ஸ்ரீ-ராமம்-34

அத்தியாயம் 34 

 

அபார்ஷனா... " என லேசான அதிர்ச்சியோடு கேட்ட மருத்துவர்

 

முதல் குழந்தையை  பார்த்துக்க முடியலங்கிறதெல்லாம் ஒரு ரீசனாம்மா ... அபார்ஷன் இல்லாம வேற ஆப்ஷன்  யோசிக்க கூடாதா... சரி... நீங்க வொர்க் பண்றீங்களா .." 

 

"டீச்சரா வொர்க் பண்றேன் மேம்..."

 

"ஓ டீச்சரா ..." என்றவர் 

வாங்க … ஸ்கேன் பண்ணி பாத்துட்டுஃபீட்டசோட (Fetus)க்ரோத் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு, மற்றதை  பேசலாம் ..." என்றபடி தன் அலைபேசியை ஞாபகமாக உடன் எடுத்துக்கொண்டு அவளுடன் அடுத்த அறைக்கு சென்றார். 

 

அங்கு அவளைப் படுக்க வைத்து ஸ்கேன் உபகரணத்திற்கான குழலில் மருந்துட்டு அவள் வெற்று வயிற்றில், இடவலமாக மெதுவாக நகர்த்தி  மானிட்டரில் குழந்தையின் அசைவை கண்டவரின் முகத்தில் சோடியம் வெள்ளொளி பரவ,

 

"குழந்தையோட ஹாட் பிட் கேட்குதா ..."

 

ஏற்கனவே உள்ளுக்குள் குமுறி கொண்டிருந்தவளுக்கு , குழந்தையின் இதயத்துடிப்பை கேட்டு, துக்கம் தொண்டையை அடைத்ததோடு கண்கள் பனிக்க,

 

"ம்ம்ம்ம்..." என்றாள் கமரிய  குரலில்.

 

"இன்னொரு விஷயம் சொல்லட்டுமா ..."

 

ட்வின்ஸ்  கன்சீவ் ஆயிருக்கீங்க ..."  என்று அவர் முடித்ததும் , ஆச்சரியத்தில் அவள் கண்கள் விரிய, கேட்டுக் கொண்டிருந்த ராம்சரணின் கண்கள் ஆனந்தப் பெருக்கில் அல்லாடஅவன் உள்ளுணர்வு உணர்த்திய சூட்சமத்தை எண்ணி வியந்தபடி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி திளைத்தான். 

ஏற்கனவே குற்ற உணர்வும் பாசமும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில்தற்போது  இரட்டைக் குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறோம் என்ற செய்தி அவள் மன அழுத்தத்தை வகைத்தொகை இல்லாமல் கூட்ட, குழப்பமும் கலக்கமுமாய் முடிவெடுக்க முடியாமல் உறைந்து போனாள் பெண். 

 

 "கிட்டத்தட்ட 17 வீக்ஸ்  தாண்டிடுச்சு ம்மா .... ரெண்டு ஃபீட்டசோட  க்ரோத்தும் ரொம்ப நல்லா இருக்கு ..." என்றவர் ஒரு கணம் தாமதித்து

 

"இனிமே  அபார்ஷன் பண்றது ரொம்ப ரொம்ப  ரிஸ்க் ... அதோட உங்க யூட்ரஸ் வேற ரொம்ப  வீக்கா இருக்கு ...   ஏற்கனவே உங்களுக்கு ஒரு அபார்ஷன்  நடந்திருக்கு , அப்புறம் குழந்தை பிறந்து இப்பதான் ஒரு வருஷம் ஆகுது இல்லையா ... சோ நாட் பாசிபிள் மா..."

 

"வேற வழியே இல்லையா மேம் ..."

 

"இல்லம்மா... இனிமே அபார்ஷன் பண்ணா உங்க உயிருக்கே ஆபத்து கூட வரலாம்... அதைவிட நீங்க குழந்தையை பெத்துக்கிறதே பெட்டர்னு  சொல்லுவேன் ...  உங்க யூட்ரஸ் வீக்கா இருக்கிறதோட, ட்வின்சுங்கிறதால நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் இல்லன்னா ப்ரீ மெச்சூர் டெலிவரில கொண்டு போய் நிறுத்திடும் ... அதனால டெலிவரி ஆகற வரைக்கும் படி ஏறாதீங்க ரொம்ப நேரம் நிக்காதீங்க ... நல்லா ரெஸ்ட் எடுங்க ..

ஒன்னு பண்ணுங்க, இத எல்லாத்தையும் உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி ஒரு நல்ல முடிவா எடுங்க… ஸ்கூலுக்கு பிரேக் எடுத்துக்கோங்க ... ஏற்கனவே நாலு மாசம் முடிஞ்சு போச்சு ... இன்னும் ஒரு அஞ்சு மாசம் பொறுத்துக்கிட்டிங்கன்னா ஒன்னுக்கு ரெண்டு குழந்தை அழகா பொறந்திடும் ... முதல் குழந்தையை பார்த்துக்க வீட்ல யாரும் இல்லனா ஒரு மெய்டு வச்சுக்குங்க... ப்ராப்ளம் சால்வுடு... இதுக்கு போய் யாராவது குழந்தையை அபார்ட் பண்ணுவாங்களா .... நான் சொல்லனும்னு இல்ல உங்களுக்கே தெரியும்.... இப்ப எல்லாம், கன்சீவ் ஆகுறதுக்காக, ஃபெர்டிலிட்டி ஹாஸ்பிடல்ல லாக்ஸ் அண்ட் லாக்ஸ் செலவழிக்கிறாங்க... உங்களுக்கு இயற்கையா அமைஞ்சிருக்கு ... அதை என்ஜாய் பண்ணுங்க ... தேவையில்லாம அபார்ஷனுக்கு போய்உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் ஆபத்த வரவழைச்சிக்காதீங்க....." 

மருத்துவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும்  மனதில்  கல்வெட்டாய் படியமுடிவெடுக்க முடியாமல் குழம்பிய மனநிலையில் கலங்கிய விழிகளோடு காணப்பட்டவளை பார்த்து,  

 

"இதை நான் சொல்ல கூடாது ... சட்டப்படி தப்பும் கூட  வேற வழி இல்லாம சொல்ற ம்மா.... ஏற்கனவே உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு இல்லையா... இந்த ட்வின்ஸ் ரெண்டும் பையனா பொறக்க சான்சஸ் அதிகம் ..." என ஆசை வார்த்தை வேறு கூறி முடித்தார். 

 

பொதுவாக சுமித்ரா நோயாளிகளிடம் அவர்களது குடும்ப விஷயங்களைப் பற்றி பேசி ஆராய்ந்து அறிவுரை வழங்கும் ரகம் கிடையாது.

  

தன் தம்பி ஸ்ரீனி ராம்சரணின் குடும்பத்தை பற்றி கூறியிருந்ததை மனதில் வைத்துஅவளை வெளிப்படையாக பேச வைக்கவும், அன்னியோன்யமான தம்பதிகள் பிரிந்து விடக்கூடாதுஅதே சமயத்தில் இந்த உலகிற்கு புதிதாக வரவிருக்கின்ற குழந்தைகளும் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அவ்வாறு பேசி முடித்திருந்தார். 

 

அவள் கண்களில்கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, புடவை முந்தானையில் துடைத்து சரி செய்தவள்,

 

"சாரி மேம்உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை மறைச்சிட்டேன்... எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் டிவோர்ஸ் கேஸ் கோர்ட்ல நடந்துகிட்டு இருக்கு ... என் குடும்ப ரொம்ப சாதாரண குடும்பம் ... நான் வேலைக்கு போனா தான் என் குழந்தையை பார்த்துக்க முடியும் ...

 

நீங்க சொல்ற மாதிரி இப்ப இருக்குற நிலைமைல என்னால வேலையை விட்டுட்டு ரெஸ்ட் எடுக்க  முடியாது .... எனக்கு வேற சோர்ஸ் ஆஃப் இன்கமும் கிடையாது ...."

 

"உன் ஹஸ்பண்டுக்கு தெரியுமா நீங்க கன்சிவா இருக்கிறது ..."

 

"தெரியாது மேம்..."

 

"என்னம்மா இது ... அவருக்கு தெரியாம நீங்க குழந்தையை அபார்ட் பண்ணீங்கன்னா , நாளைக்கு சப்போஸ் தெரிஞ்சிருச்சின்னா பெரிய லீகல் இஷூவா ஆயிடுமே ம்மா ..."

 

அவள் அமைதி காக்க,

 

"சரிஉங்க ஹஸ்பண்ட் எங்க ஒர்க் பண்றாரு ..."

 

ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு அதில்,

 

"ஏவிபியா இருக்காரு மேம்..."

 

"ரொம்ப ரொம்ப பெரிய  பொசிஷன்ல இருக்காரு ... பின்ன என்னம்மா பிரச்சனை .... எப்படியும் முதல் குழந்தை  உங்க கஸ்டடில தான் இருக்க போகுது , அதுக்காக ஆலிமணி அப்ளை பண்ணி இருப்பீங்க ... அது போதுமே ... எதுக்காக தேவையில்லாம உங்க ஹெல்த்துல ரிஸ்க் எடுக்கறீங்க ..."

 

அடுத்தவரின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைத்து, அறிவுரை என்ற பெயரில்  அபத்தமாக பேசுவது தெரிந்தாலும், நிலைமை கைமீறி விடக்கூடாதே என்று எண்ணத்தில் சுமித்ரா கேட்டு வைக்க

 

"நான் அவர்கிட்ட எந்த பணமும் கேட்கல ... அலிமணியே வேண்டாம்னு சொல்லிட்டேன் மேம் ...."

 

"ஏன் கேட்டா கொடுக்க மாட்டாரா ... ரொம்ப அப்பியூசூவ், அக்ரசிவ் பர்சனா ..."

 

"அய்யய்யோ ... அப்படியெல்லாம் இல்ல மேம்...  ரொம்ப ரொம்ப நல்லவரு..." 

 

"பின்ன என்ன தாம்மா பிரச்சனை ... ரொம்ப நல்ல மனுஷன்னு சொல்ற ... பின்ன எதுக்காக கோர்ட்ல டிவோர்ஸ்  கேஸ் நடக்குது.... இது உங்க ப்யூர் பர்சனலா இருந்தாலும்கரண்ட் சினாரியோவுக்கு ரொம்ப ரிலேட்டடா இருக்கிறதால இந்த கேள்வியை  கேட்கறேன்..." 

 

"அவர் மட்டும்  நல்லவரா இருந்து பிரயோஜனம் இல்ல .... அவங்க குடும்பத்து ஆளுங்க சரியில்ல மேம்... அதனாலதான் அவர்கிட்ட இருந்து

எந்த பணமும் வாங்காம என் குழந்தையை நானே வளர்க்கணும்னு வைராக்கியத்தோட இருக்கேன்..” என்ற மழுப்பலான பதிலில் முடித்தாள் மங்கை. 

 

"இவ வைராக்கியத்துல தீய வைக்க ... என்ன பேச்சு பேசறா பாத்தியாடா .... ஓங்கி அரையணும் போல தோணுது ... நான் லட்ச கணக்குல ஓடி ஓடி பணம் சம்பாதிக்கிறதே அவளுக்கும் குழந்தைகளுக்கும் தான் ... அத புரிஞ்சுக்காம, குழந்தையை வளர்க்க பணம் இல்லன்னு குழந்தையை கலைக்க வந்திருக்கா … எல்லாம் என் தலை எழுத்து ...

என் குழந்தை என் குழந்தைங்கிறாளே, நான் இல்லாம எப்படி அவளுக்கு குழந்தை வந்தது ... விட்டு பிடிக்கலாமுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் ... எப்ப கன்சிவா இருக்கானு தெரிஞ்சதோஇனிமே விட்டா இவள பிடிக்கவே முடியாது ...

இவங்க வீடு இருக்கிற ஏரியா, கொஞ்சம் மேடா இருக்கும் ... ஆட்டோல போறது  கூட கஷ்டம் ... ஏற்கனவே இவ யூட்ரஸ் வீக்கா இருந்ததால ஒரு முறை அபார்ஷன் ஆயிடுச்சு .... இனிமே அவளை அவங்க வீட்டுல விட்டு வெச்சாஅவளுக்கும் என் குழந்தைகளுக்கும் டேஞ்சர் ... இன்னைக்கே இப்பவே ஒரு முடிவு எடுத்து அவளை என் கூடவே கூட்டிக்கிட்டு போயே ஆகணும் ... அதான் எனக்கு, அவளுக்கு ,என் பொண்ணுக்கு , பொறக்க போற என் ரெண்டு குழந்தைகளுக்கும் நல்லது ..." 

 

அப்படி ஒரு சூழ்நிலை அமையும் தருவாயில் அது கைநழுவி போகப் போவது தெரியாமல் தன் நண்பர்களிடம் கொதித்து குமறிக் கொண்டிருந்தான் ராம்சரண். 

 

"சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க .... உங்க ஹஸ்பண்ட் நல்ல மனுஷன்னு சொல்றீங்க ...நல்ல பொசிஷன்ல இருக்காரு நல்லாவும் சம்பாதிக்கிறாரு... அவரோடு சேர்ந்து வாழ்றத பத்தி நீங்க யோசிக்கலாம் இல்ல... அட்லீஸ்ட் இந்த குழந்தைகளுக்காகவாது நீங்க  ரெண்டு பேரும் சேர்ந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கலாமே ..." --- சுமித்ரா. 

 

" நீங்க சொல்றதெல்லாம் சரிதான்...  நாய்க்கு முழு தேங்கா ஒட்டாதுங்கிற மாதிரி தான் என் நிலைமை மேம்  ... என் பிரச்சினையை சொன்னா யாருக்கும் புரியாது... ஆனா ஒன்னு, அவர் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும ... யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழட்டும்  ... என் வருமானம் கம்மினாலும்  என் பொண்ணுக்கு நானே அம்மாவும் அப்பாவுமா இருந்து என் சக்திக்கு என்னெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செஞ்சி அவளை நல்லபடியா வளர்த்து ஆளாக்குவேங்கிற  நம்பிக்கை இருக்கு... எனக்கு அது போதும்  மேம்..."  என்றவளின் குரல் உடையகேட்டுக் கொண்டிருந்தவனின் கண்களும் பனிக்க,  

 

"நான் இவ விஷயத்துல பண்ண ஒரே தப்புஈகோ பார்த்துகிட்டு மூணு மாசம் காலம் கடத்தினது தான்… இவ வீட்டை விட்டு போனது தெரிஞ்சதுமேஇவள பாத்து பேசி இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது .... அவளுக்கு எப்பவும் என்னை பிடிக்கும் டா... இப்பவும் என்னை ரொம்ப பிடிச்சிருக்கு ..... ஆனா ஏதோ ஒரு பிரச்சினையால பிரியனும்னு பாக்கறா....  கேட்டாலும் சொல்லவும் மாட்டேங்கறா... ஆனா ஒன்னு மட்டும்  நிச்சயம் என் லட்சுமி இல்லாத வாழ்க்கையை என்னால அதிக நாள் வாழ முடியாது  ...." என  முடித்தான் கமரியக் குரலில். 

 

நண்பனின் கோபம்இறுக்கம், கம்பீரத்தையே பார்த்து பழகி இருந்தவனுக்குஅவனுடைய கலக்கம் மனதை பிசைய ,

 

"அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது டா ... இப்பவே போய் லஷ்மி கிட்ட பேசி பிரச்சனையை முடி ..." என வீரா அறிவுறுத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் 

 

"மேம், கடைசியா கேட்கறேன் .... வேற ஆப்ஷனே இல்லையா ..." என்றாள் பெண் நயந்து. 

 

"நோ வே... நீங்க இந்த குழந்தையை பெத்துக்கறது தவிர வேற வழியே இல்லம்மா ..."

 

"சரி மேம் நான் கிளம்புறேன் ..." என்றவளின் பார்வையில் ஒருவித விரக்தியும் அவசரமும் தெரிய, அதனை படித்தவர்,

 

"ஒரு நிமிஷம்நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே ...."

 

"உங்களால முடியாதுன்னு சொல்லிட்டீங்க....  எனக்கு வேற வழி தெரியல ...  வேற டாக்டரை தான் பார்த்தாகணும் ..." 

 

எதிர்காலத்தில் விதி  இருவரையும் உறவாக்கப் போகிறது  என அறியாமல் அந்த கணத்தோடு  உரையாடல் முடிய போவதாக எண்ணி வெடுக்கென்று பேசினாள்.

 

"இங்க பாருங்க ... உங்க ஹெல்த் கண்டிஷனுக்கு எந்த ஒரு நல்ல டாக்டரும்உங்களுக்கு அபார்ஷன் பண்ண மாட்டாங்க ....  அதோட கோர்ட்ல கேஸ் இருக்கும் போது உங்க கணவருக்கு தெரியாம இப்படி செய்யறது லீகலா ரொம்ப பெரிய பிரச்சினையை கொடுக்கும் ... சோ உங்க முடிவ மாத்திக்குங்க ..." என அவள் மனதை மாற்றஅவர் பொய்யுரைத்து முடிக்க

 

"ஓகே டாக்டர் நான் கிளம்பறேன் ..." என்றாள் அவசரமாக. 

 

"ஒரு நிமிஷம் ... பக்கத்துல தான் என் வீடு  .... அங்க  வெயிட்டிங் ஹால்ல கொஞ்சம் வெயிட் பண்ணுங்க .. ஒரு பத்து நிமிஷத்துல வரேன் ... ப்ளீஸ் " என்றவரின் பேச்சை தட்ட மனம் இல்லாமல், செவிலியரை பின் தொடர்ந்து மருத்துவமனையை ஒட்டி இருந்த சுமித்ராவின் இல்லத்தில் உள்ள  காத்திருப்பு அறைக்குச் சென்றமர்ந்தவள் தன் வழக்கறிஞர் தினேஷை தொடர்பு கொண்டாள்.

 

"சார்ஆபீஸ்ல இருக்கீங்களா உங்கள பாக்கணும் ..."

 

"வெளியே இருக்கேன் ஸ்ரீலட்சுமி ..... 10 நிமிஷத்துல ஆபீஸ் வந்துருவேன் ... ஆமா நீ எங்க இருக்க ..."

 

அவள் தான் இருக்கும், சுமித்ராவின் இல்லத்தின் அடையாளத்தை சொன்னாள்.

 

" ஓ நம்ம ஸ்ட்ரீட்ல தான் இருக்கியா.. சரி  சொல்லு ...."

 

" சார்.......... எனக்கு ஒரு டவுட் ..."

 

" சொல்லும்மா ..."

 

"அது வந்து ... கோர்ட்ல டிவோர்ஸ் கேஸ் இருக்கும் போதுஹஸ்பண்டுக்கு தெரியாம குழந்தையை அபார்ட் பண்ணலாமா ..."

 

" பண்ணலாமே ..."

 

"லீகல் இஷூஸ் ஏதாவது வருமா ... ஐ மீன் அதனால டிவோர்ஸ் கிடைக்க லேட் ஆகுமா ..."

 

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ... ஆமா யாருக்காக கேக்குற ..."

எதிர்முனை அமைதி காத்ததும்,

"ஏய் லட்சுமிஉனக்காகவா கேட்கற..."

"......"

இங்க பாருஅப்படி ஏதாவதுன்னா, உங்க வீட்டுக்காரர் ராம்சரணை கூப்பிட்டு பேசலாம்.. தேவையில்லாம  முட்டாள்தனமா முடிவெடுக்காத ..." என அவன் எதிர் முனையில் அலற, நிர்தாட்சண்யமாக அவள் அழைப்பை துண்டித்தாள்.

 

 

அதற்குள் சுமித்ரா ராம் சரணிடம் ,

"நாங்க பேசினதெல்லாம் கேட்டு இருப்பீங்க .....  அவங்களுக்கு உங்க மேலயோ உங்க மூலம் உருவான உங்க குழந்தைங்க மேலயோ  கோவமோ வெறுப்போ இல்ல ...

 

இன்ஃபாக்ட்  உங்க மேல நிறைய நிறைய லவ் இருக்கு ... கொஞ்சமே கொஞ்சம் வருத்தமும் இருக்கு மெடிக்கல் டெர்ம்ல சொல்லணும்னாஏதோ ஒரு ட்ராமால (Trauma - அதிர்ச்சி ) இருந்து வெளிய வர முடியாம உள்ளுக்குள்ளேயே கஷ்டப்படறாங்கன்னு தோணுது ...

 

அவங்க இந்த குழந்தைகளை அபார்ட்  பண்ணனும்னு நினைக்கிறது கூட, முழுக்க முழுக்க அவங்களோட ஃபினான்சியல் கண்டிஷன் தான் காரணமா தெரியுது ... மற்றபடி வேற எந்த நோக்கமும் இருக்கிறதா தெரியல ..

 

அதோட அவங்க ஹெல்த் கண்டிஷன் படு வீக்கா இருக்கு .... ரெண்டு குழந்தைங்கள கன்சிவா இருக்கிற இந்த நிலைமைல, முதல் குழந்தைக்கு ஃபீட் பண்ணிக்கிட்டும் இருக்காங்க .... 

 

சோகொஞ்சம் கொஞ்சமா அவங்க  பிசிகல் ஹெல்த், மெண்டல் ஹெல்த்த இம்ப்ரூவ் பண்ண பேலன்ஸ்டு டயட் ,  ரெஸ்ட்ட  ஃபாலோ பண்ணா தான் இனிமே அவங்களுக்கு நல்லது ....

 

பணத்துக்கு ஆசைப்பட்டுஎதை வேணாலும் செய்யற டாக்டர்ஸ் இருக்காங்க.... அந்த மாதிரியான ஆளுங்கள தேடி அவங்க போயிடக் கூடாதுனு தான் என் வீட்ல இருக்க சொல்லி இருக்கேன்  ...  போய் அவங்க கிட்ட பொறுமையா சமாதானம் பேசுங்க ..." என முடித்தார்.

 

எப்பொழுதுமே கௌரவம், கர்வம், கம்பீரம் ஆகியவற்றை அணிகலன்களாக அணிந்து வலம் வருபவனுக்குதன் மனையாளின் பேச்சு, மருத்துவரின் ஆலோசனை  எல்லாம் நண்பர்களுக்கு முன்பு பெருத்த அவமானத்தை தரமுதன்முறையாக தன் மனைவியை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்பதை உள்பூர்த்தியாக உணர்ந்தான்.

 

அதுவும் அவள் தன் பொருளாதார நிலையை சுட்டிக்காட்டிகுழந்தையை கலைக்க முற்பட்டது, தன் தன்மானத்திற்கு கிடைத்த மரண அடியாக கருதியதோடு , திருமணமாகி மூன்று வருடங்களாகியும் அவளுக்கான  தனிப்பட்ட பொருளாதார நிலையை உயர்த்த தான் எவ்வகையிலும் முயற்சிக்கவில்லை என்ற குற்றமும் புரிந்தது. 

 

"சரண்நீ போய்  லட்சுமி கிட்ட சமாதானம் பேசு  ... நானும் வீராவும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வரோம்...." என ஸ்ரீனி சொன்னது தான் தாமதம், அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனது கார் சுமித்ராவின் இல்லத்தை அடைந்தது.

அவன் காரை காம்பவுண்டுக்கு வெளியில் நிறுத்திவிட்டுமுன் தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த  தோட்டக்காரர் , கார் ஓட்டுநரை கண்டு கொள்ளாமல், புயல் வேகத்தில்  போர்டிகோவை கடந்தவன்ஒரு கணம் நின்று காத்திருப்பு அறையைத் தேட, இடது பக்கத்தில் கண்ணாடி கதவுகளான அறையில் , பல நாற்காலிகளுக்கு நடுவே , தனிமையில் மெதுவாக நடை பயின்று கொண்டிருந்த தன் மனையாளை கண்டதும் , ஒரு கணம் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு அந்த காத்திருப்பு அறைக்குள் நுழைந்தான்.

 

அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தவள், எதிர்பாராத தன்னவனின் வரவில் முதலில் அதிர்ந்துபிறகு பேரானந்தத்தில் திளைத்த படி தன்னை மறந்து உறைந்து  நின்றாள்.

 

அவளது குழப்பமான மனநிலை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆழமான காதல் அலை கடல் போல் பொங்கி வழிய, மனதார காதலை சொல்லி கரைந்து உருக முடியாமல் பேதையவள் காயம் பட்ட மனதோடு மௌனம் காக்க, கண்ணாடி போல் மன உணர்வுகளை காட்டும் அவள்  கண்களை பார்த்தபடி அவன் அவளை வெகுவாக நெருங்க, அவன் தாபக்காற்றில் இளகும் அனிச்சம்  மலராய் குழைந்து நின்றாள் பெண் .

கண்களுக்கு இதமான மஞ்சள் நிறத்தில் கருத்த பச்சை நிற சிறு சிறு பூக்கள் கொண்ட மென்மையான பருத்தி புடவையில், படிய வாரி பின்னிய நீண்ட கூந்தல்,   வகுட்டு குங்குமம், நெற்றி குங்குமம், கூர்ய நாசியில்  ஒற்றைக்கல் மூக்குத்திகாதில்  சிறிய ஜிமிக்கிகழுத்தில் மெல்லிய சங்கிலி, தாலிக்கயிறு சகிதமாக வெகு சாதாரணமாக இருந்தவள்அவன் கண்ணிற்கு மட்டும் தேவலோக மங்கையாகவே காட்சியளித்தாள்.

 

முந்தானையை மூன்று பட்டையாக அள்ளி போட்டிருந்ததால் , மேடிட்ட வயிறை அது அழகாக மூடி இருக்க, அதனைக் கண்களால் வருடியவனுக்கு  காதலும் பாசமும் கரைந்து ஓட, கனத்த இதயத்தோடு மேலும் நெருங்கி நின்றான். 

 

அவன் முகத்தை தவிர்க்கும் நோக்கில் பார்வையை தாழ்த்தியிருந்தவளுள், அவனது பார்வையின் தீட்சண்யம், மறக்க நினைத்த உணர்வுகளை தட்டி எழுப்ப, விலக எண்ணி விழி மலர்த்தியவளுக்கு  கலைந்த சிகைகளைத்த முகம், கண்களைச் சுற்றி கருவளையம்இரண்டு நாட்களாக முகச்சவரம்  செய்யாத தாடி, அலுவலகத்தில் இருந்து நேரடியாக வந்திருப்பதை பறைசாற்றும் வகையில் கருப்பு நிற பேன்ட்ல் இன்சர்ட் செய்யப்பட்ட வெண்ணிற  முழுக்கை சட்டை என பொலிவற்று  அவன் காணப்பட்டாலும், அவள் கண்களுக்கு மட்டும்  எப்பொழுதும் போல் கந்தர்வனாக காட்சியளிக்க

 

" என்ன டி அப்படி பாக்கறா...." என்றான் அவளைக் கொஞ்சும் பொழுதும் கோபப்படும் பொழுது மட்டும் பயன்படுத்தும் 'டி' போட்டு புருவங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக உயர்த்தி விஷமமாக.

 

"நீங்க எப்படி இங்க ......." என்றாள் ஒருவித குற்ற உணர்வும் ஆச்சரியமாய். 

 

"இது என் ஃப்ரெண்ட் ஸ்ரீனியோட வீடு ..."

 

அவள் அவனை புதிதாய் பார்க்க, அதனைக் கண்டு கொள்ளாமல் 

 

"ஆமா .. என் புள்ளைய என்ன பண்றதா உபதேசம் ..."

 

"எந்த புள்ள ..." 

 

"ஆங்.... கைப்புள்ள ..."

 

அவன் கேட்க வருவதை புரிந்துகொண்டு கையும் களவுமாக சிக்கிக் கொண்டதை எண்ணி அவள் தலை குனிய

 

"சும்மா புரியாதது மாதிரி நடிக்காத .... நீ கன்சீவா இல்ல..." 

 

"இல்லயே......."  என்றாள் பெருந்தயக்கத்தோடு  வெகு சன்னமாக. 

 

" சும்மா புளுகாதடி உண்மைய சொல்லு ..."

 

"ஆமா  கன்சிவா இருக்கேன்... ஆனா உங்க குழந்தை கிடையாது ..." என்றாள் வெடுக்கென்று வெகு சன்னமாக .

 

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவன் 

 

"இதுக்கு நான் கோபப்பட்டு உன்னை அடிக்கணும்பிரச்சனை பண்ணனும் அதானே எதிர்பார்க்கிற ... நோ பேபி ட்ரை சம்திங் நியூ ....

 

நான் பேமிலி பிளானிங் பண்ணிக்காத  வரைக்கும் ... நீ எப்ப கன்சீவ் ஆனாலும் அது என் குழந்தை தான் ... அதுல எனக்கு என்னிக்குமே சந்தேகம் வராது போதுமா ...

 

அதைவிட நீ ப்ரக்னண்டா இருக்கேன்னு நீ கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே , அதுக்கு காரணமான எனக்கு என் குழந்தையோட உணர்வு எட்டிடுச்சு .... சோ, நீ  தாய்மையை உணர்றதுக்கு முன்னாடி தந்தையா நான் உணர்ந்துட்டேன் ..."

 

எப்படி இச்செய்தியை அறிந்து கொண்டான் என புரியாமல் அவன் பேசுவதைக் கேட்டு அவள் உறைந்து நிற்க, அவள் ஆடையோடு தன் ஆடை உரசும் வகையில் நெருங்கி நின்றுஅவள் மென்கழுத்தில் தன் வெப்ப மூச்சை செலுத்தி,

 

"இன்னும் உனக்கு எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் வேணும்னா சொல்லவா ..... என்னைக்கு.... எங்க .... எப்ப... எப்படி....நடந்ததுனு..." 

 

வெட்கத்தால் அந்திவானமாய் சிவந்த தன் முகத்தை  அவள் தலை குனிந்து மறைக்க விழைவதை ரசித்துப் பார்த்தவன் ,

 

" லட்சுமிஎன்ன பிரச்சனையா இருந்தாலும் சொல்லு... சால்வு பண்ணிடலாம் ... எனக்கு நீ நம்ம குழந்தைங்க வேணும் ... ப்ளீஸ் ..." என கரகரத்த குரலில் தன்னை கட்டுப்படுத்திய படி அவன் மொழிந்து கொண்டிருக்கும் போது , வெளியே பலத்த வாகன சத்தம் கேட்டது.

 

இருவரும் திரும்பிப் பார்க்கும் போதுதினேஷ், அவனுடைய 2 ஜூனியர்களோடு இருசக்கர வாகனத்திலும், ஸ்ரீனி, வீரா தத்தம் கார்களிலும் வந்திறங்கஅவர்களைப் பின்தொடர்ந்து மருத்துவமனை பக்கவாட்டில் இருந்து சுமித்ராவும் நடந்து வரஅனைவரையும் ஒரு சேர கண்டு இருவரும் குழம்பி நின்றனர்.

 

சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே தன் ஜூனியர்களோடு வந்த தினேஷ்லட்சுமியை கதவு கண்ணாடியினூடே பார்த்துவிட்டு வேகமாக காத்திருப்பு அறைக்குள் நுழையகொலை வெறியோடு  அவனை ராம்சரண் எதிர்கொள்ள , சுமித்ரா , ஸ்ரீனி ,வீரா என ஒருவர் பின் ஒருவராக  அந்த அறைக்குள் பிரவேசித்த மறுநொடி,

 

"லட்சுமி நீ போன்ல சொன்னது ... உனக்காகத்தானே “ என்றான் தினேஷ் பரபரப்பாக. 

 

ஆமாம் என்பது போல் அவள் தலையாட்ட,

 

"ஓ... மேடம் பிரச்சனையை லீகலா ஃபேஸ் பண்ணனும்னு உங்கள கூப்பிட்டு இருக்காங்களா ..." என ராம்சரண் தினேஷை பார்த்து பொங்க

 

"அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க ...  நான் சொல்றத கேளுங்க ..." என தினேஷ் அவனைப் பார்த்து சமரசம் பேச விழைய,

 

"நீங்க சொல்றத நான் எதுக்காக கேக்கணும் ...  கோர்ட்ல கேஸ் இருக்கும் போது எனக்கு தெரியாம என் குழந்தையை அபார்ஷன் பண்ணனும்னு நினைக்கிறது லீகலா தப்பு ..... " என ராம்சரண் குரலை உயர்த்தி பேசிக் கொண்டிருக்கும் பொழுது 

 

"அப்படி ஒன்னும் சட்டம் சொல்லலையே ..." என்றாள் லட்சுமி அழுத்தத்துடன் அமர்த்தலாக.

 

ராம்சரண்தினேஷ் உட்பட அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து நிற்க, உடனே 

 

"நீங்க டீச்சரா தானே ஒர்க் பண்றீங்க ... திடீர்னு சுப்ரீம் கோர்ட் லாயர் மாதிரி பேசுறீங்க ..." என்றான் ராம்சரண் லட்சுமியை பார்த்து  நக்கலாக. 

 

"மெடிக்கல் டெர்மினேஷன் ஆஃப் பிரக்னன்சி ஆக்ட் என்ன சொல்லுதுன்னாஒரு பெண் தான் சுமந்து கொண்டிருக்கும் கருவை கலைப்பதற்கு அவள் கணவனின் அனுமதி பெறத் தேவையில்லைனு சொல்லுது ...(Medical Termination of pregnancy act doesnot contain any provision requiring the women to obtain her husband's permission for terminating the pregnancy)  என ஆங்கிலத்தில் அவள் கூறி முடிக்க, ராம் சரணும் வீராவும் தினேஷை முறைக்க ,

 

"நான் எதுவுமே சொல்லலங்க... அவங்களா  பேசறாங்க ...." என தினேஷ்  பம்ம, உடனே லட்சுமி தன் அலைபேசியை எடுத்து கூகுள் மூலம் அறிந்து கொண்டதை ராம்சரணிடம் காட்டஅவள் காட்டிய செய்தித்தாள் கட்டுரையில் அவன் ஆழ்ந்து போனான். 

"லட்சுமிசட்டம் என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் ... அத எல்லாம் தூக்கிப் போட்டுட்டுஉன் வாழ்க்கையை நல்லபடியா வாழ பாரு ..." என தினேஷ் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் போது  

"மேடம் , கொஞ்சம் பக்கத்துல வாங்க ..." என லட்சுமியை ராம்சரண் வெற்றி புன்னகையோடு அழைக்க ,

புரியாமல்  அவன் அருகில் சென்றவளிடம் ,

 

"சட்டத்துல எப்பவுமே உங்களுக்கு சாதகமா இருக்கிறத மட்டும் தான் படிப்பீங்களா ... மத்தத படிக்க மாட்டீங்களா ... "

 

" என்ன ...."

 

" ஒக்க சார்  ச்சதுவண்டி ..."

 

" புரியல ..." என்றாள் மெய்யாகவே. 

 

"ம்ம்ம், முழு சட்டத்தையும் ஒரு தடவை படி டி ..." என்றான் காட்டத்தோடு.

 

அவள் முன்பு படித்த தகவலோடு,

 

20 வாரங்களுக்கு குறைவான கரு கலைப்பு செய்வதற்கு, பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் ஒருவர் , சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் நிலையை பரிசோதித்து விட்டுகருக்கலைப்பு செய்வதற்கு அவர் தகுதியாக இருக்கிறார் என மருத்துவ அறிக்கை வழங்க வேண்டும்.  அதன் அடிப்படையில் தான் கருக்கலைப்பு நடத்தப்பட வேண்டும்.  மருத்துவ அறிக்கை இல்லாமல் நடத்தப்படும் கரு கலைப்பு பெரும் குற்றமாக கருதப்படும் ...

 

(The termination of a pregnancy of length less than 20 weeks with the opinion of a registered medical practitioner will be required. The law requires the doctor to assess if these condition are fulfilled then only they legally allowed to perform an abortion, without these conditions is considered as crime.....)

 

"இப்ப நான் எங்க வரனு உனக்கு புரிஞ்சிருக்குமே உன்னை  டெஸ்ட் பண்ண டாக்டர் சுமித்ராகொடுத்த ரிப்போர்ட்ல உனக்கு அபார்ஷன் பண்ணக்கூடாதுனு சொல்லி இருக்காங்க ... அப்படி பண்ணா உன் உயிருக்கே ஆபத்துன்னு சொல்லி இருக்காங்க ... இதை காட்டி நான் கோர்ட்ல ஸ்டே  வாங்கிடுவேன் ...

அதையும் மீறி வேற யாராவது உனக்கு அபார்ஷன் பண்ண ட்ரை பண்ணா அந்த ஹாஸ்பிடல் மேல லீகலா கேஸ் பைல் பண்ணி அதோட லைசன்ஸயே  கேன்சல் பண்ண வச்சிடுவேன்... இனிமே ஒரு கணம் கூட உன்னை தனியா விட மாட்டேன் டி ...."  என்றவன் பேச பேச, ஸ்ரீலட்சுமி உறைந்து நின்றதை காட்டிலும்தினேஷும் அவனது இரண்டு ஜூனியர்களும் சிலை போல் உறைந்து நின்றனர்.

 

ஸ்ரீ- ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Senma sis waiting for next ud 🥰🥰🥰🥰🥰🥰

    ReplyDelete
  2. பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என.....❤️paaahhh.....finaly vandhuduchi episode..next epi ku wait pannra sis🫣🫣🫣

    ReplyDelete
  3. thanks a lot ma....naalai marunaal next epi varum

    ReplyDelete
  4. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  5. Wow superb ud sis.... Finally twins... Ramcharan happy, we also happy.. story summa rocket speed la poguthu sis. Take care of your health too.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Waiting for the past 2 days ma'am..Next episode please?

    ReplyDelete
    Replies
    1. Page open panni parthu parthu aemandhu pora sis epa episode varum??

      Delete
    2. இன்னும் 15 மினிட்ஸ்ல அப்லோட் பண்ணிடுவேன் மா.

      Delete

Post a Comment