ஸ்ரீராமம்-129

 அத்தியாயம் 129 


அதே இரவில் , தன் அறையில் வீராவை கொல்ல நியமித்திருந்த ரவுடியை ராணா  அலைபேசியில்  அழைத்து வாய்க்கு வந்தபடி வசை பாடிக் கொண்டிருந்தான்.


ஸ்ரீ வீராவுடன் மூன்று நாள் பயணமாக ஊட்டிக்கு  பயணப்படவிருப்பதை கார்த்திகேயன் மூலம் அறிந்ததுமே , அவர்களது ஊட்டி பயணத்தை தடுத்து நிறுத்த வீரா அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் பொழுது அவனது  காரை  விபத்திற்கு உள்ளாக்க, ரவுடிகள் மூலம் ஆட்களை ஏற்பாடு செய்திருந்தான் ராணா.


ஆனால் அந்தத் திட்டமிட்ட விபத்தில்  வீரா கடை விரல்களில் பட்ட சிறு அடியோடு உயிர்  தப்பி,  தன்  மனைவி ஸ்ரீயுடன் அவன்  ஊட்டிக்கு பயணப்பட,  ஸ்ரீயும் அவன் உடன் பயணித்ததால்,  மேற்கொண்டு  எதுவும் செய்ய முடியாத நிலை என்பதால் , ஊட்டியில் இருந்து திரும்பியதும் ,  வீரா   தனியே பயணிக்கும்  பொழுது , அவனது வாகனத்தை விபத்துக்கு உள்ளாக்கி  அவன்  கதையை முடிக்க,  ராணா அந்த ரவுடிகளுக்கு  ஆணை பிறப்பித்திருந்த நிலையில், அன்று மாலையில்  வீரா கம்பீரமாக    வேறொரு காரில்  அலுவலகத்திற்கே  தனியாக வந்து  அவன் கண் எதிரிலேயே, தன் மனைவி ஸ்ரீயை 

அழைத்துச் சென்றது , ராணாவின் கோபத்தை பன்மடங்காக்கி இருக்க,  அதன் எதிரொலியாய் அவன் அந்த ரவுடியை பேசவே விடாமல் வாய்க்கு வந்தபடி  வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.


"சார்,  ஒரு நிமிஷம் என்னை பேச விடுங்க சார்... ... அவங்க வீட்டுக்கு மத்தியத்துக்கு மேல உறவுக்காரங்க யாரோ கார்ல  வந்தாங்க சார்... அவங்க தான் சாயங்காலம் 6:00 மணிக்கு திரும்பி போறாங்கன்னு நினைச்சுகினு நான் சரியா கவனிக்காம  விட்டுட்டேன் சார் .... அவன் அந்த கார்ல ஆபீசுக்கு வந்து அந்தப் பொண்ணை கூட்டிக்கினு போவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ..."


"அடேய் பணத்தை மட்டும் லட்சம்  லட்சமா வாங்கற ... அவங்க வீட்டுக்கு யார் எந்த கார்ல வராங்க...  எந்த கார்ல போறாங்கனு கூட பாக்காம அப்படி என்னடா நீ கிழிக்கிற..."


"சார் நாளைக்கு அவன் எந்த கார்ல போனாலும் அவன் கதையை முடிச்சிடறேன் சார் ..."


"அடேய் அறிவு கெட்டவனே .... ரேண்டமா வேலை பாக்காத ....  அவன் கார்ல தனியா போனா மட்டும்தான் அவன் கதையை முடிக்கணும் .... அவன் கூட அந்த பொண்ணு

இருந்தான்னா,   அந்தக் கார் மேல ஒரு சின்ன துரும்பு கூட படக்கூடாது... ஜாக்கிரதை ..." 


"சரிங்க சார் .... இனிமே கவனமா இருக்கேன் சார் ..." 


வீரா மறு தினமே அயல் நாட்டிற்கு  பயணப்படவிருப்பதை அறியாமல், அலைபேசியின் இணைப்பை துண்டித்து விட்டு அடுத்த கட்ட நகர்வுகளைப் பற்றிய தீவிர சிந்தனையில் மூழ்கிப் போனான் ராணா. 


