ஸ்ரீ-ராமம்-44

அத்தியாயம் 44

 

"உங்க மனசுல அப்படி என்ன தான் இருக்கு வெளிப்படையா பேசி தொலைங்க ... இன்னைக்கே இப்பவே இந்த பிரச்சனையை பேசி முடிச்சிடலாம்..." 

என்றவளை கண்களில் கணகணவென்று செந்தணல் தகிக்க பார்த்தவன், குரலை செருமிக் கொண்டு, 

 

"பாண்டியனுக்கும் உன் தங்கச்சிக்கும் கிட்டத்தட்ட பத்து வயசுக்கு மேல வயசு வித்தியாசம் டி ... 

எவ்ளோ பெரிய ஜெனரேஷன் கேப் ... சரி அத விடு ..

இன்னும் ஒரு டிகிரியை  கூட அவ ஒழுக்கமா முடிக்கல ... அதுலயே ஏகப்பட்ட அரியர்ஸ் வேற ...

அதையெல்லாம் கிளியர் பண்ணனுங்கிற பொறுப்பு கொஞ்சம் கூட இல்லாம  இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் போடறேன், பேஸ்புக்ல கருத்து சொல்றேன்னு 24 மணி நேரமும் ஃபோனும் கையுமா சுத்திக்கிட்டு இருக்கா ..  உங்க வீட்ல அவ கடை குட்டி, ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்தாங்கிற ஒரே காரணத்துக்காக  அவளை  லிட்டில் பிரின்சஸ்னு  தலையில தூக்கி வச்சு கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க அதனால தான் அவ உன்னைஉங்க அப்பா அம்மானு யாரையுமே  மதிக்கிறது இல்லை ...

 

எப்பவாச்சும்  சமையல் செஞ்சு இருக்காளா ... குறைஞ்சபட்சம் காய்கறியாச்சும் நறுக்கி கொடுத்திருக்காளா ....  சாதாரண வீட்டு வேலை ஏதாச்சும் அவ செஞ்சு பாத்திருக்கியா ...  என்னைக்காச்சும் நம்ம குழந்தைகளோட கொஞ்சி விளையாண்டு இருக்காளா..."

 

அவனது தொடர் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல்அவள் அமைதியாக தலை குனிந்து கொள்ள

 

"உன்னால பதில் சொல்ல முடியாது ...  ஏன்னா  உன் தங்கச்சி     படு சோம்பேறிசுயநலவாதி... உங்க அம்மா உடம்புக்கு முடியாதவங்க , உங்க அப்பா வயசானவரு....

 

அன்னைக்கு உங்க அப்பா சமையல் செஞ்சிக்கிட்டு இருக்காரு உங்க அம்மா காய் நறுக்கி கொடுத்துக்கிட்டு இருக்காங்க ... உன் தங்கச்சி தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரிஞ்சுக்காம  பேஸ்புக்லயும் இன்ஸ்டாகிராம்லயும் பதிவு போட்டுக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கா...

திருவிழா முடிஞ்சதும் கழட்டிவிடற சீசனல் கோச் கம்பார்ட்மென்ட்  மாதிரி தான் அவ உங்க எல்லாரையும் நினைச்சுகிட்டு இருக்கா...

 

அவளுக்கு ஏதாச்சும் தேவைன்னா மட்டும் தான், உங்க வீட்டு ஆளுங்களோடவே பேசறா .... மத்தபடி 24 மணி நேரமும் போன்லயும்ஊர் சுத்துறதுலயுமே பிசியா இருக்கா ...

 

இந்த லட்சணத்துல பெண்ணியம், ஆண் ஆதிக்கம்னு பக்கம் பக்கமா பேஸ்புக்ல  கருத்து குப்ப வேற... அவளோட அந்தக் கோட்டித்தனமான பதிவுக்கு, 200 300 லைக்ஸ், கமெண்ட்ஸ் வேற  ...  ஒருவேளை  சாப்பாடு கூட சமைக்க சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு இந்தப் புண்ணாக்கு  Zomato ஆர்டர் பண்ணி சாப்பிடறதும், சாப்பிட்டு  மிச்சம் மீதி  இருக்குற எச்சில் பார்சல தூக்கி போட கூட ஆளத் தேடற உதவாக்கரைனும் பாவம் இவள ஃபாலோ பண்றவங்களுக்கு  தெரியாதே  ..

 

அதோட இன்ஃப்ளூயன்சர்னு  பேர் வச்சுக்கிட்டுதெருத்தெருவா ஹோட்டல்ல போய் தின்னுட்டு செம்ம்ம்ம்மையா இருக்குனு  ரீல்ஸ் போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கா  ....

 

கூடவே அரைகுறை டிரஸ்ல  டான்ஸ் பாட்டு வேற ...

இதையெல்லாம் செய்யாதன்னு அட்வைஸ் பண்ணா உடனே அவ  கையறுத்துக்குவானு நீங்க எல்லாரும் பயப்படறீங்க ...

 

பன்னிரண்டாம் கிளாஸ் படிக்கும் போது ஒரு பையனோட பிரேக்கப் ....  படிப்பு தான் முக்கியம் இதெல்லாம் முக்கியமில்லனு அட்வைஸ் பண்ணின  டீச்சர் பேரை எழுதி வச்சுட்டு கையறுத்துக்கிட்டா ...

கடைசியில போலீஸ் கேஸ் ஆகி இவளுக்கு நல்லது சொன்ன  ஒரே காரணத்துக்காக அந்த டீச்சரோட வேலையே போச்சு ....

 

 

போன வருஷம் தைப்பூசத்துக்கு அவ இங்க வந்திருந்தப்ப  என் அம்மா கேட்டாங்க .... ஏம்மா இன்னைக்கு தைப்பூசம் ஆச்சே விரதம் இல்லாம ஏதோ ஒரு ஹோட்டல்ல  நான்-வெஜ் சாப்டுட்டு அதுக்கு  ரீல்ஸ் போட்டுக்கிட்டு இருக்கியேனு ...

 

 

உடனே உன் தங்கச்சி கூலா எனக்கு சாமி மேல எல்லாம் நம்பிக்கை இல்லைனு சொல்றா ... என் மதம் தான் பெருசுனு பிரச்சாரம் பண்றவனை நம்பிடலாம் ...

ஏன் நான் தான் சாமின்னே சொல்றவன கூட விட்டுடலாம் ... 

ஏன்னா அவங்கள நம்பி ஏத்துக்கிட்ட

கொஞ்சம் மக்களை தான் அவன் ஏமாத்துறான் .....

ஆனா இந்த சாமி இல்ல பூதம் இல்லன்னு சொல்றான் பாரு 

அவன் தான் பெரும்பான்மை மக்களோட நம்பிக்கையை உடைக்கிறான்.... அவன் தான் ஒன்னா நம்பர் அயோக்கியன் ...

 

விரதம், நோன்புஃபாஸ்டிங்னு எந்த மதத்தோட சடங்கா இருந்தாலும் ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்காக தான் நம்ம மூத்தவங்க அதை  கடைப்பிடிக்கிறாங்க ...

 

அந்த நெறிமுறைய நேர்த்தியா  பாலோ பண்ண சோம்பேறித்தன  பட்டுகிட்டு , பெரியவங்க பேச்ச கேக்காம  தறுதலையா தாந்தோணித்தனமா வாழறதுக்கு உன் தங்கச்சி ஈஸியா தேர்ந்தெடுத்த வழி தான் இந்த சாமி இல்ல பூதம் இல்லனு சொல்லிக்கிட்டு திரியற வழி ....

 

பெரிய பகுத்தறிவுவாதினு காட்டிக்க பாக்கறா.... ஆனா உலகத்துல அக்மார்க் பகுத்தறிவுவாதினு யாருமே கிடையாது அதுதான் நிதர்சனம்...

 

அவளுக்கு  நம்ம கலாச்சாரத்து மேலேயும் நம்பிக்கை கிடையாது ஒழுக்கத்து மேலயும் ஈடுபாடு  கிடையாது ...." என்றவனின் பேச்சை இடைவெட்டி 

 

 

"அவ சாமி கும்பிடாம இருக்கிறதும், ரீல்ஸ் போடறதும் தான் உங்களுக்கு பிரச்சனையா....  கல்யாணத்துக்கு அப்புறம் சாமி கும்பிட சொன்னா  கும்பிட போறா  .... " என்ற மனைவியின்  பேச்சில் கடுப்பானவன் 

 

"ஏண்டி நீ லூசா ... நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு சுத்தமா புரியலையா....

 

சாமி கும்பிடறது ஒன்னும் மொகர  கட்டைல போடற மேக்கப் கிடையாது... நினைச்ச மேனிக்கு போட்டு அழிக்க   ....  அது  உணர்வோட சம்பந்தப்பட்ட விஷயம்

 

ரீல்ஸ் போடறது தப்புன்னு சொல்லல ... படிப்பு , வீட்டு வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு பொழுதுபோக்கா அதை செய்யலாம் .... ஆனா உன் தங்கச்சி 24 மணி நேர பொழுதுக்கும் அதத்தான் செய்றா.... அததான் தப்புனு சொல்றேன்.... 

 

சரிஅவ போடற பதிவுக்கும்,  வீட்ல நடந்துகிறதுக்கும் கொஞ்சமாச்சும் சம்பந்தம் இருக்கா...

 

உனக்கு தெரியும் எங்க வீட்ல எல்லாருமே  எல்லா வேலையும் ஷேர் பண்ணிக்கிட்டு செய்வோம்னு... ஆனா இவ மருமகளா வந்தானு வையி... மகாராணி ஒரு வேலையும் செய்யாம கால் மேல கால் போட்டு  உட்கார்ந்துகிட்டு எங்க வீட்டு ஆளுங்கள ஏவி வேலை வாங்கிக்கிட்டு திரிவா...

 

கேள்வி கேட்டா பெண்ணியம் ஆணாதிக்கம்னு கருத்து சொல்லுவா... 

 

இந்த மாறி தேவைக்கு பெண்ணியம் பேசற தற்குறிங்க எல்லாத்தையும் மியூசியம்ல தான் வச்சு பார்க்கணும் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்த முடியாது ....

 

படு சோம்பேறிசுத்தம்னா என்னன்னே தெரியாது,  24 மணி நேரமும் எதையாச்சும் ஆர்டர் பண்ணி  தின்னுகிட்டே இருக்கணும்... தின்னு முடிச்ச எச்சில் பார்சல தூக்கி போட கூட  ஒரு ஆள் வேணும் ... விஷயம் தெரிஞ்ச எவனும் உன் தங்கச்சியை  கல்யாணம் கட்ட மாட்டான் ....

மீறி கட்டினா  செத்தான்...

 

புருஷனோட சேர்ந்திருந்து குப்பை கொட்டினாலே  அவளுக்கு கூட்டு குடும்பம் தான் .... அவயெல்லாம் எங்க புருஷன் வீட்டு ஆளுங்களோட கொண்டு கொடுத்து இருக்க போறா ...

 

இங்க பாரு ... உனக்கு நல்லா தெரியும், எங்க வீட்ல எல்லாரும் சாமி கும்பிடுவாங்கன்னு ... பாண்டியன் அடிக்கடி கோயிலுக்கு போற ஆளு ... அதைவிட அவன்  எல்லாத்துலயும்  டிசிப்ளினை எதிர்பார்ப்பான்...  ஸ்கூல் படிக்கும் போதே ரொம்ப நல்லா படிப்பான் ... ஐஐடில டாப்பர் அவன்  ...

 

உடனே கல்யாணம் பண்ணிக்கணும்னா காலேஜ் டாப்பரா தான் இருக்கணுமானு கேனத்தனமா  கேட்டு வைக்காத.... நான் ஒழுக்கம் உழைப்ப பத்தி சொல்றேன்...

 

நம்ம வீட்ல வேலை செய்யற சுந்தரி அக்காவோட பொண்ணு போன மாசம் முதல் அட்டம்ட்ல CA பாஸ் பண்ணி இருக்கா....

 

அப்பா இல்லாத குடும்பம் ... அந்தப் பொண்ணு துணி தச்சு கொடுத்து சம்பாதிச்சுவீட்டையும் பார்த்துக்கிட்டு படிச்சு முன்னுக்கு வந்திருக்கு ...

 

அந்த அளவுக்கு எல்லாம் உன் தங்கச்சி கஷ்டப்படணும்னு  சொல்லல.... குறைஞ்ச பட்சம் உங்க அம்மா அப்பாவையாவது அவ நல்லபடியா  பாத்துக்கலாம் இல்ல  .... ஒவ்வொரு முறையும் உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாதப்ப நீதானே ஓடி வந்து பாத்துகிற ... அவ எதையும் கண்டுக்காம  ஊர் ஊரா இல்ல  சுத்திக்கிட்டு இருக்கா...

எங்க வீட்ல என் தங்கச்சி அன்பு கடைக்குட்டின்னாலும்எங்க எல்லாருக்கும் அவ மேல தனிப்பட்ட பாசம் இருந்தாலும், இப்படி தற்குறியா நாங்க அவளை வளர்க்கல .... அவளும் வளரல...

 

அதனால உன் தங்கச்சி எங்க குடும்பத்துக்கு வேண்டாம் ...  ஒரு காலத்துல ஆம்பள பசங்க தறுதலையா சுத்தினா  கல்யாணம் பண்ணி வையுங்க திருந்திடுவானு சொல்லுவாங்க ...

 

தறுதலயா சுத்திக்கிட்டு இருக்கிற உன் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிட்டு திருத்தற நிலையில பாண்டியனோ எங்க குடும்பமோ இல்லடி ஆத்தா ... ஆள விடு ... "

 

அவன் படபடவென்று பொரிந்து தள்ள

" நீங்க அவ மேல சொல்ற தப்பு எல்லாம் ரொம்ப சாதாரண விஷயங்க ... அவ சின்ன பொண்ணு .. கொஞ்சம் விளையாட்டுத்தனமா இருக்கா ... போகப்போக எல்லாம் சரியாயிடும் ... சொன்னா கேட்டுக்கிடுவா ... இனிமே இன்ஸ்டாகிராம் facebook பக்கமே அவ வரமாட்டா... சரியா ..."

 

 

"அடியேய் ...உனக்கு இன்னைக்கு என்ன ஆச்சு ... மூளைய மொத்தமா கழட்டி வெச்சிட்டு பேசற .... 

 

பெண்ணியம் ஆணாதிக்கம்னு அவ பதிவு போடறத பத்தி  பிரச்சினையே இல்ல...

 

சுய ஒழுக்கமே இல்லாதவ எல்லாம்

பெண்ணியம் பேசுறது

அவமானம்னு சொல்றேன் ...

 

இவ வீட்ல பண்ற அட்டூழியத்துக்கும்,  எழுதற ஆணாதிக்கத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லனு சொல்றேன் ...

 

இன்னைக்கு ரேஷன் கடை மாதிரி கோர்ட் வாசல்ல கல்யாணம் கட்டி ரெண்டு மாசம் கூட வாழாம டிவோர்ஸ் கேக்குற கூட்டம்  அதிகமா இருக்கிறதுக்கு காரணம் நீ சாதாரண விஷயம்னு சொன்ன விஷயங்கள் தான்  ...

 

 கல்யாணத்துக்கு அப்புறம்  புருஷன் பொண்டாட்டி  விட்டுக் கொடுத்து வாழாமஅடுத்தவங்களை ஏவி வேலை வாங்கிக்கிட்டுதாந்தோணித்தனமா சுத்திக்கிட்டு இருக்குறதால வந்த வினைகள் அது... இப்ப சாதாரணமா தெரியுற பிரச்சனைகள்  எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பூதாகரமா தெரியும் ...

 

இங்க பாரு இது முழுக்க முழுக்க உன் தங்கச்சியை பத்தின என்னோட அபிப்பிராயம் தான்....

 

இப்ப வரைக்கும் அவள பத்தி எங்க வீட்ல நான் யார்கிட்டயும் எதையுமே சொன்னதில்ல...  இவ்ளோ ஏன் உன் கிட்ட கூட பேசினதில்ல ... பாண்டியனுக்கு பிரீத்தியை கட்டி வைக்கணும்னு நீ கேட்டதால தான்  வேற வழியில்லாம இப்ப  அவளை பத்தி சொன்னேன் ....

 

மத்தபடி உன் தங்கச்சி வாழ்க்கையில எந்த வகையிலும் தலையிட நான் விரும்பல .... தலையிட்டு கருத்து சொன்னா அதை மதிச்சு கேட்டுகிற அளவுக்கு அவளுக்கு பொறுமையும் கிடையாது பொறுப்பும் கிடையாதுன்னு எனக்கு நல்லாவே  தெரியும் கூடுதலா என்னை பூமர்னு வேற சொல்லுவா இதெல்லாம் எனக்கு தேவையா ..." என முடித்தான். 

 

அவன் தெளிவாக தன் பக்கத்து கருத்தைக் கூறி முடித்தும்அவள் முகம் தெளிவு பெறாமல் இருக்க,

 

"சத்யா..... என் மேல இருக்குற கோவத்தால தான் என் தங்கச்சியை பாண்டியனுக்கு கட்டி வைக்க புடிக்காம இப்படி ஏதேதோ  காரணம் சொல்றீங்களா ..." என லேசாக விழி கலங்கி கேட்டவளை நெருங்கி , அவள் கண்ணோடு கண்ணோக்கி 

 

 

"உனக்கும் எனக்கும் நடக்கிறது சாதாரண  புருஷன் பொண்டாட்டி சண்டை டி... எப்படி ஜெயிக்கலாம்னு திட்டம் போட்டு ஜெயிக்கிற அளவுக்கு இந்திய சைனா வார் கிடையாது... 

 

சில விஷயங்களை நம்ம கடைசி காலம் வரைக்கும் நீ தெரிஞ்சுக்கவே கூடாதுன்னு நினைச்சு தான், உன் தங்கச்சியோட மேம்போக்கான குணத்த பத்தி மட்டும் பேசினேன் ...

 

எப்ப  உன் தங்கச்சி பத்தின என் அபிப்பிராயத்தை நமக்குள்ள நடக்கிற பிரச்சனையோட  முடிச்சு போட்டயோ இனிமே நீ எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறதுல தப்பே இல்ல ..."  என்றவன் குரலை செருமிக் கொண்டு,

 

"நீ நிறைய தடவை ... நான் என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கோ , ஷாப்பிங்கோ கிளம்பி போனாலே உடனே நீங்க ஏன் கிளம்பி உங்க வீட்டுக்கு போயிடறீங்கனு கேட்டிருக்க.. ஞாபகம் இருக்கா

அதுக்கான பதில் இப்ப சொல்றேன் ...  நீ இல்லாம உன் வீட்ல என்னால இருக்க முடியல டி ... உன் தங்கச்சியோட பேச்சு செய்கை பார்வை எதுவுமே சரி இல்ல..."

 

கணவன் பேசப் பேச அதிர்ச்சியில் உறைந்தவள்உடல் நடுங்க விழிகள் பனிக்க ,

 

"கம் அகைன் சத்யா ..."  என்றாள் தன் காதுகளையே நம்பாமல் .

 

 

" அவள நீங்க எல்லாரும் தான் குழந்தையா பாக்கறீங்க ... ஆனா அவ உண்மையிலயே குழந்தை கிடையாது ... இந்த வயசுக்கு  தேவையில்லாத விஷயத்துலதேவையில்லாத அளவுக்கு எக்ஸ்பர்ட்டைஸ் ஆகியிருக்கா ...

 

அளவுக்கு அதிகமா இருக்கிற பணம் எப்படி வாழ்க்கையை அழிச்சிடுமோ.. அதே மாறி அளவுக்கு அதிகமா கிடைக்கிற  நேரமும் வாழ்க்கையை அழிச்சிடும்....

 

படிக்கவும் புடிக்காமவாழ்க்கையில செய்ய நல்ல குறிக்கோளும் இல்லாம , பொழுதை வெட்டியா கழிக்கிறதோட  சைடு எபக்ட்ஸ் இதெல்லாம்...

 

சாதிக்க ஏதாச்சும்  இருந்தா அதை நோக்கி ஓடவே நேரம் சரியா இருக்கும் .... வெட்டியா இருக்கிறவ என்ன பண்ணுவ .... 

 

சைவ சித்தாந்த சன்மார்க்கத்தை பத்தியா படிப்பா... மூணாந்தர கதைகளையும், netflix நாலாம் தர படங்களையும் தான் பார்ப்பா .... 

 

அந்த மாறியான கர்மம் எல்லாம்  கூட பொறந்த அண்ணனையே தப்பா பார்க்க வைக்கும் .... அக்கா புருஷனை தப்பா பாக்க வைக்காதா ... "

 

 

கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியிலும் அழுகையிலும் வலியை தாண்டி துரோகத்தின் வீரியம் அதிகமாக வழிந்தோட சிலையாகிப் போனாள் பெண் .

 

சத்யா, பிரபா கிடையே வரும் பிரச்சனைகள்  சராசரி கணவன் மனைவிக்கிடையே நடக்கும் சாதாரண எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் தான் .

 

சராசரி கணவன்மார்கள் போல் அலுவலகப் பணி சுமை காரணமாகஅவளது பிறந்தநாள் , அவர்களது  திருமண நாளை  மறந்து விடுவான் ...

 

காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்கி வரச் சொன்னால், சிலவற்றை மறந்து விடுவான் சிலவற்றை மாற்றி வாங்கி வருவான் ....

 

குழந்தைகள் படிக்கவில்லை என்றால் கோபப்படுவான் ...

 

 

இம்மாதிரி உப்பு பெறாத பிரச்சனைகள் தான்,  பெரும்பாலும் அவர்களுக்கிடையேயான வாக்குவாதங்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது ...

 

அதற்குக் காரணம் இருவருமே விடாக்கண்டன் கொடாக்கண்டனாக தன்னிலையிலிருந்தே சிந்திப்பதும் அடுத்தவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்காமல்  இருப்பது தான் ...

 

ஆனால் இதை எல்லாம் மீறி ,  காதல், அன்பு, நம்பிக்கைவிசுவாசம்  போன்ற நற்குணங்கள்  வழிந்து ஓடுவதால், அடித்துக் பிடித்து  கொண்டாலும் அன்றில் பறவைகளாக வாழ்ந்தனர் ...

 

தன் கணவன் சத்யன் பெயருக்கு ஏற்றார் போல்  எல்லா வகையிலும் சத்யன் என நன்கு அறிவாள்...

 

பட்டென்று கோபம் வந்துவிடும் எடுத்துறிந்து பேசி விடுவான் மற்றபடிஅவனுடைய செய்கை, சிந்தனையில் துளி கூட வன்மமோ வஞ்சகமும் இருக்காது என்பதால் தான்இரண்டாம் கட்ட சிந்தனையே இல்லாமல்குழந்தையாய் பாவித்து   வளர்த்த தங்கையின் துரோகம் அவளை சில்லு சில்லலாய் உள்ளுக்குள்  உருக்குலைய செய்ய  துடித்து துவண்டு விட்டாள் பாவை .

 

பல நாட்களாக அழுத்தி  கொண்டிருந்த பிரச்சனையை இறக்கி வைத்த நிம்மதியில் , தெளிந்தவன்  அவளை நெருங்கி அவள் இரு தோளை பற்றி 

 

 

"அண்ணன் மனைவிய அம்மாவா பாக்கணும் .... தம்பி மனைவிய தன் மகளா பாக்கணும்னு ... ராமாயணத்துல கிஷ்கிந்தா காண்டத்துல ஒரு வரி வரும் ...

அப்படி என் மகளா பார்க்க வேண்டிய உறவுஎன்னை தப்பா பார்க்கும் போது , நான் எப்படி அவளை எங்க வீட்டு மருமகளா, என் தம்பிக்கு மனைவியா என் வீட்டுக்கு வர  ஒத்துக்க  முடியும் நான் சொன்னது 100% உண்மை ...   நம்பறதும் நம்பாம விடறதும் ,உன் இஷ்டம் ...." 

 

கரகரத்த குரலோடு அவன் விலகி நடக்க, கரம் பற்றி நிறுத்தியவள், அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு தேம்பி தேம்பி  அழ ஆரம்பித்தாள்.

 

அவன் கோபப்பட்டு பத்து வார்த்தைகள் பேசினால் மூன்று வார்த்தைகளிலாவது பதிலடி கொடுப்பவள்...

 

வாக்குவாதங்களுக்கு பிறகு  யாதொரு தன்மானமும் பார்க்காமல் இறங்கி வந்து சமரசம் பேசுபவளும் அவளே....

 

காரணம் சத்யனுக்கு அவளை பிடிக்கும் என்பதை விட, அவளுக்கு சத்யனை அளவுக்கதிகமாக பிடிக்கும்  என்பதுதான் ..

 

அதேபோல் இன்று வரை, அவளால் அவன் இல்லத்தில் யாதொரு பிரச்சனையும் முளைத்ததில்லை ...

 

இதுதான் முதல் முறை ..... மாமியார் வீட்டு விஷயத்தில் அவள் தலையிடுவது.

 

அவளுக்கு பாண்டியனை மிகவும் பிடிக்கும் ... உடன் தன் மாமியார் மாமனாரையும் பிடிக்கும் என்பதால் தன் தங்கையை அந்த குடும்பத்திற்குள் கொண்டுவர பார்க்கிறாள் என்ற அவளது  மன ஓட்டத்தை சரியாக புரிந்து கொண்டவனுக்கு, அவளது கதறல் கடினமாக இருக்க,

 

"அழாத டி.... நீ இப்படி வருத்தப்படுவனு தெரிஞ்சு தான் இத்தனை நாளா உன்கிட்ட எதையுமே சொல்லாம நானே சமாளிச்சேன் ... நீ தோண்டி துருவி கேட்டதால வேற வழி இல்லாம சொல்ல வேண்டியதாயிடுச்சு ... உன் தங்கச்சி கிட்ட இதையெல்லாம் கேட்டு சண்டை போடாத .... உங்க அம்மாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல.... உங்க அப்பா ரொம்ப வயசானவரு .... அவங்க நிம்மதிய அனாவசியமா கெடுக்காத ... நீ உன் வீட்டுக்கு கிளம்பு ..."

 

" நீங்களும் வாங்க ..."

 

"பாண்டியன் ஊருக்கு போறான் டி ...ஏர்போர்ட்டுக்கு போவணும் ..."

 

"நீங்க அவரை வழி அனுப்பிட்டு, எங்க வீட்டுக்கு வந்துடுங்க ..

என்றாள் அவனை விடாமல் மேலும் இறுக்கிக் கொண்டு.

 

ஓரிரு  கண நேர அமைதிக்குப் பிறகு 

 

" சரிநீ கிளம்பு ..." 

 

தன்னிடமிருந்து அவளைப் பிரித்தெடுத்து விட்டு அவன் விலகி நடக்க,   கனத்த மனதோடு அவனைப் பின் தொடர்ந்தாள்.

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள்.... 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  3. judgement reg preethi character and opinion of nathigam and athigam also i conflict here mam.
    Romba neeram yosika vachitinga during reading this epi.
    ஒருவேளை எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதோ! 🙄🙄🙄🙄

    ReplyDelete
    Replies


    1. Thanks ma .... one small clarification regarding the view of satyan... he is not just like that blindly judging her character... the way she behaved with him made him to cumulate her bad deeds to narrow down her character like that... first of all he dont want reveal her bad behavior to his wife As well... So only he pointed out preethis basic behaviour .... which all of their family members knew very well...

      According to atheism, என்னை பொறுத்த வரைக்கும் ,

      முழுமையான தரமான பகுத்தறிவுவாதினு யாருமே கிடையாது ...

      தேவைக்கு ஆத்திகம் தேவையில்லாததுக்கு நாத்திகம்னு வாழறவங்க அதிகம் ...

      அதுவும் ப்ரீத்தி மாதிரியான கதாபாத்திரத்திற்கெல்லாம் பகுத்தறிவு என்றால் என்னவென்றே தெரியாது ...
      பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதற்கும் கட்டுப்பாடு இல்லாமல் கண்டதை சாப்பிடுவதற்கும் நாத்திகத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் ...அவ்வளவே...



      Delete
    2. தவறான பாதையில் செல்லும் குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர மொத்தமாக மோசமான பெண் என்று நிர்ணயிப்பது தவறு அதுவும் மனைவியின் தங்கையை மகள் போல பாவிக்க வேண்டும் என்பது என் கருத்து. அந்த pennukkum ஒரு நாள் வாழ்க்கையை அமைத்து தர வேண்டியதும் அக் குடும்பதின் மூத்த மருமகன் கடமையே அல்லவா

      Delete
    3. * ஒரு நல் வாழ்க்கையை* typo error

      Delete
    4. கடவுளே இல்லை என்பவர்கள், என் கடவுள் தன் பெரியது என்பவர்கள் கூட ok. But nan than கடவுள் என்பவரே very dangerous.

      Delete


    5. நீங்க அந்த எபிசோட சரியா உள்வாங்கி படிச்சிருந்தீங்கன்னா உங்களுக்கே புரிஞ்சிருக்கும் ...
      ப்ரீத்தி மாதிரியான கதாபாத்திரத்தை திருத்தவே முடியாது ...
      அதுவா பட்டு திருந்தினால் தான் முடியும்...
      அதற்கு உதாரணம்...
      காதல் அந்த வயதிற்கு தேவை இல்லை என்று அறிவுரை கூறிய ஆசிரியரின் பெயரை எழுதி வைத்துவிட்டு கையை அறுத்துக் கொள்ளும் பெண்ணிடம், அதுவும் தாய் தந்தை தமக்கையே பேச பயப்படும் பெண்ணிடம் அக்காளின் கணவன் போய் அறிவுரை கூற முடியுமா ...

      அப்படி அவன் நல்லது எண்ணி அறிவுரை கூறினால்,
      என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான் என்ற அபாண்டத்தை அவள் சுமத்த மாட்டாள் என்று என்ன நிச்சயம் ...

      அதற்காகத்தான் அவன் அவள் பிரச்சனையில் தலையிடுவதே இல்லை ...

      சில கதாபாத்திரங்கள் எல்லாம் சொல்லிக் கேட்கும்... சில கதாபாத்திரங்கள் எல்லாம் பட்டுத்தான் திருந்தும்... ப்ரீத்தி கதாபாத்திரம் பட்டு தான் திருந்தும் ..

      மூத்த மருமகனாக சொல்லிப் பார்க்கலாம் ...
      ஆனால் அதனை கேட்கும் மனப்பக்குவம் அவளிடம் இல்லை என்பதை அவன் முன்கூட்டியே அறிந்து கொண்டு விட்டான்
      அதனால்
      தன்னுடைய மான மரியாதையை காப்பாற்றிக் கொள்ள அவன் விலகியே நிற்கிறான் ...

      நான்தான் கடவுள் என எல்லா மதத்திலும் ஒன்றிரண்டு கழிசாடைகள் கூறிக் கொண்டுதான் திரிகின்றன ..
      பிரச்சனை என்னவென்றால் அந்த கழிசடையை நம்பியவர்கள் தான் கெட்டுப் போவார்கள் ...
      அதாவது வெறும் சொற்ப மனிதர்கள் ....

      ஆனால் கடவுளே என்று சொல்பவனால் அனைத்து மத நம்பிக்கைகளும் சுக்குநூறாக உடைத்தெறியப்படுகின்றன ...
      பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் ...

      Delete
    6. 👍🏻👍🏻👍🏻thanks for the reply mam. I will follow with your story mam. No need to justify any body. Its just a character needs with this story. Forgot about shree and Ram. Whats going on there.

      Delete
    7. good ...The way you emphasised your points are most welcome dear...keep up your good job...

      Delete
  4. Excellent ma'am..All the talks on naathigam, pagutharivu etc ..was spot on.. Wonderful.. No words to praise..
    Please come to the scene, where ram charan starts seeing the true face of his mother and sister ..

    ReplyDelete
    Replies
    1. wait and watch dear... A lot of twists and turns are ahead....

      Delete
    2. Great 👍 You are the only author who beautifully blends our culture & tradition into modern world by unveiling the real truth of feminism and by revealing the true face of fake feminism and other rubbish talks..

      Delete
  5. Been waiting since morning ma'am . please upload the episode

    ReplyDelete

Post a Comment