ஸ்ரீ-ராமம்-35

 அத்தியாயம் 35

 

"என்னரெண்டு பேரும் விளையாடறீங்களா.... என்னமோ youtubeப பார்த்து சமையல் செய்ற மாதிரி  ரெண்டு பேரும் googleல பார்த்து சட்டத்த பேசிகிட்டு இருக்கீங்க ..." என காட்டத்துடன் தினேஷுடன் வந்த ஒரு ஜூனியர் பொங்க,

 

"MTP actஐ பத்திஅவர் சொன்னது 100 % கரெக்ட் ... அது ஃபால்ஸ்னு உங்களால ப்ரூவ் பண்ண முடியுமா..”  என பதிலுக்கு டாக்டர் சுமித்ரா  பொங்க, உடனே அந்த ஜூனியர் பதிலளிக்க முற்படும் போது 

 

"முத்து, கொஞ்சம் பேசாம இரு... ப்ளீஸ் ..."  என தினேஷ் அவசரமாக தடுத்தான்.

 

உடனே தினேஷின் மற்றொரு ஜூனியர் இடை புகுந்து

" மேடம்அவரு சொன்ன சட்டம் சரி தான் ... இல்லங்கல... ஆனா அத எப்ப, எங்க, எப்படி அப்ளை பண்ணனுங்கிறது எங்களுக்கு தான் தெரியும் ..."  என சுமித்ராவை பார்த்து கருத்து சொல்ல,

 

"ஐயோ ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா ..." என தினேஷ் தன்  ஜூனியர்களிடம்  சலித்துக்கொள்ள, சுமித்ரா அதற்கு  ஏதோ பதிலளிக்க, உடனே  ராம்சரண் வீரா மற்றும் ஸ்ரீனியிடம் 

"டேய், யாருடா இவங்க ...  எதுக்குடா இவங்களே பேசிக்கிட்டு இருக்காங்க ..." என்றான் வெகு சன்னமாக.

"நீ பேச வேண்டிய நேரத்துல பேசாம இருந்ததாலஇனிமே டாக்டர் , வக்கீல் தான் பேசுவாங்க ..." என வீரா வார

"இவங்க எல்லாம் எங்கிருந்துடா வந்தாங்க.... இன்னும் போலீஸ் ஒன்னு தான் வரல அதுவும் வந்துட்டாசினிமால வர்ற கிளைமாக்ஸ் மாதிரி கச்சிதமாயிடும் ..." ராம்சரண் குமுற,

 

"சரி, இப்ப உனக்கு என்ன தான் வேணும் ... அத சொல்லு..."

 

"நான் லட்சுமியோட தனியா பேசணும் ...."

 

"உன் அவசரத்தை பார்த்தா தனியா கூட்டிகிட்டு போய் கிஸ் பண்ண போற மாதிரியே இருக்கே  ..."  என வீரா வில்லங்கமாக கேட்க, கையை வாயில் பொத்திக்கொண்டு பிறர் அறியா குலுங்கி நகைத்த படி

 

"ஆமாண்டா ..." என்றான் ராம்சரண் சன்னமாக. 

 

"இல்லையே........, உன் சாமுத்திரிகா லட்சணத்தை பார்த்தா சாஷ்டாங்கமா கால்ல விழப்போறவன் மாதிரியும் ஃபீல் ஆகுதே...."

 

"டேய் கட்டிப்பிடிக்கிறனோ கால்ல விழறனோ... ஏதோ பண்ணிட்டு போறேன் .... க்ரவுட(Crowd)   கிளியர் பண்ணுடா ..."  ராம் சரண் சலித்துக் கொள்ள

 

"இவங்கள கிளியர் பண்றது கஷ்டம்... பேசாம நீ லட்சுமியை என் ரூமுக்கு கூட்டிட்டு போய் பேசு ..." என்ற ஸ்ரீனி மற்றவர்களைப் பார்த்து குரலை உயர்த்தி

"நீங்களே பேசிக்கிட்டு இருந்தா... எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் ... சம்பந்தப்பட்டவங்க பேசினா தானே சரியா இருக்கும் ..." என முடிக்க

"லட்சுமி நீ என்ன சொல்ற ..." என தினேஷ் தொடங்கும் போதே,

"வெயிட்முதல்ல அவங்க ரெண்டு பேரும் தனியா பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரட்டும் ... அப்புறம் நீங்க எல்லாரும்   பேசலாம்..." என வீரா முடிக்க, அடுத்த கணமே  ராம்சரண், லட்சுமி ஸ்ரீனியின் அறையில் தனித்து விடப்பட்டனர்.

