ஸ்ரீ-ராமம்-25

அத்தியாயம் 25 

 

முதலில் சுதாரித்த ருக்மணிகண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிய சிலையாய் நின்ற மகளிடம்,

 

"லட்சுமிஅழாத ....."

 

"எப்படிம்மா அழாம இருக்க முடியும்.... காட்டு விலங்குகளை விட மோசமான மனுஷ விலங்குகளோட வாழ்ந்துகிட்டு இருக்கேனு நினைக்கும் போது நெஞ்செல்லாம் பதறுது மா.... "

 

"இங்க பாரு ... அருணா ரொம்ப புத்திசாலித்தனமா காய் நகர்த்தி இருக்கா.... அவளே நேரடியா அவங்க வீட்டுக்கு போயி  அறிமுகப்படுத்திக்கிட்டு குட்டியை  பத்தி அவதூறு  சொல்லி இருக்கான்னா , இதைவிட பெரிய திட்டம் ஏதோ வச்சிருக்கானு அர்த்தம்.... இந்த விஷயத்துல நீ கொஞ்சம் பொறுமையா இருக்கறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுது ..."

 

"எப்படிம்மா பொறுமையா இருக்க முடியும் .... இவ்ளோ நாளா என்னை வார்த்தையால எவ்வளவோ வறுத்து எடுத்தாங்க பொறுத்துக்கிட்டு இருந்தேன்.... இப்ப சம்பந்தமே இல்லாம எதுக்காக குட்டி  விஷயத்துல அருணா மூக்க நுழைச்சு அவ வாழ்க்கையை கெடுக்கணும் ..."

 

"இங்க பாரு லஷ்மி சில இடத்துல சத்திரியனா இருக்கிறதை விட சாணக்கியனா இருக்கிறது தான் புத்திசாலித்தனம்.... அருணா ரொம்ப சாமர்த்தியமா திட்டம் போட்டு சதுரங்கம் ஆடறா.... அவளுக்கு நம்ம குட்டியோட கல்யாணத்தை நிறுத்தணுங்கிற எண்ணத்தை விடவேற ஏதோ ஒரு பெரிய நோக்கம் இருக்குமோனு தோணுது ... 

 

இந்த விஷயத்துல நீயும் நானும் அவ கிட்ட தோத்து போயிட்டோம்னு ஒத்துக்கிட்டு தான் ஆகணும் .... நாம தோத்தது அடையாளமா நீ கொஞ்சம் அமைதியா இருந்து தான் ஆகணும் ...." என்றார் ருக்மணி திட்டவட்டமாக .

 

"அம்மா, அது சாமர்த்தியம் இல்லை பச்ச துரோகம் ...

 

"ஆனா கலியுகத்துல அதுக்கு பேர் தான்  சாமர்த்தியம்.... அதுதான் புத்திசாலித்தனம் .... அருணா மெனக்கெட்டு பார்வதியை தேடிப்போய் பார்த்து பேசின விஷயம் காமாட்சி அக்கா மூலமா  உனக்கு , எனக்கும்  தெரிஞ்சு எந்த பிரயோஜனமும் இல்ல .... ஏன்னா அவ தான் செஞ்சான்னு நிரூபிக்க நம்ம கிட்ட எந்த ஆதாரமும் இல்லை... காமாட்சி அக்காவும் வந்து சாட்சி சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க ....

 

"ஆதாரம் இல்லைன்னாஅருணா ஒண்ணுமே செய்யலன்னு ஆயிடுமா ..."

 

"முட்டாள் மாதிரி பேசாத லட்சுமி ... சும்மா அருணா அருணானு சொன்னா எதுவுமே எடுபடாது ... சபைல நிரூபிக்க ஆதாரம் வேணாமா.. விஷயத்தை சொன்ன காமாட்சி அக்காவே என்னை எந்த வில்லங்கத்துக்கும் கூப்பிடாதீங்கனு சொல்லிட்டு போயிட்டாங்க ....

 

பொதுவா ஆம்பளைங்க  கிட்ட அவங்க வீட்டு ஆளுங்கள பத்தி ஆதாரத்தோடு நிரூபிச்சாலே  அவங்க ஏத்துக்கிறது கஷ்டம் .... பத்து வருஷத்துக்கு முன்னாடி உன் அப்பாவோட அண்ணா அண்ணிஎன் குடும்பத்தை தப்பா பேசிட்டாங்கனு நான் ஆதாரத்தோட நிரூபிச்சு கூட உன் அப்பா ஏத்துக்கல... ஏன்னா கூட பிறந்தவங்க மேல உன் அப்பாவுக்கு  இருந்த பாசம் ...

 

அதே மாதிரி தான் உன் வீட்டுக்காரும் .... அவங்க அம்மா தங்கச்சி அவரை மனுஷனா  மதிக்காட்டியும்  இவரு அவங்க மேல கண்மூடித்தனமா பாசம் வச்சிருக்காரு ... இது என்னை விட உனக்கு நல்லாவே தெரியும் ...

 

இப்ப போய் நீ எந்த ஒரு ஆதாரமும் இல்லாம அருணாவை பத்தி சொன்னேனு வைநிச்சயமா அவரு நம்ப மாட்டாரு....  அதோட இன்னும் ரெண்டு நாள்ல அவங்க  குலதெய்வக் கோவில்ல நிஷா பாப்பாக்கு முடி இறக்க உன் மாமனார்  ரொம்ப விமர்சையா  ஏற்பாடு பண்ணி இருக்காரு... நீ ஏற்கனவே சீமந்தம் வேணாம்னு சொல்லி சீமந்தத்தை நிறுத்திட்ட ...

 

இப்ப நீ இந்த விஷயத்தை ஆரம்பிச்சா நிச்சயம் சண்டை வலுக்கும்...  அப்புறம் குழந்தைக்கு முடி இறக்கிறதும் நின்னு  போனாலும் போயிடும் ... 

 

உனக்கும் உன் குழந்தைக்கும் எந்த ஒரு நல்ல விஷயமும் நடக்க கூடாதுன்னு உன் மாமியாரும் நாத்தனாரும் கங்கணம் கட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கு தேவையில்லாம வாய்ப்ப கொடுக்காத ....

 

இவங்க பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தைக்கு செய்ய வேண்டிய சடங்க குறிச்ச நேரத்துல செஞ்சே ஆகணும்மா... இல்லனா  தெய்வ குத்தம் ஆயிடும்... அதனால நமக்கு வீரியத்தை விட காரியம் தான் பெரிசு.... இப்ப காமாட்சி அக்கா மூலமா விஷயத்தை  தெரிஞ்சுகிட்டதால தான கோவம் வருது .... ஒருவேளை அவங்கள  பாக்கலேன்னா விஷயமே தெரிஞ்சிருக்காது இல்லையா ... அப்படி நினைச்சு மனச தேத்திக்க ... உனக்கான நேரம் வரவரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா இருந்து தான் ஆகணும்  ....

 

அநீதி முதல்ல ஜெயிக்கிற மாதிரி தெரியும்ஆனா அது உச்ச கட்டத்துல படுதோல்வி  அடஞ்சிடும்  ... நீதியும் உண்மையும் முதல்ல தோக்கிற மாதிரி தான் தெரியும் ஆனா எல்லையில ஏகோபித்து வெல்லும்  ..."

 

"நான் ரொம்ப பொறுமைசாலி தாம்மா...  ஆனா இந்த விஷயத்துல என்னால ஏனோ பொறுமையா இருக்க முடியல ... நான் சொன்னா என் வீட்டுக்காரு நம்புவாருனு தோணுதும்மா .." என்றவளுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு  நம்பிக்கையை உருக்குலைக்கநூறில் ஒரு சதவீதமாவது , எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தன் கணவன் தன்னை நம்ப மாட்டானா என்ற ஆதங்கம் பிறக்கஅப்படியே அமைதியாகிப் போனாள் பெண் .

 

"திரும்பவும் சொல்றேன் லக்ஷ்மி  ... இன்னும் ரெண்டு நாள்ல குழந்தைக்கு முடி இறக்கணும் ... முடி இறக்கின மறுநாளே குழந்தையோட பொறந்தநாள் வேற வருது ... இந்த நேரத்துல அருணா கிட்ட  இதை எல்லாம் பேசி ஏழரையை இழுத்து விட்டுடாத .... நடந்தது நடந்து போச்சு இனிமே எதையும் மாத்த முடியாது ... ஆனா சூதானமா நடந்துக்கிட்டா, எதிர்காலத்துல நடக்கப் போற விஷயத்தை நல்லபடியா நடத்தி முடிக்கலாம் .... புரிஞ்சுதா ..."

 

என்றவரின் அறிவுரை அவளது சிரசில் ஏறி சிந்தையை தொட்டாலும், நடந்ததை  ஜீரணிக்க முடியாததால்அறைகுறை மனதோடு அவள் தலையசைக்க,

 

" சரிநேரம் ஆயிடுச்சு, அந்த ஆட்டோல ஏறி நீ வீட்டுக்கு போ .... நானும் கிளம்புறேன் ..." என லட்சுமியை ஆட்டோவில் அனுப்பிவிட்டு, தான் ஒரு ஆட்டோவில் ஏறி பயணமானார்.  

 

தாயின் அறிவுரையை பயணம் முழுவதும் உரு போட்டவள், வீட்டில் நுழையவும் , அருணா தன் குழந்தையை தூக்கிக் கொண்டு மாடியில் இருந்து  கூடத்திற்கு வரவும் சரியாக இருந்தது. மிகுந்த கவலையோடு காணப்பட்டவளை  அருணாகண்களில்  வன்மம் மின்ன, லேசான நக்கலுடன் பார்த்து 

 

"என்ன அண்ணி ....  ராமலட்சுமி கல்யாணம் நல்லா நடக்கணும்னு கோவில்ல வேண்டுதல் வச்சுட்டு வரிங்களா ...."  என்றது தான் தாமதம்அவ்வளவு நேரமாக இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமையெல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போக,

 

"அருணா, நீ எல்லாம் ஒரு பொண்ணா ... உன் வயசு தானே ராமலட்சுமிக்கும்.... அவளைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவ கல்யாணத்தையே நிறுத்திட்டியே ...." என  லட்சுமி  ஏறக்குறைய கர்ஜித்து  கோபப்பட, அதனைக் கேட்டபடி மாடியிலிருந்து கற்பகமும் ராம் சரணும் இறங்கி வந்தனர்.

 

கற்பகமும் அருணாவும் கூட்டுக் களவாணிகள் என்பதால் லட்சுமி சொல்ல வந்ததை கற்பகம் தெளிவாக புரிந்து கொண்டு விட்டார், ஆனால் இவ்வளவு சீக்கிரம்  விஷயம் லட்சுமியின் காதுகளுக்கு எப்படி சென்றது என்பது தான் அவருக்கு விளங்கவில்லை ....

 

அங்கிருந்த ராம்சரணுக்கோ தலையும் புரியாமல் காலும் புரியாமல் போக, மனையாளை பார்த்து,

 

"என்ன லக்ஷ்மி ... என்ன பிரச்சனை... ஏன் இப்படி கத்துற ..."  

 

"ராமலட்சுமியோட கல்யாணம்  ஜாதகப் பொருத்தம் சரி இல்லாம ஒன்னும் நிக்கல.... அவளை  பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்கு போய் , அவள பத்தி இல்லாததையும் பொல்லாததையும்   சொல்லி இருக்கா அருணா ... அதைக் கேட்டவங்க உடனே கல்யாணத்தை நிறுத்திட்டுகாரணமா ஜாதக பொருத்தம் சரி இல்லன்னு  பொய் சொல்லிட்டாங்க .."

 

"இது உனக்கு எப்படி தெரிஞ்சது யார் சொன்னா..” என்றவனிடம் கோவிலில் நடந்ததை அவள் புட்டு புட்டு வைக்க

 

"அருணா சொன்னதா வா அந்த காமாட்சி அக்கா  சொன்னாங்க ..."

 

"ஆமா ...."

 

"சரி வா போலாம் ... நான் அவங்கள பாக்கணும் ...." என ராம்சரண் சொன்னதும் ஒரு கணம் லக்ஷ்மி செய்வதறியாது திகைக்க, அருணாவும் அக்கணத்தில் ஆடிப் போய்விட்டாள்.

 

எடுத்த எடுப்பில் காமாட்சி சாட்சி சொல்ல மாட்டார் என்று சொன்னால் தான் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதோடு தன் பக்கம் முற்றிலும் பலவீனம் ஆகிவிடும் என்பதால்  லட்சுமி அடக்கி வாசிக்க  உடனே சுதாரித்த அருணா,

 

"என்ன அண்ணே... நீயும் இப்படி பேசுற ... அண்ணி தான் ஏதேதோ சொல்றாங்கன்னாநீயும் அத நம்பி யாரையோ பார்க்கணும்னு கிளம்புற ...

 

அண்ணி சொல்ற அந்த காமாட்சி அக்கா யாருன்னே எனக்கு  தெரியாது .... அவங்கள முன்ன பின்ன நான் பார்த்ததே இல்லை  ....( அருணா நேரடியாக பார்வதியை சந்தித்து  விட்டு வந்திருந்ததால்  காமாட்சியை அவளுக்கு மெய்யாகவே தெரியாது போக)வேணும்னா சாமி மேல சத்தியம் பண்றேன் ..."  என்ற அருணா வேகமாக சென்று பூஜை அறையில்  மாட்டியிருந்த பெரிய வெங்கடேச பெருமாளின் படத்தின் மீது அடித்து சத்தியம் செய்ய,

 

"அருணா .... ஒரு பொண்ணு கல்யாணத்த நிறுத்துற அளவுக்கு தரம் தாழ்ந்து நடந்து கிட்ட உனக்கெல்லாம் சத்தியம் சக்கரை பொங்கல்னு எனக்கு தெரியும்  .... நீ சாமி மேல செய்யற சத்தியத்தை  நான் நம்ப  மாட்டேன் ..." என லட்சுமி பதிலுக்கு பொங்க ,

 

"அண்ணி ,உங்களுக்கு நான் இந்த வீட்டுக்கு வர்றது பிடிக்கலன்னா நேரடியாவே சொல்லியிருக்கலாமே இப்படி என் மேல தேவையில்லாத பழியை போடறீங்களே... ராமலட்சுமியோட கல்யாணம் நின்னு போச்சுன்னு இப்ப நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும் ...  நீங்க சொல்ற காமாட்சி யாருன்னு எனக்கு சத்தியமா தெரியாது அண்ணி....

 

நானே இன்னைக்கோ  நாளைக்கோனு உயிருக்கு போராடிகிட்டு இருக்கிற குழந்தையை வச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு இருக்கேன் ....

 

எத்த சாப்ட்டா பித்தம் தெளியும்னு கோவில், குளம் , ஜோசியம், குறி கேட்கிறது ஹோமியோபதி , சித்த மருத்துவம்னு என் குழந்தைக்காக அல்லாடி கிட்டு இருக்கேன் ... என் மேல போய் இப்படி ஒரு அபாண்டத்தை சொல்றீங்களே .... உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ..." என வகைத்தொகையாக வார்த்தை கோர்ப்புகளோடு அவள் தன் தரப்பு வாதத்தை மிக நேர்த்தியாக குலுங்கி அழுதபடி வைக்கதங்கையின் அழுகையில் மனம் இளகியவன்,

 

 

"காமாட்சி அக்கா யாருன்னே தெரியாதுனு அருணா  சத்தியம் பண்றாளே .... இதுக்கு என்ன சொல்ற லட்சுமி ..."

 

"அருணாவுக்கு காமாட்சி அக்காவ வேணா தெரியாம இருக்கலாம் ஆனா பையனோட அம்மா  பார்வதியை நல்லா தெரியுமே... அவங்கள போய் பார்த்து தானே ராமலட்சுமியை பத்தி  இவ அவதூறு சொன்னா.. " என்றாள் லட்சுமி வேகமாய். 

 

"என்ன லஷ்மி நீ மாத்தி மாத்தி பேசுற ... இப்பதான் காமாட்சி அக்கா அருணா சொன்னதா  சொன்னாங்கன்னு சொன்ன...  அருணா சாமி மேல சத்தியம் பண்ணதும் இப்ப  வேற மாதிரி பேசுற .... ஒன்னு பண்ணுவோம் .... என் கூட கிளம்பி வா ... அந்த காமாட்சி அக்கா வீட்டுக்கு போயிட்டு வந்துடலாம் ..." என்றதும் லட்சுமி தடுமாற,

 

"கிளம்பு லட்சுமி அவங்கள போய் பார்த்தா தான் உண்மை எது பொய் எதுன்னு தெரிய வரும்  ..." 

 

கண்களில் கண்ணீர் மல்க தலை குனிந்தவள் 

 

"நாம அவங்கள போய் பார்த்தாலும், அப்படி எதுவுமே நடக்கலனு தான் சொல்லுவாங்க...." என்றாள் உதட்டை கடித்து விசும்பலை கட்டுப்படுத்திய படி.

 

"வாட் .... லஷ்மி இன்னைக்கு உனக்கு என்ன  ஆச்சு .... ஏன் இப்படி முன்னுக்கு பின் முரணா உளர ... உன்கிட்ட அருணாவை பத்தி சொன்னவங்க... என்கிட்ட சொல்ல மாட்டாங்களா ..." என்றவனிடம் காமாட்சி கூறிய காரணங்களை அவள் அடுக்கசற்றும் எதிர்பார்க்காத அந்த  திருப்பத்தை கேட்டு கற்பகம், அருணா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போக 

 

"பொண்ணு பார்த்துட்டு போன பையன் வீட்ல போய்  கேட்டாலும்  பதில் வராதுனு சொல்ற ....  காமாட்சி அக்காவும்  சாட்சி சொல்ல மாட்டாங்கனு சொல்ற இப்ப நான் என்னதான் பண்றது ...  இங்க பாரு லட்சுமி  .... ஒருத்தர் மேல பழி சொன்னா போதாது .... அதை சரியான ஆதாரத்தோட நிரூபிக்கணும் ..... ஆதாரம் இல்லாம நான் மட்டுமல்ல யாரும் எதையும் நம்ப மாட்டாங்க ... "  என்றவனின் சினம் தோய்ந்த சிவந்த முகம் அவள் மனதில் கல்வெட்டாய் பதிந்து போக ,

 

"நான் பொய் சொல்லலங்க ..."  அவன் விழிகளைப் பார்த்து கலங்கிய கண்களோடு நயந்த குரலில் அவள் கூற, அந்த வார்த்தையும் பார்வையும் அவனை ஏதோ செய்யஒரு கணம் அவன் யோசித்து சுதாரிப்பதற்குள்

 

"ஜாதக பொருத்தம் சரி இல்லாம நின்னு போன கல்யாணத்தைஎன்னால நின்னு போனதா சொல்லிட்டீங்களே அண்ணி .... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ... உங்களுக்கு ஆரம்பத்துல இருந்தே என்னை பிடிக்கல போல ....எனக்கு தான் இத்தனை நாளா அது தெரியாம இருந்திருக்கு ... " என கிடைத்த மேடையை சரியாக பயன்படுத்திக் கொண்டு அழகான வசனங்களோடு அருமையான நாடகத்தை மீண்டும் அரங்கேற்றினாள் அருணா. 

 

"சில நேரங்கள்ல சில விஷயங்களை சூழ்நிலை காரணமா நிரூபிக்க முடியாம போயிடும் ... இப்ப என் நிலைமையும் அது தான்... என்னால நிரூபிக்க முடியாததால் நீ சொல்லலனு  ஆயிடாது அருணா உன் மனசாட்சிக்கு தெரியும் நீ சொன்னையா இல்லையானு...  நீ சத்தியம் பண்ண அதே சாமி மேல நானும் சத்தியம் பண்றேன் நீ தான் சொன்னேனு...."  என்றவள் கடைசி நம்பிக்கையாய் கடவுளை நாடி கற்பூரம் அணைத்து சத்தியம் செய்ய, ஒரு கணம் தடுமாறிய அருணா , உடனே 

"என் குழந்தை மேல சத்தியமா சொல்றேன் நான்  யார் வீட்டுக்கும் போகல , யாரையும் பாக்கலஎதையும் சொல்லல ....." என முடித்தாள் தீர்க்கமாய் .

 

உண்மையிலேயே கடவுளின் மீது பக்தியும் , ஏதுமறியாத  குழந்தைகள் மீது பாசமும் கொண்டவர்கள்   எந்த சூழ்நிலையிலும்  அவர்கள் மீது பொய் சத்தியம் செய்ய மாட்டார்கள். 

 

அருணா போன்ற சுயநலவாதிகள் யாரைப் பற்றியும்  சிந்திக்காமல் அந்த தருண தர்க்கத்தில்  வென்றால் போதும்  என்ற எண்ணத்தில் எந்த எல்லைக்கும் செல்வார்கள் ...

 

அவர்களுக்கு கடவுள், குழந்தை, கணவன் , குடும்பம் எதுவுமே ஒரு பொருட்டல்ல .... 

 

பிடிக்காதவர்களை எந்த எல்லைக்கும் சென்று அழிக்கவும்தங்களது வாழ்வை  ஆனந்தமாக மாற்றி அமைத்துக் கொள்வதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால்விளைய போகும் நன்மை தீமைகள் பாவ புண்ணியங்களை பற்றி கவலைப்படாமல் அருணா செயல்பட முனைய

"அருணா தப்பு மேல தப்பு செய்யாதே ...  நீ சாமி மேல பண்ணின  பொய் சத்தியத்துக்கு உனக்கு தண்டனை கிடைச்சுட்டு போகட்டும் ... ஆனா எதுக்கு  தேவையில்லாம ஏற்கனவே ஆயிரம் வியாதியோட கஷ்டப்பட்டு கிட்டு இருக்கிற குழந்தை மேல சத்தியம் பண்ண பாக்குற ...."

 

"லட்சுமி  வாய மூடு ..." என ராம்சரண் இடை புகுந்து கூற 

 

"என் குழந்தை மேல பாசம் இருக்கிற மாதிரி என்னமா நடிக்கிறீங்க ... உங்களுக்கு என்னையும் பிடிக்காது என் குழந்தையும் பிடிக்காது ... நான் என்னை நிரூபிக்க என் குழந்தை மேல சத்தியம் பண்ணா உங்களுக்கு என்ன வந்தது ..." என்றவள் குழந்தையின் கரம்  பற்றி இழுத்துக் கொண்டு பூஜை அறை நோக்கி செல்ல

 

 

"ஐயோ அருணா ... சின்ன குழந்தை மேல சத்தியம் பண்றத முதல்ல நிறுத்து .." என்று உச்சஸ்தாழியில் உரைத்த  லட்சுமி குழந்தையின் மறு கரத்தை பற்றி தடுக்க

 

"இப்ப என் குழந்தை கைய விட போறீங்களா இல்லையா ... "

 

"அருணாகுழந்தை மேல  சத்தியம் பண்ணி யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல ... நான் உன்னை நம்பறேன் ..." என இடைப்பகுந்து ராம்சரண் கூற, அதனைக் கேட்டு அருணாவின் மனம் கொக்கரிக்க, கணவன் தன் வார்த்தைகளை நம்பவில்லை என்ற அதிலிருந்த மறைமுக செய்தி லட்சுமியின் நெஞ்சை அழுத்த

 

"வேண்டாம் அருணா ... குழந்தையோட லைஃப்ல  அனாவசியமா விளையாடாத ... " என லட்சுமி கெஞ்ச 

 

"நீங்க சொன்ன பொய்க்கு உங்ககிட்ட ஆதாரம் இல்ல ... தப்பே பண்ணாத நான் சாமி மேல சத்தியம் பண்ணாலும் ஒத்துக்க மாட்டேங்கறீங்க... என் குழந்தை மேல சத்தியம் பண்ணி என்னை நிரூபிக்க பார்த்தா  தடுக்க பாக்கறீங்க ...நான் என்னதான் பண்றது  ..."

 

பெண்கள் இருவரும் குரலை உயர்த்தி மாறி மாறி பேசிக்கொண்டே செல்லராம் சரண் இடைப் புகுந்து தர்க்கத்தை நிறுத்த முயலஆனால் அருணா அடங்காமல் ஆடவேறு வழி  தெரியாமல் லட்சுமி 

"அருணாநீ தப்பு பண்ணலன்னு நிரூபிக்கணும்னா குழந்தை மேல சத்தியம் பண்ணாத என் மேல சத்தியம் பண்ணு ... 

 

நியாய தர்மம்னா என்னன்னே தெரியாத , கொஞ்சம் கூட மனுஷத்தன்மையே இல்லாத இந்த மாதிரியான கேடுகெட்ட வீட்ல வாக்கப்பட்டு நித்தம் நித்தம் செத்துப் பொழைக்கறதை விடஉன்னோட பொய் சத்தியத்தால ஒரேடியா நான் செத்து தொலையறேன்  அப்படி நடந்தா எனக்கும் நிம்மதி இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கும் நிம்மதி ..." என குரலை அழுகையினுடே கூட்டி  கொந்தளித்த லட்சுமியின்  கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ராம்சரண்.

 

ஒரு கணம் அங்கிருந்த குழந்தைகள் உட்பட அனைவரும் ஸ்தம்பித்து போக, லட்சுமியின் அழுகுரல் மட்டும் ஓங்கி ஒலிக்கமெல்லிய விழி நீரோடு , மனைவியை அடித்த குற்ற உணர்வும் அவன் முகத்தில் வேக ரேகையாக விரிய , அதனை நீடிக்க விருப்பம் இல்லாமல்,

 

"அண்ணே ...." என அருணா ஏதோ சொல்ல வர 

 

"ஸ்டாப்பிட் அருணா ... இனிமே இந்த வீட்ல யாராவது ஏதாவது பேசனீங்க... நான் மனுஷனா இருக்க மாட்டேன் ...நீ உன் வீட்டுக்கு இப்பவே  கிளம்பு ..."  என்றவனின் திடீர் முடிவில் அருணாவை விட அதிகம் அதிர்ந்த கற்பகம்,

 

"இன்னும் ரெண்டு நாள்ல குழந்தைக்கு முடி இறக்கிற விசேஷத்தை வச்சுக்கிட்டுஇவளை ஏண்டா  அவ வீட்டுக்கு  போக சொல்ற ...

 

ஒருவேளை நடந்த பிரச்சனைல குழந்தைக்கு குலதெய்வ கோவிலில்ல முடி இறக்கவே வேணாம்னு முடிவு பண்ணிட்டியா ..." என அடியெடுத்து கொடுக்கஅப்போதுதான் லட்சுமிக்கு கற்பகம் அருணாவை  பற்றி தன் தாய்  எவ்வளவு சரியாக கணித்திருக்கிறார் என்பது புரிய வர, வீட்டை விட்டு வெளியேற  துளிர்த்த எண்ணத்தை முழுமையாக துடைத்தெறிந்து விட்டு கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்த தன் குழந்தையை  கண்களில் கண்ணீர் தளும்ப அள்ளிக்கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டாள்.

 

"அருணாவை அமெரிக்கா வா போக சொன்னேன் ... இங்க இருக்குற அவ வீட்டுக்கு தானே போக சொன்னேன்... அதோட நம்ம ஊர் பச்சை மலை புரத்துல தான முடி எடுக்க போறோம் ... ஹரிஷோட கிளம்பி அவ நேரடியா அங்க  வந்தா போதும் ..."  என இறுக்கமான முகத்தோடுவீட்டில் அணிந்திருந்த பனியனின் மீது டி ஷர்ட்டை அணிந்து கொண்டு , ராம் சரண் தன் காரை நோக்கி செல்ல,

 

"சரண்அப்ப நானும் அருணா கூடவே  இப்ப கிளம்பி போயிட்டு பச்சை மலை புறத்துக்கு நேரா வந்துடறேன் ..."  என தன் கோபத்தை கற்பகம் மறைமுகமாக காட்ட 

 

 

"உன் இஷ்டம் ..." என்ற படி பறந்து விட்டான் மைந்தன். 

 

அன்று சமையல்கார பெண்மணி சாந்தி சப்பாத்தி சப்ஜி என எதையோ சமைத்துவிட்டு சென்றிருக்கஉண்ண மனம் இல்லாமல் உள்ளுக்குள்ளே போராடியபடி குழந்தையை அணைத்துக் கொண்டு உறங்கியே போனாள் லட்சுமி. 

 

வீட்டை விட்டு கிளம்பியவன் வீரா வீட்டிற்குச் சென்று தனிமையில் அவனிடம்  நடந்தவைகளை மனபாரம் தீர பகிர்ந்து விட்டு 

 

"நான் லட்சுமியை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா, ஆனா ஆதாரமே இல்லாம ஒரு விஷயத்தை பேசினா நான் எப்படிடா அவளுக்கு ஆதரவா பேச முடியும் ..." என ராம்சரண் புலம்ப,

 

"நீ லட்சுமியை  நேசிக்கிறது சரி , ஆனா அவப்பக்கம் நின்னு யோசிக்கிறயாங்கிறது தான் இப்ப பிரச்சனையே ...." என்றான் வீரா வழக்கம் போல் வெடுக்கென்று.

 

" ......"

 

அமைதியா இருந்தா எப்படி ... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிச்சு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது ... இந்த ரெண்டு வருஷத்துல எந்த விஷயத்துக்காவது  லக்ஷ்மி  பொய் சொல்லி இருக்காளா ... இப்ப லட்சுமி  திடீர்னு இப்படி பேச வேண்டிய அவசியம் என்னனு  யோசிக்க மாட்டியா ..."

 

"எனக்கு தெரிஞ்சுஅவ சின்ன விஷயத்துக்கு கூட பொய் சொன்னதில்ல டா ..... எப்பவுமே  அலட்டல் இல்லாம ரொம்ப  இயல்பா இருப்பா ..என் அம்மா தங்கச்சி விஷயத்துல கூட  பொய் சொன்னதில்ல ஆனா அவங்கள பத்தின அவளோட புரிதல்ல கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்  ..."

 

"நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா,  ஏதோ நடந்திருக்குஅத லட்சுமி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கான்னு சொல்ல வரியா ..."

 

"சொல்ல தெரியல டா ... அருணா ஏற்கனவே 1008 பிரச்சனைல இருக்கா அவ இந்த மாதிரி செய்ய வாய்ப்பே இல்ல ... லட்சுமியும் பொய் பேசுற ஆள் கிடையாது .... எனக்கு இந்த விஷயத்துல என்ன முடிவெடுக்கிறது எப்படி முடிவு எடுக்கிறதுன்னே  தெரியல..."

 

"லட்சுமியோட அம்மா கிட்ட பேசினியா ..."

 

"கார்ல வரும் போது பேசினேன் டா ... அவங்களும் லட்சுமி சொன்னதையே தான் சொன்னாங்க  .... உடனே அவங்க கிட்ட  அந்த காமாட்சி அக்காவோட அட்ரஸ் வாங்கிக்கிட்டு அவங்களயும் போய் பார்த்தேன் .... அவங்க கல்யாணம் நின்னு போனதுக்கு ஜாதகம் பொருத்தம் சரி இல்லாததுதான் காரணம்னு, பையன் வீட்டிலிருந்து அவங்களுக்கு அனுப்பின  whatsapp மெசேஜை காட்டினாங்க.... அதோட லட்சுமியையும்அவங்க அம்மாவையும் கோவில்ல பார்க்கவே இல்லைன்னு சொல்றாங்க ... இப்ப சொல்லு ...நான் என்ன பண்ண முடியும்   ..."

 

(லட்சுமி கோவிலில் கர்ஜித்ததை வைத்துநிச்சயம்  அவள் வீட்டில் பூகம்பம் வெடிக்கும் .... லஷ்மி வீட்டு நபர்கள் யாரேனும் திருமணம் நின்று  போனதை குறித்துப் பேச தன் இல்லம் வருவார்கள்  என்பதை  அனுமானித்துகாத்திருந்த காமாட்சிக்கு அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ராம்சரண் சென்று விசாரிக்க, ஏற்கனவே ஒத்திகை பார்த்திருந்ததால் வெகு இயல்பாக முகத்தை வைத்துக்கொண்டுஅணு அளவு கூட சந்தேகம் வராத அளவிற்கு அம்சமாக நடித்து மறுத்திருந்தார்) 

 

"சரி உன் பக்கம் எல்லாமே சரியா இருக்குன்னு வச்சுக்க... எதுக்காக லட்சுமியை தேவை இல்லாம அடிச்ச..."

 

"அவ எப்படி டா அப்படி பேசலாம் ....

 

ஏதோ கேடுகெட்ட குடும்பத்துல, மனுஷ தன்மையில்லாத குடும்பத்துல  வாக்கப்பட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன் .... அதுக்கு செத்து தொலையல்லாம்னு வாய்க்கு வந்தபடி சகட்டுமேனிக்கு பேசறாடா .... அப்ப நான் கேடு கெட்டவனா ....என் கூட வாழறத விட செத்து போறது பெட்டரா .... என்ன பேச்சு இது ... நான் அவளுக்கு ஒரு குறை வரக்கூடாதுன்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யறேண்டா...  ஆனா, அவ என் பேச்சை காதுல வாங்க மாட்டேங்குற ..." என்றான் தன் ஆதங்கத்தைக் கொட்டி. 

 

"முதல்ல லட்சுமி கிட்ட பொறுமையா பேசிநடந்தது தெரிஞ்சிக்க ..." 

 

"சரி ..." என்று அரைகுறையாக தலையாட்டியவன்வீராவின் இல்லத்திலேயே இரவு உணவை முடித்துவிட்டுஅவனது  தாயார்தங்கை அன்புச்செல்வி ஆகியோரை குழந்தைக்கு முடி இறக்கும் வைபவத்திற்கு மீண்டும் ஒருமுறை அழைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

 

வீடே  மயான அமைதியில் மூழ்கி இருந்தது. 

 

குழந்தையை அணைத்தபடி லட்சுமி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவன் அடித்ததால் சிவந்த அவளது பட்டு கன்னத்தை லேசாக வருட எண்ணியவன்அவளது உறக்கத்தை நினைத்துவிடுத்து தள்ளி படுத்து அயர்ந்து விட்டான்.

 

மறுநாள் காலை வழக்கம் போல் விடியகற்பகம்அருணா வீட்டில் இல்லாதது ஓரளவிற்கு மனதிற்கு இதம் அளித்தாலும் , தன்னவனுடனான தர்க்கம் பேசப்படாமல்  இருந்ததால்தளிர் மேனியாளின் மனதில் ஒருவித தவிப்பே ஆக்கிரமித்திருக்க , அதனைப் புறம் தள்ளிவிட்டு எப்பொழுதும் போல் அவன் அலுவலகம் செல்வதற்காக காலை மற்றும் மதிய உணவு தயாரிப்பில் ஈடுபட்டாள்.

 

மனையாளின் அமைதிஒதுக்கம் எல்லாம் ராம்சரணின்  மனதை வெகுவாகப் பிசைய, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தான் என்ற எண்ணத்தில் அவள் தயாரித்து வைத்திருந்த உணவை தொட்டுக் கூட பார்க்காமல் அலுவலகம் கிளம்பி சென்று விட, அவனது பாரா முகமும் உதாசீனமும் மங்கையை வாட்ட கலங்கிப் போனாள் காரிகை. 

 

 

அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய ராம்சரணுடன் வீராவும் வந்திருந்தான். 

 

இருவருக்கும் பொதுவான நண்பனான ஸ்ரீனிவாசனை உணவகத்தில் நட்பு ரீதியாக  சந்தித்து அளவளாவி விட்டு இரவு உணவை முடித்துக்கொண்டு  வரும்  எண்ணம்  இருந்ததால்தொலைவில் இருக்கும் தன் இல்லத்திற்கு செல்லாமல்ராம்சரணின் இல்லத்தில் தன் காரை நிறுத்திவிட்டு அவன் காரில் பறக்க திட்டமிட்டு வந்திருந்தான் வீரா.

 

இன்முகத்தோடு வீராவை வரவேற்று, அவன் புத்துணர்வு பெற்றபின்லட்சுமி  காபி கொடுக்க 

 

"நீ காபி சாப்பிடு ... நான்  10 மினிட்ஸ்ல  ப்ரெஷ்  ஆயிட்டு வந்துடறேன்..." என வீராவைப் பார்த்து கூறிவிட்டு  தன் அறைக்குச் சென்று விட்டான் ராம் சரண்.

 

"காபி நல்லா இருக்கும்மா..." என்றவனிடம் ராம்சரண் சொல்லாமல் விட்டிருந்த கற்பகம் அருணாவை பற்றிய மிச்ச சொச்சத்தை கண் கலங்கிய படி கூறி 

 

"அவருக்கு நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ண கூடாதா .... நான் எவ்வளவோ அவங்க அம்மா தங்கச்சியை  அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறேன் ... ஆனா நான் என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டேங்கிறாரு...  அவங்க அம்மா தங்கச்சி சொல்றதைத்தான் நம்பறாரு..."  என  சன்னமாக  முடித்தாள் லட்சுமி. 

 

உடனே அவன் அவளைப் பற்றி  ராம்சரண் தன்னிடம் பகிர்ந்ததை  பகிர்ந்து,

 

"சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் உங்க ரெண்டு பேருக்குள்ள நடந்திருக்கு  அவ்ளோ தான் ....  ராம்சரண் ரொம்ப நல்லவன் .... என்ன ஒன்னுகொஞ்சம் முன்கோபி ... ஆனா உன் மேல அளவு கடந்த பாசம் வச்சிருக்காம்மா... இவ்ளோ பொறுமையா என்கிட்ட எடுத்து சொன்ன மாதிரி அவங்க கிட்டயும் எடுத்து சொல்லு நிச்சயமா புரிஞ்சுப்பான்... நானும் பேசறேன் ..." என்றவன் முடிக்கவும் ராம்சரண் கிளம்பி வரவும் சரியாக இருந்தது.

 

"நான் டின்னர் வெளியே சாப்பிட போறேன் ... நீ சாப்பிட்டு தூங்கு ... வாடா போலாம் ..." என்று வீராவோடு கிளம்பி சென்று விட்டான் ராம்சரண்.

 

ஸ்ரீனிவாசனோடு இரவு  உணவை முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பும் போதுலட்சுமி சொன்னதை வீரா பகிர,

 

"மேடம் உங்கிட்ட இவ்ளோ தெளிவா பேசி இருக்காங்க .... என்கிட்ட பேசினா என்னவாம்..."

 

"டேய் அவளை திட்டாதடா ... பொறுமையா பேசு ..."

 

"பொறுமையா பேசறேன் ..." என கோபத்தை அடக்கியபடி  மொழிந்தவனிடம் தன் இல்லத்தில் இறங்கிக் கொண்டு 

 

"நாளைக்கு உன் வீட்டுக்கு வந்து கார் எடுத்துக்கிறேன் டா  ..." என விடைபெற்றான் வீரா. 

 

 

உனக்கு என்னடி அவ்ளோ கோவம் என் மேல ... என் மூஞ்ச பாத்து ஒரு வார்த்தை பேச மாட்டேங்கிற ....  ஆனா வீரா கிட்ட கதை கதையா வீட்டு விஷயம் மொத்தத்தையும் வில்லு பாட்டு பாடி வச்சிருக்க ... மேடம்க்கு என்னை பாத்தா மட்டும் இளிச்சவாயனா தெரியுதோ...

 

உனக்கு இருக்குடி இன்னிக்கு ....  என கருவிய படி வீடு வந்து சேர்ந்தவன்தன் தந்தை ரங்கசாமியின் கார் வீட்டு வாயிலில் நிற்பதை பார்த்து,

 

" ஓ காட் ...."  என்றான்.

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

Post a Comment