ஸ்ரீ-ராமம்-20

அத்தியாயம் 20 

 

ஸ்ரீலட்சுமிக்கு கணவன் சொன்னதைக் கேட்டு தன் ஆசை நிராசையாகி விட்டதே என்பதை விட , ஒரு ஆன்மா பிணியால் அல்லலுறுகிறதே என்ற கவலையே மேலிடகலங்கிப்போனாள்.

 

ஓரிரு சந்தர்ப்பங்களில் அருணாவின் மாமியார் சசியை அவள் சந்தித்ததுண்டு.

தன்மையான நேர்மையான பெண்மணி பணம் பகட்டு இருந்தாலும் அதனை காட்டிக் கொள்ளாமல், அனைவரிடமும் பொறுமையான சுபாவத்தை கடை பிடிக்கும் பாங்குடையவர் ....

 

நல்ல உழைப்பாளி, குடும்பத்தின் மீதும் மகன் ஹரிஷ் , மகள் சுகந்தியின் மீதும் அக்கறை கொண்டவர்.

 

மகன் தலையெடுத்து குடும்பப் பொறுப்பை சுமப்பதற்கு முன்பே, கணவனைக் காலன் கவர்ந்து சென்று விட , தனி பெண்மணியாய் நின்றுபடிப்பில் நாட்டம் இல்லாத தன் மகள் சுகந்தியை பொள்ளாச்சியில் இரண்டு பல சரக்கு கடைகளை வைத்து நடத்தும்  தன் தூரத்து உறவினரின் மகன் ரவி என்பவருக்கு  மணம் முடித்துக் கொடுத்தார். 

 

பிறகு மகன் ஹரிஷ்,அருணாவை விரும்புவதாக வந்து சொல்லஅருணாவின் பொருளாதார நிலையை கண்டு முதலில் அஞ்சியவர்பிறகு மகனின் ஆசைரங்கசாமியின் குணம் ஆகியவற்றை அறிந்து அவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

 

திருமணத்திற்கு பிறகு அருணா பெரும்பாலான தினங்கள் புகுந்த வீட்டில் தங்குவதில்லை. அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து  கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை அவர் மொழிய, அன்று தொடங்கியது யுத்தம்.

 

திருமணம் முடிந்து ஓராண்டு முடிந்த நிலையில், புகுந்த வீட்டு சொந்தங்கள் யாரேனும் குழந்தையைப் பற்றி அருணாவிடம் விசாரித்தாலே போதும், அது என் மாமியாரின் சூழ்ச்சி, எனக்கு அவமானத்தை ஏற்படுத்தவேஉறவுக்காரர்களை தூண்டிவிட்டு கேள்வி எழுப்புகிறார்  என தன் மாமியார் சசியின் மீது ஏகப்பட்ட குற்ற பத்திரிகையை வாசித்ததோடு , அதையே காரணமாக வைத்து புகுந்த  வீட்டிற்கு செல்வதையும்  அறவே தவிர்த்தாள்.

 

அவள் அவ்வாறு கூப்பாடு போட்டு கூத்தடித்ததற்கு கற்பகம்  தான் பெருங்காரணம் .... தொட்டதற்கெல்லாம்  புகுந்த வீட்டிற்கு எதிராக  பெண்ணை கொம்பு சீவி விட்டார் ....

 

 

ஒரு கட்டத்தில் அருணா ஹரிஷுக்கு பெயரளவில்  மனைவி என்றாகி போனாள்.

 

வீட்டில் சமையல் செய்வதிலிருந்துஹரிஷுக்கு உணவு பரிமாறுவதுமதிய உணவினை தயார் செய்து கொடுத்து அனுப்புவது என அனைத்தும் சசியின் தலையில் விடியகாலம் காலமாக செய்து கொண்டிருந்தவர் தான் என்றாலும்  உடல்நிலை சற்று மோசமாகி போனதால்அவரால் முன்பு போல் இயங்க முடியாமல் போக, பொறுத்து பொறுத்துப் பார்த்தவர் ஒரு நாள் 

 

"அருணாஅவன் கடைக்கு போறான் ... என்னால சமைக்க முடியல அவனுக்கு ஹோட்டல் சாப்பாடு ஆகாது ... நீ இனிமே அவனுக்கு புடிச்சத சமைச்சு எடுத்துக்கிட்டு போய் கடையில் கொடுத்துடு..." என பொங்கி விட்டார் .

 

"ஏன் எனக்கு பிடிச்சத அவர் என்னைக்காச்சும் சமைச்சு கொடுத்து இருக்காரா ...."

 

"நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க ..." என்றார் பதிலடியாக. 

 

"லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதாலயே என்னால  அடிமை வேலையெல்லாம் பார்க்க முடியாது .... அப்படியே செய்யணும்னு நினைச்சாலும் அவருக்கு என்ன பிடிக்கும் ஏது பிடிக்கும்னு எனக்கு  தெரியாது ...." என்றாள் விட்டேற்றியாக.

 

"அப்ப லவ் பண்ணும் போது ஒருத்தரைப் பத்தி  ஒருத்தர் என்ன தான் தெரிஞ்சுக்கிட்டீங்க .... சரி ... அத விடு... கல்யாணம் கட்டிக்கிட்டதுக்கு அப்புறம் அவன் கூட நேரம் செலவழிச்சா தானே அவனுக்கு என்ன பிடிக்கும் ஏது பிடிக்கும்னு தெரியவரும் ... அம்மா வீடே கதியா இருந்தா இப்படித்தான் கட்டின புருஷனுக்கு என்ன பிடிக்கும்னு கூட தெரியாது...என்று அவர் கொந்தளிக்கஇருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் வெடித்தது.

 

அது தேவையில்லாத தலைவலியை ராம்சரண், ரங்கசாமிக்கு கொடுக்க, ரங்கசாமி பெண்ணை அழைத்து தன்னால் இயன்றவரை அறிவுரை கூறிப் பார்த்தார்.

 

அருணா கேட்பதாக இல்லை . தனிக்குடித்தனம் போக வேண்டும் என்றாள். அதற்கு ஹரிஷ் சம்மதித்தாலும் ரங்கசாமி சம்மதிக்கவில்லை.

 

இந்நிலையில் தான் இயற்கையாக கருத்தரித்தலில் சிக்கல் உள்ளதாக அவளது மருத்துவ அறிக்கை சொல்ல,  IUI, IVFக்காக பணத்தை ரங்கசாமி  தண்ணிராய் செலவழிக்க, அடுத்த ஆண்டே கர்ப்பம் தரித்தாள் அருணா. 

 

கர்ப்பத்தை காரணம் காட்டி, அந்த ஒரு ஆண்டு மட்டும் இல்லாமல், ஏதேதோ சொல்லி குழந்தை பிறந்து அதற்கு ஒரு வயது ஆகும்  வரை  தாய் வீட்டிலேயே காலம் கடத்தி விட்டாள்.

 

ஹரிஷ், சசி மாறி மாறி அழைத்து பார்த்து விட்டுஒரு கட்டத்திற்கு மேல் வெறுத்துப் போய் நிறுத்திக் கொண்டனர்.

 

குழந்தைகளுக்கு ஒரு வயது ஆன பின்னும், மகள் தாய் வீட்டிலேயே காலம் கழிப்பதை  ஏற்க மனம் இல்லாமல ரங்கசாமி வற்புறுத்த, வேறு வழி இல்லாமல்  புகுந்த வீட்டிற்கு சென்றாள் அருணா. 

 

பிறகு ரங்கசாமி ராம் சரணுக்கு பெண் தேடிஸ்ரீலட்சுமியை  மணப்பெண்ணாக முடிவு செய்ய, தமையனின் திருமணத்தை காரணம் காட்டி, 1 மாதம் தாய் வீட்டிற்கு வந்து டேரா போட்டாள்.

 

திருமணம் முடிந்த மறு மாதமே ஸ்ரீலக்ஷ்மி தாய்மை அடையராம்சரணுக்கு திருமணம் நடந்ததையே விரும்பாத தாயும் மகளும், அந்த செய்தியில்  கொதித்துப் போயினர்.

 

புகுந்த வீட்டிற்கு அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவள், லட்சுமியை கொடுமைப்படுத்த தாய் வீட்டிலேயே  தங்கி விடஅது  மீண்டும் அவள் புகுந்த வீட்டில் புகைச்சலை ஏற்படுத்தமாசமாக இருக்கும் மனைவியை பார்க்கும் ஆவலில்  ராம்சரண் அப்போது  ஊர் திரும்ப, அவனிடம் வந்ததும் வராததுமாக புகுந்த வீட்டு புகைச்சலை பற்ற வைத்தாள் அருணா. 

 

அவன் தலையிட்டு பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்த , சில தினங்களிலேயே  சசியின் உடல்நிலை சற்று மோசமாகவேறு வழி இல்லாமல் அருணா தன் புகுந்த வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது .

 

இருந்தாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை பயன்படுத்திக் கொண்டு நான்கு மணி நேரமாவது தாய் வீட்டிற்கு வந்து தலையைக் காட்டிவிட்டு சென்று கொண்டிருந்தாள். 

 

அப்போது தான் கர்ப்பிணியான லட்சுமி  தன் தாய் வீட்டிற்கு  செல்லஅவளுக்கு அங்கு கருச்சிதைவு ஏற்படஅதனை அறிந்த தாயும் மகளும் அளவில்லா மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடி மகிழ்ந்தனர். 

 

அருணா அந்த ஆனந்தத்திலேயே மூழ்கி முத்து எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான்  குழந்தையை கவனிக்க தவற, அது படிகளில் உருண்டு விழ, அடிபட்ட குழந்தையை  மருத்துவமனையில் சேர்த்து  குணப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

இந்த இடைப்பட்ட காலத்தில்ஓரளவிற்கு தேறி இருந்த சசியின் உடல்நிலை  தற்போது  திடீரென்று பின்னடைவை சந்தித்திருப்பதாக ஹரிஷ் சொன்னதுராம்சரணோடு ஸ்ரீலட்சுமியையும் வெகுவாக பாதிக்க, மருத்துவமனையில் அவரை  சந்திக்க இருவரும் புறப்பட்டனர்.

 

 

இவர்கள்  மருத்துவமனையை அடைவதற்கு முன்பேசசி அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கவெளியில் நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ஹரிஷை தேற்றுவதில் ஈடுபட்டான் ராம்சரண் .

 

அதிக சிரமங்கள் அனுபவிக்காமல்அந்த ஆன்மா  அன்று இரவே இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற சென்று விட,  செய்தி அனைவருக்கும் தெரிவிக்கப்படமறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பே உறவினர்கள் கூட்டம் ஹரிஷின் இல்லத்தில் நிரம்பி வழிந்தது.

 

ரங்கசாமி, கற்பகம்ஹரிஷின் தங்கை சுகந்தி, அவள் கணவர் ரவி, ஸ்ரீ லட்சுமியின் தாய் ருக்மணி  தந்தை தியாகராஜன் போன்ற நெருங்கிய  சொந்தங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் அங்கு ஆஜராக, வேறு சொந்த பந்தங்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால் , காலையிலேயே செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளும் செய்து, சசியின் சிதைக்கு நெருப்பிட்டுஅவரது இறுதியாத்திரைக்கு வழி வகுத்தான் ஹரிஷ்.

 

தாயின் திடீர் மறைவு ஹரிஷை காட்டிலும் சுகந்தியை வெகுவாக பாதித்திருக்கஅதிலிருந்து வெளியே வர முடியாமல் துடித்து துவண்டு போனவளை அவள் கணவன் ரவி ஆறுதல் கூறி தேற்றியதோடு இறப்பு நிகழ்ந்த வீட்டில் பணத்தைக் காட்டிலும் மனித உதவிகள் அதிகம் தேவை என்பதால் வீட்டு மாப்பிள்ளை ஆக பெரும்பாலான பணிகளை இழுத்து போட்டுக் கொண்டு முன்னெடுத்து  செய்தான்.

 

தாயை நினைத்து அவ்வப்போது அழும் தங்கை சுகந்தியை ஹரிஷ் சமாதானம் செய்யும் போதெல்லாம் அருணாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அவளது  தீப்பார்வையை கண்டுகொண்ட சுகந்தி, அதற்கு மேல் பொங்கி வந்த அழுகையை கூட கட்டுப்படுத்திக் கொண்டு அடக்கி வாசிக்க ஆரம்பித்தாள்.

 

பெரும்பாலும் தன்  தாய் சசியை பார்ப்பதற்கு கூட அருணா வீட்டில் இல்லாத தருணங்களில் தான் வந்து போவாள் சுகந்தி.

 

சுகந்தியை பார்த்து விட்டால் போதும்அருணா  இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டிநேரடியாகவோ அல்லது ஜாடை மாடையாகவோ அவளை வார்த்தையால் குதறி எடுத்து விடுவாள் என்பதால்சுகந்தி தன் தாய் வீட்டிற்கு வருவதை பெரும்பாலும் குறைத்துக் கொண்டிருந்தாள். 

 

இருந்தாலும் இருவரும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுவிட்டால்சுகந்தியின் கண்களில் கண்ணீரை வரவழைக்காமல் விடமாட்டாள் அருணா. 

 

அதே போல்  ராம்சரண் ரங்கசாமியிடம் அவள்  உரையாடியதோடு சரி ... ஸ்ரீலட்சுமியை கண்டு கொள்ளவே இல்லை  என்பதையும் கண்டுகொள்ளாதது போல் உள்வாங்கிக் கொண்டிருந்தான் ராம்சரண். 

 

அன்றைய அலுவல் எல்லாம் முடிந்ததும் உறவுக்காரர்கள் கலைந்து சென்ற பிறகு ரங்கசாமி,   ஸ்ரீலட்சுமியோடு ராம் சரண் வீடு திரும்ப எண்ண, கற்பகத்தை தன்னுடனே இறுத்தி கொண்ட அருணா,

 

ரவியிடம்,

 

"சுகந்தி இங்கயே இருக்கட்டும் .. 13-ஆம் நாள் காரியம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட்டிக்கிட்டு போங்க .... நீங்களும் ஒரு ரெண்டு தங்கி இருந்து ஹரிஷ்க்கு ஹெல்ப் பண்ணிட்டு போங்க ... அப்புறம் 13-ஆம் நாள் காரியத்துக்கு வந்தா போதும் ..." என்றாள் கட்டளை பிறப்பிப்பது போல்.

 

சுகந்தி , ரவி இருவரும் பத்தாம் வகுப்பை தாண்டாதவர்கள் ...

 

சுகந்தி பெரிய உழைப்பாளி ஆனால்  பாந்தமாக பேச தெரியாது. பணம் இருந்தாலும் பளபளப்பாக உடுத்தி பதிவிசாக நடந்து கொள்ளத் தெரியாது. 

 

ரவி சற்று அதிரடிஅராஜகப் பேர்வழி என்றாலும் பணம் படைத்தவர்களிடம்  பதுங்கி நயந்து செல்லும் சுபாவம் படைத்தவன். 

 

தன் திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரையும்  நன்கு அறிந்திருந்ததால் , திருமணம் ஆகி அந்த வீட்டிற்கு வந்த தினத்திலிருந்து அவர்களை  ஒரு குறிப்பிட்ட எல்லையிலேயே நிறுத்திதன்னுடைய ஆளுமைக்கு கொண்டு வந்திருந்தாள் அருணா.

 

சுகந்தியை பற்றி தாயும் மகளும் வாய் ஓயாமல் குரலை உயர்த்தி  தங்களை மறந்து பேசிக் கொண்டிருக்கும் போது அரசல் புரிசலாக வெளிவரும் விஷயங்களின் மூலம் ஓரளவு  அறிந்து வைத்திருந்த லட்சுமி அப்போதுதான் கண்கூடாக கண்டாள்.

 

தாய் இறந்ததை எண்ணி கலங்கும்  சுகந்திக்கு ஆறுதல் கூற விழைந்தவளை  கூட பார்வையாலேயே அருணா தடுத்து நிறுத்தசுகந்தியுடன்  பேசுவதை அவள்  விரும்பவில்லை என புரிந்துகொண்டு அதற்கு மேல் லட்சுமி  தனக்கு இட்ட பணியை மட்டும் செய்துவிட்டு துக்கம் நிகழ்ந்த வீட்டில் அமைதி காத்தாள்.

 

என்னதான் சடங்கு முடிந்த அன்றே வீடு திரும்பி இருந்தாலும்இரண்டு நாள் விடுப்பு இரண்டு நிமிடமாக கழிந்து போனது ராம்சரணுக்கு.

 

கணவன் மனைவி இருவருமே சசியின் திடீர்  மறைவில் இருந்து  விடுபட முடியாமல்சற்று தடுமாறித்தான் போயிருந்தனர்.

 

தான் போட்ட திட்டங்கள் பலிக்கவில்லை என்ற கவலை  ஒரு புறம் இருந்தாலும்தன்னை சுற்றி நிகழும் நிகழ்வுகள் எல்லாம் ஏதோ ஒரு சூனியத்திலேயே முற்றுப்பெறுவது போல் இருப்பதை எண்ணி குழம்பித் தவித்தான் ராம்சரண்.

 

 குழந்தை பற்றிய சிந்தனைகள்  எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மனித வாழ்க்கை எத்துனை சிறியது என்ற தத்துவத்திலேயே ராம்சரண் சிக்கி தவிக்கஅவன் மன நிலைக்கு சற்றும் குறையாத மனநிலையில் அவன் மனையாளும் கட்டுண்டிருக்க, அதே சமயத்தில் இருவரும் அது குறித்து பேசிக் கொள்ள விரும்பவில்லை என்பதோடு அதற்கான நேரமும் இல்லாததால், இயல்பாக நாட்கள் நகர்ந்தன.

 

உடலைக் காட்டிலும் மனம் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா ஆகச்சிறந்த  தாம்பத்தியத்திற்கு ....

 

பல சந்தர்ப்பங்களில் ஹரிஷின் தாயார் சுசீலாவின் உழைப்பு , திறமையை எண்ணி வியந்து இருக்கிறான் ராம்சரண். அம்மாதிரியான ஒரு பெண்மணியின் திடீர் இழப்பு கணவன் மனைவி இருவருக்குமே ஏதோ ஒரு வித துக்கம், தேக்கம்மன அழுத்தத்தை கொடுத்து இருக்க இயல்பான தாம்பத்தியத்தை தொடர முடியாமல் தடுமாறினர். 

 

 

இந்நிலையில் ரங்கசாமி தேயிலை தொழிற்சாலையை மேலும் விரிவு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததால்  ,ஸ்ரீ லட்சுமிக்கு வேலை அதிகமாகி போனாலும் கற்பகம் அருணாவின் ஏச்சுப் பேச்சுக்கள் இல்லாமல் கணவர் மற்றும்  மாமனாருடன் இருப்பது அவள் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து இருந்தது.

 

ரங்கசாமியின் பேச்சுக்கள் பெரும்பாலும் எஸ்டேட், தேயிலை தொழிற்சாலை , ஏற்றுமதி இறக்குமதி  குறித்தே இருக்க, அவருக்கும் ராம்சரணுக்கும் உணவு பரிமாறிக் கொண்டே பெரும்பாலான விஷயங்களை அவள் அறிந்து கொள்ளஉடன் இருந்த ராம்சரணும் தெரியாத பல விஷயங்களை அப்போது தெரிந்து கொண்டான். 

 

அவன் அலுவலகத்திற்கு செல்வதோடுதினமும்  ரங்கசாமியுடன்  தங்கையின் இல்லத்திற்கும் சென்று விசாரித்துவிட்டு வர , நாட்கள் வேகமாகச் செல்ல,  13 ஆம் நாள் காரியம் உறவினர்கள் சூழ நன்றாக நடந்தேறியது.

 

அதுவரையில் கோயம்புத்தூரில் இருந்ததே அதிகம் என்பது போல் காரியம் முடிந்த கையோடு  ரங்கசாமி ஊட்டிக்கு பறந்து விடமேலும் ஒரு வார காலம் தங்கி இருந்து விட்டு வருவதாக கற்பகம் சொல்ல, ஸ்ரீ லட்சுமியை வீட்டில் விட்டுவிட்டுஅலுவலகத்திற்கு சென்றான் ராம்சரண். 

 

முதன்முறையாக யாரும் இல்லாத அந்த வீட்டின்  ஏகாந்தம் அவளுக்கு ரம்யமாக இருக்க வெகுவாக ரசித்தாள் பெண் .

 

குடும்ப உறுப்பினர்கள் உற்றவர்கள் ஆகவும் உறுதுணையானவர்களாகவும் இருந்தால்தனிமை என்றுமே இனிக்காது .... ஆனால் அவள் வாக்கப்பட்டு வந்த தினத்திலிருந்து, சதா அடாவடி பேச்சும் ஆணவப் பேச்சையும்  கேட்டு கேட்டு மன அழுத்தத்திற்கு உள்ளானதால் , இந்த தனிமை அவளுக்கு இனிமையை வாரி வாரி வழங்க, புது உத்வேகம் பிறக்கஅனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு ஆர்வமாகவும் வேகமாகவும் முடிக்கலானாள்.

 

ராம்சரண் வீடு திரும்பியதும் மனையாளின் முகப்பொலிவு பௌர்ணமி நிலவாய் அவனை குளிர்விக்க, ரசித்தபடி விழியால் தொடர்ந்தவன் உணவருந்தும் போது

 

"என்ன லட்சுமி ... இன்னைக்கு எப்பவும் விட ஹேப்பியா இருக்க..." என்றான் நேரடியாக.

 

"இல்லையே எப்பவும் போல தான் இருக்கேன் ..." என்றாள் அமர்த்தலாக.

 

"இல்லையே .......... ஆனா ...காரணம் எதுவாயிருந்தாலும் நீ இப்படி இருக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு ..."  என்றபடி உணவை முடித்துக் கொண்டவன்சிட் அவுட்ல் அமர்ந்து வழக்கம் போல் மடிக்கணினியில் அலுவலக பணியில் மூழ்கிப் போனான். 

 

 

குளிர்ந்த காலநிலை மங்கையின் மனநிலையை இம்சிக்க, மழையும் லேசாக தூர தொடங்கமனையாட்டியின் மனம் தன்  மன்னவனை தேட, கணவனுக்கு அருகில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தவள்விழி விளக்காமல் அவனையே பார்த்தாள். 

 

"என்ன லக்ஷ்மி ..." என்றான் கணினியில் இருந்து பார்வையை விளக்காமல்.

 

அவளிடம் பதில் இல்லை என்றதும், தலை நிமிர்த்து பார்த்தவனுக்கு  அவள் விழிகளின் அழைப்பு வெட்ட வெளிச்சமாய் தெரிய, அனிச்சையாய் உல்லாசம் அவனைத் தொத்திக் கொள்ள,

 

"என்ன ...." என்றான் கண்களில் குறுகுறுப்போடு  அவளை நெருங்கி குழைவுடன் .

 

"தூங்கலாமா ..." என்ற புதிய அழைப்பில் 

 

" ஏய்  லட்சுமி .... " என்று மேலும் குழைந்தவன்  மடிக்கணினியை மூடி விட்டுபாவையை நெருங்க,

 

காரிகையின் கள்ள விழி பார்வை,

அவனைத் தூண்டிலிட்டு அழைக்க,

 அவளது கட்டழகு தேகம் அவனை படை கொண்டு முற்றுகையிட,

 மெல்ல மெல்ல சிலிர்ப்பும் குறுகுறுப்பும் அவன் உடலில் ஊற

அவன் தேகம் எங்கும் மின்னலாய் தாபக் கீற்றுகள் முளைக்க ,

 காரிருள் வேளை தன் வேலையைக் காட்ட

அவன் விரல்களும் விரகத்தில் மூழ்க,

 உடலினை உருக்கும் காமம் உயிர் வரை சென்று தாக்க,

 மடலெனும் தேகம் கொண்டவளை,

மலர் போல் கையில் ஏந்தி,

மேகம் என்னும் மெத்தையில் கிடத்தியவன் 

பச்சிளங் கொடியைப் படர்ந்து ,

அவளைத் திகட்ட திகட்ட மோகத்தில் மூழ்கடித்து 

மழை காணா நிலமாய் இருந்தவளின் தேகத்தின்

தாகத்தை, திளைக்க திளைக்க மன்மத மழை சிந்தி

 தீர்த்தான் ....

 

நீண்ட நாட்களுக்குப் பின்பான மன அழுத்தம் இல்லா அந்த மன்மதக்கலை இருவருக்குமே மனநிறைவைத் தந்திருக்க , நெற்றி முத்தம் கொடுத்து மனையாளை தன்னோடு பிணைத்துக் கொண்டு, அவள் காதுகளில் 

 

"வர, வர  உன்னை தொடவே பயமா இருக்கு டி ...."  என அவன் கிசுகிசுக்க,

 

" ஏன் .... நீங்க  சந்தோஷமா இல்லையா ...." என்றாள் அவன் வெற்று மார்பில் முகம் புதைத்து.

 

"ஏய் லட்சுமிநான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன்னு உனக்கு தெரியலையா...

 

ஒரு வேளை  இன்னைக்கு  நீயா வரலைன்னா நானே உன்கிட்ட வந்து இருப்பேன் .... ஆனா நான் சொல்ல  வந்த விஷயமே வேற  ...

 

இந்த மாசம் சப்போஸ் பீரியட்ஸ் வந்துருச்சுன்னா நீ வருத்தப்படக்கூடாது ... முக்கியமா பீரியட்ஸ் ரெண்டு மூணு நாள் தள்ளி போச்சுன்னுபிரக்னன்சி கிட் வாங்கி செக் பண்ணி பார்த்து  ஏமாந்து அழக்கூடாது இன்னும் கிளியரா சொல்லணும்னா  பீரியட்ஸ பத்தியே நீ நினைக்க  கூடாது .... புரிஞ்சுதா குழந்தைக்காக நாம சந்தோஷமா இல்ல .... நாம நமக்காக சந்தோஷமா இருக்கோம்னு நீ முதல்ல புரிஞ்சிக்கணும்.... குழந்தை எப்ப உண்டாகணும்னு விதி இருக்கோ அப்ப உண்டாகும் சரியா ...." என்றான் சரியான தருணத்தில் அவள் சரியான மனநிலையில் இருக்கும் போதே.

 

மறுநாளிலிருந்து  விடியல் உல்லாசமாய் விடிய,  கால நேரமில்லாமல் காதல் கரையை கடக்க, இணையர்களின் இனிமை ஏகோபித்துக் கூட, ஏகாந்தத்தில் மூழ்கித் திளைத்தனர்.

 

ஒரு வாரம் கடந்தது .... 

 

கற்பகம் வந்தார் ... உடன் அருணாவும் வர வழக்கம் போல் ஏச்சுப் பேச்சுக்கள் ஆரம்பித்தன ...

 

முன்பாவது மாமியார் என்ற நபர் வீட்டில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவ்வப்போது அருணா புகுந்த வீட்டை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் . தற்போது அவரின் மறைவுஅவளுக்கு பல விதங்களில் வசதியாகி போக, தாய் வீட்டிலேயே தங்கி விட்டாள்.

 

ராம்சரண் தங்கையின் வரவை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை சமீபத்திய வழக்கமாக  பாரா முகமாய் இருந்து விட்டான்.

 

இப்படியே கிட்டத்தட்ட ஒரு மாதம் கழியஒரு நாள்  மாலை 4 மணிக்கு வீடு திரும்பிய  ராம் சரண்  தன் தாயிடம்,

 

"அம்மா  இன்னைக்கு ஈவினிங் 6 ஓ கிளாக்   ப்ராஜெக்ட்  பார்ட்டி இருக்கு .... நானும் லட்சுமியும் போகப் போறோம் .... வர லேட் ஆகும் ...." என அவன் முடித்ததுமே,

 

"ஏண்டா என்னைக்காவது ஒரு நாள் என்னையும் அருணாவையும் இப்படி கூட்டிட்டு போகணும்னு உனக்கு தோணி இருக்கா  ..." என்றார் கோபத்தை அடக்கி.

 

"அம்மா... உனக்கு வர வர மூளை மழுங்கி போச்சா .... அது ஆபீஸ்  பார்ட்டி... சரியா சொல்லணும்னா தண்ணி பார்ட்டி ... அங்க ஒன்னு கேர்ள் பிரண்டோட போகணும் இல்ல வைஃப் ஓட போகணும் இல்ல தனியா போகணும்.... என் கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனையோ தடவை இப்படி போயிருக்கேனே .... நீ அப்பல்லாம் எதுவுமே சொன்னது இல்லையே இப்ப மட்டும் ஏன் இப்படி கேக்கற ..."  என அவன் நேரடி தாக்குதல் நடத்த,  

 

"என்னமோ போ ... பேசவே மாட்ட... இப்பெல்லாம் நிறைய பேசுற ..." என முடித்தார் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரியும் ஆங்காரத்தை அடக்கிக் கொண்டு.

 

அவன் கருத்த நீல நிற கேஷுவல் பிளேசர், வெளிறிய கருப்பு நிற ஜீன்ஸில் தயாராகி இருக்க,  லட்சுமியோ  அதே கருத்த நீல நிறத்தில் சிறு வெண்ணிற பூக்களிட்ட அதிக ஃபிரில்கள் கொண்ட ஜார்ஜெட் சாலிட் அனார்கலியில் தயாராகிஅவனுடன் பார்ட்டிக்கு புறப்பட்டாள்.

 

ஒருவருக்காகவே மற்றவர் பிறந்தது போல்ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்ககண்டும் காணாதது போல்  கற்பகமும் ,அருணாவும் காந்திக் கொண்டிருந்தனர். 

 

ராம் சரணும் வீராவும் ஒரே குழுமம் என்பதால் அவனும் பார்ட்டிக்கு வந்திருந்தான்.

 

ஸ்ரீலட்சுமிக்கு தன் கணவனின் பதவிபணித்தன்மை, சம்பளம்அந்த நிறுவனத்தில் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகள் அனைத்தும் தெரியும்ஆனால் அவனது அதிகாரத்தை  இப்போதுதான் கண்கூடாக பார்க்கிறாள். 

 

ஆண் பெண் பேதம் இல்லாமல்அவனைத் தேடி வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்தவர்களிடம் இன்முகத்தோடு பழகியவன்  தன் மனையாளை அறிமுகப்படுத்த, ஆண்கள் இயல்பாக ஸ்ரீலட்சுமியிடம்  கைகுலுக்கி நலம் விசாரிக்க, பெண்களும் அவ்வாறே நலம் விசாரித்தனர்என்றாலும் அதில் ஒரு சிலர் கண்களில் மட்டும் லேசான பொறாமை உணர்வு தட்டுப்பட்டது போல் லட்சுமிக்கு தோன்றியது. 

 

 

அந்த ஒரு சில பெண்களின் பேச்சிலிருந்து  தன் கணவன்  மேல்ஒருவித தனிப்பட்ட ஈடுபாடு அவர்களுக்கு  இருப்பதை சொற்ப நேரத்திலேயே உணர்ந்து கொண்டவளுக்கு  நெஞ்சை அழுத்தும்  ஒருவித இறுக்கம்எரிச்சல், ஆற்றாமை , லேசான அழுகை ஆகியவை  போட்டி போட்டுக் கொண்டு பொங்கி வர, வெகு சிரமப்பட்டு அடக்கி கொண்டவள், தன்னவன் அவன் நட்பு வட்டத்தோடு பேச்சில் மூழ்கி விட்டான் என நினைக்க  அவனோ கீழ்கண்களால் மனையாளின் முகம் மாற்றத்தை உள்வாங்கி கொண்டிருந்தான்.

 

வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் கேளிக்கைகள் ஆரம்பமாகமதுவும் பரிமாறப்பட , விருப்பம் இருப்பவர்கள் அருந்திவிட்டு ஆட்டம் போட, நிகழ்ச்சி களைகட்ட தொடங்கியது. 

 

லட்சுமி தன் ஆடம்பரம் இல்லாத அமைதியான உலகிற்கும் ,காதுகளை கிழிக்கும் ஸ்டீரியோ ஒலிகளில் கால்கள் தரையில் படாமல் தன்னை மறந்து தாவி தாவி நடனமாடும் அந்த நவ நாகரிக யுவன் யுவதிகளின் நவீன உலகிற்கும் ஆயிரம் வித்தியாசங்களை கண்டாள்.

 

சினிமா மற்றும் கதைகளின் மூலம்  மட்டுமே அறிந்திருந்ததை அப்போதுதான் அவள் கண்கூடாகப் பார்க்கதான் மெய் மறந்து கண்களை அகல விரித்து '' வென்று  பார்ப்பதை அடுத்தவர்கள் பார்க்கிறார்களா என்பதையும் அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.

 

அடுத்தவர்கள் கண்டு கொண்டார்களோ இல்லையோஅவளது கணவன் அவள் பார்வை மாற்றத்தை அருமையாக கண்டுகொண்டதோடு பொங்கி எழுந்த புன்னகையும் நாசுக்காக மறைத்துக் கொண்டான்.

 

ராம் சரணின் இறுக்கம், சபைகளில் அவன் காட்டும் ஒரு வித ஒதுக்கம் ஆகியவற்றை  அறிந்ததால் அவனை அழைக்காமல், வழக்கம் போல் வீரா மட்டும் ஆண் பெண் பேதம் இல்லாமல் அனைவருடனும்   நடனம் என்ற பெயரில் ஆட்டம் போட்டான். 

 

ஒரு வழியாக கேளிக்கைகள் முடிவுக்கு வர, புஃபே (Buffet) முறையில் ஏற்பாடு செய்திருந்த உணவில் , தங்களுக்கு  தேவையானதை எடுத்துக் கொண்டு ஸ்ரீ லக்ஷ்மிராம்சரண்வீரா ஒரே உணவு மேஜையில் அமர்ந்து பேசியபடி உண்டு முடித்தனர்.

 

 பிறகு ராம்சரண் அனைவருக்கும் பொதுப்படையாக சொல்லிக்கொண்டு கிளம்ப எத்தனிக்கும் போது

 

"சரண் ... நீ  கார் பார்க்கிங்க்கு போய்கிட்டே இரு ... ஸ்ரீனி கூப்ட்டு இருக்கான் என்னன்னு கேட்டுட்டு , வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் ..." என வீரா விடை பெறராம்சரண் தன் மனையாளோடு  சற்று தொலைவில் இருக்கும் கார் பார்க்கிங்கை நோக்கி நடக்க,

 

"அவங்க ஏன் அப்படி பாத்தாங்க ...." என்றாள் லட்சுமி மொட்டையாக .

 

அவளது கேள்வி புரிந்தாலும் 

 

"நீ அழகா இருக்க இல்ல... அதான் அப்படி பார்த்திருப்பாங்க ..." என்றான் வேண்டுமென்றே.

 

"ஐயோ ... நான் என்னை பார்த்ததை சொல்லல...  உங்கள பார்த்ததை கேட்டேன்..."

 

"என்னை எப்படி பார்த்தாங்க ..." என்றான் புரியாதது போல்.

 

"முழுங்குற மாதிரி பாத்தாங்க ..." என்றதும் அவள் யாரை, எதை  குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்து கொண்டு குலுங்கி நகைத்தவன்

 

"முழுங்குற சைஸ்லயா டி நான் இருக்கேன் ...." 

 

என பதில் சொல்லிக்கொண்டே வேகமாக முன்னேறஅவன்  பிளேசர் லேசை பற்றிக் கொண்டு, லேசாக சரிவது போல் அவன் தோளில் லட்சுமி சாய

 

"ஏய் லட்சுமி என்ன ஆச்சு ..." என்றான் பதட்டமாக.

என்னன்னு தெரியல ... தலை சுத்துற மாதிரி இருக்கு இந்த மாதிரி சவுண்ட்ஸ் எல்லாம் எனக்கு  பழக்கமில்ல  ..." என்றவளின் மனதில்தலைசுற்றலுக்கு காரணம் கர்ப்பமாக இருக்குமோ என்ற சிறு எண்ணம் எழுந்தாலும், அதனை வெளிப்படையாக சொல்ல மனம் வராமல் போகஅவளும் நகராமல் அவனையும் நகரவிடாமல் பற்றிக் கொண்டே நிற்க அவர்களை பின்தொடர்ந்து சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த வீரா, அதனை கண்டதும் வேகமாக அவர்களை நோக்கி வந்து ,

 

"என்னாச்சு சரண் ...." என்றான். 

 

"தலைசுத்தற மாதிரி இருக்குன்னு சொல்றா டா ..." 

 

"ஒரு நிமிஷம் ..." என்றவன் ஓடிச் சென்று அருகில் இருந்த  தன் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுக்க, அதில் முகம் கழுவி சற்று புத்துணர்வு பெற்றவளை கை தாங்கலாக பற்றி அழைத்து சென்று தன் காரில் அமர வைத்த ராம் சரண் 

 

"தேங்க்ஸ் வீரா... கிளம்பறோம்.." என்றான் நட்பாக. 

 

" ஓகே டா ... லட்சுமி டேக் கேர் ..." என்று வீரா  விடை பெற்றதும் , ஏதோ ஒரு உள்ளுணர்வு  உந்த மின்னல் வேகத்தில் காரை இயக்கியவன்அருகில் மனையாள் மயக்க நிலையில் கண்ணயர்ந்திருப்பதை பார்த்தபடி மருந்தகத்தில் நிறுத்திவிட்டுகர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தை வாங்கினான் .

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. You are rocking as usual mam 😍😍😍😍😍

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment