ஸ்ரீ - ராமம் -1

 



அத்தியாயம்-1

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே !ஸகஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே ......

 
விஷ்ணு  சஹஸ்ரநாமம்  வீரியமாக   ஒலித்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் வாயிலில் தன் ஜாகுவார் காரை நிறுத்திவிட்டு பரபரப்பாக அவன் வீட்டினுள் நுழைய,
 
" வா வீரா ...." என நட்போடு வரவேற்றவனை   கொலை வெறியோடு பார்த்தபடி,
 
" டேய்... என்னடா ஆச்சு .... என்ன நடக்குது இங்க ....நீ போன்ல சொன்னதெல்லாம் என்னால கற்பனை பண்ணி கூட பார்க்க முடியல ..." என படபடத்தான்  அதிவீர ராம பாண்டியன்.
 
" டேய் நேரமாச்சு டா... கோர்ட்டுக்கு போகணும்.... போகும் போது எல்லாத்தையும் சொல்றேன் கார்ல ஏறு..."   என்ற ராம் சரனை உறுத்து நோக்கி விட்டுஅவனது காரான மெர்சிடிஸ் பென்ஸ் கிளாஸ்-சி யில்  ஏறி அமரராம் சரண் சாரதியாய் காரை செலுத்த, கார் கோயம்புத்தூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தை நோக்கி பாய்ந்தது.
 
கார் பயணம் தொடங்கி ஓரிரு நிமிடம் மௌனத்தில் கரைய,
 
" டேய், இப்பவாது வாயை திறந்து சொல்லேண்டா... என்னடா நடந்துச்சு ..." என்றான் அதிவீர ராம பாண்டியன் ஆதங்கத்தோடு.
 
" அதான் சொன்னேனே....  லட்சுமி டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கானு..."
 
" அது தெரிஞ்சு தானே, அதிரிபுதுரியா ஓடி வந்தேன், ஏண்டா கடுப்படிக்கிற... காரணம் என்னடா அத சொல்லு..."
 
 
"என்ன பெரிய காரணம் ...வழக்கம் போல என் அம்மாவுக்கும் அவளுக்கும் சண்டை .... அதான் காரணம் ..
நான் மூணு நாள் ஸ்வீடன் கிளையன்ட் வராங்கன்னு பெங்களூர் போயிருந்தேன் டா ....  என்கிட்ட ஒரு  வார்த்தை சொல்லாம, நான் திரும்பி வர்றதுக்குள்ள அவங்க வீட்டுக்கு  போய்ட்டா... அங்க போய் கிட்டத்தட்ட 3 மாசம் ஆச்சு ...இப்ப திடீர்னு   டிவோர்ஸ்  நோட்டீஸ்  அனுப்பி   இருக்கா..."   என்றவனின் குரல் அவனையும் மீறி   தழுதழுத்தது.
 
அதிவீர ராம பாண்டியனும், ராம் சரணும் கல்லூரி கால நண்பர்கள்.
 
இருவரும் ஒன்றாக பெங்களூருவில் உள்ள ஐஐடியில் எம்டெக் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்கள்.   மிகப்பெரிய பன்னாட்டு கணினி நிறுவனம் ஒன்றில் கேம்பஸில் நேர்முக தேர்வில் தேர்வாகி, நான்கைந்து  ஆண்டுகள் ஆஸ்திரேலியா, ஜெர்மனி , அமெரிக்கா போன்ற  நாடுகளில் பணியாற்றியவர்கள்.
 
தற்போது இருவரும் அதே நிறுவனத்தின் கோயம்புத்தூர் கிளையில்வெவ்வேறு வரைவு திட்டத்திற்கு  அசோசியேட் வைஸ் ப்ரெசிடெண்ட்டாக பணிபுரிந்து வருகின்றனர்.
 
இருவரும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 70 லட்ச ரூபாயை சம்பளமாகப் பெறுகின்றனர் ..
 
இருவரின் குடும்பமும் நல்ல வசதியான குடும்பமே.

