக்கு வந்து இங்க ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மென்ட் கொடுத்து இருக்காங்க ....


அப்ப எதேச்சையா  ராணாவோட பர்சனல் செகரட்டரி மோனிஷா,  அவனுக்கு  போன் பண்ணியிருக்கா .... அப்ப அந்த ஃபோனை அட்டென்ட் பண்ணின அந்த டாக்டர்ஸ் தான் அவனுக்கு  ஸ்ட்ரெஸ் ஸ்ட்ரோக் வந்த  விஷயத்தை சொல்லி இருக்காங்க.....  மத்தபடி  வேற எந்த கேள்விக்கும் அவங்க சரியாவே பதில் சொல்லலையாம்  ...


உடனே மோனிஷா,  ராணாவோட வைஃப்க்கும்  , எனக்கும் போன் பண்ணி விஷயத்தை  சொன்னாங்க ...


 இப்ப நான் சிங்கப்பூர்ல இருக்கேன் .... என் வைஃப்க்கு லங்க் கேன்சர்... அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் போய்கிட்டு இருக்கு .... அதனால என்னால உடனே இந்தியா வர முடியாத நிலைமைங்கிறதால உடனே ஒரு பிரைவேட் டிடெக்டிவ்வ வச்சு,  ராணா எங்கெல்லாம் போயிருக்கான்னு அவனோட  மொபைல் சிக்னல் வச்சு  கண்டுபிடிச்சோம் ....


அவனோட மொபைல் சிக்னல், சிவகங்கையில  ஒரு குறிப்பிட்ட இடத்துல ரொம்ப நேரம் இருந்தது அப்பதான் தெரிஞ்சது... 

அங்க போய் என்கொயரி பண்ணதுல தான், இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வந்துச்சு ....


அவன்  மொபைல்ல இருந்து கடைசியா உங்க வைஃப் ஸ்ரீப்ரியாவை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணினது அப்பதான் எங்களுக்கு தெரிய வந்தது ....


 அவன் உங்க வைஃப் மேல ரொம்ப அப்சஸ்ட்டா இருக்கான்னு  எனக்கு தெரியும் ...


அதோட இப்ப வரைக்கும் உங்க வைஃப் ஸ்ரீப்ரியாவோட ஃபோன்  ஸ்விட்ச்டு ஆஃப்னு வந்ததால  அவங்களுக்கு  ஏதாவது பிரச்சனையானு தெரிஞ்சிக்க தான் போன் பண்ணேன்.... அதோட"


என்றவனின் பேச்சை இடைவெட்டி 


"என்னென்னமோ ஓளரீங்க  ..... என்னங்க இதெல்லாம் ...." வீரா எகுற 


"சார் ப்ளீஸ் ....முழுசா சொல்ல விடுங்க....  இப்ப நான் போன் பண்ணினது இன்னொரு முக்கியமான விஷயத்துக்காகவும் தான் ..... ராணாவுக்கு இன்னும் கான்ஷியஸ் வரல ... அவனுக்கு கான்ஷியஸ் வர  ஒரு வாரமாவது ஆகும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க , அப்படி அவனுக்கு கான்ஷியஸ் வந்துடுச்சின்னா அடுத்த நிமிஷமே, உங்க வைஃப்ப தான் தேடுவான் ...

அதனால கொஞ்ச நாளைக்கு,  அவங்களோட ஃபோன் சுவிட்சுடு ஆஃபலயே இருந்தா நல்லதுன்னு தோணுது ...


அதோட உங்க வைஃப் நம்பர் கிடைக்கலன்னதும்,  நிச்சயமா  உங்களை காண்டாக்ட் பண்ணவும் தயங்கமாட்டானு தெரிஞ்சு தான்,  ஆபீஸ் ரெக்கார்டுல உங்க ஃபோன் நம்பர மாத்தி வச்சிருக்கேன் ....

சப்போஸ்,  இது எதுவுமே வொர்க் அவுட் ஆகலன்ற பட்சத்துல உங்க வீட்டுக்கே அவன்  வந்தாலும் வருவான்.... சோ  பீ கேர்ஃபுல் ...."


"என்ன...  பூச்சாண்டி காட்டறீங்களா....  அதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் இல்ல ...

  

 அவன் எதுக்காக  எங்களை தேடி வரணும் ...

அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா , என் வைஃப தேடுவான் ....

இப்ப அவன் எங்க இருக்கான்னு சொல்லுங்க ... நானே  அவனை தேடி போய் அடிச்சு கொன்னுடறேன்..... "


"சார் சார் ப்ளீஸ் ...  புரிஞ்சுக்கோங்க ... அவன் நம்மள மாதிரி நார்மல் பர்சன் கிடையாது....

எவ்ளோ எடுத்துச் சொன்னாலும் அவனுக்கு புரியவும் புரியாது ... அவன் ஒரு மன நோயாளி சார் ...

அவனால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது ...... நீங்க சேஃப்பா இருக்கணுங்கிற  எண்ணத்துல தான் போன் பண்ணி சொன்னேன். ப்ளீஸ் இந்த பிரச்சனையை இதோட விட்டுடுங்க .... பெரிசாக்காதிங்க ....

எனக்கு அவனையும் தெரியும் .... உங்க வைஃப்  ஸ்ரீப்ரியாவையும் தெரியும் .... அவங்க ரொம்ப நல்லவங்க ... தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிறவங்க .... அவங்க நல்லபடியா வாழணும்னு ஆசைப்படறேன் ....

எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள இந்தியா திரும்பிடுவேன் ....  அதுக்குள்ள ஏதாவது பிரச்சனை பண்ணிடுவானோனு பயமா இருக்கு .... இது என்னோட நம்பர் ப்ளீஸ் நோட் பண்ணிக்குங்க....  ஏதாவதுன்னா இதுல  காண்டாக்ட்  பண்ணுங்க .... "


வீராவிற்கு ராணாவின் மீது கொலை வெறி வகைத்தொகை இல்லாமல்  ஏறியது ... தன்னவள் தற்போது  தணல் மேல் இருப்பது போல் தவித்துக் கொண்டிருப்பதற்கு அந்தக் கயவன்  அல்லவா காரணம் என அவன் மனம் பொங்கியது ....


என்றாலும் வழக்கம் போல்,  பிரச்சனையின் சாராம்சத்தை சீர்தூக்கி பார்த்து,  முடிவெடுக்கும் விவேகமும் தலை தூக்க, ஏற்கனவே அவன் மருத்துவமனையில் இருக்கின்றான்.  இந்நிலையில்  அவனைத் தேடிச் சென்று  வீரத்தை காட்டுவதை விட,  என்னவளை காக்க வேண்டியது தான் தனது  தலையாயக் கடமை...


