ஸ்ரீ - ராமம் - 12

அத்தியாயம் 12 

 

 

அப்போது நடந்தது பேச்சு வார்த்தையா அல்லது வாக்குவாதமா என தெரியாது ஆனால் அதன் பிறகு இருவரும் முகம் பார்த்து பேசிக் கொள்வதை  தவிர்த்தனர்.

 

மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே ஏதோ சரியில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்ட ருக்மணி, அது குறித்து மகளிடம் பேசும் கால நேரத்திற்காக காத்திருக்கலானார். 

 

 மூன்றாம் நாள் ராம்சரண் மருத்துவமனையில்  செலுத்த வேண்டிய மீதி கட்டணத்தை செலுத்தி விட்டு  பழங்கள், மருந்து மாத்திரைகள் என அனைத்தையும் வாங்கி ருக்மணியிடம் கொடுத்து

 

"இந்த கார்டை வச்சுக்கோங்க .... மத்த செலவுக்கு யூஸ் பண்ணிக்கோங்க ..." என்றான் உடன் வங்கி அட்டையை கொடுத்து.

 

"வேண்டாம் மாப்பிள்ளை .... ஏற்கனவே நிறைய செலவழிச்சிட்டீங்க ..."

 

"அதெல்லாம் யோசிக்காதீங்க ... நாங்க எங்க குழந்தையை இழந்தது எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பெரிய இழப்பு .... என்னை விட அதிகமா கஷ்டப்பட்டது லட்சுமி தான்... அவளை நல்லபடியா பாத்துக்கோங்க எனக்கு அது போதும் ..." என்றவன் தன் மனையாளையும், ருக்மணியும் அவர்களது இல்லத்தில் விட்டு விட்டு தன் இல்லம் நோக்கி  பயணமானான்.

 

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பயணக் களைப்பிலேயே , ஸ்ரீலக்ஷ்மி தன் அறைக்கு சென்று அசந்து உறங்கிவிட

 

"மாப்பிள்ளையும் லட்சுமியும் சரியா பேசிக்கவே இல்லங்க ...அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைனே தெரியல...." என்றார் தன் கணவர் தியாகராஜனிடம் ருக்மணி.

 

வழக்கம் போல் தியாகராஜன்,கண்டும் காணாதது போல் அன்றைய தினசரியில் மூழ்கி விட,

 

"பணத்தை தண்ணியா செலவழிச்சதோடஇப்ப அவரோட Icici bank கார்டை வேற கொடுத்துட்டு செலவுக்கு எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டு போறாரு... அப்படிப்பட்ட மனுஷன் மேலஇவளுக்கு என்ன கோவம்னு எனக்கு புரியவே மாட்டேங்குது ..."

 

"ம்ம்ம்ம்.... பணத்தை கொடுத்துட்டா போதுமா ..... அவங்க வீட்டு ஆளுங்க ஒருத்தர் கூட இதுவரைக்கும்  வந்து பாக்கல.... அதை அவர் கண்டுக்கவுமில்லை அவங்க அம்மாவையும் தங்கச்சியையும் எந்த இடத்துலயும்  விட்டுக் கொடுக்க மாட்டேங்கிறாரு.... இப்படி இருந்தா கோவம் வரத்தானே செய்யும் ...." என்றார் தியாகராஜன். 

 

"குறை இல்லாத மனுஷனே உலகத்துல கிடையாதுங்க....நமக்கு கல்யாணம் ஆகி முதல் ஏழேட்டு  வருஷம்  வித்த மாட்டுக்கு வைக்கோல் போடற மாதிரி என் அப்பா அம்மா தானே நமக்கு  சோறு போட்டு துணிமணி எடுத்து கொடுத்து பாத்துக்கிட்டாங்க .... என்னோட ரெண்டு பிரசவத்துக்கும் நீங்க பத்து காசு செலவழிக்கல மாப்பிள்ளைங்கிற ஜம்பத்துல  உட்கார்ந்துகிட்டு வெட்டி அரசியல் பேசி காலத்தை கழிச்சிகிட்டு இருந்தீங்க... என் அப்பா தானே எல்லாத்துக்கும் செலவழிச்சாரு... உங்களுக்கு அப்ப நிரந்தர வேலையும் இல்ல.... நான் உங்க மேல  கோவப்பட்டேனா.... இல்ல வேலை எதுவும் இல்லாம வீட்டோட மாப்பிள்ளையா இருந்ததுக்காக என் அப்பா அம்மா உங்களை மரியாதை குறைச்சலா நடத்தனாங்களா.... இல்லையே .... உங்க கிட்ட அவ்வளவு குறை இருந்தும்நானும் என் அப்பா அம்மாவும் அப்படியே ஏத்துக்கிட்டோமே.... பொதுவா பெண் குழந்தை பிறந்தாலே பெத்த தகப்பனுக்கு பொறுப்பு வரும்னு சொல்லுவாங்க ... உங்களுக்கு ஒன்னுக்கு ரெண்டு பெண் குழந்தைங்க பிறந்தும் இப்ப வரைக்கும் நீங்க பொறுப்பா நடந்துகிட்டதே இல்லயே....

 

உங்க குறை கை புண்ணு மாதிரி  தெளிவா இருக்கும் போதே, மாப்பிள்ளையோட குறையை  பூதக்கண்ணாடி கொண்டு தேடி கண்டுபிடிக்கறீங்க.... எனக்கு 50 வயசு ஆகப்போகுதுஎன்னோட வாழ்க்கை அனுபவத்துல சொல்றேன் .... இப்படி ஒரு மாப்பிள்ளை வேற யாருக்கும் கிடைச்சிருக்க மாட்டாங்க ... அந்த நல்ல மனுஷனோட அருமை புரியாம நீங்களும் உங்க பொண்ணும் ஆட்டம் போட்டுகிட்டு இருக்கீங்க ...." 

 

என தனது நீண்ட நாளைய ஆதங்கத்தை கோபமாக  மளமளவென்று இறக்கி வைத்துவிட்டு அடுக்களைக்கு சென்று விட்டார்  ருக்மணி. 

 

ராம்சரண் வீட்டினுள் நுழையும் பொழுதேஎதிர்கொண்டு அழைப்பது போல் அருணாவும் கற்பகமும் ஒருவித போலி பரபரப்புடன் வந்தனர். 

 

"இப்ப எப்படிப்பா இருக்கா ... " என ஈன ஸ்வரத்தில் கற்பகம் கேட்க , நடந்ததை சொல்லிவிட்டு 

 

"இப்ப பரவாயில்லம்மா ... ஆனா அவ ரொம்ப வீக்கா இருக்கிறதா டாக்டர் சொன்னாங்க ... ஆளும் பாதியா இளைச்சி போயிட்டா ..." என ஆழ்ந்த சோகத்தோடு மொழிந்தவனை  கற்பகம் கீழ்கண்களால் வன்மத்தோடு  உறுத்து நோக்கஅவன் பார்வையோ லேசாக கண் கலங்கிய தன் தங்கை அருணா மீதிருந்தது.

 

"அண்ணேவிஷயத்தை கேள்விப்பட்டதும்  துடிச்சு போயிட்டேன் ... எவ்ளோ ஆச ஆசையா இருந்தேன் தெரியுமா.... அண்ணிக்கு பெண் குழந்தை பொறந்தாஉனக்கு  சம்பந்தி ஆகலாம்னு  கனவெல்லாம் கண்டேனே .... இப்படி எல்லாம் கலைஞ்சி போகும்னு  கொஞ்சம் கூட எதிர்பார்க்கலண்ணே..." என நீலி கண்ணீர் வடித்தவளிடம்

 

"நடந்தது நடந்து போச்சும்மா... இனிமே அத பத்தி பேசி ஒன்னும் ஆகப் போறதில்ல.... சரி... உன் மாமியார் எப்படி இருக்காங்க ..."

 

"இன்னைக்கு காலையில தான் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆனாங்க ... அதனால தான் உனக்கு போன் கூட பண்ணல ... இன்னைக்கு சாயங்காலம் ஹாஸ்பிடலுக்கு வந்து அண்ணியை பார்க்கலாம்னு  இருந்தேன்.... அதுக்குள்ள அவங்களும் டிஸ்சார்ஜ் ஆயிட்டாங்க ..."  எனப் பொருத்தமாக பேசி முடித்தவளிடம் விடை பெற்றுக்கொண்டு தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

 

ராம்சரண் இடத்தை காலி செய்ததும்வழக்கம் போல் தாயும் மகளும் தொலைக்காட்சியை அலற வைத்துவிட்டுகூடி கூடி அரட்டை அடிக்க தொடங்கினர்.

 

அறைக்கு வந்தவனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவியாய் தவித்தது .

 

அன்பாய் பேசி ஆறுதலாய் அரவணைக்க  வேண்டிய தருணத்தில்அனல் வார்த்தையை தன்னவளிடம் கொட்டி விட்டோமே .... என அவன் மனம் நொந்து  கொண்டிருக்கும் வேளையில் , அவனுடைய ஆருயிர் நண்பன் அதிவீரராம பாண்டியன்  அலைபேசியில் அழைத்திருந்தான்.

 

நடந்தவைகள் அனைத்தும் ஏற்கனவே அவன் அறிந்திருந்ததால் 

 

இப்ப லட்சுமி எப்படி இருக்கா ..."  என்றான் நேரடியாக. 

 

"டிஸ்சார்ஜ் பண்ணி அவங்க  வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்டா..." என்றவனிடம் வீரா மேலும்  சில கேள்விகளை கேட்கஅதற்கு சரண் பதிலளித்து முடித்ததும் 

 

"அம்மா உன்கிட்ட பேசணும்னு சொல்றாங்க.. அவங்க கிட்ட பேசு ..." என தன் தாய் அகல்யாவிடம் அலைபேசியை கொடுத்தான் வீரா. 

