ஸ்ரீ-ராமம்-36

அத்தியாயம் 36 

 

வயது மூப்பிற்கும்வேகத்திற்கும் துளி கூட சம்பந்தமில்லாமல் மட மடவென போர்டிகோவை கடந்து, அனைவரும் குழுமியிருந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்தார் ரங்கசாமி.

ஏற்கனவே அவர் வரவை கண்ணாடியினூடே  பார்த்து அறிந்து கொண்ட லட்சுமிராம்சரண் , வீரா  உறைநிலையிலேயே இருக்க, உடல் மொழியில் கம்பீரத்தையும்பார்வையில் புதுவித தோரணையும் காட்டி சுற்றி இருந்தவர்களை ஒரு சுழல் பார்வை பார்த்துவிட்டு,

 

"என்ன தினேஷ்கடைசில இவங்க ரெண்டு பேரும் என்ன முடிவெடுத்து இருக்காங்க ..."  என்றார் பார்வையை ராம்சரணின் மீது பதித்து.

 

ரங்கசாமியின் வருகையே எதிர்பாராத ஒன்று என்னும் பட்சத்தில் , அவர் தினேஷிடம்  இயல்பாக விசாரித்த விதம்   வீரா, லட்சுமி , ராம்சரண், ஸ்ரீனி ஆகியோரை ஆச்சரியத்தில் ஆழ்ந்த,

 

"அது வந்து சார் ........" என தயங்கியபடி ஆரம்பித்த தினேஷ்,  அறையில் நடந்த உரையாடல்களாக ராம்சரண் சபையில் பகிர்ந்திருந்ததை அப்படியே மறுஒளிபரப்பு செய்து முடித்தான்.

 

அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு ஓரிரு கணம் அமைதி காத்தவர் பிறகு

 

"லட்சுமி, எதுக்கும்மா நீ டிவோர்ஸ் வரைக்கும் போன.... என்ன நடந்தது ..." என  ஆராய்ச்சி பார்வையோடு அவர் நோக்கபதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் மங்கை. 

 

அந்த இடத்தில், அந்த நேரத்தில் ரங்கசாமியின் வருகை அவள் எதிர்பார்க்காத ஒன்று. 

அதோடு நடந்து முடிந்த பிரச்சனை, இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வந்துவிடும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. 

 

தான் வீட்டை விட்டு வெளியேறிய செய்தி அறிந்ததுமே தன் கணவன் தன்னை தொடர்பு கொண்டு உரையாடுவான்... அவனிடம் பேசி நடந்த அசிங்கத்திற்கு தீர்வு காணலாம் என்றெண்ணியிருந்தவளை அவளது கணவன் கண்டு கொள்ளாமலேயே விட்டுவிட , வேறு வழி இல்லாமல் நீதிமன்றத்தை நாடும் நிலைமைக்கு அவள் தள்ளப்பட்ட போதும்வியாபார விஷயமாக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் தன் மாமனாரின் உடல் நிலையை கருத்தில் கொண்டேஅவரிடம் எதையும் கூறாமல் விட்டு விட்டாள்.

அதுமட்டுமல்ல அவர் ஊர்  திரும்பியதும், செய்தி அறிந்த மறுநிமிடமே அவளை தொடர்பு கொண்டு விளக்கம்  கேட்பார் என்று  அனுமானித்திருந்தவளுள் ஒருவித பயமும் தயக்கமும் இருக்கவே செய்தன.

 

அவளது அகம் புறம் அனைத்தையும் நன்கறிந்த கணவனே, அவள் தங்கையின் திருமணம் அருணாவின் குட்டிக் கலகத்தால் நின்று விட்டது  என்ற உண்மையை ஆதாரம் இல்லாமல் நம்ப மறுத்து விட்ட நிலையில், தற்போது அவள்  வீட்டை விட்டு வெளியேற காரணமான அந்த அசிங்கத்திற்கும் அவளிடம் ஆதாரம் இல்லை என்னும் போது மாமனாரிடம் மட்டும் எப்படி முறையிடுவாள் ...... 

 

ஆதாரமில்லாமல் அவள் கூறப்போகும் குற்றச்சாட்டை அவர்  மட்டும் எப்படி நம்புவார் என்ற தயக்கத்தில் இருந்தவளுக்கு அவரது திடீர் வரவுவியப்போடு கூடிய அதிர்ச்சியை அளித்திருக்க, பேச முடியாமல் திணறிப் போனாள் பாவை. 

 

அதோடு தன் கணவன் ராம்சரணின் மீது என்றுமே அவளுக்கு கோபம் இருந்ததில்லை ... வருத்தம் மட்டுமே ... அவள் பக்க நியாயத்தை கேட்க தவறி விட்டான் என்று. 