 

  - —-----------------------------------------------------------


வழக்கம் போல் அதிகாலையிலேயே  விழிப்பு வந்தாலும் , கணவனின் அணைப்பிலிருந்து விடுபட மனம் இல்லாமல்,  அவனை மேலும் இறுக்கி அணைத்துக்கொண்டு அவனது கழுத்து வளைவில்  முகம் புதைத்தபடி அவள் இமை மூட , அவளது செய்கையில் உணர்வு பெற்றவன்,


"என்ன பட்டு ... எழுந்துக்கிற ஐடியாவே இல்லையா ..."  என்றான் ஒருக்களித்துப் படுத்து அவளை மேலும் தன்னோடு புதைத்துக்கொண்டு.


" மனசு கஷ்டமா இருக்கு ராம்... இன்னும் ரெண்டு வாரம் எப்படி தள்ள போறேனோனு இருக்கு  ..." 


"பட்டு ...  ஒன்னு சொல்லட்டுமா ... ஏற்கனவே யூகேக்கு உனக்கு வீசா பிராசஸ் பண்ணி வச்சிருக்கேன் ....  நான் இன்னைக்கு என்னோட ட்ரிப்ப கேன்சல் பண்ணிட்டு , உனக்கு டிக்கெட்க்கு ஏற்பாடு பண்றேன் ....

நாளைக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னாவை யுகே கிளம்பிடலாம்....எப்படி .."


துள்ளி குதிக்காத குறையாய் , அவன் எழுந்தமர்ந்த படி சொல்ல,


"எனக்கு ஆபீஸ்ன்னு ஒன்னு இருக்குங்கிறதையே மறந்து போயிட்டீங்களா.... ..."


"எப்படியும் நான் என் ட்ரிப் முடிச்சிட்டு வந்ததும்,  நீ பேப்பர் போடத்தான் போற ...

அது இப்பவே போட்டுட்டு என்னோட வந்துடு ... உனக்கு கொடுத்த  ட்ரெய்னிங்காக  ஏதாவது எக்ஸ்பென்சஸ் கிளைம் பண்ணாங்கன்னா பே பண்ணிக்கலாம் ..."


"வேணாம் ராம் .... ஏற்கனவே கயல் ஆண்டனி லீவுல இருக்காங்க .... இந்த டைம்ல நான் பேப்பர் போடறது நல்லா இருக்காது .... அதோட டூ மன்த்ஸ் நோட்டீஸ் பீரியட் வேற இருக்கு ... அதை ஒழுங்கா முடிச்சு கொடுத்தா , எந்த பிரச்சனையும் இல்லாம நிம்மதியா ரிலீவ் ஆகலாம் .... பியூச்சர்லயும் எந்த பிரச்சனையும் வராது ..."


"எல்லாம் சரிடி.... ஆனா உன்னை தனியா விட்டுட்டு போக எனக்கு ஒரு மாதிரி இருக்கு...."


" தனியாவா.... உங்க அம்மா , பாட்டி எல்லாரும் தானே இருக்காங்க ... அப்புறம் என்ன ...."


"அதான் பிரச்சினையே .... சும்மாவே உன்ன குத்தி குத்தி காட்டிக்கிட்டு இருப்பாங்க .... இப்ப பத்தாததுக்கு,  அண்ணி வேற மாசமா இருக்காங்க  ... அதை சொல்லி உன்னை எவ்ளோ மட்டம் தட்டணுமோ அவ்ளோ தட்டுவாங்க ....உன்னால தாங்கவே முடியாது ...

ஆபீஸ் இருக்கிறதால  உன்னால  உன் வீட்லயும்  போய் இருக்க முடியாது .... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ...."


" ஐயோ ராம் ... இதெல்லாம் எல்லா குடும்பத்துலயும் நடக்கிற பிரச்சனை தான் ...

நான் இன்னைக்கு ஃபேஸ் பண்ற இந்த பிரச்சனை, கல்யாணம் ஆனதும் மாசமாகாத 90 சதவீத பொண்ணுங்க ஃபேஸ் பண்ணி இருப்பாங்க ... இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல... "


"என்னமோ சொல்ல தெரியல .... ஆனா உன்னை விட்டுட்டு போக மனசே வரல ... ஆனா ஒரு விஷயத்துல ரொம்ப கிளியரா இரு.... ...வீட்ல என்ன நடந்தாலும் எல்லாத்தையும் டெய்லி அப்டேட் பண்ற... எதையும் மறைக்க கூடாது புரியுதா ..."


"ம்ம்ம்ம்..." என்றவளை குழந்தை போல் அள்ளி மடியில் வைத்துக் கொண்டு, இரு கரங்களால் கட்டி அணைத்தபடி இளைப்பாறி கொண்டிருக்கும் போது 


" பாண்டி,  கிளம்பிட்டியா  ..." அகல்யாவின் குரல் கீழ் தளத்திலிருந்து சற்று ஓங்கி ஒலிக்க,


"இன்னும் 10 மினிட்ஸ்ல ரெடி ஆயிடுவேன் மா...."  அவன் பதில் அளிக்க,


"நீங்க போய் ரெப்ரெஷ் ஆயிட்டு வாங்க... நான் திங்ச எல்லாம் பேக் பண்றேன் ..." 


என்றவள் அந்த வேலையில் முழு வீச்சில்  முழுக்க,  புத்துணர்வு பெற அவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


அடுத்த அரை மணி நேரத்தில் அனைத்தும் தயாராகி விட்டாலும், ஏனோ  இருவருக்கும் அந்த அறையை விட்டு வெளியேற மனமே இல்லை.


கண்களில் காதல் கண்ணீராய் கசிந்தபடி நெருங்கியவளை இழுத்தணைத்துக் கொண்டவன் , 


" ஐ அம் கோயிங் டு மிஸ் யூ டா ..." என்றான்  அவள் விழிக்குள் நோக்கி. 


" மீ டூ ..." என்றவளின் குரலும் தழுதழுக்க, தொண்டை கனத்தவன், அவளது உச்சந்தலையில் ஆழ்ந்த முத்தமிட்டு விட்டு மீண்டும் தன்னோடு பிணைத்துக் கொண்டான் , இனி அப்படி ஒரு நெருக்கம் கிடைக்க, பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும் என அறியாமல். 


அப்போது கீழ் தளத்திலிருந்து, 


"பாண்டி, சீக்கிரம் கிளம்பி வாப்பா ....    சத்யா வந்தாச்சு ..." அகல்யா மீண்டும் அழைக்க,


" வா போலாம் ...." என்றபடி  பயணப் பொதிகளை அள்ளிக்கொண்டு அவன் முன்னேற,  கனத்த இதயத்தோடு பின் தொடர்ந்தாள் அவன் நாயகி. 


சத்யன் சாரதியாய் காரை கிளப்ப,  அவன் அருகில் பிரபா அமர்ந்து கொள்ள , பின் இருக்கையில் அழுகையை அடக்கியபடி வீராவின் தோளில்  சாய்ந்து கொண்டவளுக்கு , கணவனுடனேயே சென்று விடலாமா என்ற திடீர் எண்ணம் தோன்ற, எடுத்துக்கொண்ட பணியை பாதியில் விடுவது சரியல்ல என்ற நிதர்சனமும் உரைக்க , முடிவுக்கு வர முடியாமல்  திணறிக் கொண்டிருந்தவளிடம் 


" பட்டும்மா, எப்படியாவது  ஒரு வாரம் பத்து நாளைக்குள்ள வேலைய முடிச்சுட்டு வர  பாக்கறேன் .... சரியா " என்றான் வீரா சன்னமாக மனையாளின் மனநிலையை உணர்ந்து. 


" ம்ம்ம்ம்...  சீக்கிரம் வந்துடுங்க ராம்..." என்றபடி அவன் கரத்தை அவள் அழுந்த பற்றிக்கொள்ள, அடுத்த 15 நிமிடத்தில்   கார் விமான நிலையத்தை சென்றடைந்தது.


