ஸ்ரீ-ராமம்-23

அத்தியாயம் 23 

 

 

கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு முன்பு நடந்தவைகள்.

 

லட்சுமி அவனை வற்புறுத்தி வீட்டிற்கு போகச் சொன்னதும்மருத்துவமனையில் இருந்து அவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பும் போதே, அருணா அவனை அலைபேசியில் அழைத்தாள்.

 

"சொல்லு அருணா ..." என்றதும்

 

"அண்ணே...  எங்க இருக்க ..." என்று கதறி அழுதபடி அவள் கேட்க,

 

"வீட்டுக்கு தான் வந்து கிட்டு இருக்கேன்... என்ன ஆச்சு ஏன் அழுவுற...." என்றான் பதட்டமாக. 

 

"திடீர்னு அஜய்க்கு மூச்சு திணறல் வந்துடுச்சு.... கை கால் எல்லாம் வீங்கி போயிடுச்சு... உதடெல்லாம் நீல கலர்ல ஆயிடுச்சு ... நம்ம வீட்டு பக்கத்துல இருக்கிற Kk ஹாஸ்பிடல்ல தான் குழந்தையை சேர்த்திருக்கேன் .... கொஞ்சம் சீக்கிரமா வா அண்ணே .... ஹரிஷுக்கும் போன் போட்டு சொல்லிட்டேன்.... அவரு பொள்ளாச்சில இருக்காரு கிளம்பி வரேன்னு சொல்லிட்டாரு ..." என்றாள் அழுகையினூடே.

 

ஒரு கணம் ராம்சரணுக்கு ஒன்றுமே புரியவில்லை ....  தன் காதுகளை நம்புவது வேண்டாமா என அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே

"அண்ணே.... லைன்ல இருக்கியா ..." என்றாள். 

 

"இருக்கேன் அருணா ... இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல ஹாஸ்பிடல் வந்துடுவேன்..." என்றவன் மின்னல் வேகத்தில் காரை செலுத்தி  மருத்துவமனையை அடைந்தான்.

 

அவன் மருத்துவமனையில் நுழைவதற்கும்குழந்தையை பரிசோதித்து விட்டு மருத்துவர் அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருக்க,

 

"டாக்டர்குழந்தைக்கு என்ன ஆச்சு ..."  என்றான் கவலையாக.

 

"எட்ரியல் செப்டல் டிஃபெக்ட் (ASD)னு சொல்லுவோம்... உங்களுக்கு புரிய மாதிரி சொல்லணும்னா குழந்தையோட ஹார்ட்ல ஹோல் இருக்கு ....  இது சில குழந்தைகளுக்கு பர்த் டிபெக்ட்டா பிறக்கும் போதே இருக்கும்.... அஞ்சு வயசு ஆகுறதுக்குள்ள தானா க்ளோஸ் ஆயிடும் .... சில குழந்தைகளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் சரியாகும்.. இந்த மாதிரியான குழந்தைங்க மூச்சுவிட ரொம்ப சிரமப்படும் ....ஏன்னா ஹார்ட்டுக்கு  போற பிளட் லங்ஸ்க்கு போகும் போது குழந்தைங்க மூச்சு விட முடியாம திணறுவாங்க ..  அப்ப  லிப்ஸ் ப்ளூ ஆயிடும் ....  " என்றவரின் பேச்சை இடைவெட்டி 

 

"இதுக்கு முன்னாடி இப்படி நடந்தது இல்ல டாக்டர் இதான் ஃபர்ஸ்ட் டைம் ..." என்றான் ராம்சரண் ஒருவித பதற்றத்தோடு.

 

 

"சில குழந்தைகளுக்கு  சின்ன சின்ன சிம்டம்ஸ் தொடக்கத்துலயே காட்டும்... ஆனா பேரன்ட்ஸ் சில சமயம் அதை சாதாரண சளி இருமல்னு நினைச்சு இக்னோர் பண்ணிடுவாங்க .... சில குழந்தைகளுக்கு சிம்டம்ஸ் காட்டாது ..."

 

" இப்ப என்ன பண்றது டாக்டர் ..."