 

"விஷயத்தை கேள்விப்பட்டதும் ரொம்ப வருத்தமா போச்சுப்பா..." என ஆரம்பித்தவர் ஸ்ரீலட்சுமியின் உடல் நலத்தை பற்றி பொறுமையாக விசாரித்து கேட்டுக் கொண்டு கடைசியில்

 

"முழு பிள்ளை பெத்துக்கிறது ஈஸி பா ... இந்த மாதிரி அரை பிள்ளை பெத்து அது இறந்து போச்சுன்னா ஒரு தாய்க்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா... பொதுவா பிரசவம் பொண்ணுங்களுக்கு மறு ஜென்மம்னு சொல்லுவாங்க ...

உயிர் போய்ட்டா நல்லா இருக்கும்னு  நினைக்கிற அளவுக்கு  பிரசவ வலி இருக்கும் ... ஆனா குழந்தை பிறந்ததும்தாய் அதோட முகத்தைப் பார்த்ததுமே தான் பட்ட கஷ்டத்தை எல்லாம் மறந்துடுவா ....

இப்படி அஞ்சு மாசத்துக்கு மேல கஷ்டப்பட்டு தாங்கின கரு திடீர்னு கலைஞ்சு போச்சுன்னா   அது அந்த  தாயோட உடல் நிலையை விட மனநிலையை ரொம்ப பாதிக்கும் ப்பா.... பாவம் லக்ஷ்மி ... எவ்ளோ கனவுகளோடயும் ஆசைகளோடயும் சுமந்தாளோ.... 

 

ஒரு அம்மாவா சொல்றேன்.... இப்ப லட்சுமியோட உடம்பும் மனமும் ரணமா இருக்கும்... எது எப்படி இருந்தாலும்உங்க வீட்டு ஆளுங்க என்ன சொன்னாலும், எதையும் காதுல வாங்கிக்காம லட்சுமியை பத்திரமா பாத்துக்கப்பா... சரியா....  அன்புக்கும் ( வீராவின் தங்கை) பாண்டி அப்பாவுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல அதனால தான் வந்து பார்க்க முடியலப்பா ..." என்றார் நயந்து. 

 

"பரவால்லம்மா ... நான் அத பத்தி  எதுவும் நினைக்கல ... அப்பாவை நல்லபடியா பார்த்துக்குங்க..”  என்றவன் வீராவிடம் ஓரிரு நொடி பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான். 

 

வீராவின் தாய் அகல்யா பேசிய வார்த்தைகள் அவன் மனதில் தொடர்ச்சியாய் ரீங்காரமிடஅப்பொழுது ஒரு விஷயம் அவன் மனதை லேசாக தைத்தது.

 

வீராவும் அவனும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக  நண்பர்கள்.

 குடும்ப உறுப்பினர்கள், உறவுக்காரர்கள் போல் இருவரும்  பரஸ்பரம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் ...

 

வீராவின் தாய் தன் மனையாளின் உடல் நலத்தை பற்றி  விசாரித்ததற்கும்தன் தாய்  விசாரித்ததற்கும் பல மடங்கு வித்தியாசங்களை முதல் முறையாய் உணர ஆரம்பித்தான். 

 

வீராவின் தாய் கூறியதில் உணர்வோடு  உயிர்ப்பும் அக்கறையும் இருந்தது ...

 

தன் தாயும் தங்கையும் பேசியது  அரசியல்வாதிகளின் மரியாதை நிமித்த சந்திப்பாக இருந்ததே ஒழிய, உயிரோட்டமாக இல்லை என்பதை  ஆராய்ந்து கொண்டிருக்கும் போது தான் செய்த தவறு தலையில் அடிக்க,

 

"சாரிம்மா லட்சுமி .... உன்கிட்ட ரொம்ப கோவப்பட்டுட்டேன் .... குழந்தை இறந்ததது ரெண்டு பேருக்கும் இழப்புனு நினைச்சேனே ஒழிய  வீராவோட அம்மா எடுத்து சொல்ற வரைக்கும் , என்னை விட உனக்குத்தான் இழப்பு அதிகம்னு எனக்கு புரியல ..." என லேசாக கண் கலங்கினான்.

 

அவளது புன்னகைத் தவழும் சாந்தமான முகம் பார்க்கப் பார்க்க தெவிட்டாதது ... அந்த முக பாவத்தை காண அவன் கண்கள் தவம் இருக்க, தன்னவளை அலைபேசியில் அழைத்து பேசலாமா என்ற எண்ணம் பிறந்ததுமேதற்போதைய மனநிலையில் அவள் தன் அழைப்பை ஏற்க மாட்டாள் என முடிவு செய்துஅந்த முயற்சியை கைவிட்டான்.

 

கைகளில் தவழவிருந்த  சொர்க்கம் , கைநழுவியது சூனிய மனநிலையை கொடுக்க , அஸ்தமித்துக் கொண்டிருக்கும் ஆதவனின் செந்நிற கிரணங்களை  கண்கலங்கிய படி சாளரத்தின் வழியை பார்த்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி மீண்டும்  சிணுங்கியது.

 

அவன் தந்தை ரங்கசாமி  அழைத்து இருந்தார்.

 

தன் தலைமுறை தழைத்து விட்டது என்ற செய்தியில் விண்ணைத் தொடும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருப்பவரை  நன்கு அறிந்தவனாதலால் அவரது மனநிலை மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு , நடந்ததை பகிராமல் விட்டிருந்தான். 

 

" சொல்லுங்கப்பா ..." என்றான் தன் கமரிய குரலை    மறைத்து.

 

"எப்படிப்பா இருக்க... லட்சுமி எப்படி இருக்கா..."

 

எடுத்த எடுப்பில்  இப்படி விசாரிப்பார் என எதிர்பார்க்காததால் லேசாக தடுமாறியவன்,

 

"லட்சுமிக்கு உடம்பு சரி இல்லப்பா ... வயித்த வலி அதிகமா இருக்குனு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்..”

 

"என்னப்பா சொல்ற ...  குழந்தைக்கு ஒரு ஆபத்தும் இல்லையே " என அவர் பதற,

 

"இப்ப எதுவும் சொல்ல முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்கப்பா...  திடீர்னு  வயித்த வலின்னு சொன்னா , எங்களுக்கும் ஒன்னும் புரியல .... உள்ள ட்ரீட்மெண்ட் நடந்துகிட்டு இருக்கு ..." 

 

நடந்து முடிந்ததை முழுமூச்சாக சொல்லி அவரை கலவரப்படுத்த வேண்டாம் என நினைத்து படிப்படியாக அவன் பகிர ,

 

"நாளைக்கு காலையில நான் ஊர்ல இருப்பேன். அதை சொல்ல தான் இப்ப போன் பண்ணேன் ... எது எப்படி இருந்தாலும் லட்சுமியை நல்லபடியா பாத்துக்க...சரியா ...." என சோகத்தின் சுவடுகளோடு  அழைப்பை துண்டித்தார்.  அவர் வீட்டிற்கு வந்ததும்தான், நடந்ததை பக்குவமாக எடுத்துக் கூற வேண்டும் என்றெண்ணிக்கொண்டவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளகீழ்தளத்தில் உணவு மேஜையில் இருந்த ஹாட் பேக்கை ஆராய்ந்தான்.

 

பாதி உண்ணப்பட்டு மீதி காய்ந்து கிடந்தது. 

 

லட்சுமி வீட்டை விட்டு சென்றதுமே தாயும் மகளும் சேர்ந்து புதிய சமையல்கார அம்மாவை வேலைக்கு வைத்திருந்தனர். 

 

அவர் வழக்கம் போல் குறித்த நேரத்தில் தன் கடமையை ஆற்றி விட்டு சென்றிருக்க, வீட்டுப் பெண்கள் கொறித்துவிட்டு மிச்சம் மீதியை பரப்பி விட்டுச் சென்ற லட்சணத்தை உணவு மேஜை பறைசாற்றகாய்ந்து கிடந்ததை உண்ண பிடிக்காமல், குளிர்சாதன பெட்டியில் தேடுதல் வேட்டை நடத்தினான்.

 

குளிர்சாதனப் பெட்டியின் நிலை உணவு மேஜையை விட கவலைக்கிடமாக இருந்தது.   

 

இரண்டு  நாட்களுக்கு முன்னதாக Zomataவில் வரவழைத்து அரைகுறையாக உண்ணப்பட்டவைகள் மலிந்து விரிந்து கிடக்கஅவனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

 

லட்சுமி அவன் இல்லம் வந்ததற்கு பிறகு இப்படி ஒரு காட்சியை அவன் கண்டதே இல்லை.  

 

எங்கும் சுத்தம் எதிலும் சுத்தமாய் இருந்த  இல்லம், தற்போது அவன் இல்லாள் இல்லாமையை  வெகு அழகாக பறைசாற்ற, வெளியே சென்று உண்ணும் அளவிற்கு மனதிலும் உடம்பிலும் சக்தி இல்லை என்பதால், குளிர்சாதன பெட்டியில் இருந்த ஆப்பிள் பழங்களை அரிந்து உண்ணா ஆரம்பித்தவனுக்கு , அப்போதுதான் மாசமாக இருந்த மனையாள் உண்ண முடியாமல் தவித்த தவிப்பு லேசாக புரிய ஆரம்பித்தது.

 

அவனுடைய ஆஜானுபாகுவான சரீரத்திற்கு மூன்று ஆப்பிள்கள்யானை பசிக்கு சோலை பொரியாகிப் போகவேறு வழியில்லாமல் உண்டு முடித்து  அறைக்கு வந்தவன் உறங்க எத்தனித்து உறங்கியும் போனான் .

 

மறுநாள் அதிகாலையிலேயே அவனுக்கு விழிப்பு வரகாலைக்கடன்களை முடித்துவிட்டு காலாற நடந்து கொண்டிருக்கும் போது , அவனது தந்தையின் கார் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைவதை கண்டவன், வேகமாக படி இறங்கிச் சென்று அவரை எதிர்கொண்டு வரவேற்றான்.

 

அவன் எதிர்பார்த்தது போல் ரங்கசாமி, எடுத்த எடுப்பில் லட்சுமியை பற்றி விசாரிக்க, முதலில் தயங்கியவன், பிறகு நடந்ததை பொறுமையாக எடுத்து கூறி முடித்தான்.

 

"எல்லாம் சரி...  ஆனா ஏன் லட்சுமி அவங்க வீட்டுக்கு போனா...."   என்ற முக்கிய கேள்வியை அவர் முன்வைத்ததும், சற்று தயங்கியவன் 

 

"அவங்க அம்மா கையால சாப்பிடணும்னு ஆசைப்பட்டா...அதான் அனுப்பி வச்சேன் ..." எனப் பொய்யுரைத்தான்.

 

அவனைப் பொருத்தமட்டில் நடந்து முடிந்த அசம்பாவிதத்திற்கு தன்னுடன்தன் தாய், தங்கை, மனையாள் லட்சுமி  என அனைவருமே காரணம் என கருதியதால், தாய் தங்கை மீது மட்டும் பழி சுமத்த மனம் இடம் கொடுக்கவில்லை என்பதால்  அவ்வாறு மொழிந்தான். 

முன்தினமே தன் தந்தையின் மனநிலையை ஓரளவிற்கு  தயார்படுத்தி இருந்ததால், பாதிப்பு பாதியாக இருக்க,

 

"இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலப்பா ..." என துக்கம் தொண்டையை அடைக்க மொழிந்தவர்  மருத்துவர்கள் அறிவுரைலட்சுமியின் தற்போதைய உடல் நிலை என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு

 

" சரி வாப்பா ... லட்சுமியை பார்த்துட்டு வரலாம் .." என்றார் கரகரத்த குரலில்.

 

ரங்கசாமி வந்ததும் வராததுமாக, லட்சுமியை பற்றி விசாரித்தோடுஉடனே அவளைச் காண வேண்டும் என்று முடிவெடுத்ததெல்லாம் கற்பகம் அருணாவிற்கு கடுப்பை கிளப்பியிருந்த நிலையில் 

 

"கற்பகம் வா .... போய் மருமகளை பார்த்துட்டு வந்துடலாம் ..." என இயல்பாக அவர் அழைக்க

 

"நாலஞ்சு நாளா மூட்டு வலி ரொம்ப அதிகமா இருக்குங்க ... அதனால தான் ஹாஸ்பிடலுக்கு போய் கூட மருமகள பாக்கல...நீங்க மட்டும் போய் பாத்துட்டு வந்துடுங்களேன் ப்ளீஸ் ..."

 

என உள்ளிருக்கும் புகைச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கற்பகம்  அடக்கி வாசிக்க,  

 

"நானும் அண்ணியை அவங்க வீட்ல  போய் பார்க்கணும்னு நினைச்சேன்... ஆனா என் குழந்தைங்க ரொம்ப படுத்தறாங்கன்னு என் மாமியார் இப்பதான் போன் பண்ணாங்க  ... ஏற்கனவே உடம்பு சரியில்லாதவங்க... அவங்களால குழந்தைகளை ரொம்ப பாத்துக்க முடியாது ... அதனால  நான் என் வீட்டுக்கு போகணும் ..." என நாசுக்காக  கழன்று கொண்டாள் அருணா.

 

ரங்கசாமி, ராம்சரண் மட்டும்  லட்சுமியின் இல்லம் சென்றனர்.

 

வெயிலில் காய்ந்த வாழை இலை போல் துவண்டு காணப்பட்ட மருமகளைக் கண்டுகலங்கிப் போனார் ரங்கசாமி.

 

மருமகளிடம் அரை மணி நேரம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியவருக்கு ஒன்று புரிந்து போனது, மருமகளுக்கும் மகனுக்கும் இடையே ஏதோ மனத்தாங்கல் என்று ...

 

இருவரும் மற்றவரின் பார்வையை சந்திக்க தயங்குகின்றனர் எனப் புரிந்து கொண்டவர்  விவரமாக கேட்டு அறிந்து கொள்வது அநாகரீகம் என கருதி 

 

"லட்சுமி ... குழந்தை போயிடுச்சேன்னு வருத்தப்படாதம்மா...  காலம் நேரம் வந்தா இன்னொரு குழந்தை நல்லபடியா பொறக்கும் .... உனக்கு  ரெண்டு மாசம்  டைம் ... உடம்பையும் மனசையும் நல்லபடியாக தேத்திக்கிட்டு சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துடும்மா... நீ இல்லாம அந்த வீடு என்னமோ மாதிரி இருக்கு ..." என்றார்  லேசான தழுதழுத்த குரலில்.

 

லட்சுமி தன் மாமனார் ரங்கசாமியை நன்கு அறிவாள். சுறுசுறுப்பில் தேனீ, எதிர்கால சிந்தனையில் எறும்பு , காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பம்பரமாய் பறந்து பறந்து வியாபாரம் செய்வதில் பட்டாம்பூச்சி ... எதிர்பார்ப்பில்லா அன்பு செலுத்துவதில் குழந்தை மொத்தத்தில் ஆகச் சிறந்த மனிதர் ... 

 

அப்படிப்பட்ட மனிதரின் பேச்சு அவள் மனதை பிசைய,

" சரிங்க மாமா ..." என்றாள் மென்மையாக.

 

அப்போது காலை உணவினை லட்சுமியின் தங்கை ராமலக்ஷ்மி ரங்கசாமி, ராம்சரணுக்கு பரிமாற, அவளிடம் அவளது பணி பற்றி விசாரித்துக் கொண்டே ரங்கசாமி  உணவில் கவனம் செலுத்தராம் சரணின் கவனம் மட்டும் தன் மனையாளின் மீதே இருந்தது .

 

ஆர்வத்தோடு உணவை உண்டாலும், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மனையாளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவளும் அவனுக்கு இணையாக தன்னவனை கீழ்கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

 

ட்ரிம் செய்யப்படாத இரண்டு நாள் தாடி மீசைதூக்கம் காணாத கருவளைய கண்கள்கலைந்த கேசம்வறண்ட உதடுகள், பொலிவில்லாத  இறுகிய முகம், லேஸ் வைத்த பிரவுன் டீ-ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட்ல் சோகமே உருவாய் காட்சி அளித்தான்.

 

 இந்த ஐந்து மாத பந்தத்தில்சற்று அழுத்தத்தோடு அதிகம் பேசாமல் இருந்தாலும்  இப்படி சோகமாக அவனைக் கண்டதில்லை.

 

அவளது பாராமுகம் வாட்டுகிறது என்பதை அவனது இறுகிய முகம் வண்டி வண்டியாய் சோகத்தை கொப்பளித்துக் காட்டஅதனை இயல்பாக கடந்து போக முடியாமல் தத்தளித்தாள் பாவை .

 

இப்படியே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு சந்தர்ப்பத்தில் எதேச்சையாக  இருவரின் பார்வையும் முட்டிக்கொள்ள, இதயத்தைக் கவர்ந்திழுக்கும் அவன் பார்வையில் சிலிர்த்தவள் தலை குனிந்து கொண்டாள்.

 

உன்னை நான் பார்க்கும் பொழுது மண்ணை நீ பார்க்கின்றாயே ... விண்ணை  நான் பார்க்கும் பொழுது என்னை நீ பார்க்கின்றாயே .... நேரிலே பார்த்தால் என்ன... நிலவென்ன தேய்ந்தா போகும் புன்னகை புரிந்தால் என்ன பூ முகம் சிவந்தா போகும் ...

என்ற கவியரசரின் வரிகள் அப்போது அழையா விருந்தாளியாய்  நினைவுக்கு வந்து அலைகழிக்க, முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ள அதிகம் மெனக்கெட வேண்டிய நிலைக்கு ஆளானாள்.

 

"சரி நான் கிளம்பறேன் ... லஷ்மி உடம்ப பாத்துக்கோம்மா .... வேளை வேலைக்கு சத்தான ஆகாரங்களை சாப்பிடு ... மாத்திரை மருந்துகளை சரியான நேரத்துல எடுத்துக்கோ ..."

 

"சரிங்க மாமா .... நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க..”

 

"பாத்துக்குறேன்மா ... ஏதாவது தேவைனா போன் பண்ணு ...." என தன் மருமகளோடு  அனைவரையும் ஒரு பொதுவான பார்வை பார்த்து கூறிய ரங்கசாமி கார் நிறுத்தி இருக்கும் இடத்தை நோக்கி நடை போட, மற்றவர்கள் அவரோடு பேசியபடி பின்தொடர்ந்தனர்.

 

தன்னவன் கிளம்பி விட்டான் என்பது சுருக்கென்று அவளது மனதை பதம் பார்க்க, நேரடியாகப் பின் சென்று வழி அனுப்ப மனமில்லாமல் தன் படுக்கை அறையின் சாளரம் வழியாக நோட்டம் விடலானாள்.

 

காருக்கு அருகில் அவளது தாய் தந்தையோடு ரங்கசாமி பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

 

ஜன்னலுக்கு வெளியே தலையை விடாத குறையாய் , அவள் தன்னவனை தேடிக் கொண்டிருக்கும் போது , பின்புறமாக லேசான அரவம் கேட்க,

 

"குட்டி (தங்கை ராமலட்சுமி)... மாத்திரையை டேபிள் மேல வச்சிட்டு போ...  நான் அப்புறம் சாப்பிடறேன் ..."  என்றாள் திரும்பிப் பாராமல் தன் தங்கை என நினைத்து. 

 

பதில் வராமல் காலடி சத்தம் மட்டும் கேட்கதிரும்பிப் பார்த்தவள் அங்கு ராம்சரனை கண்டதும் கண்களில் மெல்லிய மின்னலோடு, லேசான வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள்.

 

அவன் பார்வையில் சுவாரசியம் கூட,

 

"என்னை தானே தேடின..."  என்றான் குறும்பாக.

 

"இல்லையே ... அம்மாவை தேடினேன் ..."

 

"பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் .... அதோ நிக்கிறாங்களே அவங்க தான உன் அம்மா ... இல்ல... உனக்கு சின்னம்மா பெரியம்மானு  வேற யாராவது இருக்காங்களா ..."

 

தலை நிமிர்த்தி முறைத்து பார்த்தவள்  மீண்டும்  தலை குனிந்து கொள்ள, லேசாக புன்னகைத்தவன்

 

"நாளைக்கு வந்து பார்க்கறேன் ... டேப்லெட்ஸ  டைம்ல எடுத்துக்கோ சரியா ..."  என நகராமல் அப்படியே நிற்க, அவன் பாதங்களைப் பார்த்தபடி தலை குனிந்திருந்தவள், அவன் நகராததை உணர்ந்து தலை நிமிர்ந்து பார்க்க, இரு கண்களையும் சிமிட்டு அழகாக சிரித்தபடி,

 

"போயிட்டு வரேன் ..." என விடை பெற்றான். 

ரங்கசாமியும் அப்பொழுதே ஊட்டிக்கு பறந்து விட்டார். 


முன்தினம் முகம் பார்த்து பேசியது ஒருவித இலகு தன்மையை உருவாக்கி இருக்க, அதை மனதில் வைத்து  மறுநாள் காலை மனையாளுக்கு  அழைப்பு விடுத்தான். 

 

அவனது அழைப்பு அடித்து அடித்து அடங்க,

 

இன்னும் கோவத்துல தான் இருக்காளா .... என தனக்குள்ளே அவன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவனது அலைபேசிக்கு அவன் மனைவியாளிடமிருந்து அழைப்பு வந்தது.

 

ஆவலோடு எடுத்து காதுக்கு கொடுத்தவனிடம் ருக்மணி பேசினார்.

 

" மாப்ள ... நானே உங்களுக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன்...  லட்சுமிக்கு பால் கட்டிக்கிட்டு  நெஞ்சு வலி வந்திருச்சு .... இப்பதான் ஹாஸ்பிடலுக்கு வந்தோம்...."

 

" ஐயோ .... இப்ப எப்படி இருக்கா ..."

 

" உள்ள டாக்டர் பாத்துக்கிட்டு இருக்காங்க ...."

 

"சரி... நான் கிளம்பி வரேன் ..."  என அழைப்பை துண்டித்துவிட்டு விறு விறுவென தயாராகி கீழ்த்தளத்திற்கு வந்தவனை நோக்கி கற்பகம் ஓடி வந்தார்.

 

" சரண்.... அருணா பையன் அஜய் மாடியில் இருந்து உருண்டு விழுந்துட்டானாம் ... தலையில அடிபட்டுருச்சாம்... அருணாவோட மாமியாருக்கு உடம்பு சரியில்லை ... அருணாவோட வீட்டுக்காரரும் ஊர்ல இல்லை ... உதவிக்கு ஆள் இல்லாம அல்லாடறாப்பா... உனக்கு போன் பண்ணி இருக்கா... உன் போன் பிஸியா இருந்ததால எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னாப்பா ... VT ஹாஸ்பிடலுக்கு போய்க்கிட்டு இருக்காளாம்... உன்னை அங்க வர சொன்னா ..." 

 

ஒரு பக்கம் மனையாள் இன்னொரு பக்கம் மருமகன்.. முடிவெடுக்க முடியாமல் ஓரிரு கணம் தடுமாறியவன், மனையாளைப் பார்த்துக் கொள்ள அவளது தாய் இருக்கிறாள் என முடிவெடுத்து அருணா கூறியிருந்த மருத்துவமனை நோக்கி பயணமானான் .

 

 

குழந்தையின் நெற்றிப் பகுதி படிக்கட்டு சுவரின் இரும்பு  கம்பியில் முட்டியதால், அரை இன்ச் ஆழத்தில் அடி பலமாக இறங்கி இருக்க, ரத்த வெள்ளத்தில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் குழு  துரிதமாக சூழ்ந்து கொண்டு வைத்தியத்தை  தொடங்கி இருந்தனர். 

 

பரபரப்போடு மருத்துவமனையை அடைந்தவன், குழந்தையின் தற்போதைய  நிலைமையை தெரிந்து கொண்டு விட்டு அருணாவிடம் விசாரணையில் இறங்கினான்.

 

அதில் அவள்  தன் தோழிகளை அழைத்து  வீட்டில் போட்ட கூப்பாட்டில் குழந்தையை  கவனிக்க தவறியது தெரிய வர,  

 

"அருணா .... நீ ரெண்டு குழந்தைக்கு அம்மா...  குழந்தைகள கவனிக்காம காலேஜ் பொண்ணு மாதிரி பிரண்ட்ஸ கூட்டிக்கிட்டு வந்து வீட்ல கலாட்டா பண்ணா இப்படித்தான் நடக்கும்...

நல்ல வேலை விஜய் தூங்கி கிட்டு இருந்ததாலஅவனுக்கு ஒன்னும் ஆகல ... இல்லன்னா இவனோட சேர்ந்து அவனுக்கும் அடிபட்டிருக்கும் ... ஏழு கழுதை வயசாச்சு... இன்னும் உனக்கு பொறுப்பு வரலையே  ..."

 

என முதன்முறையாக எரிந்து விழுந்த அண்ணனைப் பார்த்து அஷ்ட நாடியும் அடங்கிப் போனவள், தன் வழக்கமான ஆயுதத்தை கண்களில் தேக்கி வாய்விட்டு அழ  ஆரம்பித்தாள்.

 

"அண்ணே.. நீ இப்படி மாறுவனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ... நான் என் பிரண்ட்ஸ் வீட்டுக்கு வந்தாங்கன்னு தான் சொன்னேன் கிட்டி பார்ட்டிக்கு வந்தாங்கனு சொன்னேனா ... 

அவங்க உடம்பு சரியில்லாமல இருந்த என் மாமியாரை பார்க்க வந்தாங்கண்ணே... என் வீட்டுக்காரர் ஊர்ல இருந்திருந்தா  நான் ஏன் உன்னை கூப்பிட போறேன்... ஒரே வயசுல ஒன்னுத்துக்கு ரெண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு  நான் படற கஷ்டம் உனக்கு கூட புரியலயேண்ணே... எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் ..."  தான் உளறியதை மறைக்க  வழக்கம் போல்  அவள் வசனங்களை வாரி இறைக்க,

 

" சரி சரி .. அழாத ... ஹரிஷ்க்கு சொல்லிட்டியா ..."  என்றான்.

 

"சொல்லிட்டேன்.. சாயங்காலம்  வந்துடுவேன்னு சொன்னாரு  ..." 

 

அப்போது மருத்துவர் அருணாவை நெருங்கி,

 

"அடி அரை இன்ச் ஆழமா இறங்குனதால,  12 தையல் போட்டு இருக்கோம்... மத்தபடி பயப்பட ஒன்னும் இல்ல ...  குழந்தை மயக்கத்துல இருக்கான்... இன்னைக்கு ஒரு நாள் அப்சர்வேஷன்ல வச்சுட்டு நாளைக்கு டிஸ்சார்ஜ் செய்துடலாம்  ..."  என விடை பெற,  

 

"அண்ணேகுழந்தைக்கு ஏதாவது ஆயிடுமோனு  பயமா இருக்கு...  அவர் வர வரைக்கும் என் கூடவே இரு.... ப்ளீஸ் ..." என்றவளிடம் லட்சுமியின் நிலைமையை அவன் எடுத்துச் சொல்ல,

 

"அண்ணிக்கு அம்மா தங்கச்சி அப்பா எல்லாரும் இருக்காங்க... அவங்க பாத்துப்பாங்க ... எனக்கு என் வீட்டுக்காரர் வரவரைக்கும் உன்னை விட்டா வேற யாருமே  இல்லயேண்ணே ..." என்ற தங்கையை பார்க்க பாவமாக இருக்க,

 

" சரிம்மா..." என்றான் ஆயாசத்தோடு வேறு வழி இல்லாமல்.

 

 

" அம்மாஅவருக்கு போன் பண்ணி சொன்னையா ..  என குரல் உடைந்து போய் லட்சுமி தன் தாயிடம் வினவ

 

"சொன்னேம்மா... உடனே வரேன்னு சொன்னாரு ...  ஒரு மணி நேரம் ஆகியும்  ஆள காணோமேனு திரும்பவும் போன் பண்ணேன்.. ரிங் மட்டும் ஓடுது போனை எடுக்க மாட்டேங்கறாரு .. ஒருவேளை சைலன்ட்ல போட்டிருப்பாரோனு நினைக்கிறேன் ...."

 

என்றதைக் கேட்டதும் துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் கண்ணீர் மிதக்க, தாயிடம் காட்டிக் கொள்ள மனமில்லாமல் தலை குனிந்து கொண்டாள் லட்சுமி. 

 

 

ஸ்ரீராமம் வருவார்கள் ...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrttrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment