ஸ்ரீ - ராமம் - 8

அத்தியாயம் 8

 

தன் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டை அடைந்தவனுள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

 

அவனே அவளை தனியாக சந்தித்து, பேசி இருந்தால் கூடஅவளைப் பற்றி இவ்வளவு நுட்பமான தகவல்களை  தெரிந்து கொண்டிருந்திருக்க முடியாது.  அவ்வளவு அழகாக அரங்கேறி இருந்தது அவளது நட்பு வட்டங்களுக்கிடையேயான உரையாடல்கள்.

 

தைரியம்  , தன்னம்பிக்கை, புத்திச்சாத்தூரியம் , தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களை நுட்பமாக ஆராய்ந்துணரும் திறன் எதிலும் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளும் பாங்கு என அவளை அணு அணுவாக அறிந்து கொண்டது, ஒரு வித இனம் புரியாத நிம்மதியை ஏற்படுத்தமறுநாள் அவளை கோவிலில் சந்திக்கும் முடிவோடு கண் அயர்ந்து போனான் வீரா. 

 

அதிகாலையில் கண்விழித்தவள் பரபரப்பாக குளித்து முடித்து அடர் ஊதா நிறத்தில் மெல்லிய பச்சை நிற கோடுகள் கொண்ட ஜர்தோசி வேலைப்பாடு செய்த பட்டியாலா சுடிதாரை அணிந்து அதற்கு பொருத்தமாகசில்க் த்ரெட்டாலான ஊதா நிற  ஜிமிக்கி, வளையல்களை போட்டுக்கொண்டு தலை முடியை அள்ளி குதிரைவாலிட்டு, சிறிய ஊதா நிற பொட்டு மற்றும் மெல்லிய உதட்டுச் சாயத்தோடு கோவிலுக்கு தயாரானாள்.

 

அவள் வீட்டில் இருந்தவரை  அடுக்களைக்கே சென்றதில்லை . இங்கு அந்நிய மண்ணில் தான் கொஞ்சம் கொஞ்சமாக தற்சார்பு சமையலை தொடங்கி இருந்தாள்.

 

பழங்கள், உலர்க்கனிகள் , ஓட்ஸ் ,  டோஸ்டட்  பிரட்கான்பிளெக்ஸ், வீட்(Wheat) பிஸ்கட் என சமைக்காமல் காலம் கடத்தும் வழிமுறைகளை தான் பெரும்பாலும் அலுவலக நாட்களில் மேற்கொள்வாள்.

 

இதுவரை இரண்டு முறை கேசரி செய்துகோவிலில்  நெய்வேத்தியத்திற்கு தந்திருக்கிறாள். கேசரிக்கு தேவையான ரவை, சர்க்கரை , நெய், ஆரஞ்சு கலர் பொடி என அனைத்தையும் முன்கூட்டி வாங்கி வைத்திருந்ததால்அந்த ரெண்டு முறையும் ஓரளவிற்கு கேசரி கேசரியாக வந்திருந்தது. 

 

ஆனால் இந்த வாரம்  அலுவலக வேலை அவளை இறுக்கிக் கொண்டதால்  கேசரி செய்வதற்கான பொருட்களில் ரவையைத் தவிர ஒன்று இரண்டு குறையஅதைப் பற்றி கவலைப்படாமல் கர்ம சிரத்தையோடு கடவுள் மேல் பாரத்தை போட்டு செய்து முடித்தாள்.

 

கிட்டி .... என்கிட்ட இருக்கிற எல்லா இன்கீரீடியன்ஸ்  வச்சு செஞ்சு இருக்கேன் .... சமத்தா சாப்பிடணும் சரியா .... 

 

என மனதுக்குள் அவளது ஆன்ம தெய்வமான கிருஷ்ண பகவானிடம் அறிவுறுத்திவிட்டு, கிளம்பியவளுள் ஏதோ ஒரு இனம் புரியாத படபடப்பு இருந்து கொண்டே இருக்ககாரணத்தை யோசித்துப் பார்த்தும் பிடிப்படாமல் போக, தன் ஆன்ம தெய்வத்தையும் , அன்பான நட்பு வட்டத்தையும் சந்திக்கும் எண்ணத்தில் அந்த ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, ரயில் நிலையம் நோக்கி நடந்தாள்.

நகர்ப்புற நெருக்கடிகள்  ஏதுமில்லாமல் மிகுந்த பசுமையான சூழ்நிலையில் ஹெலன்ஸ் பர்க் என்னும் இடத்தில் அற்புதமாக அமைந்திருந்தது அந்த  ஸ்ரீ  வெங்கடேஸ்வரா கோவில்.