 

முதல் ஓரிரு கணம் அமைதியில் கழிய,

 

"என்னடி பிரச்சனை, எதுக்காக நீ வீட்டை விட்டு போன ..."  என அவளை நெருங்கி நயந்து ராம்சரண் பேச்சை தொடங்கதுக்கத்தால் கனத்த தொண்டையை வெகுவாக செருமிக் கொண்டு ,

 

"உங்க வீட்ல நடந்த பிரச்சனையை  கேட்டு தெரிஞ்சுக்க உங்களுக்கு மூணு மாசம் தேவைப்பட்டிருக்கு ... இல்ல..  அதுவும் நான் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பினதுக்கு அப்புறம்அதுக்கு சரின்னு பதில் நோட்டீஸ்  அனுப்பிட்டு கோர்ட்ல வந்து மாத்தி பேசினதோடு  ரெண்டு வாரம் கண்டுக்காம இருந்துட்டு, முந்தா நாள்  திடீர்னு  என்னை தேடி வந்து பிரச்சனையை பத்தி கேக்குறீங்க ... உங்க மனசுல என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்கீங்க  ... " 

அத்தனை  நாட்களாக சேமித்து வைத்திருந்த கோபத்தை மளமளவென்று கொட்டித்தீர்த்தாள் பாவை .

 

"கண்டதையும் பேசாம முதல்ல என்ன பிரச்சனைனு சொல்லு டி..."  என அவன் காரியத்தில் கண்ணாக இருக்க எரிப்பார்வை பார்த்தவள்

 

"உங்க வீட்டுல நடந்த பிரச்சினை ஒரு பக்கம் இருக்கட்டும்நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க கைய புடிச்சுகிட்டு தானே வலது காலை எடுத்து வச்சு உங்க வீட்டுக்குள்ள வந்தேன்... அதோட அர்த்தம் என்ன தெரியுமா  ... நீங்கதான் அந்த வீட்டுல எனக்கு முதல் உறவு முழு  உறவுனு அர்த்தம் ... ஆபீஸ்ல அசோசியேட் வைஸ் ப்ரெசிடெண்ட்டா  இருக்கீங்க ஆனா  குறைந்தபட்சம் ஒரு பிரச்சனைனு வரும் பொழுது ரெண்டு தரப்பு நியாயத்தையும் கேட்கணும்னு உங்களுக்கு தெரியலயே ... உங்க அம்மா தங்கச்சி சொன்னதை மட்டும் கேட்டுக்கிட்டு, என்னை கம்ப்ளீட்டா அவாய்ட் பண்ணிட்டீங்களே ...

சரி , என்னை விடுங்க ....நமக்கு ஒரு வயசுல பொண்ணு இருக்கா அதாவது ஞாபகம் இருக்கா ... நீங்க அவ மூஞ்ச பாத்து மூணு மாசத்துக்கு மேல ஆகுது... இவ்ளோ நாளா கண்டுக்காம இருந்துட்டு , இப்ப திடீர்னு வந்து  பொண்டாட்டி  வேணும்,பொண்ணு வேணும்பொறக்க போற குழந்தைகள் வேணும்னு நீங்க சொன்னதும், உங்க பேச்சை நம்பி காதலால் கசிந்துருகி உங்க பின்னாடி வர நான்  ஒன்னும் பழைய முட்டாள் லட்சுமி இல்ல  ... எனக்கு உங்க மேல இருந்த நம்பிக்கை எல்லாம் எப்பவோ போயிடுச்சு ..."

என்றவளின் கண்கள் கண்ணீரால் குளமாககுரல் அளவுக்கு அதிகமாக தழுதழுத்து அவள் மன பாரத்தை பறைசாற்ற, அவளது கேள்விகள் ஒவ்வொன்றும், கூரான ஈட்டியை தணலில் காட்டி அவன் அடி மனதில் அடித்து இறக்கிய உணர்வைத் தர , துடித்துப் போய் விட்டான் காளை.

  

"நீ சொல்ற மூணு மாசம் நான் ஊர்லயே இல்லடி ... சிங்கப்பூர்ல இருந்தேன் ....வேணும்னா என் பாஸ்போர்ட்ட எடுத்து பாரு ...உனக்கு என் வேலைய பத்தி தெரியுமில்ல ..." என்றான் இறைஞ்சுதலாய்.

 

"நீங்க சொல்ற பதில் உங்களுக்கே அபத்தமா தெரியல ... எத்தனையோ தடவை நீங்க அப்ராட்ல இருக்கும் போது  எனக்கு whatsapp பண்ணி பேசி இருக்கீங்க .... அதே மாதிரி  பண்ணி என்ன பிரச்சனைனு விசாரிச்சிருக்கலாமே.....  ஏன் செய்யல…”  வழக்கறிஞராக மாறி அவள் தரப்பு வாதத்தை கனக்கச்சிதமாக முன் வைக்க, பதில் சொல்ல முடியாமல் தடுமாறிப் போனவன், உடனே சுதாரித்துக் கொண்டு,

 

"என்னை மட்டும் தப்பு சொல்றியே ... நான் இல்லாதப்ப வீட்ல நடந்த பிரச்சனைல வீட்டை விட்டு வெளியே போனவ நீ.... அப்ப நீ தானே எனக்கு போன் பண்ணி நடந்ததை முதல்ல சொல்லி இருக்கணும் .... நீ ஏன் சொல்லல ..." என்ற தன் தரப்பு வாதத்தை அவன் முன் வைக்க , பதில் சொல்ல முடியாமல் அவள் திணற,  

 

தான் வீட்டை விட்டு சென்ற செய்தி கணவனை எட்டினால், நிச்சயம் தன்னைத் தொடர்பு கொண்டு விசாரிப்பான்அப்போது நடந்ததை கூறலாம் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறாள் போலும் .... தான் தான் அவள் நம்பிக்கையை உடைத்து இருக்கிறோம்.... என்ற உண்மை , அவள் முகபாவமும், அந்த சூழ்நிலையும் முதன்முறையாக அவனுக்கு  உணர்த்தஉடனே 

"சரி தப்பு என்னோடதாவே  இருக்கட்டும்... சாரி ... " என்றான் சமாதானத்தை கையில் எடுத்து. 

 

"நீங்க சுலபமா இப்ப சொல்லலாம்  தப்பு உங்களோடதுன்னு... ஆனா என் இடத்துல இருந்து பார்த்தா தான் என் கஷ்டம் என்னன்னு உங்களுக்கு தெரியும் .... என் குடும்பம்  மாச சம்பளத்தை நம்பி இருக்கிற சாதாரண குடும்பம்னு உங்களுக்கு தெரியுமில்ல ... நானும் குழந்தையும் வீட்டை விட்டு போயிருக்குமே ... எங்களோட மத்த செலவுக்கு எல்லாம் என்ன பண்ணுவோம்னு கொஞ்சமாவது  யோசிச்சீங்களா  ... அஃப்கோர்ஸ் நான் எங்க அம்மா வீட்டுக்கு தான் போயிருக்கேன் இல்லன்னு சொல்லல  ஆனா நீங்க என்னைக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களோ, நான் எப்ப என் கல்யாணத்துக்காக வேலையை விட்டுட்டு  உங்க பின்னாடி வந்தேனோ அப்பவே நீங்க என்னோட சர்வைவளுக்கு பொறுப்பாயிட்டீங்க ...

மூணு மாசமா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்இனிமே  வாழ்க்கைல என்ன செய்யப் போறோம்னு தெரியாம தவிச்சிருக்கேன் ... இன்னமும்  தவிச்சுக்கிட்டு இருக்கேன்என் மேல இருக்கிற கோவத்துல 

 என் தங்கச்சியோட கல்யாணத்தை  உங்க அம்மாவும் தங்கச்சியும்  நிறுத்திட்டாங்க .... இப்ப வரைக்கும் நீங்க ஒத்துக்கலேன்னாலும் அது தான் உண்மை ... என்னால என் தங்கச்சி கெட்ட பேர் வாங்கினதோடு அவ கல்யாணமும் நின்னு போனதால , ஒரே வீட்ல இருந்தாலும், குற்ற உணர்வால அவளை  ஃபேஸ் பண்ண முடியாம கஷ்டப்படறேன்.... அதே மாதிரி , என்ன தான்  என் அம்மா அப்பான்னாலும், எவ்வளவு நாள் அவங்க நிழல்ல, ஆதரவுல நானும் என் குழந்தையும் வாழ முடியும்...

