அத்தியாயம் 48
தந்தையின் பேச்சில் மைந்தன் லயித்திருக்க , ஓரிரு கணம் அங்கு அமைதி நிலவ,
"ஆமா, நீ எப்ப ஊட்டிக்கு வர்றதா இருக்க ..." என்றார் ரங்கசாமி ஆர்வமாய்.
"நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன் பா ..."
"ஓ...குட் .... ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் ..
அப்ப இனிமே நீயும் நம்ம பிசினஸ்ஸ பார்த்துக்க போறேன்னு சொல்லு ..."
"அதான் இல்ல ... வழக்கம் போல நீங்களும் உங்க மருமகளுமே பிசினஸ பாத்துக்குங்க... எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் கிடையாது .... ஐடி கம்பெனி ஆரம்பிக்கலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருந்தப்ப ஃபிரண்ட்ஸ் கெட் -டு- கெதர்ல என் ஃப்ரெண்ட் சந்தோஷை பார்த்தேன் .... ஊட்டில நாலு வருஷத்துக்கு முன்னாடி ஐடி கம்பெனியை ஆரம்பிச்சு பெரிய பெரிய கம்பெனிகளோட அவுட்சோர்சிங் ப்ராஜெக்ட்ட வாங்கி ரொம்ப சக்சஸ் ஃபுல்லா நடத்திக்கிட்டு வரான் ...
எதேச்சையா பேசிக்கிட்டு இருக்கும் போது நான் என் பிளானை சொல்ல, உடனே அவன், தன் கம்பெனியோட பார்ட்னர்ஷிப்க்கு என்னை கூப்ட்டான்... எனக்கும் அந்த ஆஃபர் சரின்னு பட்டது, அதனால அக்செப்ட் பண்ணிக்கிட்டேன் .... அதோட எனக்கு தனிப்பட்ட முறைல மூணு அவுட் சோர்ஸிங் ப்ராஜெக்ட் கிடைக்கப் போகுது ... சோ கூடிய சீக்கிரம் அது சம்பந்தமான வேலைய முடிச்சுட்டு, ஊட்டிக்கு வரலாம்னு இருக்கேன் ..." என்றவனை மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாய் அவன் தந்தை நோக்க,
"நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்..." என்றான் லேசான தயக்கத்தோடு.
"சொல்லுப்பா..."
"நாம பேசிகிட்ட எந்த விஷயமும் லட்சுமிக்கு தெரிய வேண்டாம்பா ... ராமலக்ஷ்மி கல்யாணம் நின்ன விஷயத்துல அவ பேச்சை நம்பாம ஆதாரம் கேட்டது ஒரு பக்கம் தப்புன்னா, அதைவிட பெரிய தப்பு அவ வீட்ட விட்டு போனதுக்கும் அதே தான் காரணம்னு அம்மாவும் அருணாவும் சொன்னத கண்ணை மூடிக்கிட்டு நம்பி மூணு மாசம் அவளை காண்டாக்ட் பண்ணாம இருந்தது .... அன்னைக்கு ஸ்ரீனி வீட்டுல அவ அதை பாயிண்ட் அவுட் பண்ணி சொல்லும் போது கூட என் தப்பு எனக்கு புரியலப்பா ... இன்னைக்கு நீங்க சொல்லும் போது தான் புரியுது .... "
"நீ உன் தப்பை உணர்ந்துட்ட ... ஆனா லட்சுமி இன்னும் அவ தப்ப உணரலயே..."
" புரியலப்பா ... அவ என்னப்பா தப்பு பண்ணா .."
"நீ கோவக்காரன்... கொஞ்சம் எடுத்தெறிஞ்சு பேசற ரகம் ... அதோட அம்மா, தங்கச்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேனு முடிவு பண்ணி அவ நடந்த பிரச்சனையை உன்கிட்ட சொல்லாம விட்டிருக்கலாம் ... ஆனா நான் அவளை மருமகளா நடத்தாம மகளா பார்த்துக்கறேன்னு அவளுக்கு நல்லாவே தெரியும் .... தெரிஞ்சும் அவ என்கிட்ட கூட வாய தொறக்கலயேங்கிற கோவம் தான் எனக்கு ..." என முடித்தார் ஆதங்கத்தோடு.
"என்கிட்ட மட்டுமில்ல உங்க கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனை என்னவா இருக்கும் ... யோசிச்சு யோசிச்சு தலையே வெடிச்சிடும் போல இருக்குப்பா ..."
" கற்பகமும் அருணாவும் எந்த லெவலுக்கும் போறவங்க தான் .. ஆனா எந்த லெவலுக்கு போய் இருக்காங்கன்னு தான் தெரியல.. லட்சுமிக்கு நம்ப ரெண்டு பேர் மேலயுமே நம்பிக்கை இல்ல... அதனால தான் எதையுமே சொல்லாம அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கா ... நீ ஊட்டிக்கு வா... அவளோட நிம்மதியா டைம் ஸ்பென்ட் பண்ணு ... எதையும் கேட்டு அவளை கஷ்டப்படுத்தாத... மாசமா இருக்கிற பொண்ணு நிம்மதியா இருந்தா தான் ஒன்னுக்கு ரெண்டு குழந்தைங்க நல்ல ஆரோக்கியத்தோட பொறக்கும் ... நீ அவளுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வரேன்னு தெரிஞ்சாலே, உன் மேல நம்பிக்கை வந்து நீ கேட்காமலே அவளே எல்லாத்தையும் சொல்லுவா ..."
"சரிப்பா ..."
"நான் நாளைக்கு காலையில ஊட்டிக்கு கிளம்பறேன் .... லட்சுமி வீட்டுக்கு போயிட்டு அவ கிட்ட பேசிட்டு அங்க இருந்து ஊட்டிக்கு போறதா உங்க அம்மா அருணா கிட்ட சொல்லிட்டு போக போறேன் ... நீயும் அதையே சொல்லு ... அதோட லட்சுமி வீட்டை விட்டு போயிட்டா .... கோர்ட்ல டிவோர்ஸ் கேஸ் நடந்துகிட்டு இருக்குன்னு கற்பகம், அருணாவும் ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருக்காங்க .... அப்படியே விட்டு பிடி இவங்களையெல்லாம் ஆட விட்டுட்டு தான் அடக்கணும் "
என்றவர் மைந்தனின் கவலை தோய்ந்த முகத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு,
"நான் கோயம்புத்தூர் போறேன்னு சொன்னதுமே, லட்சுமி முகத்துல அப்படி ஒரு எதிர்பார்ப்பு .... வாயில சொல்லலேன்னாலும் அவ உன்னை ரொம்பவே மிஸ் பண்றா... ஆபீஸ் வேலை போக மத்த நேரம் எல்லாம் எதையோ பறிகொடுத்த மாதிரி சுத்திக்கிட்டு இருக்கா ..... பார்க்க பரிதாபமா இருக்கு டா ...சீக்கிரம் நீ ஊர் வந்து சேர்ற வழிய பாரு…”
மருமகளின் மனநிலையை அவர் எடுத்துக்கூற, கேட்டுக் கொண்டிருந்தவனின் மனதில் மழைச்சாரல் ஜில்லென்று வீசியது.
அவள் அவனை பிரிந்து நிம்மதியாக இருக்க மாட்டாள் என தெரிந்திருந்தாலும் , தன்னை நிராகரித்து விட்டாளே என்ற கோபத்தில் வாய்க்கு வந்தபடி வசைப்பாடிக் கொண்டிருந்தவனுக்கு, அவள் அவன் வரவிற்காக ஏங்கித் தவிக்கிறாள் .... அவனை மிகவும் எதிர்பார்க்கிறாள்... தேடுகிறாள்... என்பதெல்லாம் தேன் வந்து பாய்ந்த சுகத்தை கொடுக்க, மனம் குளிர்ந்து போனான் மன்னவன்.
தந்தை விடை பெற்றதும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியான நித்திரை அவனை ஆட்கொள்ள, அம்சமாக கண்ணயர்ந்து போனான்.