 

சிட்னியில் இருந்து ஏறக்குறைய ஒரு மணி நேர பயண தூரம் .

 

அங்கு பிரதான தெய்வமாகவெங்கடேச பெருமாள் இருந்தாலும், விநாயகர், முருகன், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களின் சன்னதிகளையும் உள்ளடக்கி இருந்தது.

 

சிவா சொன்னது போல் 9:00 மணி ரயிலில்  பயணித்ததால், தங்கு தடையும் இன்றி 10 மணிக்குள் ஹெலன்ஸ் பர்க் ரயில் நிலையத்தை அவள்  அடைய, அங்கு அனு , சிவா  முன்னதாகவே வந்து காத்திருக்க , மெல்லிய புன்னகையுடன் அவர்களோடு இணைந்து கொண்டாள்.

 

" பாப்பா... இந்த டப்பாகுள்ள தான கேசரி இருக்கு...."

 

" ஆமாண்டா ..."

 

" ஒரே ஒரு தடவை பார்த்துகிட்டுமா ... பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுது ... நீ போன முறை செய்யும் போது எல்லாம் நான் வரல பாப்பா ..."

 

" என்னடா அவசரம் ...  அர்ச்சகர் கிட்ட கொடுத்து அவர் பூஜையை முடிக்கட்டும் ... அப்புறம் நாம எல்லாம் கொஞ்சம் எடுத்துக்கிட்டு 

அங்க இருக்கிற டேபிள் மேல வச்சிட்டாகோவிலுக்கு வர்றவங்க கொஞ்சம் கொஞ்சம் பிரசாதமா எடுத்துப்பாங்க ... "

 

" பாப்பா எனக்கு கொஞ்சம் அதிகம் கொடு ..." என்றான் சிவாவாயில் எச்சில் ஊறிய படி. 

 

" டேய்கொஞ்சம் அடங்குடா ... பூஜை முடியட்டும் ..."

என அனு தன் பங்குக்கு கூறி முடிக்கமூவரும் மூலவர் சன்னதியை அடைந்தனர்.

 

அடிக்கடி செல்லும் கோயில் என்பதால்ப்ரியாவை நன்கறிந்த அர்ச்சகர் அவளை இயல்பாக நலம் விசாரித்துவிட்டு , பூஜையை தொடங்கினார்.

 

பத்து நிமிட அர்ச்சனைக்கு பிறகுகேசரி அடங்கிய டிபன் பாக்ஸை அர்ச்சகர்யிடமிருந்து  பெற்று, சிறு தேக்கரண்டியில் கேசரியை எடுத்து அனுசிவாவுக்கு  கொடுத்துவிட்டு  தானும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு , விநியோகம் செய்யும் இடத்தில்டிபன் பாக்ஸை வைத்து விட்டு அவள் திரும்பியது தான் தாமதம்இன பேதம் இல்லாமல் இந்தியர்கள், ஈழத் தமிழர்கள்ஆஸ்திரேலியர்கள் , சிங்களர்கள் என அனைவரும் வரிசை கட்டி கேசரி பிரசாதத்தை  எடுத்து போட்டு உண்ண தொடங்கினர்.

 

ஓரிரு  கணத்திற்கு பிறகு

 

" பாப்பா... சீக்கிரம்  வா .... சாப்படறவங்களை போய்  ஸ்டாப் பண்ணலாம் "  என்றான் சிவா திக்கி திணறி மூச்சு எடுத்து  அவசரமாக.

 

" ஏன் ...."

 

"கோந்து  மாதிரி தொண்டைய அடச்சுகிச்சு...  மூச்சு விடவே பத்து நிமிஷம் ஆயிடுச்சு ... இப்படியே  எல்லாரும் சாப்பிட்டாங்கன்னு வையி நீ கொலை கேஸ்ல உள்ள போயிடுவே .... கொலை கேசன்னாலும் பரவாயில்ல... ஒரு இன அழிப்புக்கான சதின்னு  ஐநா வரைக்கும் மேட்டர் போய் அசிங்கமாயிடும் பாப்பா... குப்பையில கொட்டி மிருகங்க சாப்பிட்டு செத்தா அனிமல் ஹரேஸ்மெண்ட்னு ப்ளூ கிராஸ்ல கேஸ் போட்டுடுவாங்க ... பேசாம வா குழி தோண்டி பொதைச்சிடலாம் ..." என்றான் மூச்சு விடாமல். 

 

" டேய்... நல்லா தான்டா இருக்குது எல்லாரும் சாப்பிடுறாங்க ...உனக்கு என்ன பிரச்சனை ...." என்றாள் ப்ரியா கோபத்தோடு .

 

" என்னாது...  நல்லா இருக்குதா.... மனசாட்சி இருக்கிறவன் எவனுமே இதை கேசரினு ஒத்துகிட மாட்டான் ... நெஜமாலுமே கேசரி தான் செஞ்சி கொண்டாந்தையா  இல்ல வேற ஏதாச்சும் செஞ்சு கேசரினு  பேர் வச்சிட்டியா ..."

 

" அனு...  நீ சொல்லு எப்படி இருக்கு.." என ப்ரியா கேட்கமுகத்தை சர்வ கோணலாக வைத்துக் கொண்டு 

 

" கேசரி மாதிரி தான் இருக்கு ஆனா சக்கரை தான் இல்லை ... ஆமா ஏன் மஞ்ச கலர்ல இருக்கு ..." என்றாள் அனு.

 

" சக்கரை ரொம்ப கம்மியா இருந்தது ... அப்புறம் ஆரஞ்சு ஃபுட் கலர் இல்ல ... முந்திரிப் பருப்பு வாங்கல... நெய் ஒரு ஸ்பூன் தான் இருந்தது ... அதான் இருக்கிறத வச்சு செஞ்சுட்டுகலருக்காக கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டேன்..."

 

"அடி பாவி.... கடுகு தாளிச்சு ஊத்தி இருந்தா உப்புமாவா ஆயிருந்திருக்குமே  ... இத போய் கேசரின்னு எங்கள மட்டும் இல்ல சாமியையும் நம்ப வச்சிருக்க ...பாப்பா.... இப்படி எல்லாம் செஞ்சு அனாவசியமா சாமி குத்தத்துக்கு ஆளாகாத.... பாத்துக்க .."

 

" நீதான் ரொம்ப படுத்தற .... அங்க பாரு எல்லாரும் சாதாரணமா சாப்பிட்டு போறாங்க ... " ---- ப்ரியா .

 

"கேசரி எப்படி இருக்கும்னு முன்ன பின்ன தெரியாத பயலுக சாப்பிட்டு போறானுங்க ..... உன்னைய நம்பி நேத்து ராத்திரியிலிருந்து கேசரிய நெனச்சு கனவு கண்டேனே என்னைய சொல்லணும்  .... ஒரு கேசரிய கூட  ஒழுக்கமா செய்ய தெரியல கோயில் தர்மகர்த்தா குடும்பத்து பொண்ணுன்னு பெத்த பேரு வேற ..."

 

"பக்தி பெருக்குல மெய்யுறுகி சாப்பிட்டா... எதுவுமே நல்லா தான் இருக்கும்... "---- ப்ரியா 

 

" நீ நெய்யுறுக்கி போடாம எங்கள மெய்யுறுகி சாப்பிட சொல்றயா.... காலக்கொடுமை ..." என சலித்துக் கொண்டவனிடம்

 

"டேய்... நான் போய் என் கிட்டிய பாத்து பேசிட்டு வரேன் ... அதுக்குள்ள ஏதாவது அசம்பாவிதம் நடந்தா  போன் பண்ணி சொல்லு ..." என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் தன் ஆன்ம தெய்வமான கிருஷ்ண பகவான்  சன்னதியை நோக்கி விரைந்தாள். 

 

பெரும்பாலும் தனிமை பலருக்கு பிடிக்காது.  ஆனால் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.... காரணம்.  

அவளது ஆன்மநாயகன் வாசுதேவ கிருஷ்ணனோடு வாய்விட்டு பேசலாமே அதற்காக ...

அவளது ஆசை, எண்ணம், மனக்குமுறல், அழுகை , கோபம், ஏமாற்றம் , சந்தோஷம், தோல்விநிம்மதி ,வெற்றி என அனைத்தையும் பகிர்வாள்.

 

பதில் வராது என்று தெரிந்தே, அவள் தன் ஆசை மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொண்டாலும், ஓரிரு தினங்களில் ஏதோ ஒரு வகையில் அவைகள் நிறைவேற்றி வைக்கப்படும்.

 

ஒருவேளை அவள் கொண்டிருக்கும் எண்ணமானது தவறு என்னும் பட்சத்தில், ஏதாவது சம்பவம் அல்லது மனிதர்கள் மூலம் அதனை உணர்த்திக் காட்டிடும் வல்லமையும் அவளது ஆன்ம தெய்வத்திற்கு உண்டு. 

 

தெய்வத்தை தெய்வமாக தள்ளி நிறுத்தாமல் தன் தோழமையாக ஆன்ம ப்ரேமையோடு நேசிப்பவள் என்பதால்அந்தக் கோவிலில் இருக்கும் கிருஷ்ண பகவான் சன்னதியில் தன்னை மறந்து அந்த ஆன்ம தெய்வத்தின் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பதில் அவளுக்கு ஒரு அலாதி இன்பம்.

 

அன்றும் வழக்கம் போல்அப்படியே இமை கொட்டாமல் கைகளை கூப்பியபடிதன் கண்ணனிடம் தன்னவனை சந்தித்ததை மானசிகமாக சொல்லி முடித்து,

 

என்னை தான் பாக்க வந்தாங்களா ? இல்ல வேளை விஷயமா  வந்தாங்களான்னு  தெரியல .... ஆனா எனக்கு அவங்கள புடிச்சிருக்கு... உனக்கு புடிச்சிருக்கா... என கேட்டுவிட்டு ஏதோ உள்ளுணர்வு உறுத்ததிரும்பி பார்த்தால், அவள் எண்ணத்தின் மன்னவன்வரிசையில் வந்துஅவள் வைத்து விட்டு சென்ற கேசரி பிரசாதத்தை  எடுத்து வாயில் போட்டு கொள்வதைப் பார்த்து இன்ப அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.

 

மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தவள், வாசுதேவ கிருஷ்ணனின் கண்களை பார்க்க, அது வழக்கம் போல் மாய புன்னகையை பூக்க,

 

" சூப்பர் கிட்டி.... கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... என் ஆள என் கண்ணுல காட்டினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் வர்ட்டா..." என்று கொஞ்சி மகிழாத குறையாக விடை பெற, அவளை நோக்கி வேகமாக வந்த சிவா,

 

" பாப்பா ... அங்க பாரு ... அந்த ஆளு அதிவீர ராம பாண்டியன் மாதிரி இல்ல ..."

 

" அவரே தான் ..."

 

" ஏய் என்ன ... அவரே தான்னு கூலா சொல்ற... அவரை முன்னாடியே பாத்துட்டயா..."

 

" ம்ம்ம்... நேத்து லிப்ட் ல மீட் பண்ணோம்..." 

 

"ஆபீஸ்லயா ...பேசினியா ... அவர் உன்னை தெரிஞ்சுக்கிட்டாரா..." என ஆர்வத்தோடு சிவா கேள்விகளை அடக்க

 

" தெரிஞ்சுகிட்டாரு... என்னை பார்த்து ஸ்மைல் பண்ணாரு .... ஆனா பேசல.."

 

"மனுஷன் உன்னைய பார்க்க வந்ததோட  நீ செஞ்ச கேசரிய வேற சாப்பிட்டு இருக்காரு ... நீ தான் செஞ்சேன்னு தெரிஞ்சதுனு வையி  அவர் எதிர்காலத்தை முன்னிட்டுஉன்னைய வேணாம்னு சொன்னாலும் சொல்லிடுவாரு ... நான் போய் யாருக்கும் தெரியாம  டிபன் பாக்ஸை கொண்டாந்து தடயத்தை மறைக்க பார்க்கிறேன் .... "

 

"அவர் ஒன்னும் என்னை பார்க்க வந்திருக்க மாட்டாரு டா... வேலை விஷயமா தான் வந்திருப்பாரு...

உனக்கும் எனக்கும்  தான் ஒரு ப்ராஜெக்ட் .... அவருக்கு ஏழு எட்டு ப்ராஜெக்ட் இருக்கும் ..." என்றாள் சோகமாக. 

 

"நேத்து லிப்ட் ல பார்த்தேன்னு சொல்ற... இப்ப கோயிலுக்கு வேற வந்திருக்காரு ... அதுவும் நாம வந்த டைம்லயே ...." என சிவா தொக்கி நிறுத்த

 

"Its just a coincidence ( எதேச்சையாக  நடந்த சம்பவம்) ---- ப்ரியா.

 

"எஸ் ... ப்ரியா சொல்றது கரெக்ட்... நாம கோவிலுக்கு  வர்றது அவருக்கு எப்படி  தெரியும் ..." என்றாள் அனு இடைப்புகுந்து.

 

"பாப்பா டப்பா காலி ஆயிடுச்சு நான் போய் எடுத்துட்டு வரேன் ..."

 

" நல்லவேளை டா ... யாருக்கும் ஒன்னும் ஆகல... அந்த டப்பா கேசரி நல்லபடியா காலி ஆச்சுன்னாஅடுத்த வாரம் மறுபடியும் கேசரி நெய்வேத்தியம் பண்றேன்னு வேண்டிகிட்டேன் ..."

 

" ஆத்தீ.... மறுபடியும் கேசரியா ... இனிமே ரவை மேல கை வச்ச மொத டெட் பாடி நீதான் .... ஏதோ சாமி நல்ல மூடுல இருந்ததால் அம்புட்டு பேரையும் காப்பாத்தி கொடுத்திருக்கு ... இதோட இந்த விளையாட்ட நிப்பாட்டிக்க... அதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது  .." என்றவன் பொங்கிக் கொண்டிருக்கும் போது , அவர்களை நோக்கி மெல்லிய புன்னகையோடு வீரா வந்து கொண்டிருந்தான்.

 

 

நீல நிற ஜீன்ஸ்சிவப்பு , கருநீலம் கலந்த ஸ்டோன் வாஷ் சட்டையில் முன் தினத்தைக் காட்டிலும் புதுவித கம்பீரத்தோடு மிளிர்ந்தவன், அவர்களை நெருங்கி,

 

" வாங்க... உங்க எல்லாரையும்  சிட்டில டிராப் பண்ணிடறேன் .... " என்றான் வெகு இயல்பாக ப்ரியாவின் முகத்திலேயே பார்வையை பதித்து .

 

காரில் வரும் இந்திய குடும்பங்கள்அவர்களது காரில் இடம் இருக்கும் பட்சத்தில், கோவிலுக்கு வந்திருக்கும் நபர்களை தங்களுடன் அழைத்துச் சென்று, நகரத்தில் இறக்கி விடுவது அங்கு  நடைமுறையில் இருக்கும் ஒருவித பழக்கம் தான் . அப்படித்தான் அவன் கேட்கஎதிர்பாராத அவன் வருகை மற்றும் கேள்விக்கு பதில் அளிக்க மறந்து மூவரும் தடுமாறி நிற்க,

 

" ஹேய் .... உங்க மூணு பேரையும் தான் கேட்கிறேன் என்றான் மேலும் தன் புன்னகையை அதிகப்படுத்தி.

 

அதற்கு மேல் நடந்ததெல்லாம் மின்னல் வேகம் தான். வீராவுக்கு அருகில் சிவா அமரகாரின் பின்புற இருக்கையில் அனு மற்றும் ப்ரியா அமர்ந்து கொண்டனர் .

 

முதல் 10 நிமிடம் அமைதியாக சென்ற பயணத்தில்வீரா சிவாவிடம்,

 

"நீங்க தமிழ்நாட்டுல எந்த ஊரு .." என இயல்பாக நலம் விசாரித்து பேச்சை தொடங்கினான்.

 

உடனே  சிவா தனது  பூர்வ ஜென்மத்திலிருந்து புனர் ஜென்மம் வரையிலான கதைகளை பகிரகேட்டு தன்னை மறந்து சிரித்தவன்ரியர் வியூ மிரர் வழியாக அனுவை பார்த்து

"அவங்க எந்த ஊரு ..." என்றான்.

 

அதனைப் புரிந்து கொண்டு அனு  சன்னமாக தன் சொந்த ஊரை பற்றி சொல்ல, அவளிடம் மேலும் ஓரிரு கேள்விகளைக் கேட்டு முடித்தவன் ப்ரியாவை ரியர் வியூ மிரர் வழியாக லேசாக பார்த்துவிட்டு, மீண்டும் சிவாவிடமே பேச்சை தொடர்ந்தான்.

 

"சார் ..." என சிவா தொடங்க 

"கால் மீ வீரா ..." என்றான் ட்ரேட் மார்க் புன்னகையோடு.

 

"வீரா .... நீங்க இப்ப கோவில்ல சாப்பிட்ட கேசரியை பத்தி என்ன நினைக்கிறீங்க ..." என்ற அதி முக்கிய கேள்வியை சிவா முன்வைக்க,  ப்ரியாவின் இதயம் திக் திக் என ஏகப்பட்ட டெசிபலில் எகிறியது. 

 

" ஏன் கேக்குறீங்க ..."

 

"ஒரு கருத்து கணிப்புக்கு தான் ..."

 

"நல்லா தான் இருந்தது ...நீங்க யாராவது செஞ்சீங்களா ..."

 

"நோ...நோ... நாங்க யாரும் செய்யல... சும்மா தான் கேட்டேன் ...." என சிவா அசடு வழிந்தபடி  மழுப்ப 

 

"சக்கரை இல்ல .... மஞ்சப்பொடி போட்டா மாதிரி இருந்தது ...இன்னும் கொஞ்சம் நெய் போட்டு இருந்தா நல்லா இருந்துருக்கும் ..." என வீரா  குற்றங்களை அடுக்கி கொண்டே செல்லப்ரியாவின் முகம் அஷ்ட கோணல் ஆகிப்போனது.  

 

"ஆமா வீரா ...நானும் அதே தான் நெனச்சேன் ..." என குஷியாக சிவா ஆமாம் சாமி போட,

 

"எதை நெய்வேத்தியமா கொடுத்து கடவுளை கும்பிடறோம்னு முக்கியமில்ல....  எதைக் கொடுத்தாலும் மனசார கொடுக்கறோமாங்கிறது தான் முக்கியம் ... கண்ணப்ப நாயனார் கதை படிச்சு இருக்கீங்க இல்ல ... அது மாதிரி தான் ... செஞ்சவங்க மனமார செஞ்சி இருந்தாநிச்சயம் கடவுள்  ஏத்துக்குவாரு..." என்றவனை மூவரும் ஆச்சரியமாக பார்க்கப்ரியா  அசந்து போக

மீண்டும் வீரா  அனுவிடம்  ஏதோ கேள்விகளை முன் வைக்கஇம்முறை கொதித்துப் போய்விட்டாள் ப்ரியா .

 

 

என்கிட்ட ஒரு வார்த்தை பேசல ...

என்னை பத்தி எதுவுமே கேட்டுகல ...

ரொம்ப தான் திமிரு ....இதுல வியாக்கியானம் வேற ...

 

என மனதுக்குள்  லட்சார்ச்சனை தீப ஆராதனை செய்து கொண்டிருந்தவளின் முகமாற்றங்களை கண்ணாடியினூடே கண்டுகொண்டவனுக்கு உள்ளுக்குள்  கொண்டாட்டம் கூட, மேலும் ஓரிரு கேள்விகளை வேண்டும் என்றே அனுவிடம் வைத்தான் .

 

அனுவின் பதில்கள் அவனது செவிப்பறையை சென்று சேர்ந்ததா என்பதை ஆண்டவன் மட்டுமே அறிவார் ... ஏனென்றால் அவன் பார்வை முழுவதும் ப்ரியாவிடமே நிலைத்திருக்க, இதில் அதிகம் குழம்பியது சிவா தான்.

 

என்ன...  ட்ராக்கே சரியில்லையே...

ஒண்ணுமே விளங்க மாட்டேங்குதே ...

என அவன் தலையை சொரியஅதனைப் பார்த்து வீரா குதூகலித்து  கொண்டிருக்கும்  பொழுது , அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்து சேர்ந்தது. 

 

"தேங்க்ஸ் வீரா..." என சிவா விடைபெற முயல 

 

"உங்க மூணு பேருக்கும் இப்ப ட்ரெயின் கிடைச்சிடும் இல்ல ..." என்றான்  ப்ரியாவின் மீதே பார்வையை பதித்து .

 

அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல், கோபத்தில் வெடுக்கென்று அவள் முகத்தை திருப்பிக் கொள்ள, அதில் அவன் உள்ளம் ஆர்ப்பரிக்க 

 

"எஸ் வீரா.... " என்றாள் அனு எல்லாருக்குமாய். 

 

"தென் ... ஐ அம் லீவிங் ..."  என்றவன் நகராமல்  ப்ரியாவையே பார்த்துக் கொண்டு நிற்க, பார்வையை வெளியே பதித்திருந்தவள் அந்த ஒரு கண அமைதியில் திரும்பி  பார்க்கஅவள் கண்களைப் பார்த்து லேசாக  தலை அசைத்து புன்னகைத்த படி அவன்  விடை பெற,   அதிர்ந்து போன சிவா

 

இவரு ஜகஜால ஜம்புலிங்கம் போல ...

ஒரு நிமிஷத்துல என்னையே குழப்பிட்டாரே ...

என மொழிய, அனு களுக்கென்று  சிரிக்க , ப்ரியா லேசாக புன்னகைத்து தன் நாணத்தை  மறைத்தாள்.

 

"பாப்பா ... ஒன்னு கவனிச்சியா ... அவரு பேரை தவிர வேற எதையுமே சொல்லல  ... நம்மளையும் கேட்க விடல ...ரொம்ப சாமர்த்தியமா நம்ம கிட்ட மட்டும் எல்லா விஷயத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டாரு ... ஆள் படு அழுத்தம்....  அதான் இந்த வயசுலயே ஏவிபியா இருக்காரு ..." என சிலாகித்து விட்டு சிவா விடைபெற, சற்று நேரத்திற்கெல்லாம் அனுவும் ப்ரியாவும் தங்களுக்கான ரயிலில் பயணித்து வீடு போய் சேர்ந்தனர். 

திங்கட்கிழமை எப்பொழுது வரும் என்று ஏங்கி ஏங்கியே ஞாயிறை நெட்டி தள்ளினாள் ப்ரியா.

 

அவன் தன்னை சீண்டிப் பார்ப்பதற்காக  செய்த செயல்களை எண்ணி, தனக்குள்ளேயே சிரித்த மகிழ்ந்தாள்.

 

அவள் வசிக்கும் இடத்தை மட்டும்  அறிந்து வைத்திருந்தவனுக்கு ஞாயிறு வெகு உற்சாகமாகவே கழிந்தது .

 

இருவரும் நேரடியாக ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இருவரது இதயங்களும் பார்வையினூடே பேசிக் கொண்டதை எண்ணி எண்ணி  ரசித்து மகிழ்ந்தான். 

 

அவள் உரிமையாய் கோபம் கொண்டது , அவன் மீதான உரிமையை மறைமுகமாக  பறைசாற்ற  அதனை  மீண்டும் மனக்கண் முன் நிறுத்திப் பார்த்து உற்சாகமடைந்தவன் 

 

"சோ ஸ்வீட் அண்ட் க்யூட் பேபி ..." என்றான் வாய்விட்டே சிலாகித்து .

 

 

திங்கட்கிழமை காலையில் எப்பொழுதையும் விட  சுறுசுறுப்பாககிளம்பி அலுவலகம் சென்றவளின்  விழிகள் அவனைத் தேடி தேடி களைத்தன.

 

இருவரும் ஒரே அடுக்குமாடி கட்டிடத்தில் பணிபுரிந்தாலும்அடுத்தவரை அவர்களது பணிமனைக்குச் சென்று பார்க்க இயலாத நிலை என்பதால், அன்றைய சந்திப்பு எப்படி நடந்தேறப் போகிறது என்கின்ற சுவாரசியத்திலேயே தத்தம் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

 

அவனது பணி 4:00 மணிக்கே முடிந்து விட , அதற்கு மேல்  அலுவலகத்தில் இருந்து  கிளம்பியாக வேண்டிய நிலை என்பதால் அலுவலக கட்டத்திற்கு எதிரில் இருக்கும் ஸ்டார்பக்ஸில் அமர்ந்து கொண்டு தன்னவளின் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி சிணுங்கியது .

 

அவனது உயிர் நண்பன் ராம்சரண் தான் அழைத்திருந்தான்.

 

உலகில் எந்த மூலையில் இருந்தாலும்  இருவரும்  ஓய்வு நேரத்தில்  அரை மணி நேரமாவது  பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

 

" வீரா ...  எப்ப ஊருக்கு வர... " என்றான் எடுத்த எடுப்பில் ராம்சரண். 

 

"பிளான்ல ஒரு சடன் சேஞ்ச் சரண் ... குயின்ஸ்லாண்ட் SMT ப்ராஜெக்ட்ல ஒரு RFP வந்திருக்கு ... அத முடிச்சுட்டு  வீகெண்டுல வந்துருவேன் ..."

 

 

" நீ ஊருக்கு வந்ததும் அடுத்த மாசமே உனக்கு கல்யாணம் இல்ல ..."

 

"ம்ம்ம்...." என்றதிலிருந்தே அவனது  சந்தோஷத்தை உணர்ந்தவன்,

 

"இப்படியாடா அந்தர் பல்டி அடிப்ப ... நல்லவேளை நீ என் தலையில சத்தியம் பண்ணல இல்லன்னா நான் அல்பாய்ஸ்ல செத்திருப்பேன் ... ஆமா .. ஊருக்கு கிளம்பறத பத்தி ஸ்ரீப்ரியா கிட்ட சொல்லிட்டியா ..."

 

"இல்லடா.... அவ இன்னும் ஆபீஸ்ல இருந்து வெளியவே வரல... அவளுக்காக  வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்....

தவில்காரருக்கு  வயித்தால போவுது, அதனால கச்சேரிய புக் பண்ண நானே வந்தேன்னு ஆபீஸ்ல போய் இப்ப சொல்ல கூட முடியாது டா... சைன் பண்ண வேண்டிய டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சைன் பண்ணி எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிஞ்சு போச்சு  ..."

 

என்றவனின் பேச்சைக் கேட்டு ராம்சரண் குலுங்கி சிரிக்க, மனையாளின் பிரிவிற்கு பிறகு இப்போதுதான் தன் நண்பன்  மனம் விட்டு சிரிக்கிறான் என்பதை உணர்ந்தவன்,

 

"கூடிய சீக்கிரம் உன் லைஃப்ல எல்லாம் சரி ஆயிடும்னு  தோணுது சரண் ... ப்ளீஸ்டா ... நீ கொஞ்சம் ஈகோ பாக்காம இந்த வாரமாவது  லட்சுமியை பார்த்து பேசு ... சரியா... நான் போனை வைக்கிறேன் ..."

 

"டேக் கேர் வீரா ..." என முடித்தான் ராம்சரண். 

 

சற்று நேரத்திற்கெல்லாம் ஸ்ரீப்ரியா அலுவலகத்தை விட்டு வெளியே வர, அவள் சப்வேவில்  நுழைவதற்குள் தன் காரினை அவளை உரசுவது போல் கொண்டு சென்று நிறுத்தினான்.

 

பதற்றத்தில் திரும்பிப் பார்த்தவள் அவனைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.

 

" கார்ல ஏறு ..." என்றவனை அவள் அதிர்ந்து நோக்க,

 

" ஏய்.. பயப்படாத உன்னை கடத்திட்டு போக வரல .... ரொம்ப லேட் ஆயிடுச்சு , இனிமே  தனியா ட்ரைன்ல ட்ராவல் பண்ணா சேஃப் இல்ல  .... அதான் உன்னை டாக்ஸி ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணலாம்னு கூப்பிடறேன் ..."

 

நிம்மதி அடைந்தவள்அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

 

"எனக்கு குயின்ஸ்லேண்ட்ல ஒரு  வேலை இருக்கு அதை முடிச்சுட்டுஇந்த வீக் எண்ட்ல  ஊருக்கு போறேன் ... " என்றவனின் மனம்

 

இப்படியே இவளோட குயின்ஸ்லாண்ட் போயிட்டா நல்லா இருக்குமே ... என வித்தியாசமா யோசிக்க ,

 

உடனே அவன் தந்தை பொன்னம்பலமும்அம்மையப்பனும் கட்டிப்புரண்டு சண்டையிடும் காட்சி மனக்கண் முன் வந்து போக

 

பொண்ணு போன் நம்பரே கொடுக்காத மனுஷனுக்கு இப்படி பொண்ண கடத்திக்கிட்டு போனேனு தெரிஞ்சது .... என்னை போட்டு தள்ளிட்டு தான் மறு வேலை பார்ப்பாரு .... என மனதுக்குள் சிரித்தபடி அதை வெளி காட்டாமல்,

 

"அடுத்த வாரம் நீயும் ஊருக்கு வந்துருவ இல்ல ..." என முடித்தான் உரிமையாய் .

 

"ம்ம்ம்..." என அவள் பதிலளிக்கவும், டாக்ஸிகள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரவும் சரியாக இருக்க, காரை விட்டு இறங்கிஒரு டாக்ஸி டிரைவரிடம் அவள் தங்கி இருக்கும் இடமான Kogarahவை ( கோக்ரா) சொல்லி ஏற்பாடு செய்யஉடன் நின்றிருந்தவள் உறைந்து போனாள்.

 

அவள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அடுத்த வாரம் அவள் ஊருக்கு போகப் போவது வரை அவன் அறிந்து வைத்திருந்தது  அவளுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தை கொடுத்திருக்க 

 

"ஏறு ... " என்றவன் டாக்ஸியின் பின் கதவை திறக்கஅவள் அமர்ந்ததும்

"உன் அட்ரஸ அவர்கிட்ட சொல்லு ..." என்றான்.

 

அனைத்தும் முடிந்துடாக்ஸி கிளம்பும் போது ,

 

"கொஞ்சம் சிரிக்கலாம் தப்பில்ல ..." என்றவனின் கோரிக்கையை ஏற்று, அவள் லேசான நாணத்தோடு சிரிக்க 

"தட்ஸ் மை கேர்ள் .." என்றான் அவள் கன்னக்குழியில் கண்களைப் பதித்து.

 

டாக்ஸி விருட்டென்று பறக்க, இவன் தன் திருமணத்தைக் குறித்து  தாயிடம் பேசியது  விஸ்வரூபம் எடுத்து  வில்லங்கம் செய்ய காத்திருப்பது தெரியாமல், விண்ணை முட்டும் சந்தோஷத்தில், காதலியை எண்ணி காதலில் திளைத்தபடிஅடுத்த கட்ட பணி நோக்கி பயணமானான்.

 

 

ஸ்ரீ ராமம் வருவார்கள் .....

 

குழந்தைகளா,

 

நாளைக்கு ஒரு யூடி இருக்கு ...

அதோட Coming tuesday தான் அடுத்த யூடி .... நாளைய UD most awaited ஹீரோ  ராம்சரண் பற்றியது ...பொங்க பானை ரெடி பண்ணுங்க ...😂😂😂எனக்கு இல்ல... ராம் சரணுக்கு dr....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments