ஸ்ரீ-ராமம்-30

அத்தியாயம் 30 

 

அன்று காலை விழிப்பு ஏற்பட்டதுமே , மனைவி மகள் பற்றிய நினைவுகள் அவன் சிந்தையை ஏகோபித்து ஆக்கிரமிக்க தொடங்கஅதனை விலக்க மனமில்லாமல் , தொலைத்த அந்த இன்பத்தில் உழன்ற படிபுரண்டு புரண்டு படுத்தான் ராம்சரண்.

 

இப்படியே ஒரு அரை மணி நேரம் கழிய, அன்றைய முக்கிய  அலுவலகப் பணிகள் அவன் கண் முன் வந்து தாண்டவம் ஆடத் தொடங்கியதும் சுயம் உணர்ந்தவன், விறு விறுவென்று குளித்து முடித்து அலுவலகத்திற்கு தயாரானான்.

 

அடர் நீல நிற சட்டை அவன் மனைவிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், அதனை அணிந்து கொண்டவன் , அவளை அவள் இல்லத்தில் சந்திக்க விரும்பாமல் அவள் பணியாற்றும்  பள்ளியில் சந்திக்க முடிவு எடுத்தான்.

 

அதற்கு காரணமும் இருந்தது. ருக்மணி, லட்சுமி இருவரும் ஒரே பள்ளியில் பணி புரிவதால்இருவரையும் ஒன்றாகவே சந்தித்து பேசி விடலாம்அதோடு லட்சுமி  இப்பொழுதிருக்கும்  மனநிலையில், அவள் வீட்டிற்கு சென்றால், சந்திக்கவே மறுப்பாள்,  

அப்படியே சந்தித்தாலும், வாக்குவாதம்  முற்றுமே ஒழியஅவனது கேள்விகளுக்கு நிச்சயம் பதிலளிக்க மாட்டாள். அவளது பள்ளி போன்ற பொது இடங்களில் சந்தித்தால், சபை நாகரிகம் கருதி அடக்கி வாசிப்பாள் என்றெல்லாம் திட்டமிட்டிருந்தவனுக்கு தெரியாது , சமீப காலமாக குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போவதால் அதைப் பார்த்துக் கொள்ள ருக்மணி காலை அரை நாள் மட்டுமே பள்ளிக்கு பகுதி நேர ஆசிரியையாக வந்து செல்கிறார் என்று.

 

அலுவலகம் சென்றவனுக்குஎதிர்பார்த்திருந்த அலுவலகப் பணிகளோடு பல புதிய பணிகளும் இணைந்து கொள்ளமதிய உணவு வேளையில் தன்னவளை சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்தவன் அதனை மாலை நேரத்திற்கு தள்ளிப்போடும் நிலை ஏற்பட்டது.

 

மாலை 4 மணியளவில், அவள் பணி புரியும் அந்த பிரம்மாண்ட தனியார் பள்ளிக்கு எதிரே காரை நிறுத்திவிட்டு, பள்ளியின் வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம்,

 

" ஐ வாண்ட் டு மீட் ஸ்ரீலட்சுமி மிஸ்..." என்றான்  கண்ணில் அணிந்திருந்த குளிர் கண்ணாடியை மிடுக்காக கழற்றி தன் சட்டையில் மாட்டிக் கொண்டே.

 

அவன் தோரணையும் கம்பீரமும்  அங்கு மற்ற வேலைக்காக குழுமியிருந்த பிற ஆசிரியர்கள்அலுவலகத்தில் பணிபுரிவோர்மாணவ மாணவிகள் ஆகியோரை வெகுவாகக் கவர

 

"நீங்க யாரு சார் ..."

 

"நான் அவங்க ஹஸ்பண்ட் ராம்சரண் ..."  என்று அவன் முடித்தது தான் தாமதம்அங்கிருந்த பெரும்பாலானவர்களின் பார்வை ஒரு கணம் அவன் மீது நிலைக்க ,

 

"மேத்ஸ் மிஸ்சோட  ஹஸ்பண்டாம் டி..." என பதின் பருவ பெண் ஒருத்தி வெகு சன்னமாக   தன் தோழியிடம் கூறியது அவன் செவிகளில் அட்சர சுத்தமாய் விழ,

 

"இவரு சாஃப்ட்டா தெரியறாரு ... மேத்ஸ் மிஸ் தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல ..." என அவள் தோழி  மொழிந்தது அவனுக்கு சிரிப்பை வரவழைக்க,

 

"சார்இன்னும் 15 மினிட்ஸ்ல ஸ்கூலே விட்டுடுவாங்க சார்..." என அந்த  அலுவலக  பெண் கூற

 

"ஓகே ஓகே ... நான் வெளிய வெயிட் பண்றேன் ..."  என விடைபெற்றவன்

 

ச்சே, ஸ்கூல் டைமிங் கூட தெரியாம வந்திருக்கியே டா .... என்று  மானசிகமாக தன்னைத் தானே கொட்டியபடி, சாலையைக் கடந்து தன் கார் அருகே சென்று நின்று கொண்டான். 

 

ஓரிரு கணத்திற்கு பிறகு அங்கு வந்த ஒரு  இளைஞன்தன் இருசக்கர வாகனத்தை  ராம்சரணின் காருக்கு அருகே நிறுத்திவிட்டு , உடன் தானும் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கலானான்.

 

பள்ளி முடிந்ததை பறைசாற்றும் விதமாக பெரிய அலாரம் மணி ஒலிக்கமாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வருவதை பார்த்ததும் அந்த இளைஞன் சன்னமாக ராம்சரணிடம்,

 

 

"உன் சீனியர் நானு .."  என்றான் பார்வையை எதிர் திசையில் பதித்து.

 

"என்ன சீனியர் ..." என்றான் ராம்சரண் புரியாமல். 

 

"2 வருசமா இதே இடத்துல நின்னுக்கினு ஏழாங் கிளாஸ் டீச்சரை  பாத்துக்கினு இருக்கேன்.... நீ நடுவால வந்து பெரிய காரை காட்டி  தட்டிக்கிட்டு போலாம் பாக்கறயா...."

 

"ஏழாம் கிளாஸ் டீச்சரா... யாரது..." என்றான் அசுவாரஸ்யமாக .

 

"சரோஜா டீச்சர் தெரியாது .... அந்த டீச்சர்  தான் ..."

 

"தம்பிநான் என் வைஃபை  பார்க்க வந்திருக்கேன் ... நீ உன் வேலைய பாரு ..." என்றான் பொங்கி எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு.

 

"இங்க சைட் அடிக்க வர அம்புட்டு பயல்களும் இதே பொய்ய தான் சொல்றானுங்க ..." இம்முறை ராம்சரண் அவனை  எரிப்பார்வை பார்க்க ,

 

"ஏன் தெரியுமா.... சிட்டியிலேயே இந்த ஸ்கூல் தான் டாப்பூ ..." என்றான் அந்த இளைஞன் உற்சாகமாய். 

 

" எதுல ....."

 

"இங்க தான் அம்புட்டு டீச்சரும் அழகா இருப்பாங்க..”

 

அடேய் ... என உள்ளுக்குள் ராம் சரண்  உறுமிக் கொண்டிருக்கும் போது

 

"இம்மாம் பெரிய காரை வச்சிருக்கியே... நிசமாவே இது  உன் கார் தானா... இல்ல வேற யார்கிட்டயாவது கடன் வாங்கினு வந்தியா ...."

 

"டேய், நீ என்ன கொலைகாரனாக்காம விட மாட்டேன்னு நினைக்கிறேன்..... காலேஜ் டைம்ல  கூட நான் எந்த பொண்ணு பின்னாடியும் சுத்தினது இல்ல டா..."

 

"இந்த உருட்டு எல்லாரும் உருட்டுறது தானே ... நான் கூட காலேஜ்ல எந்த பொண்ணு பின்னாடியும் சுத்தினது இல்ல... ஒன்லி லெக்ச்சரர்ஸ் தான் ..."

 

ஓங்கி அறைஞ்சேன்.... மூஞ்சி தீஞ்சிடும் ...."

 

"கூல் ப்ரோ கூல் ...டீச்சரை சைட் அடிக்க வர்றவங்க அம்புட்டு பயலும் இப்படித்தான் சொல்லுவாங்க .... 

எனக்கு தெரியாதா ... இது ஆரம்பநிலை தான்... போகப் போக சரியாயி என்னைய மாதிரி செட் ஆயிருவ ..."

 

"உன் கூட எல்லாம் நிக்க வேண்டிய நிலைமைல என்னைய வச்சாளே... அவள சொல்லணும்  ...." என நற நறவென்று அவன் பற்களைக் கடித்துக் கொண்டிருக்கும் போது, எதிர் திசையில் ஒரு சீருடை அணிந்த இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டே, தன் பகுதிக்கான பள்ளி பேருந்து வருகிறதாஎன தேடிய  லட்சுமியின்  பார்வையில் அவளது நாயகனின் பார்வையும் கலக்க, சற்றும் எதிர்பார்க்காத அவனது திடீர் தரிசனத்தில் உறைந்து நின்றாள் மங்கை. 

 

அவளைப் பல விதமாக ரசித்திருக்கிறான்.  

 

ஆனால் முதன்முறையாக கொண்டையுடன்கழுத்து ஓட்டிய ஜாக்கெட் , காட்டன் புடவை சகிதமாக  ஆசிரியைக்கான உடை அலங்காரத்தில் இப்பொழுது தான் பார்க்கிறான். 

 

எப்பொழுதும் போல் பெண்மையின் இலக்கணத்தோடு கம்பீரத்தையும் தூக்கிச் சுமந்தவளை, அவன் ரசனையோடு நோக்க, ஆச்சரியம், அதிர்ச்சி,ஆனந்தத்தின் கலவையை  கண்களில் பறைசாற்றிய படிஅவளும்  வியந்து நோக்க ,

 

ஒரு புடவை வாங்கினால் இன்னொரு புடவை இலவசம் என குழல் ஒலிபெருக்கியை பொருத்திக்கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த வேனில் இருந்து 

 

"ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னை சேருவேன் ....

 

வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன் ...

 

உருவானது நல்ல சிவ ரஞ்சனி

உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி ...

 

ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை...

 

உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்....."

 

என்ற அம்சமான காதல் பாடல் வரிகள் ஓங்கி ஒலித்து இருவரின் சிந்தையையும் ஆக்கிரமிக்கசிலையாய் போயினர்.

 

அடுத்த கணம் சுயம் உணரும் போது, இருவரின் கண்களிலும் மெல்லிய கண்ணீர் திரையிட்டு இருக்க

 

"நீ அந்த மஞ்ச புடவையை  பாக்கல இல்ல... அது என் ஆளு ..." என்றான் அருகில் இருந்தவன் அவசரமாக .

 

" டேய்நான் என் பொண்டாட்டிய பார்க்க வந்திருக்கேனு... எத்தனை தடவை சொல்றது ..."

 

"பச்சை புடவை கட்டி இருக்கிற டீச்சரா உம் பொண்டாட்டி ... பொண்டாட்டின்னு சொல்ற உன்ன பாத்து முறைக்குது ... நெசமாலுமே அது உன் பொண்டாட்டி தானா ...."

"யூ ஆர் கிராஸிங் யுவர் லிமிட் மேன். ... அதுக்காக உன்கிட்ட மேரேஜ் சர்டிபிகேட்டா காட்ட முடியும் ...."

"சரி அத விடு, ஏன் முறைக்குது...."

"ம்ம்ம்ம்....குடும்ப சண்டை ... "

 

"சரி, அதுதான் முறைக்குதே... அதுக்கு பின்னாடி வர டீச்சர் நல்லா இருக்கே... அத உ சார் பண்ணலாம் இல்ல .... சினிமா ஹீரோ மாதிரி ஆளும் காரும் இருந்தா பத்தாது, கொஞ்சம் அறிவும் வேணும்...  "

 

பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த ராம்சரண், அவன் சட்டையை கொத்தாக பற்றி 

 

" டேய் பொறம்போக்கு ..... உன்னை மாதிரி என்னை பொறுக்கின்னு நெனச்சியா .... அடிச்சு பொளந்துடுவேன் ஜாக்கிரதை ..."

 

"கோவிக்காத ப்ரோ ..... உன் நல்லதுக்கு தான் சொன்னேன் .... சரி விடு.... நான் கிளம்பறேன்,   என் ஆள் கிளம்பிடுச்சு .... நாளைக்கு இதே நேரம் இதே இடத்தில் சந்திப்போம்.... வரட்டா ..." என அவன் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பஞ்சாய் பறக்க,

 

"இவனுக்கெல்லாம் சூடு சொரணையே இருக்காது போல ..." என்று முனகிக்கொண்டே திரும்பிப் பார்க்கும் போது , லக்ஷ்மி நின்று கொண்டிருந்த இடத்தில், வேறு  ஆசிரியர்கள், குழந்தைகள் நிரம்பி வழிய,  

 

"அதுக்குள்ள இவ எங்க போனா.."என பார்வையில் தேடுதல் வேட்டை நடத்தியவன் கண்ணிமைக்கும் நேரத்தில்பள்ளி வளாகத்தை  ஒட்டியிருக்கும் முட்டு சந்துக்குள் அவள் நுழைவதை பார்த்து

 

"இதோ வரேன் ... மை டார்லிங் ..." என தன் காரை மின்னல் வேகத்தில் மாற்று வழியில் செலுத்தினான்.

 

பள்ளி வளாகத்தை ஒட்டி இருக்கும் அந்த முட்டுச்சந்தைஎப்போதாவது ஆசிரியர்கள் பயன்படுத்துவார்கள்.... மற்றபடி மாணவ மாணவிகளுக்கு அங்கு அனுமதி இல்லை ....

 

வெளியில் இருந்து பார்ப்பதற்கு முட்டுச்சந்து போல் இருந்தாலும்  மூலிகைச் செடிகள் வளரும் 'ஹெர்பல் கார்டன்' அது.

 

பள்ளிக்கு சொந்தமான அந்த சிறு நேர்கோட்டு இடத்தில் பயன் தரும் மூலிகை மரங்கள், செடி கொடிகளை வளர்த்து வருகிறது பள்ளி நிர்வாகம்.

 

அந்த சந்தின் மறுமுனை சாலையில் முடியும் என்பதால்அங்கிருக்கும் சிறிய கருப்பு கேட்டை திறந்து மூட மட்டும் ஒரு காவலாளி அமர்ந்திருப்பார். 

 

சில சமயம் பள்ளி பேருந்தை தவறவிட்டால், வேறு பள்ளி பேருந்தை துரிதமாக பிடிக்க  இந்த குறுக்கு வழியை தான் ருக்ணியும் லட்சுமியும் பயன்படுத்துவார்கள்.

 

 அந்த வழியை லட்சுமி பயன்படுத்திஅந்த முட்டுச்சந்தின் எல்லையை நெருங்கும் பொழுது , கைகளை மார்புக்கு குறுக்க கட்டிக்கொண்டு அவளையே பார்த்தபடி அங்கு  நின்றிருந்தான் ராம்சரண்.

 

சற்று தொலைவில் அவனை கண்டதுமேஅவள் விதிர்விதிர்த்து போய் தயங்கி நிற்க , அழுத்தமான நடையோடு நெருங்கினான் அவளவன்.

 

அவன் குமரியின் கட்டழகும், வட்ட முகமும்காந்தமாய் கவர, ரகசியமாய் ரசித்தான் அவளது ரதிகாந்தன்.

 

வான் மகள் மஞ்சள் பூசிய வேளையில், அவனின் நெருக்கம் அவளுள் அவஸ்தையை அதிகரிக்கச் செய்ய, அவன் பார்வையோ அவள் கண்களை ஊடுருவி இதயச் சிறை பூட்டை உடைக்க தொடங்கியது.

 

ஈ காக்கா இல்லாத இடத்தில் , அவனின் மன்மத தேசத்தின் இலச்சினையின் இடைப்பற்றி தன்னோடு இணைத்துக் கொண்டவன்

 

"என்னடி , என்ன பார்த்ததும் எஸ்கேப் ஆகலாம்னு பாக்கறியா ..." என அவள் காதுகளில்  கிசுகிசுக்க, அவன் மீசையின் நுனி உரசி அவள் நுண் உணர்வுகளை தட்டி எழுப்ப

 

"தள்ளி நில்லுங்க ப்ளீஸ் ..." என்றாள் திமிறிய படி. 

 

அவளது வார்த்தைக்கு மதிப்பளித்து அவன் விலகி நின்றதும்,

 

"இங்க பாருங்கஎன்ன பேசணும்னாலும் என் வக்கீல் கிட்ட பேசுங்க ..."

 

"ஆமா... உன் வக்கீல் பெரிய ராம்ஜீத்மலானி, கபில் சிபல்... ஓங்கி தும்மினேனா பறந்திடுவான்... அவன் எல்லாம் ஒரு ஆளு .. அவன்கிட்ட நான் பேசணுமா ... ஏண்டி வக்கீல் வச்சியே என்னை மாதிரி ரெட்ட நாடியா இருக்கிற ஆளா பார்த்து வைக்க மாட்டீயா .... உன்னை மாதிரி ஒத்த நாடியா வச்சிருக்க... ஒரு அடி கூட தாங்க மாட்டான் போல இருக்கே ..." என்றவனை முறைத்தவள் 

 

"இங்க பாருங்க , எனக்குன்னு  ஒரு பேர் இருக்கு .... இப்படி நடந்துக்கிட்டு அத கெடுத்துடாதீங்க ..."

 

"ஹிட்லர்.... அதானே உன் பேரு .... வந்ததுமே  கேட்டேன் .... நான் தான் உன் ஹஸ்பண்ட்னு தெரிஞ்சதும்சார் பாவம்இப்படி ஒரு ஹிட்லரோட எப்படித்தான் குப்பை கொட்டுறாரோனு  உன் ஸ்கூல் கேர்ள்ஸ் எல்லாம் குமுறி குமுறி அழுததோட எனக்கும் ஆறுதல் எல்லாம் சொன்னாங்க தெரியுமா ..." என முடித்தான் கண்களில் குறும்பை காட்டி. 

 

"நான் வீட்டுக்கு போகணும் ... வழிய விடுங்க ...."

 

"மொதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ...

 

"அடுத்த வாரம் ஹியரிங் வரும் அப்ப என் பதில் என்னன்னு தெரிய வரும்  ..."

 

"என்னடி விளையாடறியா ... போனா போகுதுன்னு விட்டு பிடிச்சா ரொம்ப தான் பண்ற .... சரி நான் உன் கூட உன் வீட்டுக்கு வரேன்... வா போலாம் ..."

 

" நீங்க ஒன்னும் என் வீட்டுக்கு வர வேணாம்..."

 

" ஹலோ... நீ என் பொண்டாட்டி ... மிஸ்ஸஸ் ராம்சரண் ... அது என்னைக்கும் மாறாது மாத்தவும் விடமாட்டேன் ... உன் வீட்டுக்கு மட்டும் இல்ல உன் பெட்ரூமுக்கு வர முழு  உரிமையும் எனக்கு மட்டும் தான் இருக்கு... மறந்துடாத ..."

 

 

"அப்பஇவ்ளோ நாள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க ..."

 

"ஓ மை ஸ்வீட்டி ... நீ என்னை ரொம்ப எதிர்பார்த்து, ஏங்கி இருக்க போல .... நான் தான் புரிஞ்சுக்காம இருந்திருக்கேன்.... ஐ அம் சாரி டியர்  .. இன்னைல இருந்து நைட்  உங்க வீட்டுக்கே வந்துடறேன்........................ உன் கூட  தங்கறதுக்கு ..." என்றான் விஷமமாக. 

 

"ஐயோநான் அத சொல்லல ..." என அவள் முகம் சிவக்க,

 

" எத சொல்லல ...." என்றான் மீண்டும் அவள் இடைப்பற்றி தன்னோடு பிணைத்து.

 

அவனின் நெருக்கம்அவளை வெகுவாக வாட்ட ,

 

" ப்ளீஸ், நான் வீட்டுக்கு போகணும் ...   குழந்தை அழுவா ...."

 

"உங்க அம்மா ஸ்கூலுக்கு லீவு  போல ... அவங்க வீட்ல தானே இருப்பாங்க... அவங்க குழந்தையை  பார்த்துப்பாங்க ...."

 

 

"ஐயோ, புரியாம பேசாதீங்க .... குழந்தை என்னை  தேடுவா..."  என்ற போது தான் அவள் குழந்தைக்கு அமுதூட்டுவதை கூறுகிறாள் என்பதை புரிந்து கொண்டவன், ஏதோ பேச வாய் எடுக்கும் பொழுதுஅவனது அலைபேசி சிணுங்கியது.

 

அன்று இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணி வரை தொடர்ச்சியான கலந்தாய்வு கூட்டம் இருப்பது நினைவுக்கு வர, அலைபேசியில் ஏதேதோ பேசியவன்,

 

"ஓகேஇன்னும் ஹாஃப் அன் ஹவர்ல ஆபீஸ்ல இருப்பேன் ..." என அழைப்பை துண்டித்து விட்டு

 

"இன்னைக்கு கொஞ்சம் ஆபீஸ்ல வேலை இருக்கு ... உன்னை பாக்கணும்ங்கிறதுக்காக தான் வேலைய அரைகுறையா விட்டுட்டு வந்தேன்.... எனக்கு பதில் சொல்லாம ஏமாத்தலாம்னு மட்டும்  நினைக்காத ...  நாளைக்கு மறுபடியும்  இங்க வருவேன் .... நான் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம்  நீ  பதில் சொல்லணும் .... அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து உன் வீட்டுக்கு போறோம் .... ஓகே ..." என்றான் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக.

 

முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டவளின் கரம் அனிச்சையாய் அவள் நெஞ்சத்தின் மீது படிந்து,

 

"ப்ளீஸ் நான் போகணும் .... " என ஏறக்குறைய அவள் குரல்  தழுதழுக்க,  

 

"வலிக்குதாடி ...."

 

"அத உங்க கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல ..." 

 

உஃப் என்று பெருமூச்சு விட்டவன், அவளது பிரச்சினையை உணர்ந்து 

 

"வா, நான் டிராப் பண்றேன்  ..."  என்றான் அவள் அவசரம் புரிந்து. 

 

"வேணாம், என் ஸ்கூல் பஸ் அதோ வருது ... நான் அதுல போய்க்கிறேன் ..." என்றவள் அவனது பதிலுக்காக காத்திருக்காமல் விறுவிறுவென்று நடந்து , அப்பொழுது தான் வந்து நின்ற பஸ்ஸில் ஏறி பயணமானாள்.

 

அவர்களுக்கிடையேயான  நெருக்கம், அவனவளின் முக பாவங்கள் எல்லாம் அவன் மனதிற்கு இனிமை சேர்க்க , நாளை இங்கு வந்து பிரச்சனையை பேசி தீர்த்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டவனுக்கு தெரியாது, நாளை அவன் இங்கு வரப்போவது உறுதிஅவளை பார்க்கப் போவதும் உறுதி ....  ஆனால் பேச்சுவார்த்தை தான் நடைபெறாமலே போகப் போகிறது என்பதை மட்டும் அப்போது  அவன் அறிந்திருக்கவில்லை. 

 

அவள் கிளம்பி சென்றதும்அந்த சிறிய கருப்பு கேட்டின் முன்பு அமர்ந்திருந்த காவலாளியிடம் 500 ரூபாய் தாளை நீட்டி,

 

" தேங்க்ஸ் ..." என்றான் .

 

" பணம் எதுக்கு தம்பி, நீங்க தேடி வந்த செடி கிடைச்சிருச்சா ...."

 

"ம்ம்ம், கிடைச்சிருச்சு .... நாளைக்கு  மறுபடியும் வேற செடியை தேடி  வந்தாலும் வருவேன் .... நான் கிளம்பறேன் ..." என்றவன் அலுவலகத்திற்கு பயணப்பட்டான். 

அலுவலக கலந்துரையாடலை முடித்துக் கொண்டு  வீடு திரும்பும் பொழுது, மணி பதினொன்றைத் தொட்டிருக்க, குளியலறை சென்று சுத்தப்படுத்திக் கொண்டு படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் பிடிபடாமல் போனதோடு வித்தியாசமான சிந்தனை ஒன்று தோன்றி சிதறடித்தது.

 

 

அது , அவன் மனையாளின் வதனத்தில் காணப்பட்டஅளவுக்கு மீறிய வசீகரமும்அவளோடு பின்னிப்பிணைந்த போது அவன் உணர்ந்த உணர்வும். 

 

பொதுவாக அவள் அழகி. அவனைப் பொருத்தமட்டில் அவள் பேரழகி . இருந்தாலும்அவள் இடையில் கரம்  பற்றி  தன்னோடு பிணைத்துக் கொள்ளும் பொழுது, காதல், காமம் போன்ற இயற்கையான உணர்வுகள் துளிர் தெழுந்த போதும், உடன்  ஒரு பெயரிடப்படாத  உணர்வும் பொங்கி எழுந்து அவனை ஆட்கொண்டதை எண்ணி எண்ணி பார்த்து, அதனை வார்த்தைகளால் வரையறுக்க முடியாமல் அதற்கான காரணமும் தெரியாமல் தவித்துக் போனான். 

 

முன்பை காட்டிலும் அவள் மெலிந்திருந்தாள் என்றாலும்

அவள் முகத்தில் காணப்பட்ட சோபையைஇதற்கு முன்பும் ஏதோ ஒரு தருணத்தில் வெகுவாக ரசித்திருக்கிறான் .....

 

அது ....

 

முதல் கூடலுக்குப் பின்பா ....

 

தேன்நிலவின் போதா....

 

கோவாவில் குளித்து விளையாடி, அதிக சந்தோஷத்தில் மூழ்கித் திளைக்கும் போதா ....

 

என அவன் வாழ்க்கையின் ஆகச் சிறந்த  தருணங்களை அவன் வரிசை கட்டிக் கொண்டிருக்கும் போது, சுரீர் என்று ஒரு மின்னல் அவன் சிந்தையை தொட்டுச் சென்றது. 

 

அவள் இரண்டாவது முறை கர்ப்பம் தரித்திருப்பது தெரியாமல், பார்ட்டிக்கு சென்று திரும்பிய அன்றைய இரவின் விளக்கொளியில் இதே எழிலோடு காணப்பட்டவளை ரசித்தது நினைவுக்கு வர, உடனே எழுந்தமர்ந்தவன் , எதை எதையோ யோசித்துப் பார்க்க , மகிழ்ச்சியும் குழப்பமும் போட்டி போட்டுக் கொண்டு மேலோங்கியதே ஒழிய , விடை மட்டும் கிடைக்காமல் போகநாளை அவளை சந்தித்து பேசினால் விடை கிடைத்துவிடும் என்று முடிவெடுத்து ஒரு வித உற்சாகத்துடனே உறக்கத்தை தழுவினான்.

 

மறுநாள் காலை

 

 கழுத்தை நெரிக்கும் பணி அலுவலகத்தில் காத்துக் கொண்டிருந்ததால்முன் தினம் போல் மாலையில் தன்னவளை சந்தித்து பேசலாம் என முடிவெடுத்து அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றான்.

மாலையில் சரியாக பள்ளி முடியும்  நேரத்தில்  அங்கு  வந்தவன், நேற்றைய இடத்தில் காரை நிறுத்தாமல் கவனமாக பள்ளிக்கு நேர் எதிரான சாலையை ஒட்டிய வேறு இடத்தில் நிறுத்திவிட்டு தன்னவளுக்காக  காத்திருக்கலானான்.

 

சற்று நேரத்திற்கெல்லாம் பள்ளி முடிந்ததை பறைசாற்றும் விதமாக அலாரம் ஓங்கி ஒலிக்கமாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போது, ஸ்ரீ லட்சுமியும் வெளியே வந்தாள்.

 

வந்தவளின் கண்களில் ஒருவித தேடுதல் தெரிந்தாலும்அது ராம்சரணுக்கானது அல்ல என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது .

 

மனையாளை கண்டவனின் மனதில் , மத்தாப்புகள் மாரியாய் பொழிய தொடங்க , அவளை சந்திக்கும்  நோக்கில் அவன் சாலையைக் கடக்க எத்தனிக்கும் போது , திடீரென்று ஒரு பெரிய பார்ச்சூனர் கார் வந்து லக்ஷ்மியின் முன்பு  நின்றது.

 

அதிலிருந்து ஒரு வயதான பெண்மணிஒரு பதின் பருவத்துப் பெண்  இறங்கி லட்சுமியிடம் மிகுந்த மகிழ்ச்சியில் ஏதேதோ உரையாடநடப்பது புரியாமல் ராம்சரண் ஒரு கணம் தயங்கி நிற்கும் போதே, அதே காரில் அவர்களுடனேயே எங்கோ பயணப்பட்டாள் ஸ்ரீலக்ஷ்மி .

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

Post a Comment