அத்தியாயம் 45
சத்யனைப் பின் தொடர்ந்து கூடத்திற்கு வந்தவள்,
"அத்தை , நான் கிளம்பறேன் ... இந்த டப்பால இட்லி மாவு இருக்கு ... நேத்து ராத்திரி அரைச்சது ... பிரிட்ஜில வச்சுட்டு போறேன் நாளைக்கு பிரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி போட்டுக்குங்க ... நான் கிளம்பறேன் தம்பி ... ஹாவ் எ ஹாப்பி ஜர்னி .."
பாண்டியனைப் பார்த்து ஸ்ருதி குறைந்த குரலில் சொன்னவள், அடுத்த ஐந்து நிமிடத்தில் டாக்ஸியில் விடை பெற்றாள்.
“பிரபா வரும் போது நல்லா தான் வந்தா... போகும் போது ஏன் மூஞ்சியை தூக்கி வச்சிகிட்டு சோகமா போறா, நீ அவ கூட ஏதாச்சும் சண்டை போட்டயா சத்யா…”
அகல்யா யோசனையோடு கேட்க,
"எம்மா, எப்பவும் இதே கேள்வியை தான் கேப்பியா... அவ அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலனு சொல்லி வருத்தப்பட்டா.... நாளைக்கு அவங்கள டாக்டர்க்கு கூட்டிகிட்டு போவணும்னு என்னைய கூப்பிட்டா... பாண்டியனை ஏர்போர்ட்ல விட்டுட்டு வரேன்னு சொல்லி இருக்கேன்”
"ஓ...." என்று முடித்தார் அகல்யா.
டாக்ஸியில் பயணப்பட்டவளின் மனம் ரணமாய் காந்தியது ....
பொதுவாக ஆண்களில் 60% பேர் சபல புத்திகாரர்கள். மீதம் இருக்கும் 40 சதவீதத்தில் பாதி மனைவிக்கு பயந்தவர்கள், மீதி மட்டுமே மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் ...
சத்யன் அந்த நாற்பது சதவீதத்தில் வருபவன் ... ஆனால் மனைவிக்கு பயந்தவன் அல்ல மனசாட்சிக்கு கட்டுப்பட்டவன் ....
கோபம் இருக்கும் இடத்தில் துரோகம் இருக்காது என்பதற்கு ஏற்ப, ஆள் ஊசி பட்டாசு போல் வெடுக்கு வெடுக்கென்று வெடித்தாலும் அவன் நடத்தையில் எப்பொழுதும் நேர்மை இருக்கும்...
அவளது குடும்பப் பின்னணி ஓரளவிற்கு பொருளாதார வளம் மிக்கது என்றாலும், பெரிதாக உறவு பின்னணிகளைக் கொண்டதில்லை.
சத்யன் தான் அவர்கள் வீட்டு மூத்த மாப்பிள்ளை, மூத்த மகன் எல்லாமே ....
அவன் பேச்சு தான் அவளது தாய் தந்தைக்கு வேதவாக்கு. அவன் கிணற்றில் குதி என்றாலும் குதித்து விடுவார்கள் அப்படி ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை, மரியாதை அவனிடத்தில்.
அதே போல் அவன் ப்ரீத்தியை பற்றி சொன்னதை வைத்து யோசித்துப் பார்த்தவளுக்கு ப்ரீத்தி அவனோடு ஒட்டி, உரசி, சிரித்து, பேசி மகிழ்ந்த சாதாரண தருணங்கள் எல்லாம் தற்போது விகல்பமாக தோன்றத் தொடங்கியது.
யோசிக்க யோசிக்க சத்யன் கூறியது போல், அவள் வீட்டில் இருக்கும் பொழுதே, குட்டி போட்ட பூனையாய் ப்ரீத்தி அவனை சுற்றி வந்தது ஊர்ஜிதமாகி போக கொதித்துப் போய்விட்டாள் பாவை .
இப்படி ஒரு சூழ்நிலை , எந்த ஒரு சராசரி ஆடவனுக்கு அமையப்பெற்றாலும்
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத்தான் பார்ப்பான்.
அந்த வகையில் அவள் சத்யன் உத்தமன். பேயாய் பின்தொடரும் ப்ரீத்தியிடமிருந்து விலகி இருந்ததோடு , அதனை இத்துணை காலம் அவளிடமிருந்தும், அவளது தாய் தந்தையிடம் இருந்தும் நாசூக்காக மறைத்து வந்தது, அவனது பொறுப்பையும் பொறுமையையும் பறைசாற்ற, கண் கலங்கினாள்.
கணவனின் உயர்ந்த குணம் மனதை நிறைத்தாலும், தங்கையின் துரோகம் கோடாரியாய் அவளது இதயத்தை குத்தி கிழிக்க தொடங்கின.
கணவன் மனைவிக்குள் எத்துணை பிரச்சனைகள் வந்தாலும், பிரிவைப் பற்றி இருவருமே சிந்தித்ததில்லை..
வெளி மனிதர்களுக்கு அவர்கள் இருவரும் அடிக்கடி முட்டிக் கொள்வது தான் தெரியும் ... ஆனால் அவர்களுக்கிடையே ஆன பாசப்பிணைப்பை அவர்கள் இருவர் மட்டுமே அறிவர் ...
சத்யனின் ஆகச்சிறந்த முழு காதலுக்கு அவள் மட்டுமே ஏகபோக மகாராணி என மனமார அறிவாள் ....
அதேபோல் அவன் எவ்வளவு கோபப்பட்டாலும், அவளோடு பேசாமல் ஒரு பொழுதை கூட முழுதாக அவனால் கழிக்க முடியாது என்பதையும் அறிவாள்...
கோபம் வந்தால் மட்டும் சூழ்நிலையைப் பற்றி சற்றும் யோசிக்காமல், வார்த்தையை விட்டு விடுவான் , அடிக்கக் கூட கை ஓங்கி விடுவான்... அதுதான் அவனிடத்தில் இருக்கும் பெருங்குறை ... மற்றபடி கணவனாக அவளுக்கு எந்த குறையும் வைத்ததில்லை ....
இப்படி அவனை பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் பல சந்தர்ப்பங்களில் தங்கையின் தூண்டுதலான பேச்சுக்கு பலியாகி இருக்கிறாள் ...
"என் ஃப்ரெண்ட் தீபாவோட அக்கா வீட்டுக்காரு ரொம்ப பொறுமையா பேசுவாரு தெரியுமா .... ஏன் எதிர் வீட்டு அங்கிள் கூட ரொம்ப சாந்தமான டைப் தான் ... ஆனா உன் வீட்டுக்காரருக்கு தான் முனுக்குன்னா கோவம் வந்துடுது .... கொஞ்சம் கூட பொறுமையே இல்லாம, சூழ்நிலையும் பார்க்காம உன்னை எடுத்து எறிஞ்சு பேசிடறாரு .... எப்படித்தான் அவர போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டயோ..."
இம்மாதிரி பல சந்தர்ப்பங்களில் பலமுறை ப்ரீத்தி ஏதாவது ஒரு காரணத்தை இட்டுக்கட்டி கூறி சத்யனை வேண்டுமென்றே அவளிடம் மட்டம் தட்டுவாள் ...
அதனுடைய எதிரொலி அன்றைய இரவு , படுக்கை அறையில் பிரபாவிடமிருந்து புகைச்சலாக வெளிப்படும் .
"ஏண்டி, சிங்கப்பூர்ல கூட இவ்ளோ சண்டை வந்ததில்ல.. இந்தியா வந்தா மட்டும் உனக்கும் எனக்கும் அதிகமா சண்டை வருதே ஏன் ..." என வாய்விட்டே அவள் கணவன் கூறவும் கேட்டிருக்கிறாள் ....
அப்போது அதைப் பேச்சை திசை திருப்பும் செயலாக எண்ணி மனதில் ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டாள்...
சூழ்ந்திருந்த புகைப்படலம் விலகியது போல் இப்போதல்லவா அனைத்தும் புரிய வருகிறது ....
தன்னைவிட எவ்வளவு சிறிய பெண்ணிடம் தோற்றுப் போய் இருக்கிறோம்....
நாட்டையே ஆண்ட பெருந்தலைவர்களே, உடன் இருந்தவர்கள் செய்த துரோகத்தால் விழும் பொழுது, நானெல்லாம் எம்மாத்திரம் ....
எத்துணை சுலபமாக தங்கை என்ற தாடகையின் தந்திரப் பேச்சில் மயங்கி இருந்திருக்கிறேன் ... என்று எண்ணி எண்ணி வருத்த முற்றவள், தன் கணவன் கூறியது போல், ஒழுக்கம், அன்பு ,நேர்த்தி, நேர்மை நிறைந்த தன் புகுந்த வீட்டிற்கு, தன் தங்கை எக்காலத்திலும் தேவை இல்லை என்ற தீர்க்கமான முடிவோடு வீடு வந்து சேர்ந்தாள்.
அழகான காட்டன் சுடிதாரில் துள்ளி குதித்து ஓடி வந்த ப்ரீத்தி,
"வாக்கா.... உனக்கு தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ...உன் ரெண்டு பசங்களும் வீட்டை உண்டு இல்லன்னு பண்ணிட்டாங்க ..."
வந்தவளிடம் குற்றப் பத்திரிக்கை வாசித்து முடித்தவளின் விழிகள் பட்டாம்பூச்சியாய் பறந்து பறந்து சத்யனை தேடிக்கொண்டே
"ஆமா, அத்தான் எங்க ...." என முடித்தாள் ஏமாற்றத்தோடு .
அவள் பார்வை மற்றும் செய்கையை
முதன் முறையாய் சந்தேகக் கண் கொண்டு அணு அணுவாக ஆராய்ந்து ஆய்வு கட்டுரை எழுதி முடித்த மூத்தவள்,
"அப்புறம் வருவாரு..." அவள் முகம் பாராமல் பதிலளித்துவிட்டு, விறு விறுவென வீட்டிற்குள் நுழைந்தாள் .
அவளது வருகையின் அரவம் கேட்டு, மெதுவாக தன் அறையில் இருந்து வெளிப்பட்ட அவளது தாய்,
"உன் கொழுந்தன் கல்யாண விஷயம் என்னம்மா ஆச்சு... உன் மாமியார் ஏதாச்சும் சொன்னாங்களா ..."
என கேட்க, அவளைப் பின் தொடர்ந்து வந்திருந்த பிரீத்தியும்
அந்தக் கேள்விக்கான பதிலை அறியும் நோக்கில் பிரபாவின் முகத்தையே பார்க்க,
"அத பத்தி அப்புறம் சொல்றேன்ம்மா ... ரொம்ப தலை வலிக்குது .... மஞ்சு (சமையல்காரம்மா) இன்னும் வரலையா ..."
"அவ தம்பிக்கு ஏதோ ஆக்சிடென்டாம் ... ரெண்டு நாள் லீவு வேணும்னு இப்பதான் போன் பண்ணி சொன்னா ... எனக்கும் தலை வலிக்குது ம்மா... கொஞ்சம் காபி போட்டு தர்றியா...."
"அக்கா, எனக்கும் ஒரு ஸ்ட்ராங்க காபி ..." என்றவளின் குரலை காதில் வாங்காதது போல் அடுக்களைக்குச் சென்ற பிரபா அடுத்த பத்து நிமிடத்தில் அருமையான காபி ஆவி பறக்க, இரு குவளையில் எடுத்து வந்து ஒன்றை தாயிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை தான் பருக ஆரம்பித்தாள்.
"அக்கா, எனக்கு...." என்றாள் தங்கை இருந்த இடத்திலிருந்து அசையாமல் கைபேசியிலிருந்து கண்களை வெளியே எடுத்து பிரபாவின் மீது பதித்து.
"உனக்கு வேணும்னா நீ தான் போட்டு சாப்பிடணும் .... இவ்ளோ நேரம் வீட்டுல தானே இருந்த , காபி போட்டு அம்மாவுக்கும் கொடுத்துட்டு நீயும் குடிச்சிருக்கலாம்ல..”
என்ற தமக்கையின் புது மாதிரியான கேள்வியில், துணுக்குற்றவள், அவள் வீடு திரும்பியதிலிருந்து அவளிடம் தென்பட்ட வித்தியாசங்களை, அசை போட்டுப் பார்த்தபடி கூர்ந்து நோட்டமிட தொடங்கினாள்.
அப்போது வீடு திரும்பிய அவளது தந்தை,
"எப்ப பிரபா வந்த .... கார் ரெடி ஆயிடுச்சினு மெக்கானிக் ஷாப்ல இருந்து போன் வந்துச்சு... போய் எடுத்துக்கிட்டு வந்தேன் .... உன் கொழுந்தன் கல்யாண விஷயம் என்ன ஆச்சு ..."
வழக்கம் போல் படபடவென கேள்விகளை அடக்கியபடி
அவள் எதிரில் இருந்த சோபாவில் அவர் அமர,
"ஒரு நிமிஷம்ப்பா... உனக்கு காபி போட்டு வச்சிருக்கேன் எடுத்துட்டு வரேன் ...." என பிரபா அவசரமாக மொழிந்து விட்டு, அடுக்களைக்குச் செல்ல, தமக்கையின் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றத்தை கண்டு ஒரு கணம் உறைந்தே போனாள் ப்ரீத்தி.
ஆவி பறக்கும் காபி குவளையை தந்தையின் கையில் திணித்துவிட்டு
"நான் வந்து ஒரு கால் மணி நேரம் ஆகுதுப்பா ... " என்றவள் கீழ்க்கண்களால் ப்ரீத்தியை நோட்டமிட்டுக்கொண்டே,
"அந்த மதுர பொண்ணை பாண்டியனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு .... பாண்டியனுக்கு மட்டும் இல்ல, அத்தை ,மாமா, எங்க வீட்டுக்காரர்னு எல்லாருக்கும் அந்த பெண்ணோட குடும்பத்தை ரொம்ப பிடிச்சிருக்கு.... சும்மா சொல்ல கூடாது .... அந்த பொண்ணும் பார்க்க அவ்ளோ அழகா இருக்கு.... சுண்டி விட வேணாம் தொட்டாலே செவந்திடும் அப்படி ஒரு கலரு.... மாஸ்டர்ஸ் படிச்சி இருக்குது ... ஆஸ்திரேலியால ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்துச்சாம்... இப்ப இந்தியா வந்திருக்கு ..."
என தெரிந்த அந்த ஒரே ஒரு தகவலை வைத்துக் கொண்டு, புகைப்படத்தில் கூட பார்க்காத அந்தப் பெண்ணை பற்றி வகைத்தொகை இல்லாமல் தங்கையை வெறுப்பேற்றுவதற்காகவே அளந்து விட்டாள் பிரபா.
பிரபாவின் தாய் தந்தைக்கு, தங்கள் மகள் ப்ரீத்தியை பாண்டியனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இதயத்தின் ஓரத்தில் இருந்தாலும், நிதர்சனத்திற்கு ஒத்து வராது என்பதை உணர்ந்து
ஒதுங்கி கொண்டனர்.
அதற்கு மிக முக்கிய காரணம், ப்ரீத்தியின் பொறுப்பற்ற பொறுமை இல்லாத குணம் .... ஊதாரித்தனம் ஆகியவற்றோடு ஏற்கனவே தன் மூத்த மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் ஓரிரு சந்தர்ப்பங்களில் பிரச்சனைகள் வந்து போய்க் கொண்டிருக்கும் நிலையில் , இளையவளை அதே வீட்டில் மணம் முடித்துக் கொடுத்தால், அவளால் நிச்சயம் மூத்தவளின் வாழ்வில் புயல் அடிக்க வாய்ப்பு உள்ளது என்ற காரணத்திற்காகவே அந்த எண்ணத்தை கைவிட்டனர் எனலாம்.
"அப்ப கூடிய சீக்கிரமே பாண்டியனுக்கு கல்யாணம்னு சொல்லு ..."
"ஆமாம்ப்பா... பொண்ணு வீட்ல , பொண்ணோட பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லன்னு சீக்கிரம் கல்யாணம் வச்சுக்கணும்னு சொல்லி இருக்காங்களாம்.... அதனால அடுத்த மாசமே கல்யாணம் ..."
கேட்டுக் கொண்டிருந்த ப்ரீத்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அதனை கீழ் கண்களால் உள்வாங்கிக் கொண்டிருந்த
பிரபாவுக்கு எரிமலை குழம்பாய் கோபம் உள்ளுக்குள் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
அப்போது அவளது தாய் வெகு இயல்பாக,
"சமையக்காரம்மா வரல ...... ராத்திரி எல்லாருக்கும் இட்லி ஊத்திடறயாம்மா ..." எனக் கேட்டது தான் தாமதம், தங்கையின் மீது இருக்கும் கோபம் தலைக்கால் புரியாமல் தறி கெட்டு ஓட,
"உங்க எல்லாருக்கும் ஒன்னு ஞாபகப்படுத்தறேன் ..... எனக்கும் புருஷன், புள்ளைங்க ,அத்தை, மாமா கொழுந்தனு ஒரு பெரிய குடும்பமே இருக்கு .... நான் இந்தியா வந்தாலே 90% நம்ம வீட்டுக்கு தான் உழைச்சு கொட்றேன்... என் புருஷனும், என் புகுந்த வீட்டு ஆளுங்களும் ரொம்ப பொறுமையா விட்டுக் கொடுத்து போறதால தான், நான் இந்த வீடே கதியா இருந்து உங்க எல்லாருக்கும் சேவை செஞ்சுகிட்டு இருக்க முடியுது ... இனிமே அவங்களோட நல்ல குணத்தை எனக்கு சாதகமா பயன்படுத்திக்க நான் தயாரா இல்லை ... நாளைக்கு காலைல புள்ளைங்கள கூட்டிக்கிட்டு, என் வீட்டுக்கு போறேன் ... உங்க ரெண்டு பேருக்கும் ஏதாச்சும் வேணும்னா (தாய் தந்தையை பார்த்து) இதோ இருக்காளே, இவளைக் கேளுங்க ... இவ உங்களுக்கு எல்லாம் செய்வா..."
" என் வீடு , என் புருஷன் " போன்ற வார்த்தைகள் வெகு புதுமையாக மகளின் வாய்மொழியில்
ஏக போகமாக வலம் வருவதை கண்டு பிரபாவின் பெற்றவர்கள் லேசாக உறைந்து நிற்க,
"ப்ரீத்திக்கு கல்யாணம் பண்ற வயசு ஆச்சு .... இன்னமும் காபி கூட போடத் தெரியாம இருக்கா... இனிமே சமையல்காரம்மா வரலன்னா அவ தான் சமைக்கணும் .. அதே மாறி ஹாஸ்பிடலுக்கு போகணும்னா அவளையே கூட்டிகிட்டு போங்க ... எல்லாத்துக்கும் என்னைய எதிர்பார்க்காதீங்க.... நான் ஒன்னும் கூப்பிடுற தூரத்துல இல்ல ... உங்க மாப்பிள்ளை நல்லவரா இருக்க போய் தான், ஒவ்வொரு முறையும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போனா காசு பணத்தை பாக்காம சிங்கப்பூரிலிருந்து
அழைச்சுகிட்டு வராரு .... இனிமே அப்படி எல்லாம் அடிக்கடி வர முடியாது ... பசங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல் இருக்கு ... உங்க வாழ்க்கையை நீங்க தான் பாத்து ஆகணும் ..."
என பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது , பக்கத்து வீட்டு சிறார்களோடு விளையாடி முடித்துவிட்டு வீடு திரும்பினர்
அவள் பெற்ற புத்திர சிகாமணிகள் ... ஸ்ரீநாத், சாய்நாத் ...
மூத்தவன் ஸ்ரீநாத்திற்கு எட்டு வயது .. இளையவன் சாய்நாத்திற்கு ஆறு வயது ...
பெரியவன் சத்யனின் மறு அவதாரம் ... இளையவன் மாமியார் அகல்யாவின் மறு உருவம் ....
"ப்ரீத்தி, குழந்தைங்க ரெண்டு பேரும் விளையாண்டுட்டு அழுக்கா வந்து இருக்காங்க .... நான் அவங்கள குளிச்சிவிட்டு டிரஸ் மாத்தணும்... நீ இட்லி போட்டு சட்னி அரைச்சிடு ..."
அவ்வளவு நேரமாக மறைமுகத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தவள், நேரடி தாக்குல் நடத்திவிட்டு மைந்தர்களை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் செல்ல, தமக்கையுடன் புதிதாய் ஜெனித்திருக்கும் அதிரடி மாற்றத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்த கோபத்தை அடக்க முயன்று சிலையானாள் ப்ரீத்தி.
பிரபா பிள்ளைகளுக்கு முகம் கழுவி புது உடுப்பு மாற்றி அழைத்து வரும் போது வழக்கம் போல் அவளது தந்தை ப்ரீத்திக்கு பதிலாக களத்தில் இறங்கி இரவு உணவை தயார் செய்து முடித்திருந்தார்.
அதனைப் பார்க்க பார்க்க, பிரபாவுக்கு பற்றி கொண்டு வர, வேறு வழி இல்லாமல் அமைதியாக
அனைவருடனும் அமர்ந்து இரவு உணவை உண்டு முடித்தாள்.
ப்ரீத்தியும் தன் குயுக்தி புத்தியை பயன்படுத்தி, தன் அக்காளின் முகமாற்றத்திற்கான காரணத்தை ஓரளவிற்கு அனுமானித்து விட்டாள்.
தமக்கையிடம் தனியாக பேசி மயக்கி மீண்டும் அவளை தன் பக்கம் இழுக்கும் முனைப்போடு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தவளுக்கு, பிரபாவின் மீது பெரிதாக பற்றுதல் பாசம் எல்லாம் கிடையாது ...
தமக்கையின் ஆதரவு இருந்தால் தான் வழக்கம் போல் நவீன ஆடைகள், அணிமணிகள் , கை செலவிற்கு பணம் ஆகியவற்றை பெற்று இன்புறலாம் என்ற ஒரே காரணத்திற்காக , சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
உண்டு முடித்த குழந்தைகளை தன் அறையில் உறங்க வைத்துவிட்டு, சத்யனை எதிர்பார்த்தபடி பிரபா பால்கனியில் நடைபயன்று கொண்டிருக்கும் போது ஒருக்களித்திருந்த அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ப்ரீத்தி.
அரவம் கேட்டு பிரபா திரும்பிப் பார்க்க,
"அக்கா உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ..." என்றாள் தயக்கத்தோடு .
அவள் முகத்தைப் பார்க்காமல்
"சொல்லு ..." என்றாள் பிரபா நடைபயின்றுக்கொண்டே.
"அக்கா, உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல ... ஆனா சொல்லாம இருக்கவும் முடியல ... இனிமே சொல்லாம இருந்தா, அது நான் உனக்கு பண்ற துரோகம் ஆயிடும் ... அதான் வேற வழி இல்லாம இவ்ளோ நாளா என் மனசை அழுத்திக்கிட்டு இருந்த விஷயத்தை சொல்லலாம்னு இருக்கேன் ..." என்ற பீடிக்கையோடு இளையவள் தொடங்க, அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கியபடி
"என்ன சொல்லணும்.. சொல்லு ..." என்றாள் பிரபா அசுவாரஸ்யமாக .
"அது வந்து ... பாண்டியன் அத்தானுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் .... எனக்கு அவரை கல்யாணம் கட்டிக்க ஆசை இருந்தாலும் , வயசு வித்தியாசம் அதிகமா இருக்கிறதால கல்யாணத்துக்கு அப்புறம் நீ சொன்ன மாறி ஜெனரேஷன் கேப்பால பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்குன்னு புரிஞ்சிகிட்டேன் ...."
சீச்சி இந்த பழம் புளிக்கும் ... என்பது போன்று அவளது பேச்சு இருக்க,
"சரி, இப்ப என்னதான் சொல்ல வர... அதை சொல்லு ..." என பிரபா வேண்டா வெறுப்பாக அவளை ஊக்க, இம்முறை வெகுவாக வியர்வை முத்துக்கள் பொங்கிய நிலையில்
"உன் வீட்டுக்காரர் ஏதாவது சொன்னாரா ...."
ஆசை வெட்கம் அறியாது என்பதற்கு ஏற்ப, தான் சத்யனிடத்தில் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதை , அவன் மூலமாக அறிந்து கொண்டதால் தான் தன் தமக்கை பேயாட்டம் ஆடுகிறாள் என்பதை சரியாக அனுமானித்து
இளையவள் கேட்க
"ஏதாவதுன்னா....????" பெரியவள் கொக்கி போட்டு கேட்க,
"என்னைப் பத்தி ஏதாவது சொன்னாரா ..."
"ஆமா சொன்னாரு ..." என்று பிரபா முடித்தது தான் தாமதம் ,
" அக்கா, அவர் சொல்றதெல்லாம் பொய்... நம்பாதே .... கொஞ்ச நாளா அவர் பார்வை, நடவடிக்கை எதுவுமே சரி இல்ல.... போன வாரம் நம்ம வீட்ல யாருமே இல்லாதப்ப, என்னை பின்பக்கமா கட்டிப்புடிச்சு, கம் லெட்ஸ் கோ ஃபார் எ லாங் டிரைவ்னு... என்னை கூப்ட்டாருக்கா... எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு வேற வழி இல்லாம, ஷாப்பிங் போயிருக்கிற அக்கா வந்ததும், ஒன்னாவே போலாம்னு சொல்லிட்டு, வீட்ல இருக்க பிடிக்காம வெளிய கிளம்பி போயிட்டேங்கா ...."
அவள் சொல்ல சொல்ல, அந்த நிகழ்வை மனதில் ஒட்டிப் பார்த்தவளுக்கு, ப்ரீத்தி பேசிய வசனங்களில் அவள் சத்யனும், சத்யனின் மொழிந்த வார்த்தைகளில் ப்ரீத்தியும் தெரிய, கற்பனையே ஆனாலும் அந்த நிகழ்வு, அவள் கழுத்தை ரம்பம் கொண்டு அறுப்பது போல் இருக்க,
மேற்கொண்டு யோசிக்க மனம் இல்லாமல் உயிர் துடித்தவள் ,
தங்கை நடந்ததை தலைகீழாக கூறுகிறாள் என புரிந்து கொண்ட மாத்திரத்தில், அவள் சட்டையை கொத்தாக பற்றி கன்னங்களில் மாறி மாறி இடிப்போல் தாக்கினாள்.
எதிர்பாராத அந்த தாக்குதலில்
நிலைகுலைந்து போன ப்ரீத்தி தரையில் அப்படியே சரிய,
"யாரைப் பத்தி யாரு கிட்ட பேசற .... கொன்னு பொதச்சிடுவேன் ஜாக்கிரதை .... எங்களுக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகப் போகுது ... எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே மூணு வருஷம் நாங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா லவ் பண்ணோம்... இப்பவும் அதைவிட அதிகமா லவ் பண்றோம்... அடிக்கடி சின்ன சின்ன சண்டை வர்றதால என் புருஷனுக்கு என் மேல அன்பு இல்லனும் எனக்கு அவர் மேல பாசம் இல்லனும் தப்பு கணக்கு போட்டுட்டயா ....
இப்ப சொல்றேன் கேட்டுக்க... என் புருஷன் நீ சொன்ன விஷயத்தை சொல்லவே இல்ல ... நீயா தான் வான்டடா வந்து வாக்குமூலம் கொடுத்திருக்க ..."
ப்ரீத்தியின் விழிகள் மிகுந்த அதிர்ச்சியுடன் விரிந்ததோடு அதில் மெல்லிய ஆச்சரியமும் இழையோடியது .
"நீ என் புருஷன பத்தி எதை சொன்னாலும் நம்பிடுவேன்னு நினைச்சியா .... எனக்கு எந்த காலத்துலயும் அவர் மேல சந்தேகமே வராது ...
அதனாலதான் நீ அவரோடு ஒட்டி உரசி பேசும் போது கூட எனக்கு சந்தேகமே வந்ததில்ல.. அது உன் மேல இருக்கிற பாசம் இல்ல அவர் மேல நான் வச்சிருக்க நம்பிக்கை ...
இதுவரைக்கும் எங்க ரெண்டு பேருக்குள்ள எத்தனையோ சண்டைகள் வந்து இருக்கு ஆனா சந்தேகம் மட்டும் வந்ததில்ல... அதுதான் நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க காதலுக்கான அடையாளம் ....
கண்டவனோடெல்லாம் பேசி பழகி ஊரை சுத்திட்டு பிரேக் அப்னு சொல்லிட்டு திரியற உன்னை மாறியான கழிசாடைக்கெல்லாம் அது எப்படி புரியும் ......"
"பழைய விஷயத்தை பத்தி பேசாத அக்கா ... எனக்கு கெட்ட கோவம் வரும் ..."
"எப்படி பேசாம இருக்க முடியும் .... உனக்கு அந்த பையனோட பிரேக் அப் ஆனது சாதாரண விஷயம் ...
ஆனா அதுக்கு உனக்கு நல்லது சொன்ன டீச்சர போட்டு கொடுத்த பாத்தியா... அப்பவே உன்னை சரியா புரிஞ்சுகிட்டு வெக்கற இடத்துல வச்சிருந்தேன்னா இன்னைக்கு என் புருஷன் விஷயத்துல நீ இப்படி யோசிச்சு இருக்கவே மாட்டயே....
பாண்டியனை பத்தி நீ பேசும் போது கூட, பாண்டியனை நீ கல்யாணம் கட்டிக்கிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.. கூடவே உன்னை நல்லபடியா பாத்துக்கலாம்னு குழந்தையா நினைச்சு தான் சம்மதிச்சேன்...
இப்ப இல்ல தெரியுது பச்ச புள்ள நினைச்சுனு ஒரு பூ நாகத்தை இல்ல என் புகுந்த வீட்டுக்குள்ள விட பார்த்திருக்கேன்னு ...
அது எப்படி ....
ஆசைக்கு என் புருஷன் ... ஆஸ்திக்கு என் கொழுந்தன் வேணுமோ உனக்கு...
அடி செருப்பால... "
என கோபம் மீண்டும் கொதிநிலையாய் உயர்ந்து ப்ரீத்தியை அவள் மீண்டும் மீண்டும் தாக்க, வழக்கமான தினம் என்றால் ப்ரீத்தி கோபத்தில் எதிர்த்துப் பேசி இருப்பாள் .. தாம் தூம் என்று அரற்றி கூட இருப்பாள் ... ஆனால் தமக்கையின் அதிரடியான இந்த புதிய அவதாரம் அவளை முற்றிலுமாக நிலை குலைய செய்திருக்க, திக்கு முக்காடிப் போய் செய்வதறியாது சரமாரியாக அடிகளை வாங்கியபடி உறைந்து போனாள் .
"என்னைப் பொறுத்த வரைக்கும் நீ செத்துட்ட ... வழக்கம் போல கை அறுத்துகிறதா இருந்தா போய் அறுத்துக்க , தொங்கணும்னு ஆசைப்பட்டா தூக்கு போட்டு தொங்கிடு .... இப்படிப்பட்ட துர்குணம் புடிச்சவ இனிமே இந்த வீட்டுக்கு வேணாம் ....
நீ எல்லாம் உயிரோட இருந்தா பூமிக்கு பாரம் சோத்துக்கு நஷ்டம் ... இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத ... கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட் ..." என ஆவேசமாக கத்திவிட்டு தலையை திருப்பிக் கொண்டாள் பிரபா.
கண்களில் கண்ணீர் வழிய, மனம் முழுவதும் கோபமும் வன்மமும்
கூடி கொந்தளிக்க, வழிந்த நீரை துடைத்தபடி தளர் நடையில் மேல் தளத்தில் இருந்து கூடத்தை நோக்கி ப்ரீத்தி இறங்கி வரவும், தன்னிடமிருந்த சாவியின் மூலம் வீட்டு வாயிற் கதவை திறந்து கொண்டு சத்யன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
கன்னங்கள் இரண்டும் ரத்த நிறத்தில் சிவந்து கண்ணீரும் கம்பலையுமாய் காட்சியளித்தவளைக் கண்டு சத்யன் தடுமாறி நிற்க , நீர் திரையிட்ட பார்வையால் அவனை நேருக்கு நேர் ஒரு கணம் பார்த்தவள் பிறகு பொங்கி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் அறைநோக்கி ஓடினாள்.
" ஓ காட் ..." என நடந்ததை ஊகித்தவன் , ஒருவித பரபரப்போடு தன் அறைக்குள் விறு விறுவென்று நுழைந்து பிரபாவை நெருங்கி ,
"என்ன டி பண்ணி வச்சிருக்க ...
உன் தங்கச்சியை அடிச்சியா ..."
"ஆமா, அடியோடு நிறுத்திக்கிட்டேன்னு சந்தோஷப்படுங்க .... அவளைக் கொன்னு புதைக்கிற அளவுக்கு கோவம் கோவமா வருது ..." என்றவள் முடிப்பதற்கு முன்பே, சத்யனின் கரம் பிரபாவின் கன்னத்தை ஆழ்ந்து பதம் பார்க்க, துடித்து விட்டாள் பாவை .
"நீ கேட்க மாட்டேன்னு நினைச்சு தான டி எல்லாத்தையும் சொல்லி அனுப்பினேன் ... இப்படி எல்லாத்தையும் கேட்டதோட அவளை அடிச்சியும் அனுப்பி இருக்கியே... உன்னை என்ன பண்ணா தகும் ..."
"நீங்க சொன்ன எதையுமே நான் அவகிட்ட கேட்கல .... அவளா தான் வந்து உங்கள பத்தி தப்பா சொன்னா ..."
என்றவள் லேசான கண்ணீரோடு நடந்ததை நடந்த மேனியாக கூறி முடிக்க,
"உனக்கு என் மேல மலை அளவுக்கு நம்பிக்கை இருக்குனு போது எதுக்காக நீ அவளை அடிக்கணும் ... ரொம்ப சின்ன பொண்ணு டி ... ஏற்கனவே ஒருமுறை கையை அறுத்துக்கிட்டவ... இப்ப ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணிக்கிட்டா குடும்ப மானமே போயிடும்... நான் இவ்ளோ நாளா பொறுத்து போனதுக்கும் அர்த்தம் இல்லாம போயிடும் ..."
" செத்து தொலையட்டும்....அந்த சனியன் ..."
"பிரபா ..... பைத்தியம் மாதிரி உளறாத .... சாவறதுகா உங்க அப்பா அம்மா இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தாங்க ... அவ ஏதாச்சும் பண்ணிகிட்டா உங்க அம்மா அப்பாவோட உயிர் தானாவே போய்டும் டி... போய் அவளை சமாதானப்படுத்து ..."
"அவளும் அதை தான் எதிர்பார்க்கிறா... இப்ப நான் அவ பின்னாடி வால் புடிச்சுகிட்டு போனேன்னா, இவ்ளோ நேரம் நான் போட்ட சண்டைக்கு மரியாதை இல்லாம போயிடும் .... நான் போ மாட்டேன் ..."
"ப்ளீஸ் பிரபா ... இப்ப நான் போய் அவ கிட்ட பேச முடியாது ... நீ பேசினா தான் சரி வரும் ... " என்றவன் உடனே
"ஒன்னு பண்ணலாம் ... வா நாம ரெண்டு பேரும் போய் அவ கிட்ட பேசலாம் ..." எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, அவள் தந்தை பலத்த குரலில் வெகு பதற்றத்தோடு கூடத்திலிருந்து அவளை அழைப்பது கேட்க, அவசர அவசரமாக இருவரும் அறையை விட்டு வெளியேறினார்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....
Wow superb akka very nice moving 👌👌👌
ReplyDeletethanks ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
DeleteInteresting sis... Prabha ipo than nalla decision eduthu iruka.. but we are waiting for Lakshmi ud
ReplyDeletethanks dr.... koodiya seekiram varum
DeleteR u okay sis?? Any health issues?? Take care of your health
Deleteagain joint pain started ma.... so feeling very weak dr
DeletePls take care of yourself sis.. Don't strain too much. Ur health is important, start physio exercises again.
DeleteSuper 👍👍🥳🥳🥳🎆💗😙😙💗😙😙💗👍👍👍👍💐💐💐💐🌹🌹🌹🌹🌟🌟🌟🌟
ReplyDeletethanks ma
Deletethanks ma
ReplyDeleteMa'am, episode please??
ReplyDeletetomorrow epi upload panniduven da
DeleteOkay.. take care of your health
Deletethanks kanna... epi will be uploaded tonite
DeleteNice
ReplyDeletethanks ma
Delete