ஸ்ரீ-ராமம்-33

அத்தியாயம் 33

 

கோயம்புத்தூர் விமான நிலையத்தில், புது தெம்போடு வந்திறங்கிய வீரா பயண பொதிகளை சுமந்து கொண்டு, டாக்ஸியில் பயணித்து வீடு வந்து சேர்ந்ததும்,

 

அண்ணன் வந்திருக்கான் போல ... 

என வாசலில் நிறுத்தியிருந்த அவன் அண்ணன் சத்யனின் மாமனார் காரை பார்த்து ஊகித்தபடிஉள்ளே நுழைந்தவனை  உணவு மேஜையில் காலை உணவு அருந்திக் கொண்டிருந்த சத்யன் லேசான புன்னகையோடு,

 

" வா பாண்டியா  ...." என்றான்.

 

சத்யன் சிங்கப்பூரில் வசித்தாலும், பணி நிமித்தம் காரணமாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இந்தியாவிற்கு குடும்பத்தோடு வந்து ஒரு வார காலம் தங்கியிருந்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டவன்.

 

வீட்டை சுற்றி முற்றி பார்த்த வீரா

 

எங்க அண்ணிகுழந்தைகளை காணோம் ... ஏதாவது பிரச்சனையா ..." என்றான் யோசனையாக. 

 

"டேய் .... குழந்தைகளோட அவ அவங்க வீட்ல இருக்கா .... சாயங்காலம் போய் கூட்டிகிட்டு வருவேன் ... சும்மா எப்ப  பார்த்தாலும் பிரச்சனையானு  கேட்கிறதை முதல்ல நிப்பாட்டு .. குடும்பம்னா நாலும் இருக்கும் டா ...." என துர்வாச முனிவராய் அவன் கணத்தில் மாற 

 

வந்ததும் சிரிச்சானே.... ஒரு வேளை திருந்திட்டானோனு  நினைச்சேன்... இப்ப இல்ல தெரியுது ... அண்ணாத்த  ஃபுல் ஃபார்ம்ல இருக்கான்னு... என மனதுக்குள் தன்  தமையனுக்கு குவாலிட்டி சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருந்தவனை , பார்த்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்த அவன் தாய் அகல்யா,

 

"வா பாண்டியா ....  இன்னைக்கு ஊருக்கு வந்துடுவேனு போன்ல சொன்னையே .. இன்னும் ஆள காணமேனு இப்பதான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..” என்றார் வாஞ்சையாக.

 

தன் மனைவியின் குரல் கேட்டுதோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அவன் தந்தை பொன்னம்பலம், அந்த வேலையை அப்படியே  விட்டுவிட்டு வந்து

 

"வாப்பாபிளைட் லேட் போல ..." என்றார் மைந்தன் நேரம் கடந்து வந்ததை வைத்து.

 

"ஆமாம்பா.... ஒன் ஹவர் லேட் ..." என்றவன் அதற்கான காரணத்தை தந்தையிடம் விளக்கி முடிக்கும் போது 

 

"பாண்டியாநீ ஊருக்கு போனதை காட்டி ஒரு சுத்து பெருத்துப் போயிட்ட மாதிரி இருக்கப்பா ..."

 

"ம்ஹும்.... நீ எல்லாம் ஒரு அம்மா .... பையன் ஊர்ல இருந்து வந்ததும், ஏண்டா ரொம்ப இளைச்சு போயிட்ட... வேளா வேளைக்கு சாப்பிடறது இல்லையானு பாசமா  கேட்காம ... ஒரு சுத்து பெருத்து போயிட்டேன்னு சொல்ற .... வெரி பேட் ... வெரி பேட் ..."

 

"டேய் இருக்கிறத தான்டா சொல்ல முடியும் ... நீ சினிமா சீரியல் பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட ..."

 

"அப்படி சொல்லுடா பெரியவனே ..."  என்ற அகல்யா 

 

"இந்த வாரம் வெள்ளிக்கிழமை லீவு போட முடியுமா..” என்றார் வீராவை பார்த்து. 

 

"ஏன் ..."