  ராம் சரணுக்கு  திருமணம் ஆகி கிட்டத்தட்ட  மூன்றாண்டுகள் ஆகப்போகிறது.   பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம்.  ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறாள் பெயர் ஸ்ரீஷா . அவன் மனைவி ஸ்ரீ லட்சுமி.
 
லக்ஷ்மி என்னும் அந்த ஸ்ரீ லக்ஷ்மி தான், தற்போது  ராம் சரணிடம் விவாகரத்து வேண்டி விவாகரத்து பத்திரத்தை அனுப்பி உள்ளாள்.
 
வழக்கின் முதல் தினம் என்பதால்அரக்கப் பறக்க குடும்ப நல நீதிமன்றத்தை நோக்கி ராம் சரண் தன் தோழனான அதிவீரராம பாண்டியனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறான்.
 
" டேய்என் லட்சுமி இப்படி பண்ணுவானு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல டா ....குழந்தையைப் பார்த்து கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆகுது  ....  கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனவ தானா வந்துடுவானு தப்பு கணக்கு போட்டுட்டேன் டா ... இப்படி நிரந்தரமா பிரிஞ்சு போக முடிவெடுப்பானு  கொஞ்சம் கூட நினைக்கல......"  என்றான் ராம்சரண்  மீண்டும் கலங்கிய குரலில்.
 
அவன் கண்கள் மனைவி மற்றும் மகளின் மீதான நேசத்தையும் பாசத்தையும் வஞ்சனை இன்றி பறைசாற்றிக் கொண்டிருந்தன .
 
" அடிங்.... ஓங்கி உட்டேன்னு வை... மூஞ்சி தீஞ்சு போயிடும்.... உங்களுக்கு  கல்யாணமான நாள்ல இருந்து உங்க வாழ்க்கையில  உன் அம்மாவும் உன் தங்கச்சியும் அடிச்ச கொட்டம்  ரொம்ப அதிகம்  .... பாவம் லட்சுமியும்  பொறுத்து பொறுத்து பார்த்துட்டு யார்கிட்ட சொல்றதுன்னு தெரியாம  என்கிட்ட   உங்க ஃபிரண்டுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க .... எதையுமே கண்டுக்கவே மாட்டேங்கிறாரு .... வீடுன்னா அப்படித்தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும்னு மோடாந்திரமா சொல்லிட்டு போயிடறாரு .. ஆனா என்னால அவங்க வீட்டு ஆளுங்க செய்யற கொடுமைகளை தாங்கவே முடியல  ... நான் யார்கிட்ட போய் சொல்றதுன்னு தெரியல.... வேற வழி இல்லாம உங்க கிட்ட சொல்றேன்னு அன்னைக்கு கண்ணு கலங்கி சொன்னாடா....
 
நான் அதை உன்கிட்ட கேட்டதுக்கு  எப்படி நீ என் ஃபிரண்டு கிட்ட  நம்ம குடும்ப விஷயத்தை சொல்லலாம்னு   அதுக்கு வேற அவளை திட்டி இருக்க ...
 
தெரியாம தான் கேட்கிறேன் ...
இத்தனை வருஷமா நீயும் நானும் ஃபிரண்ட்ஸ் மாதிரியா பழகிக்கிட்டு இருக்கோம்.... எனக்கு ஏதாவது ஒன்னுனா என் வீட்டு ஆளுங்களுக்கு முன்னாடி நீ தாண்டா ஓடி வர ... நானும் அப்படித்தான் ...  உன்னை எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்ல... அது உனக்கு நல்லாவே தெரியும் .. தெரிஞ்சும் லட்சுமி கிட்ட அவ்வளவு கோவத்தை காட்டி இருக்க .... அதுக்கப்புறம் அவ எதுவுமே என்கிட்ட சொல்றதில்ல ... நானா உன் குழந்தை பிறந்த நாள்ல பார்த்து விசாரிக்கும் போது தான்நீ திட்டினத சொன்னா....
 
 
சரி அத விடு ...   என்னைக்காவது ஒரு நாள் உன் அம்மா,   உன் தங்கச்சியை கூப்பிட்டு  என்ன ஏதுன்னு  விசாரிச்சு இருக்கியா இல்ல கண்டிக்கதான் செய்திருக்கியா ...
 
ஆபீஸ் போறதும் வர்றதுமா தான இருந்திருக்க.... பாவம் அவ என்னதான் பண்ணுவஅதான் கடைசில கோர்ட்டுக்கு போயிட்டா...."
 
" டேய்நீ வேற .... ஆறுதல் சொல்லுவேனு  பார்த்தா, ஏன்டா இப்படி கடிக்கிற ..."
 
" ஆறுதலா.... உனக்கா ... தெரிஞ்சே பண்ண உனக்கு  ஆறுதல் எல்லாம் கேடா ....வேணும்னா  அடிக்கறேன் வாங்கிக்கிறியா ..."
 
டேய், எனக்கு என் பெண்ணை பார்க்கணும் போல இருக்குடா ... எனக்கு என் பொண்ணு வேணும் எவ்ளோ செலவானாலும் என் குழந்தையை சட்ட ரீதியா அவ கிட்ட இருந்து வாங்கறேன் பாரு ...."
 
" வாவ் .... சூப்பர்ப்... இப்ப அடுத்த தப்புக்கு அடி போடறயா ... உன்கிட்ட பணம் இருக்கு அவ கிட்ட பணம் இல்ல ... அதனால பணம் கொடுத்து சொல்ல வேண்டிய பொய்யை எல்லாம் சொல்லி சட்டத்தை வாங்கிஉன் பெண்ணை அதோட அம்மா கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிற ..."
 
" பின்ன .... குழந்தை அவ கையில இருக்குங்குற திமிர்ல தான கோர்ட்டுக்கு போனா....  அந்த குழந்தையே வாங்கிக்கிட்டாகடைசில அவ தனியா நின்னுதானே ஆகணும்.... அப்புறம் வேற வழி இல்லாம குழந்தைக்காக என்னை தேடி வந்து தானே ஆகணும் ..." என வெளியில்  கர்வத்தோடும் திமிரோடும் காட்டிக்கொண்டாலும்உள்ளுக்குள் மனையாளுக்காக ஏங்கித் தவித்தவன்,  உற்ற நண்பனிடம் கூட அதனை காட்டிக் கொள்ள மனம் வராமல்கெத்தாக பேசுவது போல  பேசி முடிக்க,
 
" டேய், உன் வாழ்க்கையில நீ ஆன்ட்டி ஹீரோவா, வில்லனான்னே புரிய மாட்டேங்குதுடா... ஒருவேளை நீ சொன்னது நடந்துகுழந்தை உன்கிட்ட வந்துட்டாலும், லட்சுமி வைராக்கியத்துல குழந்தைகாக உன்கிட்ட வரலைன்னா... என்ன பண்ணுவ ....  ஒரு வயசு குழந்தையை யார்கிட்ட விட்டுட்டு போவ ... உன் அம்மாவ பத்தி உனக்கு தெரியும் இல்ல ... எப்ப பார்த்தாலும் டிவிஃபோனு, அரட்டைனு ஊரு சுத்துற ஆளு .... உன் வீடு வீடா இருக்கிறதே லட்சுமியை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் ....  இப்படி ஒரு சோம்பேறி, சுயநலம், பொறுப்புன்னா என்னன்னு தெரியாத ஒரு  அம்மாவை வச்சிக்கிட்டுஇந்த சவடால் எல்லாம் உனக்கு தேவையா ... உன் தங்கச்சியை பத்தி சொல்லவே வேணாம் .... அவங்க மாமியாரும் புருஷனுமே சொல்லிட்டாங்க படு சோம்பேறின்னு ... இவங்க ரெண்டு பேரையும் நம்பியா உன் குழந்தைய லட்சுமி கிட்ட இருந்து வாங்க போற ...?"
 
அமைதியாக தலை குனிந்தான் ராம் சரண்.
 
" வழக்கமா உன் அம்மாவ திட்டுனா கோபப்படுவியே ... இப்ப ஏன் அமைதியா இருக்க என்ன சங்கதி ..."
 
