ஸ்ரீ-ராமம்-62

 அத்தியாயம் 62 


சிரித்த முகத்தோடு வீட்டிற்குள் நுழைந்த தங்கையைக் காண காண பிரபாவின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகுறியது.


திருமண நிகழ்வில்  நிம்மதியாக கவனம் செலுத்த முடியாமல்,  காதல் கணவனோடும் பிணக்கு ஏற்பட்டு , சற்று முன்பு வரை அவள் மிகுந்த மன உளைச்சலில் சிக்கித் தவித்ததற்கு இவளல்லவோ காரணம் ....


கன்னம் கன்னமாக மாறி மாறி  நான்கு அடி வைத்தால் என்ன ... என அவள் மனம் கோபத்தில் கொந்தளித்து  கொண்டிருக்கும் போது ,


" ஏம்மா கல்யாணத்துக்கு வரல ..." என்றார் பொன்னம்பலம் ப்ரீத்தியை பார்த்து வேண்டா வெறுப்பாக.


ப்ரீத்தியின் தான்தோன்றி தனமான  நடவடிக்கையால் அவளை கண்டாலே  அவருக்கு  பிடிக்காது.  ஆனால் அதனை காட்டிக் கொள்ளும் தருணம் அதுவல்ல என்பதால் , அவர் அவ்வாறு நலம் விசாரித்து வைக்க 


இதுதான் சாக்கு என்று,


"நீங்க யாரும் என்னை கல்யாணத்துக்கு கூப்பிடல ... பின்ன எப்படி கல்யாணத்துக்கு வருவேன்..." என்றாள் பொன்னம்பலத்தை பார்க்காமல்  வீராவை பார்த்து கிறங்கிய குரலில் நீட்டி முழக்கி.


"பத்திரிக்கை வந்ததுமே மொதல் நாளே அத்தை மாமாக்கு பத்திரிகை வச்சுட்டோமே "  என்றான் வீரா அவளது தாய் தந்தையை குறிப்பிட்டு.


" எங்க வீட்டுக்கு பத்திரிகை வச்சா போதுமா.... எனக்கு போன் பண்ணி கூப்பிடணும்னு உங்களுக்கு தோணலயா ..." என்றாள் மயக்கும் குரலில் மீண்டும் வீராவையே  பார்த்து.


அதுவரை கடினப்பட்டு கோபத்தை அடக்கி கொண்டிருந்த சத்யன்,


"ஆமா,  நீ ரொம்ப  பெரிய மனுஷி ... உனக்கு தனியா தாம்பூலத்துல பத்திரிகை வச்சு அழைச்சிட்டு , போன் பண்ணியும் கூப்பிட்டா தான்  வருவ... "  என்றான் நக்கலாக.


அவனது பேச்சு கோபத்தை மூட்டினாலும்,  அதனைக் காட்டிக் கொள்ளும் தருணம் அது அல்ல ... என சகுனி தனமாக கணித்தவள்,


"சும்மா விளையாட்டுக்கு  சொன்னேன் பெரிய அத்தான்... கோவப்படாதீங்க ... நான் இன்னைக்கு இங்க வந்ததுக்கு ரெண்டு காரணம் இருக்கு ..." என்று  நிறுத்தினாள் பிரபாவின் முகத்தில் பார்வையை பதித்து.


அதற்கு மேல் அங்கு நிற்க மாட்டாமல்  சத்யன் தோட்டத்தை நோக்கிச் செல்ல, பிரபாவின் ரத்த அழுத்தம் கடந்த இரு தினங்களைக் காட்டிலும் வகைத்தொகை இல்லாமல் அதிகரிக்க, அதனை உள்ளுக்குள் ரசித்தபடி,


"அன்பு அக்கா,  கன்சீவா  இருக்காங்க இல்ல , அவங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கியிருக்கேன் ...


பாண்டி அத்தான்  கல்யாணத்துக்கு  வராததால அவருக்கும் அவங்க வைஃப்க்கும் சேர்த்து  ஒரு கிப்ட் வாங்கி இருக்கேன்... அதையெல்லாம் கொடுத்துட்டு, போலாம்னு வந்திருக்கேன்..."  என்றாள் ஏதோ குழந்தைகள் பாட்டு பாடுவது  போல் .


ஏதோ ஒரு திட்டத்தோடு தான் தங்கை  வந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட பிரபா, அவளை அங்கே இருக்க விட்டால் ஆபத்து என உணர்ந்து,


"சரி, கொடுக்க வேண்டிய கிப்ட்ட கொடுத்துட்டு  வீட்டுக்கு கிளம்பு ....அம்மா அப்பா உனக்காக காத்துகிட்டு இருப்பாங்க..."  என அவள் முடிக்கும் முன்பே,


"ப்ரீத்திய ஏம்மா வெரட்டற ... இப்பதான வந்திருக்கா... இருந்து சாப்பிட்டு போவட்டும் ..." என வழக்கம் போல் சம்மன் இல்லாமல் அகல்யா ஆஜராக , அதற்கு மேல் பேசினால் தேவையில்லாத பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழ்நிலை வரும் என அமைதியாகி போனாள் பிரபா.


உடனே ப்ரீத்தி அன்புவிடம் வழிந்து வழிந்து நலம் விசாரித்துவிட்டு , தான் கொண்டு வந்திருந்த பரிசினை  கொடுத்தாள்.


தொடக்க காலத்தில் இருந்தே அவர்கள்  இருவருக்கும் இடையே ஒரு இணக்கமான நட்பு நிலவவே செய்தது , அதற்குக் முக்கிய காரணம் ப்ரீத்தி தான்.


எதிர்காலத்தில் வீராவை மணக்க வேண்டுமென்றால்  அன்புவின் ஆதரவு தேவை என திட்டமிட்டே வலிய  சென்று நட்பு பாராட்டி உறவை வளர்த்திருந்தாள்.


ஆனால் அன்பு வீராவை நன்கு அறிவாள்.  வயது வித்தியாசத்தை காரணம் காட்டி அவன் ப்ரீத்தியை  மணக்க மறுப்பான் என தெரிந்து தான்,  தமையனுக்கு வெளியே பெண் தேடி திருமணத்தை முடித்திருந்தாள். 


"அக்கா இப்பவே கிப்ட்ட  பிரிச்சு பாருங்க ..." என்றாள் ப்ரீத்தி  உரிமையாய்.


எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும்  அன்பு ,சற்று முன் நடந்திருந்த உரையாடல்களால், தளர்ந்த நிலையில், பளபளக்கும் நிற காகிதம் சுற்றப்பட்ட அந்த சதுர வடிவ டப்பாவை  அசுவாரசியமாக திறந்து பார்த்து, பிறகு  அளவில்லா ஆச்சரியம் கண்களில் மின்ன,


" வாவ் சூப்பர்ப்...."  என்றாள். 


அன்புவை  போலவே முக தோற்றத்துடன்  கருவுற்றிருக்கும் சிந்தடிக் செராமிக்கால் செய்யப்பட்ட கஸ்டமயிஸ்ட்  பெண் பொம்மையை  பரிசளித்திருந்தாள் ப்ரீத்தி. 


உடனே அதை அகல்யா வாங்கிப் பார்த்து மகிழ்ந்துவிட்டு,  சுந்தராம்பாளிடம் கொடுக்க,அவரும்  லதாவும் ஒருசேர பார்த்து ரசித்துவிட்டு ஸ்ரீப்ரியாவிடம் கொடுத்தனர்.


அன்புவை போலவே முகத்தோற்றம் கொண்ட தாய்மை அடைந்திருந்த அந்தப் பெண் பொம்மையை பார்த்து ஆழ்ந்து ரசித்தவள்,


" வாவ் சோ பியூட்டிஃபுல் ..." என ப்ரீத்தி , அன்புவை ஒருசேர பார்த்து கூறிவிட்டு,  அன்புவின் கையில் கொடுக்க முற்படும் போது, அதை  கையில் வாங்காமல் 


" அங்க வச்சிடுங்க ..." என்றாள் அன்பு ஸ்ரீப்ரியாவின்  முகம் பாராமல்  வெடுக்கென்று .


அன்புவின் செய்கை ப்ரீத்திக்கு ஆனந்தத்தையும் , ஸ்ரீப்ரியாவுக்கு வருத்தத்தையும்  வாரி வழங்க, பிரபா, ஸ்ரீப்ரியாவை தாண்டி, வேறு எவருக்கும் அந்த காட்சி கருத்தில் படியாமலே போனது.



அப்போது அகல்யா  ஸ்ரீப்ரியாவை பார்த்து ,


" ப்ரியா,  இது ப்ரீத்தி ... பிரபாவோட தங்கச்சி,  ப்ரீத்தி... இதான் பாண்டியோட பொண்டாட்டி.. பேரு ஸ்ரீப்ரியா..." என்றார் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி.