 

 

"நம்ம சிட்லபாக்கம் சித்தப்பா இருக்காரு இல்ல ... அவரோட ஒன்னு விட்ட தங்கச்சி  பொண்ணு ஜாதகம் வந்திருக்கு ...  உனக்கும் அந்த பொண்ணுக்கும் ஜாதக பொருத்தம் நல்லா இருக்கு .... அந்த பொண்ணும் பாக்க  சினிமாக்காரி மாறி  நல்லாவே இருக்கா ... அதான் வர்ற வெள்ளிக்கிழமை நல்ல பேச்சு பேசலாம்னு ..."

 

"எவன் அவன் சிட்லபாக்கம் சித்தப்பா .."  என வீரா கோபத்தில் குமுற

 

"ஏண்டா மரியாதை இல்லாம பேசற ..." --- அகல்யா. 

 

"திடீர்னு என்னை கேட்காம கல்யாணத்த முடிவு பண்ணா இப்படித்தான் பேசுவேன் .."

 

"அப்படி கேளு டா என் சிங்கக்குட்டி ... இந்த வீட்டுல அல்லி ராஜ்ஜியம் நடக்குது ....  நம்ம யார்கிட்டயும் கேட்காம கொள்ளாம அவங்க வீட்டு ஆளுங்களோட சம்பந்தம் வச்சுக்கணும்னு பாக்கறா உங்க அம்மா"  என இடை புகுந்து தன் இருப்பை அவன் தந்தை பொன்னம்பலம் காட்ட

 

"இப்படி எங்க வீட்டு ஆளுங்கஉங்க வீட்டு ஆளுங்கன்னு  சண்டை போட்டு கிட்டதால தான் பெரியவன் வெளிய இருந்து  பொண்ண கட்டிக்கிட்டு வந்துட்டான்  ... இவன் அப்படி போவறத்துக்குள்ளையாவது இந்த கல்யாணத்தை முடிக்கணும் ... அதனால சிட்லபாக்கம் சித்தப்பா ..."

 

"சிட்லபாக்கம் சித்தப்பா.... பெரிய குப்பம் பெரியப்பானு எவனும்  சிட்டி லிமிட்ட தாண்ட கூடாது... அதையும் மீறி நல்ல பேச்சு பேசறேன்னு வீட்டு படி ஏறனாங்கனு வையி  கெட்ட வார்த்தை பேசி  அம்புட்டு பேரையும் விரட்டிவிட்டுடுவேன்   ஜாக்கிரதை ..."

 

"பாண்டியாஅந்த பொண்ணு நல்லா  படிச்சிருக்குப்பா ..." என அகல்யா நயந்து கூற

 

"என்ன... அவ்வையார் ஆரம்ப பாடசாலைல படிச்சிருக்கா ..  ..."

 

"டேய் தம்பி...  அந்த மதுரை பொண்ணையும் வேணாம்னு சொல்லிட்ட ... இப்ப உனக்கு கல்யாணம் முடிக்கணுமா வேணாமா ..." ---- அகல்யா. 

 

"யாரு மதுர பொண்ணு .." என யோசித்தவன் 

 

அய்யய்யோ.... நம்ம ஆள தான் சொல்றாங்க போல.... என எண்ணிக்கொண்டிருக்கும் போதே 

 

"அதாண்டா அந்த ஸ்ரீவித்யா... ஆஸ்திரேலியால வேலை பார்க்கிற பொண்ணு..."

 

" அவ பேரு ஸ்ரீவித்யா இல்லம்மா ஸ்ரீப்ரியா..."

 

"பொண்ணு பேரை எல்லாம் கரெக்டா சொல்ற  ...." என சத்யன் சந்தேகமாக பார்க்க

 

ஐயோ இவன் வேற சந்தடி சாக்குல சந்தேகமா பார்த்து பீதியை கிளப்பறானே.. ....என மீண்டும் வீரா மனதோடு பேசிக் கொண்டிருக்கும்போது 

 

"அட ஆமா ... அந்த பொண்ணு பேரு ஸ்ரீபிரியா தான்… அந்த பொண்ணை தான் புடிக்கலைன்னு சொல்லிட்டியே பா .."

 

"நான் எப்பம்மா சொன்னேன் ...." என்றான் தன்னையும் மீறி பெருங்குரல் எடுத்து.

 

"ஊருக்கு போவறதுக்கு முன்னாடி சொல்லிட்டு போனியே  பாண்டியா ... மறந்துட்டயா ... 

 

 உங்க அப்பா அந்த பொண்ணு வந்ததும்பொண்ணு பாக்க வர்றதா அவங்க அப்பாகிட்ட பேசி வச்சிருந்தாரு ....  நீ புடிக்கலைனு சொன்னதும்அதை சொல்ல மூணு நாலு வாட்டி போன் பண்ணியாச்சு ... ஆனா அந்த பொண்ணோட அப்பா  போனையே எடுக்க மாட்டேங்கறாரு .... அதனால தான் சிட்லபாக்கம் சித்தப்பா சொன்ன பொண்ணை பேசி முடிக்கலாம்னு ..."

 

ஆத்தா அங்காள பரமேஸ்வரி ... அப்படி எதுவும் பண்ணிடாத ..." என உள்ளுக்குள் பேசிக் கொண்டவன் வெளியில் தன் கெத்தை குறைத்துக் கொள்ளாமல்

 

"உன் பேச்சை இதுவரைக்கும் தட்டி இருக்கேனா ... நீ சொல்லி எந்த விஷயத்தையாவது கேக்காம இருந்திருக்கேனாம்மா  ..."

 

"இன்னைய வரைக்கும் நான் சொன்ன எதையுமே நீ  கேட்டதே இல்லையே ப்பா ..." என அகல்யா வெள்ளந்தியாக மொழிய 

 

ஐயோ ... வரலாற்றுச் சம்பவங்கள் எல்லாம் வகைத்தொகை இல்லாம ஞாபகத்துக்கு வருதே .... என உள்ளுக்குள் வசனம் பேசியவன் 

 

"தாயேஇந்த அதிவீரராம பாண்டியனை உற்றுப் பார் ..."  என திருவிளையாடல் சிவாஜி போல் தன் இரு கரங்களையும் தன் இடையில் பதித்து நிமிர்ந்து நின்றவன்

 

"ஆஸ்திரேலியா மண் என்னை அடியோடு மாற்றி விட்டது ....

 

 பெற்ற அன்னையின் அறிவுரை தான் ஆகச்சிறந்த மனிதனாக்கும் என்பதை உணர்ந்து  முழு மனிதனாக திருந்தி.... திரும்பி....  வந்திருக்கிறேன் ...

ஆதலால் தாங்கள் சொன்னபடி மதுரை பெண்ணையே எனது மாதரிசியாக தேர்வு செய்ய விரும்புகிறேன்  ..." என வீர வசனத்தை தன்னை மறந்து பேசி முடித்தான். 

 

 

"என்னாது , ஆஸ்திரேலியா வா...  நீ ஜெர்மனி போகல…” என சத்யன் சந்தேகத்தை எழுப்ப

 

அய்யய்யோ ... அவசரத்துல உளறிட்டயேடா  சூனா பானா .... உன் அருமை பெருமைக்கு ஆபத்து வர்றதுக்குள்ள ரூட்டை மாத்து ...

 

ஐயோ... ஐயோ ... ஜெர்மனினு சொல்றதுக்கு பதிலா ஆஸ்திரேலியானு நாக்கு பொறண்டுடுச்சு ..."

 

" நெஜமாவா டா ..?" ---- அகல்யா. 

 

" ஆமாம்மா ... வேணும்னா செத்துப்போன சுந்தராம்பாள் ஆயா போட்டோ  மேல சத்தியம் பண்ணட்டுமா ...."

 

"டேய் ஆளாளுக்கு  சத்தியம் பண்ண என் ஆத்தா  போட்டோ தான் கிடைச்சதா ... என் ஆத்தா சுந்தராம்பாள் மேல பண்ற சத்தியம் சக்கரை பொங்கல்னு இந்த வீட்டுக்கே தெரியும் டா ...

 

இதோ இருக்காரே.... இவரு  பிரபாவ ( சத்யனின் மனைவி) லவ்வே பண்ணலைன்னு என் ஆத்தா போட்டோ மேல சத்தியம் பண்ணாரு... அடுத்த ஒரு வருஷத்துல கட்டினா அந்த பொண்ணு தான் கட்டுவேனு ஒத்த கால்ல இல்ல வந்து நின்னாரு..” என பொன்னம்பலம் கடுப்பாக,

 

நான் சொல்ற பொய்க்கு,  பாடியான  பாட்டி மேல தான் சத்தியம் பண்ண முடியும் ... உசுரோட இருக்கிறவங்க மேல  பண்ணேனு வையி அவங்க அப்பீட் ஆயிடுவாங்க  ... என உள்ளுக்குள் வீரா புலம்பிக்கொண்டிருக்கும் போது

 

அவனையும் தன் தந்தையையும் மாறி மாறி முறைத்த சத்யன்,

 

"இவன் கல்யாண விஷயத்தை பேசும் போது , இவனை பத்தி மட்டும் பேசுங்க எதுக்காக என்னை பத்தி பேசறீங்க..." என காண்டாக 

 

டேய் அண்ணா , நீ அமேசான் காட்ல வாழற அரிய வகை உயிரினமாச்சே... நீ எப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கு மட்டுமில்ல அப்பாவுக்கும் டவுட் இருக்கு போல .... அதான் வாரறாரு...என வீரா  மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருக்க

"கோவிச்சுக்காத சத்யா .... அப்பா சாதாரணமாத்தான் சொன்னாரு..." என அவனை சமாதானப்படுத்தினார் அகல்யா. 

 

"சரிநல்லதா போச்சு...  எங்க வீட்டு ஆளுங்களும் கிடையாது உங்க அம்மா வீட்டு ஆளுங்களும் கிடையாது ... வெளிய இருந்து  பொண்ணு எடுக்கறது நல்லது தான்.. இன்னைக்கு போன் பண்றேன் ... எடுத்துட்டாருன்னா, இந்த வாரத்துல போய் பொண்ணு பாத்துட்டு வந்துடலாம் ...."  என பொன்னம்பலம் முடித்தார்.

 

நிம்மதி பெருமூச்சு விட்டவன் தன் அறை செல்ல விழையும் போது 

 

"பாண்டியா  சாப்பிட வா ..."

 

"இரும்மா குளிச்சிட்டு வரேன் ..." என அறைக்கு வந்தவன்நிலைக் கண்ணாடியை பார்த்துக் கொண்டே

 

"ஜஸ்ட் மிஸ் டா வீரா ....  அம்மையப்பா....  நீ போனை எடுக்காம இருந்து என் வாழ்க்கையை  காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ் எ லாட் ...

 

நீ ஒரு எடக்கு புடிச்ச ஆளு ... நீ மட்டும் போனை எடுத்திருந்து , பொண்ணு  வேணாம்னு என் அப்பா சொல்லி இருந்தா , அப்புறம் பழனிக்கே பால்காவடி எடுத்தாலும்  மறுபடியும்  நீ பொண்ண கட்டி கொடுக்க சம்மதிக்க  மாட்ட ...

 

அதுவும் உன் பொண்ணு  இருக்காளே .. அவ உனக்கும் மேல .... இதுவரைக்கும் மூணு தடவை பார்த்து இருக்கேன் .... முட்ட கண்ண வச்சுகிட்டு பாக்குறாளே ஒழிய ஒரு வார்த்தை பேச மாட்டேங்குறா...." என்றவனுக்கு மன கண்ணில் ஸ்ரீப்ரியாவின் முகம் பிரத்யட்சமாக, மென் புன்னகை பூத்தவன் 

 

" ஸ்ரீ டார்லிங் .... வெயிட்டிங் ஃபார் யுவர் அரைவல் ..." என காற்றிலேயே  அவளது  கன்னக்குழியை கிள்ளி கொஞ்சிக் கொண்டிருக்கும் போதுராம் சரணிடம் இருந்து அழைப்பு வந்தது .

 

"டேய்உனக்கு தான் போன் பண்ணனும்னு நினைச்சேன் அதுக்குள்ள நீயே பண்ணிட்ட ..."  என வீரா தொடங்கியதும் இயல்பான நல விசாரிப்புகள்அலுவலக பணி சம்பந்தமானவைகள் என பேச்சு முழு வீச்சில் சென்று முடிவுக்கு வரும் வேளையில் 

 

"ஸ்கூல்ல லட்சுமியை பாக்கற வேலை எல்லாம் வச்சுக்காத... ஒழுக்கமா அவங்க  வீட்ல போய் பார்த்து பேசு ..." என்றான்  வீரா இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்து முடிந்த விஷயத்தை மனதில் நிறுத்தி.

 

"ஆமாண்டா இன்னிக்கு ஈவினிங்அவங்க வீட்டுக்கு போய் பேசலாம்னு இருக்கேன் ..." என்றவனின் மனதில் குழந்தையை பற்றிய எண்ணமே ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்க,

 

"சரண், நான் இன்னைக்கு ஆபீஸ்க்கு போகல .... ஸ்ரீனியும்  லீவுல இருக்கான் ... சோ நாங்க ரெண்டு பேரும் அவங்க ஏரியால இருக்கிற  பாரிஸ்டால  4 ஓ கிளாக் மீட் பண்ணலாம்னு இருக்கோம் ... நீயும் வாயேன் ..."

 

"ஒரு மீட்டிங் இருக்கு முடிச்சிட்டுவந்து ஜாயின் பண்ணிக்கிறேன் ... அதோட அவ வக்கீல் தினேஷை பாக்கணும் டா ... அவனை கொஞ்சம் தட்டி வச்சா தான் இவ அடங்குவா போல இருக்கு ..."

 

"நல்லதா போச்சு ... தினேஷோட ஆபிஸும் அதே தெருவுல தான் இருக்கு .. நீ வா பார்த்து பேசிக்கலாம்..”

 

"தினேஷை பார்த்துட்டு  இன்னைக்கு  ஈவினிங் லட்சுமி வீட்டுக்கு போலாம்னு இருக்கேன் .."

 

"குட் ஐடியா ..." என்று அழைப்பை துண்டித்தான் வீரா. 

 

 

லட்சுமி குழந்தையை தூங்க வைத்துவிட்டுதந்தையிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு  அறிவுறுத்திவிட்டு மருத்துவமனைக்கு கிளம்ப எத்தனிக்கும் போது ரங்கசாமியிடமிருந்து அழைப்பு வந்தது.

 

பச்சைமலை புறத்தில் தன் பேத்தியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடிவிட்டுஅங்கிருந்து ஊட்டிக்குச் சென்றவர் தான்அப்படியே கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நடக்கும்  ஆசிய தேயிலை தோட்ட தொழில் அதிபர்களுக்கான  சந்திப்பில் கலந்து கொள்ள சென்று விட்டார்.

 

லட்சுமியின் மடிக்கணினிதேயிலை தொழிற்சாலையில் செயல்படும் அலுவலக மடிக்கணினியோடு  இணைப்பில் இருப்பதால்இந்த கணம் வரை  வரவு செலவுகள், பண பரிவர்த்தனைகள் எல்லாம் சரிவர கணக்கிட்டு வழக்கம் போல் அவள் ரங்கசாமிக்கு அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறாள்.

 

கடந்த மூன்று மாத காலத்தில்கணக்கு வழக்குகள் மற்றும் வியாபாரத்தில் பெரிதாக பிரச்சனைகள் இல்லை என்பதால் ரங்கசாமி இரண்டு முறை மட்டுமே அவளைத் தொடர்பு கொண்டு பேசி இருந்தார் . அதில் பெரும்பாலும்  தேயிலை  தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணியினை குறித்த தகவல்கள் மற்றும் தன் பேத்தியை பற்றிய நலம் விசாரிப்புகள் தான் முக்கிய பங்கு வகித்தன. 

 

லட்சுமியும்  தான் வீட்டை விட்டு வந்ததையோ , விவாகரத்திற்கு விண்ணப்பித்ததையோ அவர் காதுகளுக்குச் சென்றடையாமல் பார்த்துக்கொள்ள,

 

எப்பொழுதும் போல் தன் இல்லத்தில் இருந்துதான் பணி செய்து கொண்டிருக்கிறாள் என்று  அவரும் எண்ணிக் கொண்டிருக்க, அவர் நாடு திரும்பியதும் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள் மாது.

 

"லஷ்மி எப்படி மா இருக்க ..."

 

"நல்லா இருக்கேன் மாமா ..." என்றாள் கமறிய குரலை இயல்புக்கு கொண்டு வர முயற்சித்து .

 

" உடம்பு சரி இல்லையாம்மா..."

 

" சாதாரண  கோல்ட்  மாமா ...."

 

" உடம்ப பாத்துக்கம்மா... நேபாள்ல நமக்கு ஒரு பிசினஸ் டீல் கிடைச்சிருக்கு  ... நான் அதை முடிச்சுட்டு ஊர் வந்து சேர  இன்னும் 20 டேஸ் ஆகும்.... கற்பகத்துக்கு சொல்லிட்டேன் .... நான் ஊருக்கு வந்ததும் நியூ யூனிட்க்கு பூமி பூஜை போடலாம்னு இருக்கேன் ... சரண் கிட்டயும் சொல்லிட்டேன் ... ஊட்டிக்கு வரேன்னு சொல்லிட்டான் .... என் பேத்தி கையால தான் புது யூனிட்ட ஸ்டார்ட் பண்ணனும்னு  முடிவெடுத்து இருக்கேம்மா ..."

 

" சரிங்க மாமா ..." என்றாள் அமர்த்தலாக.

 

பிறகு குழந்தையின் குரலை அலைபேசியில் கேட்டு மகிழ்ந்துவிட்டு  அழைப்பை துண்டித்தார்.

 

அவரது பேச்சிலிருந்து வீட்டில்  நடந்த பிரச்சனையை பற்றியோஅவள் வீட்டை விட்டு சென்றதைப் பற்றியோ கற்பகம் அருணா மட்டுமல்ல ராம்சரணும் அவரிடம் கூறவில்லை என்பது அவளுக்கு தெளிவாகி போனது.

 

 

பிறகு அவசர அவசரமாக ஆட்டோவில் பயணித்து மருத்துவமனையை அடைந்ததும் 15 நிமிட காத்திருப்புக்கு  பிறகு அவளுக்கான அழைப்பு வந்தது. 

 

" உக்காருங்கமா ..." என மருத்துவர் நாற்காலியை காட்டியதும் தயக்கத்துடன் அமர்ந்தவள்,

கர்ப்பத்தை உறுதி செய்த சாதனத்தை எடுத்துக்காட்டி,

 

"நான் ப்ரெக்னன்ட்  மேம்..."

 

" குட் ...." என்று லேசாக புன்னகைத்தவரிடம் சற்று தயங்கியபடி,

 

" எனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு மேம்... எனக்கு இந்த குழந்தை வேண்டாம் ..."  அதுவரையில் நிர்மலமாக இருந்த அவர் முகத்தில்சிந்தனை ரேகைகள் விரவி ஓட ,

 

" ஏன் ...."

 

"என் பொண்ணுக்கு இப்பதான் ஒரு வயசு ஆகுது ... இந்தக் குழந்தையால என்னால அந்த குழந்தையை சரியா பாத்துக்க முடியாம போயிடும் மேம் ..."

 

" சாரிம்மா.... நீங்க சொல்ற காரணம் உங்க சூழ்நிலைக்கு சரியா இருக்கலாம் ... ஆனா இந்த ஹாஸ்பிடல்ல நாங்க யாருக்கும்  அபார்ஷன் செய்யறதில்ல மா.... நான் டாக்டர் ஆனதிலிருந்தே இதை கொள்கையா  ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன் ..."

 

என்றவரின் பேச்சு அவளை அடித்தது போல் இருந்தது.

 

இந்தியாவைப் பொறுத்த மட்டில் கருக்கலைப்பு  சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட  ஒன்றாகும் . ஆனால் ஒரு சில மருத்துவர்கள் உயிரைக் கொல்லும் இந்தப் பணியை தங்கள் பணி காலத்தில் செய்யாமல் இருப்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டவளுக்கு, சுய வெறுப்பு ஏற்பட, வேறு வழி இல்லாமல் தன் நிலையை நொந்தபடி வேறொரு மருத்துவமனையை நோக்கி படையெடுக்க முடிவு செய்தாள்.

தன் வீட்டிற்கு அருகில் இருக்கும்  பாரிஸ்டாவில்  ஸ்ரீனி, வீராவுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

 

 சரியாக பத்து நிமிடத்திற்கு பிறகு வீரா அங்கு  வரநீண்ட நாளைக்கு பிறகான சந்திப்பு என்பதால்உணவுப் பட்டியல் அட்டவணையில் ஏதோ  கைக்கு கிடைத்த இரண்டு உணவு வகைகளை காட்டி  எடுத்து வரச் சொல்லிவிட்டு பரஸ்பரம் நலம் விசாரித்தபடி பேச்சில் மூழ்கிப் போயினர். 

 

பத்து நிமிடத்திற்கெல்லாம் அவர்கள் சொன்ன உணவு வகைகள் சூடாக வர , சுவாரஸ்யமாக பேசியபடி  உண்டு முடித்ததோடு 

சாப்பிட்டதற்கான ரசீதை பார்த்து பணத்தை செலுத்தி விட்டு இருவரும் கிளம்பி வெளியே வரும் பொழுது, லட்சுமி சாலையை கடக்க முயல்வதை பார்த்து உறைந்த வீரா 

 

" டேய் லஷ்மி டா ..." என்றான் யோசனையாக. 

 

"யாரு லக்ஷ்மி ..."

 

"சரணோட வைஃப்  ..."

 

" ஓ அவங்க இங்க யாரைப் பார்க்கப் போறாங்க ... "

 

"தினேஷ் ஆபீஸ் இங்கதான் இருக்கு .. ஒருவேளை அங்க போறாளோ..." என வீரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமி சாலையைக் கடந்து, அந்த தெருவின் மறுமுனையில் இருக்கும் ஒரு சிறிய மருத்துவமனைக்குள் நுழைய,

 

" வீராஅவங்க எங்க அக்காவோட கிளினிக்கு போறாங்க ..."  என பரபரத்த ஸ்ரீனியின் இல்லமும் , அவனது அக்காவின் மருத்துவமனையும் அருகருகே அமைந்திருக்க,

 

 

" உங்க அக்கா கைனிக் தானே .."

 

" ஆமா .."

 

"இரு, நான் சரணுக்கு போன் பண்றேன் .." என்றவன் அடுத்த கணமே ராம்சரணை தொடர்பு கொண்டு நடந்ததை அப்படியே கூற,

 

"தேங்க்ஸ் வீரா ... எனக்கு மீட்டிங்  முக்கியமில்லை .... இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்டா .."  என அழைப்பை துண்டித்தவனின் மனதில் இனம் புரியாத பரபரப்புடன் கூடிய மகிழ்ச்சி பரவ,

 

"இருடி வரேன் ... நான் நெனச்சது மட்டும் நடந்திருக்கட்டும் .... அதுக்கப்புறம் நீ முழுக்க முழுக்க என் கஷ்டடி தான் .... "  என ஆர்ப்பரிக்கும் மனதோடு அழுத்தமாக தன்னுள்ளே கூறியபடி காரை மின்னல் வேகத்தில் செலுத்தினான். 

 

அதற்குள் வீராவின் ஆலோசனைப்படி ஸ்ரீனி  மருத்துவராக பணிபுரியும் தன் தமக்கை  சுமித்ராவை அலைபேசியில் தொடர்பு கொண்டு,

 

" அக்காஎப்ப OPD ஸ்டார்ட் ஆகும் ..."

 

"இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்டார்ட் ஆயிடும் ... 10 பேஷண்ட்ஸ் வந்திருக்காங்கன்னு நர்ஸ் இப்பதான் சொன்னாங்க.... ஏன் திடீர்னு கேட்கிற ..."

 

"அக்கா ... கிளினிக்கு எல்லோ கலர் சாரீல ஒரு லேடி வந்திருக்காங்க ... அவங்க பேரு ஸ்ரீலட்சுமி ... அவங்க என்ன பிரச்சனைக்காக வந்திருக்காங்கன்னு தெரியணும் ..."

 

" ஸ்ரீனி ... திஸ் இஸ் நாட் ப்ரொபஷனல் எத்திக்ஸ் ... " என்றவளிடம் ராம்சரண் ஸ்ரீலட்சுமிக்கு இடையேயான உறவுஅவர்கள் தற்போது பிரிந்து இருப்பதோடு விவாகரத்திற்கு விண்ணப்பித்திருப்பது ஆகியவற்றை சற்று மேம்போக்காக கூறினாலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடத்தில் அழுத்தம் கொடுத்து கூறி முடிக்க

 

"ஓ இதான் சமாச்சாரமா ... ஓகே ... அவங்க டர்ன் வரும் பொழுது  உனக்கு போன் பண்றேன் ... நான் லைனை கட் பண்ணல ... நீயும் உன் ஃபிரண்டும் அவங்க  பேசறத கேட்டுக்கங்க ..."

 

"தேங்க்ஸ் கா ... இன்னும் 10 மினிட்ஸ்ல சரண் வந்துடுவான் ... மறக்காம ஸ்ரீலக்ஷ்மி டர்ன் வந்ததும் , எனக்கு போன் பண்ணு... நாங்க உன் ஃபோனுக்காக வெய்ட்டிங்..." என முடித்தான்.

 

அடுத்த 10 நிமிடத்தில் ராம்சரண் புயல் வேகத்தில் அங்கு வந்து சேர, ஸ்ரீனி செய்திருந்த ஏற்பாட்டை கேட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

 

தொடர்ந்து வந்த 20 நிமிடம் ஒருவித பரபரப்புடன் கழியஸ்ரீனியின் அக்கா சுமித்ராவிடமிருந்து  ஸ்ரீனிக்கு அழைப்பு வர அதனை அனுமதித்து ஸ்பீக்கரில் போட்டான் ஸ்ரீனி.

 

 

"ம்ம்.. சொல்லுங்க ..."  ----- சுமித்ரா 

 

" மேம், நான் ப்ரக்னண்டா இருக்கேன் ..."

 

(கேட்டுக் கொண்டிருந்த ராம்சரணின் முகத்தில் கோடி பௌர்ணமிகள்  ஒன்றாக ஜொலித்தது)

 

" லாஸ்ட் பீரியட் டேட் சொல்லுங்க ..."

 

" சரியா ஞாபகத்துல இல்ல மேம்...நாலு மாசம் இருக்கும்னு நினைக்கிறேன் .... "

 

" ஏன் இதை இவ்ளோ நாள் கவனிக்காம இருந்திருக்கீங்க ...."

 

"எனக்கு ஒரு வயசுல குழந்தை இருக்கு ... கடந்த ஒரு வருஷமாவே இர்ரெகுலர் பீரியட்ஸ் தான் ... அதான் கண்டுபிடிக்க முடியல ..."

 

" ஓகே... நோ ப்ராப்ளம் ஸ்கேன் பண்ணி பார்த்தா தெரிஞ்சிடும்... வாங்க ஸ்கேன் டெஸ்ட் எடுத்துடலாம்..”

 

"அது வந்து மேம் ... எனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறதால  இந்த குழந்தையை அபார்ட் பண்ணலாம்னு  இருக்கேன் ..." என்றவளின்  கமரிய  குரலில் அளவுக்கு அதிகமான  தயக்கம்குற்ற உணர்வுலேசான நடுக்கம் தெரிய, அங்கு ராம்சரணின் ரத்த அழுத்தமும் கோபமும் வகைத்தொகை இல்லாமல் எகுறி கொண்டிருந்தது.

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

Post a Comment