மறுநாள் காலையில் அவன் அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் போது வீரா அவனை அலைபேசியில் தொடர்பு கொண்டான் .
"எப்படிடா இருக்க கல்யாண மாப்ள... கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வாரம் கூட இல்ல ... கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..." என்றான் ராம் சரண் மிகுந்த மகிழ்ச்சியோடு.
"நல்லா இருக்கேன் டா ... கல்யாண வேலையும் நல்லா படியா நடந்துகிட்டு இருக்கு ..." என்றான்
அம்மையப்பன் பொன்னம்பலத்தை தொடர்பு கொண்டு திருமண ஏற்பாட்டைக் குறித்து பேசியதை
எல்லாம் விவரித்து.
"சரி... ஸ்ரீப்ரியாவோட பேசினியா ..." என்றவனிடம் செல்வராணி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி அவன் அனைத்தையும் கூறி முடிக்க,
" ஏன் உன் மாமனார் இப்படி யோசிச்சாரு ... ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்காரே ... இப்பவே உனக்கும் அவருக்கும் ஈகோ கிளாஷ் ஸ்டார்ட் ஆயிடுச்சு போல ..."
"அது ஈகோ இல்லடா .... அக்கறை.... அவரு பார்க்க கொஞ்சம் கரடு முரடா இருந்தாலும், அவர் பொண்ணு மேல ரொம்ப பாசமா இருக்காரு .... எங்க தன் பெண்ணை தப்பான இடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்துடுவோமோனு பயப்படறாரு... அது இல்லாம அவர் பார்த்து வளர்ந்த சூழ்நிலை வேற... அதனால தான் அப்படி யோசிக்கிறாரு... அவருக்கெல்லாம் பேசி புரிய வைக்க முடியாது ... வாழ்ந்து காட்டி தான் புரிய வைக்கணும் ..."
"சூப்பர் டா ... மனுஷங்களை அவங்க சூழ்நிலையோட பொருத்தி புரிஞ்சுக்க ஆரம்பிச்சோம்னா பாதி பிரச்சனையை தவிர்க்கலாம்னு இப்பதான் புரியுது ..." என ராம்சரண் நண்பனை சிலாகித்து பாராட்ட,
"ஒரு விஷயம் உன்கிட்ட கேட்கணும் ..." என்றான் வீரா மிகுந்த தயக்கத்தோடு.
" சொல்லுடா என்ன ..."
" அது கல்யாணத்தை பத்தி ... கேட்டா என்னை ஒரு மாதிரி நினைச்சிட மாட்டீயே ... எனக்கு இந்த கேள்வியை யார் கிட்ட கேக்குறதுன்னே தெரியல டா ... அதான் உன்கிட்ட கேட்கலாம்னு..."
"நீ போடற பீடிக்கை எல்லாம் பார்த்தா , ஏதாவது வில்லங்கமான கேள்வியா கேப்பியோ ... சரி எதுவா இருந்தாலும் கேளு ..."
"அது வந்து ... வந்து ... தாலி எப்படி டா கட்டறது .... எனக்கு இடது பக்கமா தான பொண்ணு உட்கார்ந்திருக்கும் ...அப்ப எப்படி கழுத்தை சுத்தி தாலியை கொண்டு போய் கட்றதுன்னு ஒரே கன்ஃபியூஷனா இருக்கு .... தாலியை கையில கொடுத்துட்டு ஐயிரு வேற கெட்டி மேளம் கெட்டி மேளம்னு சொல்லி, பரபரப்பு கிளப்பி விட்டுடுவாரு ... அதான் சினிமால தாலி கட்டுற எல்லா சீனையும் எடுத்து போட்டு பார்த்துகிட்டு இருக்கேன் ..."
அவன் சந்தேகத்தைக் கேட்டதும், ராம்சரண் ஒரு நிமிடம் தொடர்ந்து குலுங்கி சிரித்த படி
"நீ எதையாவது ஏடாகூடமா கேட்டு எனக்கு தர்ம சங்கடத்தை கொடுத்துடுவியோனு பயந்தே போயிட்டேன் ... நல்ல வேளை இப்படி ஒரு கேள்வியை கேட்ட..."