இங்க பாருங்க ... இந்த உலகத்துக்கே வராத சிசுக்களுக்காக  , நான் பெத்து  பாராட்டி சீராட்டி வளர்க்கிற என் பெண் குழந்தையோட  வாழ்க்கையை  பணையம்  வைக்க தயாரா இல்லை... என் ஃபினான்சியல் கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு .... என் அம்மா அப்பா தங்கச்சி கைய  எதிர்பார்த்து என்னால காலம் கடத்த முடியாது .... ஏற்கனவே நாலு மாசம் முடிஞ்சு போச்சு ... இது க்ருசியல் டைம் இப்ப நான் அபார்ட் பண்ணலேன்னா இனிமே பண்ணவே முடியாது ... அப்படி பண்ணாம அந்த ரெண்டு குழந்தைகளை பெத்துக்கிட்டு அதுங்களையும் நல்லபடியா பார்த்துக்க முடியாமஇருக்கிற பெண் குழந்தையும் நல்லபடியா வளர்க்க முடியாம தவிச்சு போயிடுவேன் ...

தயவு செஞ்சு எனக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நினைச்சீங்கன்னா, எந்த பிரச்சனையும் பண்ணாம டிவோர்ஸ் கொடுத்துடுங்க ...

 

உங்க பணம் காசு எனக்கு எதுவுமே வேண்டாம் ...  உங்க உதவியே இல்லாம என் பெண்ண நல்லபடியா வளர்த்து ஆளாக்குவேங்கிற நம்பிக்கை இருக்கு  ... எனக்கு அது போதும் ....ப்ளீஸ் ..."  கையெடுத்து கும்பிட்டு அவள் கதறி அழ, உள்ளுக்குள் வெகுவாக உடைந்து போனவன்

 

"ராட்சசி.... ராட்சசி ... எதுக்காக குழந்தையை கொல்லனும்னு ரத்த வெறி பிடிச்சு அலையற... சும்மா பணத்துக்காக தான் இந்த முடிவுக்கு வந்தேனு நொண்டி சாக்கு சொல்லாத ... நம்ம கிட்ட இல்லாத பணமா டி ... என் கூட வா அருமையா குழந்தைகளை பெத்துகிட்டு அழகா வாழலாம் ..."

"எனக்கு உங்க பணமும் வேணாம்... என் வயித்துல இருக்கிற உங்க  குழந்தைகளும் வேணாம் ... என்னை விட்டுடுங்க ..... அப்படி குழந்தை வேணும்னு நினைச்சா, உங்களுக்கு இருக்கிற வசதிக்கு வேற கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கோங்க...  ஒரு வேளை  கல்யாணம் வேணாம் குழந்தை மட்டும் வேணும்ன்னா, சரோகசிக்கு ட்ரை பண்ணுங்க ... என்னை விட்டுடுங்க ..." என விம்மியவள் ஓரிரு கணத்திற்கு பிறகு தொண்டையை செருமிக் கொண்டு, அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து

 

"நீங்க எப்படியோ தெரியாது.... ஆனா  நான் உங்க கூட வாழ்ந்த வாழ்க்கைல உடல், பொருள் , ஆவிசிந்தனை செயல், ஆன்மானு எல்லா விதத்துலயும்  100% உங்களுக்கு உண்மையா இருந்திருக்கேன் ...  அது உங்க மனசாட்சிக்கு நல்லாவே தெரியும் ..." முடித்தவளின் கண்களில் கண்ணீர் தாரையாக வழிய

 

"எனக்கு உன்னை மாதிரி எல்லாம், பெருசா  பேச வராதுஆனா நானும் உனக்கு 100% இந்த கணம் வரைக்கும் உண்மையா இருக்கேன் .... இருப்பேன் ... அது உன் மனசுக்கு நல்லாவே தெரியும் ..." என முடித்தான் தழுதழுத்த குரலில்.

 

"இனிமே நான் உங்க கூட வந்து வாழ்ந்தா ஒவ்வொரு கணமும் குழந்தையை வளர்க்கறதுக்காக , குறிப்பா பணத்துக்காக உங்க கூட வந்ததாயிடும் ... அதுல பழைய காதலும் இருக்காது அக்கறையும் வராது .... உங்க வீட்ல நடந்த பிரச்சினையை விட  அதை நீங்க ஹேண்டில் பண்ண விதத்தை வச்சு இனிமே உங்களோட வாழ்றதுல அர்த்தமே இல்லனு  முடிவு பண்ணிட்டேன்  .... "

 

"பிரச்சனை பிரச்சனைனு சொல்ற, ஆனா என்ன பிரச்சனைனு சொல்ல மாட்டேங்குற ...."

 

"ஏன், உங்க வீட்ல சொல்லி இருப்பாங்களே ... அவங்க சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு தானே மூணு மாசமா என்னை தேடி வராம இருந்தீங்க..."

 

"சரி அவங்க சொன்னது இருக்கட்டும்..  என்ன நடந்ததுன்னு நீ சொல்லு  "

 

"நீங்க அப்பவே கேட்டிருந்தா, எங்கிட்ட ஆதாரம் இல்லனாலும் உங்க மேல இருக்கிற கொஞ்ச நஞ்சம்  நம்பிக்கைல நடந்ததை சொல்லி இருப்பேன் ....  இப்ப உங்க மேல எனக்கு துளி கூட  நம்பிக்கையும் இல்ல நடந்து முடிஞ்ச அசிங்கத்துக்கு என்கிட்ட ஆதாரமும் இல்ல... இனிமே அத பத்தி பேசி பிரயோஜனமும் இல்ல... " என்றவளின் குரலில் உயிர் போகும் வலி தெரிய, துடித்து அழுபவளை ஆழ்ந்து நோக்கியவனுக்கு , அப்பொழுதுதான் பிரச்சனை மிகப்பெரியது என்ற எண்ணம் முளைத்ததோடு, உடன் அதனை அறிந்து கொள்ள முடியாததும் இணைந்து கொண்டு

 

"ஓ காட் ..." என்றான் கொதித்துப் போய்.

 

பிறகு பொறுமையை கடந்தவனாய்

 

"என் குழந்தை என் குழந்தைன்னு சொல்றியே அது உன் குழந்தையும் தானடி .."  என்றான் கோபத்துடன் கூடிய ஆற்றாமையோடு.

 

 

" ஆமா , அந்த எண்ணம் இருக்கிறதால தான் என் குழந்தையை வளர்க்க உங்க கூட பணத்துக்காக வர நான் தயாரா இல்லனு சொல்றேன் ..."

 

"சோ, என்னை விட்டுப் நிரந்தரமா பிரியணும்னு  முடிவு எடுத்துட்ட... ரைட் .."  என்றவனின் குரலில் அளவுக்கதிகமான வலி தெரிய,

 

"ஆமா ....." என்றாள் மனதை கல்லாக்கிக் கொண்டு. 

 

"அப்ப நமக்குள்ள சிம்பிளா ஒரு  டீல் பேசிக்கலாம் ... எனக்கு குழந்தைங்க வேணும் உனக்கு டிவோர்ஸ் வேணும் ... வேற ஒரு சரோகேட் வழியா என் குழந்தையை பெத்துக்க எனக்கு விருப்பமில்லை ... 

எனக்கு குழந்தைங்க உன்  மூலமா வேணும் , உன்னை மாதிரியே வேணும் .... அதனால நீ சுமந்துகிட்டு இருக்கிற என் குழந்தையை நல்லபடியா  பெத்து கொடுத்திடு .. நான் உனக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன் ... குழந்தையை பெத்து கொடுக்க மாட்டேன்னு அடம் பிடிச்சேன்னா இந்த ஜென்மத்துல உனக்கு டிவோர்ஸ் கிடைக்காது... கொடுக்க மாட்டேன் .... உனக்கு என்னை பத்தி நல்லா தெரியும்... எத்தனை வருஷமானாலும் இழுத்தடிப்பேன் .... 

 

அதைவிட இன்னும் அஞ்சு மாசம்  பொறுமையா இருந்து குழந்தைகள பெத்து கொடுத்திடு நான் உனக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன் ..." 

என்றான் ஆலகால விஷத்தை விழுங்குவது போல் வார்த்தைகளை விழுங்கி. 

"நான் எப்படி உங்களை நம்புறது ..." என்றவளை கண்களில் நீர் திரையிட விரக்தியாக பார்த்தவன்

"லீகலா டாக்குமெண்ட் ப்ரிப்பேர் பண்ணிக்கலாம் .... என்னை பொறுத்த வரைக்கும் இந்த நிமிஷத்திலிருந்து நீ என்னோட வைஃப் கிடையாது என் குழந்தைக்கு சரோகேட்... அவ்ளோ தான்....  அதனால உன் மேல எந்தவித எமோஷனல் அட்டாச்மென்ட்டும் எனக்கு கிடையாது வரவும் வராது ... நீ அதை 100%  நம்பலாம் ..."  என்றவன் குரலை செருமிக் கொண்டு அவளை வெகுவாக நெருங்கி,

 

"ஏன் எமோஷனல் அட்டாச்மெண்ட்னு சொல்றேன்னாபிசிகல் அட்டாச்மென்ட்க்கு ஆயிரம் பேர் கிடைப்பாங்க .... ஆனா என் செக்ஸுவல் டிசையர்ஸ்என்னோட எமோஷனல்  அட்டாச்மென்ட்டோட சம்பந்தப்பட்டது ... இதுவரைக்கும் நான் எமோஷனலா இன்வால்வாகி இருந்தது உன்கிட்ட மட்டும்தான்... இந்த நொடியில இருந்து அந்த உணர்வும் செத்துப் போச்சு ... 

 

அதனால இன்னும் அஞ்சு மாசம் முடிஞ்சதும் குழந்தையை பெத்து கொடுத்துட்டு திரும்பி பாக்காம டிவோர்ஸ்  வாங்கிட்டு போயிடு..."  என்றவன்  ஒரு ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு, அவள் விழிகளுக்குள் நோக்கி 

"ஸ்ரீ பாப்பாவை கூட உன்கிட்ட இருந்து பிரிச்சி என்னால கூட்டிட்டு போக முடியும்  ... ஆனா நான் அவ்ளோ கொடூரமானவன் கிடையாது  .... நம்ம மூணு வருஷ வாழ்க்கைக்கு அர்த்தமா ஸ்ரீபாப்பா உன் கூடவே இருக்கட்டும்.... மத்தபடி  இந்த டீல்க்கு ஒத்துக்கோ நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது ..." என முடித்தான். 

 

" ........................"

 

"உன் மௌனத்தை சம்மதமா  எடுத்துக்கறேன் ... இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் ... எனக்கு உன் மேல நம்பிக்கை கிடையாது  ... அதனால  நீ குழந்தை பிறக்கிற வரைக்கும் என் கூடத்தான் இருந்தாகணும்..”

ஒருவித அதிர்ச்சியோடு விருட்டென்று தலைநிமிர்த்தி பார்த்தவள்

 

"நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன் ...." என்றாள் வெடுக்கென்று.

 

 "நீ அந்த வீட்டுக்கு வர வேணாம் குழந்தை பொறக்கிற வரைக்கும் நாம ரெண்டு பேரும் தனியாவே  இருக்கலாம் ..."

இப்போது அவள் முகத்தில் செம்மை கலந்த வித்தியாச உணர்வுகள் விரவி ஓட ,

 

"நான் உங்க கூட தனியா இருக்க மாட்டேன் ..."  என்றாள் தலையை தாழ்த்திக் கொண்டு. 

 

"ஏன்....   மனசுக்குள்ள இடைவெளி  விழுந்ததுக்கப்புறம் ஒரே வீட்ல என்ன ஒரே பெட்ல படுத்தா கூட ஒன்னும் தோணாது..." என்றவன் குரலில் லேசான உல்லாசத்தை விதைத்து 

 

"உன்னால உன் மனச கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு பயப்படற ... ஆம் ஐ ரைட் பேபி .... ஆனா நான் மென்டலி ரொம்ப ஸ்ட்ராங் பர்சனாலிட்டி  .... நீ கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தாலும்நான் சொன்ன வாக்கை காப்பாத்துவேன் கவலைப்படாதே ..." என அவன் குலுங்கி சிரிக்க

 

"இந்த மாதிரி சிரிக்கிறத முதல்ல நிறுத்துங்க ...." என்றாள் கடுப்புடன். 

 

"ஏன்...நீ எப்பவும் சொல்ற மாதிரி  நான் சிரிச்சா இன்னும் அழகா இருக்கேன்... இல்ல ..."

 

"இந்த மாதிரியான பேச்சை எல்லாம் கேட்கிற நிலைமை வரும்னு தான் உங்களோட தனியா வர புடிக்க மாட்டேங்குது ...."

 

"வேற வழி இல்ல பேபி ... பேபி பொறக்குற வரைக்கும் நீ என்னோட தனியா இருந்து தான் ஆகணும் ... உங்க வீட்டிலயும்  உன்னை தனியா விட்டு வைக்க முடியாது ... என் வீட்டுக்கு நீ வர மாட்டேன்னு சொல்லிட்ட சோ நாம தனியா இருந்துதான் ஆகணும்…. இதுக்கு நீ சம்மதிச்சாஇப்பவே மியூச்சுவல்க்கு  சம்மதிச்சு நான் சைன் போடறேன் .... இல்லாட்டி போனா இந்த ஜென்மத்துல நீ எவ்ளோ போராடினாலும் உனக்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன் .... அதனால அடம் பிடிக்காம, பொறக்க போற குழந்தைக்கும் உனக்கும் எந்த சம்பந்தம் இல்லைன்னு சைன் பண்ணி கொடுத்துட்டுஒழுக்கமா அஞ்சு மாசம் என் கூடவே இருந்து குழந்தையை பெத்து கொடுத்துட்டு, திரும்பி பாக்காம போயிடு....  என்ன ஒன்னு, இந்த உலகத்துலயே கட்டின புருஷனோட குழந்தைக்கு சரோகேட்டா இருக்கிற முதல் பெண்ணும் நீ தான், தன் சொந்தக் குழந்தைக்கு சரோகேட்டா இருக்கிற முதல் அம்மாவும் நீ தான் ...." என்றான் வெறுப்போடு. 

 

அவன் வார்த்தைகளில் வகைத்தொகை இல்லாமல் வன்மமும் கோபமும் பொங்கி வழிந்தாலும்  கண்களும் குரலும் அனிச்சையாய் ஆகச் சிறந்த அன்னியோன்யத்தை அதன் அதன் வழியில் பறைசாற்றவே செய்தன. 

 

அங்கு வார்த்தை மோதல்களை விட உணர்வு மோதல்கள் அதிகமாக இருக்கஇருவருக்குமே அடுத்தவரிடம் ஆகச் சிறந்த அன்பும் காதல் உணர்வுகளும் கொட்டிக் கிடந்தாலும் , பொறுமையை முற்றிலும் மறந்து , மற்றவர்களை குத்திக் கிழிக்கும் நோக்கில் மனம் வந்தும் வராமல் , மனசாட்சியை அடகு வைத்துவிட்டு நாடகம் ஆடி தீர்த்தனர். 

 

"சோ டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் உனக்கு தெரிஞ்சிருச்சு இல்லையா ... சரி வாஇப்பவே  லீகலா டாக்குமெண்ட் ப்ரிப்பேர் பண்ணி மத்த வேலைகளை முடிச்சிட்டு, ரெண்டு பேரும் கிளம்பலாம் ..." என ஸ்ருதியற்று மொழிந்து விட்டு அவன் முன்னே நடக்கதாளாத சோகத்தை மனதில் சுமந்து கொண்டு தளர் நடையில் அவனைப் பின் தொடர்ந்தாள் அவன் பெண். 

 

அனைவரும் வெளியே காத்துக் கொண்டிருக்ககளை இழந்த முகத்தோடு எடுத்த முடிவை அவன் சொல்ல, சொல்ல அனைவரும் ஒரு கணம் உறைந்து விட்டனர்.

 

உடனே தினேஷ் லட்சுமியை பார்த்து,

 

"லட்சுமி நீ எடுத்திருக்க முடிவு சுத்த பைத்தியக்காரத்தனம்... உங்க அம்மாவ கலந்துக்காம இந்த மாதிரி முடிவு எடுத்தது ரொம்ப தப்பு ..."  என கோபப்பட

 

"குழந்தையை பெத்து நீ அவர்கிட்ட கொடுப்பியாம்... அப்புறம் டிவோர்ஸ் வாங்கிட்டு போயிடுவியாம்...  என்ன லைஃபை ரெண்டு பேரும்ரெண்டு மணி நேரம் சினிமானு  நெனச்சிடீங்களா   ..." என தன் பங்குக்கு சுமித்ரா பொங்க,

 

"டேய் என்னடா இது .... இதுதான் நீ தனியா பேசின லட்சணமா ...." என வீரா எகுற,

 

"நான் என்ன பண்ண முடியும் .... என்னால முடிஞ்ச வரைக்கும் எவ்வளவோ பேசி பாத்துட்டேன் ... அவளுக்கு டிவோர்ஸ் தான்  வேணும்னு ஒத்த கால்ல நிக்கிறா ... அதான் குறைந்தபட்சம் எனக்கு குழந்தையாவது நிலைக்கட்டுமேனு இந்த முடிவுக்கு வந்துட்டேன் ...."  என விரக்தியோட அவன் முடிக்க, அனைவரின் பார்வையும் லட்சுமியின் மீது வருத்தம் ,ஆற்றாமை கோபம் போன்ற உணர்வுகளின் கலவையாய் படியபதில் கூற முடியாமல் தலை குனிந்து கொண்டாள் மங்கை .

 

"சரி இது கூட ஒரு வகைல நல்லது தான் .... லட்சுமி அஞ்சு மாசம் உன் கூடவே தான் இருக்க போறா ... நிச்சயமா மனசு மாறிடுவா ... அவ அடிப்படையில ரொம்ப நல்ல பொண்ணு டா ...." என ஒருவாறு வீரா  நண்பனுக்கு ஆறுதல் கூறி, முடிக்கும் தருவாயில்  வீட்டு வாயிலில் சடாரென்று ஒரு கார் வந்து நின்றது .

 

காரின் சத்தம்  கவனத்தை கவர, அனைவரும் வீட்டு வாயிலில் பார்வையை பதிக்க 

"டேய், யாருடா இது சரணுக்கு சீனியர் சிட்டிசன் வேஷம் போட்ட மாதிரி ...." என்றான்  ஸ்ரீனி , காரில் இருந்து இறங்கி வெகு வேகமாக வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ரங்கசாமியை பார்த்து வீராவிடம் சன்னமாக. 

 

"சரணோட அப்பா டா ... அவரு எப்படி இங்க ..." என வீரா தன் பங்கிற்கு  அதிர்ச்சியும் ஆச்சரியமாய் வினவராம் சரணும் லட்சுமியும் அவரைக் கண்ட நொடியில்  சிலையாய் உறைய

 

"இப்பதாண்டா எல்லாத்தையும் பேசி முடிச்சோம் ... இவரு என்னடா கிளைமாக்ஸ்ல வர்ற  போலீஸ்  மாதிரி வராரு ... இவர் வர்ற வேகத்தை பார்த்தா இவரு என்ன பேச போறாரோ..."  என்றான் ஸ்ரீனி ஆதங்கத்துடன் கூடிய ஆயாசத்தோடு. 

 

மகனும் மருமகளும் ஆடும் ஆட்டத்தை, வேறு விதமாக அடித்து ஆட ரங்கசாமி களம் இறங்க, நடப்பது, நடக்கப் போவது ஒன்றுமே புரியாமல் குழுமியிருந்தவர்களுடன் குழம்பி நின்றனர் ராம்சரணும், லட்சுமியும். 

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Awesome as usual 💕👏❤️💖❤️

    ReplyDelete
  2. Saran appavadhu nalla mudiva sollatum.

    ReplyDelete
  3. Super o super sis.... Nice ud 👍 waiting for the next ud

    ReplyDelete
  4. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  5. Vaa thala! vaa thala!
    Intha kudumipidi sandaikku oru mudivu kattu pa!
    Mamannar attam aarambam!💓💓💓💓💓

    ReplyDelete

Post a Comment