பத்து நிமிடங்கள்  மூவரிடமும் தன் பயணத்தை பற்றி உரையாடியவன்,  பிறகு தன் மனைவியாளின் விழிகளை  பார்த்தபடி அவளது  கரம் பற்றி ஒரு சிறு அழுத்தம் கொடுத்துவிட்டு,  பயணப் பொதிகளை சுமந்து கொண்டு  விடை பெற்றான். 


அதற்குள் அலுவலகத்தில்,


"ஸ்ரீயை இன்னும் காணோமே .... அவங்க  இன்னைக்கு லீவா ...."  


ராணா கார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்க,


"அவங்க ஹஸ்பண்ட் யூகே போறாராம் ...  அதனால ஒரு டூ ஹவர்ஸ் பர்மிஷன் கேட்டு இருந்தாங்க ..."


ராணாவிற்கு  தன் காதுகளை நம்பவே முடியவில்லை .... மீண்டும் ஒருமுறை வேறு மாதிரி கேட்டு உறுதி செய்து கொண்டவனுக்கு பருத்தியே புடவையாய் காய்த்தது போல் தோன்ற,  துள்ளி குதிக்காத குறையாய் அழைப்பை துண்டித்தவன்,  உடனே அந்த ரவுடியை தொடர்பு கொண்டான்.


"சார்,  அவன்,  அந்த பொண்ணோட ஏர்போர்ட் போய்கிட்டு இருக்கான் சார் .... இன்னும் ஒரு ஜோடியும் அந்த கார்ல இருக்காங்க .... ஏர்போர்ட் உள்ள போகாம வெளிய நின்னுகிட்டு இருக்கேன் சார் ..."


"நீ அப்படியே கிளம்பு ... இனிமே நான் எல்லாத்தையும்  பாத்துக்கறேன் ... "


"சார்,  இனிமே நான் சரியா வேலை பாப்பேன் சார் ...  ப்ளீஸ் சார் "


"நான் உன்னை தப்பு சொல்லல .... என் வேலை முடிஞ்சு போச்சு.... சொன்ன பணத்தை டிரான்ஸ்பர் பண்ணிட்டேன் ... அக்கௌன்ட் செக் பண்ணி பாத்துக்க ... தேவைன்னா அப்புறம் கூப்பிடறேன் ...."


" சரிங்க சார் ..." அவன் சந்தோஷமாக விடை பெற,  ராணா தன் அடுத்த கட்ட  நகர்வுகளை மிகுந்த கவனத்தோடு  திட்டமிட்டபடி தீவிர யோசனையில் மூழ்கிப் போனான்.


காலை 11 மணிக்கு மேல் விமான நிலையத்திலிருந்து நேரடியாக,  அலுவலகம் வந்து சேர்ந்த ஸ்ரீயை சந்திக்க,  மிகுந்த மகிழ்ச்சியோடு அவளது கேபினுக்கு  வந்த கயல்,


"காலையிலிருந்து உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் ப்ரியா  .... ஏன் லேட் .... உடம்பு சரியில்லையா ..." என்றாள் அக்கறையாய். 


 தன் கணவனின் அயல்நாட்டு  பயணத்தை பற்றி சொல்லிவிட்டு, 


"மனசே சரியில்ல கயல் .... கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட 4 மாசம் ஆகப்போகுது .... ஆனா இப்ப வரைக்கும்  நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா போல இரண்டு நாள் கூட  பிரிஞ்சு இருந்ததே இல்ல ... ஆனா இனிமே ரெண்டு வாரம் பிரிஞ்சு இருக்கணும்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு ...."


 ஸ்ரீ தழுதழுத்த குரலில் முடிக்க, மடிக்கணினியில் அதனை பார்த்து  கொண்டிருந்த ராணாவிற்கு கோபம் விஷம் போல் சுர்ரென்று ஏற,


"ஐயோ மது,  அவன் ஊருக்கு போறத நினைச்சு தான் நேத்து அழுதுகிட்டு இருந்தியா ....  அவன் ஊருக்கு போறது தான் நமக்கு நல்லது .... அப்ப தான் நாம நமக்கான வாழ்க்கைய பிளான் பண்ண முடியும் ... இப்படி தேவையில்லாம யாரோ ஒருத்தனுக்காக நீ வருத்தப்படறதை பார்க்க  எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மது.... ப்ளீஸ் மது .... " என்று பேசிக் கொண்டிருந்தவனின் முகத்தை, அப்போது யாராவது பார்க்க நேர்ந்திருந்தால் நிச்சயம் பயந்தே போய் இருப்பார்கள்.


செஞ்சாந்தை குழைத்து அப்பியது போலான முகச்சிவப்பு, போதையில் மிதப்பது போலான இலக்கில்லா செந்நிற விழிகள்,  குழறிய குரல்,  அவனையும் மீறி நடுங்கும் கைகள்  என முழுவதுமாய்  மாறி இருந்தான்.


ஸ்ரீ வீராவை நினைத்து உருகி உருகி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல்,  அவனது மன அழுத்தம் வகைத்தொகை இல்லாமல் கூட , அளவுக்கு அதிகமான வியர்வை துளிகள்  முகம் எங்கும் ஆறாய் ஓட , செய்வதறியாது  அப்படியே நாற்காலியில் சரிந்தமர்ந்தான். 


 அப்போது பார்த்து  திலக்கிடமிருந்து அழைப்பு வந்தது.


அதைக் கண்டு சுயம் உணர அவனுக்கு ஓரிரு கணம் தேவைப்பட்டது. 


ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் ,  நடுங்கும் கரத்தால் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து பருகி முடிக்கும் போது அழைப்பு நின்று போக,  லேசாக தள்ளாடிய படி குளியலறைக்குச் சென்று முகம் கழுவி,  புத்துணர்வு பெற்று வந்து  திலக்கிற்கு அழைப்பு விடுத்தான். 


"ராணா... வரவர உன்  போக்கே  சரியில்ல ..." என்றான் திலக் எடுத்த எடுப்பில். 


" என்னடா உன் பிரச்சனை .... "


" என் பிரச்சனை இல்ல உன் பிரச்சனையை பத்தி பேசுறேன் ....  எதுக்கு ஊட்டில இருந்த நிலத்தை வித்த... இப்ப அதுக்கு என்ன அவசியம் ...."


" கொஞ்சம் பணம் அவசரமா தேவைப்படுது.... கம்பெனில ஒரு ப்ராப்ளம் டா  ..."


" பொய் சொல்லாத .... விட்டா கம்பெனியே நஷ்டத்துல போகுதுன்னு கூட புளுகுவே ... 

எனக்கு தெரியாம கம்பெனில அப்படி என்ன பிராப்ளம் ....  எதுக்கு உனக்கு அவசரமா 10 கோடி தேவை ..."


"சும்மா கேள்வி கேட்காதே டா... அது என் பணம் .... நான் என்ன வேணாலும் செய்வேன்...... ...."


"அப்ப நாளைக்கே  நான்  வேலை விட்டு போயிடறேன் ...."


"ஐயோ திலக் .... ஏண்டா உளர   .... கம்பெனியில நீயும் ஒரு பார்ட்னர்.. மறந்துட்டியா .... ஒன் ஃபோர்த் ஷேர் உன்னோடது  ..."


"அப்ப நான் கேள்வி கேட்கலாமில்ல ...   ஷேர்ஸ்ஸ வேற கோடிக்கணக்குல வித்திருக்க.. .... அதுக்கான டாக்ஸ் பேப்பர்ஸ் வந்திருக்கு .... இவ்ளோ பணத்துக்கு இப்ப என்ன அவசியம் .... சொல்லு ..."


"நாளைக்கு நைட் உன்னை ஹோட்டல்ல மீட் பண்ணும் போது சொல்றேன்....  இப்போதைக்கு எதையும் கேட்காத... தலை வெடிக்கிற மாதிரி இருக்கு .... சரி என் கதையை விடு... சுனந்தா(திலக்கின் மனைவி)  எப்படி இருக்கா ...."


" ஃபர்ஸ்ட் கிமோதெரபி  முடிஞ்சிருக்கு ....  ரொம்ப சோர்வா இருக்கா .... "


"  டேக் கேர் ... நாளைக்கு மீட் பண்ணலாம் ..." என அழைப்பை துண்டித்தான் ராணா 



அன்றைய பொழுது ஸ்ரீக்கு ஓரளவிற்கு நன்றாகவே சென்றது.


இத்தனை நாட்களாக விடுப்பில் இருந்த கயல், ஆண்டனியின் வருகையால் அவளது வேலை பெரும்பாலும் குறைந்திருக்க, கணவன் அருகில் இல்லையே என்ற குறையை தவிர, மனம் ஓர் அளவிற்கு இதமாகவே இருந்தது.


மாலையில் வீடு திரும்பியவளுக்கு, இரவு உணவாய் கேழ்வரகு அடையை  அகல்யா  செய்து வைத்திருக்க, புத்துணர்வு பெற்று வந்தவள்,  இரண்டு அடையை தட்டில் எடுத்து வைத்து ருசியே அறியாமல் கொறித்து முடித்து , துரிதமாக  அடுக்களையை சுத்தம் செய்துவிட்டு தன் அறைக்கு வந்து சேர்ந்தாள்.


படுக்கையில் விழுந்தவளுக்கு ஏதேதோ நினைவுகள் ....


நல்ல வேளையாக வீட்டின் மூத்த பெண்கள்,  பிரபாவை சத்யன்  மருத்துவமனைக்கு அழைத்து என்ற செய்தியை தவிர,  அவளிடம் வேறு எதையும்  பேசாமல் இருந்தது ஒரு விதத்தில் நிம்மதியை தர, பெரும் மூச்சொன்றை வெளியேற்றினாள்.


முந்தைய இரவின் நிகழ்வுகள் மனக்கண் முன் வந்து ஏக்கங்களையும்  தாக்கங்களையும் அதிகப்படுத்தின ...


தனிமை அவளுக்கு ஒன்றும் புதிதல்ல ...

என்றாலும் தன்னவனது இந்த தற்காலிகப் பிரிவு ஒரு வித வெறுமையை தர, இரண்டு வாரம் இரண்டு யுகமாக தோன்றி பயமுறுத்த ,   கண்களில் கண்ணீர் கசிய தொடங்கியது. 


பெரும்பாலும் அண்டை மாநிலத்திற்கும் அயல் நாட்டிற்கும் அடிக்கடி பயணப்படும் பணி  தன்னவனுடையது என அறிந்தும், வெறும் இரு வார பயணத்திற்காக இவ்வாறு யோசிப்பதெல்லாம் தவறு என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டவள் ,

கணவனிடம் இருந்து " நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டேன் " என்ற செய்தியை எதிர்பார்த்தபடி உறங்கிப் போனாள்.


மறுநாள் காலை இயல்பாக விடிந்தது. 


அவள் எதிர்பார்த்த செய்தியை அவளது நாயகன் whatsapp இல் அனுப்பி இருக்க, பார்த்து  மகிழ்ந்தவள்,  நேரம் கிடைக்கும் போது அழைக்குமாறு பதில் அனுப்பிவிட்டு அன்றைய அலுவலில்  மூழ்கி போக, அகல்யாவும் சுந்தராம்பாளும் தேவைக்கு மட்டும்  பேசிவிட்டு மற்றபடி  இயல்பாக நடந்து கொள்ள,  சற்றும் எதிர்பார்க்காத அந்த சூழ்நிலை நிம்மதியை தர,  ஓரளவிற்கு இதமான மனநிலையோடே அலுவலகம் வந்து சேர்ந்தாள்.


அவள் தன் இருக்கைக்கு வந்து கணினியை உயிர்ப்பித்த, ஒரு மணி நேரத்திற்குள்  whatsapp குழுவில் ஆண்டனி  கயல்விழிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை பகிர, அதைத்தொடர்ந்து அந்த தளத்தில் இருந்தவர்கள் அனைவரும் கயல்விழியின் கேபினுக்கே சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.


வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் , கயல் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் போது ,  அவர்களை நோக்கி மென் புன்னகையோடு வெளிர்மஞ்சள் நிற டி-ஷர்ட், நீல நிற  ஜீன்ஸ் மற்றும் கண்களில் குளிர் கண்ணாடி சகிதமாக  வந்த  ராணா, 


" என்ன.... எல்லாரும் ஒரே கூட்டமா நிக்கிறீங்க.... ....  என்ன விஷயம் ...."  என்றான் வெகு இயல்பாக.


அவனைக் கண்டதுமே , ஊசி விழுந்தாலும் உரக்க கேட்கும் அளவிற்கு திடீர் அமைதி நிலவியதால்,  ஒருவரை ஒருவர் பார்த்தபடி பதில் சொல்ல தடுமாறிக் கொண்டிருக்கும் போது,


"இங்க யார் எவ்ளோ க்யூட்டா இருந்தாலும்,  எல்லாருக்கும் ரூல்ஸ் ஒன்னு தான் ..." என்றான் ராணா  கண்களில் மட்டும் சிரிப்பை காட்டி.


அவனது பேச்சு புரியாமல் அனைவரும் தடுமாறிக் கொண்டிருக்கும் போது ,


" ராணா.... ப்ரியாவை பார்த்து   சொல்றாரு ...." 

என்றாள் கயல்விழி அனைவரையும் ஒருசேரப் பார்த்து சிறு புன்னகையோடு. 


ஸ்ரீயும் அன்று வெளிர்மஞ்சள் நிற டீ ஷர்ட் மற்றும் ப்ளூ  ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.



அவள் அணிந்திருந்த மஞ்சள் நிற சட்டையில், கருப்பு எழுத்தில் 


I'm cutest ... Rules dont apply to me என்று எழுதி இருந்ததோடு,  பிடிவாதத்தை குறிக்கும் விதமாக ஒரு பெண் குழந்தை உதட்டை சற்று வளைத்தபடி இருக்கும் புகைப்படமும் இருந்தது. 

அதனை தான் ராணா அப்படி குறிப்பிட்டிருக்கிறான் என்பதை கணநேரத்தில் அறிந்துகொண்டு கயல் சொன்னதும், எல்லோருடைய பார்வையும் ஸ்ரீயின் சட்டையிலேயே படிய, லேசான வெட்கத்தோடு அவள் குறுநகை புரிய,  அதில் மயங்கியவன்,


" சேம் பின்ச் ஸ்ரீ ...." என்றான் அவளை வெகுவாக நெருங்கி.


சில முக்கிய வேலைகளில் மூழ்கி இருந்ததால்  அன்று அலுவலகத்திற்கு சற்று தாமதமாக கிளம்பியவன் ஸ்ரீ வந்துவிட்டாளா என்று தெரிந்து  கொள்ள மடிக்கணினியை பார்க்க,

அவளோ வெளிர்மஞ்ச நிற டீ சர்ட்ல் டியூலிப் மலர் போல் காட்சி அளிக்க,  உடனே அவளுக்கு பொருத்தமாக தன் உடையை மாற்றிக் கொண்டு வந்தவன் தான் இங்கு புதிதாய் பார்ப்பது போல் கதை அளந்து கொண்டிருக்க , ஏதோ வேற்று கிரகவாசியை பார்ப்பது போல்,  நடை உடை பாவணையில் முழுவதுமாய் மாறியிருந்த ராணாவை குழுமியிருந்தவர்கள் விழி அகலாமல் பார்க்க,  ஸ்ரீக்கும் அவன் காட்டிய நெருக்கம் ஒருவித சங்கடத்தை தர,


" இன்னைக்கு கயலுக்கு பர்த்டே ராணா ..." 

  என்றாள் பேச்சை மாற்றும் முனைப்போடு.


உடனே " ஹாப்பி பர்த்டே கயல் ..." 

என அவன் வாழ்த்தியதும் நன்றி உரைத்த கயல்


"இந்த நல்ல நேரத்துல இன்னொரு குட் நியூஸ் ஷேர் பண்றேன்  விரும்பறேன் .. எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயி இருக்கு ... நெக்ஸ்ட் வீக் கல்யாணம் ..."  என்றாள் லேசான வெட்கத்தோடு.


" வாவ் கங்கிராஜுலேஷன்ஸ்..."  என்று குழுமியிருந்தவர்கள்  ஒருசேர கோரஸ் பாட,  உடனே ஸ்ரீ,


" கயல்,  அடுத்த வாரம் எப்ப கல்யாணம்  ... தேதி சொல்லுங்க ..." என்றாள் ஆர்வமாய் .


" 26 ஆம் தேதி ...."  


" ஓ.... இருவத்திஆறா ..... அன்னைக்கு....??"

என்று  ஸ்ரீ தீவிரமாய் யோசிக்க,


" 24 ஆம் தேதி சேலத்துல மாநாடு,  25 ஊட்டில ஊர்வலம் ... 26 ஆம் தேதி நான் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது ..... இல்லையா ஸ்ரீ ...." 


என ஏதோ ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சியை ராணா நினைவு படுத்த,  சுற்றி இருந்தவர்கள் பெருங்குரலெடுத்து சிரித்து ஆரவாரிக்க, பதில் சொல்ல முடியாமல்,  ஸ்ரீ புன்னகைத்த படி தலை குனிந்து கொண்டாள். 


வரலாற்றை கிமு கிபி என்று பிரிப்பது போல்,  ராணாவின் நடவடிக்கைகளை  ஸ்ரீப்ரியாவின் வருகைக்கு முன் வருகைக்குப் பின் பிரித்தால் சரியாக இருக்கும் என்று தோன்றும் அளவிற்கு

இறுகிய முகம், அளந்து  பேசும் வார்த்தைகள்,  உறுத்துப் பார்க்கும் விழிகள் எல்லாம் காணாமல் போய்,  ஏதோ காதல் மன்னன் போல அவன் காட்சியளிப்பது, அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் முழுவதுமாக கவர,  அப்போது அவனது அலைபேசி சிணுங்கியது. 


அதில், 


உன்னைக் கண்டு எண்ணம் யாவும் மெல்ல

ஊமையாகி நின்றதென்ன சொல்ல

நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா ...


எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ

அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்

நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா ...



என்ற திரைப்படப் பாடல் வரிகள்  ரிங் டோனாய்  ஒலிக்க,  அழைப்பை அனுமதிக்காமல் அந்த வரிகளில் லயித்தபடி  ராணா ஸ்ரீயையே உற்றுப் நோக்க, 

இத்தனை நாட்களாக அரைகுறை சந்தேகத்தில் இருந்த மோனிஷாவிற்கு

அந்தக் கணமே அனைத்தும்  வெட்ட வெளிச்சம் ஆகிப்போக,


" ராணா  ஃபோன் ...." என்றாள் அவனை ஸ்மரணைக்கு  கொண்டு வர .


கண்ணிமைக்கும் நேரத்தில் சுய உணர்ந்தவன்,


" வெல்டன் கைஸ் .... ஹவ் எ நைஸ் டே ...    ஒன்ஸ் அகைன் அட்வான்ஸ் கங்கிராஜுலேஷன்ஸ் கயல் ....  உங்க மேரேஜ் இன்விடேஷன எனக்கு  ஷேர் பண்ணுங்க ..." என ராணா விடை பெற 


" ஷுயோர் ராணா..."  என கயல் முடிக்க, ஸ்ரீயின் அலைபேசி சிணுங்கியது .


வீரா அழைத்திருந்தான். 



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ...


Dear Friends,


Happy new year to all ...

With Love 

Priya Jagannathan













































































Comments

Post a Comment