" டேய், பதில சொல்லுடா..."
"தம்பி... தாலி கட்டுறதுக்கு எல்லாம் ரிகர்சல் பார்க்க முடியாது அப்படியே மணமேடைக்கு போய் உட்காரு ... எல்லாம் தானா ஃப்ளோல வந்துடும்..."
"அப்படிங்கற ..."
" ஆமா ..."
" அப்ப சரிடா ..." என குதூகலித்தவனிடம் தன் பணியை குறித்து தான் எடுத்திருக்கும் முடிவை பற்றி ராம்சரண் தெரிவிக்க,
"இத்தனை நாள் ஒரு கம்பெனில அசோசியேட் வைஸ் ப்ரெசிடென்ட்டா இருந்த ... இனிமே ஒரு கம்பெனிக்கு சிஇஓ ஆகப் போற... குட் குரோத் மேன் ... கீப் இட் அப் ...ஆல் தி பெஸ்ட் ..." என மனமார வாழ்த்தியவன் மேற்கொண்டு அலுவலக சம்பந்தமான ஒரு சில விஷயங்களை பேசிவிட்டே அழைப்பை துண்டித்தான் அடுத்த முறை நண்பனுடன் பேசும் போது, இந்த கலகலப்பு இருக்கப் போவதில்லை என அறியாமல்.
தமக்கையின் திருமணத்தை முன்னிட்டு இரு வாரத்திற்கு முன்பே வீடு வந்து சேர்ந்தான் ஸ்ரீப்ரியாவின் தம்பி கோபாலன்.
அடுத்த வாரம் வருகை தரவிருந்தவன், தமக்கையின் திருமணச் செய்தியோடு பாட்டியின் உடல் நிலை செய்தியும் இணைந்து கொண்டதால் முன்கூட்டியே ஊர் திரும்பி இருந்தான்.
உலகப் புகழ்பெற்ற எந்திரவியல் நிறுவனத்தில் பொறியாளராக சார்ஜாவில் பணியாற்றுகிறான்.
ஸ்ரீப்ரியாவிற்கு தம்பி கோபாலன் என்றால் உயிர்.
கோபாலனை பற்றி சொல்லவே வேண்டாம், கோபத்தில் சற்று எடுத்தெறிந்து பேசும் ரகம் என்றாலும், தமக்கை மீது மாசற்ற அன்பு கொண்டவன்.
அதற்காக அவன் அம்மையப்பனின் மறு உருவமெல்லாம் அல்ல ... தாய் சுசிலாவை போல் சற்று மென்மையானவன் அதே சமயத்தில் சற்று வாய் துடுக்கும் உள்ளவன் ..
தமக்கையோடு ஒன்றுமில்லாத விஷயத்திற்கு எல்லாம் டாம் அண்ட் ஜெரியாக சண்டையிடும் சமயங்களில் மட்டும் வெள்ளந்தி, குறும்புக்காரன் .... மற்றபடி மிகவும் எதார்த்தமானவன், வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழக்கூடியவன். குடும்பப் பற்று அதிகம் உள்ளவன்.
அக்காளும் தம்பியும் சந்திக்கும் முதல் ஓரிரு தினங்கள் மட்டும் பிக் பாஸ் இன்ட்ரோடக்ஷன் போல் அன்பை மாறி மாறி பொழிந்து கொள்வார்கள் அதன் பிறகு வரும் தினங்கள் எல்லாம் பிக் பாஸ் டாஸ்க் போல் இருவரும் WWF அடிதடி அதிரிபுதிரியில் ஈடுபடுவது வழக்கம்.
மகனின் வரவு அம்மையப்பன், சுசீலாவிற்கு மகிழ்ச்சி அளித்தது போல் பேரனின் வரவு செல்வராணிக்கு தெம்பை கொடுத்திருக்க, தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு தேறியிருந்தார் செல்வராணி.
