அத்தியாயம் 40
"என்னாது
பொண்ணு பேரு ரேவதியா... "
இப்படி சன்னமாக
அதிர்ச்சியுடன் கேட்டது
வீரா அல்ல சாட்யாத் சத்யன்....
உறைந்திருந்தவன்
உணர்வு பெற்று,
"ஆமா
அண்ணே... எனக்கும் புரியல.... இவருக்கு எத்தனை பொண்ணு ..." என்றான் வீரா அப்பொழுது தான் அம்மையப்பனின்
குடும்பத்தை பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதும் நோக்கில்.
"நக்கலா, என்னைய கேட்டா எனக்கு எப்படி டா தெரியும் .... உனக்கு
இல்ல இந்த பொண்ணோட குடும்ப நெலவரம் தெரிஞ்சிருக்கணும்...."
ஐயோ கடவுளே, சிட்னில பார்த்தவளை
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட மொட்டை மாடில பார்த்தேனே.... இது
என்ன புது குழப்பம் ...
வீரா மனதிற்குள்
அவன் பார்த்த பழைய திரை படங்களில் கதாநாயகன் ஒரு வீட்டை சார்ந்த இரு பெண்களில் ஒரு பெண்ணை காதலித்து விட்டு மற்றொரு பெண்ணை மணக்கும்
காட்சிகள் எல்லாம் வரிசை கட்டி அரங்கேற,
உள்ளுக்குள்
பொங்கி எழும் மன அழுத்தத்தை தலையைக் குலுக்கி சமன் செய்தவன்
நெவர், அந்த மாதிரி ஏதாச்சும்
இப்ப நடந்துச்சு.. இங்க நடக்கிறதே வேற .... என குமுறிக் கொண்டிருக்கும் போது,
"ஏன்டா,
பொண்ணோட பேரு ஸ்ரீவித்யா இல்ல .... இவரு என்னமோ ரேவதினு சொல்றாரு
...." என வழக்கம் போல் அகல்யா ஆடி அசைந்து தன்
பங்கிற்கு குழப்ப,
"எம்மா...
இருக்குற குழப்பத்துல, நீ வேற ஏம்மா பேர மாத்தி சொல்ற ... ஸ்ரீவித்யா
இல்ல ஸ்ரீப்ரியா ..." என்றான் தாய்க்கும்
தம்பிக்கும் நடுவில் அமர்ந்திருந்த சத்யன் சன்னமாக மிகுந்த கடுப்புடன்.
"என்னமோ போ, ஸ்ரீவித்யா, ஸ்ரீப்ரியா, ரேவதினு ஒரே சினிமா நடிகைங்க பேராவே இருக்குது ...." அகல்யா அங்கலாய்க்கும் போது அமர்த்தலான அழகில் வெளிர் நீல நிறத்தில் தங்க ஜரிகையிட்ட பட்டும் பருத்தியும் கலந்து நெய்த தரமான கண்களை உறுத்தாத புடவையில், மிதமான அலங்காரத்தோடு வந்து நின்றாள் வீராவின் ஸ்ரீ.
அவளைக் கண்டதும் உயிரும் உணர்வும் பெற்றவன்,
எப்பா ...
அம்மையப்பா, நீ
கொஞ்ச நேரத்துல கிளப்பின மரண பீதில மாரடைப்பே வந்துடுச்சு... இந்த ட்விஸ்ட்ட
எந்த காலத்துலயும் மறக்க மாட்டேன் ப்பா... என்று மனதோடு முழங்கியவன்
இமைக்க மறந்து காதல் கரை புரண்டோட தன் காரிகையை கண்களால் அள்ளிப்
பருகிக் கொண்டிருக்கும் போது,
"பாண்டியா,
இது வேற பொண்ணா அதே பொண்ணாடா.... " என்றான்
சத்யன் ஸ்ரீப்ரியாவை புகைப்படத்தில் பார்க்காததால்.
"சிட்னில
பார்த்த பொண்ணு தாண்ணே.... " என வீரா ஆனந்தத்தில் உளறி கொட்ட
" சிட்னில
பாத்தியா ..."
சத்யன் சன்னமாக குறுக்கு
விசாரணையில் இறங்க, திருடனுக்கு தேள் கொட்டியது போல் உணர்ந்தவன்,
"சிட்னில
வேலை பார்த்த பொண்ணுன்னு சொன்ணேணே..." என வீரா கண
நேரத்தில் மழுப்பிவிட்டு
ஒரு மனுஷனுக்கு
இவ்ளோ கஷ்டம் வரக்கூடாது .... கால் வச்ச இடம் எல்லாம் கன்னி வெடியா இருந்தா என்னதான் பண்றது....
டங்கு(Tongue) வேற எடக்கு மடக்கா
ஏகத்துக்கும் இன்னைக்கு ரோலிங் ஆகுது... என
உள்ளுக்குள் நொந்து கொண்டிருக்கும் போது அவனை ஏற இறங்க
ஓரக்கண்ணால் சத்யன் ஆராய்ச்சி செய்ய
"போட்டோவை
விட நேர்ல பொண்ணு நல்லாவே இருக்கு ..." என்றார் அகல்யா வழக்கம் போல்
எதார்த்தமாய்.
ஸ்ரீப்ரியா
அணிந்திருந்தது பளபளக்கும் பட்டுப்புடவை இல்லை என்றாலும், அந்த மென்மையான ஜரிகை கொண்ட புடவையே
அவளை வெகு பாந்தமாகவும் அம்சமாகவும் காட்டியது.
அந்தப் புடவையை
அணிந்து கொள்ள, அவள்
பட்ட பாடு அவள் மட்டுமே அறிவாள்.
செல்வராணி
அவ்வளவு எளிதாக அந்த புடவையை உடுத்திக் கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை.
அவள் அந்த
புடவையை தேர்வு செய்ததற்கு காரணமும் இருந்தது.
மிகவும்
பளபளப்பான விலை உயர்ந்த பட்டுப் புடவையை
அணிய நேர்ந்தால் அதற்குப் பொருத்தமாக, கல்
அட்டிக்கையில் இருந்து காசு மாலை வரை அணிய வேண்டிய நிலைமை வரும் ...
அணிய வைத்து
விடுவார் செல்வராணி ... அது பிடிக்காது என்பதால்அவ்வாறு தேர்ந்தெடுத்திருக்க, புடவையின்
நிறமும், மிகுந்த இயல்பாக அதே சமயத்தில் காண்போரை ஒரு
கணம் கண்ணிமைக்க முடியா வகையில் அவள் அலங்கரித்துக் கொண்ட விதமும் வீராவின் மனதை
கொத்தோடு அள்ள , இசையே இல்லாமல் இன்ப நடனத்தில் மூழ்கிப்
போனான் நாயகன் .
அப்பொழுது
பார்த்து பெயர் குழப்பத்தை குறித்து அகல்யா கேள்வி எழுப்ப, செல்வராணி
ஆதிக்கதையை தொடங்க, அவரது பேச்சை இடைவெட்டி
"என்
பொண்ணோட நட்சத்திரம் ரேவதிங்கறதால, அவள ரேவதினு
கூப்பிடறோம் ... "
வழக்கம் போல்
அம்மையப்பன் வெடுக்கென்று பதில் அளித்து முடித்ததோடு தன் மனையாளை அழைத்து , வந்திருந்தவர்களுக்கு இனிப்பு கார
வகைகளை பரிமாறச் சொன்னார்.
அகல்யா தன்
அருகில் இருந்த நாற்காலியில் ஸ்ரீப்ரியாவை அமர சொல்லி பேச்சுக் கொடுக்க முயலும் போது
“என் பொண்ணு
நல்லா பாடுவா ..." என தானே முன் வந்து
அறிவித்த அம்மையப்பன் பூஜை அறையிலிருந்த தம்புராவை கொண்டு வந்து ,
மகள் தரையில் அமர்ந்து பாடுவதற்கான ஏற்பாட்டினை செய்ய தொடங்கினார்.
உடனே வீரா
சன்னமாக,
"பொண்ணு
பாடினா நானும் பாடணுமா ..." என்ற முக்கிய
கேள்வியை சத்யனிடம் எழுப்ப,
"அப்படி
ஒரு விபரீதத்தை மட்டும் செஞ்சிடாத தம்பி,
இங்க இருக்குற அம்புட்டு பேரும் வெளியே
தெறிச்சு ஓடிடுவாங்க ... வெளியே இருக்கிறவங்க வீட்ல தொயர
சம்பவம் நடந்து போச்சுனு உள்ள ஓடி
வந்துடுவாங்க...."
"நான்
முழு பாட்டு பாடப்போறதில்ல ... பொண்ணு பாட்டை பாதில மறந்து நிறுத்திட்டா .... அப்ப
பாடலாமானு கேட்டேன் ..."என விடாமல் வீரா கேள்விக்கணைகளை தொடுக்க ,
"ஏண்டா
மனசுல மீண்டும் கோகிலா கமலஹாசன்னு நெனைப்பா .... இதுக்கு மேல பேசின நான் மனுஷனா
இருக்க மாட்டேன் ..." என சத்யன் சன்னமாக கர்ஜிக்க
அதற்கு மேல் அண்ணனின் மன அழுத்தத்தை கூட்ட விரும்பாமல் அடக்கி வாசித்தான் நாயகன் .
“அசைந்தாடும்
மயில் ஒன்று கண்டால் .....
நம் அழகன்
வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
..."
என்ற தமிழ்
கானத்தை ஸிம்ஹேந்திர மத்யம ராகத்தில், ஆதி தாளத்தில் அடை மழை போல் தனது மென்மையான
தேன் குரலில் அவள் வெளுத்து வாங்க , ஊசி விழுந்தாலும் கணீர் என்று கேட்கும் அளவிற்கு, இசையின்
இனிமையில் உறைந்தனர் அம்மக்கள்.
அந்தப் பாடலின்
அனு பல்லவியில்
"இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான் ... திசை தோறும் நிறைவாக நின்றான்
... என்றும் திகட்டாத வேணு காணும் ராதையிடம் ஈந்தான் ... எங்காகிலும் எமதிறைவா
இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கும் மனதுடையான் ...
அருள் பொங்கும் முகத்துடையான் .... "
என மூச்சு
எடுக்காமல் அவள்
ஆலாபனை செய்ய, சுவாசிக்க மறந்து சிலையாகி போனான் வீரா.
அவள் பாடலின்
தொடக்கம் மற்றும் இறுதியில் மட்டும் அவன் விழிகளை எதிர்கொள்ள, அவன் விழிகளோ அணு அணுவாக அவளை
விடாமல் ஸ்கேன் செய்து கொண்டிருந்தன.
வீரா , அவன் குடும்ப உறுப்பினர்களுக்கும்
சமையல் தெரிந்த அளவிற்கு சங்கீதம் தெரியாது என்றாலும், அவள் அழகு தமிழில் பாடிய கிருஷ்ண கானத்தில் அனைவருமே லயிக்க, பெருமையும் பாசமுமாய் மகளின் இசை
மழையில் அம்மையப்பனும் மூழ்கிப் போனார்.
"ரொம்ப
நல்லா பாடினம்மா..."
அகல்யா
ஸ்ரீப்ரியாவை பார்த்து ரசித்து கூற, அவள் சிறு புன்னகையோடு
தலையசைத்து ஏற்க, விழி அகலாமல் அவளையே வீரா பார்த்துக்
கொண்டிருக்க, அப்போது அம்மையப்பன் குரலை செரும,
சுயம் உணர்த்தவன் அவரைப் பார்க்க, அவரும்
அவனையே பார்த்த படி,
" வீட்டுக்கு
போய் எல்லாரும் கூடி பேசி ஒரு நல்ல முடிவா சொல்லுங்க ..." என முடிக்க,
எனக்கு
ஸ்ரீயை ரொம்ப பிடிச்சிருக்கு ... இப்பவே கூட்டிகிட்டு போறேன் ... என நிறைந்த சபையில் உரைக்க வேண்டும் போல் பொங்கி எழுந்த உத்வேகத்தை அவன்
கட்டுப்படுத்த முயலும் போது,
"வீட்ல
போய் பேசறதுக்கு என்ன இருக்கு .... எங்களுக்கு பொண்ணை ரொம்ப
பிடிச்சிருக்கு ... பாண்டிக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு..."
என அகல்யா முந்திக்கொள்ள,
இன்னைக்கு தான்
சரியான நேரத்துல சரியா பேசியிருக்கம்மா...
என தன் தாய்க்கு
பாராட்டு பத்திரத்தை அளவில்லா மகிழ்ச்சியோடு
வகைத்தொகை இல்லாமல் வாசித்துக் கொண்டிருந்தான் மைந்தன்.
பெண் பிடித்து
விட்டது என தெரிந்ததும்,
"அடுத்த
மாசமே கல்யாணத்தை வச்சுக்கலாம் நினைக்கிறேன் ...
நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கனு சொன்னீங்கன்னா செய்ய வசதியா இருக்கும் ...."
என அம்மையப்பன் முடிக்க,
அடுத்த மாதமே
திருமணம் என்பது வீராவிற்கு இனிப்பான செய்தி என்றாலும், பேச்சுப் போகும் திசை பிடிக்காமல் போக
"உங்க
பொண்ணுக்கு என்ன விருப்பமோ, நீங்க என்ன விரும்பறீங்களோ அத செய்யுங்க ... கல்யாண செலவு மட்டும் பாதி பாதி ..." என அகல்யா முடிக்க,
தொழில் ரீதியாக
கூட பெண்களிடம் பேசுவதை சிறுமையாக
கருதும் அம்மையப்பனுக்கு, திருமண விஷயத்தை முழுக்க
முழுக்க அகல்யா கையாண்டது உவப்பற்ற தன்மையை கொடுக்க,
அகல்யா பேசியதை காதில் வாங்காதது போல் பொன்னம்பலத்திடம் பார்வையை
செலுத்தி,
"எனக்கு
ஒரே பொண்ணு .... அவ கல்யாணத்தை சிறப்பா செய்யணும்னு
ஆசைப்படறேன் ... என் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம போனதால அடுத்த மாசமே கல்யாணம்
வச்சுக்கணும்னு நினைக்கிறேன் .. மற்றபடி செலவை பத்தி கவலைப்பட வேண்டாம் ...."
என்றார் வழக்கம் போல் வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக.
அவரை
பொறுத்தவரையில் வீராவின் குடும்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு சில சுணக்கங்கள் இருக்கவே
செய்தன .
அதில் மிகவும்
முக்கியமானது, பெண்
பார்ப்பதற்கு முன்பே, வீரா அவரை தொடர்பு கொண்டு,
ஸ்ரீப்ரியாவின் தொலைபேசி எண்ணை கேட்டது
..
இரண்டாவது, பெண் பார்க்க வந்ததிலிருந்து,
சபையில் ஆண்கள் யாரும் பேசாமல்,
அகல்யா மட்டும் பேசிக் கொண்டிருப்பது...
இதையெல்லாம்
மனதில் வைத்து, அவர்
முகத்தில் யோசனை ரேகை படர்வதைக் கண்ட செல்வராணி, பூஜை
அறையில் அவரிடம் சன்னமாக ,
"எனக்கு
அந்த மாப்பிள்ளை தம்பியும் அவங்க குடும்பத்தையும் ரொம்ப பிடிச்சிருக்கு பா....
நான் இப்பவோ அப்பவோனு இருக்கேன்... ரெம்ப உடம்புக்கு
முடியல ... ஏதாச்சும் காரணத்த சொல்லி இந்த வரணை வேண்டாம்னு தட்டி கழிச்சிடாத..." என்றார்,
தன் பேத்தியின் முகத்திலிருந்து அறிந்து கொண்ட விருப்பத்தை
சொல்லாமல் மறைத்து.
மகளின் விருப்பத்தை மதிக்காவிட்டாலும்
பெற்றவளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளும் மகன் என்பதால் செல்வராணி தன் விருப்பத்தை வெளிப்படுத்த, பதில்
பேசாமல் மகள் பாடுவதற்காக தம்புராவை எடுத்துக் கொண்டு
வெளியேறிய அம்மையப்பன், மேற்படி சபையில் கூறி,
தன் விருப்பத்தை தெரிவித்தார்.
உடனே வீரா,
"உங்க
பொண்ணுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம்
இருக்கான்னு கேட்டு சொல்லுங்க ..." என்றான்
வேண்டுமென்றே, மணக்கப் போகும் பெண்ணின் சம்மதம் முக்கியம்
என்பதை அறிவுறுத்தி.
அவனை மின்னலென
கோடிட்ட ஆச்சரியத்தோடு அம்மையப்பன் நோக்கிய கணத்தில் செல்வராணி இதுதான் தருணம் என முந்திக்கொண்டு
"நீங்களே
ரெண்டு நிமிசம் , என் பேத்தி கிட்ட தனியா பேசி
தெரிஞ்சிகிடுங்க..." என வீராவுக்கு வழி
ஏற்படுத்திக் கொடுக்க, கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ
விடாமல் பற்றிக் கொண்டவன்,
"நீங்க
சொல்றது சரி தான் பாட்டி ... இப்பவே பேசி தெரிஞ்சிக்கறேன் ..." என மென் புன்னகையோடு முடிக்க, தாயை முறைக்க முயன்று தோற்றுப் போனார் அம்மையப்பன்.
ஏற்கனவே திட்டம்
போட்டிருந்தாலும், பேத்தியின் முகத்தில் காணப்பட்ட அளவில்லா ஆனந்தமும், மிளிர்வும் அவளது சம்மதத்தை சொல்லாமல் சொல்ல, உடனே
செயலில் இறங்கினார் செல்வராணி.
குரலை லேசாக செருமிக் கொண்டு, வீரா
"எனக்கு
உன்னை ரொம்ப பிடிக்கும் .... உனக்கும் என்னை ரொம்ப
பிடிக்கும்னு எனக்கு தெரியும் ..." என தொடங்க, கம்பீரமான
தோற்றத்திலிருந்து வெளிப்பட்ட விடலைப் பருவத்து இளைஞனின் பேச்சு அவளை வெகுவாக கவர,
லேசாக தலையசைத்து புன்னகையோடு அவள்
ஆமோதிக்க,
"வாய
தொறந்தா பாட்டு மட்டும் தான் படுவியா.... பேசவே மாட்டீயா ...."
குலுங்கி
நகைத்தவள்,
"நிறைய
பேசுவேன் ... நல்லாவும் பேசுவேன் ..." என்றாள் லேசான வெட்கத்தோடு .
"ஆமா
நான் சிட்னில உன்னை மீட் பண்ணத, உங்க வீட்ல சொன்னையா
..."
"சொல்லல
..."
"ஏன்
சொல்லல ..."
ஒரு கணம்
யோசித்தவள்,
"ஏன்
சொல்லணும் ..." என எதிர் கேள்வி கேட்க,
"அதானே
ஏன் சொல்லணும் ..." என ஒத்துப் பேசியவனை பார்த்து
"நீங்க
உங்க வீட்ல சொன்னீங்களா ..."
"சொல்லல
..."
"ஏன்
சொல்லல ...." என்றவளிடம் வெண்பற்கள் தெரிய
புன்னகைத்தபடி இரு புருவங்களை உயர்த்தி
"ஏன்
சொல்லணும்...." என்றவன் முடிக்க,
இருவரும்
இணைந்து நகைத்தனர்.
திரைப்படங்கள், கதைகளில் வருவது போல் ஜென்ம ஜென்மமாக
தொடரும் பந்தமாகத்தான் தோன்றியது அவர்களின் சந்திப்பு.
அப்படி ஒரு
புரிதல், இணக்கம், காதல், அன்பு, அக்கறை ,
பாசம் ஆகியவை பல்வேறு வடிவில் அவர்களுக்கிடையே மலிந்து கிடக்க, மங்கையவள் லேசான
தயக்கத்தோடு
"உங்ககிட்ட
ஒன்னு கேட்கணும் ராம் ..." என்றாள் அவசரமாக.
அவனுக்கு
அதிவீரராம பாண்டியன் என்ற பெயரை சூட்டிய தருணத்தில் இருந்து போன கணம் வரை, அவனை
யாருமே ‘ராம்’ என்று அழைத்ததே இல்லை…
தன்னவளின்
தனித்துவமான அழைப்பு, அவனுள் உற்சாகத்தை ஊற்றெடுக்க செய்ய,
"என்ன
...." என்றான் அவள் கண்களுக்குள் நோக்கி.
அந்தப்
பார்வையின் தீட்சண்யம் தாளாமல் பார்வையை இடம் மாற்றியவள்,
"உங்களுக்கு
ஸ்மோக்கிங் டிரிங்கிங் ஹாபிட்ஸ் இருக்கா ..." என்றாள் மெதுவாக.
"எனக்கு
அந்த பழக்கம் எல்லாம் இல்ல ... உனக்கு இருந்தா நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்
..." என இயல்பாக மொழிந்தவனை கோபத்தோடு பார்க்க
முயன்று தோற்றவள் , லேசாக சிரிக்க,
"உனக்கு
வேற ஏதாச்சும் கேட்கணுமா...." என்றான் குறும்பாக.
"என்னை
பத்தி நீங்க எதுவுமே கேட்கலையே ...."
"கேட்க
வேண்டிய அவசியமே இல்லையே ... உன்னை பத்தி தான் எனக்கு எல்லாம் தெரியுமே ...."
"எப்படி
..." என்றாள் பெருத்த ஆச்சரியத்தில்.
"நீ நம்ம
வீட்டுக்கு வர நாளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன் ... சீக்கிரம் வந்து சேரு ....
அங்க எல்லாத்தையும் சொல்றேன் ..."
என மென் புன்னகையோடு இயம்பி விட்டு, தன் இருக்கையில் இருந்து
அவன் எழ முற்படும் போது , பேச்சு நிறைவடைந்து விட்டதை
புரிந்துகொண்டு அவர்களை நெருங்கிய செல்வராணி,
" தம்பி, பேச வேண்டியது எல்லாம் பேசிட்டீகளா.." என்றார்
ஆர்வத்துடன்.
அம்மையப்பனை
பற்றி தெரிந்திருந்ததால் தன்னவளுடன் பேசும் வாய்ப்பு அமையுமா என தனக்குள்ளே அவன் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் போது, அதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்
அல்லவா .... அதனை மனதில் நிறுத்தி மிகுந்த மரியாதையோடு அவன்
தலையசைக்க,
"நீங்க
சிரிச்ச பாவனையா இருக்கிறது எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு ... என் புள்ள, அதான் இவ அப்பன் சிரிக்கவே மாட்டான் ... (குரலைத் தாழ்த்திக் கூறிவிட்டு)
என் பேத்தியை புடிச்சிருக்கா ..." என்றார் வெள்ளந்தியாய்.
வீராவின்
மனக்கண்ணில் ஏதோ பாக்யராஜ் படத்தில் பெண் பார்க்கச் சென்ற
காட்சிகள் நினைவிற்கு வர,
"உங்க
பேத்திய ரொம்ப புடிச்சிருக்கு ... கட்டினா உங்க பேத்தியை தான் கட்டுவேன் பாட்டி ...." என்றான் அதே தொனியில் , அதே குறும்போடு.
அவன் பேசிய
விதமும், உடல் மொழியும் கண்டு சிறியவள்
புரிந்துகொண்டு களுக்கென சிரிக்க, காரணம் புரியாமல் சிரிப்பில் இணைந்த பாட்டி
"எனக்கும்
உங்களை ரெம்ப புடிச்சிருக்கு... ஏன் தெரியுமா .... என்ற வூட்டுகார் பேரும்
பாண்டியன் தேன்.... உங்கள மாறியே சிரிக்க சிரிக்க பேசுவாரு.... உங்கள மாறியே
பார்க்க ஓங்குதாங்கா இருப்பாரு ... இவன் தேன் (
அம்மையப்பனை காட்டி) என் மாமனார் மாதிரி முசுடு ..." என மெல்லமாக அவர் கூற,
அவரது முக பாவனைகள், அதில் தென்பட்ட
கள்ளம் கபடம் அற்ற தன்மை அவனை வெகுவாகக் கவர,
"எனக்கும்
உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு பாட்டி .... நீங்க ஏற்பாடு பண்ணலன்னா, நான் உங்க பேத்தியோட பேசி இருக்கவே முடியாதே ... அதுக்கு தேங்க்ஸ் "
என்றான் வெளிப்படையாக.
“இந்த வீட்ல
பணத்துக்கு பஞ்சம் இல்ல தம்பி ... உங்களுக்கு என்ன வேணுமோ அம்புட்டையும் என் மகன்
செய்வான்..... என் பேத்தியை மட்டும் எப்பவும் சந்தோஷமா வச்சுக்கிடுங்க .... அவ
இப்ப இருக்கிற மாதிரியே எப்பவும் இருக்கணுங்கிறது தான் என்னோட ஆசை .... என் மவன் நல்லவனாலும் எப்பவுமே சிடு சிடுனு மூஞ்ச
காட்டிகினே இருப்பான்... அதனால எங்க வீட்ல எல்லாரும் பயந்துக்கினே இருப்போம் ...
கல்யாணத்துக்கு பொறவு நீங்களும் சிடுசிடுனு பேசிடாதீக மனசு ஒடிஞ்சு போய்டுவா
..." என்றவரின் முகத்தில் அளவுக்கு அதிகமான கவலை இழையோட
"கவலைப்படாதீங்க
பாட்டி உங்க பேத்தியை அருமையா பாத்துப்பேன் ... கல்யாணத்துக்கு அப்புறம், அவ என்ன பேசினாலும் நான் ஆமாம் சாமி போடறேன்.... பதில் பேசவே மாட்டேன்
போதுமா ..."
குலுங்கி
நகைத்தவர்,
"இன்னும்
ஒன்னு உங்க கிட்ட சொல்லோனம் கோவிக்க மாட்டீகளே ..." என்றார் பணிவாக.
"சொல்லுங்க
பாட்டி ..."
"என்
அம்மா வீட்டுல எல்லாரும் அசைவம் சாப்பிடுவோம் ....
இப்ப கூட கெடா வெட்டு ,காது குத்துல வெளிய
சாப்ட்டுக்கிடுவோம் ..... ஆனா இந்த வீட்ல செய்றதில்ல... என் மாமனார் பரம்பரை கோவிலுக்கு
கொடை போடற குடும்பம் ... அதனால என் பேத்திக்கு அசைவம் சமைக்கவும்
தெரியாது சாப்பிடவும் மாட்டா ..." என அவர் சங்கோஜத்தோடு முடிக்க,
"எங்க வீட்ல எல்லாரும் சாப்பிடுவோம் ... இப்ப அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வயசானதால வீட்ல அசைவம் செய்யறத பெரும்பாலும் குறைச்சிட்டாங்க .... என் அண்ணியும் சாப்பிட மாட்டாங்க ... அதனால மாசம் ஒரு தடவை செய்யறதே பெரிய விஷயம் ..." என்றான் நிதர்சனத்தை.
" ரொம்ப
சந்தோஷம் தம்பி ... " என்றவர் உடனே "ரொம்ப
சந்தோஷம் மாப்பிள.. " என மாற்றி முடித்தார்
மகிழ்ச்சியோடு.
தன்
பாட்டிக்கும் அவனுக்குமான உரையாடலில் லயித்துப் போய் இருந்தவள், அப்போதுதான் அவன் அணிந்திருந்த
வெளிர் நீல நிற சட்டையை கவனித்தாள்.
அவளும் அதே
நிறத்தில் புடவை அணிந்திருப்பதை எண்ணி உள்ளுக்குள் வியந்து கொண்டிருக்கும் போது, அகல்யா
அங்கு வந்து
" கிளம்பிறோம்மா....
அடுத்த மாசம் மொத முகூர்த்ததுலயே கல்யாணம் .... கல்யாணத்துக்கு முந்தின நாள்
நிச்சயதார்த்தம்னு பேசி முடிவெடுத்திருக்கோம் .... கல்யாணத்துக்கு
புடவை எடுக்க சொல்ல, உனக்கு போன் பண்றேன்..." என
தன்மையாக பேச, லேசான புன்னகையோடு தலையாட்டினாள் மங்கை.
உடனே செல்வராணி
திருமணத்தைக் குறித்து வேறு சில தகவல்களை அகல்யாவிடம் கேட்டுக் கொண்டிருக்கும்
போது , வீரா ஸ்ரீப்ரியாவை ஓரடி நெருங்கி,
"வரேன்
ஸ்ரீ .... நாளைக்கு ஈவினிங் லண்டன் கிளம்பறேன் .... ஒரு வாரத்துல திரும்பிடுவேன்
..."என்றவன் பார்வையாலேயே விடை பெற, புதிதாக அவன் அழைத்த விதத்தில் மயங்கியவளின்
மனம் மான் குட்டியாய் அவன் பின்னே செல்ல , நிதர்சனம்
உணர்ந்து நகராமல் கால்கள் வேரூன்றி போக, வழி கூட்டி அனுப்ப எண்ணி செல்வராணி மட்டும்
அவர்களைப் பின் தொடர்ந்தார்.
இரு
குடும்பத்தாரும் பரஸ்பரம் பேசி முடித்து விடைபெறும் போது , வீரா பாட்டியை
நெருங்கி , ஓரிரு கணம் பேசிவிட்டு
"வரேன்
பாட்டி ..." என மரியாதையாக விடைபெற்று காரில்
அமர்ந்தான், அதுதான் அவருடனான கடைசி சந்திப்பு என
அறியாமல்.
ஸ்ரீ-ராமம்
வருவார்கள் .....
Super akka very nice 👍👍👍
ReplyDeletethanks ma
DeleteSuper mam ultimate
ReplyDeletethanks mam
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
DeleteNice going. Nan antha sri & Ram ketta authu than ithunu sollitingalle!!!🙄🙄🙄😀😀😀! Any way waiting for Lakshmi & Ram again!🥴🥴
ReplyDeletethanks ma...todays episode ur favourite
DeleteKeep rocking mam 💕💕💕
ReplyDeletethanks ma
DeleteAsusual rocking in ur style akka. Orey fun filled ud... next ud la paatiya potu thalla poringa pola .. y this kolaveri... pavam paati.. irunthutu pogatumey
ReplyDeletehahaha...sariya sonneenga... thanks ma
Delete