இப்போதைக்கு அவன் விஷயத்தை கிடப்பில் போட்டுவிட்டு எதிர்காலத்தில் சிக்கும் போது அவனுக்கு முடிவுரை எழுதுவதே சாணக்கியத்தனம் ...


என தனக்குள்ளேயே அவன் சூளுரைத்துக் கொண்டிருக்கும் போதே,


"சார் ப்ளீஸ் ... என்னை தப்பா எடுத்துக்காதீங்க... .... அவன் ஒரு பேஷன்ட் அதை மட்டும் மனசுல வச்சுக்குங்க ..."


என கெஞ்சியவனிடம் , மேற்கொண்டு தன் கோபத்தை காட்ட விரும்பாமல் அழைப்பை துண்டித்தவன் , வழக்கம் போல் நடக்கவிருந்த பெரும் பாதிப்பிலிருந்து  இருந்து காக்கவே,  கடவுள் என்னவளுக்கு  இந்த சிறு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார் போலும் ... என்ற நேர்மறை சிந்தனையோடு கேரள பயணத்திற்கான ஏற்பாட்டில் இறங்கினான்.


வாத நோய் மருத்துவர் பகிர்ந்திருந்த கேரளா  ஆயுர்வேத மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்து, தன் மனைவியின் உடல்நிலை குறித்த விவரங்களை தெளிவாகச் சொல்லி,  மருத்துவரை சந்திக்க அவன் முன் அனுமதி கேட்க, 


"பைஃப்ரோமயாலஜி மாதிரியான நியூரோ டிஸ்ஆர்டர்க்கு மினிமம் ரெண்டிலிருந்து மூணு வாரம்  இங்க தங்கி  ட்ரீட்மென்ட் எடுத்தா தான் அதோட  ட்ரிக்கரிங் பாயிண்ட் எதுன்னு  கண்டுபிடிக்க முடியும் ... அதோட அவங்களுக்கான பேலன்ஸ்டு  டயட்  ,ஆயுர்வேதிக்  மெடிசன்ஸ் எல்லாம் எங்களால  கஸ்டமைஸ் பண்ண முடியும் ....  "


என்றார் அந்த இளநிலை மருத்துவர். 


"நோ ப்ராப்ளம் ... நாங்க 3 வீக்ஸ்  அங்க ஸ்டே பண்ற மாதிரியே பிரிப்பர்டா வரோம்...."


"பேஷன்ட் உங்க வைஃப் தானே .... அவங்க கூட  வேற யார் வராங்க   ....."


"நானும் என் வைஃப்  மட்டும் தான் வரோம்  ..."


"ம்ம்ம்ம்ம்ம்ம்......  உங்க வீட்டு பெ.... பெரியவங்க யாரையாவது கூட்டிட்டு வர முடியுமா .... ஏன்னா நீங்க ரெண்டு பேரும் நியூ....  நியூலி மேரிட்.... அதனால தான்..... " 


சரியாக  வார்த்தைகள் கிடைக்காமல் அவர்  தடுமாற,


"நீங்க சொல்ல வர்றது புரியுது .... நான் தான் அவளை விட பெரியவன் ... நான் அவளை அருமையா பாத்துப்பேன்.... எனக்கு அவ நல்லபடியா குணமாகணும் அது தான் தேவை..... ..."


"தென் நோ ப்ராப்ளம் ....   நான் ஒரு பேம்ப்லட் ஷேர் பண்றேன்.... அதுல இருக்கிற ரூல்ஸ்  எல்லாத்தை  படிச்சு பார்த்துட்டு  அப்புறம் நீங்க  அட்வான்ஸ் பே பண்ணுங்க  ....  உங்களுக்கான காட்டேஜ் உடனே  அலாட் ஆயிடும் .... நீங்க வரும் போது தங்கிக்கு வசதியா இருக்கும் ..."

   

என்றவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவர் அனுப்பிய சிற்றறிக்கையை படிக்க ஆரம்பித்தான்.


 ஆசிரமத்தில் தங்கும் நோயாளிகள் , மருத்துவர்களின் அறிவுரைப்படி காலை 6:00 மணிக்கு நடைபெறும் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும்.


எண்ணெய்  மற்றும் இனிப்புகள் கலக்காத  சரிவிகித  சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.  தேநீர் , காபி வழங்கப்பட மாட்டாது .... உடன் வந்திருப்பவரும் இதே உணவு முறையை  தான் பின்பற்றியாக வேண்டும்.  புகைப்பிடித்தல் மது அருந்துவதற்கும்  முற்றிலும் தடை ...  


நோயாளிகள்  மாலை நடை பயிற்சி மேற்கொண்டே ஆக வேண்டும்.


இரவு 8 மணிக்கு எல்லாம் உறங்கச் சென்று விட வேண்டும்.


 ஆசிரமத்தில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளதால்,  நோயாளிகள்  இணைய இணைப்பை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை,  மற்றும் மாலையில் 6 முதல் 8 வரை  மட்டுமே பயன்படுத்த முடியும்.   உடன் வந்திருப்பவர்களுக்கு தேவை என்னும் பட்சத்தில்  அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


மற்றபடி ஆயுர்வேத மாத்திரை மருந்துகள்,  எண்ணெய் மசாஜ்கள்  நோயாளிகளுக்கு ஏற்றவாறு பரிந்துரைக்கப்படும் ....


 வெளி உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள்  ஆசிரமத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது .... 

 

 அதனை படிக்கும் போது  கடந்த 30 ஆண்டுகளாக, மனிதனின்  உறக்கத்திலிருந்து உணவு முறை  வரை ஏற்பட்டிருக்கும் மாற்றமே,  கர்ப்பப்பை பிரச்சனை,  ஆண்மை குறைவு, குழந்தையின்மை , மூட்டு வலி,  மாரடைப்பு,  சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்பட காரணமாக உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்திருந்தது நினைவுக்கு வர, உணவு, உறக்கம் , உடற்பயிற்சி  ஆகியவற்றில் ஒழுக்கத்தை கடைபிடித்தால் தான், பலன் கிடைக்கும்  என்பதால், ஆயுர்வேத மருத்துவத்தில் இத்துணை கெடுபிடிகளை கடைப்பிடிக்கிறார்கள் போலும் என்று எண்ணிக் கொண்டவன்,  உடனே முன் பணம் செலுத்தி தனது வரவினை உறுதி செய்து விட்டு, தன் அலுவலக உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு தன் மனைவியின் உடல்நிலை குறித்த தகவல்களை பகிர்ந்து  ஒரு மாத விடுப்பு எடுக்கப் போவதாக தெரிவித்தான். 


அவன் மிகவும் திறமையானவன் என்பதால் உடனே அவனது உயர் அதிகாரி வெங்கட் ,


"நீங்க லீவு எடுக்க வேண்டிய அவசியமில்லை AVR .... மார்னிங் 4 ஹவர்ஸ், ஆப்டர்நூன் ஃபோர் ஹவர்ஸ் ஆன்லைன்ல கனெக்ட் பண்ணிக்கோங்க .... மத்த கால்குலேஷன்ஸ உங்களுக்கு எப்ப முடியுதோ அப்ப முடிச்சு அனுப்பிடுங்க ....."


" கிளையன்ட் மீட்டிங் வெங்கட் ...???"


"அத பத்தி கவலைப்படாதீங்க ...  நான் டீல் பண்ணிக்கறேன் ....  டாக்குமெண்ட்ஸ் மட்டும் நீங்க ப்ரிப்பேர் பண்ணி அனுப்பினா போதும் டேக் கேர் ஆஃப் யுவர் வைஃப் ... ஆல் தி பெஸ்ட்... ..." என வாழ்த்தி முடித்தார். 


உடனே மறுநாள் காலையில் விமான பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாட்டினை துரிதமாக செய்து முடித்தவன் , தன்னவளை பார்க்க அவளது அறைக்குச் சென்றான்.


அப்பொழுது தான் கை கால்களை லேசாக  அசைத்தபடி,  கண்களை கசக்கி கொண்டே அவள் எழுந்தமர,  


"இப்ப வலி எப்படி இருக்கு ... குறைஞ்சிருக்கா " என்றான் வாஞ்சையாய் .


"ம்ம்ம்ம்ம்... இப்ப எவ்வளவோ பரவாயில்ல....  பெயின் கில்லரால  75% குறைஞ்சிருக்கு ..."  என்றவள் அரை கண அமைதிக்குப் பிறகு 


" நான் ஜாப ரி.... ரிசைன் பண்ணிட்டேன் ...."  என்றாள் தடுமாறி. 


" எனி இஷூஸ்..."   என்றான் அனைத்தையும் தெரிந்து கொண்டே அவளை ஆழம் பார்க்க.


ஆனால்  அழுத்தக்காரியோ


" உடம்பு சரியில்ல .... வேலைய விடணும்னு தோணுச்சு விட்டுட்டேன் ...." 

என்றாள் பார்வையை எங்கோ பதித்து.


கணவன் வந்ததும்,  அனைத்தையும் கொட்ட வேண்டும் என்று காத்திருந்தவளுக்கு   இடையில் யு டர்ன்  எடுத்தது போல்,  கனவிலும் நினைத்திராத நோய்  ஆட்கொள்ள, மற்றதை  மறந்து போனாள்.


தற்போது கூட  ராணா பற்றிய சிந்தனைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு,  கணவனின் எதிர்காலம் குறித்த சிந்தனையே முன்னிலை வகித்ததால், அதை எண்ணி  அவள் அடக்கி வாசிக்க,  ஏற்கனவே திலக் மூலம் செய்தி அறிந்திருந்தாலும், தன்னவளின் மனம் அறிந்தவன் என்பதால்  காரணத்தை தோண்டித் துருவ மனம் இல்லாமல் 


"இட்ஸ் ஓகே .... ஏற்கனவே டிசைட் பண்ணினது தானே ..." என்றான் இயல்பாய். 


முதன்முறையாக மாபெரும் பொய் உரைப்பதால், முகபாவத்தை அதற்கேற்றார் போல் மாற்றிக்கொள்ள தெரியாமல் அவள் தவிக்க,  அதனை உள்வாங்கிக் கொண்டே 


"நாளைக்கு காலையில  ஆயுர்வேதிக் டிரீட்மென்ட்காக நாம கேரளாவுக்கு போறோம்... .....  "


என்றான் அவளது விழிகளுக்குள் நோக்கி.

அவளது கண்கள் வெகு லேசாக பனிக்க ,


"இப்படி ஒரு வித்தியாசமான வியாதிக்கு அங்க மட்டும் மருந்து இருக்குமா என்ன எனக்கு என்னமோ நம்பிக்கையே இல்ல...." 


விரக்தியாய் வார்த்தைகள் அவளிடமிருந்து வந்து விழ, அவனுள் கோபம் துளிர்க்க, வழக்கம் போல் அடக்கிக் கொண்டான். 


ஒரு வாரம் தலைவலி காய்ச்சலுக்கே, உடலும் மனமும் சோர்ந்து போகும் நிலையில்,  இந்தப் பிறவி முழுவதும் வலி தான்  வாழ்க்கை என்னும் பட்சத்தில், அதனை அனுபவித்துக் கொண்டிருப்பவள் அவநம்பிக்கையோடு தான் பேசுவாள்  என்ற நிதர்சனத்தை கண நேரத்தில் உணர்ந்தவன் 


"என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல ...." என்றான் கமரியக் குரலில் .


தலை குனிந்து கொண்டவள் 


"அப்ப டிவோர்ஸ்....."   என்றாள் தழுதழுத்த குரலில்.


தணிந்திருந்த கோபம் மீண்டும்  தலைதூக்க, வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டவன்,


"ட்ரை பண்ணி பார்ப்போம் ... ட்ரீட்மென்ட் வொர்க் அவுட் ஆச்சுன்னா ஓகே .... இல்லன்னா டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணலாம் .... "


அங்கு மயான அமைதி நிலவ,  ஓரிரு கணத்திற்கு பிறகு, 


"ஒன்னு மட்டும் ஞாபகத்துல வச்சுக்க.... நீதான் டிவோர்ஸ் கேக்கற... நான் கேட்கல ... எனக்கு கடைசி வரைக்கும் உன் கூட சேர்ந்து வாழணுங்குற ஆசை இருக்கு ..." என்றான் வெளிப்படையாய்.


"ம்க்கும்.... வாழலாம் ...ஆனா சேர்ந்து வாழ முடியாது .... பக்கத்துல கூட வர முடியாது.... பாத்துக்கிட்டே தான் இருக்க முடியும் ... இப்படி ஒரு வாழ்க்கை உங்களுக்கு தேவையா ...."


 இப்படி தர்க்கம் செய்வாள் என்று அஞ்சி தான்,  முதன்முறை அவள் விவாகரத்து கேட்கும் பொழுதே  மனதில் இருப்பதை  சொல்லாமல் விட்டிருந்தான் ....


தற்போது இரண்டாவது முறை கேட்டதும்  வேறு வழி இல்லாமல் அவன் தன் மனதில் இருப்பதை கொட்ட, எதிர்பார்த்தது போலவே அவள் எதிர்வாதம் செய்ய,


"கேரளால உனக்கு  3 வீக்ஸ்  டிரீட்மென்ட் நடக்கப்போகுது ...  அதுவரைக்கும் இந்த விஷயத்தை பத்தி   பேச வேண்டாமே .... "


"சரி... இன்னியிருந்து சரியா 21 நாள் வரைக்கும்,  நான் டிவோர்ஸ் பத்தி பேசமாட்டேன் .... ஆனா 22வது நாள் நிச்சயம் பேசுவேன்..."

என்றாள் வைராக்கியத்தோடு . அதற்குள் அவளது வைராக்கியம் தவிடு பொடியாக போவது தெரியாமல். 


ஒரு வழியாக மனையாளின் சம்மதத்தை வாங்கியவன்,  பயணத்திற்கான  ஏற்பாடுகளை மளமளவென்று செய்து முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பியிருந்த அம்மையப்பனிடம் ,


"மாமா,  நாளன்னைக்கு  கேரளாவுல என் ஆபீஸ் கலீக் ஒருத்தருக்கு  கல்யாணம் .... முதல்ல போக வேணாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்... ஆனா அவன் ஃபோன் பண்ணி வந்து தான் ஆகணும்னு ரொம்ப ஃபோர்ஸ் பண்ணிட்டான்  ... அதான் நானும் ஸ்ரீயும் நாளைக்கு காலையில கேரளாவுக்கு கெளம்புறோம் ...." 

என்றான் பொய்யை கோர்வையாய் கோர்த்து. 


"புதன்கிழமை காலையில தான் சுசிலா கேரளால இருந்து வரா.... ஆனா அன்னைக்கு தான் அங்க கல்யாணம்னு சொல்றீக .... ம்ம்ம்ம்... சரி....  நல்லபடியா போயிட்டு வாங்க..."  என்றார் அம்மையப்பன் இயல்பாக. 


ஏற்கனவே ஒரு முறை திடீரென்று இப்படி காட்சி கொடுத்து, அவரது மகளை அழைத்துக் கொண்டு அவன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட  முன் கதை சுருக்கம் இருந்ததால்,  இதையும் அவர் இயல்பாகவே எடுத்துக்கொண்டு சம்மதம் தெரிவிக்க, மறுநாள் அதிகாலையில் அவள் கனத்த இதயத்தோடும்,  அவன் எதிர்பார்ப்போடும் கடவுளின் நாடான கேரளத்தை நோக்கி விமான பயணம் மேற்கொண்டனர். 


தாய் கைக்குழந்தையை பொத்தி பொத்தி பாதுகாப்பது போல் பயணம் முழுவதும், அவளை தன் கண்ணுக்குள்ளேயே வைத்து பார்த்துக் கொண்டான்.


எப்பொழுதுமே அவனது  முத்தம்,  அணைப்பு,  அவளது கரம் கோர்க்கும் பாங்கில் ஒருவித வேகமும் அழுத்தவும் இருக்கும் .... 


அந்த அழுத்தமே, அவனது காதலையும் மோகத்தையும்  வெகு அழகாக அவளுக்கு பறைசாற்றும் ...


ஆனால் இன்றோ ஒரு பட்டாம்பூச்சியை பற்றுவது போல் அவள் கரத்தை மெதுவாக பற்றியபடி , கண்களில் கனிவோடு அவளது மென் நடைக்கு இணையாக  மெதுவாக நடந்து கொண்டே அவன்  ஏதேதோ கதைத்தது  தாய்மையை பறைசாற்ற, உள்ளுக்குள் உருகி  போனாள் பெண். 


அவ்வப்போது  ஓரிரு நிகழ்வுகள் கடைசியாக மேற்கொண்ட  அவர்களது ஆஸ்திரேலியா பயணத்தை இருவருக்குமே நினைவு படுத்த,  அப்படி ஒரு மகிழ்ச்சியான பயணம் இனி வாழ்க்கையில் எப்பொழுது வருமோ என அவன் ஏங்க,  இனி வரவே வராது என  அவநம்பிக்கையோடு அவள்  நினைக்க, இப்படியாகவே பயணம் நிறைவு பெற்று,  கேரள மண்ணை அடைந்தனர்.


பாலக்காட்டை ஒட்டிய கிராமப் பகுதியில், 25 ஆண்டு கால பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில்  கிட்டத்தட்ட 100 ஏக்கரில்  அம்சமாக அமைந்திருந்தது அந்த ஆயுர்வேத ஆசிரமம்.  


அடர்ந்த அம்சமான மலைப் பகுதியை ஒட்டி , பரந்து விரிந்தோடும் ஆற்றுப் படுக்கையின் ஓரத்தில்,   செழித்த தென்னை மரங்களும் , பச்சை பசேல்  தோட்டங்களுமாய்  குடில்கள் போன்று ஆங்காங்கே தனித்தனியாக அமைந்திருந்த காட்டேஜ்களுக்கு மத்தியில்  கம்பீரமாக அந்த பிரம்மாண்ட ஆயுர்வேத மருத்துவமனை அமைந்திருந்தது. 


அவர்களது வரவு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததால்,  அனுமதிச்சடங்குகள் முடிந்ததுமே, மூத்த மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.


70 வயதை கடந்தவர் போல் காட்சியளித்தாலும், சுறுசுறுப்பான தேகமும்,  தீட்சண்யமான விழிகளும் அவரது அனுபவத்தையும் ஆரோக்கியத்தையும் அம்சமாய் பறைசாற்ற மென் புன்னகையோடே , ஸ்ரீயின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தையும் பொறுமையாக ஆராய்ந்து, அவளது இடது கரத்தை பற்றி நாடி பார்த்தவர்,  முதல் மூன்று விரல்களை அழுத்தியும் தளர்த்தியும் பிடித்துப் பார்த்து ஏதேதோ குறிப்புகளை தன் குறிப்பேட்டில் எழுதி முடித்துவிட்டு  ஸ்ரீயிடம் அவளது உடல்நிலை குறித்து மலையாளம் கலந்த தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடினார். 


அவளும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகளை  தெளிவாக  சொல்லி முடித்ததும்,  வீராவும் தன் மனதில் இருந்த கேள்விகளை முன் வைக்க 


"ஆயுர்வேதத்துல  எல்லா வியாதிகளுக்கும் மருந்து இருக்கு ...  ஒரு மனுஷனோட நாடில வாதம், பித்தம் , கபம்....  இது மூணும் சமமா இருந்தா அவனுக்கு  வியாதியே வராது .....   ஆனா அப்படி சமமா இருக்கிறது ரொம்ப கஷ்டம் ....  அத சமப்படுத்த தான் மருந்து மாத்திரைகளோட சில பத்தியங்களையும் கடைப்பிடிக்கணும் ....


சிலருக்கு முதல் ஒரு வாரத்துலயே மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிக்கும் .... சிலருக்கு ஒரு மண்டலம் போனா தான்,  வித்தியாசமே தெரிய ஆரம்பிக்கும் .... சிலருக்கு ஆறு மாசம் சாப்பிட்டா கூட வித்தியாசமே தெரியாது ... அவங்களுக்கு மாத்திரையே மாத்தி கொடுக்கணும் ... இந்த மாதிரி டிரையல் அண்ட் எரர் ஆயுர்வேதத்துல கொஞ்சம்  அதிகம் ....


உங்க வைஃப்க்கு வாத நாடில தான் பிரச்சனை இருக்கு ...  ஆனா மைல்டா தான் இருக்கு ....  கொடுக்கிற மருந்து மாத்திரைகளையும் சொல்ற பத்தியங்களையும் சரியா கடைபிடிச்சா, ரொம்ப நாள் வலி இல்லாம நல்லா இருக்கலாம் ....


அதுவும் இல்லாம இவங்க  வெஜிடேரியன் ,   பீட்சா பாஸ்தா கேக் சாக்லேட்ஸ்,  ஆயிலி ஃபுட்ஸ்னு  எதுவுமே சாப்பிட மாட்டாங்கன்னு சொல்றாங்க....ஹோட்டல்லயும் அதிகம் சாப்பிட மாட்டேன்னு சொல்றாங்க ....   சோ இவங்கள கியோர் பண்றது ரொம்ப ஈஸி ...." 


" தேங்க்ஸ்,  தேங்க்ஸ் எ லாட் டாக்டர் ...." 


வீரா பெரும் மகிழ்ச்சியில் அவரது கரம் பற்றி நன்றி  கூறியதுமே,  மருத்துவர் ஸ்ரீயை பார்த்து 


" நீங்க இப்ப ரிசப்ஷனுக்கு போங்க... அங்க ஒரு பார்ம் கொடுப்பாங்க, அதை வாங்கி   ஃபில் பண்ணிகிட்டே இருங்க.... நான் அதுக்குள்ள நாம பேசின எல்லாத்தையும் மெடிக்கல் ஹிஸ்டரியா கன்சாலிடேட் பண்ணி  இவர்கிட்ட காட்டி  கன்ஃபார்ம் பண்ணிக்கிறேன் ..." 

என சொல்லி அவளை நாசூக்காக வெளியேற்றிவிட்டு 


"உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்  ...." என்றார் வீராவை பார்த்து யோசனையோடு. 

 " சொல்லுங்க டாக்டர் ..." வீரா ஆர்வமாய் கேட்க 


"இந்த பைஃரோமயாலஜி டிஸ்ஆடர்ல,  ரொம்ப முக்கியமான சிம்டம் ப்ரெய்ன் ஃபாக்(Brain fog) , தட் மீன்ஸ் ஸ்பேஸிங் அவுட்னு (Spacing out) சொல்லுவாங்க ....  அத பத்தி உங்களுக்கு தெரியுமில்ல ...."


" தெரியாது டாக்டர் .... இப்ப தான் இதைக் கேள்விப்படறேன்... உங்கள ரெபர் பண்ணின அந்த டாக்டர் கூட இத பத்தி சொல்லல..."


"இந்த டிஸ்ஆடர் இருக்கிறவங்களுக்கு,  இந்த சிம்டம் இருக்க வாய்ப்புகள் அதிகம்  ஆனா, எந்த அளவுக்கு அவங்க டே டுடே லைஃபை பாதிக்கிறதுங்கறது தான் பெரிய விஷயமே ..... 


திடீர்னு கான்சென்ட்ரேஷன் சுத்தமா  போய்டும் .... ஒரு சாதாரண விஷயத்தை கூட அவங்களால கோ ஆர்டினேட் பண்ணி செய்ய முடியாது ... ஒரு படி மேல போய், தான் யாரு,  இது என்ன இடம்,  சுத்தி இருக்கிறவங்க யாருன்னு கூட மறந்து போயிடுவாங்க .... அப்படியே பொம்மை மாதிரி ஆயிடுவாங்க  .... யார் என்ன சொன்னாலும் அவங்களுக்கு புரியாது ....  ஆனா இதுல ஆறுதல் கூறிய விஷயம் என்னன்னா,  மேக்ஸிமம் ஹாஃப் அன் ஹவர்ல இருந்து ஒன் ஹவர்குள்ள போன ஞாபகம்  தானா திரும்பிடும்  ....  அதனால பயப்பட வேண்டிய அவசியம் இல்ல ....  சிலருக்கு  கடைசி வரைக்கும்  இந்த சிம்டமே வராமலே கூட போயிடலாம்  ....  அதனால தான் உங்க வைஃப்  இருக்கும் போது சொல்லி  தேவையில்லாம அவங்கள  கலவரப்படுத்த வேண்டாம்னு விட்டுட்டேன் ....  நீங்க மட்டும் இதை எப்பவுமே ஞாபகத்துல வச்சுக்கோங்க...... ........  "


கேட்டுக் கொண்டிருந்த வீரா அதிர்ச்சியில் திகைக்க ,   படிவத்தை நிரப்ப ஆதார் அட்டை தேவைப்பட்டதால்  வாங்க வந்தவளும் , மருத்துவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள்.


வலியோடு வாழ்க்கை போய்விடும் என்று எண்ணியிருந்தவளுக்கு  மறதியோடும் போராட வேண்டிய  நிலை வரப்போகிறது என்று அறிந்ததும்,  துடித்துப் போய்விட்டாள்.


துக்கம் தொண்டையை அடைக்க, மருத்துவர் அறையை ஒட்டி இருந்த தாழ்வாரத்தில் நின்றிருந்தவள்,  வந்த தடம்  தெரியாமல் மீண்டும்  வரவேற்பு பிரிவுக்கு விரு விருவென்று  சென்று விட,


"ஆ...  இன்னொன்னும் சொல்ல மறந்துட்டேன்....... இன்னையிலிருந்து அவங்களுக்கு ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் ஆக போகுது .... ட்ரீட்மெண்ட்ல இருக்கும் போது அவங்க கைய பிடிக்கிறது, தோள் மேல கைய போடறதுனு  சாதாரண பிசிகல் டச்ச கூட அவாய்ட் பண்ணா அவங்களுக்கு ரொம்ப நல்லது ... ஏன்னா ஹார்மோனுக்கும் , வாத நாடிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ....  

அதுல ஏதாவது பிளக்ச்சுவேஷன் இருந்தா,  கொடுக்கிற மாத்திரை வேலை செய்யாது ....  உங்களுக்கே இதெல்லாம் தெரியும் .... இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை ..."


என்று அவர் முடித்துக் கொள்ள  மேற்கொண்டு ஓரிரு விளக்கங்களை  கேட்டு அறிந்து கொண்டு  கனத்த இதயத்தோடு அறையை விட்டு வெளியேறியவனுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப சில மணித்துளிகள் தேவைப்பட்டன.


கடின உழைப்பை பற்றி கவலைப்படாமல் எதையும் நேர்த்தியாகவும் சுறுசுறுப்பாகவும் செய்யும் என்னவளுக்கு இப்படி ஒரு நிலைமையா ...


வலியைக் காட்டிலும் இந்த மறதி,  அவள் மனதை முற்றிலும் மரித்துப்போக செய்து விடுமே  என்று எண்ணி கலங்கியவன், எந்நிலையிலும் என்னவளை இந்த செய்தி எட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .... 

என்று தனக்குத் தானே உறுதி எடுத்துக் கொண்ட பின்னரே வரவேற்பு பிரிவை நோக்கி நடந்தான்.


அதற்குள்  பெரும்பாடு பட்டு மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள் தன்னவனைக் கண்டதும்,


" ஆதார் நம்பர்  வேணும் ..... " என்றாள் படிவத்தைக் காட்டி இயல்பாய்.


" குடு...  நான் ஃபில் பண்றேன் ...." என்றவன் அடுத்த 15 நிமிடத்திற்குள் மளமளவென்று அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டு,  தங்களுக்கென ஒதுக்கப்பட்ட காட்டேஜ்க்கு  பயணப் பொதிகளுடன் பேட்டரி கார் மூலம் வந்து சேர்ந்தனர்.


அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட காட்டேஜ்,  கேரளா ஓடு வீட்டு பாணியில்,  முன்புறம் பரந்து விரிந்த தோட்டத்தோடு,  ஒரு சிறிய தாழ்வாரம்,  கூடம்,  சமையலறை , குளியலறை  மற்றும் படுக்கை அறை என வெகு நேர்த்தியாக சுற்றுச்சுவரோடு வடிவமைக்கப்பட்டிருந்தது.


காட்டேஜின்  பின்புறத்தில்,  சிவந்த மண் பிரதேசத்தில் தெளிவாக திட்டமிட்டு  தென்னை மரங்கள்,   பூச்செடிகள்,  புல்வெளிகள்  கண்களுக்கு குளிர்ச்சியாய் பச்சை பசேலென்று பராமரிக்கப்பட்டிருக்க,   அங்கிருந்த  மர பெஞ்சில் அமர்ந்தபடி வெள்ளிப் பாளம் போல் தெளிந்த நீரோடையாய் செல்லும் ஆற்றினை மணிகணக்காக காணும் வசதியும் செய்து தரப்பட்டிருந்தது.


அவர்களது  இருப்பிடத்திற்கு  இருபுறத்திலும்,  இரு காட்டேஜ்கள், எதிர்ப்புறம் இரு காட்டேஜ்கள்  என தனித்தனி வில்லாக்கள் போல்  வெகு நேர்த்தியாய்  தெருக்கள் அமைந்திருந்தது ...


என்ன ஒன்று ... அதனை ரசிக்கும் மனநிலையில் தான் இளையவர்கள் இல்லை ...


அவளுக்கு வாழ்க்கையின் மீது விரக்தி ....

அவனுக்கு அவளது நூதனமான நோயின் அறிகுறிகள்  கொடுத்த அதிர்ச்சி .....

என இருவரும் தத்தம் சிந்தனையிலேயே சில கணங்கள் மூழ்கியிருந்த பின்,


"பட்டு, உனக்கு சாப்பாடு, டேப்லெட்ஸ் எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடும் ... எப்பப்ப எந்த எந்த மாத்திரை சாப்பிடணும்னு கேட்டு தெரிஞ்சிக்க....

உன்னோட மொபைல்  சுவிட்ச்டு ஆஃப்லயே இருக்கட்டும் .... இதான் இந்த மொபைல வச்சிக்க .... 11 to 1 வரைக்கும் தான் இங்க இன்டர்நெட் சிக்னல் கிடைக்கும் .... மத்த டைம் ஜாமர் இருக்கிறதால சிக்னல் கிடைக்காது .... ஏதாவதுன்னா  என் மொபைலுக்கு  கூப்பிடு .... லேண்ட்லைன் கனெக்ஷனும் இருக்கு தேவைன்னா யூஸ் பண்ணிக்க .... வைஃபை (wi-fi)கனெக்ஷன பத்தி மெயின் ஆபீஸ்ல பேசிட்டு வந்துடறேன்..."  


அக்கறையாக மொழிந்து விட்டு அவன் விடைபெற,  எதற்காக அலைபேசியை அணைத்து வைக்க சொன்னான்,  எதற்காக அவனுடைய தனி  பயன்பாட்டிற்கு இருக்கும் அலைபேசியை கொடுத்தான் .....

போன்ற கேள்விகள் மனதிற்குள் வட்டமடித்தாலும் அது குறித்து யோசிக்கும் மன நிலையில் இல்லாததால்,  அதனை ஒத்தி  வைத்துவிட்டு வீட்டின் சுற்றுப்புற சூழலை ஆராய ஆரம்பித்தாள்.


அந்த தெருவின் முடிவில்,  மருத்துவ வளாகத்தை தாண்டி,   பரந்து விரிந்த மைதானம்  ஒன்று ஆற்றின் ஓரத்தில் அழகாய் தெரிந்தது.

 அங்கு சிறுவர்கள் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருக்க,  மரத்தடியில் சிலர் படித்துக் கொண்டிருக்க,  சிலர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்க என கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாத அந்த இடத்தை பார்த்துக் ரசித்துக்கொண்டே  தன் காட்டேஜிற்குள் நுழைந்து அதன்  பின்புறத்தை அடைந்தவளின் மனம் கனத்துப் போயிருந்தது ....


கண்களில் இருந்து கண்ணீர் பிரபாகமாய் உருண்டோடியது ...


எதிலும் ஒற்றுதல் வரவில்லை  .....


சோதனையிலும் சரி.... சாதனையிலும் சரி கடவுளை நாடுபவள் அவள் .....


ஏனோ அக்கணம்  கடவுள் கூட கைவிட்டது போலான சிந்தனை  வர, நேர்மையான பக்தியும் ,  விசுவாசமும் தோற்றுப் போனது போல் தோற்றமளிக்க,  நிந்திக்கவும் எண்ணம் இல்லாமல்  நினைக்கவும் விருப்பம் இல்லாமல் கடவுளிடமிருந்து தள்ளி நிற்க முடிவெடுத்தாள் ....


தெய்வ நம்பிக்கைபை தொடர்வதற்கு கூட வாழும் வாழ்க்கையில் சிறிதேனும் நம்பிக்கை வேண்டுமல்லவா ...


வாழ்க்கையே பட்டுப்போன நிலையில், அந்த  நம்பிக்கைக்கு அவள் எங்கு போவாள்...


கண்களை துடைத்துக்கொண்டே இடது புறம்  திரும்பியவளுக்கு , கிட்டத்தட்ட ஆறு  வயது பெண் குழந்தை ஒன்று, பக்கத்துக் காட்டேஜிலிருந்து பந்தை தூக்கி போட,  அதனை ரசித்துப் பார்த்துக் கொண்டே அவள் நெருங்கவும்,  


" ஸ்வேதா... பால  வெளிய போடக்கூடாதுனு எத்தனை தாட்டி சொல்லி இருக்கேன்  ..."  


பெருங்குரலெடுத்து  சொல்லிக் கொண்டே ,  அந்தக் குழந்தையை நெருங்கினாள் அதன் தாய் பத்மினி. 


நாகர்கோவிலை சேர்ந்த சற்று  உயர்தட்டு வர்க்க பெண்மணி அவள்.   பெயர் பத்மினி. அவள் தந்தை அங்கு  மூன்று துணிக்கடைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 


ஃபைப்ராய்ட்ஸ் (fibroids)பிரச்சனையால் தீராத உதிரப்போக்கு காரணமாக சிகிச்சை பெற வந்திருக்கிறாள்.


அவளது தந்தை வியாபாரத்தை பார்த்துக் கொள்வதால்,  சிகிச்சை பெற தாயுடன் வந்திருந்தாள்.

திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது.

உறவு முறையில் மாமன் மகனை மணந்திருந்ததால் ஒருவகையில் காதல் திருமணம் தான் என்றாலும்,  முதல்  குழந்தைக்குப் பிறகு , கருப்பைக் கட்டியால் மாதத்தின் பெரும்பாலான தினங்கள், வலி மற்றும் உதிரப்போக்கு காரணமாக , கணவன் மனைவிக்கிடையே ஆன தாம்பத்ய வாழ்க்கை அடியோடு அடிபட்டு போக,  அன்று தொடங்கியது புகைச்சல் ...


கட்டியை கருப்பையில் இருந்து  அகற்ற முடியாத நிலையில் இருப்பதால்  கர்ப்பப்பையையே எடுத்தாக வேண்டும் என்று ஆங்கில மருத்துவர் கூற, அதற்கு அவள் கணவன் பலத்தை எதிர்ப்பு தெரிவிக்க,  அதனைத் தொடர்ந்து ஆயிரமாயிரம் சண்டை, பூசல்கள் நித்தம் நித்தம் அரங்கேற  ,  ஒரு கட்டத்தில்  கணவனோடு வாழ இயலாமல்  தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.


ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது என்று யாரோ ஒரு உறவுக்காரர் சொல்ல,  அதை அடிப்படையாக வைத்து விசாரித்து அறிந்து கொண்டு அங்கு வைத்தியம் பார்க்க தன் குழந்தையோடு வந்திருந்தவள், ஸ்ரீயைப் பார்த்து மென் புன்னகைப் பூக்க, பதிலுக்கு அவளும் புன்முறுவல் பூத்தாள்.


" நீங்க தமிழா ...." என்றாள் எடுத்த எடுப்பில் ஸ்ரீயை பார்த்து. 


" ஆமா ...." 


"அப்பாடி ..... ஒரு தமிழ் காரவங்க கூட இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு கடந்தேன்  .... நல்ல வேலையா வந்து சேர்ந்தீங்க ...." 

வெகு இயல்பாய் பத்மினி மொழிய, அவளது பேச்சும் பளிர் சிரிப்பும், ஸ்ரீயை கவர,


"எனக்கும் உங்களையும் குழந்தையும் பார்த்தா.... ரொம்ப சந்தோஷமா இருக்கு ...." 

என்றாள் சற்று முன்பிருந்த மனநிலையை எண்ணி .


அதற்குள் அவளது தாயிடம் இருந்து அழைப்பு வர,


" உங்க கிட்ட நிறைய பேசோணும் ....   இவிங்க அப்பா(குழந்தையைக் காட்டி)  ஃபோன் பண்றாங்க போல... என்னன்னு கேட்டுட்டு பொறவு வாரேன் ...."  வெள்ளந்தியாக மொழிந்து விட்டு குழந்தையை அள்ளிக் கொண்டு அவள் வெளியேற , சென்றவளை பார்த்துக் கொண்டே குறுநகையோடு வலது புறமாக  திரும்பியவளைப் பார்த்து 


" ஹேய்.... இதர் ஆவோ ....." என்றார் 60 வயது மதிக்கத்தக்க,  பெண்மணி பக்கத்துக் காட்டேஜிலிருந்து.


அவள்  சுற்றுச்சுவரை நெருங்கியதும் ,

"நீங்க எங்க இருந்து வரீங்க .... யாருக்கு என்ன பிரச்சனை .... எவ்ளோ  நாள் தங்கப் போறீங்க...... ..." 


என மடைதிறந்த வெள்ளமாய் அந்தப் பெண்மணி  ஹிந்தியில் வினவ,  பதில் சொல்லத் தெரியாமல் ஸ்ரீ புன்னகையோடு தடுமாற , மர நாற்காலியில் அமர்ந்தபடி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த அவரது கணவர் ,


"இவ என் வைஃப் .... ஹிந்தி , மராட்டி  மட்டும் தான் இவளுக்கு  தெரியும்....  இங்கிலீஷ் புரிஞ்சுபா .... பேச மாட்டா .... " 

என நட்பாய்  ஆங்கிலத்தில்  பேச்சை தொடங்கினார் சோம்நாத் குல்கர்னி.


மத்திய அரசில் பெரும்பதவியில் இருந்து  சமீபத்தில்  ஓய்வு பெற்றவர்.


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்தவர். 


தன் இரு பெண்களுக்கும் கடந்த ஆண்டில் சிறப்பாக திருமணத்தை முடித்தவர் ....


மனைவியின் மூட்டு வலி சிகிச்சைக்காக, அங்கு வந்திருக்கிறார்கள் ....


அவர் ஆங்கிலத்தில் பேசியதால் மள மளவென்று ஸ்ரீ பதிலளிக்க, மூவருக்கும் இடையே அழகான உரையாடல் ஆரம்பமானது.


"யாருக்காக வந்திருக்கீங்க.... என்ன பிரச்சனை ...."  சோம்நாத்  ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப ,

"எனக்கு தான் அங்கிள் ..... " என்றவள் தன்  பிரச்சனையை சொல்ல , பெரியவர்கள் முகம் வாடிப்போனது.


" அப்பா அம்மா வந்திருக்காங்களா ...."


" இல்ல ஹஸ்பண்டோட வந்திருக்கேன்..."


" மேரேஜ்  ஆயிடுச்சா ...."


" மேரேஜ் ஆகி ஃபோர் மந்த்ஸ் ஆகுது  ...."  என ஸ்ரீ மொழிந்ததும் 


இருவரின் முகத்திலும் சோகத்தின் சுவடு இழையோட , அப்பொழுது பார்த்து சோம்நாத்தின் அலைபேசி சிணுங்க,


" என் பொண்ணு பேசறா .... ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்துடறோம் ..." 


நயந்த முகத்தோடு அவர்கள் விடை பெற, சோர்ந்த முகத்தோடு  காட்டேஜை சுற்றி வந்தவள், கணவனை எதிர்பார்த்தபடி முன்பக்கத் தோட்டத்தை வந்தடைய, அப்போது எதிர் காட்டேஜிலிருந்து அவளது வயதை ஒத்த அழகான பெண்ணொருத்தி துருதுருவென்று அவளை நெருங்கி,


" நீங்கள் மலையாளியோ ...."   என்றாள் 

மலையாள பாஷையில். 


" இல்ல .... தமிழ் ...."   ஸ்ரீ பதிலளிக்க, 


" ஓ..... தமிழோ ....  ஐ லவ் தமிழ் பீப்புள் ...

  ஐ ஹேவ் லாட் ஆஃப் தமிழ் பிரண்ட்ஸ்  ...." 

என அவள்  மலையாள வாடைக் கலந்த  ஆங்கிலத்தில் பேசத் தொடங்க, அப்போது கியர் சைக்கிளில் அம்சமாக வந்திறங்கினான் வீரா.


"யார் இது .... அண்ணனோ ..." அந்தப் பெண் கேள்வி எழுப்ப, 


" இல்ல ஆத்துக்கார்...." 


" ஆ... ஆத்துக்கார் ???? .....ஓ.... ஹஸ்பண்டோ..."


" ம்ம்ம்ம்..... " என ஸ்ரீ மென்மையாய் புன்னகைக்க,

" கேட்க மறந்து போயி.... நீன்ட பேரு எந்தா..." 

" ஸ்ரீப்ரியா ",


" நைஸ் நேம் .... யுவர் குட் நேம் ..." 

என அவள் வீராவைப் பார்த்து வினவ,





" அதி வீரராம பாண்டியன் ..." என அவன் கம்பீரமாய் முடித்ததும், 


"ஆ.... எந்திர வள்ளிய பேரு .... ஆரோட பேரானது ....???"


அவள் மலையாளத்தில் அழகாய் பறைய,


" இது ஒரு தமிழ் ராஜாவோட பேரு...."  வெண் பற்கள் தெரிய , அவன் குறு நகையோடு சொல்ல, 


" ஓ.... ராஜா பேரோ .... நீங்கள் ராஜாவினைபோலயானு... நினக்கு என்ட பேர் அறியாமோ .... சம்யுக்தா .... இதானு ராணியோட பேரு ...."


ஸ்ரீயின் முகம் சுருங்க , அவனோ  இயல்பாக  அந்த புதியளோடு உரையாடத் தொடங்கினான்.  கூடிய விரைவில் இரு பெண்களும் அவனிடம் அடி வாங்கப் போகும் சம்பவம் அம்சமாய்  அரங்கேற போவதை அறியாமல்.



ஸ்ரீராமம் வருவார்கள் .....



Dear friends, 


கதை முடிய இன்னும் ரெண்டு எபிசோடு இருக்கு .....  ஒரே எபிசோடா டைப் பண்ணிடலாம்னு பார்த்தேன்... முடியல .... அடுத்த எபிசோடு ஞாயிற்றுக்கிழமையன்று. 


ப்ரியா ஜெகன்நாதன்...






















 



































 









































Comments

  1. keep rocking 💕💕💕💕💕💕

    ReplyDelete
  2. Ennathu story mudiya pogutha??? Y sis... Nalla thaney poyitu iruku. Ipadi sollitingaley.inimel naanga enna panuvom? Entha story read panuvom

    ReplyDelete
    Replies
    1. 😂😂😂Thanks kanna... நானும் முடிக்கனும்னு பாக்குற இழுத்துக்கிட்டே இருக்கு ... நீங்களும் முடிக்காதீங்கன்னு சொல்றீங்க ... just kidding... இன்னும் ரெண்டு எபிசோட்ல முடிஞ்சிடும் கண்ணா

      Delete
  3. Why sis ea story finish pandringa interest ah pothu konjam extend pannalam la plsss

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எப்படியும் ரெண்டு எபிசோடு வரும் டா ... போட்டி கதை இது ... நெக்ஸ்ட் மந்த் 10 ஆம் தேதிக்குள்ள முடியுது இல்லையா அதனால முடிச்சு தான் ஆகணும் டா ... thanks kanna

      Delete
  4. Ungal adutha oru interesting story ah padika avaludan ungal vasagi barathi.... Shree veera ku oru nala happy ending except panrom, and lak ram enachi nu pakanum, rana vera oru nala hospital la cure agidanu bcoz rana shree ah madhu nenachi adaiya asaipaduvu vena thapanu solalamea thavira avar thapanavar ila in my vision avar madhu iruthuthiruntha avar oru romatic successful person irunthiruparo enavo ila avanga wife unmaiya 1st ah soli atha crt understand paniruthAlu santhosama irunthuruparu enavo... Avaruku oru nala ending venum sis

    ReplyDelete

Post a Comment