" இல்லடா ... இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா,   என் அம்மாவை  புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கிறேன் லட்சுமி வீட்டை விட்டு போனதுடிவோர்ஸ் நோட்டீஸ்  அனுப்பினது  எதுக்குமே அவங்க கவலைப்படல ... அவங்க எப்பவும் போல விஜய் டிவி, நெட் பிலிக்ஸ்  பார்த்துகிட்டுபிரண்ட்ஸோட அரட்டை அடிச்சுக்கிட்டு சோசியல் மீடியால கருத்து சொல்லிக்கிட்டு நிம்மதியா தான் இருக்காங்க ... இப்ப தான்டா லட்சுமி சொன்னதெல்லாம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சிருக்கு ... என் தங்கச்சி  கூட லட்சுமி வீட்டை விட்டு போனத பத்தி ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டுகல....
 
பொண்டாட்டிபெண்ணையும் இழந்துட்டு நிக்கும் போது தான்என்னை  சுத்தி இருக்கவங்களோட  இன்னொரு முகமே தெரிய வருது...."
 
தேங்க் காட்... இப்பவாது உனக்கு புரிய ஆரம்பிச்சி இருக்கே.... எனக்கு அது போதும் ...வா லட்சுமியை பார்த்து பேசலாம் ..." என்றவனை ராம் முறைக்க
 
" நீ பேச வேணாம்டா நான் பேசறேன் .... லட்சுமி ரொம்ப நல்ல பொண்ணு... சொன்னா புரிஞ்சிப்பா..." என்றான் அதிவீரபாண்டியன் அவசரமாக.
 
" நான் வரமாட்டேன் டா ... ஊருக்கு போன என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிக்காம வீட்டை விட்டுப் போனதும் இல்லாம எப்படிடா அவ டிவோர்ஸ்  நோட்டீஸ் அனுப்பலாம் .... அதோட அவ என் தங்கையை  கன்னத்துல அடிச்சிருக்கா ... நல்ல குடும்பத்தை சார்ந்த பொண்ணுங்க செய்ற வேலையா இது .... அது ரொம்ப பெரிய தப்பு  ... அவளா வந்து பேசினா  நான் பேசறேன் .... மற்றபடி  நானா  இறங்கி போய் அவகிட்ட சமாதானம்  பேச தயாரா இல்ல ...."
 
" ம்ச்.... மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சே ....
டேய்அவ உன் தங்கைய  அடிச்சது தப்புனு சொல்றியே உங்க தங்கச்சி  பண்ணின காரியம் மட்டும் சரியா  .... நியாயப்படி பாத்தா அவ உன் அம்மாவையும் அடிச்சிருக்கணும் .... இன்னும் சரியா சொன்ன ஒன்னையும் அவ அடிச்சிருக்கணும் .... அவ அப்படி செய்யாதது தான்  பெரிய தப்பா போயிடுச்சு  ..."

"அருணா செஞ்சதா அவ சொன்ன கம்ப்ளைன்ட்க்கு எந்த ஆதாரமும் இல்லை .... என்னால முடிஞ்ச வரைக்கும் விசாரிச்சும் பாத்துட்டேன் ...

அதுக்கு மேல நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிற... நான் ஊருக்கு போகும்போது அவ கிட்ட தெளிவா சொல்லிட்டு போனேன் பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்ன்னு ... ஆனா வேணும்னே லக்ஷ்மி நடந்து முடிஞ்ச விஷயத்தை மறுபடியும்  பேசி சண்டை போட்டு அருணாவை அடிச்சிருக்கா....  அது தப்பில்லையா ...."

  "என்னடா பெரிய கம்ப்ளைன்ட்டுஆதாரம்னு.... நீ என்ன போலீசா ... அதான் லட்சுமி எல்லாத்தையும் சொன்னாளே....  ஆனா  நீ கண்டுக்காம விட்டுட்டு பெங்களூருக்கு கிளம்பி போயிட்ட... இப்ப  பிரச்சனை கை மீறி போயிடுச்சு .... "

 
 
"சரிஎதுவாயிருந்தாலும் நான் வர வரைக்கும் அவ பொறுத்து இருக்கணுமா வேணாமா ..... அப்புறம் எனக்கு என்னடா மரியாதை ..."
 
