அத்தியாயம் 38
"நான்
மாப்ள போட்டோ பார்த்தேன் ... கண்ணுக்கு லட்சணமா நல்லா தான் இருக்காரு ... அவங்க
குடும்பமும் நல் குடும்பமா தான் தெரியுது ... நான் ஆஸ்பத்திரில இருக்க சொல்ல மூணு
நாலு தாட்டி போன் பண்ணி இருக்காங்க... உங்கப்பன் தான் போன் எடுக்காம
விட்டுபூட்டான்... உங்கப்பனையும் சொல்லி தப்பில்ல... என்னைய ஆஸ்பத்திரில
சேர்த்ததிலிருந்து அவன் ஓடிஞ்சு போயிட்டான்.... சரி, நீ
மாப்ள ஃபோட்டோவ பார்த்தியா .... உனக்கு புடிச்சிருக்கா ..."
என்றார்
செல்வராணி மிகுந்த எதிர்பார்ப்போடு.
ஸ்ரீ ப்ரியாவின்
மனக்கண்ணில், அவளது
அலுவலக முகப்பில், இடக்கையில் கோட்டை
(Coat) பற்றிய படி, அவளையே
ரசித்துப் பார்த்து புன்னகை சிந்தி கொண்டிருந்த வீராவின் முகம் வந்து போக,
அத்துணை நேரமாக அவளை ஆட்கொண்டிருந்த மன அழுத்தம் சற்றே குறைந்து
ஒருவித சிலிர்ப்பு மின்னலென அவள் உடலை ஆக்கிரமிக்க,
" ம்ம்ம்..."
என்றாள் முகம் சிவந்து மென்மையாக .
"கண்ணு, கல்யாணத்துக்கு பொறவு உன் அம்மாள மாறி இருந்துடாத.... உன் அப்பன் என்ன சொன்னாலும் உன் ஆத்தா மண்டைய மண்டைய ஆட்டுவா .... அவ அப்படி இருக்க போய் தான், உன் அப்பன் என் அப்பனை போல இத்தனை வயசுக்கும் தெனாவட்டா சுத்திகிட்டு இருக்கான்.... பொண்ணுன்னா எல்லா இடத்துலயும் பொறுத்து போவணும்னு அவசியம் இல்ல ஆத்தா... உன் தாத்தான் , அதான் என்ற புருசன் ஒரு நாள் என்னைய அதிகாரப்படுத்தினதில்ல... வெளிய பட்டாளத்தான்னு வெரப்பா சுத்தினாலும் , என்ட்ட மட்டும் ரொம்ப தன்மையா தான் நடந்து பாரு...
உன் அப்பனும்
அடிப்படையில நல்லவன் தேன் .... பொறுப்பானவன்,
பாசக்கார பய .. யார் மனசும் நோவாம அள்ளி அள்ளி கொடுத்து எல்லாரையும்
நல்லா தான் பார்த்துக்கிடுவான்... என்ன ஒன்னு, எங்கன
போனாலும், தன்னோட பேச்சு தான் ஆம்பலம் ஏறணும்
நினைக்கிற, அந்த குணந்தேன், அவனுக்கு
எதிரியாய்ட்டு...
இங்க பாரு கண்ணு, உங்கொப்பன் உன்னை கண்டிஷன் பண்ணாலும் உனக்கு அந்த தம்பியை புடிச்சா மட்டும்
கல்யாணத்துக்கு ஒத்துக்கிடு .... சரியா ..." என்றவர்
மேலும் சில ஆலோசனைகள், அறிவுரைகளை கூற, கேட்டுக் கொண்டதோடு, அவருக்கு ஆறுதலையும் கூறி
அழைப்பை துண்டித்தாள் ஸ்ரீப்ரியா.
ஸ்ரீப்ரியாவின்
தந்தை வழிபாட்டி தான் தற்போது அலைபேசியில் உரையாடிய இந்த செல்வராணி.
அவருடைய கணவர் பாண்டியன் பட்டாளத்தில்
மேஜர் ஆக பணிபுரிந்து, நம் நாட்டுக்காக போரில் உயிர்
தியாகம் செய்தவர் ... ஆகச் சிறந்த மனிதர் .... அவர்களுடைய
ஒரே மகன் தான், அம்மையப்பன்.
அவர்களது
பரம்பரையில், கிட்டத்தட்ட
நான்கு தலைமுறைக்குப் பிறகு பெண் வாரிசாக அவதரித்தவள் தான் ஸ்ரீப்ரியா.