 

சரியாகச் சொன்னால் அவள் அந்த வீட்டை மட்டுமல்ல அவன் வாழ்க்கையை விட்டே வெளியேறி மூன்று மாதங்கள் ஆகியும் , அது அவனை  எவ்வகையிலும் பாதிக்காமல் இருந்ததுஅன்னோன்யமாக கருதிக் கொண்டிருந்த மண வாழ்க்கையின் அடி நாதத்திற்கே மரண அடியாக அவளை உணரச் செய்ய, உடன் ஏற்கனவே நடந்த சம்பவமும் தற்போது அவன்  நடந்து கொள்ளும் விதமும் சேர்த்து அவன் மீதான  ஒட்டுமொத்த நம்பிக்கையை குலைத்ததோடு  தன் மகளை தானே வளர்த்து ஆளாக்க வேண்டும்  என்ற வைராக்கியமும் இணைந்து கொண்டதால், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், தன் வீடு மற்றும்  பொருளாதார நிலையின் நிதர்சனத்தை முன்னிறுத்தியே  பூமிக்கு வராத அந்த சிசுக்களை கலைக்க சம்மதம் தெரிவித்தாளே ஒழியமற்றபடி ஒரு தாயாய்  தன்னுள் உதித்திருக்கும் இரட்டை சிசுக்களை அழிக்க அவளுக்கு துளி கூட மனமில்லை.

 

தற்போது அவன் இட்ட நிபந்தனைகளுக்கு அவள்  கட்டுப்பட்டது கூட குழந்தைகளை அழிக்காமல் பெற்றுக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருத்தியதால் தான் .

 

அதோடு அவளது  அடி மனதில் அணு அளவிற்கு  அபிலாஷை ஒன்றும் இருக்கவே செய்தது. 

 

என்ன தான் கணவன் மீது இருக்கும் வருத்தத்தில்  அவள் விவாகரத்துக்கு கோரி இருந்தாலும் கணவனுடன் கழிக்கப் போகும் இந்த ஐந்து மாத காலம் அவள் மனம் கொண்டிருக்கும் வருத்தங்களையும் வேற்றுமைகளையும் களைய உதவுவதோடு  தூய்மையான திருமண பந்தம் அமைய  வழிவகுக்கும் என்ற நப்பாசையும் எழுந்ததால் அவள் கணவன் எடுத்த முடிவிற்கு ஓரளவிற்கு விரும்பியே சம்மதம் தெரிவித்தாள் என்றும் சொல்லலாம். 

 

சரியாகச் சொன்னால், அவளுக்கு அவகாசம்  தேவைப்பட்டது. கணவனை விட்டு பிரிய துளிகூட மனம் இல்லை அதே சமயத்தில், நடந்து முடிந்ததை ஒரு கனவாக எடுத்துக்கொண்டு அவனோடு சேர்ந்து வாழவும் அவள் விரும்பவில்லை.

 

மனக்கசப்புடன் தன் மணாளனோடு வாழ விரும்பாமல் காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை படைத்தது என்பதால், காலத்தோடு பயணிக்க அவள்  முடிவெடுத்திருந்த நிலையில், மாமனாரின் திடீர் வரவும், இந்த கேள்விகளும் அவளை அசைத்துப் பார்க்கதன்னிலை விளக்கம் கொடுக்க முடியாமல் திண்டாடிப் போய் மௌனம் காத்தாள் பாவை .

 

" சரிம்மா, பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் ... எனக்கு உன்னோட மெச்சூரிட்டி லெவல் நல்லா தெரியும் ....சாதாரண விஷயத்துக்கெல்லாம் ஓவர் ரியாக்ட் பண்ற பொண்ணு  நீ கிடையாது... ஒரு மரம் சாதாரணமா முதல் அடில விழாது, பல அடிகளை  தாங்கி தான் அடியோடு சாயும் ... அது மாதிரி தான் ... நீ திடீர்னு இவ்ளோ பெரிய முடிவு எடுத்திருக்க மாட்டா... பல பிரச்சினைகளுக்கு அப்புறம் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கே வந்திருப்பேனு நம்பறேன் ... இந்த முடிவை ஏன் எடுத்த , எதுக்காக எடுத்தேங்கிறதை பத்தி பேச இப்ப  நேரமும் இல்ல அதுக்கான இடமும் இது இல்ல ...  இப்ப சரண் எடுத்திருக்க முடிவுக்கு நீ சம்மதிக்கிறியாம்மா.... அதை மட்டும் சொல்லு...."  என்றார் அவளை ஆவலோடு நோக்கி.

 

" ம்ம்ம்...." என்று அவள் சன்னமாக மொழிய,

 

"என்னமா இது அவன் தான் பைத்தியக்காரத்தனமா முடிவு எடுத்து இருக்கான்னா அதுக்கு நீயும் சம்மதிக்கிற ... இவன் கிட்ட குழந்தையை குடுத்துட்டு போறதுக்கா பத்து மாசம் ரத்தமும் சதையுமா சரியான சாப்பாடு தூக்கம் இல்லாம போராடி பெத்தெடுக்க போற...."  என்றவர் ராம் சரணை பார்த்து,  

 

"சரண்நீ பேசினது ரொம்ப தப்பு ...."என்றார் காட்டமாக. 

 

"நான் எதுவும் தப்பா பேசலயேப்பா..."

 

"குழந்தையை பெத்து கொடுத்ததும் , லட்சுமிக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்னு சொல்லி இருக்கியே அதை சொன்னேன் ..."

 

"நான் அவளோட சேர்ந்து வாழணும்னு தாம்பா ஆசைப்படறேன்.. ஆனா அவ தான் குழந்தையை கலைக்கணும்னு ஒத்த கால்ல நின்னதோட டிவோர்சும் கேட்டா .... வேற வழி தெரியல ... அதனால தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் ..."

 

" உண்டாகி இருக்கிற குழந்தையை காப்பாத்தி  வளர்க்க பணம் இல்லன்னு, அவ அப்படி ஒரு துர்பாக்கிய முடிவுக்கு வர நாம ரெண்டு பேரும் தான் காரணம் ... அவள பைனான்சியலி  இண்டிபெண்டன்டா  நீயும் வைக்கல .... அவ செஞ்சுக்கிட்டு இருக்கிற வேலையை மதிச்சு, இன்னை வரைக்கும் சம்பளம்னு நானும் எதுவும் கொடுத்ததில்ல... என் மருமக, என் ஆர்கனைசேஷன்ல பார்ட்னரா இருக்கணும்னு நினைச்சேனே ஒழிய , அவளுக்கான பொருளாதார சுதந்திரத்தை கொடுக்க தவறிட்டேன் ... " என முடித்தார் ஆதங்கத்தோடு.

 

ஓரிரு கணம் அங்கு அமைதி நிலவ,

 

"லட்சுமி கைக்குழந்தைய வச்சுக்கிட்டு இப்படி  ராவும் பகலுமா  கஷ்டப்பட்டு செஞ்சு முடிக்கிற வேலைக்கு,   நான் மாசா மாசம் சம்பளம் கொடுத்திருந்தாஅவ உன்னை விட அதிகமா சம்பாதிச்சிருப்பா ... இப்படி  குழந்தைகளை வளர்க்க பணம் இல்லையேனு தப்பான முடிவுக்கும் வந்திருக்க மாட்டா, நீயும் பணத்தைக் காட்டி குழந்தையை விலை பேச வேண்டிய நிலைமையும் வந்து இருக்காது ...." என கோபத்தோடு அவர் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது,

 

"அப்பாநான் ஏன் அப்படி ..."

 

"பேசாத சரண் .... உங்க ரெண்டு பேர் விஷயத்துல நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.... லக்ஷ்மி  கிட்ட இருந்து குழந்தையை பிரிச்சு எடுத்துக்கிட்டு போய் நீ நூறு நானிஸ்(Nanny) போட்டு பாத்துக்கிட்டாலும் பெத்த தாய் மாதிரி  வேற யாராலயும் குழந்தைகளை பாத்துக்க முடியாது ... அதனால பொறக்க போற குழந்தை லட்சுமி கிட்ட தான் இருக்கும் .... லட்சுமி கிட்ட தான் வளரும் ... அதோட அவ கேட்ட மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு சம்மதிச்சு இப்பவே டாகுமெண்ட்ல சைன் பண்ண கொடு..." என அவர் சரவெடியாக பேசி முடிக்ககுழம்பிப்போனவன் 

 

"அப்பாஎன்ன பேசறீங்க .... எனக்கு சுத்தமா புரியல.. நீங்க என்ன சொன்னாலும் நான் டிவோர்ஸ்க்கு சைன் பண்ண மாட்டேன் ..."

 

"ஏன் பண்ண மாட்ட..... நம்ம வீட்ல நடந்த  பிரச்சனையை விட மூணு மாசமா அவளையும் குழந்தையும்  நீ கண்டுக்காம இருந்தது தான் இப்ப பெரும் பிரச்சனையா இருக்குது ....  உனக்கு உண்மையிலயே அவ மேலயும் குழந்தை மேலயும் அக்கறை இருந்திருந்தா இப்படி இருந்திருக்க மாட்ட... இந்த பிரச்சனையை நீ ஹாண்டில் பண்ண விதம் ரொம்ப தப்பு சரண்... லட்சுமியே போன் பண்ணி பேசட்டும்னு ஈகோ பார்த்துட்டு இருந்திருக்க ..... அதுதான் அவ உன் மேல வச்சிருக்க நம்பிக்கையை ஒட்டுமொத்தமா அழிச்சிடுச்சி  ..."

 

"அப்பா,   நான் சிங்கப்பூர்ல இருந்தேன்பா... ஈகோ எல்லாம் இல்லப்பா ....

 

"பொய் சொல்லாத சரண்.... நீ பேசணும்னு நினைச்சிருந்தா  போன்லயாவது என்ன எதுன்னு விசாரிச்சிருக்கலாமே ..."

 

"நீங்க என்ன சொன்னாலும்நான் சைன் பண்ண மாட்டேன்ப்பா ..."

 

"உன் ப்ளான் படி , அஞ்சு மாசத்துக்கு அப்புறம் குழந்தை பிறந்ததும்மியூச்சுவல்க்கு ஒத்துக்கிட்டு சைன் பண்ணத்தானே போற.... அதை  இப்ப பண்ணா என்ன  ..."

 

"அது வந்து ..." எனத் தடுமாறினான். 

 

(அவனும் அந்த ஐந்து மாத காலத்தை, மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் பிசகுகளை  களைந்து  அதனை தக்க வைத்துக் கொள்ள எண்ணியே அப்படி ஒரு நிபந்தனையை விதித்திருந்தான்...)

 

இம்முறை அவனை வித்தியாசமாக  பார்த்தவர் ,

 

"உனக்கு வெக்கமே இல்லையா சரண் ... கல்யாணத்துக்கு அடிப்படையே நம்பிக்கை  தான் .... அது உன் மேல துளி கூட இல்லன்னு தான் லட்சுமி  டிவோர்ஸ்க்கே அப்ளை பண்ணி இருக்கா .... அவ உன்னை தன் வாழ்க்கைல இருந்து கம்ப்ளீட்டா  இராடிக்கேட் பண்ணனும்னு பார்க்கிறா... எல்லாம் தெரிஞ்சும், டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்னு அவ பின்னாடி போறது உனக்கு அசிங்கமா இல்ல ... இன்னைக்கு எங்க எல்லார் முன்னாடியும் உன்னை வேணாம்னு சொன்னவ நாளைக்கு கோர்ட்ல அவ்ளோ பேர் முன்னாடிஉன்னை வேணாம்னு சொல்லுவா அப்பவும்  இப்படித்தான் இருப்பியா ..... உனக்குன்னு செல்ப் ரெஸ்பெக்ட்டே கிடையாதா .... உன்னை வேணாம்னு  குப்பையா நெனச்சு அவ  தூக்கி எறிஞ்சிட்டா... இன்னமும் அவ உன் வாழ்க்கைல வேணும்னு நீ நினைக்கிறது முட்டாள்தனமா  இல்ல ..." என ரங்கசாமி பேச பேச, ராம் சரணின் முகம் அந்திகாலத்தில் மறையும் ஆதவனின் பந்து போல் அவமானத்தில் சிவந்து போக, யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் 

 

"தினேஷ்நான் மியூச்சுவல்க்கு சம்மதிக்கிறேன் .... எங்க சைன் பண்ணனும்னு சொல்லுங்க ..." என்றான் தினேஷை பார்த்து  கோபத்தை அடக்கிக் கொண்டு.

 

"தினேஷ்நீங்க சரண் கிட்ட சைன் வாங்கிநாளைக்கே டாக்குமெண்ட்ஸ கோர்ட்டுல  சப்மிட் பண்ணிடுங்க ... ஆலிமணி , குழந்தையோட கஸ்டடினு எந்த பிரச்சினையும் இல்லாததால, இன்னும் 2 மந்த்ஸ்ல டிவோர்ஸ் கிடைச்சிடும்னு நினைக்கிறேன் .... ஆம் ஐ ரைட் ..." என ரங்கசாமி படபடக்க 

 

"எஸ் சார் , கிடைச்சிடும்..." ---- தினேஷ். 

 

"தென் ப்ரோசீட் ..." என முடித்தார் கம்பீரத்தோடு.

 

ராம்சரண் தினேஷ் காட்டிய இடங்களில் கையொப்பம் இட்டு கொண்டிருக்க லட்சுமி கண்கள் கலங்கஉறைந்து நிற்கஸ்ரீனி சன்னமாக வீராவிடம்,

 

"டேய்இவரு நல்லவரா கெட்டவரா டா .... மனுஷன் பரபரப்பா வந்ததைப் பார்த்து ஏதாவது நல்லது செய்வாருனு பார்த்தாஎப்பவோ நடக்கயிருந்த டிவோர்ஸ இப்பவே வாங்கி கொடுத்துட்டாரே...."

 

"எனக்கும் புரியல டா ... ஆனா மனுஷன் வேற ஏதோ ஒரு பெரிய பிளான் வச்சிருக்காருனு மட்டும் புரியுது வெயிட் அண்ட் வாட்ச் ..."  என்றான் வீரா ஆர்வத்தோடு. 

 

தினேஷ் காட்டிய இடங்களில் எல்லாம் சரண் கையொப்பமிட்டு முடித்ததும்

 

"சரண்சைன் பண்ணி முடிச்சிட்ட இல்லையா .... இப்ப ஒரு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்க... இனிமே லட்சுமி என் மருமக இல்ல  என் மக... அவள லீகலா நான் தத்து  எடுத்துக்கிட்டு என் சொத்தை எழுதி வைக்கலாம்னு இருக்கேன் .... ஏன்னா  என் பேர குழந்தைகள் எனக்கு ரொம்ப முக்கியம் ... அதனால இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கேன் ...

 

இனிமே அவ என்னோட ஊட்டில தான் இருப்பா.... ஊட்டில இருக்கிற நம்ம வீடுஎஸ்டேட்ல ஒரு பாதி எல்லாம்  உங்க தாத்தா காலத்து பரம்பரை சொத்து அதுல உனக்கு  எப்பவும் போல முழு  உரிமை உண்டு நீ அங்க வரலாம் போலாம் ... ஆனா அங்க வரும் போது நீ என் மகனா மட்டும் தான் வரணும் இதுக்கு என்ன அர்த்தம்னு உனக்கு புரியும்னு நம்பறேன் ..."

என்றவர் லட்சுமியை பார்த்து,

 

"நீ உன் வாழ்க்கையை உன் இஷ்டம் போல என் மகளா அங்க நிம்மதியா வாழலாம் ... மத்தபடி நீ யாருக்கும்  மனைவி கிடையாதுங்கறதை மட்டும் மனசுல வச்சுக்க... இன்னும் ஒன்னு .... உங்க வீட்ல எல்லாத்தையும் பேசிட்டேன் ... இப்பவே நாம ரெண்டு பேரும் உங்க வீட்டுக்கு போறோம் ... உங்கம்மா ஸ்ரீ பாப்பாவோட கிளம்பி தயாரா இருப்பாங்க ..... நாம எல்லாரும் இப்பவே  ஊட்டிக்கு போறோம் சரியா ..." என முடித்தார். 

 

"வீராஏதோ புரியற மாதிரியும் இருக்குது புரியாத மாதிரி இருக்குது ... ஏன்டா இப்படி கொழப்புறாரு ...."  என ஸ்ரீனி வெகு சன்னமாக  படபடக்க,

 

"இப்பதான் புரியுது .... இவரு ஏன் இவ்வளவு பெரிய பிசினஸ் மேனா இருக்காருன்னு ..." என மென் புன்னகையோடு வீரா மொழிய 

 

" என்னடா புரியுது ..."

 

"மனுஷன் ஸ்டராங்கா ரிவர்ஸ் கியர் போட்டிருக்காரு..  இனிமே அவரோட ஆட்டம் பலமா இருக்க போகுது .... போகப்போக உனக்கும் புரியும் ..." என வீரா முடிக்கவும்ராம்சரண் 

 

"நான் கிளம்பறேன் ...." என தினேஷ்ரங்கசாமி மற்றும் தன் இரு நண்பர்களையும் ஒரு அரை வட்ட பார்வை பார்த்து கூறிவிட்டு, லட்சுமி இருக்கும் பக்கம் திரும்பி கூட பார்க்காமல் தன் காரில் ஏறி பறந்து விட்டான்.

 

மகன் கிளம்பிச் சென்றதும், அவன் கையொப்பமிட்டு சென்ற ஆவணங்களை சரி பார்த்தபடி தினேஷிடம் ரங்கசாமி கதைக்கத் தொடங்க,  முடிவு தன் கையில் இருந்த வரையில்வீராப்பும் வைராக்கியமாய் பேசியவள், தற்போது வாயடைத்து சிலையாய் உறைந்து போனாள்.

கண்கள் மட்டும் கணவன் கிளம்பிச் சென்ற பாதையின் மீதே நிலைத்திருக்க , இதயத்தை யாரோ  இரக்கமின்றி அறுத்தெறிந்தது போல் ரணமாய் எரிய, பொங்கி வந்து அழுகையை  முந்தானையை கொண்டு அவள் துடைத்துக் கொண்டிருக்கும் போது, வீரா அவளை நெருங்கி

 

"லட்சுமி , எனக்கு நீ வேற, அன்பு வேற கிடையாது ..... நான் உனக்கு எவ்வளவோ சொன்னேன், நீ என் பேச்சை கேக்கல .... இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு ...

இனிமே சரண் உன்னை எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டான் .... நீ நிம்மதியா இருக்கலாம் .... நீயும் சரணும் வாழ்ந்த இந்த மூணு வருஷத்துல அவனை எவ்ளோ புரிஞ்சிகிட்டேன்னு எனக்கு தெரியாது ... ஆனா எனக்கும் அவனுக்கும் 13 வருஷ நட்பு .... 

இந்த 13 வருஷ நட்புல நான் அவனை புரிஞ்சுகிட்ட அளவுக்கு கூட, மனைவியா நீ அவளை புரிஞ்சுக்கலனு நினைக்கிறேன் .... அவனுக்கு அதிகம் பேச தெரியாது ... குறிப்பா ரொம்ப நாசூக்கா தேன் தடவி எல்லாம் பேசவே வராது ...

ஆனா எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்ல மாட்டான் மனசுல பட்டதை நேர்மையா பேசுவான் .... குறிப்பா எல்லா நேரத்துலயும் எல்லா உறவுக்கும் உண்மையா இருப்பான்...

நீ வீட்டை விட்டு போனது தெரிஞ்சும் ஈகோ பார்த்துகிட்டு போன் பண்ணி விசாரிக்காமஉன்னை வந்து பாக்காம இருந்துட்டுதிடீர்னு  மூணு மாசம் கழிச்சு உன்னை தேடி வந்தான்னு குத்தம் சொல்றியே, நீ மட்டும் என்ன .... எல்லாத்தையும் சரியா செஞ்சுட்டதா நினைக்கிறியா ...  

அவன் இல்லாதப்ப அவன் வீட்ல ஒரு பிரச்சனை நடந்திருக்கு...  நீயும் வீட்டை விட்டு வெளியே வந்துட்ட ... அதுக்கப்புறம் நீ என்ன பண்ணி இருக்கணும் .... உடனே அவனுக்கு போன் பண்ணி என்ன நடந்தது ஏது நடந்ததுனு சொல்லி இருக்கணுமா இல்லையா  .... நீ சொல்லலயே ... அப்ப உனக்கு ஈகோ இல்லையா ....

 

 ஒரு வேளை நீ போன் பண்ணி சொல்லியும் அவன் கண்டுக்காம இருந்திருந்தா , இப்ப நீ எடுத்திருக்கிற முடிவு நூறு சதவீதம் சரின்னு நானே ஆதரிச்சிருப்பேன் ....

 

எதுவுமே செய்யாம அமைதியா இருந்துட்டுஅவன் மேல நம்பிக்கை இல்லன்னு அவனை மட்டும் குற்றவாளி ஆக்குறது சுத்த அநியாயமா தெரியல....

 

உனக்கு அவன் மேல நம்பிக்கையும் இல்ல, அவனுக்கு நீ இம்பார்ட்டென்சும்  கொடுக்கல...  அதனால தான் நீ நடந்த எந்த விஷயத்தையும் அவனுக்கு போன் பண்ணி சொல்லல ....

சோ , யூ ஆர் ஆல்சோ ஈக்குவலி ஈகோயிஸ்ட் ..." என கோபத்தில் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தவனிடம் லட்சுமி ஏதோ பேச முற்பட, கையை உயர்த்தி தடுத்தவன் ,

 

"உன் தங்கச்சி கல்யாணம்  நின்னு போனதுக்கு அருணா தான் காரணம்னு நீ சொன்னதுக்கு அவன் உன்னை நம்பாம விட்டுட்டான்னு சொல்ல போற.... ரைட் ....

 

அதுக்கு அவன் தன்னாலான எல்லா முயற்சியும் செஞ்சான் .... உங்க அம்மா கிட்ட பேசி விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு  அந்த காமாட்சி அக்காவை தேடி போய் பார்த்து பேசினான் .... வேற என்ன பண்ணனும்னு சொல்ற ... ஒரு மனைவியா எந்த ஆதாரமும் இல்லாம உன் பேச்சை நம்பனும்னு நீ எதிர்பார்க்கிற... உன் எதிர்பார்ப்பு சரி தான் ....

ஆனா நீ அவன் பக்கமும் யோசிச்சு பாக்கணும் .... 25 வருஷமா கூடவே வளர்ந்த தங்கச்சி , 31 வருஷமா பெத்து வளர்த்த அம்மா பொய் சொல்லுவாங்களானு அவன் யோசிச்சிதுல என்ன தப்பு இருக்கு ...

அதே சமயத்துலஅருணா மேல இருந்த  கோவத்துல தான் நீ அவ மேல பழி போடறேனு உன்னையும் அவன் குற்றம் சொல்லலையே....

சரியான ஆதாரம் கிடைச்சா தான் அருணாவையும், அவங்க அம்மாவையும் நிக்க வச்சு கேள்வி கேட்க முடியும்னு நினைச்சான்.. அது தப்பா....

100% பெர்பெக்டா எந்த மனுஷனும் இருக்க முடியாதும்மா .... மனுஷங்களே குறைகளால ஆனவங்க தான் ... அவன் உன்கிட்ட உண்மையா இருந்திருக்கான் ... உங்க குடும்பத்தாளுங்கள எந்த இடத்தலயும்  அவன் விட்டுக் கொடுத்ததே இல்ல .... உன் தங்கச்சியை அவன் தன் சொந்த தங்கையா நினைச்சு ராமலட்சுமி கல்யாணத்தை பத்தி என்கிட்ட நிறைய பேசி இருக்கான்... தெரியுமா ... அவளுக்கு நல்ல இடத்துல வரன் பார்த்து முடிச்சு கொடுக்கணும் டா ... நான் அந்த வீட்டுக்கு மாப்பிள மட்டும் இல்ல மகனும் நான் தான்னு  சொன்னான் ...

 

நல்ல யோசிச்சு பார் லட்சுமி, உங்க அப்பா அம்மா, தங்கச்சி, ஏன் உன்கிட்ட கூட குறைகள் இருக்கும் ... குறைகள் இல்லாத மனுஷனே கிடையாது ... தேடி தேடி அடுத்தவங்களோட குறைகளை பூத கண்ணாடி வச்சு பாத்தீங்கன்னா, இந்த பூமியில யாராலயும் யார் கூடவும் சேர்ந்து வாழவே முடியாது....

 

எல்லாரும் இங்க நல்லவங்களும் கிடையாது எல்லாரும் இங்க கெட்டவங்களும் கிடையாது.....

 

நல்ல குணங்களோட பர்சன்டேஜ் அதிகமா இருக்குறவங்க நல்லவங்க ...அவ்ளோ தான்... மத்தபடி அவங்க கிட்டயும் குறைகள் இருக்கத்தான் செய்யும்… சரண் மேல குற்றம் சொல்றதுக்கு முன்னாடி அவன் செஞ்ச ஒரு நல்லது கூடவா உன் மனசுல தோணல ... உன்னை ரொம்ப மெச்சூர்டுனு  நினைச்சேன் .... ஆனா நீ ரொம்ப  கிட்டிஷ்ஷா பிஹேவ் பண்ற ...

 

அவன் செஞ்ச சின்ன தப்புக்கு ரொம்ப பெரிய பனிஷ்மென்ட் கொடுத்துட்டஇனிமே அவனுக்கு நிம்மதிங்கிறதே கிடையாது .... நீயாவது நிம்மதியா இரு ..." என முடித்தவன் அவள் பதிலுக்கு காத்திராமல், சுமித்ராரங்கசாமி மற்றும் ஸ்ரீனியிடம் விடை பெற்று கிளம்பிய அடுத்த கணம்ரங்கசாமி  தினேஷுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, சுமித்ரா மற்றும் ஸ்ரீனியிடமிருந்து விடைபெற்று லட்சுமியை அழைத்துக் கொண்டு அவளது இல்லம் நோக்கி பயணமானார்.

 

ராம் சரணின் அலைபேசி அடித்த அடித்து அடங்கவீரா அழைக்கிறான் என்று தெரிந்தும் அதனை எடுக்காமல், பாதையிலேயே பார்வையை பதித்து காரை வெகுவேகமாக செலுத்திக் கொண்டிருந்தான். 

 

வீரா தொடர்ந்து அழைப்பு விடுக்கஒரு கட்டத்தில் சலித்துப் போனவன்  கோபத்தோடு அழைப்பை ஏற்று எரிச்சலுடன் 

 

"என்னடா எதுக்கு விடாம போன் பண்ற ..."

 

"எங்க போயிட்டு இருக்க ...."

 

" எங்கேயோ போறேன் ..."

 

"ம்ச் சரண்வண்டிய கிரீன் பார்க் ஹோட்டல்க்கு விடு... நான் பத்து நிமிஷத்துல அங்க வரேன் ..."

 

"எனக்கு பசிக்கலடா ..."

 

"எனக்கு பசிக்குது .... ப்ளீஸ் "

 

"சரி வா ... உனக்காக வெயிட் பண்றேன் ..." என முடித்தவனின் மனதில், மனையாளோடு கழித்த கடைசி இரவும் அதற்குப் பின்பான நிகழ்வும் அலை அலையாய் தோன்றிய அலைகழிக்க, அந்தக் கடைசி இரவின் தாக்கம் தான் இன்று அவள் சுமந்து கொண்டிருக்கும் வித்து என்ற நினைவும் உடன் வர, அவன் நினைவுப் பறவை மூன்று மாதத்திற்கு முன்பு பச்சைமலை புறத்தில் அவன் பெண்ணின் பிறந்தநாள் அன்று நிகழ்ந்ததை அசை போட்டு பார்க்க எண்ணி பின்னோக்கிப் பறந்தது. 

மகளின் பிறந்த தினத்தன்று கோவிலில் கறி விருந்து முடிந்ததும்வீராவின் குடும்பம் விடைபெற்ற பின்பு, அருணா கேட்டுக் கொண்டதால் அவள் குழந்தையை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் இருக்கும் பச்சை இலை வைத்தியரை பார்த்துவிட்டு இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பியவனின் மனதில்கடந்த மூன்று நாட்களாக மனையாளுடன் நடக்கும்  பனிப்போரை முடிவுக்கு கொண்டு வரும்  உத்வேகம் பிறக்க, வேகமாக தன் அறை நோக்கி பயணித்தவன் அறைக்கதவை நெருங்கும் போது 

அவன் மனையாள் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பது அட்சர சுத்தமாக கேட்க , ஆடாமல் அசையாமல் நின்று விட்டான் காளை.

 

"அம்மாநீ எங்க இருக்க  ...."

 

" ......"

 

"ஏம்மா குழந்தையை தூக்கிக்கிட்டு அதுக்குள்ள  தோப்பு வீட்டுக்கு போன..."

 

"........"

 

 

"சரி, உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்க போ ...  குழந்தையை என்கிட்ட விட்டுட்டு போயிருக்கலாம் இல்ல ..

 

" ....."

 

"என்ன...  குழந்தை சாப்ட்டாளா .... என்ன சாப்ட்டா..."

 

" ......."

 

" கேழ்வரகு கஞ்சியா .... ஐயோ ..."

 

"........."

 

"இல்ல இல்ல குழந்தைக்கு அது ஒத்துக்கும் .... காலையிலிருந்து விரதம் இருந்ததாலஅவளுக்கு சரியா பால் கொடுக்க முடியல ... .பசும்பால் குடிச்சிட்டதால  அவளும் குடிக்கல ... இப்ப ஒரு மாதிரி வலிக்குதும்மா ..."

 

"......."

 

"சரி சரி குழந்தை தூங்கட்டும் ... நான் மேனேஜ்  பண்ணிக்கிறேன் ..."  என்றவள் அழைப்பை துண்டிக்கும் போது அறைக்குள் நுழைந்தவன் உல்லாசமாய் அவளை நெருங்கி 

 

"ரெண்டு மூணு நாளா மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு பேசாம படுத்துற டி .... சாரியும் கேட்டுட்டேன்... ஆனா சமாதானம் தான் ஆக மாட்டேங்குற ..." என்றபடி நின்று கொண்டிருந்தவளை அலேக்காக தூக்க,

 

"ஐயோ கீழே இறக்குங்க .... எனக்கு இதெல்லாம் வேணாம்.... ப்ளீஸ் ..."

 

"ஆனா எனக்கு வேணுமே..."

 

" ஐயோ... நீங்க வேற நேரம் காலம் தெரியாம படுத்தறீங்க ..."

 

"எல்லாம் தெரியும் டிநீ உங்க அம்மா கிட்ட பேசிகிட்டு இருந்த மொத்தத்தையும் கேட்டுட்டேன் ... நேரம் ஆக ஆக நீதான் படப் போற...." என்று சரசமாக மொழிந்தவன் , அதற்கு மேல் அவளை பேச விடாது தன் இதழ் கொண்டுஅவள் இதழை முற்றுகையிட்டான்.

 

திமிறி விலக முயன்றவளின் பலவீனத்தை அவன் சரியாக கையாள, மங்கையின் எதிர்ப்புகள் செயலிழக்க தொடங்கின ....

 

அவள் அவஸ்தைகளை அறிந்து அருமருந்தாய் மாறிப்போனவன் அவள் வட்டமிடும் நெஞ்சில் துயில் கொண்டு....

போகத்திலும் மோகத்திலும் அவளை மூழ்கச் செய்து, முடிவிலா இன்ப வித்தையை காட்டி சாகசக்காரனாய் சரசம் புரிந்து, கன்னியின் தேகம் எங்கும் குறிகள் பதித்து ...

 

எப்போதும் கடைபிடிக்கும் பாதுகாப்பை மறந்து  புதியதோர் அனுபவத்தில் பதியம் போட்டு மங்கையோடு மயக்கத்தில் பயிலரங்கமே நடத்தி முடித்தான் ....

 

அன்றிரவு ஏதோ ஒரு உள்ளுணர்வின் தாக்கம் இருவருக்குள்ளேயும்  அலைமோத , வாழ்க்கையின் கடைசி நாள் போன்று அவளை கணமும் விடாது கூடிக் களித்தான்... கொண்டாடி தீர்த்தான் .......

 

தலை குலுக்கி சுயம் உணர்ந்தவனின் கண்களில் கண்ணீர் திரையிட்டு இருக்க, அன்றைய வித்து தான் இன்றைய விருட்சமாக வளர்கிறது என்ற எண்ணம் எழுந்த நிலையில்

உண்மையிலேயே அது கடைசி நாள் தான் போலும் இனி அவளோடும் குழந்தைளோடும் வாழும் வரம் தனக்கு அமைய போவதில்லையே... என்ற ஏக்கம் பிறக்க, விதியை நொந்தபடி உணவகத்திற்குள் காரை நிறுத்தினான். 

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

Post a Comment