" இன்னைக்கு மரியாதை மண்ணாங்கட்டிய பத்தி பேசுற நீ ... அன்னைக்கு  நடந்த அவ்ளோ பெரிய பிரச்சனைக்கு என்ன தீர்வு கண்ட....  கண்டுக்காம தானே இருந்த ...."
 
" சரி நடந்தது நடந்ததாவே இருக்கட்டும் ...  எனக்கு என் பொண்ணு வேணும்டா ..." என்றான் ராம் கமரிய குரலில்.
 
" அதான் கேட்டேனே... கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லலையே.... குழந்தையை லட்சுமி கிட்ட இருந்து பிரிச்சு வாங்கிட்டு போய் யார்கிட்ட கொடுக்கப் போற.... எப்படி வளர்க்க போற ....  நீ வருஷத்துல பாதி நாள் இந்தியாவுலயே இருக்க மாட்டா...  ஒருவேளை குழந்தைக்காக இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா ..." என்றான் நண்பனின் மன ஓட்டத்தை அறிந்து கொள்வதற்காக .
 
 
"ச்சே...ச்சே ... லட்சுமி இருந்த இடத்துல இன்னொரு பெண்ணை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது ..."
 
" கொஞ்ச நாளைக்கு முன்னாடி  சொன்னியே  நம்ம ஆபீஸ்ல மஹதி உன்னையே  சுத்தி வரானு ... ஒருவேளை அவள கல்யாணம் பண்ணிக்கிற உத்தேசம் இருக்கோ ..."
 
" டேய் ... புரியாம உளராத டா .... அதெல்லாம் டைம் பாஸ்க்கு ....  சும்மா ஒரு ஜாலிக்காக ஆபீஸ் பார்ட்டில நடந்த ஒரு விஷயத்தை சொன்னேன்... அதை எதனோட முடிச்சு போடற பாரு....  லட்சுமிக்கு கொஞ்சம் கோபம், ஈகோ உண்டு தான் ... மத்தபடி அவ ரொம்ப நல்லவ .... அவ இடத்துல இன்னொரு பெண்ணை கொண்டு வர என்னால முடியாது ... அப்படி இன்னொருத்திய கொண்டு வந்தா அதை விட ஒரு பெரிய கொடுமையை என் பொண்ணுக்கு என்னால செய்யவே முடியாது ...
 
" உனக்கே எல்லாம் தெரியுது ... நான் சொல்லணுங்கிற அவசியமே இல்லை .... ஆனா உனக்கு  தானுங்கிற கர்வமும் இருக்குது..  பொண்டாட்டி கிட்ட என்னடா ஈகோ ... நீ லட்சுமி வீட்டுக்கு போய் பேசி இருக்கலாம் இல்ல ..."
 
" வேணாம்டா  ... அவ எப்படி என்கிட்ட சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு  போவா.... போனதோட மட்டும் இல்லாம வக்கீல் நோட்டீஸ் வேற அனுப்பி இருக்கா.... அவளுக்கே அவ்ளோ திமிர் இருக்கும் போது எனக்கு எவ்வளவு இருக்கும் ..." என கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.
 
நீ திருந்தவே மாட்ட டா ...  உனக்கு ஏழரை சனி ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன் .... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல... நான் ஒரு ஷார்ட் ட்ரிப்  ஜெர்மனி போய்ட்டு வர்றதுக்குள்ள என்னென்னமோ நடந்து முடிஞ்சிடுச்சு ..." என்று ஆயாச பெருமூச்சு ஒன்றை விட்டு மனதை சமன் செய்தவன்,
 
" சரிநீ என்கூட வர வேணாம்...நானே லட்சுமி  கிட்ட  பேசறேன் ..." என்றவன் முடிக்கவும்குடும்ப நல நீதிமன்றத்தை கார் அடையவும் சரியாக இருந்தது.
 
இருவரும் இறங்கி உள்ளே நுழைந்ததுமேராம் சரணின் கண்கள் தன் ஸ்ரீ லட்சுமியை  தேடித்தேடி களைத்தன.
 
நீதிமன்ற வளாகத்தில் இருந்த மரத்தடியில்லட்சுமியின் தாயார் ருக்மணி குழந்தையை தோளில் போட்டு  தட்டி தூங்க வைத்துக் கொண்டிருக்க, லட்சுமி தன் வழக்கறிஞர் தினேஷ் உடன் பேசிக் கொண்டிருந்தாள்.
 
ராம்சரனை விட இரண்டு மூன்று வயது மூத்தவனாகத் தெரிந்த  தினேஷிடம், அவள் விழி கலங்கி சிவந்த முகத்தோடு துடிக்கும் உதட்டை கடித்து அழுகையை அடக்கியபடி பேசிக் கொண்டிருப்பதுராமுக்கு  இன்னும் கோபத்தை கூட்டியது.
 
" எனக்கு வர்ற ஆத்திரத்துக்குகோர்ட்டுனு கூட பார்க்காம ரெண்டு அடி வச்சுஅவள கார்ல தூக்கி போட்டுக்கிட்டு போகணும்னு தோணுது டா..." என சன்னமாக கர்ஜித்தவனை ,
 
"ஏற்கனவே ஒரு தடவை லட்சுமி மேல தப்பே இல்லன்னு தெரிஞ்சும் நீ அவளை  அறைஞ்சிருக்க....
அப்ப எல்லாம் பொறுத்துப்போனவஇப்ப இந்த முடிவு எடுத்து இருக்கானா .. அவ எவ்ளோ  காயப்பட்டு இருப்பானு நீ புரிஞ்சுக்கணும் டா..."
 
தொலைவில் இருந்தே ராம் சரணை கண்டதும்லட்சுமியின் தாயார் ருக்மணியின் கண்ணில் ஒருவித எதிர்பார்ப்புடன் கூடிய மின்னல் தோன்றி  சடுதியில் மறையஉடனே அங்கு வழக்கறிஞருடன் பேசிக் கொண்டிருந்த மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தோளில் இருந்த குழந்தையை தட்டிக் கொடுத்த படி தலை கவிழ்ந்து கொண்டார்.
 
தீவிரமாக தன் வழக்கறிஞரிடம் பேசிக் கொண்டிருந்த லட்சுமியின் பார்வை , தொலைவிலிருந்து அவளையை பார்த்துக் கொண்டிருந்த ராம்சரணின் மேல் ஏதேச்சையாக படிய , அதுவரை குரல் கம்மகண் கலங்கிய நிலையில் தன் வழக்கறிஞர் தினேஷுடன்  பேசிக் கொண்டிருந்தவள், திடீரென கோபத்தையும், அலட்சியத்தையும் தத்தெடுத்துக் கொண்டு வேறு எங்கோ  பார்ப்பது போல் கழுத்தை திருப்பிக் கொண்டாள்.
 
மகளின் செய்கையும்மருமகனின் பார்வையையும் பார்த்துக்கொண்டே  செய்வதறியாது துக்கம் தொண்டையை அடைக்க, அமைதி காக்கலானார் ருக்மணி .
 
அப்போது பார்த்து  அதிவீரராம பாண்டியனின் கைபேசி ஒலிக்க,
 
" சொல்லும்மா ..." என்றான் தன் தாயிடம் வாஞ்சையாக.
 
" பாண்டியாஜாதகம் போய் பாத்துட்டு வந்துட்டேன், உனக்கும்  அந்த பொண்ணுக்கும் ஜாதக பொருத்தம் அருமையா இருக்காம் இப்பதான் ஜோசியர் சொன்னாரு .... அவங்க அப்பா கிட்டயும்  உன் அப்பா பேசிட்டாரு  ... அடுத்த மாசம் போய் பொண்ண நேர்ல  பாத்துட்டு, உடனே பரிசம் போட்டு
மத்தா மாசமே கல்யாணத்தை முடிச்சிடணும்னு உன் அப்பா பொண்ணு வீட்ல பேசி இருக்காருப்பா  ... உனக்கு பொண்ணு புடிச்சிருக்கு இல்ல.. போட்டோல பார்த்தல்ல ..." என எதிர்பார்ப்புடன் அவன் தாய் அகல்யா கேட்க
 
" எந்த பொண்ணு...."  என்றான் ஆசுவாசமாக.
 
" மதுரை பொண்ணு  .... பேரு ஸ்ரீ ப்ரியா ...."
 
 
ஸ்ரீ..... ப்ரியா... "  என தன்னுள்ளே ஒருமுறை அனிச்சையாக கூறி யோசித்து  பார்த்தவன்  உடனே
சொன்னா புரிஞ்சுக்கோம்மா ... எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்மா..." என பழைய பல்லவியை பாடி  அவசரமாக மறுத்தான்.
 
 
" டேய்வர மாசி மாசம் வந்தா உனக்கு 30 வயசு ஆகப்போகுதுடா ... கல்யாணம் வேணாம்னா என்ன அர்த்தம் ... தங்கச்சி கல்யாணத்துக்கு அப்புறம் கல்யாணம்னு சொன்ன... அவ கல்யாணம் முடிஞ்சு 2 மாசம் ஆயிடுச்சு ... அவதான்  தமிழ் மேட்ரிமோனில இந்த பொண்ணோட ஜாதகத்தை தேடி கண்டுபிடிச்சா ... இந்த பொண்ணோட ஜாதகமும் உன் ஜாதகத்தோட நல்லா பொருந்தி வருதுனு ஜோசியர் சொல்லிட்டாரு ..... நல்ல பாரம்பரிய குடும்பம் டா ...
 
பெண்ணும்  பார்க்க ரொம்ப நல்லா இருக்கா .... அவங்க வீட்லயும் சம்மதம் சொல்லிட்டாங்க .... அடுத்த மாசம் அந்த  பொண்ணு ஆஸ்திரேலியால இருந்து வராளாம்... பொண்ணு வந்ததும் ஒரு முறை நேர்ல போய் பார்த்துட்டு,
உடனே கல்யாணம் வச்சிடலாம்னு அவங்க அப்பாவும் உன் அப்பாவும் பேசி முடிவு எடுத்து இருக்காங்க .... நீ என்ன சொன்னாலும் இனிமே நாங்க கேக்க போறதில்ல... இப்பவே போன் பண்ணி
அவங்க வீட்ல எல்லாம் ஏற்பாட்டையும்  செய்ய சொல்லப் போறோம் ..."
 
" அம்மா நான் சொல்றத கேளுமா ..."  என காற்றோடு உரையாடிக் கொண்டிருந்தான் மைந்தன்  தாய் அழைப்பை துண்டித்தது தெரியாமல்.
 
" என்னடா.... உனக்கு பொண்ணு பாத்திருக்காங்களா ..." என்றான் ஒருவித எள்ளல் கலந்த விரக்தியில்  ராம் சரண்.
 
" ஆமா ராம் ... இந்த whatsapp யுகத்துலயும் கல்யாணம்னா, சம்பந்தப்பட்ட பொண்ணும் பையனும் பேசி முடிவு எடுக்கணும்.... கல்யாணம்கிறது ஒரு தனி மனிதனோட விருப்பம் சம்பந்தப்பட்டதுங்கிறத  மறந்துட்டு இப்படி போர்ஸ் பண்றாங்கடா என்ன பண்றதுன்னே புரியல ...
என் அண்ணன் அங்க  லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான் ....நீ  இங்க  அரேஞ்ச்டு மேரேஜ் பண்ணிக்கிட்டு கோர்ட் வாசல் ஏறி இறங்கிக்கிட்டு இருக்க இந்த லட்சணத்துல எனக்கு கல்யாணம் ஒரு கேடா .... "
 
" சரியா சொன்ன .... நிம்மதியா நாடு நாடா சுத்திகிட்டு இருந்த எனக்கு  பொண்ணு பார்த்து வச்சிருக்கேன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சாங்க... இப்ப டிவோர்ஸயும் வாங்கி கொடுக்க போறாங்க ... இவங்களே கல்யாணம் பண்ணி வைப்பாங்க ... இவங்களே டிவோர்ஸ் வாங்கவும் காரணமா இருப்பாங்க... இப்பதான் புரியுது இவங்க யாரும்  தங்களோட குழந்தைகளுக்கு ஆத்மார்த்தமா கல்யாணம் செய்து வைக்கிறது இல்லைனு .... அம்மா அப்பா கண்டுக்காம இருக்காங்கனு அக்கம் பக்கத்துலயும், உறவு காரங்களும் சொல்லிட போறாங்களேனு பயந்து   சோசியல் பிரஷருக்காக கல்யாணம் செய்து வைக்கிறாங்கனு..... அதனால... என்னோட அட்வைஸ் அம்மா சொன்னாங்க,அப்பா சொன்னாங்க,  ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு கல்யாணம் பண்ணிக்காத ... உனக்கா தோணுச்சுன்னா பண்ணிக்கோ இல்லன்னா விட்டுடு ..."
என தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை போதனையாக உயிர் நண்பனுக்கு  போதித்தான் ராம் சரண்.
 
உடனே தன் தாய்க்கு அழைப்பு விடுத்தான் பாண்டியன்.
 
" நீ இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னா நாங்க ஒத்துக்கவே மாட்டோம் ..." என்றபடி அவனது தாய் அகல்யா பேச்சை தொடங்க,
 
" அம்மா.... அந்த பொண்ணோட போன் நம்பர் கிடைக்குமா ..."
 
" பாண்டியா,   உனக்கு எதுக்கு அந்த பொண்ணோட போன் நம்பர் ... அதெல்லாம் பொண்ணு வீட்ல கொடுக்க மாட்டாங்கப்பா ...அதுவும் அவங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ..."
 
" சரி அவங்க  அப்பாவோட போன் நம்பர் குடு ...." என்றான் ஒரு முடிவோடு.
 
" எதுக்குடா உனக்கு ..."
 
சரி நீ சொல்லு ... அந்த பொண்ணு ஆஸ்திரேலியால எங்க இருக்கா...   எந்த ப்ராஜெக்ட்ல வேலை பாக்கறா..."
 
" அதெல்லாம் எனக்கு எப்படி  தெரியும் பாண்டியா.."
 
" தெரியுது இல்ல ... அந்த விவரம் கேட்க தான் , அவங்க அப்பா போன் நம்பர் கேட்டேன் ..."
 
" ஓ.... விவரம் தெரிஞ்சுக்க கேட்டியா ...
சரி சரி ... இப்பவே மெசேஜ் அனுப்பறேன் ..." என தாய் அழைப்பை துண்டித்ததும், தன் மனதில்  அதிவிரைவில் உதித்த  திட்டத்தை செயல்படுத்த அந்தப் பெண்ணின் தந்தையின் அலைபேசி எண்ணுக்காக காத்திருந்தான்   அவர் தான் தனது வருங்கால மாமனார் என விதி முடிவு செய்திருப்பது   தெரியாமல்.
 
 
ஸ்ரீ - ராமம் வருவார்கள்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Comments

  1. Wow new story. Super mam. Daily ud ya mam

    ReplyDelete
    Replies
    1. இல்லடா ... வாரத்துக்கு மூணு நாள் ... Alternative days
      ல யூ டி போடுவேன் ...

      Delete
  2. Hi... Am a writer too.. This story's hero's name is same as that of my story agni parithchai ramanukkum.. it's also a story about a small family undergoing trauma.. I was attracted to read the story because of the similar names.. waiting for your next ud.. ❤️

    ReplyDelete
  3. I write in pratilipi.. and also see that you write in pratilipi.. will check out your other stories too..

    ReplyDelete
    Replies
    1. Very nice to hear from You 🙌🙌...My. 3rd and 4 th novel is in Pratilipi itself...If u find timd pls have visit dr

      Delete

Post a Comment