அவள் பிறந்து
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிறந்தவன் தான் அவளது தம்பி கோபாலன்.
செல்வராணி
கூறியது போல், ஸ்ரீப்ரியாவின்
தாய் சுசீலா , வெள்ளந்தி, பேசா
மடந்தை ....
சரியாகச்
சொன்னால், 'சம்சாரம் அது மின்சாரம்'
திரைப்படத்தில் அந்த அம்மையப்பனுக்கு அவருடைய மனைவி கோதாவரி
எப்படியோ, அதே போல் இந்த அம்மையப்பனுக்கு சுசீலா.
கணவனின்
பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவர் ... அம்மையப்பனின் உடல் மொழியை வைத்தே அவருக்கு
முன்பாக யோசித்து குறிப்பறிந்து நடந்து கொள்வார் ...
செல்வராணியும்
பலமுறை அறிவுரை கூறி பார்த்து விட்டார்,
சுசிலா தன் கட்டுபெட்டித்தனத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை.
செல்வராணி ஓரளவு
உலக விபரம் அறிந்தவர்.
இயல்பிலேயே முற்போக்கு சிந்தனை கொண்டவருக்கு கணவன்
பாண்டியன், பட்டாளத்தில் பணிபுரிந்ததால் பல மொழிகள் பேசும்
மாநிலத்தில் வசிக்கும் சந்தர்ப்பமும் அமையப் பெற, பல்வேறு இன குண மக்களுடன் பழகி மனிதர்களை படிக்கும் பழக்கத்தில்
கைதேர்ந்தவர் ஆகிப்போனார்.
கணவர்
பாண்டியனும் செல்வராணியின் மீது அன்பை மழையாக பொழிந்ததோடு மனையாளின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத மாசற்ற மனிதர் ஆவார்.
காலம்
போர் என்ற பெயரில் உடல் ரீதியாக அவரை பிரித்து அழைத்துச் சென்றாலும் மன ரீதியாக அவர்களது அன்னியோன்யத்தை
பிரிக்க முடியவில்லை ...
ஆதலால் தான் எப்பொழுதுமே செல்வராணியின் பேச்சில் கணவனைப் பற்றிய பெருமிதம் தாண்டவம் ஆடிக் கொண்டே இருக்கும் ...
வெளி உலகம், மனைவி, மக்களுக்கு
சிம்ம சொப்பனமாக விளங்கும் அம்மையப்பன் கூட அன்னியோன்யமான தாய் தந்தையின்
அன்பிற்கும் அக்கறைக்கும் அடிபணிந்து போவார்.
கணவனுக்கு அஞ்சி
நடுங்கியே பழக்கப்பட்ட சுசீலாவை பார்த்தே, வளர்ந்ததால் ஸ்ரீப்ரியா, கோபாலன் இருவருமே தந்தையின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத பழக்கத்தைப்
பின்பற்ற, அம்மையப்பன் வைத்தது தான் அந்த வீட்டில் அச்சிடப்படாத சட்டம் ஆகிப்போனது.
அம்மையப்பனின்
இந்த கரடு முரடு குணத்தால், பேரன் பேத்திகளின் நியாயமான ஆசைகள் கூட நிறைவேறாமல் போகிறதே, என்று எண்ணி, அவர்களுக்காக அந்த வீட்டில் குரல்
கொடுப்பார் செல்வராணி.
செல்வராணி குரலை
உயர்த்தினாலே அம்மையப்பன் அடங்கி விடுவார் என்பதால் , ஸ்ரீப்ரியா , கோபாலன்
செல்வராணியின் மூலமாக தத்தம் ஆசைகளை தந்தையிடம் நிறைவேற்றிக்
கொள்வர்.
அவர்களது
குடும்பம் அந்த ஊரின் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும்
நடக்கும் 10 நாள்
திருவிழாவில், மண்டகப்படியை ஏற்று நடத்தும் குடும்பமாகும் .
செல்வராணியின்
மாமனார், அந்த கோவிலின் தர்மகர்த்தாவாக
பணிபுரிந்ததால், இன்று வரை அவர்களது குடும்பத்தை கோவில்
தர்மகர்த்தா குடும்பம் என்றே அப்பகுதி மக்கள் அழைப்பது வழக்கம்.
அம்மையப்பன்
அரசாங்கத்தில் சில காலம் சர்வேயராராக பணிபுரிந்துவிட்டு, பின்பு விருப்ப ஓய்வு பெற்று மித
மிஞ்சிய நிலங்களில் விவசாயம், மற்றும்
நிலமனை விற்கும் வியாபாரத்தை வெற்றிகரமாக
நடத்தி வருவதால் அங்கு பெரும்பாலானவர்களுக்கு அவர் பரிச்சயம், கரார் பேர்வழி என்ற அவரது குணமும் பரிச்சயம்.
கடுவன் பூனை
போல் எப்பொழுதுமே கோபத்தை தூக்கி சுமந்து கொண்டிருக்கும் மகனுக்கு, சேட்டைகள் அதிகம் செய்யாமல் , பள்ளிப் பாடங்களில்
அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு ஒழுக்கத்திலும், அடுத்தவர்களிடம் காட்டும் அன்பிலும் சிறந்து
விளங்கும் மகன் மகளை கடவுள் பிள்ளைகளாக கொடுத்திருப்பதை
எண்ணி, மனம் மகிழ்ந்து போவார்
செல்வராணி.
பேத்தியின்
புத்திசாலித்தனம் பேரனின் அறிவாற்றலையும் கண்டு, வீட்டிற்கே இசைக்கலைஞரை வரவழைத்து வாய்ப்பாட்டும்,
மிருதங்கத்தையும் பயிற்றுவித்தார்.
மிகுந்த உழைப்பு
மற்றும் ஆர்வத்தால், பள்ளிப் பாடங்களுக்கு நடுவே கர்நாடக இசையை ஓரளவிற்கு கற்று தேர்ந்த
ஸ்ரீப்ரியா, அந்த ஊரில் நடக்கும் பத்து நாள்
திருவிழாவில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மட்டுமே
பாடுவாள்.
வேறு எந்த
இடத்திலும், பாடக்கூடாது
என்பது அம்மையப்பனின் உத்தரவு.
மகள் பாட மகன்
மிருதங்கம் வாசிப்பதை பெருமிதமாக அவர் ரசித்துப் பார்த்தாலும் அவரைப்
பொறுத்தமட்டில் பெண்களுக்கான வட்டம் மிகச் சிறியது என்பதால், வெளிப்படையாக குழந்தைகளை அழைத்து பாராட்ட மாட்டார்.
அம்மாதிரியான
சமயங்களில் பாராட்டுக்காக ஏங்கும் குழந்தைகளின் முகவாட்டத்தை அறிந்து தன் பேரன்
பேத்தியை பாராட்டி மகிழ்ந்து அன்பால் அரவணைத்துக் கொள்வார் செல்வராணி.
இப்படிப்பட்ட
சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீப்ரியாவிற்கு சிட்னியில் கழித்த இந்த சில
மாதங்கள், அவளது வாழ்க்கையில் பொன்னேட்டில்
பொறிக்கப்பட வேண்டிய தருணங்கள் எனலாம்.
தற்போது
திருமணத்திற்காக இந்த நாட்டையும் பணியையும் விட்டு விட்டு செல்வது, பிறவி குருடனுக்கு பாதியில்
கிடைத்த கண் பார்வையை திடீரென்று பறித்துக் கொள்ளும் நிலை
போல் எண்ணி கலங்கிப் போனாள்.
அவளுக்கு வீராவை
பார்த்ததுமே பிடித்து
விட்டது என்றாலும் , உள்ளுக்குள் திருமணத்தைக் குறித்த சில
நெருடல்கள் இருக்கவே செய்தன.
அதற்குக்
காரணங்கள் இல்லாமல் இல்லை. அவளது கல்லூரி தோழி கௌரியின் வாழ்க்கையை பார்த்து ஏற்பட்ட, ஒருவித பயம் என்றும் கூறலாம்.
கௌரி, ஸ்ரீப்ரியாவின் கல்லூரி கால ஆருயிர்
தோழி. அதே கல்லூரியில் படித்த இளைஞனை மூன்றாண்டு காலம்
மாய்ந்து மாய்த்து காதலித்து, வீட்டுப் பெரியவர்களின்
சம்மதத்தோடு திருமணம் முடித்தவளின் திருமண வாழ்க்கை மிகுந்த மனக்கசப்பின் காரணமாக
கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு உள்ளாகவே முடிந்து போனது.
காரணங்கள் இரு
பக்கமும் வெவ்வேறாக இருந்தாலும், காதலிக்கும் பொழுது விட்டுக் கொடுத்து உதாரணக் காதலர்களாக
திகழ்ந்தவர்களுக்கு, திருமணத்திற்குப் பிறகு
என்னவாயிற்று .... என்ற கேள்விக்கு பதில் கிடைக்காததால் இன்று வரை, ஸ்ரீப்ரியாவை பொருத்தமட்டில் திருமணம் என்பது மூடி இருக்கும் ஒரு மர்ம அறை.
அதன் கதவைத் திறந்தால் தான், அதன் பின்னே இருப்பது அதிர்ச்சியா ஆனந்தமா
என்பது தெரியவரும் என்பதால், திருமணம் குறித்து ஒருவித
அச்சத்தோடே பயணித்தாள்.
காதல் என்ற
பெயரில் நன்கு அறிந்த மனிதர்களே திருமணத்திற்கு பின்பு மாறி விடும் பொழுது , ஓரிரு முறை பார்த்து, அதிகம் பேசாத வீராவுடன் அமையப் போகும் தன்
வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற சிந்தனையிலேயே வலம் வந்தாள் மாது.
தற்போது
பணியாற்றிக் கொண்டிருக்கும் வரைவு திட்டங்களில் இருந்து அவளை விடுவிக்க, பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்
பிறகே அவளது மேலாளர் சம்மதிக்க, ஒரு வித நிம்மதியும்,
மொழிபெயர்க்க முடியாத கவலையும் அவளை சூழ்ந்து கொண்டது.
அவள் தாயகம்
திரும்ப ஒரு வாரம் இருக்கின்ற நிலையில், மனம் அவள் வசிக்கும்
அந்த அன்னிய மண்ணின் அழகை, பல வகையில் ரசித்து,
அசை போட்டுப் பார்க்கத் தொடங்கியது.
என்னதான்
பரபரப்பாக இயங்கும் நகரம் என்றாலும்,
சிட்னியின் மென்மையான காலநிலையும், அமைதியும்
ஒரு வித ரம்யத்தை அவளுக்கு அளித்தது என்றே சொல்லலாம்.
தான் உண்டு தன்
வேலை உண்டு என்று அதிக ஆர்ப்பாட்டமற்று இருக்கும் அம்மக்களை , அந்த மண்ணில் கால் வைத்த
தினத்திலிருந்தே அவளுக்கு பிடித்துப் போனது.
அவள்
தங்கியிருக்கும் இடத்திலிருந்து அன்றாடம்
அலுவலகம் செல்ல இந்தியர்கள், ஸ்ரீலங்கர்கள், சீனர்கள், மங்கோலியர்கள் , ஆஸ்திரேலியர்களோடு
மேற்கொள்ளும் ரயில் பயணத்தை வெகுவாக ரசிப்பாள்.
ரயிலுக்காக
காத்திருந்து ஏறி இறங்கும் இடமான வின்யர்ட்(Wynyard)
ஸ்டேஷன், அவளது அலுவலகத்திற்கான
நினைவுச் சின்னம் என்றே அவள் மனதில் பதிந்து போனது.
அலுவலகம்
அமைந்திருக்கும் ஜார்ஜ் ஸ்ட்ரீட், அதன் அருகே இருக்கும் டார்லிங் ஹார்பர், ஹார்பர்
பிரிட்ஜ், லூனா பார்க், வார இறுதியில்
சென்று வரும் ஹெலன்ஸ் பர்க் கோவில், அவள் அங்கிருந்த நாட்களில் சுற்றிப் பார்த்த ப்ளூ மௌண்டைன், கோலா பார்க், ரோஸ் பே (தீவு) , மேன்லி பீச், கேன்பிரா பாராளுமன்றம்,
ஸ்னோஈ மௌன்டைன் போன்ற ஏகப்பட்ட இடங்களை
ஆசை போட்டு பார்த்து ரசித்தவளுள் , அந்த
இடங்களின் சிறப்பம்சங்களை காட்டிலும், அதனை ரசிக்கும் பொழுது
அவள் அனுபவித்த சுதந்திர உணர்வை எண்ணித்தான் அவளது மனம் ஏக்கம் கொண்டது.
அருமையான பதவி, லட்சக்கணக்கில்(இந்திய)
மாத சம்பளம் , ஆடை சுதந்திரம், அருமையான நண்பர்கள், அழகான ஊர், அம்சமான காலநிலை இதையெல்லாம் இழக்கப் போகின்றோமே, என்ற எண்ணம் அவள் அடி மனதை பிசைய, இதுபோல் ஒரு
அருமையான வாழ்க்கை திருமணத்திற்கு பின்பு அமையுமா என்ற மில்லியன் டாலர் கேள்வி
அவள் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்க, முழு மனதோடு இந்தியா
திரும்பவும் மனம் இல்லாமல், தாய் தந்தையின் ஆசைக்கு
எதிராக ஆஸ்திரேலியாவில் பணியைத் தொடரவும் முடியாமல் இருதலைக்கொல்லி எறும்பாய்
தவித்துப் போனாள்.
பிறந்ததிலிருந்தே
பொருளாதாரப் பிரச்சினைகளை அவள் சந்தித்ததே இல்லை என்றாலும், சுய சம்பாத்தியம்
கொடுத்த நிமிர்வு, ஓப்பல் (Opal என்னும்
விலை உயர்ந்த ரத்தினம், உலகிலேயே ஆஸ்திரேலியாவில் தான்
அதிகம் கிடைக்கிறது) வைர, தங்க
ஆபரணங்களை விருப்பம் போல் வாங்கி குவித்த பொருளாதார
சுதந்திரம், கண்ணியமான ஆடைகளையே அவள் தேர்வு செய்து
அணிந்தாலும் , சுடிதாரைத் தாண்டி அவள் மண்ணில் கிடைக்காத ஆடை
சுதந்திரம் அன்னிய மண்ணில் கிடைக்கப்பெற்றது போன்றவையே அவளை ஒரு முடிவுக்கு வர
முடியாமல் தடுமாறச் செய்தது.
அந்த சிட்னி
நகரத்தில் ஹார்பர் பிரிட்ஜில் காண்போரை வியக்க வைக்கும் இரவை பகலாக்கும் வண்ண வண்ண வான வேடிக்கைகளோடு,
நள்ளிரவில் நண்பர்கள் சூழ புத்தாண்டை வரவேற்றது, மணக்கண் முன் வந்து போக, அடுத்த புத்தாண்டு
எப்படி இருக்குமோ என்ற எண்ணம் எழ, வாழ்க்கையின் பாதையும்
இலக்கும் அறிய முடியாமல் குழம்பி போனாள் பாவை.
திருமணம் வேண்டுமா வேண்டாமா, ஆஸ்திரேலியாவை விட்டு செல்லலாமா வேண்டாமா போன்ற குழப்பத்தில் இருந்தவளுக்கு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஏனோ குழப்பமே ஏற்படவில்லை.
அதுதான் வீரா.
பார்த்த
மாத்திரத்தில் பசை போல் அவள் மனதில் ஒட்டிக் கொண்டவன் ஆயிற்றே.... வாழ்க்கையில்
திருமணம் என்று ஒன்று நடந்தால் அது வீராவுடன் தான் என்பதில் மட்டும் ஏனோ தெளிவாக
இருந்தாள்.
அந்த உணர்வுக்கு
பெயர் காதலா, நம்பிக்கையா,
முன் ஜென்ம பந்தமா காரணம் புரியவில்லை என்றாலும் கணவனாக அவள் மனதை முதல்
பார்வையிலேயே ஆக்கிரமித்து இருந்தான் அந்தக் கள்வன்.
அவனைத் மணக்க வேண்டுமென்றால், அவளது பதவியை துறந்துவிட்டு இந்தியா சென்றாக
வேண்டிய கட்டாயத்தில் அவள் தந்தை நிறுத்தி இருக்க, அருமையான
பணியை விடவும் முடியாமல், ஆழ்மனதை ஆக்கிரமித்தவனை
விட்டொழிக்கவும் முடியாமல் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி போனாள்.
யார் இடத்தில்
யாருக்கொரு காதல் வருமோ ....
பூமி
எதிர்பார்த்து மழை தூறல் விழுமோ ...
காதல் வர கால்
விரல்கள் கோலம் இடுமோ ...
கை நகத்தில் பல்
கடிக்க ஆசைப்படுமோ...
எதுவுமே
நடக்கலாம் இறகின்றி இள மனம் பறக்கலாம் ...
என்ற பாடல்
வரிகளை பலமுறை கடந்து
வந்திருக்கிறாள்...
அப்பொழுதெல்லாம் உணராத பொருள், வீராவை கண்ட நாளிலிருந்து தனக்காகவே எழுதியது போல் தோன்ற, அவன் அவளுக்காக காத்திருந்த இடங்களில் அவள் அறியாமலேயே அவளது கண்கள் அவனை தேடிப் பார்த்தன.
நாடு
திரும்பும் நாள் நெருங்க நெருங்க, அலுவலகப் பணியும்
பெரும்பாலும் குறைந்து போக எதையோ பறி கொடுத்தது போல்
நிலையில்லா மனத்தோடு அலுவலகம் சென்று வருபவளுக்கு சிவா, அனுவின் அருகாமை தான் ஓரளவிற்கு நிம்மதியை
கொடுத்தது எனலாம்.
அவளோடு தங்கி
இருந்த மற்ற மூன்று பெண்களுக்கும் அவள் நிரந்தரமாக இந்தியா திரும்புவது கவலை அளிக்கவே செய்தது.
நால்வரும் எங்கோ
பிறந்து எங்கோ வளர்ந்து இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரு குடையின் கீழ், அந்த வீட்டினை பகிர்ந்து கொண்டு ஆகச்
சிறந்த நண்பர்களாக வாழ்ந்தனர் எனலாம்.
நால்வருமே
கண்ணியமான பதவியில் அறிவார்ந்த இலக்கோடு ,
ஒழுக்கமான வாழ்க்கை பாதையில் பயணித்ததால்,
அவர்களுக்கிடையே ஆகச்சிறந்த நட்பு முதல் நாளிலிருந்தே நிலவ
தொடங்கின.
திங்கள் முதல்
வெள்ளி வரை, நின்று
பேச கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள், வெள்ளி இரவும், சனி இரவும் ஒன்றாக அமர்ந்து அந்த வாரத்தில் நடந்தவைகளை சுவைப்பட பகிர்ந்து மகிழ்வர்.
நால்வரில்
யாருக்கேனும் பிறந்தநாள் என்றால், அன்றைய இரவு ஆட்டம் பாட்டம் தூள் பறக்கும் ...
சில சமயங்களில்
நால்வரும் சேர்ந்து விடுமுறை தினங்களில் வேறு சில நகரங்களுக்கு சுற்றுலா சென்று
வருவதும் உண்டு ...
இவ்வாறாக கடந்த
வண்ணமயமான நாட்களை , வாழ்க்கையின் ஆக சிறந்த தருணங்களாக அவளது மனம்
சேமித்து வைத்துக்கொண்டது பிற்காலத்தில் அசைபோட்டு பார்ப்பதற்காக.
அலுவலகத்தின்
கடைசி நாளும் வர, உடன் பணிபுரிந்த அலுவலக ஊழியரிலிருந்து, நிறுவனத்
தலைமை வரை அனைவரும் அவளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி
பிரியாவிடை கொடுத்தனர்.
கடைசியாக ஓரிரு
கணம் , தான் அமர்ந்து பணி செய்த இருக்கையில் இளைப்பாரி விட்டு
எழுந்தவளை, முகம் எங்கும் சோகமும், இதழில்
ஒட்ட வைத்த புன்னகையுமாய் வந்து சந்தித்தான் ஆல்பர்ட்.
இயல்பாக சில
நிமிடங்கள் அளவலாவி விட்டு அவள் விடை பெற எத்தனிக்கும் போது,
( அவன்
ஆங்கிலத்தில் பேசியதன் தமிழாக்கம்)
"ப்ரியா , உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன், உனக்கு தெரியும் என் பாட்டி ஒரு இந்தியர்னு... அவங்களை எனக்கு பிடிச்சதுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அவங்க ஃபாலோ பண்ணின இந்திய கலாச்சாரமும் ஒரு காரணம் .... எனக்கு உன்னை பிடிச்சதுக்கும் அதுதான் காரணமா இருக்கும்னு தோணுது .... உன்னை நான் அதிகம் விரும்புற இந்திய பெண்களோட பிரதிநிதியா பாக்கறேன் ... உன் வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்காக தான் நீ இந்தியா போறேன்னு எனக்கு நல்லா தெரியும் ... அது உனக்கு சிறப்பா அமையனும் கடவுளை வேண்டிக்கிறேன் ... ஒரு வேளை ஏதோ சில காரணத்தால,அதுல கஷ்டமோ ஏமாற்றமோ வந்தா, என்னை மறந்துடாத ... அதுக்காக எப்பவும் உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன்னு சொல்ல மாட்டேன்...
ஆனா நிச்சயம்
அடுத்த நாலு வருஷம் உனக்காக காத்துகிட்டு இருப்பேன் ... பாய் ப்ரியா ....." என லேசாக கண்ணீர் திரையிட,
அவளைப் பேசவே அனுமதிக்காமல் அவன் படபடத்து விட்டு மின்னலென விலகிச்
செல்ல, உறைந்து நின்றாள் பெண்.
ஒரு சில
நிமிடங்களில் அவளைத் தேடி அங்கு வந்த சிவா,
அனுவிடம் ஆல்பர்ட் பேசிச் சென்றதை பகிர்ந்து,
"ஆல்பர்ட்
நல்லவன் தான் ... ஆனா அவன் ஏடாகூடமா பேசிட்டு போனது மனசுக்கு கஷ்டமா இருக்குடா ...
ஏற்கனவே மேரேஜ் லைப் எப்படி அமையுமோனு பயந்துகிட்டு இருக்கேன் ... இதுல அவன்
இப்படி பேசிட்டு போனது ரொம்ப சங்கடமா இருக்கு .."
என்றாள் சிவாவிடம்
லேசான
கலக்கத்தோடு.
"பாப்பா
... அவன் சொன்னதையெல்லாம் மனசுல வச்சுக்காத ... அவன்
அவன் நாட்டு கலாச்சாரத்தை பத்தி சொல்றான் அவ்ளோ தான் ... இப்ப நம்ம நாட்டு கலாச்சாரமும் ஏறக்குறைய அது மாதிரி தான் ஆயிட்டு வருது
... இருந்தாலும் அந்த வார்த்தைக்கெல்லாம் நீ
முக்கியத்துவம் கொடுக்காத ... உன் நல்ல மனசுக்கு உன்
வாழ்க்கை ரொம்ப நல்லபடியா அமையப்போகுது ... எதையும்
நினைச்சு குழப்பிக்காம ஊர் போய் சேர வழியை பாரு... லீவு கிடைச்சா, உன் கல்யாணத்துக்கு நிச்சயமா வர பாக்கறேன் ..." என சிவா
சமாதானப்படுத்த, அனுவும் தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளை
பேசி அவளுக்கு ஆறுதலைத் தந்தாள்.
மறுநாள் அதிகாலை, தந்தையின் கெடுபிடியை மனதில் வைத்து
அனார்கலி சுடிதாரை அணிந்தவள் தன் பயணப்
பொதிகளோடு சிட்னி விமான நிலையத்தை வந்தடைந்தாள்.
அவளுக்கு
முன்னதாக அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தா சிவா, அனு அவளுக்கு பிரியா விடை கொடுக்க,
ஏகப்பட்ட பயம், குழப்பம் , எதிர்பார்ப்பை
தூக்கிச் சுமந்தவளை, இயந்திரப் பறவை தூக்கி சுமந்துக்கொண்டு
இந்தியாவை நோக்கி பயணித்தது.
ஆகச் சிறந்த
வாழ்க்கை காத்துக் கொண்டிருந்தாலும்,
வளையாமல் நதிகள் இல்லை, வலிக்காமல் வாழ்க்கை
இல்லை என்பது போல் வலியுடன் கூடிய சில வாழ்க்கைத்
தருணங்களை தூக்கிச் சுமந்தாக வேண்டிய கட்டாயமும் வாழ்க்கையில் வரப்போவதாக கட்டியம்
கூற, தீவிர மன சஞ்சலத்தோடு பயணமானாள் மங்கை .
ஸ்ரீ-ராமம்
வருவார்கள்....
Awesome as usual 💕💕💕💕💕
ReplyDeletethanks ma
DeleteNice
ReplyDeletethanks ma
DeleteSuperb sis...Enaku Sri Priya story padikum pothu matum unga story mathiri thonuthu... Sri Priya place la naan ungala than nenachitu padikuren... Take care of your health sis
ReplyDeletehahaha... thanks da... sure ma ...
Delete💓💓💓💓💓 missing You Sri & Ram. Next epi la rendu familyum kondu vanga Priya!!!💓💓💓💓💓
ReplyDeleteeppa thane veera story start agudhu... rendu familyum serndhu varum da
DeleteWow superb akka very nice moving 👌👌👌
ReplyDeletethanks ma
Delete