அத்தியாயம் 103
1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, சில லட்சம் சிந்தி இனக் குடும்பங்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் , மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய பகுதிகளில் குடியேறியது.
அப்படி ராஜஸ்தானில் கோட்டா நகரத்தில் குடியேறியவர் தான் ராணாவின் தாய் வழி தந்தை ராஜ்குமார் மோட்வானி.
ராஜஸ்தானில் சம்பல் ஆற்று படுகையில், வளமாக அமைந்திருக்கும் மூன்றாவது பெரிய நகரம் தான் கோட்டா.
அங்கு ராஜ்குமார் மோட்வானி முதலில் சிறிய ஜவுளிக்கடை ஒன்றை தொடங்கினார். அதில் தரமான பனாரசி பட்டு, ஜெய்ப்பூர் ராஜஸ்தானி பட்டு, பாந்தினி, சந்தேரி , ராஜஸ்தானி கம்பளங்கள், கைவினைப் பொருட்களை ஆகியவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து நியாய விலைக்கு விற்பனை செய்தார்.
அதன் விளைவாக குறுகிய காலத்திலேயே, தான் இருக்கும் நகரத்திலேயே மூன்று கிளைக் கடைகள் திறக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றார்.
அவருக்கு ஒரே ஒரு மகள் தீபிகா மோட்வானி. படிப்பில் படு புத்திசாலி. தான் தான் படிக்கவில்லை தன் மகளாவது படிக்கட்டும் என்ற எண்ணத்தில் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.
அப்போது அந்த ஊருக்கு வங்கி மேலாளராக தன் 28 வயதில் முதன் முறையாக பதவி உயர்வு பெற்று பணி மாற்றத்தில் வந்தவன் தான் ஆதிகேசவன்...
தமிழ்நாட்டைச் சார்ந்தவன்.... தஞ்சாவூர் காரன் ... அவனுடைய சிறு வயதிலேயே தாய் தவறி விட்டதால், தந்தை அவனுக்கு தீவிரமாக பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டிருந்த சமயம் அது ...
ராஜ்குமார் மோட்வானி, வங்கி கடன் சம்பந்தமாக பலமுறை அவனை சந்தித்து, அவனிடம் கடன் பெற்று தன் வியாபாரத்தை விரிவு படுத்தினார்.
வாங்கிய கடனை குறித்த நேரத்தில் வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்தியதால், ராஜ்குமார் ஆதிகேசவனுக்கிடையே வயது வித்தியாசங்களை தாண்டி ஒரு விதமான நட்பு நிலவ, காலப்போக்கில் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் விருந்து உண்ண அழைக்கும் அளவிற்கு உறவு பலப்பட்டு போனது.
இந்த நிலையில், தீபிகாவிற்கு ஆதிகேசவனை பிடித்துப் போக, இருவருக்கும் இடையே ஆழமான காதல் வேர் விட்டு வளர தொடங்கியது.
விஷயம் அறிந்த ராஜ்குமாருக்கு இனம், ஜாதியை தாண்டி ஆதிகேசவனை நிராகரிப்பதற்கு பெரிதாகக் காரணங்கள் ஏதும் இல்லாததால் படித்த தன் மகளுக்கு படித்த நல்ல வேலையில் இருக்கும், நற்குணங்கள் கொண்ட ஆதிகேசவனை அதிக யோசனை ஏதுமின்றி மணமகனாக தேர்வு செய்து ஒரு சுபயோக சுப தினத்தில் மணம் முடித்து வைத்தார்.
திருமணம் முடிந்ததும் தீபிகா, ஆதிகேசவனோடு பெங்களூருவில் குடியேறினாள்.
ஓராண்டிற்கு பிறகு ராகேஷ் பிறக்க, மூன்றாண்டுகள் கழித்து பிறந்தவன் தான் ராணா பிரதாப்.
இரண்டு பேர பிள்ளைகளைப் பார்த்த சந்தோஷத்தில், ஆதிகேசவனின் தந்தை இறைவனடி சேர, தஞ்சாவூரில் இருந்த தந்தையின் நிலப்புலன்களை பார்த்துக் கொண்ட படி, பெங்களூருவிலேயே தங்கிவிட்டார் ஆதிகேசவன்.
ராகேஷ், ராணா பிரதாப் வளர வளர, ராஜ்குமாரின் சொத்தும் செல்வாக்கும் கோட்டா நகரத்தில் பன்மடங்கு உயரத் தொடங்கியது.
ராஜ்குமாரின் ஆத்ம நண்பன், காரியதரிசி, குமாஸ்தா எப்படி அழைத்தாலும் அதற்கு சொந்தக்காரர் ஒருவர் தான் அவர் தான் தனுஷ் சிங். திலக்கின் தந்தை.
தாய் வழி தாத்தா ராஜ்குமாரை பார்க்க ராகேஷும் ராணாவும் பள்ளி விடுமுறையில் கோட்டா நகரத்திற்கு வரும் போதெல்லாம் திலக்கை சந்தித்து நட்பு பாராட்டுவது வழக்கம் ....
திலக்கின் வீடும், அருகே இருந்ததால், பாட்டனை பார்க்க வரும் போதெல்லாம் , திலக் உடன் தான் பெரும்பாலும் நேரத்தை செலவழிப்பான் ராணா.
தன்னை விட நான்கு வயது பெரியவன் என்றாலும், அவனிடம் காணப்பட்ட விசுவாசம், அன்பு, பொறுமை, நேர்மை போன்ற உயர்குணங்களால் கவரப்பட்டு தன் பாட்டனின் கடையில் பணிபுரிபவரின் மகன் என்று எண்ணாமல் தன் ஆன்ம நண்பனாகவே அவனைக் கருத ஆரம்பித்தான் ராணா.
அப்போது மகாராஷ்டிராவில் உள்ள தன் நில புலன்களை விற்று பணத்தை எடுத்துக்கொண்டு கோட்டா நகரத்தில் புதிதாக ஜவுளி வியாபாரத்தை தொடங்க வந்தார் மகாவீர் மல்ஹோத்ரா.
அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்தவள் மதுவந்தி, இளையவள் மதுஸ்ரீ. இருவருக்கும் இடையே மூன்று வயது வித்தியாசம் .
அடிக்கடி நடக்கும் வியாபார சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது அவருக்கு ராஜ்குமார் உடன் நல்ல நட்பு ஏற்பட்டது.
மார்க்கெட் தெருவில் இருவரது கடைகளும் அருகருகே அமைந்திருந்ததோடு இருவரின் இல்லங்களும் ஒரே தெருவில் இருந்ததால் அவர்களுக்கு இடையேயான நெருக்கம் நாளடைவில் அதிகமாகிப் போனது.
மகாவீர் , ராஜ்குமார் அளவிற்கு வியாபாரத்தில் வெற்றி பெறவில்லை என்றாலும், அந்த சிறிய வயதில் தனக்கென்று ஒரு சிறு சாம்ராஜ்யத்தை அங்கு வந்த குறுகிய காலத்திலேயே அமைத்துக் கொண்டதைக் கண்டு அவர் மேல் ஒருவித பற்றுதலும் நட்பும் ராஜ்குமாருக்கு இருக்கவே செய்தது எனலாம் .
அதைவிட மகாவீர் சிந்தி இனத்தைச் சார்ந்தவர் என்பதால், அந்த நட்பு எக்கு கோட்டை போல் நாளுக்கு நாள் வலுவடைந்தது.
ராஜ்குமார் வீட்டில் அவரும் அவர் மனைவி மட்டுமே இருந்ததால் மதுவந்தி, மதுஸ்ரீ இருவரும் அங்கு அடிக்கடி வந்து போவது வழக்கமாகி போக, வயதான காலத்தில் அவர்களுக்கும் இளையவர்களின் வரவு, வெகு ஆறுதலாகிப் போனது.
பதின் பருவத்தை தொடும் சமயத்தில் படிப்பை காரணம் காட்டி, ராணா ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கோட்டா நகரத்திற்கு வந்து தாத்தா பாட்டியை சந்தித்து ஓரிரு தினங்கள் மட்டுமே தங்கி இருந்து விட்டு சென்று விடுவான்.
ஆனால் அவன் அண்ணன் ராகேஷுக்கோ படிப்பு என்றால் எட்டிக்காய் கசப்பு.
அதே சமயத்தில் வியாபாரம் என்றால் லட்டு தின்பது போல். அவ்வளவு எளிதாக வியாபாரம் நுணுக்கங்களை, நீக்குப்போக்குகளை பதின் பருவத்திலேயே அவன் கற்று தேற, ஒரு கட்டத்தில் பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்டு தாத்தா ராஜ்குமாரோடு வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கினான்.
ராணாவின் தந்தை ஆதிகேசனும் அதற்கு உறுதுணையாகவே இருந்தார்.
ராஜ்குமாருக்கு பிறகு யாரேனும் ஒருவர் அவர் உருவாக்கிச் வைத்திருக்கும் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காகவே மகனின் விருப்பத்திற்கு அவர் முற்றிலும் செவி சாய்த்தார்.
ராணா பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மாணவனாக தேறி மேற்கொண்டு படிப்பை தொடர்ந்ததால், ராஜஸ்தான் பயணம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை என்னும் நிலையில் அரிதாகி போனது.
ஆனால் திலக் உடன் மட்டும் தொலைபேசி, கடிதங்கள் வழியாக நட்பை தொடர்ந்தான்.
திலக்கிற்கும் படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை ... தொலைதூர கல்வி வழியே இளங்கலை வரலாறு படித்த படி தந்தைக்கு உதவியாக ராஜ்குமாரின் கடையிலேயே பணி புரிய தொடங்கினான்.
இந்நிலையில் தான் ராஜ்குமார் வசிக்கும் அதே பகுதிக்கு, நிலேஷ் தேசாய் குடும்பம் குஜராத்தில் இருந்து குடி பெயர்ந்தது.
நிலேஷ் உலர் பழங்கள், வாசனை திரவியங்கள் , கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை வெளி மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தை நடத்தி வந்தார்.
அவருக்கு ஒரே ஒரு மகள் மான்சி. மதுஸ்ரீ போலவே மான்சியும் படிப்பில் சுமார் ரகம் தான்... மதுஸ்ரீ நளனுக்கே சவால் விடும் அளவிற்கு சமையலில் திறமைசாலி ... நடனம் ஆடுவதில் வல்லவள்... மான்சியோ ஆடைகள் வடிவமைப்பது, அலங்காரப் பொருட்கள் செய்து விற்பனை செய்வதில் கெட்டிக்காரி.
அவளும் மதுஸ்ரீயும் ஒத்த வயதுடையவர்கள் ... ஒரே கல்லூரியில் வெவ்வேறு பிரிவுகளில் படிப்பவர்கள் ... ஒரே பகுதியில் வசிக்கும் சந்தர்ப்பமும் அமைந்ததால் மதுவந்தி, மதுஸ்ரீ , திலக் உடன் அவளுக்கு நல்ல நட்பு ஏற்பட, நாளடைவில் விழா காலங்களில், அனைவரது குடும்பத்தோடும் கூடிக் கொண்டாடும் அளவிற்கு நட்பு வலுவாகிப்போனது.
காலம் அழகாக உருண்டோடியது.
ஒரே இனம் ஏறக்குறைய ஒரே சமூகம் என்பதோடு தொழில் ரீதியாகவும் நட்பாக இருந்ததால், மூத்த பேரன் ராகேஷுக்கு மது வந்தியை அனைவரின் சம்மதத்தோடும் மணம் முடித்து வைத்தார் ராஜ்குமார்.
வீட்டுப் பெரியவர்களின் விருப்பங்கள் மட்டுமல்லாது ராகேஷூம் மதுவந்தியும் ஒருவரை ஒருவர் நேசித்ததால், அந்தத் திருமணம் வெகு விமர்சையாகவே நடந்தேறியது.
பல்கலைக்கழக தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்ததால் , தமையனின் திருமணத்திற்கு வெறும் இரண்டு நாட்கள் விடுமுறையில் வந்து தலையைக் காட்டி விட்டுச் சென்றிருந்தான் ராணா.
ஓராண்டிற்கு பிறகு தமையனுக்கு மகள் பிறக்க, குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கும் ஓரிரு நாள் விடுப்பில் வந்து கலந்து கொண்டு சென்று விட்டான்.
ராணா ராஜஸ்தானுக்கு வரும் சொற்ப நாட்களில் பெரும்பாலும் தன் தாத்தா, பாட்டி, திலக்கை தாண்டி வேறு எங்கும் சென்றதில்லை... யாரிடமும் பேசியதும் இல்லை.
அதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை . எங்கு திரும்பினும், வியாபார நட்புகளும் சொந்தங்களுமாகவே இருக்க, அவர்களுடனான பேச்சு பெரும்பாலும் வியாபாரத்தைச் சுற்றியே இருந்ததால் ஒரு வித சலிப்பை தர, தமையனோடு கூட அதிகம் ஒட்டாமல் திலக் உடனேயே நேரத்தை செலவழித்தான்.
இந்நிலையில் தாத்தா ராஜ்குமாரின் 70-வது பிறந்த நாளின் போது 'பீமரத சாந்தி' பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடைசி ஆண்டு கணினி பொறியியல் படிப்பை படித்துக் கொண்டிருந்த ராணா அதற்காக தன் தாய் தந்தையோடு கோட்டா நகரத்திற்கு வந்திருந்தான்.
மறுநாள் பீமரத சாந்தி நடைபெறவிருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வரவால் வீடே விழா கோலம் பூண்டிருந்தது .
பயணக் களைப்பு நீங்க குளித்து முடித்து புத்துணர்வு பெற்றவன் நன்றாக உடை அணிந்து கம்பீரமாக தயாராகி நண்பன் திலக்கை காண பேராவலாக கீழ் தளத்தை நோக்கி பக்கவாட்டு படிகளில் வேகமாக இறங்கவும், அவனை கவனிக்காமல் மதுஸ்ரீ வீட்டிற்குள் அவசரமாக நுழையவும் சரியாக இருக்க,
"ஏய் நில்லு.... யார் நீ ... இவ்ளோ வேகமா வீட்டுக்குள்ள ஓடற... அதுவும் ஒரு பெரிய மனுஷன் நின்னுகிட்டு இருக்கேன் .... யாரு என்னன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம் ..."
என்றவனின் வாய் வேகமாக வீராப்பு பேசினாலும், அரக்கு நிற ஜெய்ப்பூர் பட்டில் , பட்டியாலா சுடிதாரில் தங்கமாய் ஜொலித்தவளை அவன் கண்கள் லயித்துப் பார்க்க,
"பெரிய மனுஷனா யாரது.... அப்படி இங்கு யாரும் இல்லையே ..." என்றாள் குறுகுறு கண்களோடு வெடுக்கென்று.
"என்ன திமிரா .... ஆறடி உயரத்துல ஒருத்தன் நின்னுகிட்டு இருக்கேன்... உனக்கு கண்ணு தெரியலையா ..." என்றவனுக்கு தன்னைத்தானே அப்படி அறிமுகப்படுத்திக் கொள்வதில் வெட்கமும் சிரிப்பும் வரத்தான் செய்தது.
"இந்த வீட்டுக்கு பெரிய மனுஷன்னா அது மாமா ஜியும்.... என் ஜீஜாஜியும் தான் ... நீங்க யாரு உங்கள நான் பார்த்ததில்லையே .." என்ற போதே அவள் யார் என்று புரிந்து கொண்டவன்,
"அது இருக்கட்டும் ... நீ யாரு ..." என்றான் வேண்டுமென்றே.
"என் வீட்லயே நின்னுகிட்டு என்னையே யாருன்னு கேக்கற நீங்க யாரு ..." என்றாள் விடாமல்.
" உன் வீடா ..."
"ஆமா .... என் அக்கா மதுவோட வீடு ....அப்ப என்னோட வீடுன்னு தானே ..."
இவ்வளவு நேரமாக அவன் விடாமல் தர்க்கம் செய்ததற்கு அவளது உருவம் மட்டும் காரணம் அல்ல ... அவள் பேசிய அவனது தாய்மொழி சிந்தியும் தான்.
அவனும் சிந்தி மொழி பேசுவான் ... ஆனால் அதில் மொழிக் கலப்பு அதிகம் இருக்கும். தந்தை ஆதி கேசவன் தமிழ் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தமிழ் சரளமாக பேசுவான் .... பெங்களூரில் வசிப்பதால் கன்னடா, ஹிந்தி வெகு இயல்பாக அவன் பேச்சில் தட்டுப்படும் ... ஆங்கில வழிக் கல்வி என்பதால் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பிளந்து கட்டுவான் ...
ஆனால் தாய் மொழி மட்டும் அவனுக்கு சற்று தகராறு தான். அவனது தாய் தீபிகாவின் பேச்சு வழக்கு கூட இவ்வளவு சுத்தமாக இருந்ததில்லை...
தாத்தா ராஜ்குமாரின் தெள்ளிய மொழியாற்றலுக்குப் பிறகு, இப்போது இவளிடத்தில் தான் இத்துணை சுத்தமான சிந்தி மொழியை கேட்கிறான்...
பளபளக்கும் கன்னங்கள், நர்த்தனம் ஆடும் விழிகளோடும் தேனிசையாய் அவளது மிழற்றல்கள் அவன் காதுகளை வருட, எதையும் யோசிக்காமல்,
"உன் அக்காவோட வீடு எப்படி உன் வீடு ஆகும் ... இது உன் வீடு ஆகணும்னா ஒரே வழி தான் இருக்கு ... என்னை கல்யாணம் பண்ணிக்க .... அப்புறம் இந்த வீடு உனக்கும் சொந்தம் ஆயிடும் ...பாபியோட நீயும் இங்க இருக்கலாம் ... நானும் உன் கூடவே இருப்பேன் ... எப்படி .."
அப்போதுதான் அவன் யார் என்று விளங்க, அவள் ஓட முயல, அவள் கையைப் பற்றி நிறுத்தியவன்
"என்ன.... பதில் சொல்லாம போற ..." என்றான் மேலும் நெருங்கி.
அந்த நெருக்கம் ஒரு வித சிலிர்ப்பையும் வெட்கத்தையும் தர, அவனது அருகாமையில் இருந்து தப்ப
" உங்களை கல்யாணம் கட்டிகறதுல எந்த பிரச்சனையும் இல்ல... ஆனா ஒரு கண்டிஷன்.... ..." என்றாள் எதையோ யோசித்து.
" என்ன ..."
" எனக்கு எல்லா ஸ்வீட்ஸும் நல்லா செய்ய வரும் ... ஆனா லட்டு மட்டும் சரியா புடிக்க வராது ... ஆனா எனக்கு லட்டு தான் சாப்பிட புடிக்கும் ... நீங்க சரியா லட்டு செய்ய கத்துக்கிட்டா உங்களை கல்யாணம் கட்டிக்கிறேன் ..."
கேட்டதும் ஏறக்குறைய வாய்விட்டே சிரித்து விட்டான் ...
"லட்டு தானே எவ்ளோ வேணாலும் வாங்கி தரேன் .." என்றான் சமரசம் பேசும் முயற்சியில்.
"ம்ஹூம்... எனக்கு வீட்ல செஞ்ச லட்டு தான் புடிக்கும் .... அதுவும் மோத்தி லட்டு தான் புடிக்கும் ... அதுவும் நெய்ல தான் செய்யணும்... ... "
இது என்னடா இப்படி ஒரு சோதனை ...
உள்ளுக்குள்ளே அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது, மான்சி வந்து நின்றாள்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
very interesting
ReplyDeletethanks ma
DeleteSuper puthu vithamana twist iruku,, super super super super super super
ReplyDeletethanks ma
DeleteNext episode epa upload pannuvinga dailyum check panratha iruku.
Deletekonjam health issue da... athaan thodarndhu ud podamudiyala... vara vaaram sariya vanthudum
DeleteRana story nice sis ... Romba romba nalla iruku. Interesting. Waiting for your next ud.
ReplyDeletethanks ma
DeleteWhat happened to u sis? Any health issues?? Ud podalaye... U all okay there
Deletekonjam thirumbavum kai vali da.... type panna mudiyala... my sons exam is also going on... so ud is late ma... thanks for ur concern da
DeleteOMG... Take care of your health sis. Don't strain too much. Do some physio exercise for ur hands. Neenga late uh ve ud podunga. No problem. Health is important
Deletekanna 104, 105, 106 ud potachuda... padinga thanks dr
DeleteSuper mam
ReplyDeletethanks ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
DeleteNice
ReplyDeletethanks ma
Delete