அத்தியாயம் 102
சற்றும் தாமதிக்காமல் மயங்கி சரிந்த நண்பனின் முகத்தில் தண்ணீர் தெளித்து , அவன் கை கால்களை திலக் சூடு பறக்க தேய்த்து விட, ஓரிரு கணத்திற்கு பிறகு மெல்ல விழி மலர்த்தினான் ராணா.
உடனே அவனுடைய கார் ஓட்டுனரை அலைபேசியில் அழைத்து அவனது உதவியோடு தன் நண்பனை மின்தூக்கியின் வழியே கைத்தாங்கல் என்பதை விட, அரைகுறையாக சுமந்து சென்று காரில் கடத்தி மருத்துவமனைக்கு பயணமானான்.
ராணா நடத்தி வரும் I-globe நிறுவனத்திற்கு மொத்தம் மூன்று அலுவலகங்கள் இருந்தன.
ஒன்று தலைமையகமாகவும், மற்ற இரண்டும் B1,B2 என கிளை அலுவலகங்களாக செயல்பட்டு வந்தன. இந்த மூன்று அலுவலகங்களிலுமே, அவனுடைய அறைக்கென்றே பிரத்தியேக மின் தூக்கி உண்டு.
அதை அவன், திலக், மான்சி மற்றும் அவனுடைய கார் ஓட்டுநர் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம்.
அப்படி ஒரு மின் தூக்கி அந்த அலுவலகத்தில் உண்டு என்பது கூட பாதி பேருக்கு தெரியாது.
அண்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்ல் , அவனுடைய காருக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தை ஒட்டியே அந்த மின் தூக்கி அமைக்கப்பட்டிருந்ததால், அப்படி ஒரு மின்தூக்கி இருப்பதும் யாருக்கும் தெரியாது, அவன் எப்படி, எப்போது அலுவலகம் வருகிறான் போகிறான் என்றும் யாராலும் சொல்லவும் முடியாது.
அதே போல் அவனுடைய எல்லா அலுவலக அறைகளும் சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்டிருக்கும்.
அதற்குக் காரணம், ஒரு முறை மன அழுத்தத்தின் காரணமாக சற்று முன்பு போல் ஊரே அதிரும் படி தன்னை மறந்து அவன் கத்த, நல்ல வேளை, அது உணவு இடை வேளையாக இருந்ததால் , அவனுடைய அலறல் சத்தம் யாரையும் சென்று சேரவில்லை. அதிலிருந்து தன்னறைக்கு இப்படி ஒரு ஏற்பாட்டை திலக்கின் அறிவுறுத்தலின் படி செய்து வைத்திருந்தான்.
திலக் அவனுக்கு பால்ய சிநேகிதன் என்றாலும் நான்கு வயது பெரியவன்.
பல முக்கிய சந்தர்ப்பங்களில் ராணாவிற்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டு இருக்கிறான்.
ராணாவின் சிந்தனை , செயல் , அனைத்தும் அவனுக்கு அத்துபடி.
ராணா, மான்சி இருவருமே ஊர் உலகிற்காக கணவன் மனைவியாக நடிக்கிறார்களே ஒழிய, மனம் ஒட்டி வாழவில்லை என்பதையும் நன்கு அறிவான்.
ராணாவைப் பெண் பித்தன் என்று சொல்லிவிட முடியாது .... வெகு சில நேரங்களில் ஆண்களுக்கே உரித்தான பாலியல் தேவைகளை தணித்துக் கொள்ள அவனுக்கு பெண் தேவைப்படுவாள் ...
அம்மாதிரியான காரியங்களுக்கும் திலக் தான் உதவுவான் .... அதை மான்சியும் அறிவாள்....
ஆனால் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் அலுவலக நட்பு வட்டங்களுக்கும் ராணாவின் அந்த முகம் தெரியாது.
அதற்குக் காரணம், தன் அலுவலகத்தில் எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
இவ்வளவு ஏன் செயலாளராக இருந்த சில பெண்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் அவனுடன் நெருக்கமாக நடந்து கொள்ள முயன்று மறுநாளே பணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தேறி இருக்கின்றன ...
ஆதலால் தான் அலுவலகத்தில் 'மிஸ்டர் கிளீன்' என்ற பட்டத்திற்கு பொருத்தமானவன் , என்ற பேச்சு இக்கணம் வரை பரவலாக இருந்து வருகிறது ....
Sharma - The Mind Clinic என வெண்கல எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட பெரிய கட்டிடத்தின் முன்பு அவர்களது கார் நின்றது.
ஒரு காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே வாடிக்கையாளராக இருந்த அந்த மருத்துவமனைக்கு, தற்போது நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்களும் வந்து போகும் நிலையை காலச்சூழல் ஏற்படுத்தி விட்டதால் முன் அனுமதி பெறாமல் வருபவர்களுக்கு சற்று நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவது வழக்கமாகி போயிருக்க ,ஆனால் நண்பனின் நிலை சற்று மோசமாக இருந்ததால், அங்கிருந்த செவிலியரிடம் திலக் நிலைமையை விளக்க, அடுத்த கணமே மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியது.
கை தாங்கலாக அழைத்து வரப்பட்ட ராணாவின் முகம் மற்றும் உடலில் வியர்வை ஆறாய் வழிந்தோட, கண்கள் குருதிப்புனலாய் சிவந்திருக்க கை கால்கள் நடுங்கிய படி , முனகிக் கொண்டே தள்ளாடிய நிலையில் வந்தவனை மருத்துவர் ஷர்மா படுக்கையில் அனுமதித்து, பத்து நிமிட பரிசோதனைக்கு பிறகு மூன்று வெவ்வேறு மருந்துகளை சிரஞ்சில் ஏற்றி அவன் இடுப்பில் செலுத்தினார்.
சரியாக பத்து நிமிடத்திற்குள், அவன் மயக்கத்திற்கு செல்ல, அவன் இருந்த அறையில் மென் ஒளியை தட்டி விட்டு, அறை கதவை மூடியவர் தன் இருக்கையில் வந்தமர்ந்ததும்,
"இன்னும் ரெண்டு தடவை இந்த மாறி ஆங்கசைட்டி அட்டாக் வந்ததுன்னா , ராணாவை என்னால மட்டும் இல்ல யாராலயும் காப்பாத்த முடியாது .... ராணா அவரோட லவ்வர பத்தி பேசும் போது ஏதாவது ஆர்க்யூ பண்ணிங்களா ....." என்றார் திலக்கிடம் கோபமாய் எடுத்த எடுப்பில்.
"இல்ல டாக்டர் ...."
"பின்ன எப்படி இப்படி ஆச்சு .... ஒரு விஷயத்தை நீங்க சரியா புரிஞ்சுக்கணும் .... ராணாவுக்கு தன் லவ்வர் மதுஸ்ரீ செத்து போயிட்டான்னு நல்லாவே தெரியும்.. அவரோட சப்கான்ஷியஸ் மைண்ட்ல கூட அந்த ட்ராஜெடி கம்ப்ளீட்டா ரிஜிஸ்டர் ஆயிருக்கு .... ஆனா அவரால அதை ஏத்துக்க தான் முடியல .... திடீர்னு அவ கனவுல வந்தான்னு சொல்லுவாரு ... அவள பாக்கணும், பேசணும்னு சொல்லுவாரு.... அந்த மாறியான நேரத்துல அவரோட ஆர்கியூ பண்ணாம டாபிக்கை சேஞ்ச் பண்ணனும்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன் ..." என்று படபடத்தார், கடந்த முறை ராணாவுக்கு வந்த மன அழுத்தத்தை மனதில் வைத்து.
"டாக்டர் அவன் எப்ப எல்லாம் மதுஸ்ரீயை பத்தி பேசறானோ .... அப்பெல்லாம் நீங்க சொன்ன மாறி நான் பேச்ச மாத்திடுவேன் .... பிடிக்கொடுத்தே பேசமாட்டேன் டாக்டர் .... அவனும் அதோட அமைதி ஆயிடுவான்... ஆனா இந்த முறை பிரச்சனையே வேற டாக்டர் ..." என்ற திலக்கின் பேச்சை இடைவெட்டி,
"அப்படி என்ன தான் பிரச்சனை?.... அவருக்கும் அவர் ஒய்ஃப் மான்சிக்கும் மறுபடியும் பிரச்சனையா ..."
"அது இல்ல டாக்டர் .... செத்து போன அவன் லவ்வர் மதுஸ்ரீ மாறியே ஒரு பொண்ணு எங்க ஆபீஸ்க்கு வந்திருக்கா ...."
"வாட்................ ஆர் யூ ஷூர்..." என்றார் மருத்துவர் ஏறக்குறைய அதிர்ந்து .
"ஆமா டாக்டர் ...."
"ராணா வேற யாரையாவது பார்த்து அப்படி சொல்லி இருக்க போறாரு .... "
"இல்ல டாக்டர் ..... எனக்கு மதுஸ்ரீயை சின்ன வயசுல இருந்தே நல்லாவே தெரியும் ....புதுசா வந்த பொண்ணு அவள மாறியே இருக்கா ...." என்றவன் அவளைக் காணொளியில் கண்டதை விவரமாக கூற,
"அந்த பொண்ணு யாரா இருந்தாலும், எந்த போஸ்டுக்காக செலக்ட் பண்ணி இருந்தாலும், உடனே அந்த பொண்ண வேலைய விட்டு அனுப்புறது தான் நல்லது .... அந்த பொண்ண ராணா பாக்க பாக்க பிரச்சனை அதிகமாகுமே ஒழிய, குறையாது ..." என மருத்துவர் முடிக்க, திலக் உறைந்து போனான்.
"மறுபடியும் சொல்றேன் திலக் ... ப்ளீஸ் டேக் இட் வெரி சீரியஸ் ..." என தொடர்ந்தவர்
"ராணா அவரோட லவ்வர் மதுஸ்ரீ அவர் கண் முன்னாடியே நெருப்புல எரிஞ்சு செத்துப் போனதை பார்த்ததுல இருந்து POST TRAUMATIC STRESS DISORDERல(PTSD) கஷ்டப்படறாரு... பொதுவா இந்த மாதிரியான டிஸ்ஆர்டர்ல கஷ்டப்படறவங்க அதிகபட்சமா ரெண்டிலிருந்து அஞ்சு வருஷத்துக்குள்ள ஓரளவுக்கு எல்லாத்தையும் மறந்துட்டு இயல்பு வாழ்க்கைக்கு வந்துடுவாங்க .... ஆனா இவரோட கேஸல அது நடக்காததுக்கு காரணம், இந்த உலகத்துலேயே வெறும் 62 பேருக்கு மட்டுமே டைகனோஸ் பண்ணியிருக்கிற
" HYPERTHYMESIA" ன்ற (ஹைப்பர் தைமீஷியா ) மனோ வியாதி அவருக்கு இருக்கிறதால தான்..... அவரால ஒரு சினிமாவ நேரேட் பண்ற மாதிரி , நான்-ஸ்டாப்பா 25 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள கூட தெளிவா ஞாபகம் வச்சி சொல்ல முடியும் ...
அதனால தான் இந்த வியாதிக்கு Highly superior autobiographical memory னு(HSAM) இன்னொரு பேரு உண்டு ...ரெண்டு நாளைக்கு முன்னாடி காலையில என்ன சாப்பிட்டீங்கன்னு கேட்டா, நீங்க யோசிச்சு தான் பதில் சொல்லுவீங்க ....
ஆனா ராணா கிட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி ஒரு தேதியை குறிப்பிட்டு என்ன நடந்துச்சின்னு கேட்டீங்கன்னா, அன்னைக்கு அவரு மட்டுமில்ல அவரு கூட பேசிகிட்டு இருந்தவங்க எந்த கலர்ல டிரஸ் போட்டிருந்தாங்க, அன்னைக்கு என்ன சாப்பிட்டாரு ... யார் கூட சாப்டாரு ... யார் யாரையெல்லாம் மீட் பண்ணாரு... என்ன நடந்துச்சுனு ஒரு இன்சிடென்ட் விடாம அக்யூரேட்டா அவரால சொல்ல முடியும் ....
இது இல்லாம OTHELLO SYNDROME ங்கிற பிரச்சனையும் இருக்கிறதால தான், தன் வைஃப் மான்சி வேற யார் கூடயோ தொடர்புல இருக்கிற மாறியும் தன்னை எப்பவுமே ஏமாத்திக்கிட்டே இருக்கிற மாறியும் அவருக்கு தோணுது ....
Thats why he is behaving ideologue ...( தான் நினைத்தது மட்டுமே சரி .... தன் கற்பனையே சரி ... என்று நினைக்கும் சுபாவம் ...) மான்சி எவ்ளோ எடுத்துச் சொன்னாலும், தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு ரொம்ப Stubbornஆ இருக்காரு ...
மனுஷனுக்கு ஆண்டவன் மறதியை வரமா கொடுத்திருக்கான் .... ஆனா துஷ்டவசமா ராணாவுக்கு மட்டும் அது கிடைக்கல ....
குறைந்தபட்சம் மன்னிக்கிற பக்குவத்தையாவது அவர் வளர்த்துக்கிட்டு இருந்தா இவ்ளோ பிரச்சனையே வந்திருக்காது ...
மன்னிக்கிறது மூலமா அடுத்தவங்க செஞ்சத நாம ஏத்துக்குறோம்னு அர்த்தம் இல்ல .... நடந்த பிரச்சனைய தூக்கி சுமக்காம, கை கழுவி விடறதால மன நிம்மதியாவது மிஞ்சுமேங்கிறதுகாக தான் ...
இதை நான் பல தடவை மான்சி விஷயத்துல ராணாவுக்கு சொல்லியாச்சு ஆனா அவர் கேட்கிறதா இல்லை ...." என்றவரின் பேச்சை இடைமறித்து,
"மதுஸ்ரீ விஷயத்துக்காக மட்டும் இல்ல டாக்டர் ... பொதுவாகவே மான்சி ராணாவுக்கு உண்மையா இல்ல .... பலமுறை நானே அவள நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸோட பார்த்து இருக்கேன் ..." என்றான் திலக் தீவிரமாய்.
"ஸ்டாப் இட் திலக் .... ஒரு காலத்துல பொண்ணுங்க படிப்பு , வேலைனு வெளியே போனாலே , அவ எவன் கூடயோ ஊர சுத்த போறானு வாய் கூசாம வசப்படின இந்த சமூகம் தான், இன்னைக்கு இந்த அளவுக்கு முன்னேறி பொண்ணுங்களோட படிப்புக்கும் வேலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற அளவுக்கு வளர்ந்து இருக்கு.... ஆனா இன்னமும் சினி இண்டஸ்ட்ரில வொர்க் பண்ற பொண்ணுங்கள மட்டும் தப்பாவே பாக்குற மனோபாவம் இருந்துகிட்டு தான் இருக்கு...மான்சிய நிறைய பாய் பிரண்ட்ஸோட பார்த்தேன்னு சொன்னீங்களே.... எத்தனை பேரோட அவ படுக்கைல இருந்ததை பாத்தீங்க...."
திலக் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிய,
"மான்சி ஒரு பியூட்டிஷியன் ..... சினி இண்டஸ்ட்ரில நிறைய ஆர்டிஸ்டிகளுக்கு அவ தான் மேக் அப் ஆர்டிஸ்ட் ... சினி இண்டஸ்ட்ரி மேல் டாமினேட்டட் இண்டஸ்ட்ரினு உங்களுக்கு தெரியாதா .....அங்க பொண்ணுங்களோட மட்டுமே அவ பேச முடியுமா ... இங்க பாருங்க திலக் ...நீங்க மட்டும் இல்ல இன்னும் ராணாவும் மான்சிய சரியா புரிஞ்சுக்கல ....
(பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு ..)
சரி, இப்ப இருக்க பிரச்சனைக்கு வருவோம் ....
செத்துப்போனவ செத்துப் போனவளா இருக்கும் போதே இவ்ளோ பிரச்சனையை தூக்கி சுமந்துகிட்டு இருக்கிற ராணா, இப்ப அவளை மாறியே ஒருத்தி வந்திருக்கான்னும் போது சும்மா இருப்பாரா .... He Will become inexorable dangerous guy..."
திலக் புரியாமல் கண்களில் ஒருவித பயத்தோடு பார்க்க,
"ராணாவை யாராலயும் எந்த விதத்துலயும் தடுக்க முடியாது அவர் எந்த எக்ஸ்ட்ரீம்க்கு போலாம்னு சொல்ல வரேன் ....
இதுல ஆறுதலுக்குரிய ஒரு விஷயம் என்னன்னா, சில நேரங்கள்ல அவரால நம்மள மாறி தெளிவா டே டுடேல நடக்கிற விஷயங்களை நேர்த்தியா ஆர்கனைஸ் பண்ணி ஹேண்டில் பண்ண வராது ... அதுக்கு காரணம் பழைய விஷயங்க நிறைய ஞாபகத்துல இருக்கிறதால, இப்ப நடக்குற சில விஷயங்களை அவரால சரியா ஞாபகத்துல வச்சுக்க முடியாது ..." என்றவரின் பேச்சை இடைமறித்து
"இல்ல டாக்டர் ..... ஆபீஸ்ல ஒரு சின்ன விஷயம் கூட அவன் பார்வைக்கு வராம இருக்க முடியாது... இருக்கவும் விடமாட்டான் ....."
"அங்க தான் நீங்க ஏமாந்து போறீங்க திலக்... அப்படி ஒரு பிரச்சனை தனக்கு இருக்குன்னு அவருக்கு நல்லா தெரியுங்கிறதால தான் சின்ன விஷயத்தை கூட விடாம, எல்லாம் விஷயத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யறாரு... அப்படி செய்யறதால தான் அவரால தன்னை சுத்தி நடக்கிற எல்லா விஷயத்துலயும் அப்டேட்டடா இருக்க முடியுது ... ஆனா .... அது எல்லா நேரத்துலயும் வொர்க் அவுட் ஆகாதுன்னும் அவருக்கு நல்லாவே தெரியும் ... அதனால தான் தன்னோட நிழலா உங்கள வச்சிருக்காரு..." என மருத்துவர் பூடகமாக பேச
"புரியல டாக்டர் ...." என்றான் திலக் மெய்யாகவே.
" தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க ..... அவரால உங்க உதவி இல்லாம எந்த ஒரு விஷயத்தையும் தனியா செய்ய முடியாது .... நான் முன்னாடி சொன்ன மாறி அவர்கிட்ட எந்த விஷயத்துக்கும் ஆர்க்யூ பண்ணாதீங்க... ஏன்னா அவர் ரொம்ப அரோகன்ட் அண்ட் ஸ்டோபன் கேரக்டர் ... வேணாம்னு சொன்னா செஞ்சுட்டு தான் மறு வேலை பார்ப்பாரு... அதே சமயத்துல அவர் சொன்னதுக்கு எல்லாம் அக்செப்ட்டும் பண்ணாதீங்க....
கூடவே இருந்து அவரோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, அவர் போற வழியிலயே போய் , அவருக்கு எது நல்லதோ அதை செய்யுங்க....
ஒரு நல்ல ஃப்ரண்டா உங்களால மட்டும் தான் அவரை காப்பாத்த முடியும் .... இப்ப சேடேஷன்ல இருக்காரு... இன்னும் ஒன் ஹவர்ல கண் முழிச்சிடுவாரு .... அப்புறம் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் ...
நான் பிரிஸ்கிரைப் பண்ணி இருக்கிற மெடிசன அவ கரெக்டா எடுத்துக்கிறாரான்னு ஃபாலோ பண்ணுங்க ..." என மருத்துவர் விடை பெற, உள்ளே மயக்கத்தில் இருந்த ராணாவின் ஆழ்மன பறவை கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பறந்தது.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ...
Dear friends,
அத்தியாயம் 103ம் பதிவேற்றப்பட்டுள்ளது ..
With love,
Priya Jagannathan
keep rocking 💓💓💓💓💓
ReplyDeletethanks a lot dr
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks a lot dr
DeleteSuper mam
ReplyDeletethanks a lot dr
DeleteWow... Interesting oh interesting.. neraya information koduthu irukinga intha ud la.. in all ur stories useful info neraya koduthu irukinga.. we read many unknown terms. Thanks for ur efforts on writing sis
ReplyDeletethanks a lot dr
Delete