நட்பாக சிரித்த ப்ரீத்தியை பார்த்து, நாளிதழில் மூழ்கியிருந்த வீராவின் அருகே நின்றருந்த ஸ்ரீப்ரியா மென் புன்னகை பூக்க, உடனே அவள் 


"அத்தான்,  அக்கா ... உங்க ரெண்டு பேருக்கும்  என்னோட வெட்டிங் கிப்ட்  இது  ..."  என்றதும் புத்தகத்தில் மூழ்கி இருந்த வீரா தலைநிமிர்ந்து லேசாக புன்னகைத்த படி , அன்புக்கு கொடுத்தது போலவே இருந்த  பரிசுப் பொருளை  ஸ்ரீப்ரியா உடன் வாங்கிக் கொண்டான். 


உடனே ப்ரீத்தி 

"இப்பவே நீங்க  ரெண்டு பேரும் இதை  பிரிச்சு பாக்கறீங்க ...  எல்லாருக்கும் காட்டுறீங்க..." என்றாள் பாதி கெஞ்சலும் பாதி கொஞ்சலுமாய்  .


வீரா பதில் பேசாமல்,  அந்த பரிசை பிரித்தான்.


அன்புவிற்கு கொடுத்தது போலவே ஒரு தம்பதி பெண் குழந்தையோடு இருப்பது போல் சிந்தடிக் செராமிக்கில் செய்யப்பட்ட  கஷ்டமைஸ்ட் பொம்மை அது .


பார்க்க மிக அழகாக இருந்தது.


ஆனால் அதனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிரபாவிற்கு தான்அதில் தங்கை செய்திருந்த குள்ளநரித்தனம் தெளிவாக புரிய கொதித்துப் போய்விட்டாள்.


அதாவது அதில் இருந்த ஆண் பொம்மையின் தோற்றம் முழுக்க முழுக்க  வீராவை போலவும்,  பெண் பொம்மையின் தோற்றம் ப்ரீத்தியை போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.


அப்போது பார்த்து வீராவின் அலைபேசி ஒலிக்க,  


" குட் ரொம்ப நல்லா இருக்கு ..." என பொம்மையை  சரியாகப் பார்க்காமலே ப்ரீத்தியிடம் மொழிந்து விட்டு,  கைபேசியோடு அவன் நடையை கட்ட,   தன் கையில் இருந்த  பொம்மையை ஸ்ரீப்ரியா ஆழ்ந்து பார்ப்பதற்குள், பிரபா  பிடுங்காத குறையாய்,


" ப்ரியா அத கொஞ்சம் குடு பாத்துட்டு தரேன் ..." என வாங்கிக் கொண்டு, அடுத்த கணமே பிறர் அறியாமல் , அதனைக் கொண்டு சென்று, அப்போதைக்கு கையில் கிடைத்த இடமான, உறவினர்களுக்கு கொடுக்க வேண்டிய திருமண  தேங்காய் மற்றும்  பலகாரப் பைகள் அடங்கி இருந்த பெரிய கூடைக்குள் மறைத்து வைத்தாள். 



பிரபாவின் செய்கை,  படபடப்பு எதுவுமே ஸ்ரீப்ரியாவை சென்றடையவில்லை. அவள்  மனதில் இருந்ததெல்லாம் அன்புவின் நிராகரிப்பு மட்டுமே.


முன்னிரவு சகோதரி போல் மாய்ந்து மாய்த்து பேசி நட்பு பாராட்டியவள்,  தற்போது காரணமே இல்லாமல் தவிர்ப்பதை எண்ணி கலங்கினாள்.


அவளது முக மாற்றத்தை உள்வாங்கிக் கொண்ட ப்ரீத்தி, ஏதோ அன்புக்கும் அவளுக்கும் சரியில்லை என்பதை புரிந்து கொண்டு  பூரிப்படைந்த படி  தமக்கையின் குழந்தைகளை அழைத்து  சாக்லேட்களை  கொடுத்துக்கொண்டே அகல்யா, சுந்தராம்பாளோடு  பேச்சில் மூழ்கினாள்.


அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் தன் அறைக்குச் செல்ல ஸ்ரீப்ரியா  எத்தனிக்கும் போது , நினைவு வந்தவளாய், சமையலறைக்குச் சென்று 


"அக்கா, ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா..."  என்றாள்  பிரபாவை பார்த்து.


" வேணாம் ப்ரியா...  இன்னும்  ஹாஃப் அன் ஹவர்ல எல்லாம் தயாராயிடும் ...  அதுவரைக்கும் நீ ரூம்ல ரெஸ்ட் எடு...." என்றவளின் முகத்தில் கவலை ரேகை காண்டீபம் போல் விரிந்து ஓட ,


"ஏன் ஒரு மாறி இருக்கீங்க ..." என்றாள் வாஞ்சையாக.


"ம்ச்... இன்னைக்கு ஏதோ பேச ஆரம்பிச்சு எப்படியோ போய் முடிஞ்சிடுச்சு ..." 


"ஆமாக்கா... டாபிக்  எங்கயோ ஆரம்பிச்சு எப்படியோ போய் முடிஞ்சிடுச்சு...  அன்பு ரொம்ப அப்செட் ஆயிட்டாங்க ...  கடைசில ஏன் தான்  பேசினோம்னு எனக்கு தோணிடுச்சு..."


"வழக்கம் போல தம்பி சரியாத்தான் பேசினாரு.... உனக்கும் அந்த பிரச்சனைக்கும் சம்பந்தமே இல்ல.... நீ கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் சொன்ன... அதனால உங்களால பிரச்சனை இல்ல ,எல்லா பிரச்சனையும் என் வீட்டுக்காரரால தான் வந்தது ... மாசமா இருக்க பொண்ணுன்னு பாக்காம தேவை இல்லாம,  எதையோ பேசி அவளை கஷ்டப்படுத்திட்டாரு....மாமா , அத்தை எப்பவுமே இப்படித்தான் பேசுவாங்க ... அவங்கள மாத்த முடியாது ...ஆனா இவரு கொஞ்சம் இடம், பொருள் , ஏவல் பார்த்து பேசணும் இல்லையா .... இத சொன்னா கோவப்படுவாரு..."  என மனம் விட்டு ஒரு சினேகிதியிடம் சொல்வது போல் புலம்பியவள் 


" சரி நீ போ ..." என்றதும் தளர்ந்த நடையோடு தன் அறைக்கு வந்து சேர்ந்தாள் ப்ரியா. 


முதல் நாள் முதல் பொழுதே இப்படியா .... என்ற எண்ணத்தில் மூழ்கிய படி,  அலைபேசியில் இலக்கில்லாமல் எதையோ தேட தொடங்கினாள்.


சில பல மணித்துளிகளுக்கு பின்,அறைக்கு வந்த வீரா,


"ஸ்ரீ .... கீழ பெரியவங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டாங்க... வா சாப்பிட போலாம் ..." என்றான் மென்மையாய்.


"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ராம்" எனத் தொடங்கி சற்று முன்  நடந்த அனைத்தையும் கூறி உடன் தன் மன உணர்வுகளையும் பகிர்ந்து,


"அன்பு ரொம்ப அப்செட் ஆயிட்டாங்க .... அவங்க என்னை கம்ப்ளீட்டா  இக்னோர் பண்ண மாதிரி இருந்தது ..." என முடித்தாள் லேசான கமரிய குரலில்.


"என்ன அவங்க இவங்க .... அவ உன்னை விட சின்னவ... அன்புவ வா போன்னே கூப்பிடு  ... " என ஆரம்பித்தவன் 


"இதுல வருத்தப்பட ஒன்னுமே இல்ல... சொன்ன விஷயமும் புதுசு இல்ல, சொன்னவங்களும் புதுசு இல்ல ..." என்றான் ஒரே போடாக. 


"ஆனா நான் புதுசு தானே ..."


"அதனால என்ன ... நீ என் வைஃப் ...அன்பு என் தங்கச்சி ..இது நம்ம குடும்பம் ... இதுல உன்னை மட்டும் பிரிச்சு பார்க்க என்ன இருக்கு ..."


"நீங்களே சொல்லி இருக்கீங்க அன்பு  ரொம்ப  சென்சிடிவ்னு .... அவளோட ட்ராபேக்ஸ எல்லார் முன்னாடியும் பேசினது தான் அவளை அப்செட் பண்ணிடுச்சு..."


"அண்ணன் பேசினதுல தப்பில்ல .... அவர் எப்பவுமே அப்படித்தான் பேசுவாரு ... வெற்றியோ தோல்வியோ எல்லாத்த பத்தியும் எல்லார் முன்னாடியும்  பேசுவாரு... இவ்ளோ ஏன், அவரோட  ஃபெயிலியரை கூட எல்லாரும் முன்னாடியும் பேசி சிரிச்சிருக்காரு ...இது எங்க ஃபேமிலில எப்பவும் நடக்கிற விஷயம் தான் ...நாங்க எல்லா விஷயத்தையும் டிஸ்கஸ் பண்ணுவோம்.. நீ வெறும் அன்புவோட வெர்ஷன் மட்டும் பார்த்துட்டு பேசற.. அண்ணியோட வெர்ஷன் பார்த்திருந்தா உனக்கு புரிஞ்சிருக்கும்...