கோபால் வந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்த நிலையில்,
"கோபால், என் மொபைல்ல கொஞ்சம் கூட சார்ஜ் இல்ல இப்பதான் சார்ஜ் போட்டு இருக்கேன் ... உன் மொபைல அதுல போட்டுட்டாத ..." என அறிவுறுத்திவிட்டு, தாயிடம் குளிக்க செல்வதாக சொல்லி ஸ்ரீப்ரியா நகர,
"எப்ப பாத்தாலும் என் சார்ஜரையே யூஸ் பண்ணிக்கிட்டு என்னையே கண்ட்ரோல் பண்ண வேண்டியது...ச்சே...." என அவன் சலித்துக் கொண்டிருக்கும் போது வீராவிடமிருந்து
கூடத்தில் வைத்திருந்த தொலைபேசிக்கு (landline)அழைப்பு வந்தது.
"திரிசூலம் படத்துல, அம்மா.... சுமதி........ நல்லா இருக்கியாம்மானு அழுகாச்சியோட சிவாஜி கேட்ட ஃபோன் இது ... கோவில் மணி மாதிரி அடிக்குது....மாத்துங்கடான்னா யாரு கேக்குறா...." என தனக்குத்தானே பேசிக்கொண்டு அழைப்பை எடுத்த கோபால்
"ஹலோ " என்றான் அமர்த்தலாக.
இளமையான ஆணின் குரல் கேட்டதும் ஒரு கணம் தயங்கிய வீரா பிறகு,
"அ...அதி வீரராம பாண்டியன் ...." என பேச்சை தொடங்கும் போதே
"இவ்ளோ பேரோட எல்லாம் என்னால ஒரே நேரத்துல பேச முடியாது ... ஒருத்தர் ஒருத்தரா பேசுங்க ..." என்றான் இயல்பாக .
மறுமுனையில் குலுங்கி நகைத்தவன், அதனை குரலில் காட்டாமல்,
" ஒரு ஆள் தான் பேசறேன் ... சரி நீங்க யாரு ..." என்றான் வீரா குரலில் குறும்பை விதைத்து.
"நான் கோபால் பேசறேன்... சொல்லுங்க ... என்ன விஷயம் "
ஸ்ரீப்ரியாவின் தம்பி என புரிந்து கொண்டவன்
"உன் அக்காவுக்கு என்ன கலர் பிடிக்கும்னு தெரிஞ்சுக்க போன் பண்ணேன்... அவ ஃபோனை எடுக்கல அதனால லேண்ட் லைன்ல கூப்ட்டேன்..."
“ஹலோ ... என் அக்கா படு டெரர் ... சும்மா இப்படி போன் பண்ணி என்ன கலர் பிடிக்கும்னு கடலை போடற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க ..." என அவன் எகுற,
"தம்பி ... தம்பி ...கோவத்தை குறைப்பா ... நான் உங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ள... உன் அக்கா சொல்லலையா .."
"ஓ நீங்களா ... அவ ராம்னு உங்க பேர அழகா சொன்னா.... நீங்க புதுசா வேற ஒரு பெரிய பேரை சொன்னீங்களா அதான் எனக்கு புரியல ....நல்லா இருக்கீங்களா .."
“ நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க ..." என இருவரும் ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்ட பிறகு
"சரி, ஸ்ரீயை கூப்பிடு..."
"அவ குளிக்க போய் இருக்கா ..."
" ஓகே , அவ குளிச்சிட்டு வந்ததும் போன் பண்ண சொல்லு ... அம்மாவை ஒரு பத்து நிமிஷம் கடையில வெயிட் பண்ண சொல்றேன் ..."
"ஐயையோ ... அவ குளிச்சிட்டு வர சாயங்காலம் 6:00 மணிக்கு மேல ஆயிடுமே ..."
" குற்றாலத்துலயா குளிக்க போயிருக்கா.... உங்க வீட்ல தான குளிக்கிறா..."
“ என்ன நீங்க ... இவ்ளோ விவரம் இல்லாம இருக்கீங்க ... உங்களுக்கு அவளை பத்தி ஒண்ணுமே தெரியலையே ...
எங்க வீட்டு மொட்டை மாடில இரண்டு சின்டெக்ஸ் டேங்க் இருக்கு ... அது மொத்தத்தையும் காலி பண்ணிட்டு, கீழ இருக்கிற ஷம்பு தண்ணியும் காலி பண்ணிட்டு தான் வெளியவே வருவா... சில சமயம் லாரி தண்ணி ஆர்டர் பண்ணி கூட மறுபடியும் குளிப்பா... அதனால நாளைக்கு இதே நேரம் ... வேணாம் வேணாம் அரை மணி நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணுங்க .... அப்பதான் நீங்க அக்காவோட பேச முடியும் ..."
அவன் மிகைப்படுத்தி கூறியது, வீராவிற்கு மேலும் சிரிப்பை கொடுக்க,
"சரிப்பா... "என்று அழைப்பை துண்டித்து விட்டு ஒரு கணம் நிம்மதியாக வாய் விட்டே சிரித்துவிட்டு,
என் மாமனார் வீட்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க டோய்.. என பேசியபடி வேலையில் மூழ்கி போனான்.
வீரா அலைபேசியை துண்டித்த 10வது நிமிடத்தில் ஸ்ரீப்ரியா குளித்து முடித்து பூஜை அறை நோக்கி செல்ல,
"அக்கா..." என்றழைத்தான் தம்பி கோபாலன் சோகமாய்.
"என்னடா ..."
"நம்ப அப்பா மஞ்ச மாக்கான்னு தெரியும் .... அதுக்காக உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளையும் அப்படியா பாக்கணும் ..."
" புரியலடா... என்ன சொல்ற ..."
"உன்னை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை போன் பண்ணி இருந்தாரு ..."
" அப்படியா ..." என்றாள் மிகுந்த சந்தோஷத்தில் ஸ்ரீப்ரியா .
" என்ன நொப்படியா ... மனுஷன் ஃபோனை எடுத்ததும் அதிவீரராம பாண்டியன்னு சொல்றாரு .... இவர் என்ன ஐஸ்வர்யா ராயா பேர சொன்னவுடனே தெரிஞ்சுக்க .... போனை எடுத்ததும் செல்ஃப் இன்டர்டியூஸ் கூட சரியா பண்ண தெரியல, இவரு நிஜமாவே ஏவிபியா இருக்காரானு எனக்கு டவுட்டா இருக்குதுக்கா ..."
தம்பியின் சந்தேகத்தைக் கேட்டு கலகலவென்று சிரித்தவள்,
"அவர் ஏவிபியா தான் இருக்காரு அதெல்லாம் எங்களுக்கு தெரியும் ... ஆமா எதுக்காக போன் பண்ணி இருந்தாராம்... "
"ஏதோ டிரஸ் எடுக்குறாங்களாம் கலர் கேக்க சொன்னாரு ..."
"ஓ.... சரி ... நான் என் போன்ல இருந்து அவரை கூப்பிடறேன்..”
"அக்கா ...."
"என்ன்னன்...னடா ..."
" உனக்கு நிஜமாவே அவரை புடிச்சி இருக்குதா ..."
" புடிச்சிருக்கு டா..."
"அவரு பாக்க நல்லா தான் இருக்காரு இருந்தாலும் உன் பக்கத்துல கொஞ்சம் சுமார் தான் ..."
"லூசாட்டம் ஓளராதடா... அவருக்கு என்ன குறைச்சல் நல்லா தானே இருக்காரு ..."
"இந்த உலகம் நான் எது சொன்னாலும் நம்ப போறதில்ல குயில புடிச்சு கால ஒடச்சி பாட சொல்லுகிற உலகம் ..." என தனக்குத்தானே அவன் புலம்பிக் கொண்டு வெளியேற, அதனைப் பார்த்து குலுங்கி சிரித்தபடி தன் அறைக்கு ஓடிய ஸ்ரீப்ரியா, கண்ணிமைக்கும் நேரத்தில் விராவிற்கு அழைப்பு விடுத்தாள்.
இரண்டாவது ஒலியிலேயே அழைப்பை எடுத்தவனிடம் ,
"நீங்க போன் பண்ணி இருந்தீங்களாம் இப்ப தான் தம்பி சொன்னான்.."
" இவ்ளோ சீக்கிரம் உன்கிட்ட இருந்து ஃபோனை நான் எதிர்பார்க்கல ... குளிச்சு முடிச்சிட்டயா..." என்ற கேள்வியில் ஒருவித அழுத்தம் தெரிய,
" ம்ம்ம்..." என்றாள் மென்மையாக.
" புடவை எடுத்துக்கிட்டு இருக்காங்க உனக்கு எந்த கலர் பிடிக்கும் ... நிறைய கலர் காம்பினேஷன்ஸ் வெரைட்டீஸ்ல சாரீஸ் நிறைய இருக்கு ... உனக்கு வாட்ஸ் அப் பண்ணி இருக்காங்க ... பார்த்து சொல்லு ..."
" ம்ம்ம்ம்.... சரி..." என்றவளிடம் தயக்கத்தோடு
"கோயம்புத்தூர்ல ரொம்ப நேரம் குளிக்க முடியாது ..." என்றான் குறும்பான குரலில்.
"ஏன் உங்க ஊர்ல, தண்ணி பஞ்சமா ..."
"இப்போதைக்கு தண்ணி பஞ்சமில்ல நீ வந்ததுக்கு அப்புறம் வேணா தண்ணி பஞ்சம் வந்தாலும் வரலாம் ... "
"புரியல ..." என்றாள் யோசனையாய். கோபாலன் அவளது குளியல் பிரதாபத்தை வீராவிடம் விஸ்தரித்தது தெரியாமல்.
"தண்ணி நிறைய இருக்குது... குளிக்கலாம் தப்பில்ல... ஆனா நிறைய நேரம் குளிச்சா காய்ச்சல் வந்துடும்... இங்க கிளைமேட் ரொம்ப கூலா இருக்கும் ..."
என்ன ஆச்சு .... ஏன் குளியல பத்தி கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்காரு ... ஒருவேளை ஏதாவது டபுள் மீனிங்கா பேசறாரா எனக்கு தான் புரியலயா ... என தனக்குள்ளே சிந்தனையை சுழல விட்டுக் கொண்டிருந்தவளிடம்,
"ஓகே ஸ்ரீ .... அம்மா whatsapp வீடியோ கால் பண்ணுவாங்க... எந்த கலர் எந்த வெரைட்டி வேணும்னு பார்த்துட்டு சொல்லு ... உனக்கு எந்த வெரைட்டி எந்த கலர் பிடிச்சிருந்தாலும் கோ அஹெட் .. உனக்கு பிடிச்சா எனக்கும் புடிச்ச மாதிரி ... நீ உன் புடவையை ச்சூஸ் பண்ணதுக்கு அப்புறம் தான் நான் என் ஷர்ட்ட அதுக்கு மேட்ச்சா ச்சூஸ் பண்ணனும்... சரியா ...." என்று ரசனையோடு முடித்தான், அடுத்து
அவளவனிடமிருந்து வரப்போகும் அலைபேசி அதிர்ச்சியை தாங்கி வரப்போவதை அறியாமல்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
Super akka very nice 👍👍👍
ReplyDeleteOrey twist ah
thanks a lot ma
DeleteNeenga oru oru epi kum adhirchi vecharinga ji🤨🤨🤨🤨
ReplyDeletethanks a lot ma...
DeleteSis nalla thaney poyitu iruku ethuku next ud la bomb poda pakuringa... Konjam comedy uh pona pudikathey, adutha ud la azha vechiduvingaley... Paati ya kolla porathu confirm ayiduchu...nalla padiya anupi veingo 😅😅
ReplyDeletehahha... vera vazhiyilla kanna....
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
DeleteNice
ReplyDeletethanks ma
Deletethanks a lot
ReplyDeleteNext episode sis
ReplyDeletetomorrow morning upload panniduven ma
Delete🙏👍
DeletePeriya periya twist vaikirathula akka vera level
ReplyDelete