ஸ்ரீ-ராமம் -116

 அத்தியாயம் 116 


அவள் முகம் மாற்றத்தை கண நேரத்தில் உணர்ந்து கொண்டவன்,


"ஓகே,  ஜோக்ஸ் அப்பார்ட் .... லெட்ஸ் டாக் சீரியஸ்லி ...  லிசன்... யு எஸ் ஏ  அக்கவுண்ட், ஜெர்மனி அக்கவுண்ட்னு ரெண்டு ப்ராஜெக்ட்ஸ் இருக்கு .... இதுல ஏதாவது ஒரு கிளைன்ட் இன்டர்வியூ கிளியர் பண்ணிட்டன்னா , இஷ்யூ சால்வ்டு ........ ஆனா ஒரு விஷயம்,  இந்த ரெண்டுல எந்த ப்ராஜெக்ட்ட நீ செலக்ட் பண்ணாலும் மினிமம் 6 மந்த்ஸ் டு ஒன் இயர் ஆன்சைட் போக வேண்டி வரும் ..." 


என்று அவன் 'செக்' வைத்து முடிக்க , ஒரு கணம் செய்வதறியாது திணறி போனவள் கண நேரம் அமைதிக்குப் பிறகு 


"அது சரி வராது சார்...."  என தயங்க 


"கால் மீ ராணா ...." என்றான் அவள் விழிகளுக்குள்  நோக்கி.


அவள் மௌனியாக சிந்தனையில் மூழ்க, அவளது முகமாற்றத்தை அணு அணுவாக உள்வாங்கிக் கொண்டவன்,


"மே ஐ சஜஸ்ட் ஒன் திங்க் ..." என்றதும்


அவள் விழிகளில் லேசான ஆர்வ ரேகைகள் படர , அதுதான் தருணம் என 


"ஒய் டோன்ட் யு ஸ்விட்ச் ஓவர் டு மேனேஜ்மென்ட் சைட் ..."  என்றான் தெளிவாக.


"மேனேஜ்மென்ட்டா.....???"  


"இதுக்கு இவ்ளோ பெரிய ரியாக்ஷன் கொடுக்கணும்னு  அவசியமே இல்லை ஸ்ரீ ...." என்றான் மென் புன்னகையோடு. 


"அது வந்து ...  என் ஜாப் ப்ரோபைலே கம்ப்ளீட்டா மாறிடுமே ... அதான் யோசிக்கிறேன் ...."


"இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல.... இன்ஃபாக்ட் யூ ஆர் மூவிங் எ ஹெட் இன் யுவர் கரியர்  .... ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்  ட்ரைனிங் எடு .... அப்புறம் டெலிவரி சேல்ஸ்னு படிப்படியா மேல போய்க்கிட்டே இருக்கலாம்..... ஆன்சைட் போகணும்னு அவசியமே கிடையாது ... நீ விருப்பப்பட்டா எதிர்காலத்துல பிசினஸ் பேச போலாம் ... "


அவள் மீண்டும் சிந்தனையில் மூழ்க,


"ஸ்ரீ,  யூ ஆர் தி பெஸ்ட் ரிசோர்ஸ்  .... கருணாகரன்  யூ ஆர் டெக்னிகலி வெரி ஸ்ட்ராங்னு சொன்னாரு  .... எனக்கு கூட நீ அந்த டிசைனை ஹேண்டில் பண்ண விதம் ரொம்ப புடிச்சி இருந்தது....  ஐ டோன்ட் வான்ட் டு லூஸ் யூ .... அதுக்காகத்தான் இந்த ஆல்டர்னேட் வே...."   என்று அவன் முடிக்க,


"எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ...." என்றாள் பெண் குழம்பிய மனநிலையில்.


"இன்னைக்கே சொல்லனும்னு அவசியம் இல்ல நீ நாளைக்கு கூட சொல்லலாம் ..."


"நாளைக்கா .....???"


"என்ன நீ வந்ததுல இருந்து ஒரே ஷாக்கிங்  ரியாக்ஷனாவே கொடுத்துக்கிட்டு இருக்க... 

குயிக் டெசிஷன் மேக்கிங் தான் மேனேஜ்மென்ட்ல ஃபர்ஸ்ட் காம்பிடென்சி  ... சோ, நாளைக்கு ஒரு நல்ல முடிவோட வருவனு  நம்பறேன் ...." என அவன் முடிக்க,  லேசாக இடவலமாக தலையசைத்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினாள் பெண். 


அவள் வெளியேறிய மறுநொடி ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியேற்றி,  தலைமுடியை அழுந்த  கோதி கொண்டவன்,


மது.... உன்னோட இப்படி பேசறது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா......


உனக்கு என் ஞாபகம் கொஞ்சம் கூடவா இல்ல.... ....


ஏற்கனவே உன்னை ஒருமுறை தொலைச்சிட்டேன் .... மறுபடியும் உன்னை தொலைக்க தயாரா இல்ல.... உனக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன் ... 


ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ....  தொலைச்ச வாழ்க்கை  சீக்கிரம் கிடைக்கப் போகுதே....  


என அவனுள் இருக்கும் 22 வயது ராணா முன்னுக்குப் பின் முரணாக உளறி கொட்டி குதூகளிக்க,  அவன் அறையில் இருந்து வெளிப்பட்டவளோ குழப்பத்தின் எல்லையில் குழம்பித் தவித்தாள். 


திட்ட வரைவிலிருந்து வெளியேறியதால், அலுவலக நூலகத்தில் பெயருக்கென்று ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு,  ஏதேதோ சிந்தித்தபடி அன்றைய  பொழுதை  அவள் நெட்டித்தள்ள, மாலையானதும்  அவளை அழைத்துச் செல்ல  வீரா வந்து சேர்ந்தான்.


காரில் ஏறி அமர்ந்ததும்,  


"ஸ்ரீ,  காலையில் ஏதோ சொல்லணும்னு சொன்னயே சொல்லும்மா ..." என்றான் சீட் பெல்ட் அணிந்தபடி.


"நீங்களும் ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே ...."  என அவள் அவன் முகம் பார்க்க,


"நெக்ஸ்ட் வீக் எண்ட், எனக்கு ஒரு  யுகே டிராவல் இருக்கு .... " என்றான் .


"ஐயோ .... ஒன் மந்த் ட்ரிப்பா ...."


"இல்ல இல்ல... ஜஸ்ட் 2 வீக்ஸ் தான் ...."


 அவள் முகம் வாடி போக ,  அதை உள்வாங்கிக் கொண்டவன்,


"நீ சொல்ல நினைச்சத சொல்லு  ...." என்றதும், மடை திறந்த வெள்ளமாய் கௌதமில் ஆரம்பித்து ராணாவுடன் நடந்த பேச்சுவார்த்தை வரை  மேம்போக்காக  அவள்  சொல்லி முடிக்க, 


" சிஇஓவை மீட் பண்ணியா ...."  அவன் ஆச்சரியமாக கேட்க,


"ஆமா......  என்னமோ இந்த கம்பெனி ரூல்ஸ்சாம்.... " அவள் கடுகடுக்க, பொங்கி எழுந்த புன்னகையை  இதழுக்கு அடியில் மறைத்து 


"ஓகே, நீ என்ன முடிவு பண்ணி இருக்க ..."   என்றான் உல்லாசமாய்.


கணநேர யோசனைக்குப் பிறகு 


"எனக்கு என்னவோ,  இந்த  கம்பெனி சிஇஓ பேசின விதமே சரியா படல ...." என்றாள் தடுமாறி. 


"ஏன்... நீ சொல்றதுக்கெல்லாம் நான் தலையாட்டுறேன்னு என் மேல பரிதாப பட்டதால  உனக்கு புடிக்கலையா ..." அவன் குறும்பாக மொழிய,


"ம்ச்... இல்ல ராம் .... அவர் ரூமுக்குள்ள போனதுமே ரொம்ப ஜோவியலா பிஹேவ் பண்ணாரு  ....  அதைவிட எடுத்த எடுப்புல  ஹிந்தியா , பெங்காலியானு  தெரியல ... ஏதோ ஒரு லாங்குவேஜ்ல ரொம்ப சரளமா பேசினாரு ... எனக்கு புரியலன்னு தெரிஞ்சதுக்கப்புறம் தான் தமிழ்ல பேசினாரு....இப்ப தானே உனக்கு  புதுசா கல்யாணம் ஆயிருக்கு  அதனால தான்  உன் ஹஸ்பண்ட் நீ சொல்றதுக்கெல்லாம் தலைய தலையை ஆட்டறாரு... நானும் கல்யாணமான புதுசுல அப்படித்தான் இருந்தேன் இப்ப மாறிட்டேன்னு.... என்னென்னமோ சம்மந்தா சம்பந்தமில்லாம பேசினாரு.... அதெல்லாம் எனக்கு ரொம்ப அப்நார்மலா படுது .... அதைவிட என்னை மேனேஜ்மென்ட்க்கு வேற மாற சொல்றாரு ...."

என்றவளின் வித்தியாசமான மறுஒளிபரப்பை  கேட்டு வாய்விட்டே சிரித்தவன் ,


"ஓவர் எமோஷனல் ஸ்டேட்ல டீம் முன்னாடி கௌதம லெப்ட் அண்ட் ரைட் வாங்கி பெரிய பஞ்சாயத்து  பண்ணிட்டு போயிருக்க ...  சோ உன்னை கூல் டவுன் பண்ணி ஓப்பன் அப்   பண்றதுக்காக கூட  அவர் ப்ரண்ட்லியா  பிஹேவ்  பண்ணி இருக்கலாம் ... என் சீனியர் கூட தான் லாஸ்ட் டைம் ஆஸ்திரேலியா ட்ரிப்புக்கு வைஃபை  கூட்டிகிட்டு போன மாறி இந்த முறை யூகேக்கும்  கூட்டிட்டு  போற பிளான் இருக்கான்னு கேட்டு பயங்கரமா ஓட்டிட்டாரு ... இதெல்லாம் ரொம்ப காமன் மா.... ... அதுவும் வயசானவங்க அப்படி பேசறது எல்லாம் ரொம்ப சாதாரண விஷயம் ...."


"அவர பார்த்தா ரொம்ப வயசான மாதிரி தெரியல ராம்....  மேக்சிமம் 40 மாறி தோணுச்சு..." 


"ஓகே .... ஆனா ஒன்ஸ் ப்ராஜெக்ட்ட பத்தி பேச ஆரம்பச்சதும், பர்சனலா வேற ஏதாவது பேசினாரா  ..."


"இல்ல...  எதுவும் பேசல ....  ப்ராஜெக்ட்ட பத்தி மட்டும் தான் பேசினாரு .... என்னை மேனேஜ்மென்ட்க்கு மாற  சொல்லி அட்வைஸ் பண்ணாரு அவ்ளோ தான் ..." 


"அப்ப நான் சொன்னது  சரி தான் .... உன்னை ரிலாக்ஸ் பண்றதுக்காக தான் ஸ்டார்டிங்ல  ப்ரண்ட்லியா பேசி இருக்காரு... சரி அத விடு,  மேனேஜ்மென்ட்க்கு ஸ்விட்ச் ஓவர் ஆகறத பத்தி என்ன முடிவு பண்ண...."


"நோ ஐடியா  .... நீங்களே சொல்லுங்க என்ன பண்ணலாம் ..."


"என்னை பொறுத்த வரைக்கும்,  தப்பு ஒன்னும் கிடையாது ....  ஆனா  பேசிக்கலி  நீ டெக்கி , சோ உனக்கு   முதல்ல ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் கொஞ்சம் கஷ்டமா  இருக்கும் ... நிறைய ஹார்ட் வொர்க் பண்ணா , யூ கேன் டூ வொண்டர்ஸ்  ...."


என்று அவன்  பேசிக் கொண்டு இருக்கும் போதே, கார் வீட்டை அடைந்தது.


இருவரும் இறங்கி வீட்டிற்குள் நுழைந்த மாத்திரத்தில், கூடத்தில் அமர்ந்திருந்த அகல்யா,


"பாண்டி,  வர வாரம்,  என் அம்மா இங்க வரப் போறாங்களாம் ....  அண்ணன் இப்பதான் போன் பண்ணி இருந்தாரு ..." என சொல்ல 


" யாரு சுந்தராம்பாள் பாட்டியா ....?.."  வீரா வினவ 


" பின்ன வேற யாரு....."  என அகல்யா சொன்னதுமே இளையவர்களின் வயிற்றில்  புளி கரைக்க, சற்றும் தாமதிக்காமல் இருவரும்   புத்துணர்வு பெற்று வருவதாக சொல்லிவிட்டு  இடத்தை காலி செய்தனர்.


அறைக்கு வந்ததும், 


"ஸ்ரீ, உனக்கு மேனேஜ்மென்ட் சைடு போக பிடிக்கலைன்னா,  ஆர்க்கிடெக்டாவே கண்டினியூ பண்ணு .... ஆன்சைட் போற மாறியான சிச்சுவேஷன் வந்தா பாத்துக்கலாம் ... இல்ல இந்த ஆபீசே பிடிக்கலைன்னா ,  பேப்பர் போட்டுடு ... என் ஆஃபீஸ்ல   ஓப்பனிங்ஸ் இருக்கான்னு பாக்கறேன்... அப்படி இல்லன்னா ஒரு டூ மந்த்ஸ் வெயிட் பண்ணு  , நிச்சயம் ஓப்பனிங்ஸ் வரும்,  நீ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு ஜாயின் பண்ணிக்கலாம் ..." என அவளவன் அலமாரியில்   உடையை  தேடிக்கொண்டே சொல்ல, உறைந்து நின்றாள் பெண். 


அகல்யாவை சமாளிக்கவே  கடினப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சுந்தராம்பாளின் வரவு,  அவளை மேலும் கதி கலங்க வைக்க,  தீவிர சிந்தனையில் மூழ்கி போனாள் .


அவள் கர்ப்பம் தரிக்காததை சுட்டிக்காட்டி ஏற்கனவே அகல்யா மறைமுகமாக வசை பாடிக் கொண்டிருக்கும் நிலையில்,  சுந்தராம்பாளும்  இணைந்து கொண்டால் சொல்லவே வேண்டாம் ....


அதுவும் வேலையை விட்டுவிட்டு முழு நேரம்  வீட்டில் இருக்கும் பட்சத்தில் வார்த்தை அம்புகள்  மணிக்கு மணி நொடிக்கு நொடி குத்தி கிழிக்க நேர்ந்தால், வாழ்க்கையே வெறுத்துவிடும்  ...


அதை  விட,  தன்னவன் இல்லாத அந்த இரு வாரங்களை, இவர்களுடன்  முழுக்க முழுக்க கழிக்க முற்பட்டால்   வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு  விபரீதங்கள் விளைந்து நரகமே மேலென்று ஆகிவிடும்  நிலை வந்தாலும் வரலாம் ....


என்றெல்லாம் யோசித்தவள், 


"மேனேஜ்மென்ட்க்கு சுவிட்ச் ஓவர் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன் ராம் ... நீங்க சொன்ன மாறி  முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் .... போகப்போக எல்லாம் சரியாயிடும்னு தோணுது ...." 


என்றாள் வாணலிக்கு பயந்து கொதிக்கும் எண்ணெய்யில் விழப் போகிறோம் என அறியாமல். 


"ம்ம்ம்..... குட் டெசிஷன் ...." என்றபடி குழைந்து கொண்டே , அவள் இடைப்பற்றி அவன்  இழுத்தணைக்க, அவனோடு இயல்பாக ஒன்றியவள், 


"ராம்,  நான் டின்னர் ப்ரிப்பேர் பண்ண  போகணும் .... இந்த கொஞ்சல் உரசல் எல்லாம்  அப்பறமா வச்சுக்கலாமே ..." என அவள் அவன்  கன்னம் கிள்ளி கொஞ்ச, 


"அம்மா,  செஞ்சு வச்சிருப்பாங்க டி... வா சாப்பிட போலாம் ...."  என்றான் அகல்யாவின் சமீபத்திய மாற்றம் அறியாமல்.


அவள் பதில் பேசாமல்,  அவனோடு கீழ் தளம் வர, எதிர்பார்த்தது போலவே, அவளைக் கண்டதும் 


"சப்பாத்தி,  தால்  செஞ்சிடும்மா...." என்றார் அகல்யா , கைபேசியில் கண் வைத்தபடி. 


அவள் அடுக்களைக்கு செல்ல, பின்தொடர்ந்தவன் 


"நான் சப்பாத்திக்கு மாவு பிசையறேன் .... நீ  தால் ரெடி பண்ணு ..." 


என்றபடி அதற்கான பணியில் இறங்க முற்படும் போது,


"நீ என்னப்பா இங்க பண்ணிக்கிட்டு இருக்க ..."  என்றார் அகல்யா அங்கு வந்து. 


"அவ தனியா செஞ்சா லேட் ஆகும் அதான் கூட ஹெல்ப் பண்ணலாமேனு...."


" இது என்ன புது பழக்கம் ...."


"புது பழக்கமா ..... எத்தனையோ நாள் உனக்கும் ஹெல்ப் பண்ணி இருக்கேனே ம்மா..." மகனின் பதிலால் அகல்யாவின் முகம் மொத்தமாய் விழுந்து விட, சுதாரித்தவர் 


"இப்ப தானப்பா ஆபீஸ்ல இருந்து வந்த ....    டயர்டா இருப்ப ... போய் ரெஸ்ட் எடுத்துக்கலாம் இல்ல ... "  என்று பேச்சை மாற்ற,


"இவளும் தானம்மா  ஆபீஸ்ல இருந்து வந்து இருக்கா .... அவளுக்கும் டயர்டா தான  இருக்கும் ... "


"இப்ப புரியுதா .... பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பினா,  வீட்டு வேலை செய்ய வேண்டிய நிலைமை வரும்னு ..." 


"நானே வேலை செய்யறத பத்தி கவலைப்படல... நீ ஏம்மா கவலைப்படற..... இவளும் என்னை மாதிரி தானே நாள் முழுக்க உழைச்சிட்டு வந்திருக்கா ... கூட மாட ஹெல்ப் பண்ணா தானே வேலை முடியும் ... அவ ஒன்னும் அவளுக்காக மட்டும் சமைக்கலையே நம்ம எல்லாருக்காகவும் தானே செய்யறா..."


"அப்ப .... நாள் முழுக்க நான் வீட்ல வெட்டியா இருந்துகிட்டே  வேலையும் செய்யாம இருக்கேன்னு மறைமுகமா சொல்றயா...."


அதுதான் தருணம்  என அகல்யா வெடுக்கென்று வார்த்தைகளை விட ,


"ஏண்டி வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா .... ஒன்னு நீ சமச்சி வச்சிருக்கணும்..... இல்ல சமைக்கிறவங்களுக்கு ஒத்தாசை பண்ணனும்.... இது எதுவும் செய்யாம,  செய்யறவனையும் செய்யவிடாம,பெரிய பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்க ..." என பொன்னம்பலம் கர்ஜிக்க,உடனே வீரா தாயைப் பார்த்து,


"அம்மா...  நீ எதுவும் செய்ய வேண்டாம்மா.... நாங்க  சமையல பார்த்துக்கிறோம்... இன்னும் பத்து நிமிஷத்துல டின்னர் ரெடி ஆய்டும் ..." 

என்றான் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக.


இரவு உணவு தயாரானதும்,  வீரா இயல்பாக பொன்னம்பலத்துடன்  பேசிக்கொண்டே  உணவருந்த, ஸ்ரீ வழக்கம் போல் ரெண்டு சப்பாத்தியை வேகமாக உண்டு  முடிந்துவிட்டு அடுக்களையை சுத்தம் செய்ய செல்ல,  அகல்யா  முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, தட்டை மட்டும் பார்த்தபடி உண்டு விட்டு விறு விறுவென்று இடத்தை காலி செய்தார்.


இரவின் தனிமையில்,


"டெய்லி நீ தான் சமைக்கிறேன்னு  சொல்ல மாட்டியா ...."  என்றான் படுத்த படி தன் மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்து.


"சொன்னா,  ஹெல்ப் பண்றேன்னு வருவீங்க .... கடைசில இன்னைக்கு மாறி பிரச்சனை தான் வரும் ..." 


"ஆபீசுக்கும் போயிட்டு வந்துட்டு,  வீட்ல ரெண்டு வேலை சமைக்கணும்னா ரொம்ப கஷ்டம் பட்டு ...."


"வீட்டு வேலை செய்ய செய்ய பழகிடுங்க... வயசான காலத்துல அத்தையை ரொம்ப எதிர்பார்க்க கூடாது... அதோட அவங்க லாஸ்ட் டைம் மாறி ஊருக்கு போய்ட்டா நான் தானே செஞ்சாகணும் ..." 


என்றபடி அவன் வெற்று மார்பில் அவள் முகம் பதித்துக் கொள்ள,  வாகாய் அணைத்தவனின் மனதில் , தாயின் பேச்சு திரைப்படமாய் ஓடின.


என் பேச்சை  மீறி  அலுவலக வேலைக்கு செல்வதால்,  இனி வீட்டு வேலையும்  நீ தான் செய்தாக வேண்டும் ... என்று திட்டம் தீட்டி காய் நகர்த்துவது போல் அது தெள்ளத் தெளிவாக தெரிய,  உடன் சுந்தராம்பாள் வருகையும் மனதை உறுத்த ,


"பட்டு,  நீ என்னோட யூகே வர்றியா..." என்றான் தீவிர யோசனையில். 


களுக்கென்று சிரித்தவள் ,


"போன தடவை என்ன சொன்னீங்க .... இனிமே நான் தனியா ட்ராவல் பண்ண பழகிக்கணும்னு சொன்னீங்களா இல்லயா... ... இப்ப மறுபடியும் என்னை கூப்பிட்டா என்ன அர்த்தம் .... அதோட இப்ப தானே நான் வேலைல ஜாயின் பண்ணி இருக்கேன் ..." 


"இல்ல .... பாட்டி வேற வருது ... ஏதாவது கேள்வி மேல கேள்வி கேட்டு படுத்தும் ... நான் வேற ஊர்ல இல்லன்னா சொல்லவே வேணாம் ..... ..." என்றவனின் பேச்சை இடைவெட்டி 


"நோ ஒரீஸ் ..... எல்லாத்தையும் நான் மேனேஜ் பண்ணிப்பேன் ...."  என்றாள் நயமாக. 


தன்மையாய் பேசிய தாரத்தை தன்னோடு மேலும் இறுக்கியபடி 


"சொல்ல மறந்துட்டேன் .... வர வாரம்  ஸ்ரீனியோட கல்யாணம் ஊட்டில நடக்க போகுது ....  நாம ரெண்டு பேரும் ஒரு நாள் முன்னாடியே கிளம்பி போகணும் ..."


"வாவ்,  நம்ம கல்யாணத்துக்கு கூட வந்திருந்தாங்க இல்ல ..." 


"ஆமாண்டா ..." என்றபடி ஸ்ரீனியின்  முன் கதை சுருக்கத்தை மேம்போக்காக சொன்னவனின் கரம், அவள் இடையை தாண்டி முன்னோக்கி பயணிக்க ,


"இது என்ன பேட் டச் ...."  என்றாள் பெண் நாணத்தோடு. 


"ராத்திரி 10 மணிக்கு குட் டச் பண்ணா தான் டி தப்பு.... பேட் டச் பண்ணா தப்பே இல்ல ..." எனக் குறும்பாக மொழிந்தவன், தன் பெயருக்கேற்றார் போல்,  கலவியில் கூட தன் வீரப்பிரதாபத்தை விஸ்தாரமாக நிலைநாட்டிவிட்டே கண்ணயர்ந்து போனான். 



மறுநாள் காலை பரபரப்பாக விடிந்தது.


முன் இரவு போல்,  மனையாளுக்கு  அவன் அடுக்களையில் உதவ , பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவின் முகத்தில் எண்ணெய்  இல்லாமலேயே எள்ளும்  கொள்ளும் வெடிக்க, அதைக் கண்டும் காணாதது போல்,


"ஸ்ரீ நீ போய் சாப்பிடு ..... நான் லஞ்ச் பாக்ஸ் பிரிப்பர் பண்ணிட்டு வரேன் ..." என்றவன்  அனைத்தையும் செய்து முடித்த கையோடு,  தன்னவளுடன் இணைந்து உண்டு முடித்துவிட்டு  அவளை அழைத்துக் கொண்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டான் .


அலுவலகத்தை அடைந்தவள் முதல் வேலையாக மோனிஷாவிடம் ராணாவை சந்திக்க முன் அனுமதி கேட்க, செய்தி அறிந்தவன்,  சிறகில்லாமலேயே விண்ணில் பறந்தபடி  , அடுத்த கணமே அவளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்க ஏதோ ஒரு ஒவ்வாத உள்ளுணர்வு ,  மறைமுகமாக தடுக்க முயல மொழிபெயர்க்க முயன்று தோற்றபடி அவன் அறை கதவை திறந்து கொண்டு பிரவேசித்தாள்.


"குட் மார்னிங் ...." என்று கம்பீரமாக மொழிந்தவன் முன் தினத்தை  காட்டிலும்  உற்சாகத்தோடு தென்பட ,


"குட் மார்னிங் சா.... ராணா..." என்றாள் தடுமாறி.


"மொதல்ல உக்காரு .... இப்ப சொல்லு...  என்ன முடிவு எடுத்திருக்க ..."   என்றான் அவள்  முகத்தில் இருந்து பார்வையை விளக்காமல். 


வந்தவள் தன்  முடிவை சொல்ல,  


"குட் டெசிஷன் ஸ்ரீ ....   மேனேஜ்மென்ட் ட்ரெய்னி கயல்விழி உனக்கு கைடு  பண்ணுவாங்க ... " என்றவன் உள் தொலைபேசியில் மோனிஷாவிற்கு அழைப்பு விடுக்க, அடுத்த கணமே அவள் பவ்யமாக அங்கு வந்து நிற்க, அவளுக்கு ஸ்ரீயை அறிமுகப்படுத்திவிட்டு


"மோனிஷா,  உங்க கேபின்க்கு ஆப்போசிட்ல இருக்கிற   நியூ  கேபின்ல , இவங்களோட  வொர்க் ஸ்டேஷன செட் பண்ணிடுங்க ...."

என்றவன் 


"ஸ்ரீ, உனக்கு  ஏதாவது வேணும்னா மோனிஷா கிட்ட கேளுங்க அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க .... ஆல் தி பெஸ்ட்  ..." என்றான் அவள் விழிகளை பார்த்து .



"தேங்க்யூ ...."   என மென் புன்னகையோடு மோனிஷாவுடன்  விடை பெற்றவள், தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த  புதிய கேபினில் சென்றமர,  மோனிஷா மிகுந்த தோழமையோடு அவளுக்கு தேவையான  வசதிகளை செய்து தந்துவிட்டு செல்ல, சற்று நேரத்திற்கெல்லாம் கயல்விழி  வந்து தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டாள்.


 மதுரையை அடுத்த சிவகங்கையை சேர்ந்தவள்.  ஸ்ரீயை விட ஒரு வயது இளையவள். அருமையான பெண்ணாகத் தெரிந்தாள்.  ஒளிவு மறைவு இல்லாமல் திட்ட வரைவு  மேலாண்மையை குறித்து தனக்குத் தெரிந்ததை மொழிந்தவள்,


"எனக்கு டூ இயர்ஸ் தான் எக்ஸ்பீரியன்ஸ்  .... உங்களுக்கு பேசிக் டாக்குமெண்ட்ஸ் அனுப்பறேன் படிச்சு பாருங்க .. டவுட்ஸ் எதாவது இருந்தா கேளுங்க ...."  என்றவள் சொன்னது போலவே ஸ்ரீயின் மின்னஞ்சலுக்கு அடிப்படை விபரங்களை அனுப்பி வைத்தாள்.


ஸ்ரீக்காக ஒதுக்கப்பட்டிருந்த கேபின்  அந்த அறையின் கடைசி பகுதியில் மிகுந்த காற்றோட்டத்தோடு,  அதிக மக்கள் நடமாட்டம் இல்லாமல்,  ஏறக்குறைய ஒரு தீவு போல் அமைக்கப்பட்டிருந்தது.


அந்த ஏகாந்தம் ,  நிம்மதியை தர, உடனே தன் கணவனிடம் ராணாவை பற்றி கூறியது நினைவுக்கு வர,


ராம் சொன்னது ரொம்ப சரி .... இப்ப கூட அபிஷியல் தவிர ராணா வேற எதுவுமே பேசல....நான் தான் தேவை இல்லாம அவர தப்பா நினைச்சுட்டேன் போல .... என மனதுக்குள் பேசிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது.


அவளது பழைய நிறுவனத்தில் , உயர் அதிகாரிகள் உட்பட  யாருமே அவளை ஒருமையில் விளித்ததில்லை ... 


ஆனால் ராணா அவளை ஒருமையிலும் , மோனிஷாவை பன்மையிலும் அழைத்தது வித்தியாசமாகப்பட,  சில மணித்துளிகள் சிந்தித்தவள், மோனிஷா ஏறக்குறைய 30 வயதை  கடந்தவர் என்பதால்  அவரை பன்மையில் விளித்திருக்கலாம் ... என தனக்குத்தானே எண்ணிக்கொண்டு வேலையில் மூழ்க,  அவனோ தன் அறையில்  அவளைப் பார்ப்பதையே வேலையாக செய்து கொண்டிருந்தான்.


ஸ்ரீயின் புதிய கேபினின்  இரு புறங்களிலும் வெவ்வேறு கோணங்களில் அதிநவீன   மைக்ரோ கேமராக்களை பொருத்தி அவளை அணு அணுவாக கண்காணித்துக் கொண்டிருந்தவன்,

மது,  நேவி ப்ளூ  சல்வார்ல இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க ....  தேங்க்யூனு கன்னக்குழி தெரியிற மாறியான அந்த   சிரிப்பு ... சோ க்யூட் ....  என்று மனதோடு பேசிக் கொண்டவனின் பார்வை, அவள் கழுத்தில் இருந்து ஒவ்வொரு அங்கங்களையும் அளவுகோல் இல்லாமலேயே சுவாரசியமாக அளக்க தொடங்கின .


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



ஊட்டியில் ......



ராஜா கால பஞ்சனையில் நீட்டி படுத்திருந்த ராம் சரணின் வயிற்றின் மேல்,  குறுக்காக தலை வைத்து படுத்த படி  அவன் பெண்ணரசி ஏதேதோ பேச,  அவனும் அவள்  தலைக்கோதிக்கொண்டே பதில் அளித்துக் கொண்டிருக்க,  அதனை இரவு விளக்கொளியில் கண்களில் மெல்லிய நீர் திரையிட, சற்று தள்ளி ஒருக்களித்து படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் லட்சுமி. 


நாட்கள் நெருங்க நெருங்க,  அந்தப் பாட்டி சொல்லி சென்றது பலித்து விடுமோ என்ற இனம் புரியாத  பயம் அவளை வாட்டி வதைக்க, அதனை தன்னவனிடம் கூட பகிர மாட்டாமல்,  உள்ளுக்குள்ளேயே வைத்து மருகிக் கொண்டிருந்தாள் பெண் .



பரிசம் போட்ட நாட்களில் இருந்தே ஆருயிர் கணவன் மீதான அவள் காதல் வரையறைக்குள் வராத ஒன்று ...


 நேரம் காலம் அறியாமல் அவன் கோபப்பட்ட தருணங்களிலேயே கடுகளவும் குறையாத காதல்,  தற்போது அவளை தாங்கு தாங்கு என்று தாங்கும் பொழுது குறைந்து விடுமா என்ன ....


பல்கி பெருகி பன்மடங்காக அது  பட்டொளி வீசி பறக்க ...


அவர்களது  குட்டி ராணி ,  தொடக்க கால அவர்களது காதலுக்கு ஆதாரமாகி போக ....


வரவிருக்கும் இரு சிசுக்களும் அவர்களது எதிர்காலம் ஆகிப்போக ...


என அவள் கனவு கண்ட  வாழ்க்கையை கடந்த 4 மாத காலமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  அதற்கும் காலன் காலாவதி தேதியை குறித்து விட்டான் என்ற எண்ணமே,  நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் கலங்கடிக்க, தனக்குள்ளேயே தளும்பினாள் பெண் .


உலகிலேயே மிகவும் கொடுமையான ஒன்று,  இனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, தான் இறக்கப் போகும்  செய்தியை அறிந்து கொள்வது தான் ....


அந்தக் கொடுமையை வகைத்தொகை இல்லாமல் அனுபவித்துக் கொண்டிருந்தவள் மெல்ல தன் வலக்கரத்தை நீட்டி,  கணவனின் அடர்ந்த சிகையை  கோத,  மகளின் மழலையில் மயங்கி இருந்தவன் வெடுக்கென்று திரும்பிப் பார்க்க,  இரவு விளக்கொளியில் வைரமாய் மின்னிய அவளது கண்ணீர் மணிகள் அவன் கண்களில் பட,


" ஏய் லட்சுமி,  என்ன பண்ணுது ...."  என்றான் பதறியப்படி.




எத்தனையோ தருணங்களை கொஞ்சல்கள் கூடல்களில் கழித்திருந்தாலும், இப்படி வாஞ்சையாய்  உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவள் அவனது  கேசம் வருடிய தருணம் இதுவே முதல்முறை என்பதால் அவனுக்கே வித்தியாசமாகப்பட,


"வயிறு வலிக்குதா ... என்ன பண்ணுது சொல்லுடி ...." என அவன் மேலும் படபடக்க, திரும்பி இருந்தவனின் மார்பில் அவள் மௌனமாய் முகம் புதைத்துக் கொண்டு விம்மினாள்.


அவள் இப்படி அவனைத் தேடியது ... 

இதுவரையான அவர்களது வாழ்வில் இரு முறை மட்டுமே ....


ஒன்று முதல் குழந்தை கலைந்த போது ....


இரண்டாவது தற்போது ...


கண நேரத்தில் காரணத்தை புரிந்து கொண்டவன் ,


"அந்த பாட்டி சொன்னது  எதுவுமே பலிக்காது  லக்ஷ்மி .... பயப்படாத... நான் தான் உன் கூட எப்பவுமே இருக்கப் போறேனே.... அடுத்த வாரம் ராமலக்ஷ்மி கல்யாணம் முடிஞ்சதும்,  ரெண்டு மாசம் லீவு எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் ...." 

என்றான் அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டு, விதி ஒன்றை நினைத்து விட்டால்,

மதி கொண்ட மனிதனால் கூட அதனை மாற்றி விட முடியாது என அறியாமல். 


 மரண காலம் நெருங்கும் போது அவளது மன்னவனை அருகில் இருக்க விடாமல்  செய்துவிட , பெரும்  திட்டங்களோடு விதி காத்துக் கொண்டிருக்க, அதை உணராமல்  மனையாளை கட்டி அணைத்துக்கொண்டு ஆழ்ந்த நித்திரையை தழுவினான் ராம்சரண்.

மறுநாள் காலையில் லட்சுமி பரபரப்பாக தொழிற்சாலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.

சமீப காலமாக அவளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ராம்சரண் தான்  தொழிற்சாலை மற்றும் எஸ்டேட்  பணிகளை ரங்கசாமியின் வழிகாட்டுதலின் பேரில் ஏற்று நடத்தி வந்தான்.

 தேயிலை தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் வருடா வருடம் மேற்கொள்ளும் சோதனையை அன்று மேற்கொள்ள  வருவதாக தகவல் கிட்ட,   ரங்கசாமி ஊரில் இல்லாததால்  , அவர்களது நிறுவனத்தின் சட்ட ரீதியான அடுத்த பங்குதாரர் என்ற முறையில் லட்சுமி அந்த இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட,  அவளை அழைத்துக் கொண்டு தொழிற்சாலைக்கு பயணமானான் ராம்சரண்.


 இரண்டு  மணி நேரத்திற்குள்ளாகவே அதிகாரிகள்  தொழிற்சாலையில் அனைத்து தர பரிசோதனைகளையும் செய்து முடித்து  விட்டு,  தேயிலைகளின் தரத்தை அறிய தோட்டத்திற்குச் செல்ல திட்டமிட,


"லக்ஷ்மி,  நான் குவாலிட்டி இன்ஸ்பெக்டர்ஸ்ஸோட எஸ்டேட் வரைக்கும் போய்ட்டு  வந்துடறேன்... அதுவரைக்கும் நிம்மதியா நீ இங்க ரெஸ்ட் எடு சரியா ..."  என்றவன் அதிகாரிகளோடு விடைபெற்ற பத்தாவது நிமிடத்தில் ரிஷியின்  கார் அங்கு வந்து நின்றது.


சில மணித்துளிகளுக்கு பிறகு மேலாளர் முத்துராமன் லட்சுமியின் அலுவலக அறைக்கு வந்து,


"மேடம்,  அன்னைக்கு ஒருத்தர் வந்திருந்தாரே அவரு  வந்திருக்காரு .... உங்கள பாக்கணும்னு சொல்றாரு ..."  என்றார் பவ்யமாய் .


"யாரு என்னனு விசாரிச்சீங்களா ...."


"பேரு ரிஷி .... கோயம்புத்தூர்னு சொன்னாரு  மேடம் ..."


லட்சுமியின்  முகம் கோபத்தில் செந்தணலாய் தகதகக்க,


"வர சொல்லுங்க ...."  என்றாள் கடுமையான குரலில். 



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

































































 












  















 













  














Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  2. Very very nice sis. Both villains entry in this ud. இனிமேல் தான் கதை fast uh neraya twist oda poga poguthu... The game begins

    ReplyDelete

Post a Comment