 

"இப்போதைக்கு பேசிக் டெஸ்ட்ஸ் தான் எடுத்திருக்கோம் ....  இன்னும் எம்ஆர்ஐ மாதிரி ஏகப்பட்ட டெஸ்ட்ஸ்  இருக்கு ... அதெல்லாம்  எடுத்ததுக்கப்புறம் ஹோலோட சைஸ் (Hole) என்னஅது ஹார்ட்டுக்கு எவ்வளோ பக்கத்துல  இருக்குன்னு  தெரிஞ்சுடும்... அப்புறம்  TransCatheter Closureஆ இல்ல ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணலாமான்னு ஒரு முடிவுக்கு வந்துடலாம் ..." என்றார்.

 

 பிறகு மருத்துவர்அனைத்து மருத்துவ  சோதனைகளுக்கும் குழந்தையை ஒன்றன்பின் ஒன்றாக  உட்படுத்தி அறிக்கையை கொடுக்ககிடைக்கப்பெற்ற ஒவ்வொரு அறிக்கையும்நோயின் தீவிரத்தை சொன்னாலும்பெரிதாக பயமுறுத்தும் அளவிற்கு  கடுமை அதிகம் இல்லை என்பதால் சற்று சமாதானம் அடைந்தான் ராம்சரண். 

 

கடைசியாக அனைத்து அறிக்கைகளும் கிடைக்கப்பெற்ற பின்பு,

 

"ஹோல் சைஸ் 8mm இருக்கு ... அதோட அது ஹார்ட் வால்வுக்கு ரொம்ப க்ளோசாவும் இருக்கு .... இருந்தாலும் குழந்தைக்கு இன்னும் அஞ்சு வயசு ஆகல .... அதனால ஒரு 10 மந்த்ஸ்க்கு டேப்லெட்ஸ் எடுத்துக்கட்டும்... வேற ஏதாவது சேஞ்சஸ் கிடைக்குதான்னு வெயிட் பண்ணி பார்க்கலாம் அதோட குழந்தையும்  ரொம்ப வீக்கா இருக்கான் .... அவன் உடம்பு கொஞ்சம் தேறினதுக்கு அப்புறம் மறுபடியும் டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு என்ன மாதிரி சர்ஜரி பண்ணலாம்னு யோசிக்கலாம்  ..." என முடித்தார்.

 

அப்போதைக்கு குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற செய்தியே ராம்சரணை நிம்மதியுற செய்ய, அப்போது  ஹரிஷும் அங்கு வந்துவிட 

 

"லட்சுமியை ஹாஸ்பிடல் சேர்த்திருக்கேன் ... நான் கிளம்பறேன்.." என விடைபெற்றான் ராம்சரண்.

 

பொதுவாக பெரும்பாலும் அலுவலகத்தில் அவனுடைய அலைபேசி அமைதி நிலையில் இருக்கும், மாலை  வீட்டிற்கு வந்ததும் தான் ஒலி நிலைக்கு மாற்றுவான். 

 

அன்றைய பரபரப்பில் அப்படி செய்ய சந்தர்ப்பம் அமையாமல் போனதோடு, எதிர்பாராமல் ஏற்பட்ட  குழந்தையின் உடல்நிலை கோளாறு அவனை வெகுவாக பாதித்திருந்ததால் அலைபேசி அதிர்வுகளில் இருந்தும், அவன் கவனத்தைக் கவராமல் போக அலைபேசியை  எடுக்கத் தவறி இருந்தான். 

 

என நடந்ததை ஒன்று விடாமல் அவன்  கூறி முடிக்கயார் மீது பிழை சொல்வது என தெரியாமல்  தன் விதியை நொந்து கொண்டவள், அதனை வெளி காட்டாமல்,

 

"இப்ப குழந்தை எப்படி இருக்கான் ..." என்றாள் லட்சுமி மென்மையாக.

 

"குழந்தை இன்னமும் ஹாஸ்பிடல்ல தான் இருக்கான்...நாளைக்கு ஈவினிங் தான் டிஸ்சார்ஜ் ..." என்றவன் தொட்டில் கடத்தப்பட்டிருந்த தன் குழந்தையை நெருங்கி வாஞ்சையோடு ஒரு விரலால் அதன் கன்னத்தை தொட்டான்.

 

உடனே ருக்மணி குழந்தையை எடுத்து, அவன் ஏந்திக் கொள்ள ஏதுவாக கையில் கொடுக்ககுழந்தையை அருகில் பார்த்து அசந்து போய்விட்டான்.

 

மூன்றரை கிலோவிற்கு மேல் கொழு கொழுவென ரோஜா பூ நிறத்தில்அவனையே உரித்துக் கொண்டு பிறந்திருந்தாள் .... அவன் பெண்ணரசி ...

 

"நீ சொன்னது பலிச்சிடுச்சி லட்சுமி ...  குழந்தை என்னை மாதிரியே இருக்கா  ..." என்றான் பெருமையாக. 

 

அப்பொழுது செவிலியர் வந்து, அனைவரையும் அறையை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டுகுழந்தைக்கு முதல் முதலாக அமுத ஊட்டும் முறையை சொல்லிக் கொடுத்தார்.

 

குழந்தை தாய்ப்பால் அருந்தி கொண்டிருக்கும் போதே நன்றாக உறங்கிவிட , அதனைத் சற்று நேரம் தோளில் வைத்து தட்டியபடி நடை பயின்றுவிட்டு தொட்டிலில் கிடத்தினார் ருக்மணி .

 

சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவமனைக்கு வந்த ரங்கசாமி உற்சாகத்தோடு குழந்தையை  கொஞ்சி மகிழகுழந்தை பிறந்த செய்தியை அறிந்த வீராவும் தன் தாயுடன் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்த்து விட்டு சென்றான்.

 

தன் குழந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி  ராம்சரணின் குழந்தையை பார்க்க அருணா  மருத்துவமனைக்கு வரவில்லை. 

 

 எப்பொழுதும் போல் கற்பகம், மூச்சுத் திணறல்மூட்டு வலி என ஏதேதோ  சொல்லி  தலை தப்பித்துக் கொண்டார்.  

 

மூன்று நாட்களுக்குப் பிறகு, லட்சுமியை  வீட்டிற்கு செல்ல மருத்துவர் அனுமதி வழங்கியதும், லக்ஷ்மி மற்றும் குழந்தையை  தன்னோடு  தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்வதாக ருக்மணி  சொல்ல, அவரது பாசத்தையும் ஆசையும் புரிந்துகொண்டு அதற்கு இசைந்தான் ராம்சரண்.

 

பதினோராம் நாள் குழந்தைக்கு பெயர் சூட்டும்  வைபவம் ஸ்ரீ லட்சுமியின் இல்லத்தில் அதிக ஆடம்பரம் இல்லாமல் அருமையாக நடந்தேறியது.

 

வழக்கம் போல் தாயும் மகளும் விசேஷத்திற்கு வர மனமில்லாமல்  ஏதேதோ கதை சொல்லி தவிர்த்தனர்.

 

அவர்கள் இருவரையும் நன்கறிந்த ரங்கசாமி, அவர்களைப் பற்றி கவலைப்படாமல் ,   விழாவில் கலந்துகொண்டு பேத்திக்கு 'ஸ்ரீஷாஎன பெயரிட்டதோடு ஏகப்பட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை குழந்தைக்காக  வழங்கி மகிழ்ந்தவர் பெயர் சூட்டு விழாவை தன் வீட்டிலேயே விமர்சியாக நடத்த தான் முதலில் எண்ணியிருந்தார்.

 

ஆனால் அருணாவின் மகனுக்கு திடீரென்று  உடல்நிலை சரியில்லாமல் போனதும், வேறு வழி இல்லாமல்  விழாவை  ஸ்ரீலட்சுமியின் இல்லத்தில் அமைதியாக நடத்தி முடித்தார். 

 

பெயர் சூட்டு விழாவில் பட்டு ரோஜா நிறத்தில்கிளிப்பச்சை ஜரிகை  பார்டர் கொண்ட காஞ்சி பட்டில் மிளிர்ந்திருந்த மனையாளையும் , அதே நிற பட்டு  பாவாடை சட்டையில் கை கால்கள் லேசாக அசைத்தபடி வெண்சங்கு நிறத்தில் பௌர்ணமியாய் ஜொலி ஜொலித்த தன் மகளையும் பார்த்து பார்த்து பூரித்துப் போனான் ராம்சரண். 

 

மனையாளோடு கழிக்க சிறிதேனும் தனிமை கிட்டாதாஎன்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு , அவன் எதிர்பார்த்த தனிமை விழா முடிந்ததும் கிடைக்க, பட்டுப் புடவை சரசரக்க மல்லிகைப்பூ மணத்தில் தேவதை போல் ஜொலித்தவளை பின்புறமாக இறுக்கி அணைத்துக் கொண்டவன் ,

 

"உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் ..." என்றான் அவள் காதில் தாபத்தின் வெப்பத்தை அனல் மூச்சாய் செலுத்தி.

 

மன்னவனின் அணைப்பில் மனம் மகிழ்ந்தவள்திரும்பி அவன் முகம் பார்த்து 

 

"நானும் தான் ..." என்றாள் சன்னமாக .

 

மனைவியின் பதிலும்அவள்  விழிகள்  காட்டிய வெட்கமும்அவன் காதலை மேன்மேலும் கூட்ட, அவள் வகுட்டு குங்குமத்தில் ஆழ்ந்த முத்தம் பதித்தவன் , அவள் பிறை நுதல்நயனங்கள், நாசி என மெதுவாக தன் அதரத்தால் பயணித்து , அவள் இதழில் இறங்கி மது குடிக்கும் வண்டாய் மாறிப் போனான் .

 

ஓரிரு கணம் தொடர்ந்த அந்த இதழ் ஒற்றலுக்கு அவர்களது பெண்ணரசி  சிணுங்கி முடிவுரை எழுத , மனைவியிடமிருந்து விலக முடியாமல் விலகியவன், குழந்தையின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்துவிட்டு 

 

" ஒரு விஷயம் சொல்லணும் லக்ஷ்மி " என்றான் மென்மையாக. 

 

" சொல்லுங்க ..."

 

"நான் ப்ராஜெக்ட் விஷயமா  கலிபோர்னியா  போறேன் ... திரும்பி வர நாலு மாசமாவது ஆகும் .... ஏற்கனவே போயிருக்க வேண்டியது ... நீ பிரக்னண்டா இருந்ததால ,அந்த ட்ரிப்ப தள்ளி போட்டுக்கிட்டே இருந்தேன்... இப்ப குழந்தை பொறந்திருச்சு ... நீ உங்க அம்மா வீட்ல இருக்க.... எப்படியும் நீ இங்க இன்னும் நாலு மாசமாவது இருப்ப... நான் அதுக்குள்ள என் ப்ராஜெக்ட் வொர்க்கை முடிச்சிட்டு வந்துடறேனே..."  என்றவனின் கண்கள், அவளது பதிலுக்காக ஏகத்துக்கு காத்திருக்க,

 

"அதுக்கு என்ன நல்லபடியா  போய்ட்டு வாங்க ..."  என்றாள் அவனை தீர்க்கமாக பார்த்து.

 

 "நாலு மாசம் நான் கலிபோர்னியா போறது கூட ஒரு வகையில நல்லது தான் ..." என்றான் குறும்புடன். 

 

"ஏன் ..."

 

"உன்னை சும்மா சும்மா  பார்த்துகிட்டே என்னால சும்மா இருக்க முடியல...." என்றவனின் கண்களில் விஷமம்  கூத்தாட,   எப்பொழுதும் அவளது கண்களுக்கு கந்தர்வன் போல் காட்சியளிப்பவன் , இன்று மன்மதனாகவே மயக்கஅவனது நுனி  மூக்கை பிடித்து திருகி, அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் அவன் பெண்ணவள்

 

தன்னவள் தன் வீட்டில் இருப்பதைவிட  அவள் தாய் வீட்டில் பாதுகாப்பாக இருப்பாள் என்பதால் நிம்மதியாக கடல் கடந்தான்.

 

மாதங்கள் அழகாக உருண்டு ஓடின..

 

மூன்றாம் மாதத்தில் குழந்தை பொக்கை வாய் தெரிய சிரிக்க ஆரம்பித்தது ...

 

தினமும் வாட்ஸ் அப்பில் பேசும் கணவனுக்கு அதனை காண்பித்து மகிழ்ந்து போவாள்.

 

அவனுக்கும் தன் மகளை காணொளியில் காணக் காண பாசம் தலைக்கு ஏற, விரைவில் ஊர் திரும்ப எண்ணி  எடுத்துக்கொண்ட வேலையை இமை மூடாமல் முடிக்கும் பணியில் ஈடுபட்டான்.

 

அவ்வப்போது அருணாவும்ராம்சரணை whatsappல் தொடர்பு கொண்டு , அவன் இரக்கத்தை சம்பாதிக்கதன் மகனின் உடல்நிலை குறித்த தகவல்களை தானே பகிர்ந்து  ஆறுதல் தேடுவதாக காட்டிக் கொண்டாள்.