அண்ணி ரெண்டு முறை எம்பிஏ என்ட்ரன்ஸ் எழுதி ஃபெயில் ஆயிட்டாங்க ... அதையும்  அண்ணன் எல்லாரும் முன்னாடியும் சொன்னாரு.... அண்ணி  ஃபீல் பண்ணுவாங்கன்னு கொஞ்சம் கூட  யோசிக்காம அண்ணனோட  சேர்ந்து அன்னைக்கு   அன்புவும் அதை என்ஜாய் பண்ணி  சிரிச்சா... அப்ப அவளோட சென்சிடிவிடி எங்க போச்சு, சென்சிடிவ்ங்கிறது நாம ஹர்ட் ஆகற மாதிரி,  அடுத்தவங்களும் ஹர்ட் ஆவங்கனு  யோசிக்கிறது தான் , ஆனா அன்புவை பொருத்தவரைக்கும் தன் விஷயத்துக்கு மட்டும் தான் அவ சென்சிடிவ் ... மத்தவங்க விஷயத்துல அவ ரொம்ப லிபரல் ..." 


அவன் பேசி முடித்தும்,  அங்கு ஒரு கணம் அமைதி நிலவ,  வழக்கம் போல் அவள் முகத்திலிருந்தே அவள் மனதைப் படித்தவன் ,


" உன் மேல எந்த தப்புமே  இல்ல...  நீ கில்ட்டியா ஃபீல் பண்ண வேண்டிய அவசியமே இல்ல... உன் மேல அவ ஏன் கோவப்பட்டானு  இப்ப  வரைக்கும் எனக்குமே புரியல ... இன்பாக்ட் நான் அன்புக்கு சாதகமா பேசினதுக்கு நீயும் என் அப்பாவும் தான் என் மேல  கோவப்படணும்   ..."


அவள் புரியாமல் பார்க்க,


" என் அப்பா  எப்பவுமே நாட்டு நடப்ப தெரிஞ்சுக்கங்கடா ...வெறும் புத்தகப்புழுவா மட்டும் இருந்திடாதீங்கன்னு  அடிக்கடி சொல்லுவாரு...இன்னைக்கு அன்புவை சொன்ன மாதிரி  என்னையும் எல்லார் முன்னாடியும் பல தடவை சொல்லி இருக்காரு இதுவரைக்கும் நான் அதுக்கு பதில் சொன்னதே இல்ல ... இதெல்லாம் எங்க வீட்ல அடிக்கடி  நடக்கற ஒன்னு  தான்...  ஆனா இன்னைக்கு அன்புவுக்காக அவரை எல்லார் முன்னாடியும் எதிர்த்து பேசினேன் ... எப்பவுமே பதில் பேசாதவன்  புது பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு இன்னைக்கு  எதிர்த்து பேசுறான்னு அவரு நினைக்கலையே  ...


அதோட அவர் கிட்ட, என் பொண்டாட்டி என்ன பெரிய அறிவாளியா ... அவளுக்கு தெரிஞ்ச சப்ஜெக்ட்ல கேள்வி கேட்டிருக்கீங்க அதனால அவ பதில் சொன்னான்னு உன்னையும் தான் விட்டுக் கொடுத்து பேசினேன் ... எல்லார் முன்னாடியும்  என் படிப்பை மட்டமா பேசிட்டீங்கனு நீ கோவப்பட்டிருக்கலாம், ஆனா அப்படி  செய்யலயே ...இங்க பாரு , ஒரு விஷயத்தை ஒருத்தரோட வெர்ஷன்ல இருந்து  மட்டும்  பார்த்து முடிவுக்கு வர்றது ரொம்ப தப்பு ... பார்க்கணும்னா எல்லாரையும் முன்னிறுத்தி  எல்லா சாதகப் பாதகங்களையும்  நுணுக்கமா  பார்க்கணும் இல்லனா அப்படியே விட்டுடணும்...  அன்பு மாதிரி செலெக்ட்டிவ் சென்சிடிவ்வா இருக்க கூடாது ..."


ஏனோ முதல் நாளே நாத்தனாரை பற்றி குற்றப்பத்திரிகை வாசித்தது போல் குற்ற உணர்வில் அவள் சிக்கி தவிக்க, 


"எங்க வீட்ல எல்லாரும் கேஷுவல் டைப் ... ஒரு வகையில அன்புவும் தான் ...இன்னைக்கு மட்டும் ஏன் அவ இப்படி பிஹேவ் பண்ணானு  எனக்குமே புரியல ....போகப் போக எங்க வீட்டு ஆளுங்கள நீ புரிஞ்சிப்ப... ரொம்ப யோசிக்காத வா போலாம் ..." என்றான் மென் புன்னகையோடு. 


 பிரபா, சத்யன் , வீரா, ஸ்ரீப்ரியா,  அன்பு, ப்ரீத்தி மற்றும் பிரபாவின் குழந்தைகள் என அனைவரையும்  தரையில் கம்பளத்தில்  வரிசையாக  அமரச் செய்து,  அறுசுவை விருந்தை அகல்யாயும் லதாவும் மாறி மாறி பரிமாறினர்.


ப்ரீத்தியின் பார்வை நேர் எதிரே அமர்ந்திருந்த  ஸ்ரீப்ரியா, வீராவின் மீது அடிக்கடி பட்டுப் பயணித்தது.


தங்கையின் இருப்பு  தலை மேல் தொங்கும் கத்தி.  அவளை அப்புறப்படுத்தினால் தான் நிம்மதி என்ற மனநிலையில் உழன்று கொண்டிருந்ததால்  பிரபாவுக்கு எந்த உணவுமே நாவில் ருசியை ஏற்படுத்தவில்லை. 

கடமைக்கே என்று மென்று முழுங்கி கொண்டிருந்தாள் .


ப்ரீத்தியின் எதிர்பாராத வருகை, அவளது பார்வை,  பேச்சு ஆகியவற்றால் கொதித்துப் போயிருந்த சத்யனும் வழியற்று ருசியை உணராமல்  சபைக்காக அமர்ந்து உண்டு கொண்டிருந்தான்.


பொதுவாக மற்றவர்களை காட்டிலும் அன்பு  அதிக உணர்ச்சிவசப்படுபவள் என்றாலும், எப்பொழுதும் நடக்கும் ஒரு விஷயத்திற்காக சம்பந்தமே இல்லாதவளை சம்பந்தப்படுத்தி அவளிடம் பாராமுகமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன ...என்ற சிந்தனையில் வீரா மூழ்கி இருக்க,  கணவன் பேசியதில்  தெளிவு கிடைத்திருந்தாலும், ஏனோ நடந்தவற்றை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாமல்  ஸ்ரீப்ரியா குழம்பி  தவிக்க , இரு ஜோடியின் முக பாவங்களையும்

கீழ்கண்களால் உள்வாங்கிக் கொண்டே உள்ளுக்குள் ஆர்ப்பரித்த படி ஆனந்தமாக உணவை அசை போட்டுக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி .



ஒரு வழியாக உணவு உண்ணும் படலம் முடிந்ததும், எல்லோர் முன்னிலையிலும் ப்ரீத்தி வீராவிடம்,


"நான் வீட்டுக்கு போகணும் ...எனக்கு ஓலா கேப் புக் பண்ண முடியுமா .... என்னோட ஆப் ஒர்க் பண்ண மாட்டேங்குது .... ஏன்னே தெரியல ...." என்றாள் குரலில் அவசரத்தை கூட்டி .


அவன் யோசிக்க,


"இல்லன்னா என்னை ஆட்டோ ஸ்டாண்ட்ல டிராப் பண்ணிடுங்க... நான் ஆட்டோல போய்க்கிறேன் ..." என்றாள். 


அவளது பேச்சு,  எதிர்பார்ப்பு எல்லாம் புதுமையாக இருக்க, குழம்பியவன்


"வீட்டுக்குள்ள சரியா சிக்னல் கிடைக்காது தோட்டத்துல ட்ரை பண்ணா கிடைக்கும்" என சொல்லிக்கொண்டே தன் கைபேசியில் முயற்சித்தபடி வீரா தோட்டத்தை நோக்கிச் செல்ல, பின் தொடர்ந்தாள் ப்ரீத்தி. 


மற்றவர்களுக்கு இயல்பாகத் தெரிந்தாலும்,  சத்யன் பிரபாவுக்கு மட்டும் அந்தக் காட்சி விபரீதத்தை விளைவிக்கப் போகிறது என்ற எண்ணத்தை விதைக்க,  நடப்பதை இயல்பாக எடுத்துக் கொண்டு  உண்டு முடித்த உணவு பாத்திரங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த  லதா அகல்யாவுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் ஸ்ரீப்ரியா. 


உடனே பிரபா அவளை நெருங்கி,


"நீ எப்படித்தான் ஆஸ்திரேலியாவுல வேலை பார்த்து, அமெரிக்கால  குப்பை கொட்டினயோ.... ஒரு விவரமும் தெரியாம இங்க நின்னுகிட்டு இருக்க.....  " என முணுமுணுக்க,


"அக்கா என்ன சொன்னீங்க புரியல ..." என்றாள் ப்ரியா மெய்யாகவே. 


"இந்த வேலைய நான் செய்ய மாட்டேனா ... அங்க ப்ரீத்தி தம்பி கிட்ட எதையோ  கேட்டுகிட்டு இருக்க போய்  என்னன்னு பாரு" என்றாள் குரலை உயர்த்தி .


" உங்க தங்கை ...." என ஏதோ சொல்ல தொடங்கும் போதே ,


" ஆமா... என் தங்கச்சிங்கறதால தான் உன்னை  போக சொல்றேன்... போ ... அவளுக்கு விவரம் பத்தாது ..."  என்றாள் பிரபா ஸ்ரீப்ரியாவின் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாய். 


அங்கு ஸ்ரீப்ரியா போய் நிற்கவும் ,


" உனக்கு 15 மினிட்ஸ்ல கேப் வந்துடும் .... புக் ஆயிடுச்சு ..." என  வீரா ப்ரீத்தியை பார்த்து சொல்லவும்  சரியாக இருந்தது. 


அப்போது பார்த்து சத்யன் வீராவை அழைக்க, தன்  அண்ணனை நோக்கி நடைபோட்ட கணவனை ஸ்ரீப்ரியா பின் தொடர எத்தனிக்கும் போது ,


" கங்கிராஜுலேஷன்ஸ் .... ஹாப்பி மேரீட் லைஃப் ..." என்றாள் ப்ரீத்தி தடுக்கும் விதமாக.


" தேங்க்யூ ..." என சிரித்த முகத்தோடு ஸ்ரீப்ரியா பதிலளிக்க , அவள் விழிகளை உற்றுப் பார்த்தபடி,


" நான் இருக்க வேண்டிய இடத்துல நீங்க இருக்கீங்க ..." என்றாள் சன்னமாக அதே சமயத்தில் அழுத்தமாக .


தனக்குத்தான் அவள் சொன்னது தவறாக கேட்டதோ என்றெண்ணி


" கம் அகைன் ப்ளீஸ் ..." என்றாள் ப்ரியா பார்வையை சுருக்கி.


" நான் சொல்லப் போற விஷயம் நிச்சயம் உங்களுக்கு புதுசா தான் இருக்கும் ...  எப்படியும் ஒரு நாள் தெரியத்தான் போகுது அது இன்னைக்கே தெரியட்டுமேன்னு தான் இப்ப சொல்றேன் ....


நானும் பாண்டி அத்தானும் லவ் பண்ணோம்.... ஆனா பெரிய அத்தானுக்கும், மாமாவுக்கும்(பொன்னம்பலம்)  அதுல  கொஞ்சம் கூட விருப்பமில்ல...  


 மூத்த மகனுக்கு தான் வேற ஜாதில பொண்ணு எடுத்தாச்சு ... இளைய மகனுக்காவது நம்ம ஜாதிலயே பொண்ண கட்டணும்னு சொல்லி எங்க கல்யாணத்துக்கு மாமா சம்மதிக்கல ...


அக்கா எவ்வளவோ சொல்லிப் பார்த்தா , ஆனா அவ பேச்சு இந்த வீட்ல எடுபடல ....


பாண்டி அத்தானை மறக்க முடியாம  ஒரு கட்டத்துல தற்கொலை பண்ணிக்க நினைச்சு நான் கைய கூட அறுத்துகிட்டேன்... ஆனா எப்படியோ  காப்பாத்திட்டாங்க ....


எவ்வளவோ என் அக்கா உங்க  கல்யாணத்துக்கு கூப்பிட்டு பார்த்தா .... பாண்டி அத்தான்  உங்க கழுத்துல தாலி கட்டறத பாக்கற சக்தி எனக்கு கிடையாது ... அதனால தான்  கல்யாணத்துக்கு நான் வரல ..

இந்தக் கணம் வரைக்கும் என் மனசுல அவர் மட்டும்தான் இருக்காரு ... அவர் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன் ... இதை யாராலும் மாத்தவும் முடியாது மறுக்கவும் முடியாது ....


அதுக்காக நான் பூவே உனக்காக படத்தோட கிளைமாக்ஸ் மாதிரி வசனம் பேசுற ஆள் இல்ல.... நான் ரொம்ப பிராக்டிகல் ... பாண்டி அத்தான் மாதிரியே எனக்கான லைப் பார்ட்னர் அமையும் போது நிச்சயமா அவரை விட்டு போயிடுவேன் ...


இந்த விஷயத்தை உங்ககிட்ட  சொல்லிட போறேன்னு பயந்து தான் அக்கா என்னை இங்க வரவே கூடாதுன்னு சொல்லி இருந்தா .... அவ பேச்ச கேக்காம  வந்ததால, வந்ததுமே ரொம்ப  கோவம் பட்டா... பெரியத்தானுக்கும் அதே பயம் தான் அதனால தான் அவரும் என் மேல கோவப்பட்டாரு..


அதை எல்லாம் நீங்க பாத்தீங்க இல்ல ... ஆனா எனக்கு அத பத்தி எல்லாம்  கவலை இல்ல நீங்க பார்க்க எப்படி  இருக்கீங்கன்னு பாக்கணும்னு ஆசைப்பட்டேன் ... நாட் சோ பேட் .... பார்க்க சுமாரா இருக்கீங்க .... "  என்றவள் ஒரு கணம் நிறுத்தி, ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி 


"கேவலம் ஜாதி தானே எங்க காதலை பிரிச்சது , உண்மையான காதலுக்கு ஜாதி மதம்  மொழி எதுவுமே கிடையாது ....  எங்க லவ்வோட டீப்னெஸ்,  பாண்டி அத்தான் என் மேல வச்சிருக்கிற அஃபெக்ஷன்  இத எதையுமே புரிஞ்சுக்காம, எதை எதையோ சொல்லி அவர் மனச மாத்தி  கல்யாணம் பண்ணிட்டா, பாண்டி அத்தான்  வாழ்ந்திடுவாருனு மாமாவும், பெரிய அத்தானும்  நினைச்சுக்கிட்டு இருக்காங்க ...


பேரளவுல  வாழலாம்,  ஊர் நாட்டுக்காக குழந்தை கூட பெத்துக்கலாம்... ஆனா பாண்டிய அத்தான்னால என்னை மறக்கவே முடியாதுனு கூடிய சீக்கிரம் எல்லாரும் புரிஞ்சிக்க தான் போறாங்க .... எனவே ஆல் தி பெஸ்ட் ....  "  என கிடைத்த சொற்ப தருணத்தை பயன்படுத்திக் கொண்டு,  ஏதோ மனப்பாடம் செய்த கட்டுரையை ஒப்பிப்பது போல் ஒரே மூச்சாக அனைத்தையும் கூறி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.


ஏற்கனவே அன்பு விஷயத்தில் குழம்பி இருந்த ஸ்ரீப்ரியாவுக்கு ,  தற்போது ஆலகால விஷயத்தை விழுங்குவது போல் , தொண்டை எரிந்து  நெஞ்சமெல்லாம் வேக, நாடி நரம்பெங்கும் பாய்ந்து கொண்டிருந்த ரத்தம் மட்டு பட்டது போல்,  உடல் அசையாமல் நின்ற இடத்திலேயே ஓய்ந்து போக, கண்கள் இருட்டிக் கொண்டு வர, அதில் கண்ணீரும் குளம் கட்ட, மயங்கி விழுந்து விடுவோமோ என்று அஞ்சி,  அருகில் இருந்த சுவரைப் பற்று கோலாய் பற்றிக் கொண்டாள்.



ஸ்ரீப்ரியாவை, ப்ரீத்தியுடன் நின்று கொண்டிருந்த வீராவிடம் அனுப்பிவிட்டோம் என்ற நிம்மதியிலேயே  தன் இரு குழந்தைகளுக்கும் உடை மாற்ற சென்றிருந்தாள் பிரபா.


அவள் திரும்பி வரும் வரை  காத்திருந்து ,வெற்றிக் களிப்போடு அவளைப் பார்த்து ப்ரீத்தி புன்னகைக்க,  பிரபா புரியாமல்  திணற,


ஆப்ப லட்டுல வச்சேன்னு நினைச்சியா .... அதான் இல்ல ... நட்டுல வச்சேன் ... 


ஏதோ ஒரு திரைப்படத்தில் வில்லன் பேசும் வசனத்தை,  தனக்குள்ளேயே பேசியபடி தமக்கையைப் பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு அகல்யாவை நோக்கி போட்டாள் ப்ரீத்தி. 



ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....







 





































Comments

  1. Super akka very nice 👍👍👍
    Ippdi oru twist ethirpakkakaey

    ReplyDelete
  2. Hahaha... Sis neenga vara vara neraya villain punch dialogues la pesa start panitinga pola.. Just the game begins for Veera and sripriya..

    ReplyDelete
    Replies
    1. hahaha.... villinna appadi thane pesanum .. ellanna sami kutham ayidum

      Delete
    2. 😅😅 neenga form la irukinga ponga

      Delete
  3. Vandu gift kodukkira mathiri koduthu manasa kulappi vittuta, ivala yar vara sonnaddu.

    ReplyDelete
  4. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment