அத்தியாயம் 46
அவசர அவசரமாக படி இறங்கி பதற்றத்தோடு வந்தவர்களிடம்,
"உங்க அம்மாவுக்கு மூச்சு திணறல் ரொம்ப அதிகமாயி தூக்கி தூக்கி போடுதும்மா ..." என தழுதழுத்த குரலில் பிரபாவின் தந்தை அவர்கள் இருவரையும் ஒருசேர பார்த்து கூற, ஒரு கணம் ஒன்றுமே புரியாமல் இருவரும் விழித்தனர்.
அவர்கள் எதிர்பார்த்து வந்தது வேறு. ஆனால் அங்கு நடந்து கொண்டிருப்பது முற்றிலும் வேறாக இருக்க , அதனை உள் வாங்கிக் கொள்ள இருவருக்குமே ஓரிரு கணம் தேவைப்பட்டது .
"இப்பவே அம்மாவ ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிடலாம் பா ..." பதற்றமான குரலில் சற்று உச்சஸ்தாழியில் பிரபா கூறிக் கொண்டிருக்கும் போதே, வழக்கத்துக்கு மாறாக கூடத்தில் வீட்டு உறுப்பினர்களின் குரல்கள் உயர்ந்து ஒலிப்பதை கேட்டு , தன் அறையில் இருந்து வேகமாக வெளிப்பட்டாள் ப்ரீத்தி.
பொதுவாக வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழந்து, மனம் நொந்து தற்கொலை செய்து கொள்ள எண்ணுபவர்கள், பெரும்பாலும் அதனை பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டார்கள்...ஆனால் தன் இஷ்டம் போல் தற்குறியாக உழலும் ப்ரீத்தி போன்றவர்கள், எப்போதெல்லாம் வாழ்க்கையில் எதிர்ப்பை சந்திக்கும் சூழ்நிலை வருகிறதோ , அப்போதெல்லாம் உடன் இருப்போரின் அனுதாபத்தை பெற தற்கொலை நாடகத்தை தற்காத்துக் கொள்ளும் ஆயுதமாக கையில் எடுப்பார்கள் .
உயிரும் போகக்கூடாது, உடலுக்கும் அதிக சேதாரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பதை எல்லாம் வெகு தாமதமாக உணர்ந்து கொண்டதால் நிர்தாட்சண்யமாக பிரபா சாட, வழக்கம் போல் தற்கொலை நாடகத்தை நடத்தியேனும் இழந்த மரியாதையை மீட்டெடுக்கலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவளுள் பிரபாவின் கடைசி அதிரடி வார்த்தை பிரயோகங்கள் கூடை மண்ணைக் கொட்ட, வழியற்றுப் போனாள் ப்ரீத்தி.
அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்து வீட்டு உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் கூடத்தில் பேச்சரவம் கேட்க புரியாமல் ஓடி வந்தவள்,
"அப்பா என்ன ஆச்சு ..." என்றாள் தந்தையைப் பார்த்து .
"அம்மாவுக்கு உடம்பு சரியில்ல நாங்க ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போறோம் ... வீட்ல இருந்து குழந்தைகளை பார்த்துக்க..." என பிரபாவின் தந்தை ஆணை பிறப்பித்து விட்டு, அறைக்குள் நுழைய, அவரை சத்யன், பிரபா பின் தொடர்ந்தனர்.
படுக்கையில் மூச்சு விட முடியாமல் நெஞ்சை பிடித்துக் கொண்டு திணறிக் கொண்டிருந்தவரின் தலை பக்கத்தை பிரபாவின் தந்தை மற்றும் பிரபா பக்குவமாக பற்றி தூக்க, கால் பக்கத்தை பற்றி தூக்கிய சத்யன் துரிதமாக செயல்பட்டு காரின் பின்புறத்தில் அவரைக் கிடத்திவிட்டு மின்னல் வேகத்தில் காரை செலுத்தலானான்.
"பிரபா, நீ எங்களோட வர்றதுக்கு பதிலா, வீட்ல இருந்து குழந்தைகளை பார்த்துகிட்டு இருந்திருக்கலாம் ..." என்றான் அந்த தீவிரத்திலும் ப்ரீத்தியை நினைத்து.
அவன் சொல்ல வருவதை சரியாக உள்வாங்கிக் கொண்டவள்,
"நிங்க கவலைப் படாதீங்க ... ப்ரீத்தி நல்லபடியா இருந்து குழந்தைகளை பார்த்துப்பா.... "
என்றாள் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து.
அடுத்த 15 நிமிடத்தில், கார் மருத்துவமனையை அடைய, மருத்துவர்கள் குழு பிரபாவின் தாயாரை சூழ்ந்து கொண்டு சிகிச்சையை தொடங்கினர்.
அரை மணி நேரம் அரை யுகமாக கழிய
"நவ் ஷி இஸ் ஆல்ரைட் .... ஷி ஈஸ் அண்டர் மெடிகேஷன் .... இன்னைக்கு நைட் அப்சர்வேஷன்ல இருக்கட்டும் ... நாளைக்கு நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் ..." என்ற மருத்துவரின் வார்த்தைக்கு பிறகே மூவரும் பெருமூச்சு விட,
"மாப்ள, நான் அடிக்கடி சொல்றது தான் .... நீங்க என் மூத்த மாப்பிள்ளை இல்ல... என் மூத்த மகன் .... எவ்ளோ பொறுப்பா சமயோஜதமா நடந்துக்கிறீங்க .... நீங்க மாப்பிள்ளையா கிடைச்சதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் ..." என லேசாக கண்களில் கண்ணீர் மின்ன, மொழிந்து விட்டு பிரபாவின் தந்தை விடை பெற அவர் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,
"என்ன சத்யா, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ...."
----- பிரபா.
"ப்ரீத்தியோட நடத்தை மட்டும் உங்க அப்பாவுக்கு தெரியவந்தா ரொம்ப துடிச்சு போயிடுவாரு டி .... எனக்கு அன்பு எப்படியோ, அதே மாதிரி தான் ப்ரீத்தியும், ஆனா அவ தான் இதையெல்லாம் எப்ப புரிஞ்சுக்க போறாளோ ..." என்றவனை காதல் பொங்க பார்த்தவள்,
"அவ இன்னைக்கே புரிஞ்சுகிட்டு இருந்திருப்பா... ஏன்னா அவ வாங்கின அடி அப்படி ..." என்றவளை அவன் கோபத்தோடு முறைக்க,
லேசாக புன்னகை பூத்தபடி, தன் இரு கரத்தால் அவன் இடையைப் பற்றி, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு
"கோவப்படாதீங்க ப்ளீஸ் ..." என்றாள் மென்மையாக.
"தள்ளி நில்லு டி... இது ஹாஸ்பிடல் ..." என்றான் வழக்கம் போல் ஆங்கிரி பேர்ட்டாக.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த செல்வராணிக்கு
ஓரளவு உடல்நிலை தேறியதும்,
"என்ன கண்ணு ... மாப்பிள்ளையோட பேசனியா ...."
என்றார் அருகில் அமர்ந்திருந்த தன் பேத்தி ஸ்ரீப்ரியாவை பார்த்து.
"இல்ல அப்பத்தா ... அப்பாவுக்கு புடிக்கலைன்னும் போது, எப்படி அதை செய்ய ...."
"அட இவ ஒருத்தி ... இப்ப கலியாணம் முடியாததால உங்கப்பன் ஓளறினத கேட்டுக்கிட்டு வாயை மூடிக்கிட்டு இருக்க ... ஒருவேளை கல்யாணம் முடிஞ்ச பொறவு, உங்க அப்பன் ஓளறி கொட்டினான்னா, அப்ப கூட இப்படித்தான் இருப்பியோ.... இங்க பாரு அம்மு .... அந்த புள்ள தங்கமான புள்ள .... உங்க அப்பன் கிடக்கான் கூறு கெட்டவன்.. அவன் கிட்ட நான் பேசிக்கிறேன் ... உன் போனுக்காக மாப்பிள்ள காத்துகிட்டு இருப்பாரு.... ஒரு போன் போட்டு பேசிடு அம்மு ..." என்றார் வாஞ்சையாக.
"சரி அப்பத்தா ..." என்றவள் சொல்லவும், அம்மையப்பன் அங்கு வரவும் சரியாக இருந்தது.
மைந்தனைப் பார்த்ததும், தணித்திருந்த கோபம் தலைக்கு ஏற ,
"அம்மையப்பா,
கடைசி காலத்துல எனக்கு ஏதாச்சும் நீ நல்லது பண்ணனோம்னு நெனச்சா, அந்த கோயம்புத்தூர் தம்பிக்கே என் பேத்திய கட்டி வச்சிடு ... எனக்கு அந்த தம்பி பாண்டியனை ரெம்ப புடிச்சிருக்கு.... அவங்க குடும்பத்தையும் தேன்...
கலியாணத்துக்கு உசுரோட இருப்பேனானு கூட தெரியல ... உடம்பு ரொம்ப படுத்துது... இன்னைக்கோ நாளைக்கோ ஈசனோட கணக்கு எதா இருந்தாலும் நீ என் பேத்திய அந்த தம்பிக்கு தான் கட்டிக் கொடுக்கோணும் இல்லாட்டி போனா இந்த கட்ட வேகாதுய்யா ... சத்தியம் பண்ணு ... "
தழுதழுத்த குரலில் அவர் கூறி முடிக்க, வெகு லேசாக நீர் திரையிட்ட கண்களோடு தாயின் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து வாக்குக் கொடுத்தார் அம்மையப்பன்.
மனைவி, மக்களின் கருத்துக்கோ ஆசைக்கோ முக்கியத்துவம் கொடுக்காத மனிதர், தாயின் விருப்பத்திற்கு இசைந்தார், மகளின் திருமணத்தை குறித்த தன் முடிவால் தான் தன் தாய் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்ற குற்ற உணர்வில்.
ஒருவித தெளிந்த முகத்தோடு அம்மையப்பன் வெளியேறியதும்,
"அம்மு, ஃபோன போடு.. மாப்பிள்ள தம்பி கிட்ட நான் பேசணும் ..." என்றார் சாதித்த உணர்வில்.
கொண்டு வந்திருந்த செல்வராணியின் கைபேசியில் இருந்து வீராவின் எண்ணை எடுத்து, தன் கைபேசியின் வாயிலாக அவனுக்கு அழைப்பு விடுத்தாள் பெண்.
லண்டனில் அவனுக்கு அதிகாலை 6:00 மணி.
கைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்டதும், இரவு முழுவதும் தன்னவளை பற்றிய சிந்தனையிலேயே இருந்ததால், அவளாகத்தான் இருக்கும் என்றெண்ணி துரிதமாக எழுந்து கைபேசியின் ஒளித்திரையை பார்த்தவனுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காமல் அவன் நாயகி அழைத்திருக்க, ட்ரூ காலரில் தெரிந்த பெயரைக் கண்டதும், இன்முகத்தோடு காதுக்கு கொடுத்து,
"குட் மார்னிங் ஸ்ரீ ..." என்றான் மென்மையாக.
"குட் மார்னிங் ..." என்று பதிலுக்கு மொழிந்தவளின் குரலில் ஒருவித தயக்கம் தெரிய,
"பாட்டிக்கு நாலு முறை போன் பண்ணேன் ... எடுக்கல.. எப்படியும் நீ கூப்பிடுவேன்னு உன் ஃபோன்காக அன்னையிலிருந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்..." என அவன் தொக்கி நிறுத்த,
"அது வந்து .." என்றவள் செல்வராணிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதையும், அவரை மருத்துவமனையில் சேர்த்து ஓரளவிற்கு உடல் நலம் தேறி இருப்பதை மட்டும் காரணமாக சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அந்த செய்தி மிகவும் வேதனை அளிக்க, மனமார வருத்தம் தெரிவித்து
"பாட்டி இப்ப எப்படி இருக்காங்க .." என்றான் வாஞ்சையாக.
"பாட்டி இங்கதான் இருக்காங்க .... ஃபோன கொடுக்கறேன் அவங்க கிட்ட பேசுங்க ..."என்றாள் செல்வராணியிடம் அலைபேசியை கொடுத்து.
"ஹலோ பாட்டி, எப்படி இருக்கீங்க ..."
"இப்போதைக்கு நல்லா இருக்கேய்யா... நீங்க எப்படி இருக்கீக ..."