 

தங்கையின் மீது  கோபம்  இருந்தாலும் , அந்த சிறிய பாலகனின் மீது தாய்மாமனாக பாசம் இருந்ததால் குழந்தையின் உடல் நிலையை பற்றி, தெரிந்து கொள்ள அவனும் அடிக்கடி அருணாவை தொடர்பு கொண்டு உரையாடினான். 

 

அப்படி உரையாடும் போதெல்லாம், அவள் தன் மகன் உடல் நிலையை கூறி ஏகமாக கண்ணீர் சிந்த, தணலில் விழுந்த  பனியாய்  தங்கை மீதிருந்த கோபம் கரைந்து காணாமல் போய், ஒரு கட்டத்தில்  அவள் எதிர்பார்த்தபடி அவனுக்கு இரக்கம் பிறக்கஅதனை சரியாக அறுவடை செய்யும் தருணத்திற்காக  காத்துக்கொண்டிருக்கலானாள் அவன் தங்கை. 

 

கற்பகம் ஒரு சம்பிரதாயத்திற்காக கூட, லட்சுமியை  தொடர்பு கொள்ளவில்லை.

 

அருணா மட்டும் இரு முறை  லட்சுமியை தொடர்பு கொண்டு குழந்தையை பற்றி நலம் விசாரித்தாள். அதுவும் லட்சுமி முதலில்  அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவள் குழந்தையின் உடல் நிலையை பற்றி  விசாரித்ததால்பதிலுக்கு அருணா லட்சுமியை   நலம் விசாரித்திருந்தாள்... அதோடு அதற்கு  இன்னொரு காரணமும் இருந்தது ...

 

தன் தாய் கற்பகத்தை போன்று, தன்னையும் தன் அண்ணன்  ஒதுக்கி விட கூடாது என்பதில் குறியாக இருந்ததால்  பட்டுப் படாமல் தொட்டும் தொடாமலும் உறவை தக்க வைத்துக் கொள்ள விழைந்தாள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

 

ரங்கசாமி மட்டும்  வாரத்திற்கு ஒரு முறையாவது மருமகளை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு  பேத்தியைப் பற்றி விசாரித்து அவளை whatsapp காணொளியில் கண்டு  மகிழ்ந்து போவார் ...

 

இப்படியே நாலரை மாதம் வேகமாக கழிந்தது.

 

தன் மகளையும் மனையாளையும் காணப் பறந்து வந்தான் நாயகன் .

 

கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்ததும்ஸ்ரீலட்சுமி இல்லத்திற்கு பயணமானவனை , வாயிலில் இருந்தே எதிர்கொண்டு வரவேற்றாள் அவன் மனைவிகுழந்தையுடன்.

 

கிட்டத்தட்ட ஐந்து மாத குழந்தையைஅவன் கையில் ஏந்தி மகிழவேற்று முகம் கண்டு அவன் தூக்கியதுமே அது உதட்டைப் பிதுக்கி சிணுங்கி அழுதது.

 

மகள் தன்னிடம் வர மறுப்பது மன வருத்தம் அளித்தாலும்இனி அதிக காலம் வெளியூர் செல்ல கூடாது  என்பதை அந்த நிகழ்வு உணர்த்த, மனதை தேற்றிக் கொண்டவன்தான் வாங்கி வந்த பொம்மைகளை காட்டி மகளின் கவனத்தைக் கவர முயன்றான்.

 

மாப்பிள்ளையின் வரவில் மனம் மகிழ்ந்த  ருக்மணிராம் சரணுக்கு பிடித்த சைவ, அசைவ உணவுகளை ருசியாக சமைத்து பரிமாறி மகிழ்ந்து போனார். 

 

அன்றைய இரவின் தனிமையில்,

 

"நாளைக்கே  நம்ம வீட்டுக்கு போலாம் லட்சுமி  ..." 

 

"ம்ம்ம்" என்றபடி அவள் உறங்கிய குழந்தையை தொட்டியில் இட்டு, தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்க

 

"ம்.....ம்.....ம்...ம்....  12 மன்த்ஸா  இல்ல 13 மன்த்ஸா ..." என்றான்  யோசனையாக.

 

"என்ன .... 12 மன்த்ஸ்.... 13 மன்த்ஸ் ...." என்றவளின் கவனம் முழுவதும் குழந்தையின் மீதேயிருக்க, மனையாளை பின்புறமாக நெருங்கி அணைத்து, அவள் பின் கழுத்தில் முகம் பதித்து முத்தமிட்டு தன்னை நோக்கி திருப்பி

 

"மேத்ஸ் டீச்சர் ... நீங்க  எல்லாத்தையும்  மறக்கலாம்....  ஆனா நான் எதையும் மறக்கல ..." என்றவன்  கண்ணில் விஷமத்தோடு அவள் கர்ப்பம் தரித்ததிலிருந்து மாதத்தை விரல் விட்டு எண்ண ஆரம்பிக்க, அப்போதுதான் அவன் கூற வருவதை புரிந்து கொண்டவளின் முகம் குங்குமமாய்  சிவக்கரதிகந்தனாய்  காட்சியளித்த கணவனை நெருங்கி,

 

"குழந்தையை தூங்க வச்சுட்டு நானே அதை பத்தி பேசலாம்னு இருந்தேன் ..." என்றாள் காதலும் குறும்புமாய்.

 

மனையாளின் எதிர்பாராத பதிலில் லயித்து சிரித்தவன் 

 

"சூப்பர் லட்சுமி ..." என அவன் அவளை நெருங்கி இறுக்கி அணைத்துக் கொள்ள ,

 

"நான் பேசலாம்னு இருந்தேன்னு சொன்னேன் ..." என்றாள்  'பேசலாம்' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சிரித்தபடி விலக முயன்று.

 

"பேச்சுவார்த்தை எல்லாம் காலையில  நடத்திக்கலாம் .... " என கிறக்கமாக மொழிந்தவன் அவளை அள்ளி கையில் ஏந்தி கொண்டு,

 

"ரொம்ப காஞ்சி போயிருக்கேன் டி ... ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு .... நீயும் கொஞ்சம் சதை  போட்டு இப்ப இன்னும்  அழகா இருக்கியா ... சோ..... நோ மோர் ஆர்கியூமெண்ட்ஸ்  ..." என்றவன் அழகான காதலோடும் ஆகச் சிறந்த காமத்தோடும் மென் முத்தமும் வன்யுத்தமுமாய் வைகறை  வரை மனையாட்டியோடு மிகுந்த பாதுகாப்பாய் கட்டுண்டு கிடக்க,

மன்னவனுக்கு இணையாய்  அவன் மனைவியாளும் தான் சேமித்து வைத்திருந்த தாபத்தையும் மோகத்தையும் , கட்டிலில் காட்டி அவனை கிறங்க செய்ய, நீண்ட நாட்களுக்குப் பிறகான அந்த இனிய சங்கமம் இருவருக்குமே ஆகச் சிறந்த நிறைவை கொடுத்துமனம் விட்டு நீங்காத தினமாக அன்றைய இரவை மாற்றி இருந்தது. 

மறுநாள் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டுதன் புகுந்த வீட்டில் குழந்தையோடு குடி புகுந்தாள் லட்சுமி.

 

கற்பகம் குழந்தையை தொட்டு கூட பார்க்காமல்ஈரடி தள்ளி நின்று,

 

"பட்டு பாப்பா...  குட்டி பாப்பா..." என கொஞ்சுவது போல் ராம்சரணுக்காக நடித்ததோடு சரி அதற்கு மேல்அந்த குழந்தை பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை.

 

அருணாவும் வழக்கம் போல்,

 

"அண்ணி குழந்தைக்கு அஞ்சு மாசம் ஆயிடுச்சு  திட உணவு கொடுக்க  ஆரம்பிச்சுடுங்க ..."  என அறிவுரை வழங்குவது போல்  ராம் சரணுக்காக வாயில் வடை சுட்டாளே ஒழிய மற்றபடி அவளும் குழந்தையை தொட்டுக் கூட பார்க்கவில்லை.

 

லட்சுமி வந்த மறு தினத்திலிருந்துஅவளுக்கான வேலை அட்டவணையை பழையபடி தொடங்கி வைத்தார் கற்பகம்.

 

குழந்தை அழுதாலும்பால் கக்கி வாந்தி எடுத்தாலும், மல ஜலம் கழித்தாலும், தாயும் மகளும் கண்டு கொள்ளவே மாட்டார்கள் .... சமையல்  வேலைகளை பார்த்துக்கொண்டே இடையிடையே குழந்தையை லட்சுமி தான் பார்த்தாக வேண்டிய நிலை இருந்தது.

 

ராம்சரண் குழந்தையை பார்த்துக் கொள்ளலட்சுமி மாசமாக இருக்கும் பொழுது  அவளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட செவிலி பெண்மணி  அன்னத்தை அணுகஅவரோ தன் உடல்நிலை சரியில்லாததை சொல்லி, வேறு இரு பெண்களைப் பரிந்துரைத்தார்.

 

வந்த இரு பெண்களும், அருணா கற்பகத்தை தூக்கி சாப்பிடும் அளவிற்கு  குழந்தையை கவனிக்காமல்  எப்பொழுதும் அலைபேசியும் அரட்டையுமாய் இருக்க  ஒரு கட்டத்தில்அவர்களை வேலையை விட்டு நிறுத்தியதோடு, யாரும் வேண்டாம் என முடிவெடுத்து  லட்சுமியே குழந்தை பார்த்துக்கொள்ளலானாள்.

 

ரங்கசாமி இரு மாதத்திற்கு ஒரு முறை  ஒரு வாரம் வந்து  தங்கி இருந்து பேத்தியோடு கொஞ்சி மகிழ்ந்து விட்டு செல்ல, வாரம் ஒரு முறை விடுமுறை தினங்களில் ருக்மணி வந்து பேத்தியை பார்த்து விட்டு சென்றார்.

 

ராம்சரண் அலுவலகத்தில் இருந்து துரிதமாக வீடு திரும்பி மகளோடு நேரம் செலவழித்தான்.

 

முட்டை கண்கள்சுருட்டை முடி, கொழு கொழு கன்னங்களோடு தவழும் குழந்தைக்கு  தலையில் இரு புறமும்  தென்னை மர குடுமி போட்டு ரசித்து மகிழ்ந்தான்.

 

அவளை தூக்கிப்போட்டு பிடித்தான் ... அப்படி செய்யும் பொழுதுஅது குலுங்கி நகைக்கும்  அழகில் மெய் மறந்து போனான் .

 

குழந்தை தன் எச்சில் ஊறிய செவ்விதழில் நுரை ததும்ப வாகனம் ஓட்டும்  சத்தத்தை எழுப்பபார்த்து  ரசித்தவன் அவளை தன் முதுகில் உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு ஆனந்தமாக உலவினான் .

 

சில நாட்கள் அதிகாலையில் அவன் பெண்ணரசி கண் விழித்து  அ...இ...ஈ...உ.. என குதலை மொழியில் ரீங்காரமிட்டால் , உடனே எழுந்தமர்ந்து உடன் உறங்கும்  மனையாளை எழுப்பாமல் அது பசியில் அழும் வரை அதனோடு  கொஞ்சி மகிழ்வான். 

 

தந்தையின் நெருக்கம்அரவணைப்பு நாளுக்கு நாள் அதிகமானதால்மகள் தாயைக் காட்டிலும் தந்தையோடு ஒன்ற ஆரம்பித்தாள்.

 

இதனை எல்லாம் கண்டும் காணாதது போல் பார்த்துக் கொண்டிருந்த அருணா  இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தன் குழந்தையின் உடல் நிலையை காரணமாகச் சொல்லி  ஜோசியம்குறி சொல்லுதல்மருத்துவமனை , சித்த மருத்துவம் என ஏதாவது ஒரு இடத்திற்கு ராம் சரணை தன் குழந்தையோடு அழைத்துச் சென்றுஅவன் தன் குழந்தையோடு நேரம் செலவழிப்பதை  மறைமுகமாக தடுக்க, தங்கையின் மீது இடையில் ஏற்பட்டிருந்த கொஞ்சநஞ்ச கோபமும் மறைந்து, இரக்கம் பிறந்திருந்ததால் அவள் செய்யும்  சூது ராம்சரணின் கருத்தை மட்டுமல்ல லட்சுமியின்  கருத்தையும் கவராமலே போனது. 

 

 

ஒருமுறை ராம்சரண் சிட் அவுட்டில் அமர்ந்து கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதுதவழ்ந்து போய் அவன் கால்களை பற்றி கொண்ட அவன் பெண்ணரசி 

 

"ப்பா...ப்பா..." என முட்டைக் கண் விரிய அவனைப் பார்த்து முதன் முறையாய் அழைக்க , பூரித்துப் போனவன், மகளை அள்ளி கொஞ்சி மகிழ்ந்தான்.

 

 

24 மணி நேரமும் பார்த்துக் கொள்ளும் தாயை பார்த்து  'அம்மா' என்றழைக்காமல்தினமும் சொற்ப நேரமே செலவிடும் தன்னைப் பார்த்து  முதலில் 'ப்பாஎன்றழைத்த மகளை எண்ணி எண்ணி பூரித்து போனவன் அதனை தன் மனைவி, சுற்றம், நட்பு வட்டம் என அனைவரிடமும் மொழிந்து சிலாகித்து போனான்.

 

இப்படியே நாட்கள் வெகு அழகாக கடந்தன....

 

ஒரு நாள் அதிகாலையில் லட்சுமி குளிக்க சென்றிருக்க பஞ்சு போல் ஏதோ  ஒன்று அவன் பின் கழுத்தில் ஊர்ந்து  குறுகுறுப்பை ஏற்படுத்த, மகள் என்று அறிந்து கொண்டவன், உடனே எழுந்தமர்ந்து முட்டைக்கண்ணில் சிரிக்கும் குழந்தையை  கைகளில் அள்ளிக்கொண்டு விளையாடத் தொடங்ககுழந்தையோ அவனது மூக்கை கவ்வி கவ்வி சிணுங்கியபடி இழுக்க முயல, அதனை ரசித்து சமாளித்துக் கொண்டிருக்கும் போதுலட்சுமி குளித்து விட்டு வர, அவளை ஒரு வித போதையாய் பார்த்தவன்,

 

"குழந்தை என் மூக்கை கடிச்சு வைக்குறா .... அவளுக்கு  பசிக்குது டி ..." என்றான்.

 

அவனுடைய பார்வையை புரிந்து கொண்டு லேசாக வெட்கியவள்,

 

" ஒரு நிமிஷம் புடவையை மாத்திக்கிட்டு வந்துடறேன் ..." என மர அலமாரியை நோக்கி விரைந்தாள்.

 

"அதுக்கெல்லாம் நேரம் ஆகும் .... அதுக்குள்ள  குழந்தை ஆரம்பிச்சிடுவா .... பீடிங் நைட்டி போட்டுக்கிட்டு வந்து  ஃபீட் பண்ணு.." என்றவன் , அவள் துரிதமாக உடை மாற்றி விட்டு வந்ததும்,   வசதியாக சாய்ந்தமர இரண்டு  தலையணைகளை அவள் முதுகுக்கு கொடுத்து, அவள் தோள் மற்றும் முதுகை லேசாக அழுத்தி மசாஜ் செய்ய, குழந்தையை மடியில் கிடத்தி பால் புகட்டிக் கொண்டிருந்தவளுக்குஅந்த மென்மையான அழுத்தம் இதமாக இருந்தது.

 

பத்து நிமிடத்திற்கெல்லாம் அவனது அலைபேசி சிணுங்க, குழந்தைக்கு இடையூறு விளைவிக்க விரும்பாமல் அவன் அறையை விட்டு வெளியேறும் பொழுது  கற்பகம்

"லக்ஷ்மி"  என்று அழைத்துக் கொண்டே அவர்கள் அறைநோக்கி வர,

 

"அம்மா, எந்த வேலையா இருந்தாலும் அருணாவை செய்ய சொல்லு ... லக்ஷ்மி  குழந்தைக்கு ஃபீட் பண்ணிக்கிட்டு இருக்கா ... பாதில அவளால வர முடியாது  ..."என்றவன் இயல்பாக அலைபேசியில் பேசியபடி  வெளியேறசற்று தொலைவில் இருந்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்த  அருணாவுக்கு வன்மமும்  ஆத்திரமும் வகைத் தொகை இல்லாமல் அதிகரித்து ஆட்டம் போட

 

பொண்டாட்டி குழந்தைனு மயங்கி இருக்கியா .... கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் முடிவு கட்டறேன்... 

 

என்றாள் மனதோடு அதற்கான சந்தர்ப்பம்  கூடிய விரைவில்  லட்டு போல் அமையப் போவது தெரியாமல்.

 

 

 

ஸ்ரீராம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  2. Asusual kalakuringa akka. Superb story.. very very happy to read it

    ReplyDelete

Post a Comment