"நல்லா இருக்கேன் பாட்டி..." என்று ஆரம்பித்தவன், அவரோடு பத்து நிமிடங்களுக்கு மேல் பேசி நலம் விசாரித்ததோடு, திருமண ஏற்பாட்டை குறித்த அவரது கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளிக்க
"ய்யா, எங்க வீட்டு பெரிய போன் நம்பரையும் கொடுக்கிறேன் ( Land line) குறிச்சிகிடுங்க... நீங்க கூப்பிட சொல்ல என் பேத்தியோ நானோ செல்போனை எடுக்கலைன்னா அதுல கூப்பிடுங்க ... பெருசா கணகணன்னு மணி அடிக்கும், உடனே ஓடியாந்து எடுத்துடுவோம் சரியா ...."
என வெள்ளந்தியாக மொழிந்தவர் கொடுத்த தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டான் மானசீகமாக.
தொடர்ந்து ஓரிரு கண பேச்சுக்கு பிறகு,
"எனக்கு தூக்கம் வருது நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கணும் நீங்க என் பேத்தி கிட்ட பேசுங்க ..." என நாசூக்காக ஒதுங்கிக் கொண்டவர் ஸ்ரீப்ரியாவிடம்,
"அம்மு,வெளியே போய் பேசிட்டு வா ... நான் கொஞ்ச நேரம் நிம்மதியா கண் அசர்றேன் " என்றார்.
பாட்டியின் அந்த ஏற்பாடு இருவருக்குமே பிடித்திருக்க, அறையை விட்டு வெளியே வந்தவளிடம்
"பாட்டி என்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகுறாங்க ..." என்றான் வீரா.
"இன்னைக்கு ஈவினிங் ராம் ..." .
ஒரு கணம் அமைதி காத்தவன்
"பாட்டிக்கு உடம்பு சரியில்லனு அன்னைக்கே ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாமே..." என்றான் குரலில் எதிர்பார்ப்பை காட்டி.
அவன் குரலில் தெரிந்த எதிர்பார்ப்பை மட்டுமல்ல, கடந்த தினங்களாக அவன் பட்ட ஏமாற்றத்தையும் புரிந்தவளாய் அதற்கு மேல் சற்றும் யோசிக்காமல், அம்மையப்பன் அவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை ஒருவாறு கூறி முடித்தாள்.
மறுமுனையில் இருந்தவனுக்கு மட்டு படாத கோபம் துளிர்த்தது, அம்மையப்பன் மீது அல்ல ...அவனவள் மீது .
பொதுவாக காதலர்களுக்கு
கசப்பான உண்மையை விட, தேன் துளி தடவிய பொய் தான் பிடிக்கும்.
அவள் நினைத்திருந்தால், செல்வராணியின் உடல்நிலையை மட்டும் காரணமாக சொல்லி அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் ....
ஆனால் அவளது பிறவி குணம் அதற்கெல்லாம் ஒத்துப் போகாது என்பதால் வழக்கம் போல் உண்மை நிலவரத்தை பகிர்ந்து முடித்தாள்.
"சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை ..." என்ற கவியரசரின் வரிக்கேற்ப,
பிறவி தோறும் அவன் ஆன்மாவோடு கலந்திருந்தவளை தேடிக் கொண்டிருந்த காளையவன் , முதன் முறையாய் அவளைக் காணொளியில் கண்ட பொழுதே கவிழ்ந்து விட்டான்.
தன்னவளை இப் பிறவியில் கண்டுகொண்டு விட்டோம் என்று எண்ணி இருந்தானே ஒழிய, அவர்களுக்கிடையேயான திருமணம் என்ற உறவுமுறை குறித்து அவன் சிந்திக்கவே இல்லை.
அவனைப் பொருத்தமட்டில், அம்மையப்பனின் மகளை அவன் மனைவியாக்கிக் கொள்ளப் போவதில்லை ...
அவன் மனைவி தான் அம்மையப்பன் வீட்டில் மகளாக இருக்கிறாள் என்ற எண்ணத்திலேயே இருந்ததால், தந்தை தடை விதித்ததால் அவனை தொடர்பு கொள்ளவில்லை என்ற செய்தி வேப்பங்காய் கசந்து, அவன் கோபத்திற்கு தூபம் போட, வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன்,
"எது என்ன ஆனாலும், அடுத்த மாசம் இந்நேரம் நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கும்... நீ என் பக்கத்துல இருப்ப .. அத பத்தி மட்டும் யோசி... சரியா ..." என்றான் வித்தியாசமான குரலில்.
உன் தந்தை மறுத்தாலும் அடுத்த மாதம் திருமணம் நடந்தே தீரும் என்ற தன் முடிவை வெகு நாசூக்காக அவன் கூறி முடித்திருக்க, அரைகுறையாக புரிந்து கொண்டவள்
'ம்ம்' கூட்டி தன் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாள்.
"எனக்கு பேக் டு பேக் கால்ஸ், மீட்டிங்ஸ் இருக்கிறதால என்னால உன்னோட அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது ... நாளன்னைக்கு உனக்கு சாரீஸ் ஜுவல்ஸ் வாங்க போறாங்க ... மாடல் செலக்ட் பண்ண அம்மா உனக்கு போன் பண்ணுவாங்க ..... என்ன புடிச்சிருக்குதோ அத வாங்கிக்க... எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல... "
"உங்களுக்கு பிடிச்சத நீங்களே ஆன்லைன்ல செலக்ட் பண்ணிடுங்களேன்... உங்களுக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் ..."
சற்று முன் இருந்த கோபம், அவளது கனிந்த பேச்சில் குறைய,
"கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதாம்மா ஊருக்கே வரேன்... கல்யாணம் முடிஞ்சு பத்து நாளாவது லீவு எடுக்கணும்னா, இப்பவே எல்லா வேலையும் முடிச்சாகணும் ... அதான்... டைம் கிடைச்சா நிச்சயமா நானும் உங்க கூட கான்ஃபரன்ஸ்ல ஜாயின் பண்ணிக்கிறேன் ... சொல்ல மறந்துட்டேனே ... தாலிக்கொடி வாங்கும் போது முகப்பு வச்ச மாதிரி வாங்கிக்கிறியா ... அன்புக்கு அவங்க மாமியார் வீட்ல அப்படித்தான் போட்டு இருந்தாங்க ரொம்ப அழகா இருந்துச்சு .... நானும் சில ஆட்ஸ் பார்த்தேன்.... நல்லா இருந்த மாதிரி தோணுச்சு ..."
மிகுந்த ரசனையானவன் போலும் , என்று உள்ளுக்குள் அவனை ரசித்துக் கொண்டவள்,
"எனக்கும் முகப்பு வச்சிருந்தா ரொம்ப பிடிக்கும் ..." என்றாள் மென்மையாக .
"குட் ..." என அழைப்பை துண்டித்தான் சற்று முன் செல்வராணியிடம் பேசியது தான் அவர்களுக்கிடையே ஆன கடைசி உரையாடல் என அறியாமல் .
ஸ்ரீப்ரியா அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. எங்கு தன் திருமண ஆசை நிறைவேறாமலே போய்விடுமோ ... என்று அஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு , தந்தையின் திடீர் ஒப்புதல் நிம்மதி அளித்ததோடு,
தன்னவனுடனான முதல் தனிமை பேச்சும் ரசிக்கச் செய்ய, இறக்கை இல்லாமலேயே விண்ணை வட்டமடித்தாள் பெண்.
அன்று முழுவதும் எவ்வளவு முயன்றும், அவன் குரலில் தெரிந்த வித்தியாசத்திற்கு மட்டும் அவளால் பெயரிட முடியாமல் போக, கோவப்பட்டாரா இல்ல சாதாரணமா தான் பேசினாரா ... என பலமுறை தன்னுள்ளே கேட்டுப் பார்த்து விடை தெரியாமல் குழம்பி தவித்தவள் கடைசியில் வைகறைப்பொழுதில் கண்ணயர்ந்து போனாள்.
ஊட்டியில் ......
மாசமாக இருக்கும் மருமகளை சிறு துரும்பை கூட தூக்கவிடாமல், தன் மகளை விட ஒரு படி மேலாகவே பார்த்துக் கொண்டார் ரங்கசாமி.
பெரும்பாலான வீட்டு வேலைகளை, குழந்தையை பார்த்துக் கொள்வது உட்பட சிவகாமியே செய்து விடுவதால், ஸ்ரீலட்சுமிக்கு அலுவலக வேலையைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை.
ஆனால் சிந்திக்க, நினைத்துப் பார்க்க நினைவுகள் நிறையவே இருந்தன.
கணவனோடு பேச வேண்டும், அவனை காண வேண்டும் என்ற ஆவல் கூடிக் கொண்டே சென்றாலும், ஏதோ ஒன்று உடும்புப்படியாக அவளை பிடித்து தடுத்து நிறுத்தியது .
நடந்து முடிந்த பிரச்சனைகளில் 95% அவளுடைய தவறுதான் என மனம் அடித்து கூறினாலும், 5% அவள் கணவனுடையதும் அல்லவா ஆதலால் முழு மனதோடு முடிவெடுக்க முடியாமல் திண்டாடிப் போனாள்.
என்னதான் அவள் துரு துருவென்று வளைய வந்தாலும் முகத்தில் முன்பிருந்த சாந்தமெல்லாம் காணாமல் போய், சதா சர்வ காலமும் சோகம் நிலைக் கொண்டிருக்க, வெளியே பகிர முடியாமல், கணவனை நினைத்து மனதிற்குள் மருகுகிறாள் மருமகள் என்பதைப் உணர்ந்துக்கொண்ட ரங்கசாமிக்கு ராம்சரணின் மீது வகைத்தொகை இல்லாமல் கோபம் கொந்தளித்தது.
"இதான் சாக்குனு, நான் சொன்ன ஒரே காரணத்துக்காக டிவோர்ஸ்க்கு கையெழுத்து போட்டு கொடுத்துட்டு நிம்மதியா இருக்கியா ... பொண்டாட்டி ஒன்னுக்கு ரெண்டு குழந்தையை சுமந்துகிட்டு இருக்காளேனு கொஞ்சமாச்சும் பாசம் இருக்காடா உனக்கு....
நான் லட்சுமியை இங்க கூட்டிட்டு வந்தா... நீ பின்னாடியே வருவேன்னு நினைச்சு தான் இங்க கூட்டிகிட்டு வந்தேன் .... ஆனா விட்டது தொல்லைனு அங்க நீ நிம்மதியா இருக்க...
இரு... இதுக்கெல்லாம் இன்னைக்கே ஒரு முடிவு கட்டறேன்..." என சன்னமாக வாய் விட்டே தன் அறைக்குள் முழங்கியவர், வழக்கம் போல் பட்டாம்பூச்சியாய் செயல்பட்டு, துரிதமாக கோயம்புத்தூர் செல்ல தயாரானார்.
அவர் கோயம்புத்தூர் செல்வதற்கு வேறு காரணங்களும் இருந்தன. அவர் வியாபார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்த நிலையில், அவர் ஊர் திரும்பியதை கற்பகம் அருணாவிற்கு தெரியப்படுத்தவும், உடன் அவர்களை
ஆழம் பார்க்கவும் பயணத்தை மேற்கொள்ள எண்ணினார் மனிதர்.
"ம்மா லட்சுமி, ரெண்டு நாளைக்கு கோயம்புத்தூர் போலாம்னு இருக்கேன் ... வீட்டு ஆளுங்கள பார்த்து ரொம்ப நாள் ஆச்சும்மா ..."
இயல்பாக கூறுவது போல் அவர் கீழ்கண்களால் அவளது உணர்வுகளை படிக்க முயல,
"கோயம்புத்தூர்" என்ற வார்த்தையை கேட்டதுமே , கணவனைப் பற்றிய நினைவுகள் நயாகரா நீர்வீழ்ச்சி போல் அவளுள் பொங்கி வழிய , தன்னையும் உடன் அழைத்துச் செல்ல மாட்டாரா என்ற ஏக்கத்தை கண்களில் தேங்கியபடி அவள் பார்க்க,
"கிளம்பறேம்மா, ரெண்டே நாள் இருந்துட்டு திரும்பி வந்துடுவேன் .... நடுவுல ஏதாவது முக்கியமான விஷயம்னா போன் பண்ணும்மா..." என்றவர் ஞாபகமாக சிவகாமியிடம் அவளை நன்முறையில் கவனித்துக் கொள்ள அறிவுறுத்திவிட்டு, வழக்கம் போல் பேத்தியோடு சற்று நேரம் அளவளாவி விட்டே விடை பெற்றார்.
கோயம்புத்தூரில் ....
ராம்சரண் வாழ பிடிக்காமல் வழியற்று நெட்டி முறித்து நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தான். ஊட்டியில் இருக்கும் ஸ்ரீலட்சுமிக்கு அவ்வப்போது மட்டுமே அவர்களது தேன்நிலவு தினங்கள் நினைவிற்கு வந்து அலை கழிக்க, கோயம்புத்தூரில் இருக்கும் ராம்சரணுக்கோ அனுதினமும் அணு அணுவாக அவர்களது மூன்றாண்டு திருமண வாழ்க்கை கண்முன்னே தோன்றி அல்லலுற செய்து கொண்டிருந்தன.
அவளுடன் இணைந்து, இசைந்து, இழைந்து சுகித்த தருணங்கள், தன் ஆசை மகளை கொஞ்சி மகிழ்ந்த கணங்கள் என அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையும் பறைசாற்றிக் கொண்டிருக்க , நினைவுகளில் இருந்து வெளிவர முடியாமல் முட்டி மோதி, கரைந்து காணாமல் போய் கொண்டு இருந்தான் காளை.
" உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா என்னை வேண்டாம்னு சொல்லி இருப்ப.... கூடிய சீக்கிரம் ஊட்டிக்கு வரேன் டி…
நீ இல்லாம வாழ முடியலன்னோ, நீ பெரிய வான அழகின்னோ அங்க வரல ... நான் என் குழந்தைகளை பார்க்க வரேன் ... அதே சமயத்துல உன்னை நிம்மதியா வாழவும் விடமாட்டேன் ... உன்னை மறுபடியும் என் வாழ்க்கைக்குள்ள எப்படி கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் ..." என முன்னுக்குப் பின் முரணாக வாய்க்கு வந்தபடி அவளை வசைப்பாடிக் கொண்டிருந்தான் நாயகன்.
இருவரும் ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து வசைப்பாடி பிரிந்து இருந்தால், குறைந்தபட்சம்
அந்த கசப்பான தருணங்களை எண்ணி பார்த்து அவனால் மனதை தேற்றி கொண்டிருக்க முடியும்.
ஆனால் அவர்களது மூன்றாண்டு கால திருமண பந்தத்தில், ஒரு சில முரண்கள் இருந்திருந்தாலும், இருவருமே அதனை மென்மையாகவே கையாண்டு இருந்ததால், அவனைப் பொருத்தமட்டில் அவன் நினைவடுக்குகளில் , மனைவியைப் பற்றிய பசுமையான நினைவுகள் மட்டுமே நிலைத்திருக்க, அவளைக் கணநேரம் கூட மறக்க முடியாமல் தவித்துப் போனான் தலைவன்.
"ஓ காட் ... ஐ வாண்ட் டு பி பிரைன் லெஸ் ஃபார் அட்லீஸ்ட் ஒன் ஹவர் .. ப்ளீஸ் ..."(
கடவுளே... ஒரு மணி நேரத்திற்காவது என் மூளையை செயல்படாது வையேன்..) என வாய்விட்டே புலம்பியவன், அதற்கு மேல் வீட்டில் இருக்க பிடிக்காமல், தான் ஊட்டிக்கு செல்வதற்காக திட்டமிட்டு இருக்கும் காரியத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டான்.
பகல் முழுவதும் சுற்றி திரிந்து பெரும்பாலான வேலைகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியவனிடம்,
"வா சரண், சாப்பிடு...." என்றழைத்தார் கற்பகம், தானும் தன் மகளும் உண்டு கொண்டிருக்கும் காரணத்தால்.
தன் அறைக்குச் சென்று புத்துணர்வு பெற்று வந்தவன் அவர்களோடு அமர்ந்து இரவு உணவு என்ற பெயரில் சாந்தி( சமையல்காரம்மா) செய்துவிட்டு சென்றதை கொறித்துக் கொண்டிருக்கும் போது , வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
யாராக இருக்கும் என்று எண்ணி, அருணாவும், ராம் சரணும் வாயிலை ஆவலோடு நோக்க, ரங்கசாமி தன் சிறிய பயணப் பொதியோடு வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
ரங்கசாமியை அந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத கற்பகமும் அருணாவும் ஓரளவிற்கு அதிர்ச்சி அடைந்தனர் என்றே சொல்லலாம் .
வியாபார நிமித்தமாக மூன்று மாத காலம் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் மனிதர் மூன்று மாதங்களைக் கடந்தும் வீடு திரும்பவில்லையே .... என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஏன் அலைபேசியில் அழைத்துக் கூட விசாரிக்காமல் விச்ராந்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு அவரது திடீர் வரவு வயிற்றில் புளியை கரைக்க,
"வாங்க ..... டூர் முடிஞ்சு இவ்ளோ நாள் ஆயிடுச்சே இன்னும் நீங்க ஊர் திரும்பலயேனு நினைச்சுக்கிட்டே இருந்தேன் ... ஏதாவது முக்கியமான வேலையா இருந்தா தான் இவ்ளோ நாள் எடுத்துப்பீங்கன்னு தெரியும் அதனால தான் போன் பண்ணலாமா வேண்டாமானு யோசிச்சுக்கிட்டே இருந்தேன் .... எது எப்படி இருந்தாலும் நாளைக்கு போன் பண்ணனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க ...."
என நடிகையர் திலகமாக மாறி, தன் அக்கறையின்மைக்கு அவர் அரிதாரம் பூச , உடன் அருணாவும் இணைந்து கொண்டு தன் பங்கிற்கு சில கட்டுக் கதைகள் சொல்ல, பதிலளிக்காமல் இருவரின் வரவேற்பிற்கும் சிறு தலை அசைவையே பதிலாக கொடுத்தார் ரங்கசாமி.
தாயும் மகளும் கைதேர்ந்த நடிகர்கள் என்று ரங்கசாமிக்கு தெரிந்திருந்தாலும், இன்று அவர்களது நடிப்பு ஆஸ்கார் விருது வழங்கும் அளவிற்கு தரமாக இருக்க, அதனைக் கண்டு அவர் பிரமிக்க, உடன் இருந்த ராம் சரணும் ஒரு கணம் அசந்து தான் போனான்.
"பிசினஸ் ட்ரிப் எப்படிப்பா இருந்தது ....
" என அப்பொழுதுதான் அவரைப் பார்ப்பது போல், ராம் சரணும் தன் பங்கிற்கு வேஷம் கட்ட,
உலகமே நாடக மேடை ... அதில் நீயும் நானும் நடிகர்கள்… என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளை நினைத்துப் பார்த்தவர்,
"ரொம்ப பிரமாதமா இருந்ததுப்பா ...."
என்றார் ரங்கசாமி தானும் நடிகனாக மாறி.
பிறகு மேடையே இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கும் அந்த நடிகர்களோடு இரவு உணவை உண்ண தொடங்கிய ரங்கசாமி
"லட்சுமி எங்க ..." என்றார் வெகு இயல்பாக.
எதிர்பார்த்த கேள்வி தான் என்றாலும், அதற்கு பதிலும் தயார் நிலையில் இருந்தாலும் ஏனோ கற்பகம், அருணா கண்களில் பயத்துடன் கூடிய சிறு அதிர்ச்சி மின்னவே செய்ய, அதனைக் கண்டும் காணாமல் கண்ணுற்றுக் கொண்டிருந்தான் நாயகன்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteThanks ma
DeleteWow superb akka very nice 👍👍👍👌👌👌💐🌹🌹
ReplyDeletethanks ma
DeleteSemma,
ReplyDeletethanks ma
DeleteSemma... interesting sis. Take care of your health.
ReplyDeletethanks ma
DeleteSemma superb akka ...inaiku all hero story yum.... cover panitinga....super epi ka....selvarani ...Patti character arumai......
ReplyDeleteTake care of your health akka.....
thanks ma
DeleteAwesome 😎😎😎
ReplyDeletethanks ma
DeleteTerrific 👍
ReplyDeletethanks ma
DeleteSuper super super super super super super
ReplyDelete